மருத்துவ களஞ்சியப் பேரகராதி/A
abacterial : நுண்ணுயிரிலா; நுண்ணுயிரற்ற, பாக்டீரியா சாரா வீக்கம்: பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல்.
abalienation : மனக்குழப்பம் .
abandon : தங்குதடையிலா மனப்பான்மை; கவலையிலா மனநிலை; உதறித்தள்ளு.
abandoning: கைவிடல்,கைநெகிழ்த்தல்.
abarognosis:: சுமை உணர்வின்மை; எடை உணர்வின்மை; பளு உணர்வின்மை, எடை உணர்விழப்பு: பளு உள்ளதை உணர இயலாமை.
abarthrosis: அசையும் மூட்டு : உடலிலுள்ள எலும்பு மூட்டுகளில் அசைகின்ற மூட்டுவகை.
abasia : நடக்க இயலாமை; நடக்காமை நரம்புகளின் ஒத்திசைவு இன்மையால் நடக்க இயலாத நிலைமை.
abate : தாழ்த்து, தணி, குறை: தள்ளுபடிசெய்; விலக்கிவை; வலுவிழக்கச்செய்; மட்டுப்படுத்து கட்டுப்படுத்து.
abatement : கட்டுப்படுத்தல் குறைத்தல், தணித்தல்.
abattar dissement : குறிப்பிட்ட உயிர்வர்க்கம் இல்லாமலாதல் abattoir : அடிதொட்டி; விலங்கு வெட்டுகளம்; இறைச்சி வெட்டுதொட்டி.
aleattoir sanitation :விலங்கு வெட்டுகளத் தூய்மை; அடிதொட்டித் துப்புரவு.
ABC: ஏபிசி வரிசை முறை: தொடர்நிகழ்வு முறை: இதய நுரையீரல் இயக்க மீட்பின் போது பாதிக்கப்பட்டவரின் காற்றுப் பாதை (சுவாசப் பாதை), சுவாச நிலை மற்றும் இதய இரத்த ஒட்ட இயக்கம் போன்றவற்றைச் சீராக்க உதவும் உயிர் காக்கும் தொடர் நிகழ்வுகள்.
abdomen: அடிவயிறு;அகடு; உதரம் : நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது. இது பெரும்பாலும் தசையினாலும், தசைநார் சூழ்ந்த தசைப்பட்டையாலும் சூழப்பட்டுள்ளது. எனவே, இது தனது வடிவ அளவையும் வடிவabdominalத்தையும் மாற்றிக் கொள்ளும் தன்மை உடையதாகும். இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பை (வபை) மூலம் உள்வரியிடப்பட்டுள்ளது.
முனைப்பான அடிவயிறு இருக்கு மாயின் அதனை உடனடியாக அறுவை மருத்துவம் மூலம் சீர்படுத்த வேண்டும்.
தொங்கலான அடி வயிறு இருக்குமாயின், அதன் முன் புறச்சுவர் சற்றுத் தளர்ச்சியாக அமைந்திருக்கும். இதனால், அது பூப்பு மென்மைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கும்.
படகு வடிவ அடிவயிறு முன் புறச்சுவர் உட்குழிவுடையதாகும்.
abdominal: அடிவயிறு அடிவயிற்றைச் சார்ந்த: நுரையீரல்களுக்குள் செல்லும் காற்றின் அளவையும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் காற்றின் அளவையும் அதிகரிப்பதற்காக, ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத்திரை(உந்துசவ்வு)யையும், அடிவயிற்றுத் தசைகளையும் வழக்கத்திற்கு மிகுதியாகப் பயன்படுத்திச் சுவாசித்தல். உடற்பயிற்சிகள் மூலம் வேண்டுமென்றே இவ்வாறு செய்தால், அது பற்றாக்குறை ஆச்சிஜன் ஊட்டத்தை ஈடு செய்கிறது. குதவாயின் அடிவயிற்று அறுவைச் சிகிச்சையை ஒரே சமயத்தில் இரு அறுவை மருத்துவர்கள் செய்கிறார்கள். அடிவயிற்று அறுவை மருத்துவம் மூலம் குதவாயை அசையும்படி செய்கிறார்கள். குடலை இரண்டாகப் பிளந்து கட்டியின் மையத்தை நோக்கி அமைக்கிறார்கள். கட்டி மையம் நோக்கிய முனை நிரந்தரப் பெருங்குடல் முனையாக வெளிக்கொணரப்படுகிறது. கட்டியை உடைய மையத்திலிருந்து மிகவும் விலகிய குடலை ஆசனவாயுடன் சேர்த்துத் துண்டித்து எடுப்பது, உடலில் விதைப் பைக்கும் கருவாய்க்கும் இடைப்பகுதியில் ஒர் அறுவை செய்வதன் மூலம் முடிக்கப்படுகிறது.
அடிவயிற்று வலி என்பது, குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் குடைவு வலியும் குமட்டலும் ஆகும். இது பெரும்பாலும் தலை வலியுடன் தொடர்புடையது. abdominal cavity : வயிற்றறை; வயிற்றுப் பொந்து. abdominal cramp : வயிற்று சுளுக்கு; வயிற்றுப் பிடிப்பு : மிகக் கடுமையான குளிரினாலோ அல்லது அதிகத் தளர்ச்சியினாலோ ஏற்படும் வயிற்றுத் தசைநார்ச் சுரிப்பு.
abdominal dehiscence : வயிற்றுக் காயப் பிளப்பு: வயிற்றுத் தையல் வெடிப்பு.
abdominal pain : அடிவயிற்று வலி; வயிற்றுவலி.
abdominal respiration : வயிற்று மூச்சு.
abdominocentesis : வபை வலி; அடிவயிற்றுத் துளை: இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழியின் பக்க வலியாகும்.
abdominocyesis : வயிற்றுப் பிரசவம்: வயிற்றைப் பிளந்து குழந்தையைப் பிறக்கச் செய்தல்.
abdominal segment : வயிற்று வளையம்.
abdominal wall : வயிற்றுச் சுவர்.
abdominohysterectomy : வயிற்று வழிக்கருப்பை நீக்கம்; வயிற்று வழிக் கருப்பை அகற்றுதல்: வயிற்றைக்கீறி கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம்.
abdomino-pelvis : வயிற்றை ஒட்டிய இடுப்பு.
abdominoperineai : கீழ் வயிற்று மூல உறுப்புப் பகுதி; அடிவயிற்று விதை-கருவாய் இடைப்பகுதி: அடிவயிற்றுக்கும் உடலில் விதைப் பைக்கும் கருவாய்க்கும் இடைப்பட்ட பகுதிக்கும் தொடர்புடைய நோய்.
abdominoscopy : வயிற்றுள் நோக்கி; வயிற்றறை உள்நோக்கி: வயிற்றறையையும் அதனைச் சார்ந்த உள்ளுறுப்புகளையும் உள்நோக்கிக் கருவி மூலம் பரிசோதிப்பது.
abdominothoracic : மார்பு வயிறு: வயிறும் நெஞ்சும் சார்ந்த பகுதி.
abdominous : தொந்தி வயிருடைய: தொந்தியுள்ள.
abducens : வெளிவாங்கி; வெளி உருட்டு: உடலின் மையப்பகுதி யிலிருந்து வெளிப்பக்கமாக விலகுதல் அல்லது வெளிநோக்கித் தள்ளுதல்.
வெளி உருட்டுத் தசை: விழிவெளி உருட்டுத் தசை விழிக் கோளத்தை வெளிப்பக்கமாக அசைய வைக்கும்.
வெளி உருட்டு நரம்பு: ஆறாவது தலை நரம்பு. இது விழிவெளி உருட்டுத்தசைக்குச் செல்கிறது.
abducent; வெளித் தள்ளல்; சுற்று வழி: வெளிப்பக்கமாக இழுத்தல், வெளிநோக்கித் தள்ளுதல்.
abducent nerve : சுர்றுவழி நரம்பு. abduct: உடல் நடுத்தசைப் பிடிப்பு: உடலின் நடுப்பகுதியிலிருந்து தசையைப் பிடித் திழுத்தல்.
abducting : கடத்திப் போதல்.
abduction : உடல் நடுத்தசை இழுப்பு; புறப்பெயர்ச்சி; விரிப்பு வெளி வாங்கல்; விலகல்: உடலின் நடுப்பகுதியிலிருந்து தசையை பிடித்திழுத்தல்.
abductor : பிடித்திழுக்கும் தசை வெளிவாங்கி; விரிப்பி: உடலின் நடுப்பகுதியிலுள்ள தசையானது சுருங்குவதால், அது உடலின் நடுப்பகுதியிலிருந்து பிடித்து இழுக்கும் தசை.
abductor digitiminimi : சிறு விரல் புறப்பெயர்ச்சி.
abductor pollicislirevis : கட்டை விரல் புறம்போக்குக் குறுந்தசை.
abductor pollicis longus: கட்டை விரல் புறந்தள்ளும் நெடுந்தசை.
aberrant : பிறழக்கூடிய; நெறி திறம்பிய; மாறுபட்ட: இயல்புக்கு மாறுபடுகிற, பொதுவாக, இது தனது இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து திரிகிற இரத்த நாளத்தை அல்லது நரம்பினைக் குறிக்கிறது.
aberation: நெறிதிறம்புதல்; திரிபு; பிறழ்ச்சி: இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து சுற்றித் திரிதல். உயிரணுக்களின் இனக்கீற்று களில் (குரோமோசோம்) மரபணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவதால், மரபணு அழிவு, இருமடிப்பெருக்கம், தலைகீழ் மாற்றம் அல்லது உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டாகி மனக்கோளாறுகள் உண்டாதல்,
abeyance : செயலறு நிலை: தற்காலிகமாக செயலற்று இருத்தல்.
ability: செயல் திறன்.
abiology : உயிரிலாப் பொருள்; ஆய்வியல்.
abiogenesis : முதல் உயிர்த் தோற்றம்; உயிரிலாப் பிறப்பு: உயிரற்ற பொருளினின்றும் உயிர்ப்பொருள் தோற்றம் பெற்றதெனும் கோட்பாடு.
abiogenetic : உயிர் தோர்றவியல்; தற்பிறப்புள்ள: உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெற்றதெனக் கருதும் கோட்பாடு சார்ந்த கொள்கை.
abiogenist : உயிர்த் தோற்றவியலாளர்: உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோற்றம் பெற்றதெனக்கருதும் கோட்பாட்டாளர்.
abiotrophy : உயிர்வீரியச் சீர்கேடு: மரபணு சார்ந்த சில வகை உயிரணுக்களின், திசுக்களின் உயிர் வீரியம் உரிய காலத்திற்கு முன்னரே அழிந்து படுதல் அல்லது சீர்கேடுறுதல்.
abilactation : பால்குடி மறக்கடிப்பு: தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை மறக்கடித்தல்.
able-bodied : உடல் திடமுடைய.
ablution : நீராட்டல் மேனியலம்பல்; கழுவல்.
abnormal : இயல்பு கடந்த; இயல்பு மாறிய.
abnormality : இயல் கடந்தமை.
ABO blood groups : A, B, O இரத்தப் பிரிவுகள்: மனித இரத்தம் A, B, AB, O என நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரத்தச் சிவப்பு கணுக்களில் காணப்படும் புரதப் பொருளை அடிப்படையாகக் கொண்டது இப்பிரிவுகள்.
ablation: நீக்கல் அகற்றல்; உறுப்பு நீக்கம்: அறுவை சிகிச்சையில் துண்டித்தல் அல்லது அறுத்து எடுத்தல் மூலம் உறுப்பினை அகற்றுதல்.
abnormal displacement : இயல்பிலா இடமாற்றம்.
abnormalities : இயல்பு மாற்றம்.
abnormal sexual perversion : இயல்பிலா திரிபு பாலுணர்வு.
abocclusion : பல் தாடை ஒட்டாமை: மேல்தாடைப் பற்களும் கீழ்த்தாடைப் பற்களும் ஒட்டா நிலைமை.
abort : கருச்சிதைவு காய்விழு தல்; கருவெளியேறல்: உரிய காலத்திற்கு முன்பு கருவைச் சிதைவுறச் செய்தல்.
aborted: முதிராக்கரு வெளியேறல்.
abortifacient : கருச்சிதைவிப்பி; கருக்குலைப்பான்; சிதைவியம்; கருச்சிதைவுறுத்து மருந்து: உரிய காலத்திற்கு முன்பு கருப்பையி லிருந்து கருவை வெளியேற்றுவதற்குத் தூண்டுகிற அல்லது வினையூக்கம் செய்கிற ஒரு மருந்து.
abortion : கருச்சிதைவு, கருக்கலைப்பு: கருப்பையில் ஒரு வடிவம் பெறுவதற்கு முன்னரே அதனைக் கருப்பையிலிருந்து வெளியேற்றிவிடுதல். சூல் கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் கரு சிதைதல்.
abortion-criminal : குற்றம் சார்ந்த கருச்சிதைவு.
abortion-habitual : தொடர் கருச்சிதைவு.
abortion-incomplete : குறைக் கருச்சிதைவு.
abortion-invitable : தவிர்க்கவியலாக் கருச்சிதைவு; தவிரா கருச்சிதைவு
abortion-missed : தேக்கக் கருச்சிதைவு.
abortion ratio : கருச்சிதைவு விகிதம். abortion-spontaneous : கரு இயற்சிதைவு.
abortion-threatened : கருமருட் சிதைவு.
abortive : உரிய காலத்துக்கு முன்பிறந்த; வளர்ச்சி தடைபட்ட; முழுமையாக வளர்ச்சியடையாத: குறிப்பிட்ட காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிறத்தல்.
abortus : சிதைவுற்றகரு: சிதைவுற்ற அல்லது சிதைவுறுத்தப்பட்ட கரு. இது 500 கிராமுக்கும் குறைவான எடையுடன் இருக்கும். இது இறந்து போனதாகவோ அல்லது உயிர் பிழைக்க இயலாததாகவோ இருக்கும்.
abrasion : தோல் சிராய்ப்பு: சிராய்ப்பு; தோற்காயம்.
abrasive : உராய் பொருள்.
abrachia : கையற்ற: பிறவியிலேயே கைகள் இல்லாத நிலை.
abrade : நேய்; சுரண்டு, அராவு: உராய்தல்.
abrasion : சிராய்ப்பு; தோற் காயம்: சுரண்டுதல் அல்லது உராய்தல் மூலம் தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் மேற்காயம் அல்லது தோல் உரிதல். தழும்புள் திசுவினை நீக்குவதற்கு மருத்துவ முறையில் இது பயன்படுத்தப்படுகிறது.
abreaction : மனக்கிடக்கை திறப்பு: அக எதிரியக்கம்; சோக நினைவின் எதிர்விளைவு; அக எதிரியக்கம்; மன உட்கிடக்கைத் திறப்பு: கடந்தகால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின்போது அல்லது மருந்துகளின் பாதிப்பின் போது பேச்சிலும் வெளிப்படுகிறது.
abresprecaterius : குன்றிமணி.
abrosia : உணவின்மை.
abruptio : இற்று விழுதல்; கிழிந்து விடுதல்; முறிந்து விடுதல்; பனிக் குடம் விலகல்: கருக் குழந்தை முழு வளர்ச்சியடைவதற்கு முன்பே பணிக்குடம் உடைந்து பனிக்குடநீர் வடிந்து விடுதல்.
abruptioplacenta : கருக்குடை விலகல்.
abscess : சீழ்க்கட்டு, கழலை; கட்டி: சீழ் உருவாக்கும் உயிரிகள் ஒர் உறுப்பெல்லைக்குள் உண்டாக்கும் சீழ்த்தொகுப்பு. இது தீவிரமானதாகவோ நாட்பட்டதாகவோ இருக்கலாம்.
abscissa : கிடையச்சுத் தூரம்: ஒரு புள்ளியிலிருந்து நிலை யச்சுக்குள்ள நேர் தொலைவு.
abscission : வெட்டி நீக்கல்: ஒன்றை வெட்டி நீக்குதல். absence : கவனமின்மை; சுய நினைவின்மை; நாட்டமின்மை: சிறிது நேரத்திற்கு சுயநினைவு தவறுதல்.
இயக்கமற்ற வலிப்பு நோய்: இந்த வலிப்பு நோயாளிக்கு சிறிது நேரம் சுயநினைவு இழக்கும், ஆனால் கைகால்கள் வெட்டியிழுக்காது.
absolute : முற்றிலும்; தனி; முழுமையான.
absolute refractory period : முழுச் செயலற்றக் காலம்: முழு இணக்கமிலாக் காலம்.
absolutist : தன்னுணர்வாளர்.
absorb : உறிஞ்சு: (1) உறிஞ்சி ஈர்த்துக் கொள். (2) ஒளிக்கற்றையின் செறிவைக் குறை.
absorbefacient : உட்கவர்ச்சி ஊக்கி: உறிஞ்சுதலை அல்லது உட்கவர்தலை ஊக்குவிக்கின்ற ஒரு பொருள்.
absorbence : உறிஞ்சும் தன்மை; உட்கவர் திறன்; ஈர்க்கும் ஆற்றல்: ஒரு திசுவானது ஒளிக்கற்றைகளை உறிஞ்சும் தன்மை.
absorbent : உறிஞ்சான்; உட்கவர்ப்பி; உறிஞ்சி : உட்கவரும் பொருள்.
absorbent cotton : ஈர்ப்புப் பஞ்சு.
absorptionmeter : உள்ளுறிஞ்சல் மானி.
absorption: உட்கவர்தல்; உள்ளுறிஞ்சல்; அகத்துறிஞ்சல்: (1) திடப்பொருட்கள் வாயுக்களை அல்லது திரவங்களை உறிஞ்சுதல் அல்லது எடுத்துக் கொள்ளுதல். திரவங்கள் திடப்பொருட்களை அல்லது வாயுக்களை எடுத்துக் கொள்ளுதல். (2) உடற்காப்பு ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம் ஒர் எதிர் அங்கப்பொருளை அகற்றுதல் அல்லது ஒர் எதிர் அங்கப் பொருளைச் சேர்த்து உடற்காப்பு ஊக்கியை அகற்றுதல்.
abstinence : தளர்வு; தளர்த்தல்; தவிர்ப்பு; விட்டொழித்தல்: (1) மதுப்பழக்கத்தை விட்டொழித்தல். (2) சிறிது காலம் உடல் உறவின்றி இருப்பது. உடலுறவில் ஈடு படாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.
abstinence syndrome : விடுப்பு இணைப் போக்கு.
abstract : சுருக்கம்; பிழிவு; பொழிப்பு; பிரித்தெடு: கட்டுரைச் சுருக்கம்.
abstraction : பிரித்தெடுதல்: (1) ஒரு கலப்பினப் பொருளிலிருந்து முக்கியமான அல்லது தேவையான பொருளை மட்டும் பிரித்தெடுத்தல். (2) கவனக் குறைவான; வேறு எண்ணமுடைய; (3) பொருந்தாப் பல் அமைப்பு; (4) மொத்தக் கருத்திலிருந்து சிறு பகுதியை மட்டும் பிரித்துக் கருதுதல்.
abstract thinking : இல் பொருள் சிந்தனை; வெறும் எண்ணம்.
abulia : உளத்திட்பக் குறை; கோழைமைத் தன்மை; மன உறுதிப் பாட்டுக் குறை: தானாக முடிவுகள் எடுப்பதற்கு அல்லது செயல்களைச் செய்வதற்குரிய மன உறுதி இல்லாமை.
abusive : கெடுபயன்.
abuse: தவறாகப் பயன்படுத்துதல்; மிகுதியாகப் பயன்படுத்துதல்; கெட்ட பழக்கம்; உடலுக்குத் தீங்கு செய்கின்ற பழக்கம்; கேடு விளைவிக்கின்ற பழக்கம்: (எடு) போதை மருந்துப்பழக்கம்.
abutment. : ஒட்டிக்கிடக்கை; முட்டிடம்: பற்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு இருத்தல்.
acacia : அகேசியா; வேலமரம்: பிசின் தரும் ஒருவகை மரம்.
acalphaindica: குப்பைமேனி.
acalulia : கணிப்புத் திறன் குறைபாடு: மிக எளிமையான கணக்குகளைக்கூடச் செய்ய இயலாதிருத்தல்,
acantha: கூர்நுனி தண்டு வட எலும்பு: நுனி கூர்மையாக உள்ள தண்டுவட எலும்பு.
acanthesthesia : முள்குத்தல் உணர்வு: தோலின் மேற்பரப்பில் முள்குத்துவது போன்று அல்லது ஊசியால் குத்துவது போன்ற உணர்வு உண்டாதல்.
acanthion : ஊசிமுனை எலும்பு; கூர்நுனி எலும்பு: மூக்கு எலும்பு முன் துணி.
acanthocyte : முட்செல்;முட் சிவப்பணு: வட்டமிான சிவப்பணு நீளவடிவில் உருமாற்றம் அடைதல். சிவப்பணு இயல்பற்ற நிலையில், அதன் மேல் முற்கள் முடியுள்ள தோற்றத்தில் இருத்தல்.
acanthocytosis : முட்சிவப்பணு மிகைக் குருதி: இரத்தத்தில் முட்சிவப்பணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலை. பீட்டாலைப்போ புரோட்டீன் இரத்தத்தில் மிகுதியாகும் பொழுது இந்த நிலைமை ஏற்படும்.
acanthokeratodermia : மேல் தோல் திசுத் தடித்தல்: தோலின் கடினமான திசுக்கள் குறிப்பாக, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் திசுக்கள் தடித்துப் போதல்.
acantholysis: மேல் தோல் இணைப்புத் திசு அழிவு: தோல் நோயில் ஒருவகை. இதில், தோலின் மேற்புறமுள்ள இணைப்புத் திசுக்கள் அழி கின்ற நிலைமை காணப்படும். acanthoma : மேல்தோல் கட்டி: மேல்தோல் அணுக்களில் வளர்கின்ற ஒரு தீங்கிலாக் கட்டி,
acanthosis : மேல்தோல் திசு மிகைப்பு; மேல்தோல் திசுத் தடிப்பு: தோலின் மேல் அடுக்கைத் தாக்கும் அணு அதிகரிப்பு நோய்.
acapnia : கரிவளியின்மை; கரியமிலவாயுக் குறை இரத்தம்; கரிமவளிக் குறைக்குருதி; கரியமில வாயு இன்மை: இரத்தத்தில் கரியமில வாயு இல்லாத நிலைமை.
acardiac : இதயப்பை இல்லா.
acaricide : சருமப்பூச்சிக் கொல்லி; தோல் பூச்சிக் கொல்லி.
acatalasia : செரிபொருள் வினையின்மை: செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர்மானிக்கப் பட்ட ஒரு குறைபாடு. இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது.
acarbia : பைகார்பனேட் குறைக்குருதி: இரத்தத்தில் பைகார்பனேட் அளவு குறைந்த நிலை.
acardia : இதயமின்மை; இதயம் இல்லா உடல்: பிறவியிலேயே இதயம் இல்லாதிருத்தல்.
acardiac : நெஞ்சுப்பை அற்ற.
acariasis : தோல் பேன்நோய்: பூச்சி வகைக் கிருமியால் உண்டாகும் ஒருவகைத் தோல் நோய். இது கிருமிகள் தோலைச் சுரண்டி, அங்கு முட்டை யிட்டு, குஞ்சு பொரித்து உயிர் வாழும் குணமுடையது.
acaricide : தோல் பூச்சிக் கொல்லி: தோல் பூச்சிகளைக் கொல்லும் பொருள் அல்லது மருந்து.
acaridae : அகார்டியா; தோல் பூச்சி: தோலை அரிக்கும் ஒரு வகைப் பூச்சிக் குடும்பம்.
acarina : அகாரினா: உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது.
acarodermatitis : தோல் பூச்சிக்கடி அழற்சி: பூச்சிக் கடியால் தோலில் ஏற்படும் அழற்சி.
acarology: பேனுண்ணியல்.
acarophobia : பூச்சி பயம்: பூச்சிகளைக் கண்டால் ஏற்படும் பய உணர்வு.
acarus : சருமப் பேன்; தோல் பேன்: உண்ணிகளின் இனப்பிரிவு.
acarus scabiei : சொறிப் பேன். acasia concinna : சீயக்காய்.
acotalepsia : புரிதல் குறை; நோய்க்குறி அறியாமை.
acatamathesia : புரிதல் குறை: புரிந்துகொள்ளும் தன்மை குறைவாக இருப்பது.
acataphasia : வெளியாக்கக் குறை; வெளிப்படுத்தல் குறை.
acathesia : இயல்பாக உட்கார இயலாமை : பதற்றத்துடனும் மனஅமைதி இல்லாமலும் உட்கார்ந்திருத்தல். குறிப்பாக பீனோதயசின் மருந்து வகையைப் பயன்படுத்துவோருக்கு இந்த நிலைமை ஏற்படும்.
acathexia : இயல்பிலா உடற் சுரப்புகள்.
acathexis : இயல்பான நினைவுணர்வு; முகமலர்ச்சியில்லா மனநோய்.
accelerant : முடுக்கிக் கருவி.
acceleration : விரைவுபடுத்தல்; முடுக்கம் : (1) ஒரு செயலின் வேகத்தை அதிகரித்தல். (2) தரப்பட்டுள்ள கால அளவுக்குள் திசை வேகத்தை அதிகப்படுத்தல். (3) வேகத் தலை விபத்து: வேகமாகச் செல்லும் போது தலையில் அடிபடுதல்.
accelerator : ஊக்கி; முடுக்கி; முடுக்குப்பொறி : வேகத்தை துரிப்படுத்தும் ஒரு பொறி.
acceptance : ஏற்பு; ஏற்றல்.
acceptor : ஏற்பி; வாங்கி : ஒரு பொருளிலிருந்து வேதிப்பொருளை எடுத்துக் கொள்ளும் மற்றொரு பொருள்.
accessory : கூடுதல்; துணைப் பொருள்; துணைக்கருவி; உபரி; மிகை; கூடுதல் அணு : இரத்த விழுங்கணுக்களில் ஒரு வகை. உடற்காப்பு ஊக்கிகளோடு இணைந்து நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்க உதவும் அனுவகை.
துணை நரம்பு : பதினோறாவது கபால நரம்பு.
துணை மார்புக் காம்பு : மார்பில் கூடுதலாக உள்ள மார்புக் காம்பு
accessory artery : துணைத் தமனி.
accessory auricle : துணை இதய ஊற்றறை.
accessory genital organs : துணை இனப்பெருக்க உறுப்புகள்.
accessory muscle : மூச்சுத் துணைத் தசை.
accessory nerve : துணை நரம்பு.
accetabulum : தொடையெலும்பு பந்து கிண்ண மூட்டு.
accidentalism : குறிமுறை மருத்துவம்; நோய்க்குறி மருத்துவம்.
acclimatization to altitude : உயரச் சூழல் இணக்கம். acclimatize : சூழ்நிலை இணக்கம் : வேறுபட்ட சூழ்நிலைக்கும் இணக்கமாகிக் கொள்ளுதல்.
accident : ஏதம்; விபத்து; திடீர்; நேர்வு; தற்செயல் நிகழ்வு.
accidental : தற்செயல் நிகழ்ச்சி.
accidental haemorrahage : திடீர் நேர்வில் குருதி சிந்தல்.
acclimatation : சூழல் ஏற்பு உடல் : புதிய தட்பவெப்பநிலைக்கேற்ப உடல் பழகிக் கொள்ளல்.
acclimation : சூழல் ஏற்பு.
acclimatization : சூழல் இணக்கம்; இணக்கப்பாடு.
accommodation : இடம்; ஏற்பமைவு; தகவமைவு : விழிச் சிறு தசைகள் சுருங்கும்போது கண்மணி (பாப்பா) சுருங்கும் வினை. இதன் மூலம் கிட்டப்பார்வைக்கேற்பப் பார்வைத் தகவமைப்பு ஏற்படும்.
accommodation reflex : ஏற்பமை மறிவினை.
accommodometer : பார்வைத் திறன்மானி.
accommodation of eye : கண் சீரமைவுத் திறன் ஏற்புமைவு; கண் தகவமைவு; கண் இசைவமைவு : ஆடியின் புறக்குவி வினைபொருள்கள் அருகில் இருப்பதை அல்லது தொலைவில் இருப்பதைப் பொறுத்து மாற்றிக் கொள்வதற்குக் கண்ணுக்குள்ள ஆற்றல். இதனால், எப்போதும் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது.
accouchement : மகப்பேறு : பிள்ளைப்பேறு; பிரசவம்; மகப்பேற்று நிலை.
accoucheur : பேறுகால மருத்துவர் : பிள்ளைப்பேறு பார்ப்பதில் தேர்ந்தவர்; தாய்மை மருத்துவ வல்லுநர்.
accoucheuse : பேறு கால மருத்துவச்சி : தாய்மை மருத்துவத்தில் தேர்ந்த பெண்.
accreditation : மதிப்பேற்றுதல்;சான்றளித்தல் : ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது மருத்துவமனையை முறைப்படி சான்றிதழ் அளித்து ஒப்புக் கொள்ளுதல்.
accumulation : திரள்.
accurate : துல்லியம்.
accused : குற்றம் சாட்டப்பட்டவர்.
accretion : திரட்சி; வளர்படிமம்; ஒட்டுவளர்ச்சி : ஒரு மையப் பொருளைச் சுற்றிப் பொருள்கள் அதிகரித்தல் அல்லது படிதல். பல்லைச் சுற்றிக் கல்லடைப்பு அல்லது ஊத்தை திரள்வது இதற்கு எடுத்துக்காட்டு.
acebutolol : அசிபுட்டோலோல் : ஒழுங்கற்ற நெஞ்சுத் துடிப்பு, இடதுமார்பு வேதனைதரும் இதயநோய்; மட்டுமீறி மிக உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் குண்டிக்காய்ச் சுரப்பி இயக்கு நீர்த் தடைப்படுத்தும் காரகி.
acedia : உணர்ச்சியின்மை; கவன மின்மை; சக்தியின்மை; மலைப்பு; மடிமை : வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல்.
acellular : அணுக்களற்ற : அணுக்கள் இல்லாநிலை.
acellularcementum : பற்காரை.
acephalous : தலையற்ற; கபாலமில்லாத.
acelomate : வயிற்றறையில்லா உடம்பு.
accentric : மத்தியில் இல்லாத : மத்திய ஒரு அணுக்கூறு இல்லாத ஒரு இனக்கீற்று.
acephalia : தலையற்ற : தலையற்ற பிறவி; பிறவியிலேயே தலை இல்லா நிலைமை.
acephalocyst : தொற்றிலா பைக்கட்டி.
acephalopodia : தூய பைக்கட்டி.
acephalous : தலையிலா.
acetabular : பந்துக் கிண்ண குழிவு : தொடையெலும்பின் பந்துக் கிண்ண முட்டுப் பொருந்துகிற குழிவு சார்ந்த.
acetalularlip : பந்துக் கிண்ண குழி விளிம்பு.
acetalularnotch : பந்துக் கிண்ண குழி மேடு.
acetabuloplasty : பந்துக் கிண்ணக் மூட்டு அறுவை மருத்துவம் : பிறவியிலேயே உள்ள இடுப்பு எலும்பு இடப்பெயர்ச்சி. இடுப்பு எலும்பு முட்டுவீக்கம் போன்ற கோளாறுகளில், தொடையெலும்பின் பந்துக் கிண்ணமூட்டு பொருந்துகிற குழிவின் ஆழத்தையும் வடிவையும் மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் அறுவைச் சிகிச்சை.
acetabulum : தொடை எலும்பு பந்துக்கிண்ண மூட்டு; பந்துக் கிண்ணக் குழிவு; கிண்ணக்குழி; கிண்ணி : தொடையெலும்பின் பந்துக்கிண்ண முட்டு பொருந்துகிற குழிவு.
acetaldehdye : அசிட்டால்டிஹைடு : பூஞ்சன நுரைத்தலின் போதும், சாராயம் வளர்சிதை மாற்றம் அடையும்போதும் உண்டாகின்ற வேதிப் பொருள். acetaminophen : அசிட்டமினோபென் : காய்ச்சலைக் குறைக்கவும் வலியை நீக்கவும் பயன்படுகின்ற செயற்கை (முறையில் தயாரிக்கப்பட்ட) மருந்து அல்லது ஒரு வேதிப் பொருள்
actaphasia : புலப்படுத்தல் முறை : ஒரு கருத்தைச் சீராகக் கூற இயலாமை
acataposis : விழுங்க முடியாமை
acetate : அசிட்டேட் : அசிட்டிக் அமிலத்தின் (புளிங்காடி) ஒர் உப்பு
acetate silk : செயற்கைப் பட்டு
acetazolamide : அசிட்டாசோலமைடு : குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி, கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது
acetic acid : புளிய அமிலம்; அசிட்டிக் அமிலம் (புளிங்காடி) : புளிக்காடியில் உள்ள அமிலம். மூன்று வகை அசிட்டிக் அமிலங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. (1) உறை நிலை அசிட்டிக் அமிலம். இது சில சமயம் கடுங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. (2) சிறுநீர்க் சோதனைகளில் பயன்படுத்தப்படும் சாதாரண அசிட்டிக் அமிலம். இருமல் மருந்துகளில் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது
aceticanhydride : புளிய நீரிலி
acetoacetic acid : அசிட்டோ அசிட்டிக் அமிலம் : ஒரே உப்பு மூலமுடைய, அதாவது நீக்கி நிரப்பக்கூடிய ஹைட்ரஜன் ஒன்றுடைய ஒரு கரிம அமிலம். மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும் போது ஒர் இடைநிலையில் இது உற்பத்தியாகிறது. இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல் அல்லது நீரிழிவு போன்ற சில வளர்சிதை மாற்றக்கோளாறுகளில், இது இரத்தத்தில் அளவுக்கு மீறி இருந்து, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், இது அசிட்டோனாக மாறுகிறது. இரத்தத்தில் இந்த அமிலம் அளவுக்கு மேல் இருக்கும். ஆனால், எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலை உண்டாகிறது
acetoacetyl coenzyme : அசிட்டோஅசிட்டைல் கோஎன்சைம் : கொழுப்பு அமிலங்கள் உயிர் வளியேற்றம் அடையும்போது உண்டாகும் இடைநொதி
acetobactor : அசிட்டோபாக்டர் : சீடோஎமானாடேசியே எனும் பாக்டீரியா குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பாக்டீரியா இனப் பிரிவு. இது மனிதர்களுக்குத் தீங்கு செய்வதில்லை
acetohexamide : அசிட்டோ ஹெக்சாமைடு : வாய்வழி உட்கொள்ளப்படும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு மருந்து
acetomenapthone : அசிட்டோமொனாஃப்தோன் : வைட்டமின் K என்ற ஊட்டச்சத்தின் ஒரு செயற்கை வடிவம். வாய்வழி உட்கொள்ளும்போது தீவிரமாகச் செயற்படுகிறது. மஞ்சட்காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கும், நோய்த் தடுப்பு மருத்துவத்தில் பிறவி இரத்தப்போக்குக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படுகிறது
acetonaemia : அசிட்டோந் மிகை இரத்தம்; அசிட்டோனேமியா; அசிட்டோனிரத்தம் : இரத்தத்தில் அசிட்டோன் பொருள்கள் கலந்திருத்தல்
acetone : அசிட்டோன் : உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது
acetonuria : அசிட்டோனூரியா; அசிட்டோன் நீரிழிவு : சிறுநீரில் அளவுக்கு மேல் அசிட்டோன் பொருள்கள் இருத்தல். இதனால் இனிப்பான மணம் உண்டாகிறது
acetowhite lesions : அசிட்டோ வெண் சிதைவுகள் :கருப்பைக் கழுத்துப் பகுதியில் ஏற்படுகின்ற வெண்முண்டுப் புற்றுச் சிதைவுகள்
acetylation : அசிட்டைல் ஏற்றம் : ஒரு கரிமப்பொருளில் ஒன்று அல்லது அதற்கு மேலும் உள்ள எண்ணிக்கையில் அசிட்டைல் குலங்களைக் சேர்த்தல்
acetylcholine : அசிட்டில் கோலின் : தசையின் ஊனிர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினை புரியத் துண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள், கோலின் இழைகள் எனப்படும். நரம்பு முனைகளைச் சுற்றிலும், இரத்தத்திலும் பிற திசுக்களிலும் இருக்கும் அசிட்டில் கோலினஸ் டெராஸ் எனப்படும் செரிமானப் பொருளினால் (என்சைம்) கோலின், அசிட்டிக் அமிலம் ஆகியவற்றினுள் இது சேர்க்கப்படுகிறது
acetylcholinesterase : அசிட்டைல்கோலினஸ்டிரேஸ் : அசிட்டைல் கோலினைச் செயலற்றதாக்கும் ஒரு நொதி
acetylcysteine : அசிட்டில்சிஸ்டைன் : சிறுநீர்ப்பை இழை அழற்சியில் உள்ள குழம்பு நீர்ப்பொருள் acetylsalicylic acid : அசிட்டில் சாலிசிலிக் அமிலம் : உணர்ச்சி யின்மை உண்டு பண்ணுகிற அல்லது நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மென்மையான மருந்து. ஏராளமான நோவகற்றும் மாத்திரைகள் தயாரிக்க அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிறது. ஆஸ்பிரின் என்பது இதன் அதிகாரபூர்வமான பெயர்.
acetyltransferase : அசிட்டைல் டிரான்ஸ்பரேஸ் : இது ஒரு வகை நொதி. ஒரு பொருளிலிருந்து அசிட்டைல் மருந்தை மற்றொரு பொருளுக்கு மாற்றும் தன்மை உடையது.
achalasia : உணவுக் குழாய் அலைவிழப்பு; தளர்விழப்பு: தளராமை : தசை நரம்புகளைத் தளர்வுறுத்தத் தவறுதல்.
ache : வலி, வேதனை நோவு : உடலில் ஏற்படும் தொடர் நோவினால் உருவாகும் வலி.
achievement : சாதனை; இலக்கு அடைதல்; குறிக்கோள் எட்டுதல்.
achiles : குதிகால் தசைநார்; குதிநாண் : உடலில் மிகவும் பலம் வாய்ந்த நாண். இது குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள கணுக்கால் முழங்கால் மடக்குத் திசையின் தசை நாண் முனை.
achilles tendon : குதிகால் தசைநார்; குதிநாண் : குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள இளக்க மற்றும் கெண்டைக்கால் புடைப்புத் தசைகளின் தசை நாண்முனை.
achillorrahaphy : குதிநாண் தைப்பு.
achillotomy : குதிநாண் வெட்டு.
achlorhydria : ஹைடிரோ குளோரிக் அமிலமின்மை : வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இல்லாதிருத்தல். மரணம் விளைவிக்கும் இரத்த சோகை, இரைப்பைப் புற்று ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும்.
achlorhydria : ஹைடிரோ குளோரிக் அமிலமின்மை; புளிய மின்மை :இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இல்லாதிருத்தல் அல்லது சுரக்காதிருத்தல், மரணம் விளைவிக்கும் இரத்தச் சோகை, இரைப்பை புற்றுநோய் ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும்.
acholia : பித்த நீரின்மை.
acholuria : அக்கோலுரியா; பித்தமற்ற நீரிழிவு : சிறுநீரில் பித்தநீர் நிறமி இல்லாதிருத்தல்.
acholuric : பித்தமிலா நீர் வடிதல்.
achondrogenesis : எலும்பு வளர்ச்சித் தடை : கை மற்றும் கால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும் நிலை. achondroplasia : எலும்பு வளர்ச்சித் தடை; குறுத்து வளராமை : நீண்ட எலும்புகளின் வளர்ச்சி தடைபட்டு, பெரிய தலையும் குறுகிய உறுப்புகளும் கொண்ட குள்ள உருவம் உருவாதல், இது பரம்பரையாக வரும் ஒரு பண்பு. இதில் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதில்லை. பாரம் பரியப் பண்பு மேலோங்கி இருக்கிறது.
achroma : இயல்பு நிறமின்மை :
achromasia : இயல்பு நிறமின்மை : தோலின் இயல்பு நிறம் இல்லாதிருத்தல். தோல் அணுக்கள் நிறமேற்பதில் பாதிப்பு உண்டாதல்.
achromate : நிறக்குருடு; நிறப்பார்வையின்மை : நிறங்களைப் பிரித்துணர இயலாமை.
achromatic : நிறமிலா : (1) நிறமின்மை, (2) குரோமேட்டின் எனும் நிறமி இல்லாத நிலைமை. (3) வண்ணமேற்பதில் இடர்பாடு, (4) ஒளிச்சிதறலில் இடர்பாடு.
achromatin : நிறமற்ற அணு : அணுவின் உட்கரு நிறமற்றிருத்தல்.
achromatism : நிறமின்மை.
achromatopsia : நிறக்குருடு; நிறப் பார்வையின்மை : வண்ணங்களை முழுமையாக அடையாளங்காண இயலாதிருத்தல். இந்நோய் பிடித்தவர்களுக்கு ஒரே நிறம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும்.
achromia : நிறமற்ற : (1) நிறமில்லாதிருத்தல் அல்லது வெளிறி யிருத்தல். (2) அணுக்கள் நிற மேற்பதில் சிரமப்படுதல்.
achromycin : அக்ரோமைசின் : 'டெட்ரோசைக்கிளின்' என்ற மருந்தின் வாணிக உரிமைப் பெயர்.
achylia : உணவுப்பால் இன்மை; சாறின்மை; பித்தநீரின்மை : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர் இல்லாதிருத்தல்.
achylia-gastrica : இரைப்பை சுரப்பின்மை.
achylous : பித்தநீரின்மை : செரிமானச் சுரப்பு நீர்க் குறைபாடு.
acicular : ஊசி போன்ற வடிவமுள்ள அமிலம். ஹைட்ரஜன் அயனிகளைக் கரைகளில் வெளியிடும் ஒரு பொருள்.
acid : புளியம்; அமிலம் (காடிப் பொருள்); திராவகம் : கரைசல்களில் ஹைட்ரஜன் அயனிகள்அளவுக்கு மேல் உண்டாக்கக் கூடிய பொருள் எதனையும் இது குறிக்கும். இது, நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. இதனை ஒரு காரத்தினால் செயலற்றதாக்கிவிடலாம். அப்போது ஓர் உப்பு உண்டாகும். இவ்விரு சோதனைகள் மூலம் இதனை அடையாளம் காணலாம்.
acidaemia : அமில மிகைப்பு; அமிலப் பெருக்க நோய் அமில ரத்தம் : இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது இதனை ‘சுவாச அமிலப் பெருக்கம்’ என்பர். தசைகளில் லாக்டிக் அமிலம் என்ற காடிப் பொருள் அதிகரிப்பினால் இது உண்டாகும். ஆனால், அது 'வளர்சிதை மாற்ற அமிலப் பெருக்கம்' என்று கூறப்படும்.
acidaemia : குருதி அமில மிகைப்பு : இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகப்படுதல். ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகப்படுதல் அல்லது இரத்தத்தின் pH அளவு இயல்பு அளவிலிருந்து குறைவது.
acidalcohoifast : அமில-ஆல்ககால் எதிர்ப்பு : பாக்டீரியாவியலில் ஒர் உயிரி மாசுபடும் போது, ஆல்ககாலினாலும், அமிலத்தாலும், அது நிறமிழப்பதற்கு எதிர்ப்பு உண்டாகிறது.
acid-base : அமில-கார.
acid-base balance : அமில-உப்பு மூலச் சமநிலை; அமிலக் காரச் சமன்பாடு : இரத்தத்திலும் உடல் நீர்மங்களிலும் அமிலத்திற்கு உப்பு மூலங்களுக்கு மிடையில் சமநிலை நிலவுதல்.
acid-base equilibrium : அமில-கார நடுநிலை.
acid-base titration : அமில-கார தரப்படுத்தம்.
acid burn : அமிலச் சுடுமண்.
acidemia : அமிலமிகை.
