மணமக்களுக்கு/வாழ்வில் ஒளி
வாழ்வில் ஒளி
4. ஆணாகப் பிறந்தவர்களெல்லாம் ஆணல்ல; ஆண்மையை உடையவனே ஆண். பெண்ணாகப் பிறந்தவர்களெல்லாம் பெண்ணல்ல; பெண்மையை உடையவளே பெண். இத்தகைய ஆண்மையையும், பெண்மையையும், இன்றைய மணமக்கள் நிலை நிறுத்திக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால், அவர்கள் வாழ்வில் ஓர் ஒளி வீசுவதை அவர்களே கண்டு மகிழ்வார்கள்.