மணமக்களுக்கு/வாழ்த்துப் பலிக்க

வாழ்த்துப் பலிக்க

நல்லவர்கள் வாழ்த்துவதினாலேயே, நாம் வாழ்ந்து விடலாமென்று மணமக்கள் நம்பி விடக் கூடாது. அப்படி நம்பினால், ஏமாற்றமடைவார்கள். நல்லவர்களின் வாழ்த்துதலுக்கேற்ப மணமக்கள் உறுதியாகவும், திறமையாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தலைவர்களின் வாழ்த்துக்களும் பலிக்கும்.