'acid fast : அமில எதிர்ப்பு; அமிலத்தில கரையா; அமிலம் ஏற்கா : பாக்டீரியாவியலில், ஒர் உயிரி மாசுபடும்போது, நீர்த்த அமிலங்கள் பட்டால் நிறம் மாறாமலிருத்தல்.
acidhaematin : அமிலமாட்டின்.
acidfication : அமிலமாக்கல்; அமிலப்படுத்தல் : அமிலமாக மாறுதல்.
acidfier : அமிலமாக்கி; அமிலமளிப்பான் : அமிலமாக மாற்றும் ஒரு பொருள்.
acidism : அமிலமேற்றல். acidity : அமிலத்தன்மை : காடித் தன்மை புளிப்புத்தன்மை. அமிலத்தன்மையின் அளவு pH அளவுகளில் அளவிடப்படுகிறது. pH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். pH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும்.
acidimeter : காடிமானி : காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
acidogenic : அமில ஊக்கி.
acidophil : அமிலமேற்பி : (1) அமில நிறம் ஏற்பி. (2) முன் மூளையடிச் சுரப்பியின் அணுக்கள் அமில நிற ஏற்பிகளாக உள்ளன. (3) அமிலமேற்பி நுண்ணுயுரி: அமில ஊடகத்தில் நன்கு வளரும் தன்மையுள்ள ஒரு நுண்ணுயிரி.
acidophilic : (1) அமில நிறமேற்பி : அமிலத்தை ஏற்றுக்கொள்ளும் பண்புகள். (2) அமிலப் பண்புள்ள சாயத்தை ஏற்றுக் கொள்ளும் ஒர் அணுவகை
acidophylic cells : அமில நிற ஏற்பணுக்கள்.
acidosis : அமிலவேற்றம்; அமிலத்தேக்கம்; குருதி அமிலப் பெருக்கம், அமில மிகை : இரத்தத்தில் காரப் பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப்பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது.
acid phosphatase : ஆசிட் பாஸ்பட்டேஸ்; அமில பாஸ்பட்டேஸ் : pH அளவு 5.4-இல் பாஸ்பாரிக் எஸ்டரிலிருந்து கனிமப் பாஸ்பேட்டை வெளி யிடும் நொதி. இது ஆண்மைச் சுரப்பியில் காணப்படுகிறது.
acid phosphatase test : அமில ஃபாஸ்ஃபேட்டேஸ் சோதனை : கார்போஹைட்ரேட்டுகளின் ஒர் அமில ஊடகத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இந்தப் பொருளின் அளவு இரத்தத்தில் அதிகரிக்குமானால் அது ஆண்பால் உறுப்புப் பெருஞ் சுரப்பியில் புற்றுநோய் உண்டாகி இருப்பதை குறிக்கும்.
acid poisoning : அமில விஷம்; அமில நச்சு : நச்சு அமிலத்தை அருந்துதல், இரைப்பையில் இருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலம் மேலெழும்பி வந்து உணவுக் குழாயைப் புண்ணாக்குதல்.
acidstain : அமிலக்கறை.
acidum : அமிலம்.
aciduria : அமிலச் சிறுநீர் : அமிலம் கலந்த சிறுநீர் வெளியேறுதல். மன வளர்ச்சி குன்றியிருப்பதற்கு இது ஒரு காரணம் என்று அண்மை ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
aciduric : அமில ஊடக வளர்ச்சி : அமில ஊடகத்தில் வளரும் தன்மையுள்ள. acies : விளிம்பு.
acinar : ஊநீர் சுரப்பிழை : ஊநீர் சுரப்பு இழைகள் தொடர்புடைய.
acinetobacter : ஆசின்டோபாக்டர் : மண்ணிலும் தண்ணிரிலும் காணப்படுகின்ற காக்கோ பாசில்லஸ் பிரிவைச் சார்ந்த நுண்ணுயிரி. இது மனிதனின் தோலின் மீதும் தொண்டையிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படும்.
acini : ஊனீர் சுரப்பு இழைகள் : சிறு பையுறை போன்ற ஊனிர் சுரக்கும் உயிரணுக்கள் கொண்ட உடற்பகுதி. பல ஊனிர் சுரப்பு இழைகள் சேர்ந்து ஒரு சிறு இதழாக அமைகின்றன.
acinitis : ஊநீர்ச் சுரப்பிழை அழற்சி : ஊநீர்ச் சுரப்பிழைகளில் அழற்சி உண்டாதல்.
acinous : கொத்துக் கொத்தாக : திராட்சைக் கொத்தையொத்த சுரப்பிகள். acinus : ஊநீர்ச் சுரப்பிழை; மூச்சு நுண்ணறை; சுரப்பணுக்குலை : ஒரு (1) சுரப்பியின் மிகச்சிறிய பகுதி. (2) நுரையீரலில் வாயு பரிமாற்றம் நடக்கின்ற அடிப்படை சுவாசப்பகுதி. இங்குதான் கரியமில வாயு வெளி யேற்றம் மற்றும் உயிர்வளி உள்வாங்கல் ஆகிய இருவகை விந்தைச் செயல்கள் நிகழ்கின்றன. ஒரு மனிதனின் நுரையீரல்களில் 800 கோடி மூச்சு நுண்ணுறைகள் உள்ளன.
acme : நோய் உச்சநிலை; நோயின் நெருக்கடி : ஒரு நோய் மிக முற்றிய உச்சநிலை.
aclasia : நோய் தொடரும் பகுதி.
acmesthesia : கூர் தொடு உணர்வு.
acne : முகப்பரு.
acnemia : கெண்டைக் கால் தசை செயலிழத்தல்.
acne vulgaris : முகப்பருக் கட்டிகள் :ஆண்பால் இயக்கு நீர்மங்களின் (ஆண்ட்ரோஜன்) கற்றோட்டத்தினால் மயிர்ப்பை நெய்மச் சுரப்பிகள் அளவுக்கு மேல் தூண்டப்படுவதாலும் மயிர், கொம்பு, நகம் போன்றவை உருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள் (கெராட் டின்) அடைபட்டு, மயிர்ப்பை நெய்மம் (செபம்) அளவுக்கு அதிகமாகச் சேர்வதாலும் உண்டாகும் நிலை. பின்னர், தோல் பாக்டீரியாக்கள் அடை பட்ட மயிர்பை நெய்மத்தை அரிப்பு உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இந்த அமிலங்களே வீக்கத்திற்கும், கொப்புளம் உண்டாவதற் கும் காரணமாகிறது. இதைக் குணப்படுத்த 'மானோசைக்ளின்' மருந்தைப் பயன்படுத்தலாம். acomia : வழுக்கை.
aconite : அக்கோனிட் : அக்கோனிட்டம் எனும் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வீரியமிக்க காரத்தேக்கம்.
acology : மருந்து மருத்துவ இயல் : மருந்து தொடர்பான மருத்துவத்துறைத் தனிஇயல்.
aconuresis : சிறுநீர் கட்டுப்பாடிலா.
acoprous : மலமிலாக் குடல்.
acor : கசப்புச் சுவை.
acorea : கண்மணியின்மை; கண் மணியில்லாத கண் : கண்ணில் பாப்பா இல்லாத நிலை; கண்ணில் நிறமிழி குழைமம் அற்ற நிலை.
acoria : இரைப்பை நிறை உணர்விழப்பு.
acousia : இணைப்புச் சொல் : 'கேட்டல்' நிலையைக் குறிக்கின்ற ஓர் இணைப்புச் சொல்.
acoruscalamus : வசம்பு.
acousma : கற்பனை ஒலிகேட்பு.
acousticmeatus : செவிகுழல்.
acousticophobia : ஒலியச்சம்.
acoustic : ஒலியியல்; ஒலிசார் : ஒலி தொடர்புடைய கேட்டல் உணர்வுள்ள செவிக்குழல் துளை, செவி நரம்பு.
acquire : கொள்;ஈட்டு.
acoustogram : மூட்டு இயக்க ஒலி வரைவு.
acquired : அடையப் பெற்ற; பெறப்பெற்ற.
acquired immune deficiency syndrome (AIDS) : ஈட்டிய நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்; ஏமக்குறை நோய்;(எய்ட்ஸ்) : இது மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க்கிருமியினால் (Human Immume Deficiency Virus-HIV) உண்டாகிறது. இந்தக் கிருமி, நலிவுறுத்தும் கிருமிக் குழுமத்தைச் சேர்ந்தது. இது நான்கு கட்டங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது: (1) நோய் எதிர்ப்புப் பொருள். இது கிருமியைக் கொண்டு செல்லும் பொருள். இந்நிலையில் இந்நோய் பீடிக்க 10% வாய்ப்புகள் உண்டு. (2) தொடர்ந்து நீடிக்கும் பொது நிணநீர் கொண்டு செல்லும் பொருள். இந்த நிலையில், புற நோயாளிகளுக்கான சிகிச்சை தேவை. (3) 'எய்ட்ஸ்' நோய் தொடர்புடைய, நெஞ்சு வலி, பேதி, படிப்படியாக அதிகரிக்கும் மனச் சீர்கேடு போன்ற சிக்கல்கள் தோன்றுதல். (4) குணப்படுத்த முடியாத முழுமையான 'எய்ட்ஸ்' நோய்.
acquired immunity : பெற்ற தடுப்பாற்றல். acquoshumor : செவிக்குழல் நீர்மம்.
acral : புறமுனை : உடலின் புற முனைப் பகுதிகள் தொடர்புள்ள.
acrarthritis : அங்க எலும்பு அழற்சி.
acratia : வலுவிழத்தல்.
acrid : நெடி; கார்ப்பு : கசப்பு, உறுத்தல், எரிச்சல் உள்ள நெடி.
acriflavine : அக்ரிஃபிளேவின் : ஆற்றல் வாய்ந்த நோய் நுண்ம அல்லது நச்சுத்தடைப் பொருள். இது காயங்களுக்கு 1 : 1000 கரைசலாகவும் 1 : 8000 வரையிலான கரைசலாகவும் பயன் படுத்தப்படுகிறது. அக்ரிஃ பிளேவின் பால்மம், மென்மையான, ஒட்டிக் கொள்ளாத காயங்களுக்குக் கட்டுப் போடக் கூடிய ஒரு மருந்து. இதில் திரவகன்மெழுகு (பாரஃபின்) அடங்கியுள்ளது. புரோஃபிளேவின், யூஃபிளேவின் இரண்டும் ஒரேமாதிரியான கூட்டுப் பொருள்கள்.
acrimony : உறுத்தல் நெடியுள்ள.
acrisia : நோய் மூலம் அறியாமை.
acritical : மோசமான நிலையற்ற, நெருக்கடியற்ற இக் கட்டான நிலையற்ற இக்கட்டுநிலை இல்லாத.
acritochromacy : நிறப்பார்வைப் பிறழ்வு.
acroagnosis : காலில்லா உணர்வு; உறுப்பில்லா உணர்வு : கால் இல்லாத உணர்வு.
acroanaesthesia : உறுப்பு முனை உணர்விழப்பு : ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் உணர்ச்சிக் குறைவு.
acroarthritis: உறுப்பு மூட்டழற்சி.
acrobystitis : குறி முனைத் தோலழற்சி.
acrocentric : கை கால் நீள வேறுபாடு.
acrocephalia : கூம்புத் தலை : இது பிறவியிலேயே அமையும் பொருத்தமில்லா உருவக்கேடு. இதில், அம்புத்தலை வடிவ மற்றும் தலை ஒட்டின் மூலம் முகட்டெலும்பையும் பின் முகட்டெலும்பையும் இணைக்கும் பொருத்து வாயானது முதிர்வதற்கு முன்பே மூடிக்கொள்வதன் காரணமாகத் தலையின் உச்சி கூம்பாகவும், கண்கள் வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும்.
acrocephalo syndactyly : கூம்புத்தலை வாத்து விரல் : இது பிறவியிலேயே அமையும் ஒர் உருவக்கேடு. இதில், தலையின் உச்சி கூம்பு வடிவிலும், கை விரல்களும் பாதவிரல்களும் வாத்தின் கால் லிரல்களைப் போன்று இடைத் தோலினால் ஒன்றுபட்டிணைந்தும் இருக்கும் acrochordon : தொங்கு தோல் கட்டி.
acrocinesis : மிகைப்பு இயங்கல்.
acrocyanosis : கைகால் நீலம் பூத்தல் : ஆக்சிஜன் சரிவர ஊட்டப்பெறாத இரத்தம் சுழல்வதன் காரணமாகக் கை கால் பகுதிகள் நீலம்பூத்து இருக்கும் நோய் வகை.
acrodermatitis : கைகால் தோல் அழற்சி.
acrodermatosis : கைகால் தோல் நோய் : கை மற்றும் கால் தோலில் ஏற்படும் நோய் வகை.
acrodolichomelia : நீளக்கால், கை நோய் : நீண்ட கால்களும், கைகளும் காணப்படும் நோய் வகை.
acroedema : நிலைத்த கைகால் வீக்கம்.
acrodynia : முனைவலி.
acrodynia : கைகால் சிவப்பு : தோல் நரம்புக் கோளாறில் கை கால் பகுதிகளில் வேதனை தரும் அளவுக்குச் சிவப்பு நிறமாதல்.
acroesthesia : உறுப்புமுனைக் கூருணர்வு : கை கால்களிலும் வலி ஏற்படுதல் அல்லது இயல்பற்ற கூருணர்ச்சி தோன்றுதல்.
acrohyperhidrosis : கைகால் வியர்வை மிகைப்பு : உள்ளங்கை மற்றும் உள்ளம் கால்களில் அளவுக்கதிகமாக வியர்ப்பது.
acrohy pothermia : கைகால் வெப்பக் குறை.
acrohypothermy : கை கால் வெப்பக் குறைவு : உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் அதிகக் குளிர்ச்சி ஏற்படுதல்.
acrokeratosis : கைகால் மீள்உரு வளர்ச்சி : கை மற்றும் கால்களில் உள்ள தோலில் தடித்த வளர்ச்சி உருவாதல்.
acrokinesia : கைகால் இலக்க மிகைப்பு : கைகளிலும் கால்களிலும் காணப்படுகின்ற இயல்பற்ற அசைவுகள்.
acromastitis : கொங்கைக் காம்பு அழற்சி.
acromegaly : முனைப் பருமை; உறுப்பு அகற்சி; புறமுனைப் பருமன் கபச் சுரப்பி நோய் :குருதியில் கலந்து உறுப்புகள் செயற்படத் துண்டும் உட் சுரப்பு இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு மேல் சுரப்பதால், கைகள், பாதங்கள், முகம் ஆகியவை அளவுக்கு மீறி அகன்று விடுதல், குழந்தை களிடம் இது அரக்க உருத்தோற்றத்தை உண்டாக்குகிறது.
acromelic : கைகால் நுணி: கை கால் முனைப் பகுதிக்குத் தொடர்புள்ள. acrometagenesis : கைகால் வளர்ச்சிமிகை : கைகளும் கால்களும் இயல்பற்ற வளர்ச்சி அடைதல், மிகை வளர்ச்சி பெறல்.
acromial : தோள் உச்சயில் ; தோள்பட்டையின் மேல்பகுதி : தோல் உச்சிக்கு அருகில்.
acromicria : உறுப்புக் குறுக்கம் : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய தூம்பற்ற மூளையடிச் சுரப்பியிலிருந்து (கபச் சுரப்பி) சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) குறைவாகச் சுரப்பதன் காரணமாக கைகள், கைகால் பாதங்கள் ஆகியவை சிறுத்து விடுதல் அல்லது குறுகி விடுதல்.
acromioclavicular : உச்சிக் காரை எலும்பின் : காரை எலும்பு மற்றும் தோள் உச்சியை இணைக்கின்ற.
acromion : தோள் உச்சி : தோள் எலும்பின் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டு இருக்கும் எலும்பு; இது காரை எலும்புடன் இணைந்து தோள் உச்சியை உண்டாக்குகிறது.
acromionectomy : தோள் உச்சி எலும்பு நீக்கல் : அறுவை மருத்துவம் மூலம் தோல் உச்சி எலும்பு அகற்றப்படுதல்.
acromion process : தோள் திருகு நோய் : தோள் பட்டை எலும்பின் ஒரு பகுதி சற்றே பின்புறமாகத் திருகி இருத்தல்.
acromioplasty : தோள் உச்சி எலும்புச் சீரமைப்பு : தோள் உச்சி எலும்பை அறுவை மருத்துவம் மூலம் சீரமைத்தல்.
acromioscapular : தோள் உச்சித் தோள் எலும்பு : தோள் உச்சி எலும்புடனும் தோள் எலும்புடனும் தொடர்புடைய.
acromphalus : தொப்புள் வீக்கம் : (1) தொப்புளின் மையப் பகுதி. (2) தொப்புள் வீக்கம்.
acromyotonia : கைகால் தசை இசிவு : புறப்பகுதியில் உள்ள கை, கால் தசைகளில் சிதைவு ஏற்படுவதால் தசைகள் சுருங்கி விடுதல்.
acroneurosis : கைகால் நரம்பழற்சி நோய் :கை, கால்களில் ஏற். படும் ஒருவகை நரம்புக் கோளாறு. acronym : எழுத்துச் சுருக்கச் சேர்க்கை : முதன்மைச் சொற்களின் முதல் எழுத்தைச் சேர்த்துக் கிடைக்கும் புதுச்சொல். (எ-டு). Acquired Immune Deficiency Syndrome: AIDS (எய்ட்ஸ் நோய்).
acronyx : திருகு நகம்.
acropachy : கை கால் விரல் திரள்தல் : கை விரல்களும் கால் விரல்களும் திரள்தல்.
acropachyderma : கைகால் விரல் திரட்சி அழற்சி :இந்த நோயின் போது நோயாளிக்கு கைகால் விரல்கள் திரட்சி அடையும். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். முகத்திலும் தலையிலும் தோல் அழற்சியும் திரட்சியும் காணப்படும்.
acroparaesthesia : கை மரமரப்பு : கைகளில் உட்கூச்செறிவும் மர மரப்பும் ஏற்படுதல்.
acroparalysis : புறஉறுப்பு வாதம், கை, கால் வாதம் : கை அல்லது காலில் வாதம் ஏற்படுதல், கை அல்லது கால் செயலிழத்தல்.
acropathology : புற உறுப்பு நோய்க் கூறுவியல்; அங்க நோய்க் கூறுவியல் : புறஉறுப்புகளில் ஏற்படும் நோய்களின் நோய்க் கூறுவியல்.
acropathy : புற உறுப்புநோய் : உடலின் புற உறுப்புகளில் ஏற்படும் நோய்களைக் குறிப்பது.
acrophobia : உயர அச்சம் : உயரமான இடங்களைப் பார்த்துப் பயப்படுதல்.
acroposthitis : ஆண்குறி முனைத் தோலழற்சி : ஆண்குறியின் முனைத் தோளில் அழற்சி ஏற்படுதல்.
acroscleroderma : கைகால் தோல் தடிப்பு நோய் : கைகால்களில் உள்ள தோல் தடித்துக் கடினமாதல்.
acrosclerosis: முகம், விரல், கை, கால் இரத்த ஊட்டக்குறை : தோல் தடிப்பு நோயும் தோல் நாட்நோயும் இணைந்து காணபடும் நோயினம். இந்த நோயுள்ளவருக்கு முகம், கழுத்து, கை, கால்களில் தோல் தடித்துக் காணப்படும், இரத்த ஊட்டக் குறைவு காணப்படும்.
acrostealgia : அங்க எலும்பு வலி.
acrotic : குறை அழுத்த நாடி.
acrotism : நாடித்துடிப்பின்மை; குறை நாடித் துடிப்பு : நாடித் துடிப்பை உணர முடியாமை. நாடித்துடிப்பு குறைவாக இருத்தல். -
acrotrophoneurosis : கைகால் குழிப்புகள் நரம்பழற்சி : கைகளிலும் கால்களிலும் இரத்த நாளங்களும் நரம்பிழைகளும் பாதிக்கப்படுவதால் குழிப்புகள் உண்டாகும். நரம்பழற்சி ஏற்படும். இரத்த ஊட்டக் குறைவு தோன்றும்.
acrylate : அக்ரிலேட் : அக்ரிக் அமிலத்தில் தயாரிக்கப்பட்ட உப்பு.
acrylics : உறுப்பு ஒட்டுப் பசைகள் : உடம்பில் செயற்கை உறுப்புகள் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும், வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பொருள்களின் தொகுதி.
act : செயல் வினை, சட்டம், செயலுறல்.
ACTH : ஏ.சி.டி.எச்.: 'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செய்கிறது.
acthar gel : அக்தார் கூழ் : இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய், கீல்வாத மூட்டுவீக்கம், ஒவ்வாமை நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
action : செயல், தசைப்புரதம் : தசை இழைகளில் காணப்படும் ஒரு வகைப் புரதம். இது 'மயோசின்' எனும் மற்றொரு தசைப் புரதத்தோடு இணைந்து தசையைச் சுருக்குவதற்கும் விரிப்பதற்கும் உதவுகிறது. இது G ஆக்க்ஷன் F ஆக்க்ஷன் எனும் இரு வகைகளில் உருவாகிறது.
actified : ஆக்டிஃபடு : சியூடோ ஃபெட்ரின், டிரிப் ரோலின் ஆகியவை அடங்கிய மருந்து.
acting out : துன்ப உணர்வுக் குறைப்பு : உணர்ச்சிவயப்பட்ட மனவேதனையைக் குறைத்தல், இதில் முந்தைய மனக்குழப்பங்கள், மனப்போக்குகள் மூலம் தன்னையறியாமல் ஏற்பட்டு விட்ட தடுமாற்றமான அல்லது மூர்க்கத்தனமான நடத்தையிலிருந்து நோயாளி விடுவிக்கப் படுகிறார்.
actinic : கதிரியக்க : 'வேதியியல்' விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
கதிரியக்கத் தீப்புண்கள் : புற ஊதாக் கதிர்களின் பாதிப்பால் ஏற்படும் கதிரியக்கத் தீப்புண்கள்.
கதிரியக்கப் புற்றுநோய் : சூரியக் கதிர்களால் தோலில் தோன்றும் புற்றுநோய். இது பொதுவாக தலையிலும் கழுத்திலும் காணப்படும்.
கதிரியக்கத் தோலழற்சி : கதிரியக்கத்தால் தோல் அழற்சியுறல். actinic dermatoses : ஒளிக் கதிர்த்தோல் அழற்சி : தோலின் புறவூதா ஒளிபட்டால் இயல்புக்கு மீறி எளிதில் புண்படக் கூடியதாக இருத்தல்.
actinism : ஒளிக்கதிர் வேதியியல் விளைவு : ஒளிக்கதிரினால், முக்கியமாகப் புறவூதா ஒளிக் கதிரினால் உண்டாகும் வேதியியல் விளைவு.
actino : ஆக்டினோ : இணைப்புச் சொல். ஒளிக்கதிர் அல்லது கதிரியக்கத்தோடு தொடர்புடைய ஒர் இணைப்புச் சொல்.
actinometer : ஆக்டினோமீட்டர் : ஒளி - வெப்பமானி, ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி.
actinobacillus : ஆக்டினோபே சில்லஸ் : வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் பாதிக்கின்ற மிகச்சிறிய பாக்டீரியா வகை. (நுண்ணுயிரி). சிசோமை சீட்ஸ் இடைப்பிரிவைச் சார்ந்த காக்கோபேசில்லஸ் நுண்ணுயிரிகள். இவை மிக அரிதாக மனிதர்களையும் தாக்கும்.
actinobiology : ஒளிக் கதிர் உயிரியல்; ஒளிய உயிரியல் : உயிர் வாழும் உயிரிகளின் மீது ஒளிக்கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராய்தல்.
actinodermatitis : கதிரியக்க தோலழற்சி : கதிரியக்கத்தால் தோலில் தோன்றும் அழற்சி நிலை.
actinogenics : கதிர் வீச்சியல்.
actinolite : ஒளியில் தன்மை மாறும் பொருள்.
actinology : ஒளி இயல்;ஒளிக் கதிர் இயல் : கதிரியக்கத்தால் தோலில் தோன்றும் அழற்சி நிலை.
actinomadura : ஆக்டினோமதுரா, மதுரா பூஞ்சைக் காளான் நோய் : (மதுரா கால்) மது ரெல்லா பூஞ்சைக் காளான் இதனை ஏற்படுத்துகிறது. இந்நோயின் போது நோயாளிக்குக் கால் வீங்கிவிடும்; பல புழைகள் சீழ் வழிந்த நிலையில் காணப்படும். கீழ்த்தோல் திசுக்கள், வெண்குருணைகள், ஊநீர், தோலடித் திசுக்கள் ஆகியவை அழுகிய நிலையில் வெளியேறும். சீழில் பூஞ்சைக் காளான்கள் வெளியேறும்.
actinomyces : கதிர்வீச்சு பாக்டீரியா : ஒளிக்கதிர் வீசும் பூரண வலையைக் கொண்ட பூஞ்சனம் போன்ற ஒட்டுண்னிப் பாக்டீரியா. இதிலிருந்து பல்வேறு நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
actinomycetaceae : ஆக்டினோமைசீடேசியே : பாக்டீரியா (நுண்ணுயிரி) வகை. ஆக்டினோமைசிடாலிஸ், மைகோ பேக்டீரியாசியோ, நாக் கார்டியேசியே, டெர்மட்டோபிலே சியோ மற்றும் ஸ்ட்ரெப் டோமைசிடேசியோ நுண்ணுயிரி குடும்பங்களை உள்ளடக்கிய நுண்ணியிரி இனம்.
actinomycete : ஆக்டினோமைசீட் :ஆக்டினோ மைசிடாலிஸ் இனப்பிரிவைச் சார்ந்த நுண்ணுயிரி.
actinomycin : ஆக்டினோமைசின் : வீரிய நச்சு நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து. பல நுண்ணுயிர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. சமயங்களில் புற்றுக்கொல்லியாகவும் பயன்படும்.
actinomycosis : கதிர்வீச்சு ஒட்டுயிர் காளான் நோய் : ஒளிக்கதிர் வீசும் ஒட்டுயிர்க் காளானால் தோன்றும் ஒரு வகை நோய். இந்நோய், நுரையீரல், தாடை, குடல் ஆகிய உறுப்புகளை முக்கியமாகப் பாதிக்கிறது. இந்நோயினால், சிறு மணிகள் போன்ற கட்டிகள் தோன்றி, அவற்றிலிருந்து மஞ்சள் நிறக் கந்தகக் குருணைகள் அடங்கிய திண்மையான எண்ணெய்ப் பசையுள்ள சீழ் வெளிப்படுகிறது.
actinopraxis : ஊடுகதிர் மருத்துவம்; கதிர்வீச்சு மருத்துவம்.
actinotherapy : ஒளி மருத்துவம் : அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை.
action : உறுப்பு இயக்கம் :உடலின் ஏதேனுமொரு பகுதியின் செயல்முறை அல்லது அலுவல் பணி, எதிரெதிர்க் குழுமத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய்கின்றன. ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு எதிரான கட்டாய வினையை இன்னொரு தசை செய்கிறது. சொந்த விருப்பின் பேரிலன்றி, திடீர் உந்துதல் காரணமாகத் தூண்டுவிசை வினை நடைபெறுகிறது. இணைவிழைச்சு போன்ற நரம்புக் கிளர்ச்சிக்கு இணங்கத் தன்னியல்பாகத் தூண்டப்படும் உள்ளுறுப்பியக்கச் செயல்கள் தன்னியல்பு வினைகளாகும். தனியாகச் செயல் புரிய முடியாமல், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தசைகளின் ஒத்துழைப்பினால் நடைபெறுவது இணைவு வினையாகும்.
action automatic : தன்னியக்கச் செயல்.
action cumulative : கூட்டு விளைவுச் செயல்.
action delayed : சுணக்கச் செயல்.
action-direct : நேர்செயல்.
action-local : தனியிடச் செயல்.
action-involuntary : இயல்வினை. action-mechanism of : செயல் முறைமை.
action-mode of : செயல்விதம்.
action-potential : செயலழுத்தம்.
action-reflex : மறிவினை.
action-specific : தனித்த செயல்; குறித்த செயல்.
action-voluntary : அறிவினை.
actisorb : சீழ் நாற்றத் தடுப்புப் பையுறை : சீழ் கசியும் காயங்க ளிலிருந்து நாற்றத்தைத் தடுப்பதற்கான செயல்துண்டல் பெற்ற கரிப்பையுறைகள்.
actin : ஆக்டின் : தசை உயிரணுக்களிலுள்ள புரதங்களில் ஒன்று. இது, தசைச் சுருக்கம் உண்டாக்குவதற்காகத் தசைப்பற்றுடன் எதிர்வினை புரிகிறது.
activate : முடுக்கம்; கிளர்த்தல்.
activated : முடுக்கமான; முடுக்கப்பட்ட கிளர்வுற்ற.
activated charcoal : கிளர்வுற்ற கரி.
activation : தூண்டுதல்; செயல் படுத்துதல்; கிளர்வுறல்.
activation energy : கிளர்வுறு ஆற்றல்; முடுக்க ஆற்றல்.
activator : செயலூக்கி; செயலி : ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.
active: செயலூக்கம்; உந்தப்பட்ட துடிப்பான : நோயாளியைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பான இயக்கங்களை உண்டாக்குதல். சிக்கலான அமைப்பான்களை கொண்ட ஒரு மருந்திலுள்ள ஒர் அமைப்பால் இத்தகைய செயலூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப்படும் 'பெல்லாடோன்னா' என்ற மருந்திலுள்ள அட்ரோப்பின் ஒரு செயலுக்கியாகும்.
active principle : செயல்படும் மூலம் : ஒரு மருந்தில் முக்கிய மாகச் செயல்படும் வேதிப் பொருள்.
active sites : செயல்படுமிடங்கள் : செயற்களங்கள்.
active mass : செயல்படு பொருண்மை.
active transport : கிளர்வுக் கடத்தல்.
activistic : பழமையான.
activitator : கிளர்வூக்கி.
activity : செயல்; இயக்கம்; நடவடிக்கை : சுறுசுறுப்பாக இருத்தல். actomyosin : ஆக்டொமையோசின் : தசை இழைகளில் உள்ள ஒரு புரதத் தொகுப்பு. ஆக்டின் மற்றும் மையோசின் புரதக் கூறுகளை உள்ளடக்கியது.
actrapid : அக்ட்ராப்பிட் : இயல் நிலை. இன்சுலின் ஊசி மருந்தின் வணிகப்பொருள்.
actual : உண்மையான; நடை முறையில் உள்ள.
acuity : கூர்மை; கூர்மைத் திறன் : கூர்மை, தெளிவு, நுண்மை தெளிவாகவும் கூர்மையாகவும் கேட்குந்திறன் கேட்புக் கூர்மைத் திறனாகும். இசைக் கவடு, தாழ்குரல், ஒலிமானி ஆகியவற்றின்மூலம் இத்திறன் சோதனை செய்யப்படுகிறது. குழந்தைகளின் கேட்புக் கூர்மைத் திறனைச் சோதிக்க மணிஒலி, கிலுகிலுப்பை, தேக்கரண்டி பயன்படுத்தப்படுகின்றன. கண் விழியின் பின்புறத்திரையில் உருக்காட்சிகள் தெளிவாக ஒரு முகப்பட்டு விழுவதைப்பொறுத்துப் பார்வைக் கூர்மைத் திறன் சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனை பெரும்பாலும் 6 மீட்டர் துரத்திலிருந்து ஸ்னெலன் சோதனை முறைப்படி செய்யப்படுகிறது.
acuity of vission : பார்வை நுட்பம்; பார்வைக் கூர்மை.
acumentin : அகுமென்டின் : இரத்தத்தில் உள்ள பல்முளைக் கரு அணு மற்றும் இரத்த விழுங்கணுக்களில் காணப்படும் ஒருவகைப் புரதம். இது இவ்வாறுக்களின் செயல்களை அதிகப்படுத்தக் கூடியது.
acuminate : கூர்மை; நுண் கூர்மை.
acupan : அக்குபன் : 'நெஃபோபன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
acupressure : ஊசியழுத்த முறை : ஊசியினால் நரம்பு மற்றும் குருதி நாளத்தை அழுத்தி நோயைக் குணப்படுத்தும் முறை.
acupuncture : அலகு மருத்துவம்; அலகுமுனை மருத்துவம் : உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊசியால் துளையிட்டு நோயைக் குணப் படுத்தும் அல்லது நோயைக் குறைக்கும் மருத்துவமுறை.
acus : கூரான, ஊசி.
acusection : மின் அறுவை ஊசி வெட்டு.
acusector : மின் அறுவை ஊசி.
acute : திடீர்; கடிமிகு; மிகுந்த; குறுகிய காலத்தில் துவங்கிய கடுமையான : ஒரு நோயானது திடீரெனத் துவங்கிக் குறுகிய காலத்திலேயே கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துதல். acute abdomen : கடும் வயிற்றழற்சி.
acute arthritis : கடும் மூட்டழற்சி.
acute braindisorder : கடும் மூளைக் கட்டிழப்பு.
acute cholecystitis : கடும் பித்தப்பை அழற்சி.
acute gastritis : கடும் இறைப்பை அழற்சி.
acute infection : கடும் தொற்று; உடனடித் தொற்று.
acute poisoning : கடும் நஞ்சேற்றம்.
acute pulpities : கடும் பற்கூழ் அழற்சி.
cutemenia : கடும் கிளர்ச்சி.
acyanosis : நீலநிறமின்மை : ஆக்சிஜன் சரிவர ஊட்டப் படாத இரத்தம் சுழல்வதனால் தோல் நீலநிறமாகக் காணப் படாதிருத்தல்.
acynote : நீலமிலா.
acyanotic : நீலத்தோலின்மை : பிறவியிலேயே உண்டாகும் நெஞ்சுப்பை நாளக் கோளாறுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதற்குப் பயன்படும் சொல்.
acyclia : உடல் நீர்ம ஓட்டத்தடை.
acyclovir : அசிக்கோவிர் : தேமல், படர்தாமரை போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் கிருமி ஒழிப்பு மருந்து.
acyesis : கருத்தறிக்காமை; பெண் மலடு.
acyltransferase : அசிட்டிரான்ஸ்பரேஸ் : ஒரு வேதிப்பொருளில் உள்ள அசைல் குலக்கூறுகளை மற்றொரு வேதிப்பொருளுக்கு மாற்றும் தன்மையுள்ள நொதிப் பொருள்.
acystia : சவ்வுப்பை இன்மை; பித்த சிறுநீர்ப்பையின்மை :பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை ஆகியவை பிறவியிலேயே இல்லாதிருத்தல்.
adactyly : பிறவி விரலின்மை : பிறவியிலேயே கை அல்லது காலில் விரல் இல்லாதிருத்தல்.
adamantine : கடினமான; பற்சிற்பி.
adamantinoma : பற்சிற்பிப்புர்று : பற்சிற்பியில் தோன்றும் புற்றுக் கழலை. இது ஒரு தீங்கிலா புற்று வகையைச் சார்ந்தது.
adamantoblast : பற்சிற்பி அணு : பல் உருவாகும்போது பற்சிற்பியை உருவாக்கும் அணுவகை.
adamantoma : பற்சிற்பிப் புற்று.
adamas : மாறா; நிலைத்த; நிலையான. adam's apple : குரல்வளைக்கூர்; குரல்வளை மணி :கழுத்தின் முன் பகுதியில், குறிப்பாக வயது வந்த ஆண்களிடமுள்ள குரல் வளைப் படைப்பு.
