வாருங்கள், George46!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணற்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 07:41, 18 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் ஜோர்ஜ் ஐயா, விக்கிமூலத்தில் காப்புரிமையற்ற மூல நூல்கள் இடம்பெறத்தக்கவை. கிறித்தவம் தலைப்பில் தந்துள்ள கட்டுரை பார்த்தேன். இக்கட்டுரையில் நீங்கள் விவிலியத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் தந்துள்ளீர்கள். விவிலியம் நூல் மொழிபெயர்ப்பு முழுமையும் உங்களிடம் ஒருங்குறியில் இருந்தால் அதனை இங்கு தரலாமே. திருவிவிலியம் என்ற தலைப்பில் நீங்கள் தரப்போகும் மொழிபெயர்ப்புப் பற்றி ஒரு அறிமுகம் தந்து பகுதி பகுதியாக (உ+ம்: திருவிவிலியம்/மத்தேயு என்றவாறு) தரலாம். நீங்கள் தந்துள்ள கிறித்தவம் என்ற தலைப்பை திருவிவிலியம் என மாற்றுகிறேன். உங்கள் எண்ணத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags 07:41, 18 ஏப்ரல் 2010 (UTC)

இதையும் பாருங்கள்: en:Category:Bible--Kanags 07:52, 18 ஏப்ரல் 2010 (UTC)


திரு Kanags அவர்களுக்கு நன்றி. திருவிவிலியத்தில் உள்ள அனைத்து நூல்களையும் விக்கிமூலத்தில் (ஆங்கிலத்தில் இருப்பதுபோல) தரவிறக்கம் செய்தல் நலம் என நானும் கருதுகிறேன். என் நண்பர்கள் இருவர் தம் இணையத்தளங்களில் திருவிவிலியத்தைக் கொடுத்துள்ளனர். பொதுநூல் ஆதலால் காப்புரிமை இடையூறு இல்லை. அவர்களோடு தொடர்பு கொண்டுள்ளேன். விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்.--George46 18:53, 18 ஏப்ரல் 2010 (UTC)
திரு Kanags, திருமறைச் சுவடி என்னும் தலைப்பில் ஒரு புதிய பதிகை தொடங்குகிறேன். அதைக் கிறித்தவம் என்னும் பகுப்பின் கீழ் கொணர்தல் நலமென நினைக்கிறேன். தொடரும். நன்றி!--George46 17:58, 29 ஏப்ரல் 2010 (UTC)

நீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி?தொகு

வணக்கம், நீங்கள் விக்கிப்பீடியா ஒத்தாசைப் பக்கத்தில் அளவில் நீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி? எனக் கேட்டிருந்தீர்கள். விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு நற்கீரனின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் விக்கிமூலம், மற்றும் விக்கிநூல் கட்டுரைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவை முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் பகுதி பகுதியாக வெவ்வேறு பக்கங்களை உருவாக்கலாம். உதாரணத்திற்குப் பார்க்க: பொன்னியின் செல்வன். இதில் அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. எப்படி ஏனைய அத்தியாயங்களுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய பின்வரும் அத்தியாயத்தைப் பாருங்கள்: பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/ஆடித்திருநாள். உங்கள் திருமறைச் சுவடி கட்டுரையை மூன்று, நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம் என எண்ணுகிறேன். --Kanags \உரையாடுக 01:16, 2 ஜூலை 2010 (UTC)

வழிகாட்டலுக்கு நன்றி! விக்கிமூல முதல் பக்கத்தில் மாற்றம் செய்துள்ளீர்கள். கவனித்தேன். மத்தேயு நற்செய்தி போன்ற ஒவ்வொரு விவிலிய நூலாகத் தனியே பிரித்து அவை ஒவ்வொன்றிற்கும் உள்பிரிவுகள் கொடுக்க வேண்டும். பொன்னியின் செல்வன் பொருத்தமான எடுத்துக்காட்டாக உள்ளது. விரைவில் ஒருசில பக்கங்களை உள்ளீடு செய்கிறேன். மெருகூட்ட உதவுங்கள். நன்றி!--பவுல்-Paul 02:40, 2 ஜூலை 2010 (UTC)
அவசியம் பார்க்கிறேன். அண்மைக் காலத்தில் விக்கிமூலத்தில் நிறைய ஆக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் மெருகூட்ட வேண்டும். நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.--Kanags \உரையாடுக 00:30, 3 ஜூலை 2010 (UTC)
மிக்க நன்றி! பொன்னியின் செல்வன் இடுகையில் பயன்படுத்தப்படுகின்ற வார்ப்புருக்கள் உறுதுணையாய் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் படிமங்களும் இணைத்து, சிறிது ஒத்திகை பார்த்தேன். இப்போது ஓரளவுக்குத் தேர்ச்சிபெற்றுள்ளேன். தொடக்கத்தில் இங்குமங்குமாக விவிலிய நூல்களை இடுகைசெய்தேன். தொடர்ச்சியாக இடுவதே மேல் என உணர்கின்றேன். நன்றி!--பவுல்-Paul 00:41, 3 ஜூலை 2010 (UTC)
திருவிவிலியம் நூலை மிக அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது அவற்றை மேற்பார்வையிடுகிறேன். தகுந்த பகுப்புகளும் உருவாக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:06, 25 ஜூலை 2010 (UTC)
நன்றி, Kanags. திருவிவிலியம் என்னும் இடுகை தொடர்பான பகுப்புகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். பகுப்புகள் மூவிதமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்:

1) திருவிவிலியத்தை "உள்ளடக்கும்" பகுப்புகள் (எ.டு.: கிறித்தவம், சமயம், சமயங்கள், சமய மூல நூல்கள், உலக இலக்கியம்) 2) திருவிவிலியத்தின் உள்ளே அமைந்த பகுதிகளை உள்ளடக்கும் பகுப்புகள் (எ.டு.: பழைய ஏற்பாடு, இணைத் திருமுறை, புதிய ஏற்பாடு) 3) மேலே கூறிய பழைய ஏற்பாடு, இணைத் திருமுறை, புதிய ஏற்பாடு ஆகிய மூன்றின் கீழும் முறையே 39, 10, 27 நூல்கள் வரும்.

உங்கள் கருத்து அறிய விழைகின்றேன். வணக்கம்!--பவுல்-Paul 15:29, 25 ஜூலை 2010 (UTC)


வணக்கம். பயனர் திரு. பவுல் அவர்களே! தங்களின் விவிலியம் தமிழ்ப்பதிவைப் பார்த்தேன். பெருமகிழ்ச்சி வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! தகுதியான வேலை தகுதியானவர் கையில் கிடைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. தமிழப்பதிவுகளில் கிறித்துவப்பகுதி மூலங்கள் எவையும் இல்லையே என்று எண்ணி நான் வருந்தியதுண்டு. அக்குறையைத் தாங்கள் நீக்கி நிறைவு செய்கின்றீர்கள். வாழ்க, வீரமாமுனிவர் வழியில் அமையும் உங்கள் திருத்தொண்டு, தமிழ்த்தொண்டு! தொடரட்டும் உங்கள் நற்பணி! அடுத்து ஒருசிறு வேண்டுகோள். தங்களின் பதிவுகளை 30 கிபைக்குமேல் அமையாமல் முதலிலேயே வடிவமைத்துக்கொள்ளுங்கள். அதாவது, அதற்கேற்றவண்ணம் சிறுசிறுபக்கங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். பின்னால் பிரிப்பது கடினமான, நேரம் மிகவும்பிடிக்கின்ற ஒருசெயல். தொடக்கத்திலேயே அதைச்செய்து விட்டால் எளிது. ஒரேபக்கத்தில் அமைத்தால் சமயத்தில் 'செர்வர்' வேலைசெய்யாது. அதுவமின்றி ஒருகுறிப்பிட்ட பகுதியைப் பார்க்கவிரும்புவோர் தேவையில்லாமல் ஒவ்வொருதடவையும் முழுவதையும் பார்க்கவேண்டி வரும். அவற்றைப் பிரித்துத் தலைப்புவாரியாக இணைப்புக் கொடுத்து விடுங்கள். சிக்கல் தீர்ந்தது. படிப்போர்க்கும் எளிமை. இது அனைவரும் அறிந்த சிறுதகவல்தான்!வாழ்த்துக்கள்!நன்றி. அன்புடன் மெய்கண்டான்--Meykandan 00:00, 30 ஜனவரி 2011 (UTC)

  • திரு. மெய்கண்டான் அவர்களுக்கு, சிறு பகுதிகளாகப் பிரித்து இடுகை செய்ய எண்ணியதுண்டு. அதை உடனடியாகச் செய்யத் தொடங்கிவிட்டேன். தங்கள் பரிந்துரைக்கு நன்றி! தமிழ் இலக்கியங்களை ஊக்கத்தோடு இடுகை செய்கின்றீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul 07:00, 30 ஜனவரி 2011 (UTC)


Invite to WikiConference India 2011தொகு

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் George46,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கட்டுரைகளை நீக்கல்தொகு

