மகாகவி பாரதியார்/பாரதியார் புகழ்!

பாரதியார் புகழ்


(தில்லானா மெட்டு)

இராகம்: நாட்டை]

[தாளம்: ஆதி

பல்லவி


        தோயுந்தேன் கவிதரு நம்
        சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் ! (தோ)

அநுபல்லவி


சுதை நிலாவை நாம் எலாம் மிக வின்பத்தால்
சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில்

                                                            சந்தித்தோமே

(தேச)


சரணம்


            ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும் !
            உலக மனிதர் சமம் எனநிலை நாட்டும் !
            தீய மறை வகற்றி அகத் தெழில் கூட்டும் !
            செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும் !
தாகிடஜெம் தாகிடஜெம் தகும் தரிகிடதக தத்தரிகிடதக
தளாங்கு தகதிகதொக ததிக்கிணத்தோம்—தளாங்கு

          ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம்.

(தோ)