இது, சங்குகளைக் குறுத்தெலும்பின் இரு சிறகங்களும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.
adaptability : தகவமைப்புத் திறன்; தழுவு திறன் : நிலைமைக் குத்தக்கபடி உளவியல் முறையிலும், உடலியல் முறையிலும் தன்மை மாற்றியமைத்துக் கொள்வதற்கான திறன்.
adaptation : சார அமைத்தல்; படிக்கமாக்கல்.
adapter : இணைப்புப் பொறி : ஒரு கருவியின் ஒரு பகுதியை மற்றொரு கருவியோடு பொருத்துவதற்குப் பயன்படும் துணைப்பொறி (இணைப்புப் பொறி).
adaption : பழக்கும் திறமை; ஏற்புத் திறன்; தகைவு; தகவமைப்பு : உயிர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கொப்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். இஃது உறுப்பு, நிறம் முதலானவற்றில் அமையும்.
adaptometer : இசைவுமானி : கண் தகவமைப்புக் காலத்தை அளக்க உதவும் கருவி.
adcorty : அட்கார்ட்டில் : 'டிரியாம்சினலோன்' என்ற மருந்தின் வணிகப் பெயர். வாய்ப்புண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் பற்பசை.
addict : பழக்க அடிமை; வயப்பட்டவர்; வயவர் : ஒருவர் தன் உடலால் அல்லது உள்ளத்தால் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலைமை. குறிப்பாக மதுமருந்து அல்லது போதைப் பொருளுக்கு அடிமையாதல்.
addiction : தீய பழக்கத்திற்கு அடிமையாதல்; பழக்க அடிமைத் தனம்; வயமை; பழக்கப்பற்று : போதை மருந்துகள், ஆல்கஹால், மதுபானம், புகையிலை போன்ற போதைப் பொருட்களை உண்ணும் கெட்ட பழக்கத் திற்கு அடிமையாகி விடுதல். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக்கட்டுப் படுத்த முடியாமல் அந்தப் போதைப் பொருட்களை நாடிச் செல்கிறார்கள்.
addisonian crisis : அடிசோனியன் இக்கட்டான நிலை : திடீரென உடலில் அட்ரீனலின் இயக்குநீர் குறைவதால் உண்டாகும் இக்கட்டான நிலைமை. இது பொதுவாக தொற்றுக் கிருமிகள், காயங்கள், அறுவை மருத்துவம், மன அழுத்தம் போன்றவை காரணமாக ஏற்படும். பாதிக்கப்படும் நபருக்கு இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அதிர்ச்சி நிலை ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல்நீர் வறட்சி நிலை ஆகியவை ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல் நீர் வரட்சிநிலை ஆகியவை ஏற்படும்.
addisonian pernicious anaemia : அடிசோனியன் உயிர் போக்கும் இரத்தச் சோகை : இரைப்பையில் அகக்காரணி சுரக்காததால் உண்டாகின்ற மிகைப் பெருக்கக் குருதியணு சோகை நோய். இது ஒரு தன்தடுப்பாற்றல் நோய். இந்த நோயின்போது இரத்த ஊநீரில் வைட்டமின் பி 12 (B12) அளவு மிகவும் குறைந்து இருக்கும். எதிர் அகக்காரணி எதிர் அங்கங்கள் 50% இருக்கும்.
addisonism : அடிசோனிசம் : அடிசன் நோயை ஒத்த நிலை. உடல் எடை இழந்தநிலை மற்றும் நிறமி ஏற்றம் ஆகியவை துரையீரல் காச நோயுள்ள நோயாளியிடம் காணப்படும்.
addison's disease : அடிசன் நோய் (குருதிச் சோர்வு நோய்) தோல் கருமை நோய் : வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் ஒரு நோய். குண்டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதியில் கார்ட்டிசால், ஆல்டோஸ்டெரோன் என்னும் சுரப்புப் பொருள் குறைவாகச் சுரப்பதால் இது உண்டாகிறது. இதனால், இரத்த அழுத்தம் குறைதல், எடைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, தசை நலிவு, இரைப்பை-குடல் கோளாறுகள், தோல் ஊதா நிறமாக மாறுதல் போன்ற கோளாறுகள் உண்டாகின்றன.
addition : சேர்த்தல்; கூடுதல்.
addition compound : கூடுதல் சேர்மம்.
addition reaction : கூட்டுச் செயல்.
adducent : அணைவு; ஒடுக்கம்.
adduct : ஒடுக்கு; அட்க்கு : உடலின் மையப்பகுதியை நோக்கி இழுத்தல். உள் இழுத்தல்.
adduction : தசை மையச் சுரிப்பு; தசை மைய ஒடுக்கம்; அகப் பெயர்ச்சி : உடலின் தசை நார்கள் உடலின் மையம் நோக்கி இழுத்தல்.
adductor : மையச் சுரிப்புத் தசைநார் : உடல் உறுப்பு எதனையும் உடலின் மைய அச்சினை நோக்கி இழுக்கும் இயல்புடைய தசைநார்.
adductor brevis : குறு ஒடுக்கி. adductor longus : நீள் ஒடுக்கி.
adductor magnus : பெரு ஒடுக்கி.
adductor muscle : மைய இழுப்புத் தசை : முன்னிழுக்கும் இயல்புடைய தசைநார் கையை உடலை நோக்கிக் கொண்டு வருவது இந்தத் தசைதான்.
adelomorphous : வரையறுத்த உருவின்மை :ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் உருவம் இல்லாத நிலைமை.
adenalgia : சுரப்பிவலி : உடலில் உள்ள சுரப்பியில் தோன்றும் வலி.
adendritic : நரம்பணுயிழையற்ற.
adenectomy : மருத்துவ நிண நீர் கணு நீக்கம்; சுரப்பி நீக்கம் : ஒரு சுரப்பியை அறுவை மருத்துவம் செய்து அகற்றுதல்.
adenectopia : நிலைபிறழ்ந்த சுரப்பி.
adenectopic : இடம்மாறிய சுரப்பி; நிலை பிறழ்ந்த சுரப்பி : ஒரு சுரப்பியானது உடலில் இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் அல்லாது வேறு எங்காவது இருப்பது.
adenemphraxis : சுரப்பி நீர் ஓட்டத் தடை : சுரப்பியில் சுரக்கும் சுரப்பு நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுதல்.
adenitis : சுரப்பி அழற்சி; கழலை வீக்கம்.
adenia : நீடித்த நிணநீர்ச் சுரப்பிப் பெருக்கம் : ஒரு நிணநீர்ச் சுரப்பியானது நெடுங்காலமாக வீக்கமடைந்த நிலையில் இருத்தல்.
adenitis : சுரப்பி அழற்சி : ஒரு சுரப்பியல் அல்லது நிணநீர்க் கரணையில் ஏற்படும் வீக்கம். மூச்சுக் குழாய் நிணநீர்க் கரணைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி.
adenization : சுரப்பி போன்ற மாறுதல் அடைதல்.
aden : இணைப்புச் சொல் : சுரப்பி சொல்லுடன் இணையும் சொல்.
adenoacanthoma : சுரப்பித் திசுப்புற்று :நன்கு வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு வகைச் சுரப்பித் திசுப்புற்று. இது உடலில் பல் வேறு இடங்களில் பரவும் தன்மையுடையது.
adenoameloblastoma : முதுகெலும்பில் உண்டாகும் புற்றுக் கழலை. தீங்கிலா வகைப் புற்று. இதன் நாளங்களில் கனகரமான அணுக்கள் காணப்படும்.
adenoblast : சுரப்பியணு : கருவில் காணப்படும் ஒரு வகை அணு, வளர்ச்சியில் இது ஒரு சுரப்பித் திசுவாக உருமாறக் கூடியது.
adenocarcinoma : சுரப்பிப் புற்று; சுரப்பித் திசுப் புற்று : சுரப்பித் திசுக்களில் ஏற்படும் புற்று நோய். இதனை 'சுரப்பிப் பிளவை" என்றும் கூறுவர்.
adenocoele : சுரப்பு நீர்க்கட்டி : சுரப்பியிலிருந்து உருவாகும் நீர்க்கட்டி
adenocellulitis : சுரப்பித்திசு அழற்சி : ஒரு சுரப்பி அழற்சியுறல். சுரப்பி மற்றும் அதைச் சார்ந்த திசுக்கள் அழற்சி அடைதல்.
adenocyte : முதிர் சுரப்புத் திசு.
adenodynia : சுரப்பி வலி.
adenoepithelioma : சுரப்பிப் புறப் படலத்திசுக் கட்டி; சுரப்பிப் புறப்படலப் புற்றுக்கட்டி; சுரப்பிச் சீதப்படலப் புற்று : சுரப்பித் திசுக்களில் உள்ள சீதப்படல அணுக்களில் தோன்றும் புற்று நோய்க் கழலை.
adenofibroma : சுரப்பி நார்த்திசுப் புற்று : சுரப்பித் திசுக்களிலும் நார்த்திசுக்களிலும் உருவாகும் புற்றுக் கழலை.
adenofibrosis : சுரப்பிகள் ஏற்றம்.
adenogenous : சுரப்பித்திசு வளர்ச்சி : சுரப்புத் திசுவிலிருந்து வளருதல்.
adenography : சுரப்பி ஊடு கதிர்ப்படம் : சுரப்பியை ஊடு கதிர்ப்படம் எடுத்தல்.
adenohypersthenia : மிகைச் சுரப்பு.
adenohypophysis : கபச்சுரப்பி முன்மடல்; அடிமூளைச் சுரப்பி முன்மடல்.
adenohypophysectomy : கபச்சுரப்பி முன்மடல் அகற்றல்; அடிமுனைச் சுரப்பி முன்மடல் நீக்கம் : கபச்சுரப்பியின் முன் பக்கமடலை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் நீக்குதல்.
adenoidectomy : மூக்கடித் தசை அறுவை மருத்துவம் :முக்கடித் தசைத் திசுவின் அழற்சியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.
adenoid : அடிநாய்டு சுரப்பி.
adenoiditis : மூக்கடித்தசை அழற்சி : மூக்கடித்தசை அழற்சியுறல்
adenoids : மூக்கடித் தசை வளர்ச்சி (மூக்கடியான் : மூக்கடித் தசையிலுள்ள நிணநீர்ச் சுரப்பித்
adenolipoma : சுரப்பிக் கொழுப்புக் கட்டி : கொழுப்புத் திசுக்களையும் சுரப்பித் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு வகைக் கழலை.
adenology : சுரப்பியியல்.
adenolymphoma : சுரப்புநிண நீர்க்கழலை : சீதப்படலத் திசுக்களையும் நிணநீர்த் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு தீங்கிலாப் புற்றுவகை. இது பெரும்பாலும் கன்னத்தில் உமிழ் நீர்ச் சுரப்பியில் உருவாகும். முகத்தில் ஒரு பக்கத்தில் வலி இல்லாத வீக்கமாக இது துவங்கும். காலப்போக்கில் இது ஒரு கழலையாக உருமாறும்.
adenoma : சுரப்பி அழற்சி; கழலைக் கட்டி; சுரப்பிக் கட்டி, கோளப்புற்று; சிறு சுரப்பிக் கட்டி : சுரப்பித் திசுக்களில் உண்டாகும் கழலைக் கட்டி.
adenomalacia : சுரப்புத் திசு மென்மையாதல்.
adenomatoid : சுரப்பிக் கட்டி.
adenomatosis : சுரப்பிப் பெருக்கம் : சுரப்பித் திசுக்கள் பெருக்கமடைதல்.
adenomegoly : சுரப்பிப் பெருக்கம்; சுரப்பி உருப் பெருக்கம்.
adenomyofibroma : சுரப்பித் தசை நார்த்திசுக் கட்டி : சுரப்பித் திசுக்களையும் தசைநார்த் திசுக்களையும் பெற்றுள்ள கழலை.
adenomyoma : கருப்பைக் கழலை : தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும்.
adenomyomatosis : கருப்பைச் சுரப்பித் திசுக்கட்டி : கருப்பையில் சுரப்புத் திசுக் கட்டி வளர்ச்சி அடைதல்.
adenomyometritis : சுரப்ப்பைத் திசு அழற்சி : கருப்பையில் உண் டாகும். நோய்த்தொற்றினால் கருப்பையில் உள்ள திசுக்கள் அழற்சியுற்று பெருக்கம் அடைதல்.
adenomyosis : கருப்பைச் சுரப்புத் திசுக்கட்டி :
adenoncus : சுரப்பில் பெருக்கம்; சுரப்பி உருப்பெருக்கம்.
adenopathy : சுரப்பி நோய்; நிணநீர் சுரப்பிப் பெருக்கம்; கோள நோய் : ஒரு சுரப்பியில், குறிப்பாக ஒரு நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் ஏதேனும் நோய்.
adenopharyngitis : மூக்கடித் தொண்டைச் சதை அழற்சி : முக்கடிச் சதையும் தொண்டை மற்றும் தொண்டைச் சதையும் அழற்சி அடைதல். adenosarcoma : சுரப்பு இணைப்புத் திசுப்புற்று : சுரப்பித் திசுக்களிலும் கரப்பு இணைப்புத் திசுக்களிலும் உருவாகின்ற புற்று வகை.
adenosinase : அடினோசின் சிதைப்பி.
adenosclerosis : சுரப்பி கெட்டியாகல் கோளத் தடிமன் : ஒரு கரப்பி, வீக்கத்துடன் அல்லது வீக்கமின்றி, கெட்டியாகி விடுதல். இழைமத் திசுவின் பதிலீடு அல்லது சுண்ணக மயமாக்குதல் காரணமாக ஒரு சுரப்பு கடினமா கிறது.
adenosine diphosphate (ADP) : அடினோசின் டைஃபாஸ்ஃபேட் : உயிரணுவிற்குள் நடைபெறும் எரியாற்றல் பரிமாற்றத்தில் உள்ளடங்கிய உயிர்மங்களாலான ஒரு முக்கியமாக வளர்சிதை மாற்றப் பொருள். இந்தப் பொருளின் மூலமாக உயிரணுவில் வேதியியல் எரியாற்றல் பாதுகாத்து வைக்கப்படுகிறது.
adenosinase : அடினோசின் சிதைப்பி.
adenosine triphosphate (ATP) : அடினோசின் முப் பாஸ்ஃபேட், அடினோசின் டிரைஃபாஸ் ஃபேட் (ATP) : நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்பின் போது இந்தப் பொருள் உண்டாகிறது.
adenosis : சுரப்பி நோய்.
adenotome : மூக்கடித்தசை வெட்டி : சுரப்பியை அகற்ற உதவும் (வெட்டியெடுக்க உதவும்) ஒரு மருத்துவக் கருவி. குறிப்பாக முக்கடித் தசையை வெட்டியெடுக்க இக்கருவி பயன்படுகிறது.
adenotonsillectomy : மூக்கடியான் - அடிநாத்தசை அறுவை மருத்துவம் : முக்கடித்தசை வளர்ச்சி (முக்கடியான்) அடி நார்த்தசை மூலம் அகற்றுதல்.
adenoviridae : அடினோவிரிடியே : அடினோ வைரஸ்ஸின் குடும்பம். இரட்டைச் சரம் டி.என்.ஏ. உள்ள வைரஸ்களைக் கொண்ட ஒரு வைரஸ் குடும்பம். நோய்த் தொற்று அணுக்களில் உள்ள உட்கருக்களில் இவை வளர்ச்சியடையும் தன்மை உடையவை. சுவாசப் பாதையையும் விழி வெண் படலத்தையும் பாதிக்கக் கூடிய வைரஸ் குடும்பம். adenovirsis : சுரப்பிக் கிருமிகள் : ஊனீர்ச் சுரப்புச் சார்ந்த 47 தனித்தனி வகைகள் அடங்கிய கிருமிகளைக் கொண்ட ஒரு டி.என்.ஏ குழுமம். இந்த 47 வகைகளில் மனிதனிடம் 31 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு விலங்கு இனங்களில் வேறு பல வகைகள் காணப் படுகின்றன. இவற்றுள் சில மேல் மூச்சுக் கோளாறுகளையும், வேறு சில சீத சன்னி அல்லது சளிக்காய்ச்சல் என்னும் நிமோனியாக் காய்ச்சலையும், இன்னும் சில கொம்பு நக அழற்சியையும் உண்டாக்குகின்றன.
adenyl : அடினைல்.
adenylate cyclose : அடினைலேட் வளைவாங்கி.
adenylic : அடினிலிக்; அடினிலிக் அமிலம் : அடினோசின் மற்றும் பாஸ்போரிக் அமிலத்தை உறைமானம் செய்யும்போது உருவாகும் ஒருவகை அமிலம்.
adequacy : நிறைவு : நிறைவடைந்த நிலை, போதுமான அளவு, ஏற்ற அளவு.
adephagia : பெரும் பசி நோய்.
adermine : ஆடர்மின் : பைரிடாக்சின்; வைட்டமின் B6.
adephagia : பசிநோய்; அடங்காப் பசி.
adexolin : அடக்சோலின் : A, D வைட்டமின்களின் கலவை.
adherence : ஒட்டுப் பண்பு : ஒட்டிக்கொள்ளும் குணமுடைய (எ-டு) உடல் அணுக்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏற்பிகளின் நட்புக் கொள்ளும் தன்மையுடைய நுண்ணுயிரிகள்.
adherent : ஒட்டுந்திறனுடைய; ஒட்டிய :
adhesin : ஒட்டுகை; ஒட்டல் கூறு: உடல் அணு ஏற்பிகளில் ஒட்டும் பண்புள்ள நுண்ணுயிர் அணுக்களில் மேற்பரப்பில் காணப்படும் ஒரு மூலக்கூறு.
adhesion : இருவேறு உறுப்பிணைவு; ஒட்டுகை : வீங்கிய இரு வேறு உறுப்புகள் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பிளவுற்ற பரப்பு இணைவு. அடிவயிற்றில் இத்தகைய பிணைவினால் குடலில் அடைப்பு ஏற்படும். முட்டுகளில் இது போன்ற பிணைவு, அசைவைக் கட்டுப்படுத்துகிறது. இரு மார்பு வரிப் பரப்புகளிடையிலான பிணைவு காரணமாக மார்புக் கூடு முழுமையாக இணைவதைத் தடுக்கிறது.
adhesive : ஒட்டக்கூடிய; ஒட்டவல்ல.
adhesive top : ஒட்டும் பட்டை.
adiadach okinesis : மறித்தியங்கு திறனிழப்பு.
adiemorrhysis : இரத்தவோட்ட நிறுத்தல். adipectomy : கொழுப்புடைக் கட்டி.
adipocele : கொழுப்புப் பிதுக்கம்.
adipocere : அழுகல் விழுது : நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப் பொருள்.
adiaphoria : அடியாபோரியா : பல தொடர்ச்சியானப் புறத்துண்டல் களுக்கும் பலனில்லாமை.
adipocoele : கொழுப்புப் புதுக்கம்; கொழுப்பினிப்பிதுக்கம் : கொழுப்புத் திசு உடலின் உள் உறுப்புலிருந்து பிதுங்கி வெளி வருதல்.
adipocellular : கொழுப்பினத்திசு அணு சார்ந்த : கொழுப்புத் திசுக் களுக்கும் உயிரணுத் திசுக்களுக்கும் தொடர்புடைய.
adipocyte : கொழுப்புடைத்திசு.
adipogenesis : கொழுப்புடையாக்கம்.
adipogenic : கொழுப்பு ஊக்கி; கொழுப்பு ஆக்க ஊக்கி : கொழுப்பு உருவாக ஊக்கியாயமையும் பொருள்.
adipohepatic : ஈரல் கொழுப்பேற்றம்.
adipokinesis : கொழுப்புத்திசுக்கள் உடலில் நகருதல்.
adipokinin : அடிப்போகைனின் : மூளை அடிச்சுரப்பிகள் முன் மடலில் சுரக்கின்ற இயக்குநீர். இது கொழுப்புத் திசுக்களிலிருந்து கொழுப்பணுக்களை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துக் கொள்ள உதவுகிறது.
adipolysis : கொழுப்புச் சிதைப்பு.
adipoma : கொழுப்புடைக் கட்டி.
adipometer : தோல் ஆழ அளவி.
adiponecrosis : கொழுப்பு மரிப்பு; கொழுப்பு மடிதல்; கொழுப்பு இறத்தல்: உடலில் கொழுப்பணுக்கள் அல்லது கொழுப்புத் திசுக்கள் அழியும் நிலை.
adipopexis : கொழுப்பினி ஏற்றம் : உடலில் கொழுப்பு சேமிக்கப் படுதல்.
adiposed : கொழுப்புடைய; கொழுப்பார்ந்த.
adipose : கொழுத்த; உயிரினக் கொழுப்பு; கொழுப்பார்ந்த; கொழுப்பேறிய : கொழுப்புக்குரிய; கொழுத்த. உயிரினக் கொழுப்புத் திக அடங்கிய உயிரணுக்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறக் கொழுப்பு அடங்யுள்ளது.
adipose tissue : கொழுப்புத் திசு.
adiposis : கொழுப்பு ஏற்றம்; கொழுப்பு மிகு; கொழுப்பு மிகைப்பு; கொழுப்புத் திசு மிகைவு : உடலில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேருதல். adiposistas : அதிகொழுப்பு அமைவு.
adipositis : தோல் அடிக்கொழுப்பு அழற்சி.
adiposity : கொழுப்புடைமை; கொழுப்பேற்றம் : உடலில் அளவுக்கு மேல் கொழுப்பு சேர்தல்.
adiposuria : கொழுப்பினிச் சிறுநீர் : சிறுநீரில் கொழுப்பணுக்கள் வெளியேறுதல்.
adipsa : நீர் வேட்கை முறிப்பி.
adipsia : நீர் வேட்கையின்மை : தாகம் எடுக்காத நிலைமை.
aditus : அணுகுவாய்; அணுகு வழி : உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றி ஆராயும் , உடல் உட்கூறியலில், அணுகுவதற்கான நுழைவாயில் அல்லது திறப்பு வழி.
adjacent : அடுத்து.
adjunct : சேர்ப்பு: சேர்வைப் பொருள்.
adjunctive : துணைச் சேர்மம்.
adjustment : ஒத்துசைவு.
adjuvant : துணை மருந்து; துணையம் : மற்ற மருந்துகளின் வினைகளுக்கு உதவி புரிவதற்காகச் சேர்க்கப்படும் துணை மருந்துப்பொருள். முதன்மையான மருத்துவச் சிகிச்சையுடன் கூட இந்தத் துணை மருந்து அளிக்கப்படுகிறது.
adler's theory : ஆட்லர் கோட்பாடு : "வலுவான தாழ்மை உணர்ச்சி காரணமாகவே நரம்புக் கோளாறுகள் உண்டாகின்றன" என்னும் கோட்பாடு.
ad-lilbe : வேண்டுமளவு.
admission : சேர்தல்.
admit : சேர்.
adnauseam : குமட்டல் ஊக்கி.
adnerval : அட்நெர்வல் : நரம்புக்கு அருகில் அமைந்துள்ள. நரம்புசெல்லும் பாதையில் அமைந்துள்ள.
adnexa : அண்டை உறுப்பு : உடலில் ஒர் உறுப்புக்கு மிக நெருக்கமாகவுள்ள உறுப்புகள் அல்லது கட்டமைப்புகள்.
adolescence : இளமைப் பருவம்; வாலிபம்.
adoption : தத்து; ஏற்பு.
adrenal : அண்ணிரகம்; குண்டிக்காய் அழுத்த சுரபி; குண்டிக்காய் அழுத்த; சிறுநீரக மேவி : (1) சிறுநீரகத்திற்கு அருகில்; (2) அண்ணிரகச் சுரப்பி.
அண்ணிரகப் புறணி : அண்ணிரகச் சுரப்பியின் வெளிப்பகுதி. இது அண்ணிரக அகணியுடன் தொடர்புடையது. மினரலோ கார்ட்டி காய்ட்ஸ் மற்றும் குளுக்கோ கார்ட்டி காய்ட்ஸ் இயக்கு நீர்களைச் சுரக்கின்றது.
அண்ணீரக இக்கட்டு : அண்ணீரகச் கரப்பு நீர்கள் குறைவதால் உண்டாகின்ற உடல்நலக் கோளாறு. இது திடீரெனத் துவங்கும். நோய்த் தொற்று ஏற்படும். நோயாளிகளை கடுமையாகப் பாதிக்கும்.
அண்ணிரகச் சுரப்பி ; சிறுநீரகத்தின் உச்சியில் ஒரு தொப்பியை கவிழ்த்தாற்போன்று அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவச் சுரப்பி. முன் மூளையடிச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் ஏ.சி.டி.எச் கிளர்மத் தூண்டலால் இது கார்ட்டிவில் மற்றும் ஆண்மையூக்கி (ஆன்ட்ரோஜன்ஸ்) இயக்கு நீர்களைச் சுரக்கிறது.
அண்ணிரக அகணி : அண்ணிரகச் கரப்பியின் உட்பகுதி. அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் இயக்குநீர்களைச் சுரக்கிறது. அட்ரீனலின் (அண்ணிர்) ஆல்பா, பீட்டா ஏற்பான்களுடன் இணைந்து வினைபுரியும். ஆல்பா ஏற்பான்கள் உள்ள உறுப்புகளின் தசைநார்கள் அட்ரீனலின் இயக்கத்தால் சுருங்கும் பீட்டா ஏற்பான்கள் உள்ள உறுப்புத் தசைநார்கள் விரியும். அட்ரீனலின் மிகுதியாகச் சுரக்கப்படும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நார் அட்ரீனலின் உடல் முழுவதிலும் உள்ள தசை நார்களைச் சுருங்கச் செய்யும். இதன் மிகைச் சுரப்பாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். இதயத்தின் இயக்கவேகம் மிகும்.
adrenal function tests : அண்ணிரகச் சுரப்பிச் சோதனை : குண்டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதி இயல்புக்கு மீறுதலாகச் செயற்படுவதைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் நிணநீர் சுரக்கும் அளவினைக் கணக்கிடுவதன் மூலம் இது கண்டறியப்படுகிறது.
adrenal cortex : அண்ணீரகப் புரணி.
adrenalectomy : அண்ணீரகச் சுரப்பி அறுவை மருத்துவம் : கட்டி ஏற்பட்டுள்ள ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம். குண்டிக்காய்ச் சுரப்பிகள் இரண்டையுமே அகற்றிவிட்டால், உட்சுரப்பு இயக்குநீர்களை (ஹார்மோன்கள்) உட்செலுத்துதல் வேண்டும்.
adrenal hormone : அண்ணீரக இயக்குநீர்.
adrenaline : அண்ணிரகச் சுரப்பு நீர் : பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயாரிக்காலம். புறத் தூண்டுதலால் உயிர்மம் முழுதும் எதிரியங்குறுவதில், இந்த நீர் பானமாக உட்கொள்ளப்படுகிறது. நிண நீருசியால் உண்டாகும் கொப்புளக் காய்ச்சல், மூச்சுத் தடையுடன் கூடிய ஈளை நோய் (ஆஸ்த்மா), காஞ் சொறித் தடிப்பு போன்ற ஒவ்வாமை நோய்களுக்கு ஊசி மூலம் இது செலுத்தப்படுகிறது. உறுப்பெல்லை உணர்வு நீக்கக் கரைசல்களில், விரவிப் பரவுவதைக் குறைப்பதற்காகவும், உணர்விழப்பு நிலையை நீடிப்பதற்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இரத்த ஒட்டச் சீர்குலைவு நிலைகளில், மிகவும் நீர்த்த கரைசலாக (1 : 1,00,000) மெது, மெதுவாக நரம்பு மூலம் செலுத்தப் படுகிறது.
adrenal glands : அண்ணீரகச் சுரப்பி : இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள், இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் 'அட்ரினலீன்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது விரைவான இதயத்துடிப்பு, வெறுத்த முகம் போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்களை உண்டாக்குகிறது. பறவைகளிலும் மீன்களிலுமுள்ள இந்தச் சுரப்பிகள் முற்றிலும் வேறானவை.
adrenalinuria : அண்ணீர் கலந்த சிறுநீர் : சிறுநீரில் அண்ணீர் கலந்திருத்தல்.
adrenalism : அண்ணீரகக் குறைபாடு : அண்ணீரகச் சுரப்புக் குறையும்போது உண்டாகும் நோய்நிலை.
adrenalitis : அண்ணீரக அழற்சி : அண்ணீரகச் சுரப்பிகள் அழற்சி யடைதல்.
adrenal medulla : அண்ணீரக அகணி.
adrenalopathy : அண்ணீரகச் சுரப்பி நோய்.
adrenarche : மறைவிட முடித் தூண்டல் : வாலிபப் பருவத்தை அடையும்போது அண்ணீரகத்திலிருந்து சுரக்கப்படும் ஆண்மையூக்கி இயக்குநீரால் அக்குளிலும், பெண்குறிப் பகுதியிலும் முடிகள் முளைப்பது தூண்டப் படுதல்.
adrenergic : அண்ணீரகச் சுரப்பி நீர் நரம்புகள் : குண்டிக்காய்ச் சுரப்பு நீரையோ, குண்டிக்காய்ச் சுரப்பு அல்லாத இயக்கு நீரையோ அவற்றின் சேர் முனையங்களிலிருந்து வெளியேற்றுகிற நரம்புகள், பெரும் பாலான பரிவு நரம்புகள், குண்டிக்காய்ச் சுரப்பு அல்லாத இயக்குநீரை வெளியேற்றுகின்றன.
adrenergiereceptors : அண்ணீர் ஏற்பிகள்.
adrenocorticotrophic : அண்ணீரகப் புரணியூக்கி.
adrenocortical : அண்ணீரகப் புரணி சார்ந்த; அண்ணிரகப் புறணிச் சுரப்புக் குறைவு : அண்ணீரகப்புரணியில் சுரக்கின்ற இயக்குநீர்கள் குறை பாடு. இது அண்ணீரகச் சுரப்பியில் உண்டாகின்ற நோய் நிலையால் உருவாகிறது அல்லது முன் மூளையடிச் சுரப்பியிலிருந்து ஏ.சி.டி.எச். கிளர்மத் தூண்டல் சரிவர வராததால் இந்நிலைமை ஏற்படலாம்.
adrenocorticoid : அண்ணீரகப் புறணி இயக்குநீர் : அண்ணீரகப் புறணியில் தயாரிக்கப்படுகின்ற இயக்குநீர்.
adrenogenital syndrome : உட்சுரப்புக் கோளாறு; அண்ணீரகப் பாலுறுப்பு நோய்த் தொகுப்பு : குண்டிக்காய்ச் சுரப்பின் புறப் பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒரு வகை உட்சுரப்புக் கோளாறு. இதனால் ஒரு பெண் குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்தும், உதட்டு இதழ்கள் இணைந்தும் காணப்படலாம். அப்போது அந்தக் குழந்தையை ஆண் என்று தவறாகக் கருத இடம் ஏற்படும். ஆண் குழந்தையிடம் வெளிப்படையான மயிரும், விரிவடைந்த ஆண் குறியும் காணப்படும். ஆண் பெண் குழந்தைகள் இரண்டிலும் விரைவான வளர்ச்சியும், திண்ணிய தசைப் பற்றும் மிகுந்த எலும்பு முதிர்ச்சியும் காணப்படும்.
adrenogram : அண்ணீரக ஊடு கதிர்ப்படம்.
adrenoleucodistrophy : அண்ணீரக வெள்ளணு அழிப்பு.
adrenolytic : அண்ணீரகச் சிதைப்பி : (1) அண்ணீரகச் சுரப்பைக் கெடுக்கும் பொருள். (2) அண்ணீர் (அட்ரீனலின்) செயல் பாட்டைக் கெடுக்கும் அல்லது சிதைக்கும் பொருள். (3) அண்ணீரகச் சுரப்பு நீர் நரம்புகளின் செயலைச் சிதைக்கும் பொருள்.
adrenomegaly : அண்ணீர் பெருக்கம், அண்ணீர் வீக்கம் அண்ணீரகச் சுரப்பி, வீங்கி விடுதல் மிகை வளர்ச்சி.
adrenomyeloneuropathy : அண்ணீரக மூளை நரம்பு நோய் : இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயின்போது அண்ணீரகச் சுரப்பி சுருங்கிவிடும். அதன் சுரப்பு நீர் குறைந்து விடும். மூளை இயக்கம் இயல்பாக இருப்பதில்லை. தண்டுவட நரம்புகள் சிதைவடைந்து புற நரம்பு இயக்கத்தடை உண்டாகும்.
adrenopause : அண்ணீர் சுரப்புக் குறை.
adrenostatic : அண்ணீர் சுரப்புக் குறைப்பி.
adrenotoxin : அண்ணீர் நச்சு : அண்ணீரகச் சுரப்பிக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்.
adriamycin : அற்றியாமைசின் : 'டாக்சோரூபிக்கன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Adson's test : அடிசன் பரிசோதனை; கழுத்து விலா எலும்புப் பரிசோதனை : பாதிப்பு உள்ள பக்கமாகக் கழுத்தைத் திருப்பி, இயன்ற அளவிற்குக் கழுத்தை நிமிர்த்தி, மூச்சை உள் இழுத்தால், அப்பக்கத்தில் உள்ள கையில் நாடித்துடிப்பு மறைந்துவிடும், கை வலிக்கும். இப்பரி சோதனை கழுத்துவிலா எலும்பு உள்ளவர்களுக்கு செய்யப்படும்.
adsorbate : அகத்துறிஞ்சு பொருள்.
adsorbents : உறிஞ்சி; (ஆவி); உறிஞ்சிகள்; உறுஞ்சு தன்மைய : தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா நச்சுப் பொருள்களையும் பிற நச்சுப் பொருள்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இது உணவு நஞ்சூட்டு நேர்வுகளில் பயன்படுத்தப் படுகிறது.
adsorption : உறிஞ்சுதல்; ஆவியை உறிஞ்சுதல்; புறத்துறிஞ்சல்; மேலீர்ப்பு : தனது மேற்பரப்பிலுள்ள ஒரு வாயுவை, திரவத்தை அல்லது திடப்பொருளை கரைசலாகவோ மிதவலாகவோ உறிஞ்சி வைத்துக் கொள் வதற்கு ஒரு பொருளுக்கு உள்ள பண்பு.
adult : முழுப்பருவம்; பருவமுற்றோர் : முழு வளர்ச்சியடைந்தவர், முழுமையான வளர்ச்சி கண்டிருக்கும் ஒர் உயிர்ப்பொருள்.
adulteration : கலப்படம் : பொருளைத் தயாரிக்கும் பொழுது அப்பொருளுடன் அசுத்தமான, மலிவான, அல்லது நச்சுத் தன்மை கொண்ட மற்ற பொருள்களையும் சேர்ப்பது. (எ-டு) உணவுக் கலப்படம். உணவுத் தானியங்களில் குறு மணலைச் சேர்ப்பது.
adultration : கலப்படம்.
advancement : மாறுகண் அறுவை மருத்துவம் : மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார்வை) சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம். இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து, வெள்விழிக் கோளத்தின் புறத்தோலுடன் பொருத்தித் தைத்து விடுகிறார்கள்.
adventitia : குருதி நாளப் புறத் தோல; குருதிக்குழாய் வெளிப்படலம் : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் அல்லது இதயத்திற்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையின் மேலுறைத் தோல்.
adventitious : இடம்மாறிய : இயல்பற்ற; மறபற்ற.
இயல்பற்ற சுவாச ஒலிகள் : இவ்வொலிகள் நோய்நிலையில் மட்டுமே கேட்கப்படும். நோயற்றவரிடம் இவை கேட்கப்படுவதில்லை. இவ்வொலிகள் நுரையீரல்களிலிருந்தோ, நுரையீரல் உறையிலிருந்தோ எழும்பலாம்.
adverse reaction : விரும்பத்தகாத (விளைவு) வினை : விரும்பத் தகாத பின்விளைவு. ஒரு மருந்தை உடலில் செலுத்தும் போது உண்டாகின்ற ஒரு வகை விரும்பத்தகாத விளைவு. (எ-டு.) பெனிசிலின் ஊசி மருந்தைச் செலுத்தும் போது ஏற்படும் கடும் ஒவ்வாமை.
adynamia : உயிராற்றல் அழிவு : படுகிடை நிலை.
Aedes : எய்டெஸ்; கொசுக் குடும்பம் : பெரும்பாலான கொசுக்கள் நோய்க் கடத்திகளாக செயல்படுகின்றன. (எ-டு.) எய்டெஸ் எகிப்தி : மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசு இனம்.
AEG : காற்று மூளை இயக்கப் பதிவு : மூளையின் இயக்கத்தை ஒரு காற்றுக் கருவிமூலம் பதிவு செய்தல்.
aeglemasmeles : வில்வம்.
aerate : காற்றூட்டல்.
aeration : வளியூட்டம்; காற்றூட்டல்; காற்றூட்டம் : உயிர்ப்பு மூலம் குருதியுடன் ஆக்சிஜன் கலக்கும்படி செய்தல்.
aerial : வான்வழி.
aerial velocity : வான்வழி திசை வேகம்.
aerobacter : ஏரோபேக்டர் : எண் டிரோபேக்டீரியாவின் குடும்பம்.
aerobe : ஆக்சிஜன் உயிரி ; உயிர்வளி உயிரிகள்; காற்றுயிரி : உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிற ஒர் நுண்ணுயிரி.
aerobic : காற்றுயிரிய.
aerobio#ogy : ஆக்சிஜன் உயிரியல்; உயிரிவளி உயிரியல் : காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள், நுண்ணணுச் சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை.
aerobiosis : ஆக்சிஜன் வழி உயிர்வாழ்வு : ஆக்சிஜனைக் சுவாசித்து உயிர் வாழ்க்கை நடத்துதுல்.
aerocolpos : காற்றுப் புணர்புழை.
aerodermectasia : தோலடிக் காற்றேற்றம்.
aerodontalgia : உயிர்சூழல் பல்வலி; குறை அழுத்துச் சூழல் பல்வலி : சுற்றுச்சூழல் காற்றழுத்த மாறுபாடுகளால் பற்களில் வலி ஏற்படுதல்.
aerodromophobia : வான்வழிப் பயண அச்சம்.
aerodynamics : காற்றியக்கவியல்.
aeroembolism : இரத்தநாளக் காற்றடைப்பு : காற்று அல்லது வாயுப்பொருள் இரத்த நாளத்தை அடைத்துக் கொள்ளல்.
aeroemphysema : காற்றேற்ற நோய்.
aerogastria : காற்று இரைப்பை.
aerogenous : காற்று உற்பத்தி செய்கிற.
aeromedicine : வான்நோய் மருத்துவம்.
aerometer : காற்றுப் பண்பளவி.
aerodontalgia : உயர் சூழல் பல்வலி.
aerophagy : காற்றுண்ணி.
aerootitis : காற்றேற்றக் காது அழற்சி : காற்றழுத்த மாறுபாடு களால் உண்டாகின்ற காது அழற்சி.
aeropathy : காற்றழுத்த நோய் : சுற்றுப்புறச் சூழலில் காற்று அழுத்த வேறுபாடு ஏற்படும் போது அதன் விளைவாக மனிதனுக்கு உண்டாகின்ற நோய்.
aerophagia, aerophagy : காற்று மிகை ஈர்ப்பு : காற்றினை அளவுக்கு மிகுதியாக உள்ளே ஈர்த்துக் கொள்ளுதல்.
aerophobia : கடுங்காற்றச்சம்.
aeroplankton : கற்று நுண் உயிர்கள்.
aeroplethysmograph : கற்றுக் கொள்ளளவு ஆய்வுக்கருவி : மனிதனின் உடல் கொள்ளளவு மாற்றுங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவனுடைய சுவாசப்பைக் கொள்ளளவை நிர்ணயிக்கும் ஒருபரிசோதனை முறை.
aerosol : தூசிப்படலம், புழுதிப் படலம் : வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்குவதற்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தோலில் தெளிப்பதற்கும் சில வகை தூசித் தெளிப்பான்கள் பயன்படுகின்றன.
aerosporin : ஏரோஸ்போரின் : 'பாலிமிக்சின்-B' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aesculapius : எஸ்கலபியஸ் : ரோமானியரின் மருத்துவக் கடவுள்.
aesthetics : அழகியற் கோட்பாடு.
aetiology : நோய் முதல் ஆய்வியல்; நோய்க் காரண ஆய்வியல்; நோய்க்காரணவியல் : நோய்க் காரணம் பற்றி ஆராயும் அறிவியல் துறை.
afe brile : காய்ச்சலின்மை; காய்ச்சலற்ற.
affect : செயல் தூண்டுணர்ச்சி; தாக்கம் : உடல் உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.
affection : உணர்வுநிலை : உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்போக்கு, மனநிலை அல்லது உணர்ச்சி.
affective : உணர்ச்சி சார்ந்த : உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போது உண்டாகும் மனப்போக்குகள் அல்லது உணர்ச்சிகள் தொடர்பான 'உணர்ச்சிப் பைத்தியம்' என்று ஒரு முக்கிய மனநிலைக் கோளாறாகும். பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான உணர்ச்சி அல்லது மனநிலைச் சீர் குலைவுக்கு ஆளாகிறார்கள்.
afferent : அகமுக நோக்கிய; நடு ஈர்ப்புவழி : நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
afferentfibre : ஈர்ப்பு இழைமம்.
afferent nerve : உணர்ச்சி நரம்பு : மூளைக்கும் தண்டு வடத்திற்கும் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற நரம்பு.
afferent neuron : ஈர்ப்பு நரம்பு இழைமம்.
afferent vesses: இதய நோக்குக் குழாய்.
affiliation : மூலம் காண்டல் : முறையற்ற வகையில் பிறந்த குழந்தையைத் தந்தை இன்னாரென்று கண்டுபிடித்து அவரிடம் சேர்த்தல்.
affinity : இணைப்பீர்ப்பு; நாட்டம் : இரண்டு பொருள்கள் வேதியியல் முறையில் இணைதல். (எ-டு) ஆக்சிஜன், சிவப்பணு (ஹமோகுளோபின்).
afflux: விரைவூட்டம்.
affusion : நீர்ப்பீச்சல்.
afibrinogenaemia : குருதி உறையாமை : குருதிக்கட்டு (இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய். இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது.
afibrnogenemia : இரத்த உறைவு ஆக்கிக் குறைவு : இரத்தத்தில் இரத்த உறைவு ஆக்கி மூலக் கூறுகள் குறைந்த நிலைமை அல்லது இல்லாத நிலைமை. இதன் விளைவாக இரத்தம் உறைதலில் பாதிப்பு ஏற்படும்.
aflatoxin : புற்றுத் தூண்டு பொருள் பூசண நச்சு : வெது வெதுப்பும் ஈரமும் வாய்ந்த தட்ப வெப்ப நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கடலை, கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய ஒரு வகைப் பூஞ்சைக் காளானிலுள்ள புற்றுநோய் வளரத் துண்டுதல் செய்யும் பொருளின் வளர்சிதைமாற்றப் பொருள்கள். இவற்றில் நான்கு முக்கிய பிரிவுகள் உண்டு B1, B2, G1, G2, மனிதரின் நுரையீரல் உயிரணுக்களில் இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் போதுமான செரிமானப் பொருள்கள் (என்சைம்) உள்ளன. இது நுரையீரல் புற்றுநோய் பீடிப் பதற்கு முன் அறிகுறியாகும்.
aflotoxicosis : பூசண நச்சேற்றம் : பூஞ்சன உணவுகளை உட் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சேற்ற நோய். முக்கியமாக பஞ்சம், வறுமை போன்றவை காரணமாக உணவு கிடைக்காதபோது, இத்தகைய காளான் உணவுகளை மனிதர்கள் உட்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். அப்போது இந்த நோய் உண்டாகும். இந்த நச்சேற்ற நோயின்போது நோயாளிக்குக் கல்லீரல் பாதிப்படையும்; கல்லீரல் வீங்கும்; அல்லது சுருங்கிவிடும். கல்லீரலில் கட்டி உண்டாகும். மஞ்சள் காமாலை ஏற்படும்.
africanhorse sickness : ஆஃப்ரிக்கக் குதிரை நோய்.
afterbirth : பேறுகால கொடி; நச்சுக் கொடி : குழந்தை பிறந்த பின்பு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கொடி மற்றும் சவ்வுகள்.