வணக்கம் பவுல் ஐயா, எனது விக்கிப்பீடியா பயனர் பக்கத்தில் உங்கள் செய்தியைப் பார்த்தேன். விக்கிமூலத்தில் நான் நிருவாகியாக அல்லாத படியால் பக்கங்களை நீக்கல் உரிமை என்னிடம் இல்லை. நீக்க வேண்டிய பக்கங்களுக்கு மேல் {{delete}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். அது நீக்க வேண்டிய பக்கங்களை அடையாளம் காட்டும். பயனர் இரவி விக்கிமூலத்தில் நிருவாகியாக உள்ளார். அவரிடம் நீக்கச் சொல்லிக் கேட்கலாம். விக்கிமூலத்தில் இவ்வாறான சில அவசியமான நிருவாக அலுவல்களைக் கவனிப்பதற்கு சில நிருவாகிகள் தேவை என்பதை உணருகிறேன். உங்களுக்கு விருப்பம் என்றால் உங்களை நான் பரிந்துரைக்க முடியும். உங்கள் ஒப்புதலை எனது விக்கி பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 11:16, 2 பெப்ரவரி 2012 (UTC)

விக்கிமூலத்தில் உங்கள் பணி கண்டு மகிழ்கிறேன். உங்கள் நீக்கல் வேண்டுகோளின் காரணமாக, நீண்ட நாட்கள் கழித்து விக்கமூலப் பணிக்குத் திரும்பியுள்ளேன் :) நீங்கள் வேண்டிய அனைத்துப் பக்கங்களையும் வேண்டுகோள் இட்டிருந்த பேச்சுப் பக்கங்களையும் நீக்கி உள்ளேன். இது போன்ற சூழ்நிலைகளில் இனி வார்ப்புரு:Delete-duplicate மட்டும் இடலாம். இதனால் பேச்சுப் பக்கத்தில் கருத்து இட வேண்டிய தேவையும் பிறகு அதனையும் நீக்க வேண்டிய தேவையும் இருக்காது.--இரவி 22:07, 12 பெப்ரவரி 2012 (UTC)
  • மிக்க நன்றி, இரவி. நீங்கள் உருவாக்கிய புதிய வார்ப்புருவை ("Delete-duplicate") தேவை எழும்போது பயன்படுத்துவேன். தொடக்கத்தில் நீண்ட பக்கங்கள் பற்றி நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. அவற்றை எளிதில் தரவிறக்கம் செய்யமுடியவில்லை என்று பயனர் மெய்கண்டான் தெரிவித்தார். அதிலிருந்து சிறுசிறு பக்கங்களை உருவாக்கினேன். திருவிவிலியத்தில் ஏறக்குறைய 45% தரவேற்றம் செய்தாயிற்று. துப்புரவுப் பணியை விரைந்து செய்தமைக்கு மீண்டும் நன்றி! பவுல்-Paul 00:48, 13 பெப்ரவரி 2012 (UTC)

Talk backதொகு

வணக்கம் ஐயா , பார்க்க பயனர் பேச்சு:Dineshkumar_Ponnusamy--Shanmugamp7 (பேச்சு) 18:28, 3 ஜூன் 2012 (UTC)


உங்களுடைய வாக்கை பதியுங்கள்தொகு

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:25, 13 அக்டோபர் 2013 (UTC)

ஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்தொகு

வணக்கம். தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிக்கு நன்றி. தங்கள் பங்களிப்புகள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன:

  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்களின் மூல நூல்கள் பற்றிய விவரங்கள் தேவை. ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, வெளியிட்ட ஆண்டு, எத்தனையாவது பதிப்பு, ISBN எண் (இருந்தால் மட்டும்) போன்ற விவரங்கள் உதவும். இந்த விவரங்களைச் சேர்ப்பதன் வழி மூல நூலின் நம்பகத்தன்மை, அவை திரிபுகள், பிழைகள் இன்றி மின்னாக்கம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் உறுதி செய்யலாம்.
  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்கள் தாங்களே கைப்பட தட்டச்சு செய்ததா அல்லது இணையத்தில் ஏற்கனவே உள்ளவற்றைப் படியெடுத்து இடுகிறீர்களா? படியெடுத்து இடுகிறீர்கள் என்றால் அப்படிகள் முதலில் இடம்பெற்ற தளங்களின் விவரங்கள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம் முதலிய தளங்களில் பல சங்க இலக்கியங்கள் ஏற்கனவே தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தகைய தளங்களுக்கு இணைப்பு தந்து நன்றி நவில்வதன் மூலம் உறவு நிறுவனங்களுடன் இணக்கத்தைப் பேணலாம்.

இந்த விவரங்களை அந்தந்த ஆக்கங்களின் முதன்மைப் பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம்.

ஒரு வேளை, நீங்கள் கைப்படவே தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், அதனைத் தவிர்த்து கூகுளின் ஒளிவழி எழுத்துணரிக் கருவியைக் கொண்டு தானியக்கமாகப் பெருவாரியான பக்கங்களைப் பதிவேற்றலாம். இதன் மூலம் உங்கள் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். இது தொடர்பாக உதவி தேவையெனில் உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:19, 19 ஏப்ரல் 2016 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:George46&oldid=433322" இருந்து மீள்விக்கப்பட்டது