மணமக்களுக்கு/பொறுப்பு அதிகம்

பொறுப்பு அதிகம்

ஐயரை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணம் நடத்துகிற மணமக்கள், எவ்வளவு தவறுகளைச் செய்தாலும், இந்த நாடு தாங்கிக் கொள்ளும், இம்மாதிரிச் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும், நாடு தாங்காது; ஏற்காது. இன்று புதிதாக இல்லறத்தில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள், இதை உள்ளத்தே வைத்துத் தம் வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும். சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளுகிறவர்களுக்குப் பொறுப்பு அதிகம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.