பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/எனக்கொரு இடம்




12. எனக்கொரு இடம்


ஆட்ட அமைப்பு: எவ்வளவு பேர் ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடத் தயாராகவும் ஆவலாகவும் இருக்கின்றார்களோ, அத்தனைபேர்களையும் ஆட் டத்தில் சேர்த்துக்கொண்டு ஆடலாம்.


எத்தனே ஆட்டக்காரர்கள் மொத்தம் இருக்கின்றார்கள் என்று முதலில் எண்ணிக்கொண்டு, ஒரு சிறு சிறு துண்டுச் சீட்டில் ஒவ்வொரு நம்பராக எழுதி, அவற்றைத் தனித்தனியே சுருட்டி, ஒரு சிறு பெட்டியிலோ, கூடையிலோ போட்டுவிடவேண்டும்.


ஆட்டத்தில் பங்குபெறுபவர்கள் ஒவ்வொருவராக வந்து, ஆளுக்கொரு சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் என்ன நம்பர் (எண்) இருக்கிறதோ, அதுதான் அவருடைய ஆட்ட எண்ணாக இருக்கும்.


அவரவருக்குரிய ஆடும் எண்ணை, அவரவர் தம்முடிைய நினைவில் வைத்துக்கொண்டால் போது 

மானது. மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, கட்டாயமும் இல்லை.

அந்த ஆட்டம் முடியும் வரை, அந்த எண்ணைத்தான் அவர் பயன்படுத்திக்கொண்டு ஆடிட வேண்டும் என்பதால், அந்த எண்ணை நன்றாக நினைவு படுத்திக்கொண்டிருக்கவேண்டும். அவ்வளவுதான்.


ஆடும் முறை: சுமார் 20 அல்லது 25 அடி வட்டமுள்ள ஒரு பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களோ, அத்தனை சிறு சிறு வட்டங்களாக வட்டத்தைச் சுற்றிலும் போட்டிருக்கவேண்டும்.


அதாவது, வட்டக் கோட்டில்தான் சிறு வட்டம் போடவேண்டும். அதில் ஒவ்வொரு ஆட்டக்காரர்களும் சென்று நின்றுகொள்ளவேண்டும்.


அதில் ஒருவர் மட்டும், அதாவது முன்கூட்டியே நடுவில் நிற்பதாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றவர், வட்டத்தின் மையத்தில் போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தில் வந்து நின்று கொள்ள வேண்டும். இவ்வாறு மையத்தில் வந்து நிற்பவருக்கும் ஒரு ஆட்ட எண் (Number) உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.


ஆட்டம் தொடங்கலாம் என்ற சைகைக்குப் பிறகு நடுவில் நிற்பவர் சத்தமாக, ஏதாவது இரண்டு எண்களைக் கூப்பிட வேண்டும். (உம்-6,8). இந்த

இரண்டு எண்களுக்கு உரியவர்கள் தாங்கள் நிற்கின்ற இடத்தை விட்டு புறப்பட்டு ஓடிப்போய், அடுத்த ஒரு வட்டத்தில் இருந்து புறப்படுகின்றவரின் வட்டத்தில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இந்த இருவரும் தங்களது இடத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கின்ற அந்த தருணத்தில், காலியாக இருக்கும் ஒரு வட்டத்தில் போய் எண்களை அழைத்தவர் நின்று கொள்ள வேண்டும்.

இந்தப் போட்டியில், வட்டம் கிடைக்காத ஆட்டக்காரர் வட்டத்தின் நடுவில் வந்து நின்று கொண்டு, மீண்டும் இரண்டு பேர்களுடைய எண்களை அழைக்க ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பு: 1. தங்கள் எண்களை அழைத்தவுடன், எண்களுக்குரிய ஆட்டக்காரர்கள் எதிர்த்தாற்போல் யார் புறப்படுகின்றார் என்பதை சுற்றும் முற்றும் பார்த்துத் தெரிந்து கொண்டு, விரைவாக அந்த இடத்தை நோக்கி ஓடி வட்டத்திற்குள் நின்று கொள்ள வேண்டும்.

யாருக்கு எந்த எண் என்பது யாருக்கும் தெரியாதாகையால், ஆட்டக்காரர் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்து ஆட வேண்டும்.

2. எண்களை அழைத்தவர் மற்றவர்களுக்கு முன்னால் போய் வட்டத்தில் இடம் பிடித்து நின்று 

கொண்டால், இடம் கிடைக்காதவர் நடுவராக வந்து நின்று, மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.


அதற்கு முன்னதாக, இடம் கிடைக்காமல் ஒருவராக மாறுகிறவர், தண்டனையாக 2 தோப்புக் கரணம் அல்லது மற்றவர்களுக்கு சலாம் போடுவது போல ஏதாவது ஒன்றைச் செய்தால் ஆட்டம் ரசிக்கும்படியாக இருக்கும்.


3. இரண்டு எண்களுக்குப் பதிலாக, மூன்று நான்கு எண்களையும் ஒரே சமயத்தில் அழைத்து ஆடச் செய்யலாம்.


4. அழைத்த எண்களையே கூப்பிடாமல், ஒவ்வொரு தடவையும் புதிய எண்களை அழைத்தால் தான், ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்ற எச்சரிக்கையுள்ள நிலைமையில், ஆடுவதற்கு உற்சாகமாகவும் இருக்கும். ஆடிய சுவாரசியமாகவும் இருக்கும்.