கருவில் வளரும் குழந்தை தாயிடமிருந்து உணவும் ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடம் இருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்படலமும் வெளிவரும். இவை இரண்டும் சேர்ந்து 'பேறுகால இளங் கொடி' எனப்படும்.
aftercare : பிற்காப்பு : மருத்துவத்துக்குப் பின் பேணுவது : நோயிலிருந்து குணமடைந்து உடல்தேறி நலம்பெறும் போதும், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் போதும் அளிக்கப்படும் பிற்பாதுகாப்பு அல்லது கவனிப்பு.
aftercataract : கண் புரையறுவைக்குப்பின் : கண்புரை அறுவை மருத்துவம் செய்த பின்னரும் புரை நீடிக்கும் நிலைமை.
after effect : பின்விளைவு : உயிர்த்தசை இயக்கத்தைத் தூண்டும் பொருளின் தொடக்க விளைவுக்குப் பின் ஏற்படும் ஒர் எதிரெதிர் விளைவு.
after image : பின் தோற்றம்; மீள் வடிவம் : ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன்இயல்பான முனைப்பு வண்ணங்களுடன் இருக்குமானால் அது 'நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கருப்பாகவும் கரும் பகுதிகள் ஒளிர்வுடனும் இருக்குமாயின் அது எதிர் பின்தோற்றம் எனப்படும்.
afterload : பின்பளு; பின்சுமை : இதயத் துடிப்பின் போது இடது இதயக் கீழறை சுருங்கி இரத்தத்தை உடலுக்குச் செலுத்த முற்படும்போது இதயத்தில் உள்ள எதிர்விசை, இதயச் சுருக்கத்தின் போது இதயக் கீழறைச் சுவர்களில் உண்டாகும் எதிர்விசை அல்லது பின்னழுத்தம்.
afterpains : பின்நோவு : மகப் பேற்றுக்குப் பின்பு, கருப்பைத் தசை இழைகள் சுருங்குவதன் காரணமாக உண்டாகும் நோவு.
aftertaste : சுவை நீட்டிப்புணர்வு : ஒரு பொருளை சுவைத்த பின்னர் நீண்டநேரம் அச்சுவை நாக்கில் உணரப்படுதல்.
afunction : செயலிழப்பு.
agalactia : தாய்ப்பால் சுரப்பின்மை; பால் சுரக்காமை : மகப் பேற்றுக்குப் பிறகு தாயிடம் தாய்ப்பால் சுரக்காமல் இருத்தல் அல்லது குறைவாகச் சுரத்தல்,
agalactosuria : பாலிலா சிறுநீர்.
agalactous : பால் சுரப்பு நிறுத்தல்; பாலூட்டாமை.
agamic : கருவுறா இனப் பெருக்கம் : பால் கலப்பு இல்லாமல் அமைந்த ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
agammagalobuliaemia : தொர்று நோய்த் தடைக் காப்பின்மை : இரத்தத்தில் “காமாகுளோபுலின்' இல்லாதிருத்தல். இதனால் நோய்த் தொற்றினைத் தடுக்கும் திறன் இல்லாமல் போகிறது.
agamous : பாலுறுப்பு இல்லா.
agamglionic : நரம்பு முடிச்சில்லா. aganglionosis : நரம்புக் கணு இன்மை : மங்கிய சாம்பல் நிறமாகப் பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையங்கள் இல்லாதிருத்தல்.
agar : கடற்கோரைக் கூழ்; அகர்; (அகர்-அகர் : கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
agastria : இரைப்பை இல்லாத.
agastric : உணவுப்பாதையின்மை; இரைப்பையின்மை : பிறக்கும் போது அல்லது அதற்குப் பின்னர் இரைப்பை இல்லா திருத்தல்; உணவுப்பாதை இல்லாதிருத்தல்.
agate : அகேட் பளிங்கு.
agave : கருங்கற்றாழை.
age : முதுமை; அகவை; வயது : வாழ்நாள்; ஆயுள்; வயது; பருவம் முதிர்ச்சி. இது உள்ள முதிர்ச்சி, உடல் முதிர்ச்சி என இருவகைப்படும்.
ageism : முதிர்ச்சி வகைப்பாடு : கால வரிசைப்படியான வயதுக் கிணங்க மக்களை வகைப் படுத்துதல். ஆக்க முறையான அம்சங்களை விட்டுவிட்டு, எதிர்மறை அம்சங்களுக்கு அளவுக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்தல்.
agenesia : உறுப்பின்மை; உறுப்பு வடிவம் பெறாமை : உறுப்பு வளர்ச்சியடைவதில் பாதிப்பு ஏற்பட்டு, அது முழுமையான, முறையான வளர்ச்சியைப் பெறாதிருத்தல் அல்லது உறுப்பே இல்லாதிருத்ததல்.
agenesis : குறை வளர்ச்சி; உறுப்பு வடிவு பெறாமை : முழுமை பெறாத குறையுற்ற வளர்ச்சி.
agenitalism : இனப்பெருக்க உறுப்பு இல்லாமை : பிறவி யிலேயே இனப்பெருக்க உறுப்பு இல்லாதிருத்தல்.
agenosomia : அடிவயிறு இன்மை; பிறவி அடிவயிறு இன்மை : அடிவயிறும் அதைச் சார்ந்த இனப்பெருக்க உறுப்புகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடன் வளர்ச்சி அடைதல்.
agent : இயக்கி; செயல்முதலி; முகவர்; பிரதிநிதி; முகவு : ஒரு குறப்பிட்ட செயலை இயக்குபவர்; இயக்கும் பொருள்.
நோய்க்காரணி : ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் காரண கர்த்தாவாக விளங்கும் ஒரு ஜடப்பொருள் அல்லது உயிர்ப் பொருள்.
agerasia : முதிரா முதுமை; மூப்பில் இளமை.
ageusia : சுவை மாற்ற உணர் விலா. agger : திசுமேடு.
agglomeration : பெருநகரம்.
agglutinant : திரட்சி ஊக்கி : காயத்தின் விரிந்த இரு பகுதிகளை ஒன்றிணைக்கும் பொருள். இணைப்புப்பொருள். உடற்காப்பு ஊக்கியின் துண்டுதலால் உடலில் உருவாகும் எதிர் ஆக்கம்.
agglutinin : திரட்டி; ஒட்டுத்திரணி : இரத்தத்தில் காணப்படும் எதிர் ஆக்கம். இது உடற்காப்பு ஊக்கியுடன் இணைந்து இரத்த அணுக்களைத் திரளச் செய்கிறது. கரிமப் பொருள்களைத் திரட்சியடையச் செய்யும் திறனுள்ள ஒரு பொருள் எதிர் ஆர்ஹெச் (Rh) திரட்டி.
agglutination : குருதியணு ஒட்டுத்திரள்; ஒட்டுத் திரட்சி : முன்னர் நோயுற்ற ஆளின் அல்லது விலங்கின் நிணநீரில் (சீரம்) உருவான 'அணு ஒட்டுப் பொருள்கள்' (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள் களினால் பாக்டீரியா, சிவப்பணுக்கள் அல்லது உயிர்த் தற்காப்புப் பொருள் துகள்கள் ஒன்றாகத் திரண்டு கெட்டியாதல், ஆய்வுக் கூடங்களில் பல பரிசோதனைகளுக்கு இது அடிப்படையாக அமைந்துள்ளது.
agglutinogen : அணு ஒட்டுப் பொருள்; ஒட்டுத் திரட்டி : அணு ஒட்டுப் பொருள்கள் (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிற ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள் (ஆன்டிஜன்). இது தொற்று நோய்களிலிருந்து முழுத்தடைக்காப்பு அளிக்கப் பயன்படுத்தப் படுகிறது. (எ-டு) ஊசி மருந்தில் உள்ள இறந்து போன பாக்டீரியா, நச்சுக் கொல்லிகளிலுள்ள தனிவகைப் புரதம்.
agglutinophilic : திரட்டுப் பண்புள்ள : திரட்சி அடையத் தயாராகக் காத்திருக்கின்ற ஒரு பொருள்.
agglutinoscope : திரட்சி நோக்கி.
aggregate : ஒட்டு மொத்தம்.
aggregation : திரண்ட; மொத்த.
aggregen : கொத்து மொத்தம்.
aggregometer : இரத்த நீர்ம அடர்வு அளவி.
aggressin : பாக்டீரியா முனைப்பு வினை : சிலவகைப் பாக்டீரியாக்கள், தங்களின் ஒட்டுண்ணி ஆதார விலங்குகளுக்கு எதிரான தங்களது வலுத்தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்காக உற்பத்தி செய்யும் ஒருவகை வளர்சிதை மாற்றப் பொருள்.
aggression : வலுச்சண்டை உணர்வு தன்முனைப்பு நடத்தை : வலியச் சண்டைக்குச் செல்ல முனையத் தூண்டும் கோப முனையத் துண்டும் உணர்வு அல்லது பகையுணர்வு.
aggressive : ஆக்கிரமிக்கும்.
aging : மூப்படைதல்; முதிர்வான; மூப்பேற்றம்; முதுமையுறல் : முதுமையை நோக்கிய வளர்ச்சி முறை. காலத்திற்கேற்ப உடல் அமைப்பில் சிறுகச் சிறுக, தொடர்ச்சியாக மாறுதல்கள் அடையும் நிலை.
agirs : முதிர்சி.
agitated : மனக்குழப்பம்.
agitation : செயல் குழப்ப நிலை; உளக் குழப்ப நிலை : பயம், பதற்றம் நிறைந்த மனஅமைதி யின்மை, குழப்பநிலை.
agitated depression : கிளர்வூட்டும் மனச்சேர்வு : கடும் மனச் சோர்வும் அச்சவுணர்வும் நிறைந்த இடையறாத மனவுலைவு நிலை. எளிதில் உணர்ச்சி வயப்படும் பைத்திய நிலையில் இது உண்டாகிறது.
agitographia : எழுது நோய்.
agitophasia : பேச்சு நோய்.
aglomerular : சிறுநீர் வடிப்பு முடிச்சற்ற.
aglossia: நாக்கு இன்மை.
aglossotomia ; பிறவியில் வாய்நாக்கு இன்மை.
aglutination : குருதியணு ஒட்டுத்திரள்; ஒட்டுத்திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரிகள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல்.
aglutition : விழுங்க முடியாமை.
aglycone : குருதிச் சர்க்கரை இன்மை : இரத்தத்தில் சர்க்கரை இல்லாமை.
aglycosuric : சர்க்கரை இல்லாமை.
agmatology : எலும்பு முறிவியல்.
agnathia : தாடை வளர்ச்சிக் குறைபாடு; கீழ்த் தாடையின்மை : தாடை வளர்ச்சியின்றியோ முழுமையாக வளர்ச்சியடையாமலோ இருத்தல்.
agnea : பொருளறிய முடியாமை.
agnogenic : பிறப்பிடம் தெரியாத; நோய் முதல் அறியாத; நோய் மூலம் அறியாத.
agnosia : புலனுணர்வு இன்மை; அறிந்துணராமை; நுண்ணுணர்விழப்பு : புலனுணர்வுகளை உணர இயலாதிருத்தல்.
agogue : அகோகு : தொடர்புச் சொல்.
agomphious : பல் இல்லாமை.
agonadal : பாலுறுப்பு சுரப்பி இல்லாமை. agonadism : பாலுறுப்புச் சுரப்பின்மை : உடலில் பால் உறுப்புச் கரப்பிகள் இல்லாத நிலை.
agonist : தசை சுருக்கம் : ஒரு தசை இயங்குவதற்காகச் சுருங்குதல்,
agony : தாங்கொண்ணாவலி; சாத்துன்பம் : மன அளவிலோ, உடல் அளவிலோ தாங்க இயலாத அளவிற்கு வலி ஏற்படுதல். மரணப் போராட்டம்,
agoraphilia : பரந்தவெளி பெரு நாட்டம்.
agoraphobia : திடல் மருட்சி; வெட்டவெளி அச்சம் : பெரிய, திறந்த வெளிகளில் இருக்கும் போது தன்னந்தனியாகிவிட்டோம் என ஏற்படும் பீதியுணர்வு அல்லது அச்சம்.
agramatism : இலக்கணப் பேச்சிலா.
agranulocyte : குருதி நுண்மம் : சிறுமணிகளாக இராத குருதியின் நிறமற்ற நுண்மம்.
agranlocytosis : குருதி நுண்மக் குறைபாடு : குருதி நுண்மங்கள் வெகுவாகக் குறைந்திருத்தல் அல்லது முழுவதுமாக இல்லா திருத்தல்.
agralumlocytosis : மிகைத்த வெள்ளணு.
agraphic : எழுத முடியாமை.
agraphia : எழுத்தாளர் விசிப்பு : மூளை நோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
agrophia : வரை திறனின்மை.
agrius : கடும் தோற் கொப்புளம்.
agromania : வயலில் தனிமை நடை.
agrophobia : இட மருட்சி.
agrosia : அறிந்துணராமை.
agrostology : புல்லியல்.
agrypnia ; உறக்கமில்லாமை.
agrypnotic : விழிப்புணர்வூட்டி.
ague : முறைக்காய்ச்சல்; குளிர் காய்ச்சல் : குளிர் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல்.
aguesia : சுவை உணர்விலா.
agyria : வரிமேடற்ற மூளை; மூளை சுருக்கமின்மை; மூளை வரிமேடின்மை : பெருமூளைப் புறணியில் மேலோட்டவலிகள் இயல்பான அளவில் வளர்ச்சி அடையாமல் இருத்தல்.
aichomophobia : கூர்பொருள் அச்சம்.
aid : உதவி.
aid-first : முதலுதவி.
aid-hearing : கேட்பொலிக் கருவி; கேட்புக் கருவி; கேட்புதவி.
aids : எய்ட்ஸ்(AlDS): எமக்குறைவு நோய் : ஈட்டிய நோய்த் தடைக் காப்புக் குறைபாட்டு நோய். (Acquired Immune Deficiency Syndrome).
aidoiomania : இயல்பிலா பாலுணர்வு.
aids related complex : எய்ட்ஸ் சார்ந்த கோளாறுகள் : வெளிப் படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும் அல்லது இது காய்ச்சலின் தன்மையுடையதாக இருக்கும்.
ailment : நோயுறல்; நோவு; உடல் நலிவு; நோய், பிணி
ainhum : கால்விரல் சூம்புதல்; விரல் நோய்.
air : காற்று : பூமியைச் சூழ்ந்திருக்கும் வாயுமண்டலமாக உருவாகியுள்ள வாயுக்கலவை. இதில்78% நைட்ரஜன், 20%ஆக்சிஜன், 0.4% கார்பன் டையாக்சைடு, 1% ஆர்கான், ஒசோன், நியோன், ஹீலியம், முதலி யவற்றின் சிறுசிறு அளவுகள், பல்வேறு அளவிலான நீராவி ஆகியவை அடங்கியுள்ளன.
air-borne : ஏர்-பான் : 'அசிட்டில் சிஸ்டைன்' என்பதன் வணிகப் பெயர்.
air-borne disease : காற்றால் பரவும் நோய்.
air cell : காற்றறை.
air-conditioning : குளிர் பதனம்; குளிரூட்டி.
air-hunger : காற்றுத் தேவை; காற்றுப் பசி; மூச்சேங்கல், காற்று வேட்கை.
air-sinus : காற்றுப்புரை.
air tight : காற்றுப் புகாத.
air way : காற்றுக்குழாய்; காற்று வழி : நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி.
akaryocyte : உயிரணுக்கரு அற்ற ஓர் அணு : (எடு) இரத்தச் சிவப்பணு
akatama : நாட்பட்ட புற நரம்பு அழற்சி.
akatamathesia : புரிந்துணர் குறை.
akathisia : கட்டளை நரம்புத் துடிப்பு; உட்கார இயலாமை : தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான கட்டளை நரம்பு (இயக்கு தசை) எப்போதும் படபடவெனத் துடித்துக் கொண்டிருக்கும் நிலை. நரம்புக் கோளாறுகளுக்கான மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இது உண்டாகக்கூடும்.
akinesia : இயக்கக் குறை. akinesthesia : இயக்க உணர்விலா.
akinetic : இயக்கமின்மை; அசைவற்ற : உடல் இயக்கம் இல்லா திருக்கும் நிலை.
aknephaschopia : குறையொளி பார்வையற்ற.
akinetic epilipsy : அசைவற்ற வலிப்பு : வலிப்பில் ஒருவகை இவ்வகை வலிப்பு நோயாளியானவர் சிறிதளவு தசை இயக்கம் குறைந்தவுடனேயே மயக்கமடைந்து (சுயநினை விழந்து) தரையில் விழுந்து விடுவார். கைகால்கள் வெட்டி வெட்டி இழுப்பதில்லை.
akinetic deaf mutism : இயக்கக் குறை கேட்பு பேச்சுப் புலனின்மை; இயக்குக்குறை செவிட்டு ஊமை : மூளை பாதிப்பிலிருந்து சிறிதளவு உடல் நலமடைந்த நபர். இவரால் அருகில் நடப்பதை உணரமுடியும். ஆனால் பேச முடியாது. நடக்க முடியாது, காது கேட்காது.
akinesthesia : இயக்க உணர்வின்மை : உடல் இயக்கத்தை உணர இயலாத நிலைமை.
akineton : அக்கினட்டோன் : 'பைபெரிடன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ala : இறக்கையுரு.
alacrima : கண்ணிர் சுரப்பின்மை : கண்ணிர் குறைவாகச் சுரத்தல் அல்லது கண்ணிர் முழுவது மாகச் சுரக்காதிருத்தல்.
alactasia : லேக்டோஸ் உறிஞ்சாமை : சிறுகுடலின் உறிஞ்சு பரப்பில் உள்ள பாதிப்பின் காரணமாக லேக்டோஸ் நொதியை உறிஞ்ச இயலாத நிலைமை.
alalia : வாய்பேச இயலாமை : குரல்களை வாதத்தின் காரண மாகப்பேச இயலாத நிலை.
alangiumsalvifolium : அழிஞ்சி.
alanine : அலனின் : புரதப் பொருளில் காணப்படும் ஒரு வகை அமினோ அமிலம்.
alanine amino transferase : அலனின் அமினோ இடமாற்றி.
alanine transaminase : அலனின் டிரான்ஸ்அமினேஸ் : மனித தசை, கல்லீரல், மூளை ஆகியவற்றில் காணப்படும் ஒருவகை அமினோ நொதி, எல் அலனின் எனும் அமினோ அமிலத்தை 2 கீட்டோ குளுட்ரேட்டாக மாற்றுவதற்கு இந்நொதி பயன்படுகிறது.
alastrim : சின்னம்மை : பெரிய அம்மை நோயை விடச் சற்று கடுமை குறைந்த அம்மை நோய்.
alba : வெண் ; வெண்மை ; வெள்; வெள்ளை.
albedo : வெண்மையாதல்.
albidus : வண்மை.
albicomtes : வெண்; வெண்மையான. albinism: பாண்டுநோய்; வெள்ளுடல் நோய்; பெரு வெண்மை : பிறவியிலேயே இயல்பான நிறமிகள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும். விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு.
albino : வெளிரி.
albino (albiness) : வெண்குட்டம்; பாண்டு நோய் : தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ்சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு.
Albright's syndrome : ஆல்பிரட் நோயியம் : அமெரிக்க உடலி யங்கியல் பேராசிரியர் ஆல்பிரட் என்பவர் கண்டுபிடித்த ஒரு நோய்த் தொகுப்பு இது. இந்த நோயியத்தில் மிகச் சிறு வயதில் பூப்படைதல், எலும்புகளின் இயல்பில் பிறழ்ந்த வளர்ச்சி, ஒழுங்கற்ற நிறமி ஏற்றம் ஆகிய நோய்க் குணங்கள் காணப்படும்.
Albuginea : வெண்நார்த்திசு; வெண்ணுறை; வெளிவெண் நார்த்திசு : ஒரு பகுதியை அல்லது ஒர் உறுப்பை மூடியிருக்கும் வெள்ளை நார்த்திசு.
albumin : கருப்புரதம்; வெண்கரு; வெண்புரதம் : நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம்.
albuminoid : அல்புமினாய்ட் : (1) ஆல்புமின் ஒத்த, (2) புரதம்; விழியாடியில் காணப்படும் புரதம். (3) குருத்தெலும்புகளில் காணப்படும் புரதம்.
albuminometer : அல்புமினோ மானி.
albuminuretic : அல்புமின் சிறுநீர் சார்ந்த : ஆல்புமின் சிறுநீர் தொடர்புள்ள சிறுநீரில் ஆல்புமின் கலந்து வரும் நிலையில் உள்ள ஒரு நபர்.
albuminuria : வெண்ணீர் நோய்; வெண்புரத நீரிழிவு; வெண்சிறுநீர் : சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய், இந்நிலை தற்காலிகமாக இருந்து, முழுவதுமாக நீக்கிவிடலாம்.
albumose : அல்புமோஸ் : புரதத்தைப் போன்ற ஒரு பொருள். ஆனால், இது வெப்பத்தினால் கட்டியாவதில்லை.
albumosuria : அல்புமோசூரியா : சிறுநீரில் அல்புமோஸ் இருக்கும் நோய்.
alcaligenes : அல்கலிஜீன்ஸ் : ஏ குரோம்போபாக்டீரிரேசியே எனும் குடும்பத்தைச் சேர்ந்த கிராம் நெகடிவ் பாக்டீரியா இனப்பிரிவு. இவை காண் பதற்கு கோல் போன்று இருக்கும். கோழியின் சிறு குடலிலும், மண்ணிலும் இவை காணப்படும்.
alcaptanuria : ஆல்கெப்டான் சிறுநீர்.
alcohol : ஆல்ககால்; வெறியம்; சாராயச் சத்து; மது : சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக ஊசி மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது. இயல்பு நீக்கிய ஆல்ககால் (90% ஆல்ககால்), 'டிங்சர்' என்ற சாராயக் கரைசல் மருந்து தயாரிக்கப்பயன்படு கிறது. 95% ஆல்ககால் கொண்ட மெதிலேற்றிய சாராயம், புறப் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. நோவகற்றும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
alcoholemia : இரத்தச் சாராய மேற்றல்.
alcohol fast : நிறம் நீக்கி : பாக்டீரியாவியலில், நிறங்கெடும் போது, ஆல்ககாலினால் நிறம் நீக்குவதை எதிர்க்கும் ஒர் உயிரி.
alcoholic : மது அடிமை; மது வயப்பட்ட.
alcoholism : மது அடிமைதனம்; மது வயமை; ஆல்ககால் நச்சுத் தன்மை; சாராய மயக்கம் : ஆல்ககாலுக்கு (போதைப் பொருள்) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத் தன்மை. இது முற்றிவிடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர் குலைகிறது.
alcoholization : மது மருத்துவம்.
alcoholuria : ஆல்ககாலூரியா; சிறு நீரில் சாராயம் : சிறுநீரில் ஆல்ககால் இருத்தல். ஆல்ககால் அருந்தியபின் ஊர்தி ஒட்டுவதற்குத் தகுநிலை உள்ளதா என்பதற்கான ஒரு சோதனைக்கு இது அடிப்படையாகும்.
alcopar : அல்கோபார் : பெஃபினியம் ஹைட்ரோக் சனாஃதோயேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.
alcuronium : அல்குரோனியம் : ஒரு செயற்கைத் தசைத் தளர் உறுத்துப் பொருள். இது 'டுயூபோகுராரின்' என்ற மருந்தினைப் போன்ற பண்புகளை உடையது. ஆனால், சிறிதளவுகளில் உட்கொள்வதால் மட்டுமே இது பயனளிக்கும்.
aldactide : அல்டாக்டைடு : ஸ்பிரோனோலாக்டோன் ஹைட்ரோ ஃபுளுமிதியாசைடு ஆகியவை அடங்கிய மருந்தின் வணிகப் பெயர்.
aldactone A : அல்டாக்டோன் A : ஸ்பிரோனோலாக்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aldehyde : ஆல்டிஹைடு : (எ-டு) அசிட்டால்டிஹைடு, இது ஒரு வேதிப்பொருள் CH=O அமைப்பைக் கொண்டுள்ளது. இதனை சாராயமாகவோ, ஒர் அமிலமாகவோ மாற்றமுடியும்.
aldehyde reductase : ஆல்டிஹைடு ரெடக்டேஸ் : இது ஒரு செயல் குறைக்கும் நொதிப்பி. ஆல்டோஸ்களை குறைத்தால் வினைப் பண்பால் செயல் குறைக்கச் செய்யும்.
aldolase : தசைநொதி.
aldolase test : தசைநொதிச் சோதனை : ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) சோதனை. தசையைப் பாதிக்கும் நோயில், குருதி நிணநீர்ச் செரிமானப் பொருள் அல்டோலாஸ் அதிகமாக இருக்கும்.
aldomet : அல்டோமெட் : 'மெதில் டோப்பா' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aldose : ஆல்டோஸ் : ஆல்டிஹைடு பிரிவைக் கொண்டிருக்கும் ஒரு மோனோசாக்கரைடு.
aldosterone : அல்டோஸ்டெரோன் இயக்கு நீர் : குண்டிக் காய்ச் சுரப்பிப் புறப்பகுதியில் சுரக்கும் நீர். இது சிறுசீரக நுண்குழாய்கள் மீது செயற்படுவதன் மூலம் மின்பகுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப் படுத்துகிறது. இதனால் இது "கனிமச்சுரப்புப் பொருள்' என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம் வெளியேறுவதை அதிகரிக்கிறது. சோடியம் குளோரைடைச் சேமித்து வைக்கிறது.
aldosteronism : அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய் : அண்ணீரகச் சுரப்பிப்புறப்பகுதியில் ஏற்படும் கட்டிகளினால் உண்டாகும் நிலை. இதில், மின் பகுப்பு நீர்மப்பொருள் சம நிலையின்மை ஏற்பட்டு, முறை நரம்பிசிவு உண்டாகிறது.
aldosteronopenia : ஆல்டோஸ்ட்ரான் இயக்குநீர்.
aldosteronuria : ஆல்டோஸ்ட்ரான் சிறுநீர்.
alethia : மறக்க முடியாமை.
aletocyte : அலையும் அணு.
aleucocytosis : வெள்ளணுக் குறைவு; வெள்ளணு மரிப்பு : இரத்தத்தில் வெள்ளணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் காணப்படுதல்; வெள்ளணுக்களே இல்லாத நிலைமை.
aleudrin : அலூட்ரின் : ஐசோப் ரனலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aleukaemia : வெள்ளணுப் பெருக்கமின்மை : வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருத்தல். எலும்பு மஜ்ஜையில் இரத்தப் புற்று நோய்க்குரிய மாற்றங்கள் தெரியும். ஆனால், புற இரத்தத்தில் வெள்ளணுக்கள் குறைவாகக் காணப்படும்.
aleukia : வெள்ளணுவின்மை : இரத்தத்தில் வெள்ளணுக்கள் இல்லாத நிலைமை.
alexeteric : தொற்று எதிர்ப்பி.
alexia : சொற்குருடு; படித்துணரா; படித்துப் புரியும் உணர்வின்மை; எழுத்தறிவுத் திறனிலா : பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய். கல்வியின் தொடக்க நிலையில் ஏற்படும் மூளை நைவுப்புண் அல்லது புலனுணர்வுப் பற்றாக்குறை காரணமாக இது ஏற்படும்.
alexiaverbal : சத்தமிட்டுப் படிக்க முடியாமை.
alexin : குருதிப்புரதம் (அலக்சின்) : குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதம்.
alexipharmac : நச்சு மாற்று மருந்து; நச்சுமுறி : நஞ்சுக்கு மாற்றாக அளிக்கப்படும் மருந்து.
alexiapyretic : காய்ச்சல் தடுப்பி.
alexithymia : ஒருவருடைய மன நிலையையும் உணர்ச்சி வேகத் தையும் விவரிப்பதற்குச் சிரமப்படுகின்ற அல்லது விவரிக்க இயலாத நிலையிலுள்ள தன்மை.
aleydigism : லேடிச் சுரப்பின்மை : லேடித்திசு இடை அணுக்களின் சுரப்பு இல்லாமை.
alfentamil : ஆல்ஃபெந்தமிழ் : நோவுணர்ச்சி அகற்றும் மருந்து. இது 'மார்ஃபின்' என்ற அபினிச் சத்துப்பொருள் போன்றது.
alga : பாசி : பாசியினத்தைச் சேர்ந்த.
algae : பாசிகள்; பாசியினம் : பச்சையம் கொண்ட தண்ணிர்த் தாவரங்கள்; இவை தண்ணிரிலும் வாழும், கடல் நீரிலும் வாழும் பல வடிவங்களிலும் அளவுகளிலும் காணப்படும்.
algal : பாசி நோய்.
algaroba : உலர் பழப்படி.
algedonic : வலிதரும்.
algefacient : குளிரூட்டி.
algesia : மிகை வலியுணர்வு; அதி வலியுணர்வு : அளவுக்கு மீறிய வலியுணர்வு; அபரிமிதமான நரம்புணர்ச்சிக் கோளாறு.
algesimeter : வலியுணர்வுமானி : வலியை உணரும் திறனளவைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி.
algesimetry : வலியுணர்வு அளவி.
algesiogenic : வலியூக்கி.
algesthesia : வலியுணர்தல்.
algicide : பாசிக்கொல்லி : 1. பாசிகளுக்குக் கேடு விளைவிக்கின்ற ஒரு பொருள். 2. பாசிகளைக் கொல்கின்ற ஒரு பொருள்.
algid : குளிர் காய்ச்சல்; குளிருற்ற; சன்னியுற்ற.
algidty : சன்னி; குளிர் : கடுமையான காய்ச்சல், குறிப்பாக முறைக் காய்ச்சல் (மலேரியா) நிலை. இந்நிலையின் போது, குதவழி வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
alginates : அல்ஜினேட்டுகள் : கடற்பாசி வழிப்பொருள்கள். இவற்றை உறுப்பெல்லைக்குட் பட்டுப் பயன்படுத்தும்போது, இரத்தத்தை மூடிக்கொள் கின்றன. அல்ஜினேட்டுகள் கரைசலாகவும், செறிவுறுத்திய மென்வலை யாகவும் கிடைக்கின்றன.
alienist : மனப்பிணி மருத்துவர்; மனநோய் ஆய்வாளர்.
alignment : நேராக்கல்; பொருத்தீடு, அமைவாக்கம்.
aligogenesia : வலியூட்டல்.
aligology : வலிவியல்.
aligomenorrhorea : வலி தரு மாதவிடாய்.
aligophobia : வலியச்சம்.
algorithm : கணக்கு : ஒரு செயலைச் செய்வதற்குரிய படிப்படியான செயல்முறை கட்டளைகள்.
algosia : அதிவலியுணர்வு.
algosis : காளான் தொற்றுநோய்.
alible : ஊட்டச் சத்துணவு.
alices : பெரியம்மை முன் செந்தடிப்பு.
alidine : அலிடின் : 'அனிலரிடின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
alienation : மன முறிவு : உளவியல் முறையிலும், சமூவியல் முறையிலும் மக்களிடமிருந்து மனமுறிவு கொள்ளுதல்.
alienia : மண்ணிரல் இல்லா.
alienism : மனப் பிறழ்வு.
aliment : ஊட்ட உணவு.
alimentary : உணவூட்டம் சார்ந்த; இறை மண்டல; செறிமான உறுப்புகள்.
alimentary canal : உணவு செல் வழி.
alimentation : உணவூட்டம் அளித்தல்; உணவு ஏற்றல் : இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற உணவூட்டமளித்துப் பேணுதல். alimentology : உணவியல்.
alimentotherapy : உணவு மருத்துவம்.
aliphatic : கொழுப்பார்ந்த : கொழுப்பு சேர்ந்த அல்லது எண்ணெய் சேர்ந்த, சைக்ளிக் கார்பன் பொருள்கள் தொடர் புடைய.
கொழுப்பு அமிலங்கள் ; அசிட்டிக் அமிலம் புரோப்பியானிக் அமிலம் மற்றும் பூட்ரிக் அமிலம் போன்றவை.
alipogenic : கொழுப்பேற்ற மில்லா.
alipoidic : கொழுப்பிலா.
aliquot : சரிநேர்கூறான; சரி ஈவான : முழுமையான ஒரு பகுதி.
alisphenoid : ஆப்பெலும்பின் பெரும் பக்க தளத்தைத் தொடர்பு உடைய.
alkalaemia : மிகைக் காரக் குருதி; குருதிக் காரமிகை; இரத்தக் கார மிகைப்பு : இரத்தத்தில் காரக் கூறுகள் இயல்புக்கு மீறி இருத்தல். அல்லது அதிகப்படுதல்.
alkali : காரப்பொருள்; வன்காரம்; காரம் : சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக்கூடிய, அரிமானத் தன்மை உடைய உப்பு மூலப்பொருள். இது அமிலத்தின் முனைப் பிழந்து உப்புகளாக மாறுகிறது: கொழுப்புகளுடன் இணைந்து சவர்க்காரமாகிறது. காரக் கரைசல், சிவப்புலிட்மசை நீலமாக மாற்றுகிறது.
alkalify : காரமாக்கல்.
alkalimeter : காரமானி, காச அளவி.
alkalimetry : கார் அளவி.
alkaline : காரத்தன்மையுடைய; காரமான : 1. ஒரு காரப்பொருளின் இயல்புகளைக் கொண்டிருத்தல்; 2. ஹைட்ராக்சில் அயனிகளை மிகுதியாகக் கொண்டிருத்தல். இரத்தத்தில் காரஃபாஸ்பேட் இருக்குமானால், அது மஞ்சட் காமாலை, பல்வேறு எலும்பு நோய்கள் இருப்பதைக் குறிக்கும்.
alkalinephosphatase : காரபாஸ்பேட் போக்கி.
alkalinity : காரத்தன்மை.
alkalinuria : சிறுநீர்க்காரம்; சிறு நீரில் காரக்கூறுகள் : சிறு நீரில் காரத்தன்மை இருத்தல்.
alkalism : காரமாக்கி, காசப்படுத்தி.
alkalireserve : அமிலக்காரச் சேமிப்பி.
alkalitherapy : அமிலக்கார மருத்துவம்.
alkalitide : அமிலக்காரப் பொருக்கம். alkalizer : அமிலக்காரச் சமன் பாடாக்கி : அமிலக்காரச் சமன் பாடாக்கப் பயன்படும் ஒரு பொருள்.
alkaloid : காரகம் : ஒரு காரப்பொருளை ஒத்திருக்கிற பொருள். தாவரங்களில் காணப்படும் கரிம மூலப்பொருள்களின் ஒரு பெருந் தொகுதியைக் குறிக்கிறது. இவை முக்கியமான உடலியல் வினைகளைப் புரிகின்றன. மார்ஃபின், கொய்னா, காஃபின், ஸ்டிரைக்கிளின் ஆகியவை முக்கியமான ஆல்க்கலாய்டுகள்.
alkalosis : காரச்சார்பு நோய்; காரத் தேக்கம் காரமிகை : உடலில் காரப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அமிலங்கள் குறைவாக இருப்பதால் உண்டாகும் நோய். காரப்பொருளை மிகுதியாக உட் கொள்ளுதல், அளவுக்கு மேல் வாந்தியும் பேதியும் ஏற்படுதல், அடக்கிய உணர்ச்சி திடீரென வெளிப்படுதல் போன்ற பல காரணங்களால் இது உண்டாகிறது. 'நரம்பிசிவு நோய்' எனப்படும் நரம்பு-தசைக் கிளர்ச்சியும் இதனால் ஏற்படுகிறது.
alkalotherapy : காரக மருத்துவம்.
alkaluria : காரகச் சிறுநீர்.
alkepton : ஆல்கெப்டான்.
atkaptonuria : அல்காப்டானூரியா; அல்காப்டன் சிறுநீர் : சிறு நீரில் 'ஆல்காப்டோன்' எனப்படும் ஹோமேஜென்டிசிக் அமிலம் இருத்தல். இதனால், ஃபெனிலா லைனின், டைரோசின் ஆகிய இரண்டும் ஒரு பகுதி மட்டுமே ஆக்சிகரணமாகின்றன. இதனால் வேறு தீயவிளைவுகள் ஏற்படுவ தில்லை.
alkeran : அல்கெரான் : 'மெல்பாலன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
alkyl : அல்கைல் : இது ஒரு மோனோவேலண்ட் ஹைட்ரோ கார்பன்.
alkylating agents : ஆல்கைலேட்டிங் வினையூக்கிகள் : கரு மையத்திலுள்ள 'டி.என்.ஏ' (DNA)யுடன் அல்கேயில் தொகுதிகளைச் சேர்த்து டி.என்.ஏ.-ஐப் பாதிப்பதன் மூலம் உயிரணுப் பகுப்பு நடவடிக்கையைச் சீர்குலைக்கும் பொருள்கள். இவற்றில் சில, உக்கிரமான உயிரணு வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுகின்றன.
alkylation : காரமாக்கல் : ஹைட்ரஜன் அயனிகளுக்கு மாற்றாக கார அயனிகளைச் சேர்த்தல்.
allantochorion : பனிக்குடமும் கரு வெளியுறை : பனிக்குடமும் கருவெளியுரையும் இணைவதால் உண்டாகும் கருவெளிச் சவ்வு.
allantoid : பனிக்குடம் போன்ற.
allantoin : பனிக்குடநீரிலும் சிசுவின் சிறுநீரிலும் காணப்படும் ஒரு பொருள். allantois : பனிக்குடம் : கருவின் மஞ்சள் கருப்பையிலிருந்து உருவாகும் கருவெளியறை.
allegrid : ஒவ்வாமைத் தடிப்பு.
allegron : அல்லெக்ரோன் : 'நார்ட்ரிப்டிலின்' என்ற மருந்தின் வணிகப்பெயர்.
alleles : இரட்டை மரபணு.
