பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடல்கள்
21 பாடல்கள்
நூலில் பக்கம் 63 முதல் 66
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
1-5
தொகு- அட கெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி, அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
- திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச், செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைச்
- தடமுலை வேசையராகப் பிறந்தோ மில்லைச், சனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
- இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை, என்ன செனம்மெடுத் துலகில் இரக்கின்றோமே. (1)
- பெற்றாளொரு பிள்ளையென் மனையாட்டி யப்பிள்ளைக்குப் பால்
- பற்றாது கஞ்சிகுடிக்கந் தரமல்ல பாலிரக்கச்
- சிற்றாளு மில்லை யிவ்வெல்லா வருத்தமுந் தீரவொரு
- கற்றாதர வல்லையோ வல்லை மாநகர்க் காளத்தியே. (2)
- வழிமேல் விழிவைத்து வாடாமலென் மனையாளு மற்றோர்
- பழியாமற் பிள்ளையும் பாலென்று அழாமற் பகிரெனுஞ் சொல்
- மொழியாம லென்னைவர விட்டபாவி முசித்துச்சதை
- சுழியாமல் ஆவளித்தாய் வல்லமாநகர் காளத்தியே. (3)
சீதக்காதி பேரில்
- ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்குங்
- கார்தட்டிய பஞ்சகாலத்திலே தங்கள் காரியப்பேர
- ஆர்தட்டினுந் தட்டு வாராமலே யன்ன தானத்துக்கு
- மார்தட்டிய துரைமால் சீதக்காதி வரோதயனே. (4)
- நேசித்து வந்த கவிராயர் தங்கட்கு நித்தநித்தம்
- பூசிக்கு நின்கைப் பொருளொன்றுமே மற்றப் புல்லர்பொருள்
- வேசிக்குஞ் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யுந்
- தாசிக்கு மாகுங் கண்டாய் சீதக்காதி தயாநிதியே. (5)
6-10
தொகு
ஈயாத புல்ல ரிருந்தென்ன போயென்ன வெட்டிமரம் காயா திருந்தென்ன காய்த்துப் பலனென்ன கைவிரித்துப் போயா சகமென் றுரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய் ஓயாம லீபவன் வேள்சீ தக் காதி யொருவனுமே.