பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/வட்டம் சுற்றி ஓட்டம்




10. வட்டம் சுற்றி ஓட்டம்



ஆட்ட அமைப்பு : 20 அடி விட்டமுள்ள ஒரு வட்டத்தை முதலில் போட வேண்டும். ஆட விரும்புகின்ற அனைவரையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களையெல்லாம் வட்டக் கோட்டின் மேல் ஆங்காங்கே பரவலாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.


இதற்கிடையில் வட்டத்தின் மையத்தில் ஒரு வரை நிற்க வைத்திட, ஒருவரைத் தேர்ந்தெடுத்து மையத்தில் நிறுத்திட வேண்டும். அவர் கொஞ்சம் சுறுசுறுப்பானவராக இருந்தால் நல்லது. ஏனெனில், அவரால் தான் ஆட்டமே தொடங்கி வைக்கப்படுகிறது.


நடுவில் நிற்பவரிடம் பந்து ஒன்று இருக்க வேண்டும். அல்லது பந்து போன்ற அமைப்புள்ள, ஏதாவது உருண்டையான பொட்டலம் ஒன்று இருந்தாலும் போதும். அதாவது,எந்தப் பொருளாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்துப் பிடிப்பது 

போன்ற பொருளாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்துப் பிடிப்பது போன்ற பொருளாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆடும் முறை: மையத்தில் பந்துடன் நிற்பவர், தான் யாருக்கு எறிய வேண்டும் ஏறிய வேண்டும் என்று விரும்புகிறாரோ. அவரை கோக்கி முதலில் பந்தை எறிய வேண்டும். தன்னை நோக்கிப் பந்து வருவதை உணரும் ஆட்டக்காரர், பந்தை பிடித்து கொண்டு, உடனே எறிந்தவருக்கே அனுப்பி விட்டு, ஒடத் தொடங்க வேண்டும். -

மத்தியில் நிற்பவர் அந்தப் பந்தைப் பிடித்த வுடனே பந்தைக் கையில் வைத்தவாறு, ஒடியவர் இருந்த இடம் நோக்கி, அவர் ஒடுகிற திசை பக்க மாகவே ஒடித் தொட முயல வேண்டும்.

அதற்குள், வட்டம் சுற்றி, ஒடத்தொடங்கியவர்: தொடப்படாமல் தான் முன்னே நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து நின்று விட்டால், மீண்டும் ஆட் டத்தைத் தொடர, முன்னர் ஆட்டத்தின் மத்தியில் நின்றவரே, முன்னர் விளக்கியது போல, பங்தை. எறிந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

அவர் தொடப்பட்டால், மத்தியில் நின்றவர் ஆட்டக்காரராக மாற, மத்தியில் நின்றவர் தொடப்பட்டவர் இடத்திற்கு வந்து நிற்க, மீண்டும் ஆட்டம் தொடரும். குறிப்பு: 1. நடுவில் பந்துடன் நிற்பவர், பந்தை யாருக்கு எறியப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், “தனக்குத்தான் வரப் போகிறது’ என்ற நம்பிக்கையுடன் வட்டத்தைச் சுற்றிலும் நிற்கும் அத்தனை ஆட்டக்காரரும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் தயாராக நின்று கொண்டிருக்க வேண்டும்.

2. பந்தை பிறருக்கு எறியும் போது, அவர் எளிதாகப் பிடித்திடும் வகையில்தான் எறிய வேண்டும். அப்பொழுதுதான் பந்தைப் பிடித்த ஆட்டக்காரர் தொடர்ந்து எறியவும், ஒடிடவும் வசதியாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

3. வட்டத்தைச் சுற்றி என்றால், வட்டமாக நிற்கும் ஆட்டக்காரர்களைச் சுற்றி என்பதுதான் அர்த்தம். வட்டத்தில் நின்று முதலில் ஒடத் தொடங்குகிறவர் ஒ டு கி ன் ற பக்கமாகத்தான், துரத்திக் கொண்டு ஓடுபவரும் ஒடவேண்டும். குறுக்கு வழியாக ஒடிப் பிடிக்க முயலக்கூடாது. -

4. பங்கு பெறுபவர்களின் திறமைக்கும் ஆட்ட அனுபவத்திற்கும் ஏற்ப, வட்டத்தின் சுற்றளவை விரிவுபடுத்தி, ஆடி மகிழலாம். :