allelomorphs : இணை இனக் கீற்று : மெண்டல் என்ற அறிவியல் அறிஞரின் கருத்துப்படி உயிர்களின் மரபுவழியில் மாற்றி மாற்றித் தொடரும் இரட்டைப் பண்புக்கூறுகளில் (இணை இனக்கீற்று) ஒன்று. எடுத்துக் காட்டாக, இயல்பான நிறப்பார்வை அல்லது நிறக்குருடு, சில பொருள் களைச் சுவைக்கும் திறன் அல்லது சுவைக்க இயலாமை ஆகியவை மாறிமாறித் தோன்றக் கூடும். ஒரே இனக்கீற்று இடச்சூழலில் ஒரு மரபணுவின் மாற்று வடிவங்கள் இருப்பதால் இது தோன்றுகிறது.
allergen : ஒவ்வாமை ஊக்கி : ஒரு நோய்த்தடைக்காப்புத் திறனுக்கு மாறுபட்ட நிலையை அல்லது அறிகுறியை உண்டாக்கக்கூடிய உயிர்த் தற்காப்புப் பொருள்.
allergenic : ஒவ்வாமை ஊக்கல்.
allergist : ஒவ்வாமை மருத்துவ வல்லுநர். ஒவ்வாமையால் விளையும் கேடுகளைக் களையும்மருத்துவ வல்லுநர்.
allergology : ஒவ்வாமையியல்.
allergosis : ஒவ்வாமை நோய்.
allergy : ஒவ்வாமை : உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எதிர்விளைவுகள், காஞ்சொறித் தடிப்புகள், மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் (ஆஸ்துமா) போன்றவை சில ஒவ்வாமை நோய்கள்.
alli's forceps : அல்லீஸ் இடுக்கி.
aligation : பண்பறி பகுப்பாய்வு.
allgator forceps : அல்லிகேட்டர் இடுக்கி.
alloantibody : மாற்றப்பண்புக் கூற்று எதிர் அங்கம் : ஒரு குறிப்பிட்ட மாற்றப் பண்புக்கூறுக்கு உருவாகும் எதிர் அங்கம்.
alioantigen : மாற்றப் பண்புக்கூறு உடற்காப்பு ஊக்கி : குறிப்பிட்ட மாற்றப் பண்புக் கூறுக்கு உருவாகும் உடற்காப்பு ஊக்கி,
allobarbital : அல்லோபார் பிட்டால் : பார்பிச்சூரிக் அமிலத் திலிருந்து தயாரிக்கப்படும் உறக்க ஊக்கி மற்றும் உறக்க மருந்தாகும்.
alłobiosis : அடிக்கடி மாற்றமுறும் நுண்ணியிரிகள். allochiria : இயல்பு மீறிய ஊறு உணர்வு : தொட்டறியக் கூடிய உணர்வு இயல்புக்கு மீறியதாக இருத்தல். இதனால் நோயாளியின் உடலில் அளவு கடந்த தொடு உணர்வுத்துண்டுதல் ஏற்படுகிறது.
allochezia : மலமிலா பேதி.
allochromasia : நிறமாற்றம் : தோல் அல்லது முடியின் நிறம் மாறுகின்ற நிலை.
allocinesia : விருப்புக்கு மாறான பக்கவாட்டு நடை.
allodynia : மாற்றுத் தூண்டல் : மாற்றுத் துண்டல்களால் உண் டாகும் வலி.
alloeosis : நோய்த் தன்மை மாறல்.
alloerotism : பிற பாலின ஈர்ப்பு : பிற பாலினத்தின் மீது ஏற்படும் பாலின ஈர்ப்பு.
allogeneic : மாற்றப்பண்புக்கூறு : ஒரே இனத்தில் காணப்படும் மாறுபட்ட மரபுக்கூறுகள்.
allograft : உறுப்பு மாற்று அறுவை மருத்துவம்; ஓரினத் திசு ஒட்டு : ஒருவரிடமிருந்து ஒரே வகை உறுப்பு மாற்று உயிர்த் தற்காப்புப் பொருள்களைக் கொண்டிராத இன்னொருவருக்கு ஒர் உறுப்பினை அல்லது திசுவினை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம்
alloimmune : மாற்றத்தடுப்பு ஆற்றல் : ஒரு குறிப்பிட்ட மாற்றப் பண்புக்கூறுகளை உடற்காப்பு ஊக்கிக்கு மட்டும் தடுப்பாற்றல் உருவாதல்.
allomorphism : அமைப்பு மாற்றம்; வடிவமாறுதல் : அணுக்களின் வடிவமைப்பில் மாறுதல் ஏற்படுதல்; வேதிப்பண்புப் பொருளில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் அதன் அமைப்பில் மட்டும் மாற்றம் அடையும் தன்மை.
allopath (allopathist) : 'எதிர் முறை' மருத்துவர்.
alopathic : 'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த : நோய்க் குறிகளுக்கு எதிர்பண்புகள் ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்தும் மருத்துவ முறையைச் சார்ந்த,
allopathy : 'எதிர்முறை' மருந்துவம் : நோய்க்கூறுகளுக்கு எதிர்க் கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.
alopecia : வழுக்கை; சொட்டை; மயிர்க்கொட்டு.
alloplasia : செயற்கைத் திசு வளர்ச்சி : குறிப்பிட்ட திசுக்கள் இயல்பாக வளராத இடத்தில் அத்திசுக்களை வளரச் செய்தல்.
allopest : செயற்கைப் பதியம் : உயிரற்ற அல்லது செயற்கைப் பொருளில் தயாரிக்கப்பட்ட ஒரு பதியப் பொருள். alloplasty : செயற்கைப் பதிப்பு : செயற்கைப் பதியப் பொருளால் உடலுறுப்பை சீரமைத்தல்.
allopsychic : புறச்சூழல் மன நோய்; புறச்சூழல் உளநோய் : புறச்சூழல் தூண்டுதலால் உண்டாகின்ற மனநோய்.
allopurinol : அல்லோபூரினால் : கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்திலிருந்து படிகப் படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள் இது. கீல்வாத (சந்து வாதம் அல்லது ஊளைச் சதை நோய்) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறது. கீல்வாதம் அடிக்கடி வருவதைக் கணிசமாகக் குறைப்பதுடன், அதன் கடுமையினையும் குறைக்கிறது. தோல் பகுதியில் வேணற்கட்டி உண்டாக்குகிறது.
allorhythmia : சீரற்ற நாடித் துடிப்பு; சீரற்ற இதயத்துடிப்பு : இதயம் இயல்பின்றி துடிப்பது. இதயத்துடிப்பில் குறை. சீரின்றி துடிக்கும் இதயம்.
all or none : எல்லாம் அல்லது எதுவுமின்மை : இதயத்தின் இயக்க விதிகளில் ஒன்று. பலமில்லாதத் தூண்டல்கூட இதயத்தை இயக்க உதவும். இது வீரியம் நிறைந்தத் தூண்டலால் ஏற்படும் இதய இயக்கத்தை ஒத்திருக்கும்.
aloes : கற்றாழை இலைச்சாறு : சோற்றுக் கற்றாழை என்னும் வெப்பமண்டலத் தாவரத்தில் இருந்து பறித்த இலைகளில் இருந்து எடுக்கப்படும் வற்றிய சாறு. கடும் கசப்புச் சுவை உடையது. ஆற்றல் வாய்ந்த பேதி மருந்து.
alopecia : தலை வழுக்கை; வழுக்கை; மயிர்க் கொட்டு; சொட்டை : தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனினும், அதிர்ச்சியும் கவலையும் வழுக்கை ஏற்படத் தூண்டும் பொதுவான காரணிகள் என்பன.
aloxiprin : அலோக்சிப்ரின் : அலுமினியம் ஆஸ்பிரின் மருந்தின் ஒரு கூட்டுப்பொருள். இது ஆஸ்பிரினை விடக் குறைந்தளவில் குடல் எரிச்சல் உண்டாக்குகிறது. சிறு குடலில் உடைந்து ஆஸ்பிரினை வெளி யேற்றுகிறது.
alophen : அலோஃபென் : ஃபினோல்ஃப்தலீன் என்ற மருந்தின் பெயர்.
alpha-chymotrypsin : ஆல்ஃபா கைமோட்ரிப்சின் : கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கணையச் செரிமானப் பொருள் (என்சைம்). இது, பொதியுறைத் தசை நார்களைக் கரைத்து, கண்ணின் பாவை வழியாகக் காயத்திலிருந்து பளிக்குவில்லையை (லென்ஸ்) வெளியே எடுப்பதற்கு இது உதவுகிறது. இதனை வாய் வழி உட்கொள்ளும்போது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
alphafeto-protein : ஆல்ஃபா ஃபெட்டோ-புரதம் : முதிர்கரு இயல்புதிரிந்து இருக்கும் நேர்வுகளில் தாயின் நிணநீரிலும், கருவை அடுத்து சுற்றியுள்ள சவ்வுப்படலத்தின் நீர்மத்திலும் இருக்கும் பொருள்.
alpha-toco-pherol : ஆல்ஃபா டோக்கோ-ஃபெரோல் : வைட்டமின் 'E' என்ற ஊட்டச்சத்தின் மருத்துவப் பெயர்.
alprenolol : ஆல்ஃபிரனோலால் : அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடதுமார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப் பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேக வீதத்தையும், நெஞ்சுப்பை இயக்கு நீர் சுரக்கும் அளவையும், தமனி அழுத்தத்தையும் குறைக்கிறது.
alrine : வயிறு சார்ந்த.
alternative medicine : மாற்று மருத்துவம் : அலகுமுனை மருத் துவம் (அக்குபங்ச்சர்), உயிரியல் பின்னூட்டு, வர்ம மருத்துவம், இனமுறை மருத்துவம் (ஓமியோபதி), தசைத் தளர்ப்பீடு யோகம் போன்ற மாற்று மருத்துவமுறைகள்.
alum : படிக்காரம் : பொட்டாசியம் அல்லது அம்மோனிய அலுமினிய சல்ஃபேட். இதன் இறுகச்செய்யும் தன்மை காரணமாக, வாய்கொப்பளிக்கும் திரவ மாகவும் (1%) நச்சுப்பொருளை வெளியேற்ற பீற்றுக் குழலின் தாரையாகவும் (0.5%) பயன்படுகிறது.
aluminium hydroxide : அலுமினியம் ஹைட்ராக்சைடு : வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து; புளிப்பு மாற்றுமருந்து; புளிப்புத் தன்மைக்கு எதிரீடானது. இரைப்பைப்புண்ணைக் குணப்படுத்து வதற்குப் பயன் படுத்தும்போது நீண்ட நாட்கள் வினை புரிகிறது. இது பெரும்பாலும் மென்மையான பாலேடு அல்லது கூழ்வடிவில் இருக்கும்.
aluminium paste : அலுமினியம் களிம்பு : அலுமியத்துள், துத்தநாக ஆக்சைடு, திவக் கன் மெழுகு (பாரஃபின்) ஆகியவை கலந்த ஒரு களிம்பு. இது தோல் காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'பால்ட்டிமார் களிம்பு' என்றும் கூறுவர்.
alupent : அலுப்பென்ட் : 'ஆர்சிப்ரனலின்' சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
alveolus : கண்ணறை. alveolar capillary block syndrome : நுரையீரல் கண்ணறைத் தந்துகி அடைப்பு நோய் : நோய்க் காரணம் கண்டறியப்படாத ஒர் அரிய நோய். இதில் நுரையீரல் கண்ணறை உயிரணுக்கள் பருத்துவிடுவதன் காரணமாக ஆக்சிஜன் பரவுதல் நடை பெறாமல் முச்சடைப்பு, தோல் நீலநிறமாதல், வலது இதயம் செயலிழத்தல் போன்ற கோளாறுகள் உண்டாகின்றன.
alveolitis : நுரையீரல் கண்ணறை வீக்கம் : நுரையீரல் கண்ணறை களில் வீக்கம் ஏற்படுதல். பூந்தாது (மகரந்தம்) போன்ற ஒர் அயற் பொருளைச் சுவாசிப்பதால் இது உண்டாகிறது. இதனை 'அயற்பொருள் ஒவ்வாமை துரையீரல் கண்ணறை வீக்கம்' என்பர்.
alveolus : மூச்சுச் சிற்றறை; கண்ணறை : 1. நுரையீரலுள்ள காற்றுக் கண்ணறைகள் 2. பல்லுக்கு ஆதரவாகவுள்ள பல் பொருந்து குழி.
alzheimer's disease : அல்ஜை மர் நோய் : மூளைத் தளர்ச்சியினால் அறிவு குழம்பி ஏற்படும் பைத்தியம்.
amalgam : உலோகப் பூச்சு; இரசக்கலவை (இரசக்கட்டு); மாழைப் பூச்சு : பாதரசமும் ஏதேனும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை. 'பல் இரசக் கலவை' என்பது, பல் குழியை நிரப்புவதற்குப் பயன்படும் ஓர் இரசக் கலவை. இதில் பாதரசம், வெள்ளி, வெள்ளியம் (டின்) கலந்துள்ளன.
amantadine : அமன்ட்டாடின் : நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து. இது நோய்க் கிருமியால் உண்டாகும் ஹாங்காங் சளிக் காய்ச்சல் (இன்ஃபுளுவென்சா), சுவாசக்கோளாறுகள் போன்றவற்றில் நோயின் காலநீட்சியைக் குறைக்கிறது.
பார்க்கின்சன் நோயில் நடுக்கத் தையும், விறைப்பையும் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
amastia : மார்பகமின்மை; முலையின்மை; முகையின்மை : பிறவி யிலேயே மார்பகங்கள் (முலை) இல்லாதிருத்தல்.
amaurosia : ஒளியின்மை; பார்வை அற்ற.
amaurosis : குருட்டுத் தன்மை; பார்வையின்மை; ஒளியின்மை : பார்வை நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகும் ஓரளவு அல்லது முழுமையான குருட்டுத் தன்மை.
amaurotic : குருட்டுத் தன்மை உடையர் : கண்ணின் புற உறுப்புச் சரியாக இருந்தும் அல்லது கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாதிருந்தும் முழுக் குருடாக இருப்பது. ambidexterity : ஒருப்போல் இருகைத் திறன் : இருகைகளையும் ஒரே விதமாகத் திறம்படப் பயன்படுத்தும் திறன்.
ambidextrous : ஒருப்போல் இரு கைப் பழக்கம்; இரு கைச் சமன் திறன்; இரு கை நிகரிய : இரு கைகளையும் ஒரே வகையாகத் திறம்படப் பயன்படுத்தக் கூடிய.
ambiguous : ஐயமுள்ள; ஐயுறவான.
ambilhar : அம்பில்கார் : 'நிரிடாசோல்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ambivalence : இருமனப்போக்கு; விருப்பும் வெறுப்பும் : ஒருவரிடம் ஒரே சமயத்தில் எதிர்மாறான இருமுக உணர்ச்சிப் போக்கு இருத்தல். (எ-டு) அன்பு, பகைமை.
amblyopia : பார்வை மந்தம்; மங்கு பார்வை : குருட்டுத் தன்மையின் அளவுக்குப் பார்வை மந்தமாக இருத்தல். இதனை 'புகை பிடிப்போர் குருடு" என்றும் கூறுவர்.
ambu bag : உயிர்மூச்சுப் பை : செயற்கை சுவாசம் அளிக்க உதவும் இரப்பரால் ஆன பை. ஒன்றிலிருந்து ஒன்றரைலிட்டர் கொள்ளளவு கொண்டது. தானே காற்றை நிரப்பிக் கொள்ளும் விதத்தில் தடுக்கிதழ் அமையப் பெற்றுள்ளது.
ambulance : நோயாளி ஊர்தி (ஆம்புலன்ஸ் : நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஊர்தி. இயங்கு மருந்தகம். இயங்கு மருந்தகமாக இருக்கிற ஊர்தி.
ambulant : இடப்பெயர்வு.
ambulatory : ஊர்தி மருத்துவம் : நோயளிகள் இருக்கும் இடங் களுக்கு நோயாளி ஊர்தியில் சென்று, நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து அவர்களின் முன்னேற்றம் குறித்து மருத்துவ மனையின் புறநோயாளர் துறைகளுக்குத் தெரிவித்தல்.
amelia : உறுப்புக் குறைபாடு; பிறவி ஊமை; அங்கமின்மை : பிறவியிலேயே உறுப்பு அல்லது உறுப்புகள் இல்லாதிருத்தல். அது 'முழு உறுப்புக் குறைபாடு' எனப்படும்.
amelification : பற்சிப்பி உருவாகும் முறை.
amelioration : நோய்க் கடுமை குறைப்பு; நோய்த் தணிவு; நோய்க் குறைவு : நோய்க் குறிகளின் கடுமையைக் குறைத்தல்.
amenorrhoea : மாதவிடாய் தோன்றாமை; மாதவிலக்கின்மை; தீட்டு நிறுத்தம்; போக்கு நிறுத்தம்; தீட்டு மாறுகை : மாதவிடாய் தோன்றாதிருத்தல்; மாதவிடாய் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றாதிருந்தால் அது 'தொடக்க நிலை மாதவிடாய் தோன்றாமை" எனப்படும். மாதவிடாய் ஒரு முறை தொடங்கிய பிறகு தோன்றாமல் இருந்தால், அது "இரண்டாம்நிலை மாதவிடாய் தோன்றாமை" எனப்படும்.
ament : வளர்ச்சி குன்றிய மனத்தையுடைய.
amentia : மனவளர்ச்சிக் குறை பாடு; உளக்குழப்பம்; மூளைத் திறனிழப்பு : பிறவியிலிருந்து மனவளர்ச்சி குன்றியிருத்தல், மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்திய நிலையிலிருந்து (Dementia) இது வேறுபட்டது.
amethocaine hydrochloride : அமெத்தோக்கைன் ஹைட்ரோ குளோரைடு : கோக்கைன் என்ற மருந்துப் பொருளில் சில பண்புகளையுடைய ஒரு செயற்கைப் பொருள். தண்டுவட உணர்ச்சி இழப்பு மருந்தாகப் பயன்படு கிறது. 60 மி.கி. அளவுடைய மாத்திரைகளாக இது பயன் படுத்தப்படுகிறது.
ametria : கருப்பை இன்மை : பிறவியிலேயே கருப்பை இல்லாதிருத்தல்.
ametropia : பார்வைக் குறைபாடு; குறைபார்வை : கண்ணின் ஒளிக்கோட்ட ஆற்றல் குறைபாட்டினால் உண்டாகும் பார்வைக் குறைபாடு.
amicar : அமிக்கார் : அமினோ காப்ராய்க் அமிலத்தின் வணிகப் பெயர்.
amidin : மாச்சத்துக் கரைசல் : கரைசல் நிலையிலுள்ள மாச்சத்து.
amikacin : அமிக்காசின் : பாக்டீரியச் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்) தரங்குறை வதைத் தடுக்கும் ஒரு நோய் எதிர்ப்புப்பொருள். இது 'கனாமைசின் பொருளிலிருந்து எடுக்கப்படும் செயற்கை வழிப் பொருள்.
amiken : அமிக்கென் : அமிக்காசின் என்னும் எதிர்ப்புப் பொருளின் வணிகப் பெயர்.
amimia : செயல் உணர்விழப்பு; செய்கை ஆற்றலிழப்பு.
amino acids : கரிம அமிலங்கள் (அமினோ அமிலங்கள்) : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதிலாக கரிம (அமினோ) அணுக்களைக் கொண்ட கரிம அமிலங்கள் (NH2) புரதத்தை நீரியல் பகுப்பு செய்வதன் விளைவாக இவை கிடைக்கின்றன. இவற்றிலிருந்து உடல் தனது சொந்தப் புரதங்களை மறுபடியும் தயாரித்துக் கொள்கிறது. இவை அனைத்தையும் உடல் உற்பத்தி செய்துகொள்ள முடியாது. எனவே இவை உணவில் இன்றியமையாது சேர்க்கப்படவேண்டும் ஆர்கினைன், ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோ னைன், ஃபினைலாலனின், திரியோனின், டிரிப்டோஃபான், வாலைன் ஆகியவை இன்றியமையா கரிம அமிலங்கள். எஞ்சியவை அவசியமற்ற கரிம அமிலங்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
aminoacidaemia : அமினோ அமில மிகைப்பு : இரத்தத்தில் அமினோ அமிலங்களின் அளவு மிகுதல்.
aminoaciduria : கரிம அமில நோய்; அமினோ அமிலச் சிறுநீர் : சிறுநீரில் கரிமஅமிலம் (அமினோ அமிலம்) இயல்பு அளவுக்கு மேல் இருப்பதால் உண்டாகும் நோய். இது வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்த தவறு இருப்பதைக் காட்டுகிறது.
aminobenzoate : பென்சோவேட் : பேரா அமினோ பென்சாயிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை உப்பு.
aminobutane : நோய் தணிக்கும் மருந்து வகை.
aminocaproic acid : அமினோ காப்ராய்க் அமிலம் : கட்டியாக உறையக்கூடிய நாரியல் கசிவு ஊனிர் (ஃபைப்ரின்) சீர்குலைவதைத் தடுப்பதன் மூலம் நேரடியாகக் குருதிப்போக்கினை நிறுத்தும் வினையைப் புரிகிறது. இது பிளாஸ்மினோஜன் வினை ஊக்கிகளின் செயலைத் தடை செய்கிறது.
aminocrine : அமினோக்ரைன் : அக்கிஃப்ளேவின் போன்ற, கறைப்படுத்தாத ஒரு நோய் நுண்ம (கிருமி) ஒழிப்புப் பொருள்.
aminoglutethimide : அமினோ குளுட்டித்திமிட் : இயக்குநீரை (ஹார்மோன்) சார்ந்த புற்று நோய்களில் அண்ணீரகச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீரை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.
aminoglycoside : அமினோ குளுக்கோசைடு : ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிர்க் கொல்லி குடும்பம். (எ.டு) ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், நெட்டில்மைசின், அமிக்கசின், நியோமைசின்.
aminophylline : அமினோ ஃபைலின் : எத்திலின் டயாமின் கலந்த தியோஃபைலின். இது தியோஃபைலினிலிருந்து எடுக்கப்படும் ஒருவழிப் பொருள்; கரையக் கூடியது. ஈளைநோய் (ஆஸ்த்துமா) குருதியின் அடர்த்தி மிகுதியினால் ஏற்படும் மாரடைப்பு. நெஞ்சுப்பை இழைம அழற்சி ஆகிய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது. aminoplex : அமினோ ப்ளக்ஸ் : நரம்புவழி உட்செலுத்துவதற்கு உகந்த ஒரு செயற்கைத் தயாரிப்பு மருந்துப்பொருள். சாதாரணமாகப் புரதமாக உட்செலுத்தப்படும் கரிம அமிலங்களை (அமினோ அமிலங்கள்) இது கொண்டு இருக்கிறது. இது காயங்களைக் கழுவிக் குணப்படுத்தப் பயன் படுகிறது.
aminopterin : அமினோப்டெரின் : ஃபோலிக் அமில எதிர்ப்பி.
aminoquinoline : அமினோ குயினோலின் : குயினோலின் மருந்துடன் அமினோ வகை மருந்தைக் கலந்து தயாரிக்கப்படும் மருந்து வகை. இது 4 அமினோ குயினோலின் எனவும் 8 அமினோ குயினோலின் எனவும் இரு வகைப்படும். மலேரியா காய்ச்சலுக்குரிய மருந்து இது.
amino-salicylic acid : அமினோ-சாலிசிலிக் அமிலம் : காச நோயை (எலும்புருக்கி நோய்-டி.பி.) குணப்படுத்துவதற்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து.
aminosol : அமினோசோல் : கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலாம்
amitosis : உயிரணுப் பகுப்பு; உயிரணுப்பிளவு; திசுப் பெருக்க மின்மை : ஒர் உயிரணு, நேரடிப் பிளப்பு மூலம் பகுதிகளாகப் பிரிவுறுதல்.
amitotic : பிளவுப்பெருக்கமிலா.
aminotransferase : அமினோ டிரான்ஸ்ஃபெரேஸ்.
aminodarone : அமினோடாரோன்.
aminotriptyline : அமினோட்ரிப்டிலின் : மூச்சழற்சியுடைய வலி தணிப்பு மருந்து, இது இமிப்ராமின் மருந்தினைப் போன்றது. இதில் ஒருவகை நோவாற்றும் விளைவு உண்டு. இது குழப்பத்துடன் கூடிய மனத்தளர்ச்சியின்போது மிகவும் பயன்படுகிறது.
ammonia : நவச்சார ஆவி (அம்மோனியா) : நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கூட்டுப்பொருள். மனிதர்களிடம் நவச்சார வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்து ஏற்படும் பல்வேறு பிழைபாடுகள் காரணமாக மன வளர்ச்சிக் குறைபாடு, நரம்புக் கோளாறுகள், வாத சன்னி போன்ற திடீர் நோய்ப்பீடிப்புகள் உண்டாகின்றன. நவச்சார ஆவிக் கரைசல் நிறமற்ற திரவம், கார நெடியுடையது; இது சிறுநீர்ச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது.
ammonium bicarbonate : அம்மோனியம் பைகார்பனேட் : இருமல் மருந்துகளில் கபத்தை வெளிக்கொணரும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிதாக வயிற்று மந்த நோயாளிகளுக்கு வயிற்று உப்புசம் அகற்றுகிற மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
ammonium chloride : அம்மோனியம் குளோரைடு : சிறுநீர்க் கோளாறுகளில் சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. அரிதாக கபம் வெளிக்கொணரும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ammonuria : அம்மோனியா மிகைச் சிறுநீர் : சிறுநீரில் அம்மோனியாக் கூறு மிகையாக இருத்தல்.
amnesia : மறதி நோய் (நினைவிழப்பு); மறதி : மனத் தளர்ச்சி யினால் ஏற்படும் மனநோய் நிலை. இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது "முன்னோக்கிய மறதி" எனப்படும்; கடந்தகால நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது "பின்னோக்கிய மறதி” எனப்படும்.
aminocentesis : கருச்சவ்வுத் துளைப்புச் சோதனை : அடி வயிற்றுச் சவ்வின் வழியாகக் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக் குழியினைத் துளைத்தல். குழந்தை பிறப்பதற்கு முன்னர் இனக்கீற்றுக் கோளாறுகள், வளர்சிதை மாற்றப் பிழை பாடுகள், முதிர்கருக் குருதி நோய்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்கும் சோதனைக்காகத் திரவ மாதிரியை எடுப்ப தற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
aminography : கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம் ; பனிக்குட வரைவி : கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பையினுள் ஒளி ஊடுருவாத ஊடுபொருளை ஊசி மூலம் செலுத்தியபின், அந்தச் சவ்வுப் பையினை ஊடு கதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் எடுத்தல். இதில் கொப்பூழ்க் கொடியும், நச்சுக் கொடியும் பதிவாகும்.
amnion : கருச்சவ்வுப் பை ; பனிக் குட உறை : குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பை. இதில் முதிர்கருவும், கருப்பைத் திரவமும் இருக்கும். இது கொப்பூழ்க்கொடியைப் போர்த்தியிருக்கும்; இது முதிர்கருவுடன் கொப்பூழ்க் குழியில் இணைக்கப்பட்டிருக்கும்.
amnionitis : கருச்சவ்வுப் பை வீக்கம் : பனிக்குட அழற்சி.
amnioscopy : கருநோக்குக் கருவி பனிக்குட நோக்கி : அடி வயிற்றுச் சுவரின் வழியாகச் செலுத்திக் கருவையும், கருப்பைத் திரவத்தையும் பார்ப்பதற்கு உதவும் ஒரு கருவி, கருப்பைத் திரவம் மஞ்சளாக அல்லது பச்சையாக இருந்தால், அதில் அபினிக் அமிலம் கலந்து இருப்பதைக் குறிக்கும். இது கருவின் நோய் கண்டிருப்பதைக் காட்டுவதாகும்.
amniotic cavity : கருச்சவ்வுக்குழி : குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்கும், தொடக்க நிலையில் உள்ள (முதிராத) கருமுளைக்கும் இடையிலுள்ள திரவம் நிரம்பிய குழிவு.
amniotic fluid : கருப்பைத் திரவம் ; பனிக்குட பாய்மம் : குழந்தை கருப்பையிலிருக்கும் காலம் முழுவதும், கருப்பைச் சவ்வும், முதிர்கரு உற்பத்தி செய்யும் ஒரு திரவம், இது முதிர்கருவுக்குப் போர்வை போல் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திரவம், தீவிரமாக வேதியியல் பரிமாற்றங்கள் நடைபெறும் ஒரு ஊடு பொருளாகும். இதனைக் கருச் சவ்வுக் குழியைச் சுற்றியுள்ள உயிரணுக்கள் சுரந்து, மீண்டும் ஈர்த்துக் கொள்கின்றன.
amniotomy : கருப்பை பிளவு உறுத்தல் : முதிர்கருச் சவ்வுகளைச் செயற்கை முறையில் பிளவுறுத்துதல். பிள்ளைப்பேற்று வலியை விரைவு படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
amnioebiform : வயிற்றுடலி வடிவமுள்ள.
amobarbital : அமோபார்பிட்டால் : இது ஒரு தூக்கமருந்து சில மணி நேரங்களுக்கு மட்டும் பயனளிப்பது.
amodiaquine : அமோடியாக்குயின் : மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஒரு வகை மருந்து. அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படும்.
amoeba : அமீபா ஓரணுவுயிர்); நெகிழி : ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இது தன்னைத் தானே பிளவுபடுத்தி கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. இதில் ஒரு வகையான "என்டாமீபா" என்ற நுண்ணுயிர் மனிதரிடம் வயிற்று அளைச்சல் (சீதபேதி) உண்டாக்குகிறது.
amoebicide : அமீபா கொல்லி : அமீபாவைக் கொல்லும் ஒரு மருந்து.
amoeboid : அமீபா போன்ற : ஓரணுவுயிராகிய அமீபாவை (வயிற்றுடலி) வடிவிலும் அசைவிலும் ஒத்திருக்கிற உயிர் எடுத்துக்காட்டு: இரத்த வெள்ளை அணுக்கள்.
amoeboma : அமீபோமா; அமீபா கட்டி; நெகிழிக்கட்டி : பெருங்குடல் வாயில் அல்லது பெருங் குடல். குதவாயில் ஏற்படும் கட்டி இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது.
amoebicide : அமீபா கொல்லி : அமீபாவைக் கொல்லும் ஒரு மருந்து.
amoeboid : அமீபா போன்ற : ஓரணுவுயிராகிய அமீபாவை (வயிற்றுடலி) வடிவிலும் அசைவிலும் ஒத்திருக்கிற உயிர். (எ-டு) இரத்த வெள்ளை அணுக்கள்.
amoeboma : அமீபோமா; அமீபா கட்டி; நெகிழிக் கட்டி : பெருங்குடல் வாயில் அல்லது பெருங்குடல் குதவாயில் ஏற்படும் கட்டி. இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது.
amoxil : அமோக்சில் : அமோக்சிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
amoxycillin: அமோக்சிலின் : இது ஒரு நோய் எதிர்ப்புப் பொருள். இது காற்றுக் குழாய்ச் சுரப்புகளில் ஆம்பிசிலினைவிட எளிதாக ஊடுருவி மூச்சடைப்பு நோய்களைக் குணப்படுத்துகிறது.
amphiarthrosis : இயங்கல்குறை.
amphibia : நீர்நில வாழ்வுயிர் : நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
amphimixis : படலணுக் கலப்பு : பெற்றோரின் பண்புக் கூறுகளின் கலப்பு. amphoteric : அமிலக் காரப்பண்பு.
amphotericin B : ஆம்போடெரிசின்-B.
ampiclox : ஆம்பிக்ளாக்ஸ் : ஆம்பிசிலின், கிளாக்சாசிலின் ஆகிய இரண்டும் கலந்த கலவையின் வணிகப் பெயர்.
amplification : ஒலி அலை பெருக்கல்; அலை பெருக்கல்.
amplitude : அலைவீச்சு; விரியளவு; வீச்சு.
ampoule : மருந்துச் சிமிழ் :தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
ampulla : குழாய்க் குடுவை; குடுவை : உடலிலுள்ள குழாய் அல்லது பையின் விரிந்த கடைப்பகுதி.
amputation : உறுப்பு நீக்கம்; அங்க வெட்டு; துண்டித்தல் :உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு.
amputation sign : வெட்டு நீக்கத் தடயம்.
amputee : உறுப்பு நீக்கப்பட்டவர்.
amusia : இசை உணர்வின்மை.
amylase : அமிலேஸ் : மாச்சத்துப் பொருள்களை சர்க்கரையாக மாற்றக்கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).
amyelinic : மயலின் அற்ற நரம்பு காப்புறை அற்ற.
amyl : அம்யல் : நைட்ரேட் வகையைச் சேர்ந்த இரத்தநாள இதயவலிக்குத் (நெஞ்சு வலி) தரப்படும் மருந்து. முகர்தல் மூலமாகச் செலுத்தப்படும் மருந்து.
amylnitrite : அமில்நைட்ரைட் : விரைந்து ஆவியாகக் கூடியதாகவும், துரிதமாகச் செயற்படத்தக்கதாகவும் உள்ள குருதி நாள விரிவகற்சி மருந்து. இதயப் பாதிப்பினால் ஏற்படும் தொண்டையடைப்பைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
amylobarbitone : அமிலோபார்பிட்டோன் : நடுத்தரமான செறிவினை நீட்சியுடைய 'பார்பிட்டுரேட்' என்னும் தூக்க மருந்து.
amyloid : அமிலாய்ட் : மாச்சத்து போன்ற பொருள். 'அமிலாய்டா சிஸ்' எனப்படும் அமிலாய்ட் திரட்சிக் கோளாறுகளில் இந்தச் சிக்கலான பொருள் அளவுக்கு மேல் திரள்கிறது.
amyloidosis : அமிலாய்ட் திரட்சி நோய் : ஏதேனும் உறுப்பில், குறிப்பாக துரையீரலிலும், சிறு நீரகத்திலும் 'அமிலாய்ட்' எனப்படும் மாச்சத்து போன்ற பொருள் படிதல்.
amylolysis : மாச்சத்துச் செரிமானம் : மாச்சத்துப் பொருள்கள் செரிமானமாதல். amylopsin : கணையநீர் : மாச்சத்தினைச் சர்க்கரையாக மாற்றும் கணைய நீர் இது. கார ஊடுபொருளில் கரையாத மாச்சத்தினை கரையும் சர்க்கரையாக மாற்றுகிறது.
amylorrhoea : அமிலோரியா : மலத்தில் அளவுக்கு அதிகமாக ஸ்டார்ச் இருக்கும் நிலை.
amylum : அமைலம் : மாச்சத்துப்பொருள்.
amyotonia : தசை முறுக்கிழப்பு.
amytal : அமிட்டால் : 'அமிலோபார்பிட்டோன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
anabolic : உயிர்ப் பொருள் கூட்டமைவுடைய : உயிர்ச்சத்து அடிப்படையில் உயிர்ப் பொருளில் கூட்டமைவு.
anabolic compound : உயிச்சத்துக் கூட்டுப் பொருள் : உடலிலுள்ள புரதத்தை கூட்டிணைவு செய்கிற வேதியியல் பொருள். நோய் நீங்கி உடல் தேறிவரும் காலத்தில் இது பயனுடையதாகும். பல்வேறு ஆண்பால் இயக்கு நீர்மங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
anabolism : உயிர்ப்பொருள் கட்டமைப்பு; வளர்வினை கட்டுமான மிகைவு; வளர்மை : உயிர்ச் சத்தினை அடிப்படையாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல்,
anacatharsis : வாந்தியெடுப்பு.
anacathatic : வாந்தி மருந்து; குமட்டுகிற : வாந்தி எடுக்கத் தூண்டுகிற,.
anacidity : அமிலத்தன்ம யின்மை; அமிலமின்மை : இயல்பு அளவுக்கு அமிலத்தன்மை இல்லாதிருத்தல். முக்கியமாக இரைப்பை நீரில் அமிலத் தன்மை இல்லாதிருத்தல்.
anadrenalism : அட்ரீனல் பணி முழுமையாக இல்லாமை.
anaemia : குருதிச் சோகை; சோகை; வெளிறு : இரத்ததில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின்போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க் குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப மருத்துவம் செய்யப்படுகிறது.
anaemic : சோகையான அயக் குறைச்சோகை.
anaemia, iron deficiency : இரும்புக் குறைச் சோகை.
anaemia, hypocromie : மிகைநிறைச்சோகை; செஞ்சோகை.
anaemia macrocytic : பேரணுச் சோகை.
anaemia, microcytic : சிற்றணுச் சோகை.
anaemia, normocytic : இயல்பணுக்சோகை; அணுவேறுபடாச் சோதனை. anaemia, nutritional : ஊட்டக்குறை சோகை.
anaemia, secondary : உதிரிச் சோகை; சார்புச்சோகை.
anaemic : சோகையான.
anaerobe : ஆக்சிஜன் இன்றி வாழும் உயிர்; அல்வளி உயிரி : நேரடியாக ஆக்சிஜன் இல்லாமல் வாழத்தக்க உயிர் வகை.
amaerobic: அல்வளி உயிரிய; காற்றேற்கா.
anaerobic respiration : அல் ஆக்சிஜன் மூச்சுவிடல் : ஆக்சிஜன் குறைவாக இருக்கும் போதே மூச்சு விடுதல். முதிர் கரு இவ்வாறு சுவாசிக்கிறது.
anaerobiosis : பிராணவாயு அறவே அற்ற இடத்தில் உள்ள வாழ்க்கை முறை.
anaerogenic : குறைந்த அளவில் வாயுவை உற்பத்தி செய்கின்ற; அறவே வாயுவை உற்பத்தி செய்யாத; வாயு உற்பத்தியைக் குறைக்கின்ற அல்லது தடுக்கின்ற.
anaesthesia : உணர்ச்சி மயக்கம்; உணர்ச்சியிழப்பு; உணர்ச்சி யின்மை : உணர்ச்சி மயக்கம்; உறுப்பெல்லை உணர்வு நீக்கத்தின்போது வேதனையுணர்வு மூளையை எட்டாத வகையில் நரம்பு இயக்கம் நேரடியாகத் தடுக்கப்படுகிறது. முதுகந்தண்டில் ஒர் உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தினை ஊசிமூலம் செலுத்தி உணர்விழக்கச் செய்யப்படுகிறது. மயக்கமடைவதற்கு குளோரோபார்ம் போன்ற மயக்க மருந்துகளும் உடல் உறுப்பை உணர்விழக்கச் செய்ய போக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன.
amaesthesia, general : முழு உணர்விழப்பு; பொது ஊட்டு மயக்கம்.
amaesthesia, regional : பகுதி உணர்விழப்பு.
anaesthesia, local : தாவிட உணர்விழப்பு; உற்றிட உணர்விழப்பு.
anaesthesiology : உணர்நீக்கியல்; ஊட்டு மயக்கவியல் : உணர்வு நீக்கு மருந்துகள், அவற்றைச் செலுத்துதல், அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவியல்.
anaesthesiologist : மயக்க மருத்துவர் : மயக்க மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநர்.
anaesthetic : உணர்வு நீக்கி மருந்து (மயக்க மருந்து); உணர்வகற்றி; உணர்விழப்பி : 1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற. 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர் விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்பர். (எ-டு) ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால் அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப் படும். பொது அல்லது அனைத்து உறுப்பு மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்து விடுவார்.
anaesthetist : மயக்கமருந்து கொடுப்பவர்; உணர்வகற்றி மருத்துவர்; உணர்வியல் மருத்துவர் : மயக்க மருந்து கொடுப்பதற்கு மருத்துவ முறைப்படி தகுதி பெற்றவர்.
anafranil : அனாஃப்ரானில் : 'குளோமிப்பிராமின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
anagen : முடிவளர் பருவம்.
anal : கழிவாய்.
analeptic : ஊக்க மருந்து; நலமுட்டி: நலமூட்டும் மருந்து; நலிவகற்றி நலமுட்டுகிற மருந்து, காபி, தேயிலைப் பானங்களிலுள்ள 'காபின்' மற்றும் சோர்வகற்றி மருந்துகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
analgesia : நோவின்மை; உணர்ச்சியின்மை; வலியின்மை; வலி உணர்வுக் குறைவு : புலனுணர்வினை மட்டும் இழத்தல்.
analgesic : நோவகற்று மருந்து; வலி நீக்கி; வலி குறைப்பான்; நோவகற்றி : உணர்ச்சியின்மை உண்டு பண்ணுகிற மருந்து.
analogous : ஒத்த : தோற்றத்தில் அல்லது செய்கையில் ஒன்று போலிருத்தல்.
analogue : ஒத்த.
analysis : பகுப்பாய்வு : வேதியியலில் ஒரு கூட்டுப்பொருளைத் தனித்தனிப் பொருள்களாக பகுத்து ஆய்வுசெய்தல். உளவியல் பகுப்பாய்வு.
