மணமக்களுக்கு/அறம்
அறம்
12. அறம் என்பது கடமை எனப் பொருள்படும். அறம் 32. ஆதுலர்க்கு அன்னம், ஓதுவார்க்கு உணவு, அறவைப் பிணஞ்சுடுதல், காதோலை, கருகமணி முதலியன. மக்களாகப் பிறந்த எவரும் கடமையைச் செய்தாக வேண்டும். வாழ்த்தா, வசையா? வெற்றியா, தோல்வியா? எனப் பாராமல், ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்தாக வேண்டும். காலையிலிருந்து மாலை வரை கடமைகளைச் செய்தாக வேண்டும். இரவில் படுக்கும் போது, இன்று நான் என் கடமைகளைச் சரி வரச் செய்தேன் என்று மகிழ்ந்து படுக்க வேண்டும். நல்ல உறக்கம் வரும். நோய் நொடி அணுகாது. வாழ்க்கையில் வெற்றியைக் காணலாம். கடமையைச் செய்யத் தவறியவர்களிடம் கவலையும், தூக்கமின்மையும், நோயும் துன்பமுமே உறவாடிக் கொண்டிருக்கும்.
‘உண்மையான மகிழ்ச்சி என்பது, அவனவன் கடமையைச் செய்வதில்தான் இருக்கிறது’ என்பது நபிகள் பெருமான் வாக்கு இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தே வள்ளுவர் பெருமான், “அறத்தால் வருவதே இன்பம்” என வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இவற்றை மணமக்கள் இடைவிடாமல் கையாண்டு வருவது நல்லது.