மணமக்களுக்கு/இல்லாததென்?

இல்லாததென்?

2.  திருவள்ளுவர் ஒரு நாள் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது, ஓர் ஏழைக் குடிசையில் புகுந்தார்.

கூரைத் தாழ்வாரம், அதிலுள்ள பல ஓட்டைகள், கிழிந்த பாய், சில சட்டிகள் மட்டுமே இருந்தன. அந்த ஏழை, வள்ளுவரைக் கண்டதும் வணங்கி, “ஐயா! என் குடிசைக்கா வந்தீர்கள்? என்னிடம் ஒன்றும் இல்லையே” என்றான். வள்ளுவர் மனமகிழ்வோடு பார்த்தார். அவன் அருகிலுள்ள மனைவி நற்குண நற்செய்கைகளையுடையவளாய்க் காணப்பட்டாள். தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்ன ஏழையிடம் கேட்டார். “அடே! உனக்கு என்னடா இல்லை;” என்று வெளியில் வந்தார்.