anamnesis : முன் நினைவு : நோயாளியின் மறதியில் ஆழ்ந்து விட்ட பழைய செய்திகளின் மறுநினைவு.
anaphrodisiac : பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து; பாலுணர்வுக் குறைப்பி : பாலுணர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு உதவுகிற மருந்து.
anaphylaxis : அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி; அதிஒவ்வாமை : வெளியிலுள்ள புரதம் அல்லது வேறு பொருள் ஊசி மூலம் செலுத்தப்படும்பொழுது அதன் எதிர்ப்பொருள் உடலில் முன்னரே இருப்பதால் ஏற்படும் தாக்கம் அதிர்ச்சி.
anaplasia : தனிப் பண்பிழந்து பல்கும் வளர்ச்சி; பிரித்துணர் விழப்பு; பிறழ் வளர்ச்சி : ஒர் உயிரணு தனது தனிப்பண்புகளை இழத்தல். புற்றுநோயில் ஏற்படுவது போல் பரவல் நட வடிக்கையுடன் இது தொடர் புடையது.
anaplasty : உயிர்க் கூறு ஒட்டு முறை : அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலிடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை.
anarthria : பேச்சின்மை; பேச்சிழப்பு : ஒருவர் வாய்பேச முடியா திருக்கும் ஒரு நிலை.
anasarca : தோலடி நீர்க்கோவை; முழுமெய் வீக்கம்; உடல் வீக்கம்; நீர்க்கோவை : புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க் குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும்.
anastomosis : குருதி நாளப் பின்னல்; பிணைப்பு; நாளப் பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல், அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள், குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்று பட்டிருத்தல்.
anatomical : உடற்கூற்றியலான.
anatomical position : உடற் கூற்றியலான; உடல் உட்கூற்று அமைப்பு நிலை : உடலின் உள் உறுப்புகளின் முன்புறத்தோற்றத்தைப் பார்க்கும் வகையில் உடல் முன்னோக்கியவாறு நேராக நின்றும் தோற்றத்தில் அமைந்திருக்கும். இதில் கைகள் உடலில் பக்கவாட்டில் உள்ளங்கைகள் முன்னோக்கியவாறு அமைந்திருக்கும். முதுகுப்புறம் நேராக உள்ள நிலையில் பின் புறத்தோற்றம் அமைந்திருக்கும்.
anatomist : உடலியல் வல்லுநர் : உடலியல் துறையில் சிறப்புப் பயிற்சி அல்லது பட்டம் பெற்ற வல்லுநர்.
anatomy : உடல் உட்கூறியல்; உடற்கூறியல் : உள் உறுப்புகளான எலும்புகள் போன்ற உள் உறுப்புகளின் அமைப்பினை பிளந்து பார்த்து ஆராயும் துறை.
ancestral : தொல்மரபிய.
anchylose : மூட்டுவிறைப்பு : எலும்பு முட்டுகள் விறைத்துப் போதல்.
anchylosis : மூட்டு விறைப்பு நோய் : மூட்டுக்கள் விறைத்துப் போகும் நோய்; கணுக்கள் திமிர் கொள்ளுதல்.
anchylostomiasis : கொக்கிப் புழு நோய் : கொக்கிப் புழு போன்ற புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு நோய். ancoloxin : ஆங்கோலாக்சின் : புண் ஏற்பட்ட இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துகளில் (எதிர் விழுப்புப் பொருள்) ஒன்று.
anconitis : முழங்கை மூட்டழற்சி : முழங்கை முட்டில் ஏற்படும் அழற்சி, வீக்கம், வலி.
ancrod : குருதிக் கட்டுத் தடைப் பொருள் (ஆங்க்ரோடு) : மலேயாக் குழிவிரியன் பாம்பின் நஞ்சில் இருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள். இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக் கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உருவாவதற்கான முக்கிய காரணியைக் குறைத்து விடுகிறது. இது ஒர் அயல் புரதம் ஆகையால், இது உடலின் நோய் எதிர்ப்புப் பொருள் உண்டாகத் தூண்டுகிறது. இதனால் சில வாரங்களில் நோயாளியிடம் இதன் வினைக்குத் தடை உண்டாகிறது. எனவே இதனை குறுகிய விளைவுக்கே பயன்படுத்தப் படுகிறது.
anclyostoma : குடற்புழு : சிறு குடல் முகப்பில் மொய்த்திடும் புழுக்கள். இவை மலத்துடன் வெளியே வந்து, ஈரமண்ணில் முட்டையிட்டு, கொக்கிப்புழுக்கள் உருவாகின்றன. இக்கொக்கிப் புழுக்குள் சென்று நோய் உண்டாக்குகின்றன. காலணிகளை அணிவதன்மூலமும், கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இப்புழுக்கள் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.
anclyostomiasis : குடற்புழு நோய் : மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும்.
androblastoma : ஆண்மை யாக்க நோய் : பெண் கருப்பையில் ஏற்படும் ஒருவகைக் கட்டி இது ஆண்பால் அல்லது பெண்பால் இயக்குநீர்களை (ஹார்மோனை) உற்பத்தி செய்து, பெண்களிடம் ஆண்தன்மையினையும், சிறுமியரிடம் பருவத்திற்கு முந்தியே பூக்கிற தன்மையையும் உண்டாக்குகின்றன.
androcur : ஆண்ட்ரோக்குர் : 'சைப்ரோட்டெரான்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
androgen : ஆணிய ஊக்கி நீர்.
androgens : ஆண்பால் இயக்கு நீர்; ஆண்மையூக்கி : ஆண்பால் மரபுக் கூறுகளை வளர்த்துப் பேணக்கூடிய இயக்கு நீர்மப் பொருள் (ஹார்மோன்). இதனால், ஆண்களிடம் மயிர் வளர்வது, குரல் ஆண் குரலாக மாறுவதும் நடைபெறுகின்றன. பெண்களிடம் இது ஆண் தன்மையை வளர்க்கின்றன.
andursil : ஆண்டுர்சில் : அலுனியம் ஹைட்ராக்சைடும் மக்னிசியம் ஹைட்ராச்சைடும் கலந்த கலவையின் வணிகப் பெயர். இது புளிப்புமாற்று மருந்தாகவும் வயிற்றுப்பொருமல் அகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.
anemometer : வளிவேகமானி.
anencephaly : மெலி மூளை; மூளையின்மை : கருவிலேயே மனித இயல்பு இல்லாதிருத்தல். இது வாழ்க்கைக்கு ஒவ்வாத நிலை. கருவை அடுத்துச் சுற்றி உள்ள சவ்வில் சுரக்கும் திரவத்தில் ஆல்ஃபாஃபெட் டோபுரட்டீன் அதிக அளவில் இருப்பதைக் கொண்டு இது கண்டறியப்படுகிறது.
anergy : ஆற்றல்குறை; வலுக்குறை; வலுவிழப்பு : 'T' அணுக்களின் எண்ணிக்கை குறைவது.
anerythroplasia : சிவப்பணு உருக்குறைவு : இரத்தச் சிவப்பணு உருவாவதில் இடர்பாடு. இரத்தச் சிவப்பணு இல்லாமை.
anerythropoiesis : சிவப்பணுக் குறைவு : இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவில் குறைதல்.
anethaine : அனித்தைன் : 'அமித்தோக்கைன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aneurine : நரப்பூட்டச் சத்து (அனிரின்); சிறுநீரின்மை : சத்துக் குறைபாட்டால் நரம்புகள் சீர் கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம். தையாமின் அல்லது வைட்டமின் B ஊட்டச்சத்தின் பழைய பெயர்.
aneurysm : குருதிநாள அழற்சி : குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது.
angiectomy : இரத்த நாள வெட்டு : இரத்த நாளத்தை அகற்றல், இரத்த நாளத்தை நீக்கும் முறை.
angiectasis : குருதி நாள அழற்சி; குருதிக் குழாய் தளர்ச்சி : இரத்த நாளங்கள் இயல்புக்கு மீறி விரிவடைந்திருத்தல்.
angiectopia :இரத்த நாளப் பாதைப் பிறழ்ச்சி; குருதி நாளம் அமைப்புப் பிறழ்ச்சி குருதி; ஒரு இரத்த நாளம் இயல்பிலா இடத்தில் இருப்பது அல்லது இயல்பிலா பாதையில் அமைந்திருப்பது.
angina : தொண்டை அடைப்பு; இதயவலி; நெஞ்சுவலி : இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பயிற்சியினால் இந்த தாக்குதல் துாண்டப்படுகிறது.
angina of effort : இயக்க நெஞ்சு வலி; இயக்க நெரிப்பு.
anginapectoria : இடது மார்பு (வேதனை தரும்) இதயநோய்.
angina pectoris : இதயக் குத்தல்; இடது மார்பு வலி : இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனைதரும் கடும் இதயவலி.
angloblast : இரத்த நாளக்கோளம் : இரத்த நாளம் உருவாவதற்கு உறுதுணை செய்யும் ஒர் உடலணு.
angiocarditis : இதய இரத்த நாள அழற்சி : இதயமும் அதைச் சார்ந்த இரத்த நாளங்களும் அழற்சி ஏற்படுதல்.
angiogenesis : கருவில் இரத்த நாளம் உருவாவது.
angiocardiography : இதய இயக்கம் காட்டும் கருவி : ஒளி ஊடுருவாத ஓர் ஊடுபொருளை ஊசி மூலம் செலுத்திய பின்பு இதய அறைகளையும், பெருங்குருதி நாளங்களையும் கண் கூடாகக் காட்டும் கருவி.
angiogenic : (1) இரத்த நாளம் உருவாவது தொடர்பான. 2 இரத்த நாளம் உருவிடம்.
angiogram ; angiography : இதய அழுத்தப் பதிவு; குழல் வரைவியல் : இதய அழுத்தத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு பரிசோதனை முறை. இதயத்தில் நடத்தப்படும் இப்பரிசோதனை மூலம் எந்த விதமான இதயச் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிறிய குழாயை (Catheter) துடையின் முதன்மைத் தமனி அல்லது மூச்சுக் குழாய்த் தமனி வழியே செலுத்தி அதன் மூலம் இதய இயக்கத்தைப் பதிவு செய்கிறார்கள். ஒரு தனிவகைத் திரவம் தமனியினுள் செலுத்தப் பட்டு, முக்கியப் பகுதிகள் ஆராயப்பட்டு உடனுக்குடன் படமும் எடுக்கப்படுகிறது. இது முடிந்ததும் அந்தக் குழாய் எடுக்கப்பட்டு அங்கே நேரான அழுத்தம் மூலம் 15-30 நிமிடம் வரை குருதிக்கசிவை நிறுத்துவதற்காக அழுத்தப்பட வேண்டும். இந்தப் பரிசோதனை முடிந்த அன்றே கூட வீட்டுக்கு சென்று விடலாம். இந்தப் பரிசோதனை செய்து கொள்வதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய மூன்று இன்றியமையாத நிபந்தனைகள்: 1. பரிசோதனைக்கு முந்திய நாள் இரவுக்குமேல் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. 2. காலையில் பல் தேய்க்கலாம்; வாய் கழுவலாம். ஆனால், தண்ணீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், 3. பரிசோதனை முடிந்து உடனே வாகனங்களை ஒட்டக்கூடாது. அமெரிக்காவில் அந்தப் பரிசோதனையை 'வடிவக்குழாய்' இதய அழுத்த அளவீடு (Cardiac Cathetereization) என்கின்றனர்.
angioid : இரத்த நாளங்களை யொத்த.
angioma : குருதிக் கட்டி இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டி.
angiology : குருதி நாளவியல்; உடற் குழாயியல்; குழலியல் : குருதிநாளங்கள், ஊனீர் நாளங்கள் பற்றி ஆராயும் அறிவியல்.
angitis : நாளவீக்கம் : இரத்த நாளம் அல்லது நிணநீர் நாளம் வீங்கியிருத்தல்.
angioma : குருதி நாளக் கட்டி : இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டு.
angiooedema : குருதி நாளழற்சி : இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சியினால் மரணம் நேரிடலாம். குரல்வளை அழற்சியினால் உடனடியாக நாளங்க ளிலிருந்து ஊனீர் அண்டைத் திசுக்களுக்குள் ஊடுருவிச் செல்கிறது. வீக்கமும் ஏற்படுகிறது.
angioplasty : குருதிநாள ஒட்டறுவை மருத்துவம்; குருதிக் குழாய்ச் சீரமைப்பு; குழல் அமைப்பு : இரத்த நாளங்களில் இழைம அறுவை மருத்துவம் செய்தல்.
angiosarcoma : குருதிநாளப் புற்றுக் கட்டி; குருதிக் குழாய்ப் புற்று; குழல் சதைப் புற்று : இரத்த நாளங்களில் உண்டாகும் உக்கிரத் தன்மைவாய்ந்த கட்டி.
angiospasm : குருதிநாள இசிப்புத் தசைச் சுருக்கம்; குழாய் இசிவு : குருதி நாளங்களில் ஏற்படும் கடுமையான தசைச் சுரிப்பு நோய்.
angle : கோணம்.
angle of mandible : கீழ்த்தாடைக் கோணம்.
anguish : உடல் நோவு : பொறுக்கவியலா வேதனை.
anheiation : குறுமூச்சு; மூச்சுத்திணறல்.
anhidrosis : வியர்வைக் குறை நோய்; வியர்வையின்மை : வியர்வை போதிய அளவில் கரக்காததால் உண்டாகும் நோய்.
anhidrotics : வியர்வைக் குறைப்பு மருந்து : வியர்வைத் தணிப்பிகள் : வியர்வை சுரப்பதைக் குறைக்கும் ஒரு வகை மருந்து.
anhydraemia : குருதித் திரவக்குறை நோய்; வரளி இரத்தம்; குருதிக் குறை : இரத்தத்தில் திரவம் போதிய அளவு இல்லா திருத்தல்.
anhydrosis : வியர்விலாமை.
anhydrous : நீரின்மை நோய்; வரண்ட நோய்; நீரற்ற நீரில்லா; நீரில் :உடலில் நீர் அடியோடு இல்லாது போதல்.
anicteric : மஞ்சட் காமாலையின்மை; மஞ்சள் நிறமின்மை : மஞ்சட்காமாலைக் கோளாறு இல்லாதிருத்தல்.
anileridine : அனிலரிடின் : அபினி போன்ற பண்புகள் கொண்ட ஒரு செயற்கை மருந்து.
anilitin : முதுமைத் தளர்ச்சி; கிழத்தனம்.
aniridia : விழித்திரைக் கோளாறு; விழிச் சுருக்கத் தசையின்மை; திரையின்மை : கண்ணில் விழித்திரை இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடையதாக இருத்தல். இது பெரும்பாலும் பிறவிலேயே ஏற்படும் கோளாறு.
anischuria : சிறுநீர் ஒழுக்கு; சிறுநீர் அடக்க இயலாமை; சிறுநீர் கட்டற்ற ஒழுக்கு : சிறுநீரை அடக்க இயலா வண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது.
anisocoria : சமனிலாக் கண்மணி; ஒழுங்கற்ற கண் பார்வை : இரு கண்மணிகளின் விட்டம் ஏற்றத் தாழ்வுடன் இருத்தல்.
anisocytosis : சமனிலாச் சிவப்பணுக்கள்; சமனிலா செல்லியம்; அணுச் சீரின்மை : இரத்தச் சிவப்பணுக்கள் வடிவளவில் ஏற்றத் தாழ்வுடன் இருத்தல்.
anisocoria : சீரிலாமனி.
anisomelia : சமனிலா உறுப்புகள் : உடல் உறுப்புகள் சமச்சீரான நீளத்தில் இல்லாதிருத்தல்.
anisometropia : கண்னொளிக் கோட்ட மாறுபாடு; சமனிலா பார்வை வீக்கம்; ஒத்த பார்வையின்மை : இரு கண்களின் ஒளிக் கோட்டமும் மாறுபட்டிருத்தல்.
ankle : கணுக்கால்.
ankle clonus : கணுக்கால் தசைத் துடிப்பு; கணுக்கால் உதறல் : உள்ளங்காலில் அழுத்தம் அதிகரிப்பதன் காரணம் பாதம் பின் புறமாக வளைகிறபோது பின் கால் தசைப் பகுதி விரைவாக மாறி மாறிச் சுருக்கமும் தளர்வுமாகத் துடித்தல்.
ankylurethria : சிறுநீர் வடிகுழாய் அடைப்பு; சிறுநீர் வடிகுழாய் குறுக்கம் : சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகி யிருப்பது.
ankyloblepharon : கண்ணிமை இணைவு ஒட்டிய இமை : கண் இமைகளின் விளிம்புகள் இயற்கைக்கு மாறாக ஒட்டிக் கொண்டிருத்தல்.
ankylosis : மூட்டு விறைப்பு : நோய் காரணமாக ஒரு மூட்டு விறைத்து விடுதல்.
ankyloglossia : படிநா.
ankylostoma : கொக்கிப் புழு.
anky lostomasis : கொக்கிப் புழுப்பாடு.
annular : மூட்டு இணைப்புத் தசை நார்; வளைய உரு :மோதிரம் போன்ற வளைய வடிவுடைய தசை நார். மணிக் கட்டு, கணுக்கால் மூட்டுகள் உள்ளது போன்ற நீண்ட எலும்புகளை இது பிணைக்கிறது.
anodyne : நோயாற்றும் மருந்து (அனோடைன்) வலியகற்றி; வலி நீக்கி : வலிமை நீக்கும் ஒருவகை மருந்து.
anogenital : குதம்-பிறப்புறுப்பு மண்டலம் : குதம், பிறப்புறுப்பு மண்டலம் தொடர்பான.
anomaly : முறை திறம்பிய; மாறி செறி விலகல் : இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட அல்லது வேறுபட்ட அல்லது இயல்பு திறம்பிய.
anomia : பெயர் மறதி நோய் : பொருள்களின் அல்லது ஆட்களின் பெயர்களைக் கூற முடியாத நிலை.
anomie : தனிமையில் வாழ்பவர் : மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் தனிமையில் வாழு ஒரு நபர்.
anonychia : நகமின்மை : நகங்கள் இல்லாதிருத்தல்.
anoperineal : குதம்-எருவாய் மண்டலம் : குதம், விரைப் பைக்கும் எருவாய்க்கும் இடைப் பகுதி ஆகியவை தொடர்பான மண்டலம்.
anopheles : மலேரியாக் கொசு; முறைக் காய்ச்சல் கொசு : முறைக்காய்ச்சலை (மலேரியா) உண்டாக்கும் ஒருவகைக் கொசு இனம். இந்தக் கொக இனத்தின் பெண்கொசுக்கள் கடிப்பதால் மனிதருக்கு முறைக்காய்ச்சல் உண்டாகிறது.
anoplasty : குத அறுவைச் மருத்துவம் : குதத்தில் அறுவை மருத் துவம் செய்து நோயைக் குணப்படுத்தும் முறை.
anorchism : விரையின்மை; காயின்மை : ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு விரைகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல்.
anorectal : குதவாய் தொடர்பான நோய் : குதம், குதவாய் தொடர் பான வெடிப்பு நோய்.
anorectic : பசியின்மை; பசி தணிப்பி; பசியடக்கி; பசிகுறைப்பி : (1) உணவு உண்பதில் விருப்பம் இல்லாதிருத்தல் நோய். (2) பசி யின்மை நோயால் அவதியுருவர்.
anorexia (anorexia nervosa) : பசியின்மை நோய்; பசியாமை நோய் : பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நோய். உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக் குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்கம் ஒர் உளவியல் நோயாக மாறி உணவு உண்பதில் வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது. இதனை 'ஒல்லியாவதற்கு அடிமையாதல்” என்றும் கூறலாம். இந்நோய் கண்டவர்களுக்கு எடை குறைகிறது; உடல் எடை குறைந்தாலும் உடல் குண்டாகிறது என்னும் அச்சவுணர்வு தீவிரமடைகிறது. உடல் மெலிதல், இயல்புக்குமீறி மாதவிடாய் வராதுபோதல், மலச்சிக்கல், கால் வீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. அத்துடன் மிகக் குறுகிய காலத்தில் பெருந்தீனி உண்ணும் பெரும் வேட்கையும் உண்டாகிறது. உணவு உட் கொள்வது குறைந்துகொண்டே வருவதால் இறுதியில் மரணம் விளைகிறது.
anosmia : முகர்வுணர்விழப்பு; முகர்வுணர்வின்மை; மோப்ப உணர்வின்மை; முகரின்மை : முகரும் உணர்வை இழந்து விடுதல்.
anovular : கருவளர்ச்சியின்மை; முட்டையின்மை; சூழற்ற : கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெண்களிடம் கருவுறுதலின்றி மாதவிடாய் உண்டாகிறது. இதனால் இரத்தப் போக்கு அதிகமாகும்.
anoxaemia : குருதி ஆக்சிஜன் குறைபாடு; உயிர்வளிக்குறை குருதி : இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லாதிருத்தல்.
anoxia : திசு ஆக்சிஜன் குறை பாடு; உயிரியமின்மை; உயிரிய முடக்கம் : இரத்தத்தில் அல்லது திசுக்களில் ஆக்சிஜன் போதிய அளவு இல்லாது இருத்தல்.
ansiline : அன்சிலின் : நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கூட்டுப் பொருள். இது நோய் நுண்மத்தடைச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது.
antacid : புளிப்பு நீக்க மருந்து; அமில எதிர்ப்பி; அமில முறி : வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.
antagonism : எதிர்ப்புத் தன்மை; எதிர்ப்பியல் : சில மருந்துகளில் உள்ள தீவிரமான எதிர்ப்புத் தன்மை, (எ-டு) "நாக்சோலோன்" என்ற மருந்து, மயக்க மருந்துகளின் அனைத்து விளைவுகளையும் எதிர்மாறாக்குகிறது. சிலவகைத் தசைகளுக்கும், உறுப்புகளுக்குங்கூட இந்த எதிர்ப்புத் தன்மை உண்டு.
antaphrodisiac : சிற்றின்பம் தணிக்கும் மருந்து.
antazoline : எதிர்விழுப்புப் பொருள் : ஒவ்வாமைக்கு எதிர்ப்பு மருந்து. ஹிஸ்டமின் எனும் பொருளுக்கு எதிர்ப்பொருள்களில் ஒன்று.
antecedent : முன்னோடி;முன்னிகழ்ச்சி; முன்செயல்; முன்வினை : ஒரு குறிப்பிட்ட செயலுக்கு முன்னதாகவே நடக்கின்ற.
anteflexion : உறுப்பு முன் வளைத்தல்; முன்மடக்கம் : கருப்பையின் நிலையிலிருந்து பொதுவாக முன்னோக்கி வளைந்திருக்கும் ஒர் உறுப்பு.
ante-mortem : மரணத்திற்கு முந்திய; இறக்கு முன்; மரிக்கு முன் : மரணத்திற்கு முற்பட்ட நிலை.
antenatal : பேறுகாலத்திற்கு முற்பட்ட; முன்பேற்று; கருக்காலம்; பேற்று முன்நிலை : பிள்ளைப் பேற்றுக்கு முந்திய நிலை.
antenna : உணர்கொம்பு : பூச்சி வகையில் முன் தரையின் இரு பக்கங்களில் காணப்ப்டும் உணர்ச்சி உறுப்பு.
antepar : ஆன்டிப்பார் : பைப்பரசீன் அடங்கிய நீர்மம் அல்லது மாத்திரை.
antepartal : முன் குழந்டைப் பேற்றுக் காலம் : குழந்தைப் பேற்றுக்கு முன்பு குழந்தை பிறப்பதற்கு முன்பு நடக்கின்ற.
antepartum : பிறப்புக்கு முன்; மகப்பேற்றுக்கு முன்; பிறப்பு முன் நிலை :பொதுவாக நிறைமாத மகப்பேற்றுக்கு முந்திய 4 மாதங்கள். அதாவது, 6ஆம் மாதம் முதல் 9ஆம் மாதம் வரை.
anterior : முன்புறம், முன்பக்கம், முந்தைய : (1) காலத்தால் முற்பட்ட (2) இடத்தின் முன்னதாக, (3) உடலின் முன் பக்கம்.
anterior chamber : விழிமுன்னறை : பனிப்படலத்திற்கும் (கண்மணி அல்லது பாப்பா) விழிக் கரும்படலத்திற்கும் இடைப்பட்ட விழியறை.
anterior horncells : தண்டுவட முன் கொம்பு அணுக்கள் : தண்டு வட முன்கொம்பில் காணப்படும் நரம்பணுக்கள். இந்த அணுக்களிலிருந்து பிரியும் நரம்புயிழைகள் எலும்புத் தசைக்களுக்குள் செல்லும்.
anterolateral : முன்பக்கவாட்டில் : முன்பக்கமாகவும் அதே நேரத் தில் உடலின் மத்திய பாகத்திலிருந்து விலகியும் இருத்தல். anteversion : முன்னோக்கிச் சாய்வு; முன்சாய்வு : உடலின் ஒர் உறுப்பு அல்லது பகுதி முன்னோக்கிச் சாய்ந்தோ இடம் பெயர்ந்தோ இருத்தல்.
anthema : 'தோல் பெருங் கொப்புளம்': தொடர்புடைய ஒர் இணைப்புச்சொல். (எ-டு) (enanthema) சளிப்படலக் கொப்புளம்.
anthelmintic : குடற்புழு நீக்க மருந்து; புழுப்பகை; பூச்சிக் கொல்லி ; குடற்புழு மருந்து : குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற அல்லது ஒழிக்கிற ஒரு மருந்து.
antheroselerosis : தனிமத்துடிப்பு.
anthiphen : ஆந்திஃப்ன் : மெப்பிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
anthracene : ஆந்தரசின் : கரி மற்றும் தார் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஹைட்ரோ-கார்பன். சாயம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.
anthracoid : தோற்றத்தில் இராஜ பிளவை போலிருக்கின்றன.
anthracosis : நுரையீரல் நோய்; நுரையீரல் கரிப்படிவு; கரிமநோய் : நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய்.
anthracycline : ஆந்திரசைக்ளின் : புற்றுநோய்க்குத் தரப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க் கொல்லி. டானாமைசின் மற்றும் டாக்சோ ருபிசின் கலந்த மருந்து.
anthraquinone : ஆந்திரகுயினோன் : ஆந்திரசீனிலிருந்து தயாரிக்கப்படும் குயினோன் வகை மருந்து. சாயம் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.
anthrax : நச்சுப் பரு : கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீழ் கட்டு நோய். இது ஒரு தொற்று நோய். இது கால்நடை களிடமிருந்து மனிதருக்கும் தொற்றக்கூடும்
anthropoid : சுருங்கிய இடுப்பெலும்பு : இடுப்பு வளையம் பக்கத்துக்குப் பக்கம் குறுகிச் சுருங்கியுள்ள இடுப்புக் கூடு.
anthropology : மானுடவியல்; மாந்தவியல் : மனிதகுலத்தைப் பற்றி ஆராயும் துறை. இதில் பல பிரிவுகள் உண்டு.
anthropometry : மனித உடல் அளவை; உடல் அளவி, மானிட நிலை அளவி : மனிதரின் உடல், அதன் உறுப்புகள் ஆகியவற்றின் அளவை. ஒப்பீடு செய்வதற் காகவும், பாலினம், வயது, எடை, இனம் போன்றவற்றுக்கான உரு மாதிரிகளை வகுப்பதற்காகவும் இந்த அளவை பயன்படுகிறது.
antiadrenergic : நரம்புத்தூண்டல் சமனமாக்கல் : பரிவு நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகளினால் உண்டாகும் தூண்டு விளைவுகளைச் சமனப்படுத்துதல் அல்லது குறைத்தல்.
antiallergic : ஒவ்வாமைத்தடுப்பு; மாற்று வினைப்பகை : ஒவ்வா மையைத் தடுத்தல்; குறைத்தல்.
antiamoebic : அமீபாக்கொல்லி : அமீபா கிருமிகள் வளர்வதையும், பெருகுவதையும் தடுக்கின்ற அல்லது அவற்றை அழிக்கின்ற மருந்து. -
antianabolic : புரதச்சேர்மம் தடுப்பு : உடல் புரதத்தின் கூட் டிணைவைத் தடுத்தல்.
antianaemic : குருதிப் போக்கு தடுப்பு மருந்து; சோகை எதிர்ப்பி : குருதிக்குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கப் பயன்படும் மருந்து. (எ-டு) வைட்டமின் K.
antianginal : இதயவலி மருந்து; நெஞ்சுவலி மருந்து : இதயத் தசைகளுக்குச் செல்கின்ற இரத்த அளவை அதிகரித்தும், இதயப்பணி அளவைக் குறைத்தும் இதய வலியைப் போக்குகின்ற மருந்து.
antiarrhythmic : இதய சீர் மாறிய துடிப்பு மருத்துவம் : பல்வேறு இதயத்துடிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும், மருத்துவ முறைகளும்.
antibacterial : பாக்டீரியா எதிர்ப்பு மருந்து; நுண்ணுயிரி முறி; நோயணு முறி : பாக்டீரியாக்களை அழிக்கிற, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற ஒரு மருந்து.
anti beriberi : தவிட்டான் எதிர்ப்பு மருந்து : ஊட்டச்சத்துக் குறை வினால் உண்டாகும் தவிட்டான் என்ற நோய்க்கு எதிரான மருந்து. எடுத்துக்காட்டு : வைட்டமின் B கலைைவயிலுள்ள தையாமின்.
antibiosis : உடன்வாழ் ஒவ்வாமை எதிர் உயிரிகள்; உயிர்ப் பகைமை: ஒர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள், மற்றோர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாக இருக்கும் தன்மை.
antibiotic : நோய்முறியம்.
antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பென்சிலின் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராசைக்ளின் போன்ற தசைநோய் உண்டாக்கும் உயிரிகளுக்கு எதிராகத் திறம்பட வேலை செய்கின்றன; இவற்றை வாய்வழியாகவும் கொடுக்கலாம். நியோமைசின், பாசிட்ராசின் போன்றவை அதிக நச்சுத் தன்மையுடையனவாக இருப்பதால், உள்ளே பயன்படுத்தப்படுவதில்லை, புறகாயங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
antibody : நோய் எதிர்ப்பொருள்; விளை எதிர்மம்; தற்காப்பு மூலம் : தீங்குதரும் அயற்பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.
anticholinergic : பித்தநீர் நரம்புக் கோளாறு : பித்தநீர் நரம்பு, அசிட்டில்கோலின் என்ற ஒரு வேதியியல் பொருளின் மூலமாகத் தனது துண்டல்களை நரம்பு அல்லது இதய நரம்புச் சந்திப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த நடவடிக்கைக்குத் தடையாக இருக்கும் செயல்.
anticlockwise : எதிவலம்.
anticoagulant : குருதிக்கட்டுத் தடைப்பொருள்; உறைவு எதிர்ப்பி : உடலில் காயம்பட்டு இரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி வீணாவதைத் தடுப்பதற்காக, இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் இரத்தத்தில் உள்ளது. இவ்வாறு இரத்தம் உறையச் செய்வதைத் தடுக்கும் பொருள் குருதிக்கட்டுத் தடைப்பொருள் ஆகும். நோயியல் பரிசோதனை களுக்காக இரத்தம் முழுவதையும் எடுக்க வேண்டியிருக்கும்போது, ஆக்சாலிக் அமிலம் (வெல்லக அமிலம்) குருதிக்கட்டுத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இரத்தம் செலுத்துவதற்காக இரத்தம் எடுக்கும்போது, சோடியம் சைட்ரேட் குருதிக் கட்டுத் தடைப்பொருளாகப் பயன்படுகிறது.
anticoagulation : இரத்தம் உறைதலைத் தடுத்தல்; இரத்தம் உறையாத் தன்மை; குருதி உறையா நிலை.
anticonvulsant : வலிப்புத் தடைப் பொருள்; வலிப்படக்கி; வலிப்பு முறி : வலிப்பை அறவே ஒழிக்கிற அல்லது தடுக்கிற பொருள்.
antidepressants : சோர்வு நீக்க மருந்துகள்; உளச்சோர்வுப் போக்கிகள் : சோர்வினை அகற்றுகிற மருந்துகள் டிரைசைக்ளிக் குழுமத்தைச் சேர்ந்த மருந்துகள் இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சோர்வுக் கோளாறுகளுக்கு இவை பயன்படுகின்றன.
antidiarrhoeal : வயிற்றுப்போக்குத் தடுப்பு மருந்து : வயிற்றுப்போக்கைக் குறைக்கின்ற மருந்து வயிற்றுப் போக்கை குணப்படுத்துகின்ற மருந்து. வயிற்றுப்போக்கு அறிகுறிகளை அறவே போக்குகின்ற மருந்து.
antidiabetic : நீரிழிவு மருத்துவம்; சர்க்கரை நோய் எதிர்ப்பி; நீரிழி வடக்கி : நீரிழிவு நோய்க்கு எதிரான மருத்துவச் சிகிச்சை முறைகளை இது குறிக்கிறது. இயக்குநீர் கணையச்சுரப்பு நீர் (இன்சுலின்) வாய்வழி மருந்துகள் ஆகியவை இதில் அடங்கும்.
antiemetic : வாந்தித்தடுப்பான்; வாந்தி மருந்து : வாந்தி மற்றும் உமட்டலைத் தடுக்கும் மருந்து, வாந்தி மற்றும் உமட்டலிலிருந்து நிவாரணம் தரும் மருந்து.
antidiphtheritic : தொண்டை அழற்சித் தடுப்பு மருத்துவம் : தொண்டை அழற்சி நோயைத் (டிப்தீரியா) தடுப்பதற்கான மருத்துவம் முறைகள் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
antidiuretic : சிறுநீர்க் கழிவுத் தடுப்பு மருத்துவம்; சிறுநீர்க்குறைப்பி; நீர் பெருக்கடக்கி : சிறுநீர் அளவுக்கு மீறிக் கழிவதைத் தடுப்பதற்கான மருத்துவ முறை.
antidote : மாற்று மருந்து; நச்சுமுறிப்பி; நச்சு முறி : நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக் காட்டாக அமில நஞ்சினை முறிக்க சோடியம்பைக்கார்பனேட் தடுப்பு மருந்து போன்ற காரப் பொருட்களைக் கொடுத்தல்.
anti-dysenteric : அளைச்சல் தடுப்பு மருந்து : வயிற்றளைச்சலைத் தடுப்பதற்கான மருந்து.
antiembolic : குருதிக் குழாயடைப்புத் தடுப்பு மருந்து : பக்க வாதத்திற்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக் கட்டி வழியடைப்பதைத் தடுக்கும் மருந்து.
antiemetic : வாந்தித் தடுப்பு மருந்து; வாந்தியடக்கி : குமட்ட லையும், வாந்தியையும் தடுக்கும் மருந்து.
antienzyme : இயக்குநீர் தடைப்பொருள்; இயக்கு நீர் எதிர்ப்பி :ஒர் இயக்குநீர் (என்சைம்) செயற்படுவதைத் தடுக்கும் பொருள். இது சீரணமண்டலத்தில் இருப்பதால், நோய்த் தடுப்பை எதிர்க்கிறது.
antiepileptic : வலிப்பு நோய் தடுப்பு மருந்து; வலிப்படக்கி மருந்து : காக்காய் வலிப்பு அடிக்கடி வருவதைக் குறைக்கும் மருந்து.
antifebrite : காய்ச்சல் தடுப்பு மருந்து; காய்சலடக்கி : காய்ச்சலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் மருந்து.
antifebrin : காய்ச்சல் எதிர்ப்பு மருந்து : காய்ச்சலைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது.
antifibrinolytic : ஊநீர்கோளாறு தடுப்பு மருந்து : கட்டியாக உறையக் கூடிய ஊனீர் கசிவுக் கோளாறுகளைத் தடுக்கக்கூடிய மருந்து.
antitungai : காளான் ஒழிப்பு மருந்து; காளான் நீக்கிகள்; பூசணப் பகை :நோய்த்தன்மையுடைய காளான் (நாய்க்குடை) வகையை ஒழிக்கும் மருந்து.
antigen : காப்பு மூலம்; உடற் காப்பு ஊக்கி; விளைவியம் : அயற் பொருளிலிருந்து உயிரினம் காக்கும் உயிர் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள் மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப் பொருளை உண்டாக்குகிறது.
antihaemophilic globulin (AHG) : குருதிப்பெருக்குத் தடுப்புப் புரதப் பொருள் : இரத்தக்கட்டியில் அடங்கியுள்ள VIII. இது நிண நீரில் உள்ளது; குருதி நிணநீரில் இல்லை. குருதிப் பெருக்கில் குறைவாக இருக்கிறது.
antihaemorrahgic : குருதிப்போக்குத் தடைப்பொருள் : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கும் பொருள். இதனை வைட்டமின் K என்பர்.
antihypertensive : உயர் இரத்த அழுத்தத் தடைப்பொருள்; மிகை அழுத்தக் குறைப்பி; பேரழுத்தத் தணிப்பி : உயர்ந்த இரத்த அழுத் தத்தைக் குறைக்கும் ஒரு பொருள்.
antiinfective : தொற்றுத் தடைப்பொருள்; தொற்றுத் தடை : நோய் தொற்றுவதைத் தடுக்கும் மருந்து, இதனை வைட்டமின் A என்பர்.
antiinflammatory : வீக்கத்தடுப்புப் பொருள் நீக்கி; அழற்சித் தடை : வீக்கத்தைக் குறைக்கிற அல்லது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிற பொருள்.
antileprotic : தொழுநோய்த் தடுப்பு மருந்து; தொழுநோய் எதிர்ப்பி; தொழுநோய்ப் பகை : தொழுநோய் ஏற்படாமல் தடுக்கிற அல்லது தொழுநோயைக் குணப்படுத்துகிற ஒரு மருந்து.
antilymphocyte serum (ALS) : நிணநீர் அணு எதிர்ப்பு ஊனீர்; படிநீர்ச்செல் எதிர்ச் சீரம் : நிண நீர்களின் செயல்களைத் தடுத்து அவற்றைக் கட்டியாக்குகிற நோய் எதிர்ப்புப் பொருள்களையுடைய ஊனிர்.
antilysian: சிதைவு த்டைவி.
antilysis : சிதைவுத் தடை.
antimetabolite : வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள்; ஊன்ம ஆக்கத்தடை : ஒர் உயிரணுவின் கருமையப் புரதங்களில் ஒருங் கிணைத்து அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குக் தேவையான வேதியியல் பொருள்களை ஒத்திருக்கும் ஒரு கூட்டுப்பொருள். இது புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
antimicrobial : நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்; நுண்ணுயிர்ப் பகை : உயிர் நுண்மங்களுக்கு எதிராகச் செயற்படும் பொருள்.
antimicrobic : நோய் நுண்மத் தடை.
antimigraine : ஒற்றைத் தலைவலித் தடுப்பு மருந்து : கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும் மருந்து.
antimitotic : உயிரணுப் பிளவு இயக்கத்தடுப்பு மருந்து; திசுப்பிளப்புத் தடை : உயிரணு நுண்னிழையாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும் மருந்து. புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான பல மருந்து களை இது குறிக்கும்.
antimony and potassium tartrate : கருநிமிளை மற்றும் பொட்டாசியம் டார்ட்ரேட் : அஞ்சனக்கல் எனப்படும் கருநிமிளை (ஆன்டிமணி) பொட்டாசியம் புளியகக்காடியின் உப்புச்சத்து அடங்கிய ஒரு வகைப் பழைய மருந்து. இது இப்போது, வெப்ப மண்டல நோய்களைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
antimutagen : வகை மாற்றத் தடுப்புப் பொருள் : உயிரினவகை மாற்ற வினையைப் பயனற்றதாக்கும் ஒரு பொருள்.
antimycotic : காளான் அழிப்புப் பொருள்; காளான் நோய் : நோய் உண்டாக்கும் ஒட்டுயிர்க் காளான்களை அழிக்கும் ஒரு மருந்து.
antineoplastic : புது உயிர் ஊன்ம எதிர்ப்புப் பொருள் : புதிய உயிர் ஊன்மங்களுக்கு எதிராகச் செயற்படும் ஒரு பொருள்.
antinephritic : குண்டிக்காய் பற்றிய; நோய்க் கெதிராகச் செய்யப்படுகிற.
