பேச்சு:முல்லைப்பாட்டு

குறிப்பு:

இப்பாடல் இங்கு யாப்பு அடிப்படையில் பாடலாசிரியர் பாடியவாறு ஓசைக்கேற்பச் சீரும் தளையும் சிதையாது பதிப்பிக்கப்பெற்றுள்ளது; அதனையொட்டி இக்காலத்திற்கேற்றவாறு சிறிதளவு தமிழ்ப்பயிற்சி உடையோரும் படித்துப்புரிந்து கொள்வதற்கேற்றவாறு சீர் பிரித்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் எவ்வகைப்பிழையும் இல்லாது பதிப்பிக்கப் பெருமுயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது; என்றாலும் நம்மையும் மீறிப் பிழையிருப்பின் அதைச்சுட்டிக்காட்டினால் நன்றியுடன் அது ஏற்றுக்கொள்ளப்பெற்றுத் திருத்தம் செய்யப்பெறும்.(--Meykandan 02:02, 9 மே 2010 (UTC)) அவ்வாறன்றித் தாங்களே திருத்துவதாயின் மேலே குறிப்பிட்டுள்ள கொள்கைக்கு ஊறுநேரா வண்ணம் திருத்தி உதவுக: இது தமிழுக்குச்செய்யும் உண்மைத்தொண்டு!. நம்முன்னோர் தேடிவைத்துவிட்டுப்போன விலைமதிப்பில்லாச் செல்வத்தை உலக இலக்கிய அரங்கில் தமிழரின் பெயர்சொல்லும் அற்புதக் கருத்துக்கருவூலத்தைக் காப்பது நம்கடமையல்லவா!Reply

சான்றோர் கவியினைக்காப்போம் வாரீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:முல்லைப்பாட்டு&oldid=1335180" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முல்லைப்பாட்டு" page.