மணமக்களுக்கு/உப்பில்லாப் பத்தியம்

உப்பில்லாப் பத்தியம்

7.  திருமணமாகாத ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன், உப்பில்லாப் பத்தியம் இருப்பவர்கள். உப்பை எவ்வளவு பெரிதாகக் கருதுகிறார்களோ, அப்படித் திருமணத்தை எண்ணியிருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் பத்தியம் முறிந்து, உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, உப்பைப் பற்றி எவ்வளவு சிறிதாக எண்ணுகிறார்களோ, அப்படியே திருமணம் முடிந்த பின் திருமணத்தையும் எண்ணுகிறார்கள். ஆனால், திருமணம் எதற்காக என்று மட்டும் எண்ணுவதில்லை. எப்படியும் வாழலாம் என்பது வாழ்வல்ல; இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே வாழ்வு.