antineurtic : நரம்பு நோய்த்தடுப்பு மருந்து; நரம்பழற்சித் தடை : நரம்பு நோயைத் தடுக்கும் மருந்து, இது குறிப்பாக வைட்டமின் B கலவையைக் குறிக்கும்.
anti-oedema : வீக்கத் தடை.
antiodontgic : பல்வலி தடுக்கும் மருந்து.
antioxidants : ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள்; ஆக்சியேற்றி எதிர்ப்புப் பொருள்; உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் : ஆக்சிகரண முறையைத் தாமதப்படுத்தும் ஒரு பொருள்.
antiparkison (ISM) drugs : பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து : 'ஃபினோத்தியாசின்' போன்ற முக்கிய சமனப்படுத்தும் மருந்துகள். இவை நரம்பு சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளின் பக்க விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
antiparasitic : ஒட்டுயிர் ஒழிப்புப் பொருள்; ஒட்டுண்ணி எதிரி; ஒட்டுண்ணித்தடை : ஒட்டுண்ணிகளை அல்லது ஒட்டுயிர்களைத் தடுக்கிற அல்லது அழிக்கிற பொருள்.
antipellagra : தோல் வெடிப்பி நோய்த் தடை மருந்து : ஊட்டக் குறைவினால் ஏற்பட்டு, இறுதியில் மூளைக்கோளாறில் கொண்டு விடும் தோல்வெடிப்பு நோயைக் குணப்படுத்தும் மருந்து. வைட்டமின் B கலவையிலுள்ள நிக்கோட்டினிக் அமிலம் என்ற பகுதி இப்பணியைச் செய்கிறது.
antiperiodic : காலாந்தர நோய்த் தடுப்பு மருந்து : காய்ச்சல் (மலேரியா) போன்ற காலாந்தரங்களில் திரும்பத் திரும்ப வருகிற நோய்களைத் தடுப்பதற்கான மருந்து.
antiperistalsis : தசைச் சுருக்க எதிர் மாற்று அலை; எதிரலை வியக்கம் ; குடலலை எதிர்ப்பிகள் குடல் அசைவு மறிநிலை : உணவு சாரம் எளிதில் செல்லுவதற்கிசைவான உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச் சுருக்க அலைகளின் இயல்பான இயக்கத்தை எதிர் மாறாக்குதல்.
antiphlogistic : வீக்கம் தணிப்பி.
antiprothrombin : குருதிக்கட்டுத் தடுப்பு : குருதி நாளங்களில் குருதி உறைவதைத் தடுத்தல்.
antiprotozoal : முந்து நுண்மத்தடை.
antipruritic : அரிப்புத் தடுப்பு மருந்து; நமைச்சலடக்கி; அரிப்புக் குறைப்பி; நமைச்சுத்தடை : தோலில் அரிப்பு ஏற்படுவதைக் குணப் படுத்தும் அல்லது தடுக்கும் மருந்து.
antipurpura : செந்நீலப் புள்ளித் தடுப்பு மருந்து : தோலின் மேல் செந்நீல நிறப்புள்ளிகள் கொண்ட நோய் ஏற்படுவதைத் தடுக்கும் மருந்து. வைட்டமின் P இந்தப் பணியைச் செய்கிறது.
antipyretic : காய்ச்சல் குறைப்பான் மருந்து; சுரமடக்கி; காய்ச்சலடக்கி; சுரத்தடை : குழந்தைக் கணை (ரிக்கட்ஸ்) நோயைத் தடுக்கும் மருந்து. வைட்டமின் D இப்பணியைச் செய்கிறது.
antirabic : நாய்க்கடி நோய்த் தடை.
antirachitic : எலு சிதைவுத்தடை.
antiRhesus : உறை ஊக்க எதிர்ப்புக் கூறு : குருதியில் உறைமம் ஊக்குங்கூறு செலுத்தப்படும் போது எதிர்ச்செயல் காட்டுகிற (Rh-positive) குழந்தை பெறுகிற பெண்களுக்குப் பிந்திய மகப்பேற்றின் போது கருமூலத்தாள் சவ்வில் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, குருதியில் உறைமம் ஊக்குங்கறு செத்தப்படும் போது எதிர்ச்செயல்காட்டாக (Rh-negative) கூறு அளிக்கப்படுதல்.
antirheumatic: கீல்வாதத் தடுப்பு மருந்து; மூட்டுவலித் தடை; வாதமடக்கி; முடக்கு நோய் தடுப்பி; முடக்கு நோய் நீக்கி : கீல்வாதத்தைத் தடுக்கக்கூடிய அல்லது குறைக்கக் கூடிய மருந்து.
antiscorbutic : சொறிநோய்த் தடுப்பு மருந்து; மூக்கு வறட்சி நோய் நீக்கி; கசிநோய்த் தடை : ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும் சொறி, கரப்பான், பல் எகிர் வீக்க நோயைத் (ஸ்கர்வி) தடுக்கிற அல்லது குணப் படுத்துகிற மருந்து. வைட்டமின் C இந்தப் பணியைச் செய்கிறது.
antisecretory : சுரப்புத் தடுப்பு மருந்து; சுரப்புத் தடை; சுரப்புக் குறைப்பி
- ஊனிர்கரப்பதைத் தடுக்கும் மருந்து.
antisepsis : நுண்மத்தடை; சீழ்த் தடை; சீழ்த் தடுப்பி : நோய் நுண் மங்கள் வளர்ச்சியடைந்து திசுக்களை அழித்துவிடாமல் தடுத்தல். லிஸ்டர் பிரபு 1880 இல் அறுவை மருத்துவத்தில் கார்பாலிக் அமிலத்தை முதன்முதலாக இதற்குப் பயன்படுத்தினார்.
antiseptic : நோய் நுண்மத் தடை மருந்துகள்; சீழ் எதிர்ப்பி; நச்சு நீக்கி; நச்சு நீக்குவி : நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற வேதியியல் பொருள்கள். இவை உயிருள்ள திசுக்களில் பயன்படுத்தப்படுகிறது.
antiserum : நோய் எதிர்ப்பு ஊனீர்; எதிர்ச்சீரம் : ஒரு விலங்கின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது தேவையான காப்பு மூலத்தின் மூலம் நோய்த்தடைகாப்பு செய்யப்பட்டிருக்கும். இதில் பெரு மளவில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியிருக்கும்.
antisialagogue : உமிழ்நீர் தடுப்புப் பொருள்; எச்சில் சுரப்பு ஒடுக்கி : வாயில் அளவுக்கு மிஞ்சி எச்சில் ஊறுவதைத் தடுக்கும் பொருள்.
antisocial : மனநலக்கேடு : சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை, ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்பு களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை.
antispasmodic : தசைச் சுரிப்புத் தடுப்பு முறை; நடுக்கமகற்றி; இறுகு தடை; இசிவகற்றி : தசையில் சுரிப்புக் கோளாறுகளினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை.
antisterility : மலடு நீக்க மருந்து; மலடு நீக்கி; மலடு முறி : இனப் பெருக்கத் தகுதியின்மையை நீக்குவதற்கான மருந்து வைட்டமின் E இப்பணியைச் செய்கிறது.
antisyphilitic : மேகப்புண் தடுப்பு முறை; மேகப் புண் ஒழிப்பு; மேகப் புண் தடை : மேகப்புண் (கிரந்தி) என்ற மேக நோயைத் தடுப்பதற்கான மருத்துவமுறை.
antithrombin : திராம்பின் தடை; குருதியுறைவுத் தடுப்புப்பொருள் : இரத்தத்தில் இயற்கையாக இருக்கும் குருதியுறைவுத் தடுப்புப் பொருள். (எ-டு) ஹெப்பாரின்.
antithrombotic : குருதிக் கட்டுத் தடுப்பு மருத்துவமுறை; படிம உறை வெதிர்ப்பு : குருதி நாளங்களில் குருதிக்கட்டு ஏற்படாமல் தடுப்பதற்கான அல்லது அதனைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை.
antithymocyteglobulin (ATG) : கணையச் சுரப்பி நோய்த் தடுப்புத் தசைப் புரதம் : கழுத்துக் கணையச் சுரப்பி நீரை காப்பு மூலங்களுடன் பிணைக்கும் நோய்த் துடுப்புத் தசைப்புரதம்.
antithyroid : கேடயச் சுரப்பிக் குறைப்பு மருந்து; தைராய்டு எதிர்ப்பி : கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பியான கேடயச்சுரப்பியின் (தைராய்டு) நடவடிக்கையைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்து.
antitoxin : எதிர் நச்சு; நச்சு முறியம் : உடலில் பாக்டீரியாவினால் உண்டாகும். நச்சுப் பொருளுடன் கலந்து அதனைத் தீங்கற்ற தாக்குவதற்கு உடல் உற்பத்தி செய்யும் பொருள்.
antitoxic : எதிர்நச்சுத்தன்மை கொண்ட.
antitragus : செவிக்கரடு : புறச்செவியின் நுழைவாய் எதிர்ப் புடைப்பு.
antituberculosis : காசநோய் மருத்துவ முறை : காசநோய் எனப்படும் எலும்புருக்கி நோயைத்தடுப்பதற்கான அல்லது குணப் படுத்துவதற்கான சிகிச்சை முறை.
antitumour : கழலை எதிர்ப்பு மருந்து: கழலை அல்லது கட்டி வளர்வதைத் தடுப்பதற்கான மருந்து.
antitussive : இருமல் சிகிச்சை முறை; இருமல் அடக்கி; இருமல் தடை : இருமலை நீக்குவதற்கான மருத்துவ முறை.
antivaccinationism : அம்மைகுத்தெதிர்ப்பு.
antivenin : நச்சு மாற்று மருந்து; நச்செதிர்ப்பி : பாம்புக் கடித்த நஞ்சுக்கு முறிவாகக் கொடுக்கப்படும் மருந்து. antivenom : விடமுறி; நச்சுமுறி.
antiviral: நோய்க்கிருமி எதிர்ப்பி; அதி நுண்ணுயிர் எதிர்ப்பி : நோய்க் கிருமிகளை எதிர்த்துச் செயற்படுதல்.
antivitamin : எதிர் ஊட்டம்; ஊட்ட சாரா எதிர்ப்பி; உயிர்ச் சத்து எதிர்ப்பி; உயிர்ச் சத்துத் தடை : 'வைட்டமின்' என்ற ஊட்டச்சத்தின் செயலைத்தடுக்கும் ஊட்டப் போலி. (எ-டு) அவிடின்.
anti-vivisection : உயிரோடறுவை எதிர்ப்பு : உயிருடன் விலங்கு, சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
antrectomy : இரைப்பை நீர்சுரப்புத்தடை அறுவை மருத்துவம்; இரை முழை எடுப்பு : சிறுகுடல் அழற்சியைக் குணப்படுத்து வதற்காக, வயிற்றிலுள்ள இரைப்பைச் சிறுகுடல் முதற்கூற்று இடை வழி வாய்ப்பகுதி உள்வளைவினை வெட்டியெடுத்துவிட்டு, இரைப்பை நீர்சுரப்பு ஆதாரத்தை அகற்றுதல்.
antrostomy : மேல் தாடைக் குழிவு அறுவை மருத்துவம்; முழைவாய் அமைப்பு : தாடை எலும்பு உட்புழையின் உட் குழிவிலிருந்து மேல்தாடை உள்வளைவு வரையில் வடிமான நோக்கத்திற்காக செயற்கை முறையில் (அறுவை செய்து) திறந்து சிகிச்சை செய்தல்.
antrum : தாடைக் குழிவு; குகைக் குழிவு; எலும்புக் குழிவெட்டு; எலும்பறை வெட்டுக்குழி புழை : மேல் தாடை உள்வளைவு. இது பற்களுக்கு மேலே, நெற்றிக்குள்ளே, கண்களுக்குச் சற்று மேலே காதின் பின்புறமுள்ள எலும்பில் அமைந்திருக்கும்.
anturan : அன்டுவாரன் : சல்ஃபின் பைராசோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
anuria : சிறுநீர்த்தடை; சிறுநீரற்ற; சிறு நீர்க்கட்டு; சிறுநீர்ப் பொய்ப்பு; சிறுநீர் அறவு : சிறு நீரகங்கள் சிறுநீரை சுரக்காமலிருத்தல்.
anus : குதவாய்; மலவாய்; கழிவாய் : மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது.
anus, imperforate : மலவாய் அடைப்பு.
anxiet neurosis : பதை பாதிப்பு.
anxiety : கவலை; ஏக்கம்; கலக்கம்; பதட்டம் : அச்சவுணர்வு காரணமாக உண்டாகும் கவலை. இது நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகிறது. கடுமையான கவலை சில சமயம் மரணம் விளைவிக்கிறது.
anxiolytics : கவலைக்குறைப்பு மருந்து : கவலையைக் குறைக்கும் மருந்து.
aorta : பெருந்தமனி : இதயத்தின் இடது மேல் அறையில் இருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
aortitis : பெருந்தமனி வீக்கம்; பெருந்தமனி அழற்சி : இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாயில் ஏற்படும் வீக்கம்.
apathetic : ஈடுபாடில்ல.
apathy : உணர்ச்சியின்மை; உணர்விழப்பு; உணர்வற்ற; ஈடுபாடின்மை : இயல்புக்கு மீறி அக்கறையின்றி இருத்தல்; செயலற்ற தன்மை; பாராமுகமாக இருத்தல்.
apepsia : வயிற்றுமந்தம்; செறிமானமின்மை; செமிப்புக் குறை : செமிக்கும் ஆற்றல் குறைவாக இருத்தல்.
aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து.
aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து.
aperitif : பசியெழுப்பும் நீர்மம் : பசியூட்டும் மதுபானம்.
aperistalsis : குடல் முடக்கு வாதம்; அலைவின்மை : குடலில் உணவு சாரம் எளிதில் செல்லுவதற்கிசைவான உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள் இல்லாதிருத்தல்.
APERITIVE : பசியூட்டி :பசியெழுப்பும் பொருள். பசியூட்டும் மதுபானம்.
Apert's syndrome : ஆபெர்ட் நோயியம் : இது ஒரு குடும்பப் பாரம்பரிய நோய். இந்நோயுள்ளவருக்கு கபால எலும்பு நலிவுற்றிருக்கும். வாதத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருக்கும், ஃபிரெஞ்சு குழந்தை நோய் வல்லுநர் ஈஜீன் ஆபெர்ட் என்பவர் அந்த நோயினத்தைக் கண்டுபிடித்தார்.
aperture : துளை : இடைவெளி, நுண்ணோக்கி போன்ற ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடுருவிச் செல்லும் இடையிடம்.
apex : உச்சி; மேல் நுனி; முகடு முனை; கோடி; முடிவிடம்; நுரை யீரல் உச்சி : காரை எலும்புக்கு மேல் 2-3 செ.மீ. உயரம் தாண்டியுள்ள நுரையீரல் பகுதி இதய உச்சி; இதயத்தின் கீழ்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதி, இது இடது கீழறையால் உருவானது.
apexcardiogram : இதயௌச்சி வரைபடம் : இதயஉச்சி வரைவி மூலம் மார்பு அசைவுகளைப் பரிசோதித்தல்.
apexcardiography : இதயௌச்சி வரைவி: மார்புக்கூடு அசைவுகளால் இதயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உண்டாகும் குறை அலை அதிர்வுத் துடிப்புகளை பதிவு செய்யும் கருவி. -
apgarscore : அப்கார் கணிப்பு : பிறந்த குழந்தையின் பொதுவான நிலைமையைக் கணித்தறிவதற்கு அமெரிக்க மருத்துவ அறிஞர் டாக்டர் விர்ஜினியா அப்கார் வகுத்த ஒரு முறை. இதன்படி, முக்கு வழியாக ஒரு சிறு குழலைச் செலுத்தி இதயத்துடிப்பு விகிதம், சுவாச முயற்சி, தோல் நிறம், தசையின் இயல்பு, அனிச்சை செயல் ஆகியவற்றின் அடிப்படையில் 0,1,2 என்ற கணிப்பு எண்கள் கொடுக்கப்படுகின்றன . 8-10 வரை கணிப்பு எண் இருக்குமாயின், குழந்தை மிகச்சிறந்த நிலையில் இருக்கிறது என்று கருதப்படுகிறது. கணிப்பு எண் 7-க்குக் குறைவாக இருக்குமாயின் குழந்தையின் நிலை கவலைக்குரியது என்று கருதப்படுகிறது.
aphagia : தொண்டையடைப்பு; விழுங்கின்மை : விழுங்குவதற்கு இயலாதிருத்தல்.
aphakia : புரையிலாக் கண்; விழி வில்லையின்மை; ஒளியமின்மை: கண்ணில் ஒளி எளிதில் ஊடுருவும் முகப்புக் குமிழ் இல்லாதிருத்தல். கண்புரையை அகற்றிய பின்பு உள்ள கண்ணின் நிலை.
aphasia : பேச்சின்மை : மூளைக்கோளாறினால் உண்டாகும் பேச்சிழப்பு. இதில் முக்கியமாக உந்து பேச்சின்மை, உணர்வுப் பேச்சின்மை என்று இருவகை உண்டு. பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த இரு வகைக்கோளாறுகளும் அமைந்திருக்கும்.
aphasic : பேச்சின்மை நோய் மருந்து; பேச்சற்றவர் : பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து.
apheresis : இரத்தம் இறக்கல்; இரத்தம் பிரித்தல் : நோயாளியின் இரத்தத்திலிருந்து தேவையற்ற இரத்தப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் முறை.
aphonia : குரலின்மை; பேச்சொலி யின்மை : நரம்புக் கோளாறினால் பேச்சாற்றலை இழத்தல்.
aphonic aphonous : வாய் பேசாத. aphrasia : பேசஇயலாமை : பேச்சின்மை.
aphrodisiac : இணை விழைச்சுத்தூண்டு மருந்து; பாலுணர்வு ஊக்கி; பாலுணர்வூட்டி; பாலுணர்வு ஊக்கி; பாலுணர்வூட்டி; காமமூட்டி; காமக் கிளரி : சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டுகிற பொருள் அல்லது மருந்து. பாலுணர்வு வேட்கைகளை தூண்டுகிற பொருள்; பாலுறவு கொள்ளும் நேரத்தை நீட்டிக்க உதவும் மருந்து.
aphtha : கொப்புளம் : வாயின் உட்பகுதியை முடியிருக்கும் சளிச் சவ்வு வழியாக, சில நஞ்சுடைய அல்லது எரிச்சலூட்டும் பொருளிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருளினால் வாயில் உண்டாகும் கொப்புளம்.
aphthae : கொப்புளங்கள்; வாய்க் கொப்புளம் : தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள்.
aphthosis : வாய்ப்புண் : வாயில் புண் ஏற்படுத்தும் நோய் எது வானாலும்.
aphthous stomatitis : வாய்ச் சிறுபுண் : வாயின் உட்புறத்தில் உண்டாகின்ற வலியுடன் கூடிய சிறுபுண்கள்.
apthovirus : ஆப்தோவைரஸ் : பிக்கோர்னா விரிடியே எனும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை வைரஸ். இது காலிலும் வாயிலும் நோய்களை ஏற்படுத்தும்.
aphylaxis : நோய்க்காப்பின்மை; நோய்த்தடுப்பின்மை : நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வழி இல்லாத நிலை.
API : இந்திய மருத்துவக் கழகம்.
apical : உச்சியில்; உச்சியான : ஒரு பொருளின் உச்சி : உடல் உறுப்பு உச்சிப்பகுதி : உச்சித் துடிப்பு : இதயத்தின் கீழ் முனையில் வெளிப்பக்கமாகத் தோன்றும் இதயத் துடிப்பு. இதை வெளியிலிருந்து காணலாம்; உள்ளங்கையை வைத்து உணரலாம். நடு நெஞ்செறிப் பிலிருந்து 4 செ.மீ. தூரத்திலும் இது இடைக் காரை எலும்பிலிருந்து வரையப்பட்ட நேர்க்கோட்டிலிருந்து 1.5 செ.மீ. வலது பக்கமாகவும் இடது பக்க மார்பில் ஐந்தாவது விலா இடைவெளியில் உள்ளங்கையை வைத்து இத்துடிப்பை நன்கு உணரலாம்.
apicoectomy : பல் நுனித் துண்டிப்பு : பல் வேரின் மேல் நுனியைத் துண்டித்து எடுத்தல்.
apicitis : உச்சியழற்சி; நுனியழற்சி; உறுப்புகளின் உச்சியழற்சி; முனை யழற்சி : நுரையீரலின் உச்சிப்பகுதி அல்லது பல்லின் வேர்ப் பகுதி அழற்சியுறல். apicoectomy : உச்சி அகற்றல்; உச்சி நீக்கல்; உச்சி வெட்டல் : பல்லின் உச்சிப்பகுதியை வெட்டி எடுத்தல்.
apicolysis : உச்சிமுடக்கம்; உச்சிச் சுருக்கம் : நுரையீரலின் உச்சிப்பகுதி துவண்டு விடுதல், செயல் முடங்கி விடுதல்.
aplacental : கொப்பூழ்க் கொடியற்ற.
aplasia : திசுவளர்ச்சிக் குறைபாடு; வளர்ச்சிக்குறை; வளர்வின்மை : திசுக்கள் முழுமையாக வளராதிருத்தல் அல்லது அறவே வளராதிருத்தல்,
aplastic : புதுத்தசை வளர்ச்சியின்மை; வளர்வில்லாத : புதிதாகத் திசு வளர்ச்சி ஏற்பட இயலாதிருத்தல்; கட்டமைப்பு அல்லது வடிவம் இல்லாதிருத்தல்.
apneusis : மூச்சிழுப்புத் திணறல் : உள்மூச்சு வாங்குதலில் சிரமம் தோன்றுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுதல்.
apnoea : மூச்சு நிற்றல்; மூச்சின்மை : மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போதல், தேவையான கார்பன்டை-ஆக்சைடு இல்லாதிருத்தல், சுவாச மையத்தில் துாண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.
apo : அப்போ : 'வெவ்வேறாகப் பிரிந்திருக்கின்ற' எனும் பொருள் தரும் ஒர் இணைப்புச் சொல். (எ.கா.) சூல் இணையாத சூலகம் வேறாக உடைய.
apocrine : பிறச்சுரப்பிகள் : சுருண்டு உருண்டு திரண்டிருக்கும் உடல் புறச்சுரப்பிகள் (எ.கா.) வியர்வைச் சுரப்பிகள்.
apocrine glands : வியர்வைச் சுரப்பிகள்; புறச்சுரப்பிகள் : அக்குள். பிறப்பு உறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம்.
apod : கால் இல்லா உயிரினம் : கால் அல்லது வயிற்றடிச் செதிள்கள் இல்லாத உயிரினம்.
apodia : காலின்மை; அடிக்காலின்மை; பாதமின்மை : பிறவியிலேயே கால்கள் இல்லாதிருத்தல்.
apoenzyme : அப்போநொதிப்பி: ஒரு நொதியின் புரதக்கூறு.
apoferritin : அப்போபெரிட்டின் : சிறுகுடல் சுவர்த்தசைகள் காணப்படும் புரதப்பொருள். இது இரும்புத் தாதுச் சத்துடன் இணைந்து பெரிட்டின் எனும் சத்துப்பொருளாக மாறும்.
apolar : முனையற்ற; துருவமற்ற : முனைகள் இல்லாத நிலை.
apolipoproteins : அப்போலிப்போபுரோட்டின்; அப்போ கொழுப்புப் புரதம் : கொழுப்புப் புரதங்களுள் காணப்படும் புரத வகை. அப்போ A-I, அப்போ A-II அளவுகள் குறைந்தாலோ அப்போ -B அளவு அதிகரித்தாலோ இதயத்தமனி நாளநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அப்போ -A மிகை அடர்த்திக் கொழுப்புப் புரதத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. அப்போ -B குறை அடர்த்திக் கொழுப்புப்புரதத்தின் முக்கியப் புரதப்பொருளாகத் திகழ்கிறது அப்போ -A கல்லீரலில் உற்பத்தியாகிறது.
apomorphine : வாந்தி மருந்து : ஊசி மூலம் செலுத்தும்போது வாந்தி வரக்கூடிய கடுமையான மருந்து. நஞ்சுண்டவர்களின் வயிற்றிலிருந்து நஞ்சை வெளிக்கொணர்வதற்கு இது பயன் படுத்தப்படுகிறது.
aponeurorrhaphy : தசைநாண்படல இணைப்பு : தசைநாண் படலத்தைத் தையல் மூலம் இணைப்பது.
aponeurosis : திசுப்பட்டை; தசைநாண்படலம்; தசைச்சவ்வு : மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது.
aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு அழற்சி : திசுப் பட்டையின் அழற்சி.
apophysis : எலும்புப் புடைப்பு : எலும்புப் புறவளர்ச்சியுற்று நீட்டிக் கொண்டிருத்தல் அல்லது புடைத்திருத்தல்.
apophysitis : எலும்புப் புடைப்பு அழற்சி : எலும்புப் புறவளர்ச்சியுற்று அழற்சி அடைதல்.
apolectic : apoplectical : வலிப்பு நோய்க்குரிய; வலிப்பு நோய் விளைவிக்கும்; வலிப்பு நோயுள்ள; வலிப்புக்குள்ளாகும் தன்மையுடைய.
apoplexy : வலிப்புநோய் (சன்னி); உறுப்பின் உட்கசிவு நினைவிழப்பு வீழ்ச்சி; அதிர் நிகழ்வு : மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும் பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு.
apoprotein : அப்போபுரதம் : கொழுப்புப் புரதத்தில் உள்ள புரத மூலக்கூறு.
apoptosis : அப்போப்டோசிஸ் : அணுக்களின் அழிவை நடை முறைப்படுத்துதல் அணுவின் DNA சிதைவதாலும் குரோமேட்டின் சுருங்கப்படுவதாலும் இவ்வாறு அணுக்கள் அழிக்கப்படுகின்றன.
aposita : உணவு வெறுப்பு : உணவு உண்பதில் வெறுப்பு உண்டாக்கும் நோய். apothecary : மருந்து விற்பவர்; மருந்து கலப்போர்; மருந்து கலவை செய்வோர்.
apparatus : ஆய்வுக் கருவி; ஆய்கருவி; ஆய்கலம்; செய்கருவி; கருவிகலம் : பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம்.
appearance : தோற்றம்.
appendage : துணையுறுப்பு; தொடர்பிணைவு : முதன்மையாக உள்உடலுறுப்பின் பணிகளுக்கு உதவுவதற்காக உள்ள ஒரு துணையுறுப்பு. -
appendectomy : குடல்முளை அறுவை மருத்துவம் : குடல் வாலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
appendecitis : குடல்வால் அழற்சி; குடல்முளை அழற்சி :குடல் முளை வீக்கம் அல்லது அழற்சி.
appendicostomy : குடல்வால் துளை வெட்டல் : குடல்வாலில் துளையிட்டு சிறுகுடல் அறுவை மருத்துவம் மேற்கொள்ளுதல்.
appendicular mass : குடல்வால் கட்டி : வலது இடுப்பெலும்புக் குழிவில் தோன்றும் வீக்கம். இது குடல்வால் அழற்சியுற்று வீங்கிக் கொள்வதால் உண்டாகின்றது. குடல்வாலில் சீழ்சேர்ந்து காய்ச்சலும், வயிற்று வலியும், வாந்தியும் ஏற்படும். அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் குடல்வால் உருண்டு திரண்டு கடினமாகி இருப்பது உணரப்படும்.
appendix : குடல்வால்; குடல் முளை : குடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றும் சிறுமுளை. இது 'குடல்முளை' என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும், 50.8 முதல் 152.4மி.மீ வரை நீளமுடையதாகவும் இருக்கும்.
apperception : புலன் உணர்வு : பொறியுணர்வை வாங்கிப் புலனுணர்வாக்கும் இயல்பு.
appestat : பசிமையம்; மூளைப் பசிமையம் : பசியைத் தூண்டு வதற்கும் அடக்குவதற்கும் உதவுகின்ற மூளை மையம்.
appetite : பசியார்வம்; நுகர்ச்சி வேட்கை : உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளும் இயற்கை விருப்பம்.
appetizer : பசியார்வமூட்டி பசியூக்கி.
applenometer : விழி அழுத்த அளவி : உள் அழுத்தத்தை அளக்க உதவும் அழுத்தமானி.
apple : ஆப்பிள் பழம்.
appliance : துணைக்கருவி பயன்படு சாதனம் : செயற்கைக் கால் பயன்பாட்டிற்கு உதவும் ஒரு துணைக் கருவி. செயற்கைப் பற்கள் தயாரிக்க உதவும் துணைக் கருவி.
apply : பயன்படுத்து; அருகே வை; பொருத்து நன்கு கவனி; வேண்டுகோள் விடு.
apposition : வலுவூட்டல்; வலு ஏற்றல்; அருகமைவு : ஒரே தொடர்பு இருக்குமாறு வைத்தல்; நேரியைவு; உடைந்த எலும்புகளை ஒன்று போலிருக்குமாறு சரிபடுத்துதல். தனித்தனிப் பொருள்களை அருகருகே அமையு மாறு வரிசைப்படுத்துதல்.
apprehension : அச்சம்;அச்ச உணர்வு; உணர்வு மிகைப்பு; எதிர்பார்ப்பு அச்ச உணர்வு.
approved name : அங்கோரம் பெற்ற பெயர்; ஒப்புக் கொள்ளப்பட்ட பெயர் : மருந்தியல் முறை நூலில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட மருந்துப் பெயர்கள்.
approximation : தோராயம்.
APPT : ஆக்டிவேட்டட் பார்சியல் திரோம்போபிளாஸ்டின்.
apraxia : கைமுடக்கம்; செயல்திறன் குறை : மூளைக்கோளாறு காரணமாகப் பொருள்களைத் திறம்படக் கையாள்வதற்கு இயலாதிருத்தல்.
apron : மேலங்கி; மேலாடை; மேலுடை : அறுவை மருத்துவம், நோய்த் தணிப்பு ஆய்வு, மருத்துவச் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளும்போது மருத்துவரும் மருத்துவ உதவியாளர்களும் அணிந்துகொள்ளும் மேலாடை, இது உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன் புறத்தில் அணியப்படும் முரண்டுத் துணி அல்லது தோல்.
ஈய மேலாடை : ஊடுகதிர்ப் படம் எடுப்பவர் கதிரியக்கக் கதிர்கள் தன்னுடைய உடலில் புகுவதைத் தடுக்க ஈயத் தகடுகள் கொண்ட தோலாடையை உடலின் மேல் போர்த்திக் கொள்வார்.
aprosexia : எண்ணங்களை ஒரு முகப்படுத்த இயலாமை.
aptin : ஆப்டின் : ஆல்பிரினால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aptitude : நாட்டம் : பணிகளைச் செய்வதில் இயல்பான உளவியல் அல்லது உடலியல் நாட்டம் மற்றும் திறம்பாடு. aptyalism : உமிழ்நீர்நொதிச் சுரப்புக் குறைவு; உமிழ்நீர்ச்சுரப்புக் குறைவு; உமிழ்நீர்ச்சுரப்பின்மை : உமிழ்நீர்ச்சுரப்பும் அதிலுள்ள 'டயலின்' நொதியும் குறைவாக சுரப்பது அல்லது அறவே சுரக்காத நிலைமை.
apyogenic : சீழற்ற; சீழின்மை : சீழ் இல்லாத, சீழ் காரணமற்ற, சீழால் உண்டாகாத.
apyretic : காய்ச்சலின்மை; உடல் வெப்ப மிகைப்பு இன்மை : காய்ச்சல் அற்ற.
apyrexia : காய்ச்சல் இன்மை : காய்ச்சல் நின்றிருத்தல்.
apyrogen : வாலை வடிநீர் : நோய் நுண்மங்கள் நீக்கப்பட்ட வாலை வடித்த நீர். இது கண்ணாடிக் குமிழ்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதில் காய்ச்சல் உண்டு பண்ணுகிற நோய் நுண்மங்கள் இரா. ஊசி மூலம் செலுத்தக்கூடிய தூள் வடிவிலுள்ள மருந்துகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
aqua : நீர் : நீரியல் பொருள்; நீர்மம், கரைசல்.
aquaphobia : நீர் பயம்; தண்ணீர் பயம் : தண்ணிரைக் கண்டாலே பயம். வெறிநாய்க்கடி நோயுள்ளவருக்கு இம்மாதிரியான பயம் ஏற்படும்.
aquatic : நீர்சார்ந்த.
aqueduct : சிறுகுழாய் நீர்நாளம் : பாலுண்ணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறு குழாய்.
aqueous humour : முங்கண்நீர்; விழி முன்னறை நீர்மம்; ஒளிய நீர் : விழிமுன் தோலுக்கும் விழிச்சில்லுக்கும் இடையிலுள்ள நீர்.
aqueous : நீர்ம.
aquosity : நீர்த்தன்மை.
arachidic : அராக்கிடிக் அமிலம்.
arachidonic : அராக்கிடோனிக் அமிலம்.
arachidonic acid : அராக்கிடோனிக் அமிலம் : இன்றியமையாத கொழுப்பு அமிலங்களில் ஒன்று. மனிதர், விலங்கு நுரையீரல் மற்றும் உறுப்புக் கொழுப்புகளில் சிறிதளவு உள்ளது. இது வளர்ச்சியை உண்டு பண்ணும் காரணி.
arachis oil : கடலை எண்ணெய் : நிலக்கடலையிலிருந்து எடுக்கப்படும் ஆலிவ் எண்ணெய் போன்றது.
arachnide : அராக்கினைட்.
arachnodactyly : சிலந்தி விரல் நோய் : சிலந்தி போன்ற விரல்களில் உண்டாகும் ஒரு பிறவி நோய்.
arachnoid : சிலந்தி சவ்வு; சிலந்தி வலையுரு : (நூலாம் படை) போன்ற நீர் மயிர் சவ்வு. இது மூளையையும் முதுகுத் தண்டினையும் மூடியிருக்கும்.
aramine : ஆராமின் : 'மெட்டாராமினால்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
arbor : கிளையுரு : கிளைபோல் உருவெடுத்தல்.
arborization : மரத்தோற்ற நரம்பிழை; கிளை விரிவு : மரத்தைப் போன்ற தோற்றமுடைய நரம்பிழை அமைப்பு.
arborvitae : சிறுமூளை வரியம்.
arboviruses : கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள்; ஆர்போ அதி நுண்ணுயிர் : ஒட்டுத்தோடுடைய இணைப்புடன் உயிரினங்களினால் பரவும் RNA என்ற நோய்க்கிருமிகள். இதில் கொசுவினால் பரவும் நோய்க்கிருமிகளும் அடங்கும். மஞ்சள் காய்ச்சல், முட்டுகளில் கடும் நோவு உண்டு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் (டெங்கு காய்ச்சல்) போன்ற நோய்கள் இவற்றினால் பரவுகின்றன.
arc : வளைவு.
arcade : வளைவுத் தொகுதி.
arch : வளைவு.
arcuate : வில் வடிவ.
arcuation : வளைதல்; வளைவு.
arcus :வளைவு.
arcus senilis : மூப்புப்படலம் : வயது ஏற ஏற கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
area : பரப்பு; பகுதி.
arenavirus : அரினாவைரஸ்.
areola : மார்பு முகட்டு வட்டம்; முலைக்காம்புத் தோல்; குறு பரப்பு : மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம்.
areola. mammary : நகில் வளையம்; சுரைவளையம்.
azeolar : சுரைவளைய.
artomad , ஆர்ஃபோனாட் : 'டிரிமெட்டாஃபான்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
arginase : ஆர்கினேஸ் : நுரையீரல், சிறுநீரகம், மண்ணிரல், ஆகியவற்றில் காணப்படும் ஒரு வகை இயக்கு நீர் (என்சைம்). இது ஆர்கினைன் என்ற பொருளை ஆர்னித்தைன், மூத்திரை ஆகிய பொருள்களாகப் பிரிக்கிறது.
arginine : ஆர்கினைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. கடுமையான நுரையீரல் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.
arginino-succinuria : ஆர்கினினோ-சக்சினுாரியா : சிறுநீரில் ஆர்கினைன், சக்சினிக் அமிலம் ஆகியவை அடங்கியிருத்தல். இது மனக்கோளாறுகளுக்குக் காரணமாகிறது.
argon : ஆர்கான்(மடியம்) :காற்று மண்டலத்திலுள்ள அணு எடை 18 உடைய, இயக்கத் திறனற்ற ஒரு வாயு.
argyll robartson pupil : ஒளியுணர்விலாக் கண்மணி : கண்ணின் பார்வை ஒளியுணர்வு இல்லாதிருத்தல். நரம்புமேகப் புண்ணில் இந்நிலை உண்டாகிறது. நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய் உண்டாகும் போதும் நீரிழிவு நோயின் போதும் இந்நோய் ஏற்படலாம்.
argyria : வெள்ளி நச்சு.
argyrophil : வெள்ளி ஈர்ப்பி; வெள்ளி உப்பு ஈர்ப்பி : உப்புகளை ஈர்க்கும் தன்மையுள்ள.
ariboflavinosis : வைட்டமின் B குறைபாடு : 'ரிபோஃப்ளேவின்' போன்ற வைட்டமின் B கலவைக் கூறுகள் இல்லாமையால் ஏற்படும் குறைபாட்டு நிலை.
arief : ஆரியஃப் : ஃபுளுஃபினேம் அமிலத்தின் வணிகப் பெயர்.
arm : கை : 1. மேற்கை : தோள் பட்டைக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி.
armhit : அக்குள்.
arnold chiari malformation : ஆர்னால்ட் சியாரி மூளைக்கோளாறு : மூளையின் ஆதாரத்தைப் பாதிக்கக்கூடிய பல கோளாறுகளின் ஒரு தொகுதி. தலையில் நீர் தங்கி மூளைநீர்க்கோவை ஏற்படும்போது இவை பெரும்பாலும் உண்டாகின்றன.
aroma : நறுமணம்.
aromatic : மணப்பண்பு : இனிய மணமுடைய, விரும்பும் மண முள்ள.
arrector : நிமிர்த்தி; உயர்த்தி, நிமிரும்; உயரும் : உயர்த்தும் தன்மையுள்ள நிமிர்த்தும் தன்மையுள்ள.
arrest : தடு; தடை.
arrest cardiac : இதயத் தடை.
arrheno : ஆண் : 'ஆண்' என்று பொருள் தரும் இணைப்புச் சொல்.
arrhythmia : பிறழ்வு இதயத்துடிப்பு; லயமின்மை : இதயத் துடிப்பு இயல்பான கதியிலிருந்து பிறழ்ந்திருத்தல்.
arsenic : ஆர்செனிக் உள்ளியம் : அரிதார நஞ்சு, சவ்வீரம் உடல்நலியச் செய்யும் இரத்தச்சோகை, இரைப்பை-குடல் கோளாறு, நரம்புக் கோளாறு போன்ற நோய்களை இந்தக் கடும் நஞ்சு உண்டாக்குகிறது. artane : ஆர்ட்டான் : 'பென்செக்சால்' என்ற மருந்தின் வணிகப்பெயர்.
artefact : செயற்கைத் திசு மாற்றம் : திசுவின் கட்டமைப்பில் செயற்கையான மாற்றத்தை உண்டாக்குதல்.
arteralgia : தமனி நோவு; தமனி வலி : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் வலி.
arteria : தமனி; தமனி நாளம் : இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்த நாளம். (விதி விலக்கு) நுரையீரல் தமனி (இது அசுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும்).
arterial : தமனி நாளம் சார்ந்த; தமனி சார்.
arteriectasis : தமனி நாளத் தளர்வு.
arter(o) : தமனி : 'தமனி' எனும் பொருள்படும் இணைப்புச் சொல்.
arteriogram : தமனி வரைவு; தமனி வரைபடம்; தமனி நாள வரைவு.
arteriography : தமனி இயக்க முறை; தமனி வரைவியல்; தமனி படவியல் : ஊடுருவக்கூடிய ஒரு திரவத்தை ஊசி மூலம் செலுத்தி தமனி மண்டலம் இயங்குவதைக் காட்டுதல்.
arteriolor : குறுந்தமனிய.
arteriole : நுண்தமனி; நுண்நாடி; குறுநாடி; குருதிநாடி; குறுந்தமனி : ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும்.
arteriolonecrosis : நுண் தமனி மரித்தல்; நுண்தமனித் திசு இறப்பு : நுண் தமனி நாளம் இறந்து விடுதல்.
arteriolopathy : நுண்தமனிநாள நோய் : நுண்தமனி நாளத்தில் ஏற்படும் நோய் வகை.
arteriopathy : தமனி நோய்; தமனி நலிவு : ஏதேனுமொரு தமனியில் உண்டாகும் நோய்.
arterioplasty : தமனி அறுவை மருத்துவம்; தமனிச் சீரமைப்பு; தமனி அமைப்பு : ஒரு தமனியில் ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
arteriorrhaphy : தமனி இணைப்பு : தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல். arteriorrhexis : தமனி வெடிப்பு : தமனிநாளம் வெடித்து விடுதல்; தமனி நாளம் சிதைவடைதல்.
arteriosclerosis : தமனி இறுக்கம்; நாடி இறுக்கம்; தமனித் தடிப்பு : முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல். குருதிக் குழாயின் இடை மென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது.
arterioscloratic : தமனியிறுக்க.
arteriostenosis : தமனிக் குறுக்கம்; தமனிநாளக் குறுக்கம் : தமனி நாளம் உள்விட்டத்தில் கருங்குதல்.
arteriotony : குருதி வடிப்பு; தமனித் திறப்பு : தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல்.
arteriovenous : தமனி நரம்பு; தமனிச் சிரைக்குரிய; தமனிச் சிரை சார் : ஒரு தமனியும், ஒரு நரம்பும் தொடர்புடைய எதுவும்.
arteritis : நாடி அழற்சி; தமனி அழற்சி; தமனியழல் : இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிருதுவாகி அதில் இரத்தம் கட்டிக் கொள்ளக்கூடும்.
artery : தமனி நாடி; குருதிக் குழாய்; பாய் குழல் : இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் பகுதியும், நெகிழ்வுடைய இழைமங்களும், இதயத்திலிருந்து இரத்தம் அழுத்தப்பட்டு வெளியேற்றப்படும்போது விரிவடைவதற்கு அனுமதிக்கிறது. புறத்தேயுள்ள திகப்படலம், தமனி அளவுக்கு மீறி விரிவடைந்து விடாமல் தடுக்கிறது. இதயத்தின் அருகில் இதன் குழாய் பெரிதாக இருக்கும்; பின்னர் படிப்படியாகச் சிறுத்துச் செல்லும்
artery coronary : இதய தமனி :
arthralgia : மூட்டுவலி : ஒரு முட்டில் வீக்கமில்லாமல், ஏற்படும் வலி.
arthritic : கீல்வாத நோயாளி.
arthri tide : மூட்டு வீக்கக் கொப்புளம் : சிறுமூட்டுகளில் ஏற்படும் வாதநோய் விளைவால் கட்டுள்ள தோலில் கொப்புளம் தோன்றாது.
arthritis : மூட்டு வீக்கம்; மூட்டு அழற்சி; மூட்டழல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் காரணங்களுக்கேற்ப சிகிச்சை முறையும் வேறுபடுகிறது.
arthrocentesis : மூட்டு நீர்நீக்கல்; மூட்டு இடைநீர் நீக்கல்; மூட்டு இடைநீர் உறிஞ்சல் : மூட்டில் உருவாகும் திரவத்தை ஊசிக் குழல் கொண்டு உறிஞ்சி எடுக்கும் முறை.
arthrochondritis : மூட்டுக் குருத்தெலும்பு அழற்சி: எலும்பு முட்டில் உள்ள குருத்தெலும்பு அழற்சி அடைதல்.
arthroclasis : மூட்டிணைப்புக் குலைவு : மூட்டு உறுப்புகளை பலவிதங்களில் அசைப்பதற்கு உதவும் முட்டுக் குழியினுள் ஒட்டிணைவு சீர்குலைந்து போதல்.
arthrodesis : மூட்டிறுக்கம்; மூட்டு நீக்கி : அறுவை மருத்துவம் மூலமாக ஒரு மூட்டினை இறுக்க மாக்குதல்.
arthrodia : மூட்டிணைப்பு : சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு.
arthrodysplasia : மூட்டு ஊனம் : இது ஒரு பரம்பரை நோய். எலும்பு மூட்டுகள் சிதைவடைந்து ஊனமுற்றிருக்கும்.
arthroempyesis : சீழ்மூட்டு; சீழ்மூட்டழற்சி : எலும்பு முட்டில் சீழ் சேருதல்.
arthrography : ம்ஊட்டிணைப்புப் படம்; மூட்டு வரைவியல் : ஒரு மூட்டின் உள் கட்டமைப்பினைக் கண்டறிவதற்காக ஊடு கதிர்ப் படத்தின் மூலம் ஆராய்தல்.
arthrogryposis : மூட்டு மடக்கம்; மூட்டு முடக்கம் : ஒரு எலும்பு மூட்டு அசைய இயலாமல் முடங்கிவிடுவது.
arthrology : மூட்டு இயல் : மூட்டுகளின் கட்டமைப்பு, செயல் முறை, அவற்றில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.
arthroneuralgia : மூட்டு நரம்பு வலி; மூட்டு வலி : ஒரு மூட்டில் அல்லது அதனைச் சுற்றி வலி ஏற்படுதல்.
arthro-ophthalmopathy : மூட்டு-கண்நோய் : எலும்பு மற்றும் கண்களை ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடிய நோய்.
arthropathy : மூட்டு நோய்(சூலை); மூட்டு மெலிவு நோய் : முட்டில் ஏற்படும் ஒரு நோய். கடுமையான வயிற்றுப் போக்கினால் (பேதி) உண்டாகிறது.
arthroplasty : மூட்டு அறுவை மருத்துவம்; மூட்டுச் சீரமைப்பு : மூட்டு அமைப்பு : ஒரு முட்டினை அறுவை மருத்துவம் மூலம் சீர்படுத்துதல்.
arthropoda : கணுக்காலிகள்.
arthropyosis :சீழ் முட்டுக்குழி; மூட்டுக் குழிச்சீழ் : எலும்பு முட்டுக் குழியில் சீழ் சேருதல்.
arthroscope : மூட்டுக் குழிப்படக் கருவி; மூட்டு அகநோக்கி; மூட்டு உள்காட்டி : ஒரு முட்டின் குழியின் உட்பகுதியைப் படம் எடுப்பதற்கான ஒரு கருவி.
arthroscopy : மூட்டுக் குழிப்பட மெடுத்தல்; மூட்டு உள் காண்டல் : ஒரு முட்டின் குழியின் உட் பகுதியைப் படமாக எடுத்தல்.
arthrosis : மூட்டிணைப்பு; நலிவு; எலும்பு இணைப்பு; மூட்டு நோய் : ஒரு மூட்டிணைப்பு படிப் படியாக நலிதல்.
arthrostomy : மூட்டுத் துளை; மூட்டு வெட்டு; மூட்டுத் திறப்பு : ஒரு முட்டினுள் துளையிடுதல்.
arthrosynovitis : எலும்பு மூட்டுறை அழற்சி : எலும்பு முட்டை முடியுள்ள மேலுறையில் அழற்சி உண்டாவது.
articular : மூட்டுக்குரிய; மூட்டுச் சார்ந்த; மூட்டு முனை : ஒரு முட்டு அல்லது முட்டிணைப்பு தொடர்பான முக்கியமாகக் குருத்தெலும்பு தொடர்பான.
articulate : மூட்டுதல், மூட்டல் : 1. இரு எலும்புகள், அசைவுக்கு வழிவிட்டு இணைதல், 2. தெளிவாகப் பேசக்கூடிய, 3. (செயற்கைப் பல் இணைப்பைத் தயாரிக்கும் போதும்) பற்களைச் சரியாகப் பொருத்துதல்.
articulation : மூட்டிணைப்பு; மூட்டு அமைப்பு; மூட்டுப் பொருத்தம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எலும்புகளின் மூட்டு இணைப்பு. -
articulator : மூட்டிணைப்பி : 1. பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி. செயற்கைப் பற்களைத் தயாரிக்கப் பயன்படும் கருவி. 2.எலும்புகளைக் கோத்து எலும்புக் கூடுகளை உருவாக்குபவர்.
artifact : செயற்கைப் பொருள்; செயற்கைத் துகள்; பொய்ப் பொருள் : 1. ஒரு ஆய்வின்போது ஏற்படும் தடைப்பொருள். உண்மையான பொருள் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொய்ப்பொருள். ஆய்வின் முடிவைக் குழப்பும் பொருள். 2. ஊடு கதிர்ப்படம் எடுக்கும் போது அல்லது துண்திசுக்கூறு இயல் ஆய்வின் போது தொழில் நுட்பக் குறைபாடு காரணமாக உண்டாகின்ற ஒரு பொய்யான பொருள். 3. செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற ஒரு பொருள்.
artificial : செயற்கையான. artificial blood : செயற்கை இரத்தம் : ஆக்சிஜன் வாயுவைக் கொண்டு செல்லக்கூடிய ஒரு திரவம். இது அமெரிக்காவிலும், ஜப்பானிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
artificial insemination : செயற்கைக் கருவூட்டல்; செயற்கை முறை விந்தேற்றல்; விந்துட்டல் : செயற்கை முறையில் கருவுறச் செய்தல்.
artificial kidney : செயற்கைக் சிறுநீரகம் : நோயினால் சிறு நீரகம் செயலிழக்கும்போது, சிறு நீரகத்தின் வேலையைச் செய்வதற்கு உதவும் ஒரு சாதனம்.
artificial limb : செயற்கை உறுப்பு : உடம்பில் செயற்கை உறுப்பு களை இணைத்தல்.
artificial lung : செயற்கை நுரையீரல் : செயற்கைச் சுவாசக் கருவி.
artificial pacemaker : இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி : உடலில் ஒடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவது இதயம், இதயத்தில் மேலறைகள் இரண்டும், கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து இடது கீழறைக்குச் சென்று, அங்கிருந்து அழுத்தப்பட்டு நுரையீரலுக்குச் சென்று, அங்கு ஆக்சிஜனைப் பெற்றுச் சுத்தமடைகிறது. சுத்தமடைந்த இரத்தம் வலது மேலறைக்கு வந்து, அங்கிருந்து வலது கீழறைக்குச் சென்று அங்கிருந்து அழுத்தப்பட்டு மகாதமனி வழியாக உடலின் மற்றப் பகுதிகளுக்கும் செல்கிறது. மேலறைகளும், கீழறைகளும் சீரான ஒரே வேகத்தில் இயங்கும்போது இரத்த ஒட்டம் சீராக இருக்கும் மேலறைகளும் கீழ் அறைகளும் இயங்கும் வேகமே இதயத் துடிப்பு. இந்த வேகத்தைச் சீர் படுத்த நம் இதயத்தில் இயற்கையாகவே 'சினோட்ரியல் நோய்' என்ற அமைப்பு உள்ளது. நரம்பு உயிரணுக்களாலான இந்தச் சிறிய தரைப் பகுதி, இடது மேலறைச் சுவரில் உள்ளது. இதிலிருந்து எழும் துடிப்பு, மேலறைகளும் கீழறைகளும் ஒரே சீராக இயங்க உதவுகிறது. இது சரியாக வேலை செய்யாத போது, இதயத்தின் இரத்த ஒட்டம் பாதித்து, இந்த கோளாறைச் சரிசெய்ய இதயத் துடிப்பைச் சீராக்கும் இந்தச் செயற்கைக் கருவி பொருத்தப்படுகிறது. இதில், லிதியம் அயோடினாலான மின்கலம் உள்ளது. இதன் எடை 40 கிராம் இருக்கும். மார்பில் இதயம் இருக்கும் பகுதியின்மீது சிறிய அறுவைசெய்து இக்கருவி தசைப் பகுதிக்குள் வைக்கப் படுகிறது. இதிலுள்ள மிக நுண்ணிய கம்பி (வயர்) இதயத் தசைப் பகுதியுடன் இணைக்கப்படுகிறது. இதிலுள்ள மின்கலம் மூலம், கம்பி துண்டுதல் பெற்று இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்களில் நோயாளியின் இதயம் மீண்டும் சீராக இயங்கத் தொடங்கும். அவ்வாறு சீராக இயங்கத் தொடங்கியதும் இக்கருவி தன் பணியை நிறுத்திக் கொள்ளும். மீண்டும் கோளாறு ஏற்பட்டால், இக்கருவி மீண்டும் தானாகவே பணியைத் தொடங்கி விடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரை செயற்படும்.
aryenoid : அரிநாய்டு : குரல் வளையில் காணப்படும் மிகச் சிறிய குருத்தெலும்பு இணைகளில் ஒன்று.
arytaenoid; arytenoid : குரல்வளைக் குருத்தெலும்பு; குரல் வளைத் தசை.
arytenoidopexy : குரல்வளைக் குருத்தெலும்பு இணைப்பு : குரல் வளைக் குருத்தெலும்பை அறுவைச் சிகிச்சை மூலம் இணைப்பது.
asbestos : கல்நார்: தீக்கிரையாகாது. ஆடையாக நெய்வதற்குப் பயன்படுகிற நார் அமைவுடைய கணிப்பொருள் வகை.
asbestosis : கல்நார் நோய்; கல் நார் படிவ நோய் : கல்நார் தூசி யையும் இழைமத்தையும் சுவாசிப்பதால் ஏற்படும் ஒரு வகைச் சுவாசக் கோளாறு.
ascariasis : குடற்புழு நோய்; உருளைப்புழு நோய் : சிறு குடலில் குடற்புழுக்கள் பெருகுவதால் உண்டாகும் நோய். உருண்டைப் புழுக்கள் பெருகினால், இந்நோய் இரைப்பை, ஈரல்குலை துரையீரல் ஆகிய வற்றுக்கும் பரவுகிறது.
ascaricide : குடற்புழு ஒழிப்பான் : சிறுகுடற்புழுக்களை ஒழிக்கும் ஒருவகை மருந்து.
ascarid : சிறு குடற்புழு.
ascarides : நீளுருள் புழு : சிறு குடற்புழு வகையைச் சேர்ந்த நீண்டு உருண்ட புழுக்கள், உருண்டைப் புழுக்கள், நாடாப் புழுக்கள் ஆகியனவும் இவ்வகையைச் சேர்ந்தவை.
ascaris : சிறுகுடற்புழு குடலிலுள்ள வளையப் புழுக்கள் போன்ற புழுக்கள்.
ascending : ஏறுமுக.
aschoff's nodules : அஷாஃப் கரணை; அஷாஃப் நுண்கணு : கீல்வாத நோயின்போது நெஞ்சுப் பையின் தசைப்பகுதியில் ஏற்படும் கரணைகள். ascites : மகோதரம் : அகட்டு நீர்க்கோவை.
ascorbic acid : ஆஸ்கார்பிக் அமிலம் : இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்போது இது அழிந்து விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் இது அழிந்துபடுகிறது. இந்த ஊட்டச் சத்துக் குறை வினால் எதிர்வீச்சு நோய் (ஸ்கர்வி) உண்டாகிறது. இரத்த சோகையை நீக்குவதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் இந்த ஊட்டச்சத்து கொடுக்கப் படுகிறது.
ascomycetes : அஸ்கோமை சீட்ஸ் : காளான் குடும்பத்தைச் சேர்ந்தது.
ascorbic : அஸ்கார்பிக் அமிலம் : (வைட்டமின் சி) (ஸ்கர்வி நோயை) மூக்கு இரத்தக் கசிவு நோயைத் தடுக்கும் உயிர்ச்சத்து.
asomia : பேச இயலாமை; பேச்சுணர்வின்மை : பேச இயலாததோடு பேசுவதைப் புரிந்து கொள்ளவும் இயலாத நிலை.
asepsis : நச்சு நுண்மமின்மை; சீழ் தவிர்ப்பு; சீழின்மை : கெடுபுண் உண்டாக்குகிற அல்லது தசையழுகலை உண்டாக்குகிற நோய்க்கிருமி இல்லாதிருத்தல்.
aseptic : சீழற்ற : தசையழுகல் தடைப்பொருள்.
aseptic technique : தசையழுகல் தடைப் பொருள்; சீழற்ற : தசை யழுகல் நோயைத் தடுப்பதற்காக உடலுக்குள் செலுத்தப்படும் தசையழுகல் தடைப் பொருள். செலுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
asepticism : தசையழுகல் தடை முறை : தசையழுகல் நோயைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை.
asepticiza : தசையழுகலை தடை செய்.
aserbine : அசர்பைன்; தீப்புண் : நாள அழற்சி, நோவுதராத சீழ்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில், சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன.
asexual : அல்புணர்.
ash : நீறு; சாம்பல்; பால் வேறுபாடற்ற.
asian paralysis syndrome : ஆசியப் பக்கவாத நோயியம் : குழந்தைகளுக்குத் திடீரென ஏற்படும் பக்கவாத நோய் இரண்டு பக்கக்கால்களும் அல்லது கைகளும் ஒரே நேரத்தில் வாதமடைந்து விடும் நிலை இயங்கு நரம்பிழை வேர்கள் சிதைவதால் இந்நோய் ஏற்படுகிறது. கை, கால்களை அசைக்க இயலாது என்றாலும் தொடு உணர்ச்சி இருக்கும்.
asialorrhea : உமிழ்நீர்க்குறைச் சுரப்பி: உமிழ்நீர்ச்சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் குறைவாகச் சுரத்தல்.
asilone : அசிலோன் : வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான பாலிமெத்தில் சிலோக்சான், அலுமினியம் ஹைட்ராக்சைடு அடங்கிய ஒரு மாத்திரை.
asparaginase : அஸ்பராஜினேஸ்: அஸ்பராஜின்னை அஸ்பார்டிக் அமிலம் மற்றும் அமோனியாவாக மாற்றுவதற்கு வினைபுரியும் நொதி.
எஸ்செரிக்சியா கோலி கிருமியில் காணப்படும் ஒரு நொதி. இது இரத்தப்புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
asparagine : அஸ்பராஜின் : புரதப் பொருளில் காணப்படும் ஒரு அமினோ அமிலம். இது உடலுக்கு மிக அவசியமாகத் தேவைப் படுவதில்லை.
aspartate : அஸ்பார்ட்டேட் : அஸ்பார்ட்டிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உப்பு.
அஸ்பார்ட்டேட் அமினோ டிரான்ஸ் ஃபேரஸ் : இது ஒரு நொதி. குளுட்டமிக் அமிலத்திலிருந்து அமின் கூறுகளை ஆக்சலோ அசிட்டிக் அமிலத்திற்கு மாற்றும் பண்புடைய ஒரு நொதி,
aspartic : அஸ்பார்ட்டிக் அமிலம் : அமினோ சக்சீனிக் அமிலம். புரதப் பொருளில் காணப்படும் ஒரு வகை அமினோ அமிலம்.
aspect : நோக்கு; பார்வை; தோற்றம்; பார்க்கும் கோணம்; பக்கத் தோற்றம்.
aspergilloma : அஸ்பெர்ஜில்லோமா; பூஞ்சைக் காளான் நோய் : நுரையீரலைத் தாக்கும் காளான் நோய்.
aspergiliosis : அஸ்பெர்ஜில்லோசிஸ்; பூஞ்சைக் காளான் இனம்.
aspergillus : பூசினை; பூசனம்; பூஞ்சக் காளான் : பூஞ்சைக் காளான் இனம். இதில் சில வகைகள், நோய் உண்டாக்கக் கூடியவை.
aspermia : விந்துக் குறைபாடு; விந்தணுவின்மை; விந்துயிரின்மை; விந்திலா : விந்து சுரத்தல் அல்லது வெளிப்படுதல் இல்லாதிருத்தல்.
asphyxia : மூச்சு திணறல்; மூச்சுத் தடை; மூச்சடைப்பு : நாடி நிறுத்தம்; மூச்சுத் தடைபடுதல், நுரையீரல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன்டை-ஆக்சைடு அளவு கூடும் போது இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
asphyxiate : மூச்சுத்திணறச் செய்தல்.
asphyxiation : திணறல்; மூச்சுத்தடை.
asphyxiator : மூச்சுமுட்டச் செய்பவர்.
aspiration : உறிஞ்சியிழுத்தல்; உறிஞ்சல் : உடலில் தங்கியுள்ள திரவங்களை உறிஞ்சி இழுத்தல்.
aspirator : உடல்நீர் உறிஞ்சி; உறிஞ்சி : உடலில் தங்கியுள்ள நீர்மங்களை உறிஞ்சி இழுக்கும் ஆற்றலுடைய மருந்து.
aspirin : ஆஸ்பிரின் (வெப்பாற்றி): அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து.
asplenia : மண்ணீரலின்மை, மண்ணிரல் அற்ற.
assay : கணிப்பு.
assessement : மதிப்பீடு.
assimilation : ஒன்றிப்போதல்; செறிமானம்; திசு உணவு மாற்றம்; தன்மயமாதல்; செரிமயம் : ஏற்கனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன் படுத்திக்கொள்ளுதல்.
assistant : துணைவர்; உதவியாளர் : ஒரு பணியைச் செய்வதற்கு உதவுபவர், துணை நிற்பவர்.
assisted ventilation : செயற்கைச் சுவாசம் : சுவாசிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு எந்திரத்தின் மூலம் சுவாசிப்பதற்கு உதவுதல்.
association : எண்ண இயைபு; பிணைப்பு; இணைவு கூட்டு : உளவியலில் பயன்படுத்தப்படும் சொல் "எண்ண இயைபு' என்ற தத்துவத்தின்படி, எண்ணங்களும், உணர்ச்சிகளும், அசைவுகளும் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன.
assortment : வகைப்படுத்துதல்.
astasia : நிற்க இயலாமை : தசைகளின் ஒத்திசையாமை காரணமாக கால்களால் நிற்க இயலாத நிலைமை.
asteatosis : வறட்டுத்தோல் நோய்; செதில் தோல் நோய் : தோலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் குறைவாகச் சுரப்பதால் தோல் மினுமினுப்புக் குறைந்து வறட்சியடைந்து விடும்; மேல்தோல் செதில் செதில்களாக உரியும்.
astemizole : அஸ்டெமிசோல்: H1 ஏற்பணு எதிர்ப்பியாகச் செயல்படும் மருந்து. ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பு நோய், மூக்கொழுகல் போன்றவற்றைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்து.
astereognosis : வடிவக் குருடு : பொருள்களின் வடிவங்களையும், மாறா இயல்பினையும் உணர்ந்து கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்.
asterion : அஸ்டெரியான்; மூன்றெலும்பு இணைப்பு : கபால எலும்பில் பிடரி எலும்பு பக்கக் கபால எலும்பு, பொட்டெலும்பு ஆகியவை இணையும் இடம்.
asterixis : அஸ்டெரிக்கிஸ்; கைநடுக்கம் : கல்லீரல் நோய்களின் முற்றிய நிலையில் உண்டாகின்ற சூழ்நிலை மாற்றத்திற்கு முந்தைய காலத்தில் கைகளில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நடுக்கம்.
asteroid: அஸ்டிராய்டு; நட்சத்திர வடிவம் : நட்சத்திரம் போன்ற வடிவமுள்ள.
asthenia : தளர்ச்சி; சோகை; வலுவின்மை; பலவீனம்; வலுக்குறை :வலிமையின்மை பலவீனம், தளர்ச்சியுடைமை.
asthenic : வலுக்குறைந்த; நலுவுற்ற நிலை.
asthenocoria : மந்த விழிமணி வினை : கண்மணியின் மந்தமான எதிர்வினை.
asthenopia : பார்வைக் குறைபாடு; பார்வை நலிவு : பார்வைத் திறன் குறைவாக இருத்தல்.
asthma astrobiast : ஈளைநோய் (காசம்); மூச்சு இழைப்பு நோய் : மூச்சுத் தடையுடன் கூடிய இருமல் நோய். மூச்சுக் குழுாய்களில் கடுந் தசைச் சுரிப்பு காரணமாக இளைப்பும் மூச்சு விடச் சிரமமும் ஏற்படுதல். இந் நோயைத் தடுப்பதற்கான பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
asthmatic: asthmatical : காச நோய் சார்ந்த; ஈளை பீடித்த.
astigmatism : உருட்சிப் பிழை; சிதறல் பார்வை; புள்ளி தோன்றாமை; உருட்டுப் பிறழ்வு : காட்சி முனைப்பமைதிக் கேடு விளைவிக்கும் கண்நோய். கண்விழிப் பின்புறத் திரையின் மீது ஒரு ஒளிக்கதிர்கள் ஒருங்கு குவியாமல் இருத்தல்.
astringency : நரம்பிறுக்கம்; தசைச் சுரிப்பு : திசுக்களை சுருங்கச் செய்து, குருதி சுரப்பதைக் குறைக்கும் நோய்.
astringent : சுருங்குகிற; உறைவி : உறையச் செய்கிற.
astringent Agent : செறிவுப் பொருள் : செறிவுதரும் பொருள்.
astrobiology : வாங்கோள் உயிரியல் : வான் கோளங்களிலுள்ள உயிர்களைக் கண்டுபிடித்து, அவற்றின் உயிர் வாழ்க்கைப் பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல் துறை.
astroblast : நரம்பு நார்திசு அணுக்கோள் : இது ஒரு வகைக் கரு அணு; நரம்பு நார்த்திசு அணுவை உருவாக்குகிறது.
'astroblastoma : நரம்பு நார்த்திசு அணுக்கோள் கட்டி : நரம்பு நார்த்திசு அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் புற்று அணுக்களாக மாறி விடுவதால் உண்டாகின்ற புற்றுநோய்க்கிடட்டி.
astrocyte : நரம்பு நார்த்திசு அணு : நரம்பணுவில் ஒரு வகை நரம்பணு உருவாவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் அணு வகை.
astrocytoma : மூளைக் கழலை : மூளையின் மற்றும் முதுகுத் தண்டின் கீழ்த்தசையில் மெதுவாக வளர்ந்து வரும் ஒரு கழலை.
astroglia : நரம்பு நார்த்திசுக் கட்டி : நரம்பு நகர்த்திசுக்களில் உருவாகும் கட்டி.
astrovirus : அஸ்ட்ரோ வைரஸ் : இது RNA வைரஸ் வகையைச் சார்ந்தது. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நோயை ஏற்படுத்தக்கூடியது.
AST test : ஏ.எஸ்.ட்டி, சோதனை : ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ் ஃபெராஸ் (AST) என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகுகளுக்கு மேல் இது இருந்தால் அது இயல்புக்கு மீறிய அளவாகும். இது ஈரல் குலை நோய் இருப்பதைக் குறிக்கிறது.
astrup test : ஆஸ்டிரப் சோதனை : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை-ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அழுத்த அளவுகளை அளவீடு செய்து, இரத்தத்தில் அளவுக்கு மீறியுள்ள அமிலப் பொருளை (காடிப் பொருள்) மதிப்பிடுவதற்கான சோதனை.
asymmetrical : ஒத்திசைவற்ற; ஒத்திசைவில்லா.
asymmetry : சமச்சீரின்மை; சீர்மையின்மை; ஒத்திசைவற்ற : உடலின் இருபுறமும் உள்ள உறுப்புகள் சமச்சீர் இல்லாமல் இருத்தல்.
asymptomatic : நோய்க் குறியின்மை; நோய்க் குறியிலா; குறியிலா : நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல்.
asynchronism : ஒத்தியங்காமை : ஒத்திசைவு இல்லாமை.
asynclitism : தலைக் குறுக்குத் தோற்றப் பிறப்பு : குழந்தை பிரசவ மாகும்போது ஆண் தலைக் குறுக்காக அமைந்து விடுதல். இரத்த அணுக்களில் உட்கருவும் திசு உட்பாய்மமும் வேறுபட்ட காலங்களில் முதிர்ச்சியடைதல்.
asynechia : உடலியல் தொடர்பின்மை; அமைப்புத் தொடர்பு இல்லாமை.
asynergy : உடலின் வேறுபட்ட பகுதிகளுக்குள் அல்லது உடல் உறுப்புகளுக்குள் ஒத்திசையாமை.
asystole : இதயத்துடிப்பின்மை atheroembołus: இதய நிறுத்தம். இதயத்துடிப்பு. இல்லாமை.
ataratic : மனநோய் தீர்க்கும் மருந்து; உள அமைதியூக்கி; சாந்த மூட்டி : உணர்வை மழுங்கச் செய்யாமல் மனச்சீர்குலைவைத் தணிக்கும் மருந்துகள்.
atarax : அட்டாரக்ஸ் : ஹைட்ராக்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
atavism : முன்மரபு மீட்சி; மூதாதையம்; முதுமரபு மீட்சி : மூதாதையரின் நோய் சில தலை முறைகளுக்குப் பின்னர் மீண்டும் வருதல்.
atavistic : முது மரபு மீள்வுடைய.
ataxia : நிலைசாய்வு.
ataxia. ataxy : உறுப்பு ஒத்தியங்காமை; தள்ளாட்டம்; தள்ளாடல்; நிலை சாய்வு : தசைக் கட்டுப்பாடு குறைபாடு காரணமாக உடலுறுப்புகள் ஒத்தியங்கராமை; இயலாதிருத்தல். உறுப்புகள் வெட்டியிழுப்பதும், தள்ளாடு வதும் இதனால் உண்டாகின்றன.
atebrin : ஆட்டேப்ரின் : 'மெப்பாக்ரின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ateloctasis : நுரையீரல் விரியாமை ஈரல் சுருக்கம் நுரையீரல் சுருங்கி விடுதல். குழந்தைகளுக்கு நுரையீரல் விரிவதில் சிரமம் ஏற்படும் நிலை.
atelia : குறைவளர்ச்சி : முழுமையற்ற வளர்ச்சி, சீரற்ற வளர்ச்சி.
atelocardia : இதயக்குறை வளர்ச்சி : இதயம் முழுமையாக வளராத நிலை. இதயம் சில குறைபாடுகளுடன் வளர்ச்சி பெற்றிருத்தல்.
athelia : பிறவி முலைக் காம்பின்மை : பிறவியிலேயே முலைக் காம்பு இல்லாமல் பிறப்பது.
atherectomy : இரத்த உறைக் கட்டி அகற்றல் : இரத்தத் தமனி நாளத்திலிருந்து இரத்த உறைக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்.
athermic : வெப்பமற்ற; காய்ச்சலற்ற : உடலின் வெப்பம் இயல்பாக இருத்தல். வெப்பம் உயராமை; வெப்பம் இல்லாதிருத்தல்.
atheroembolus : நகரும் இரத்த உறைக் கட்டி : இரத்தத் தமனி நாளத்தில் உருவாகின்ற இரத்த உறைக்கட்டி முழுமையாகவோ, சில துகள்களாகவோ இரத்தச் சுழற்சியில் கலந்து உடலின் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லுதல்.
atherogenesis : இரத்த உறைக் கட்டியாக்கம் : இரத்தத் தமனி நாளச் சுவர்களில் இரத்த உறைக் கட்டி உருவாதல்.
atheroma : தமனித் தடிப்பு; தமனி வீக்கம் : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரையை அளவுக்கு அதிக மாக நுகர்தல் இதற்குக் காரணமாக இருக்கலாம். நெஞ்சுப் பையைச் சுற்றிய தமனிகளில் இது படிந்திருந்தால் நெஞ்சுப்பைக் குருதி நாளங்களில் இரத்தம் உறைதல் ஏற்படும்.
atheromatosis : இரத்த உறைக்கட்டிச் சிதைவு : இரத்தத் தமனி நாளங்களில் இரத்த உறைக்கட்டி உருவாகி சிறு சிறு துகள்களாகச் சிதைதல்.
atherosclerosis : தமனித் தடிப்பு இறுக்கம்; பெருந்தமனித் தடிப்பு : தமனிகள் தடித்தும் குறுக்கமாகவும் இருத்தல்.
athetosis : உறுப்பு நடுக்கம்; சுழல்வாதம் : மூளையில் நைவுப்புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத்தல்.
athlete's foot : பாதத் தடிப்பு நோய்; பாதப்படை : ஒருவகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத் தோலில் முரட்டுத்தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய்.
athletic heart : வலிமிகு இதயம்; உடற்பயிற்சியாளர் இதயம் : கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றவரின் இதயம். இவர்களுடைய இதயத்தின் இடது கீழறையிலிருந்து உடலுக்கு இரத்தம் செலுத்தப்படும் அளவு மற்றவர்கட்கு அதிகமாக இருக்கும். இதயத்தின் இடது கீழறைச் சுவர் தடித்துக் கடினப் பட்டிருக்கும்.
athymia : தைமாஸ் சுரப்பியின்மை : தைமாஸ் சுரப்பி இல்லாமை.
athyreosis : தைராய்டு குறை : தைராய்டு சுரப்பி 'தைராக்சின்' இயக்கு நீரைக் குறைவாகச் சுரத்தல்.
athyria : தைராய்டு குறைநிலை : தைராய்டு இயக்கு நீர் இரத்தத்தில் குறைவாக இருக்கும் நிலை. ativan : ஆட்டிவன் : 'லோராஸ்பாம்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
atlantoaxial : அட்லஸ் அச்செலும்பு : அட்லஸ் எலும்பையும் அச்செலும்பையும் சார்ந்த.
atlas : அட்லஸ் எலும்பு : முதல் கழுத்து முள் எலும்பு.
atlas bone : கழுத்தெலும்பு : மண்டையோட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப பூட்டு.
atom : அணு : ஒருதனிமத்தின் மிக மிகச் சிறிய கூறு அல்லது துகள். இது தனித்தியங்கக் கூடியது. ஒரே தனிமத்தின் அல்லது இன்னொரு தனிமத்தின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களுடன் ஒருங்கி ணைந்து இயங்கவும் வல்லது. அணு எடை என்பது, ஹைட்ரஜனின் ஓர் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஓர் அணுவின் எடையாகும்.
atomic : அணுசார்.
atomization : அணுவாக்குதல்; நுண்திவலையாக்கம் : நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
atomizer : அணுவாக்கக்கருவி; தெளிப்பான் ; அணுவாக்கி : நீர்மங்களை நுண் திவலைகளாக்கும் கருவி.
atmosphere : வளிமண்ட லம்; வாயுமண்டலம்; காற்றுமண்டலம் : பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம்.
atmospheric : காற்று மண்டலம் சார்ந்த; வளிமண்டலம் தொடர்புள்ள; காற்று மண்டலத்தில் வாழும்; காற்று மண்டலத்தில் உள்ள.
atocia : பெண்மலடு : குழந்தைப் பேறின்மை உள்ள பெண்.
atomy : எலும்புக் கூடு; தேய்வுடல்.
atonia : முறுகிழப்பு; உறுதியற்ற.
atonic : உறுதிகுன்றிய; தளர் : உறுதியற்ற; வலிமையற்ற.
atony : வலுக்குறை; உறுதிக்குறை; பலக்குறைவு; உரன் குறைவு : வலிமை குறைந்த.
atopic : ஒவ்வாமைக் குணமுடைய : மரபு வழி ஒவ்வாமை உள்ள அல்லது ஒவ்வாமை தொடர்புடைய.
Atopicdermatts : ஒவ்வாமைத் தோலழற்சி : ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் அழற்சி நிலை. தோல் சிவந்து காணப்படும். அரிப்பு உண்டாகும். சிறுபுண்கள் தோன்றும். அவற்றில சீழ்சேரும். காய்ச்சலும் ஏற்படலாம். இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பயன்படுத்தினால் அழற்சி குணமாகும்.
atopic syndrome : மரபு நோய் : ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு இளம்பிள்ளைப் படைநோய், ஈளைநோய், சளிக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரம்பரையாகவோ தனித்தனியாகவோ, அல்லது மூன்றும் சேர்ந்தோ பீடித்தல்.
atopy : ஒவ்வாத; ஒவ்வாமை; மரபுவழி ஒவ்வாமை; வம்சாவழி ஒவ்வாமை; பாரம்பரிய ஒவ்வாமை : சுற்றுச்சூழலிலிருந்து அன்றாடம் நம்மை வந்தடையும் பொருள்களில் ஏதேனும் ஒன்று நமக்கு ஒவ்வாதபோது அதற்குரிய எதிர்ப்பு வினையாக இரத்தத்தில் தடுப்பாற்றல் புரதங்கள் மிகை யாகும் பண்பு பரம்பரையாகவே இரத்தத்தில் இருப்பது. ஆஸ்துமா, ஒவ்வாமைத் தோலழற்சி, மூக்கொழுகுதல் ஆகியவை ஒவ்வாமை காரணமாக வருகின்ற நோய்களாகும்.
atoxic : நச்சற்ற; நச்சில்லாத; விஷமில்லாத; நஞ்சு அற்ற : நச்சு இல்லாத.
atopognosia : புலனுணர்வின்மை; புலனறிவு உணர்வின்மை : உடலில் ஏற்படும் உணர்ச்சியைக் குறிப்பிட்டுக் கூற இயலாமை அல்லது உணர இயலாமை.
ATP : ஏ.டி.பி ; அடினோசின் டிரை பாஸ்பேட் : தாவரங்களின் இலைகளில் ஒளிச்சேர்க்கை நடக்கும்போது அதற்கு உதவும் ஒரு வகை நொதி.
atresia : துளையற்ற; துளை வளராமை; துளை மூடிய : உடலில் அல்லது உடலுறுப்பில் இயல்பாக இருக்க வேண்டிய துளை பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது அத்துளை மூடியிருத்தல்.
atreomegaly : இதய மேலறைப் பெருக்கம்; இதய மேலறை வீக்கம் : இதய மேலறை (ஏட்ரியம்) வீங்கியிருக்கும் நிலைமை.
atrionatriuretic peptide : ஏட்ரியோநேட்ரியூரைடிக் பெப்டைடு : ஒரு வகை பெப்டைடு இயக்கு நீர். இதயத் தசையணுக்களிலிருந்து வெளியாகும் ஏட்ரியோ பெப்டி ஜெனிலிருந்து தயாராகும் இயக்கு நீர். இது சோடியம் அயனிகளின் ஓட்டத்தைக் குறைக்கக் கூடியது. கால்சியம் அயனிகள் ஒட்டத்தை அதிகப்படுத்தக் கூடியது. சிறுநீரகத்தில் உள்ள தொகுப்புச் குழலில் சோடியம் உறிஞ்சுதலைத் தடுக்கக்கூடியது.
atrioseptopexy : இதய மேலறை இடைச்சுவர் சீரமைப்பு : இதய மேலறையில் ஏற்பட்டுள்ள துளையை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்வது அல்லது சீரமைத்தல்.
atrioventricularis communis : இதய மேலறைக் கீழறை இடைத்துளை : இது ஒரு பிறவிக் குறைபாடு. கருவளர்ச்சியின்போது இதய அறைகள் வளர்ச்சி அடையும்போது இவ்வாறு இடைச்சுவரில் துளைவிழுவது. atrium ; இதயவாயில்; இதய ஊற்றறை; இதயமேலறை : இதயத்தின் இரண்டு மேல் குழிவு வாயில்களில் ஒன்று.
atromid : ஆட்ரோமிட் : குளோஃபிப்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
atrophic : கூம்பிய.
atropphic rhinitis : மூக்குச் சளிச்சவ்வு தேய்வு : மூக்கின் சளிச்சவ்வு சத்தின்றித் தேய்ந்து போதல்.
atrophy : உடல் நலிவு; உடல் மெலிவு; செயல் திறன் இழப்பு; தேய்வு; சுருங்குதல்; கூம்புதல் : உடல் சத்தின்றி மெலிந்து போதல்; சத்தில்லாமல் தேய்ந்து விடுதல்; ஆளாமைத் தேய்வு.
atrophy, muscular : தசைக் கூம்பல்.
atrophy, uptic : பார்வை நரம்பிழைப்பு.
atropine : நச்சுக்காரம் : கொடிய நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து. மைய நரம்பு மண்டலத்தைச் சமனப்படுத்தும் இயல்புடையது. இதயத் துடிப்பை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
ATS (antitetanus serum) : ஏ.டி.எஸ் நரம்பிசிவு நோய்த்தடுப்பு மருந்து : நரம்பிசிவு நோயை எதிர்க்கும் பொருள். நரம்பிசிவு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறனை உண்டாக்குகிறது.
attack : நோய்த்தாக்கம்; தாக்கு : நோய் தாக்கும் நிலை. திடீரென நோய்த் தாக்குதல்.
ஆடம்ஸ்டோக் நோய்த் தாக்கம் : எவ்வித முன் நோய்க் குறிகளும் இல்லாமல் திடீரென தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்; இதயத் துடிப்பு தற்காலிகமாக நிற்கும்.
attenuation : நுண்ணுயிராக்கம் : நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
attack, cereberal : மூளைத் தாக்கம்.
attack, heart : இதயத்தாக்கம்.
attendant : துணையாள்.
attenuate : குறை.
attic : நடுக்காது மேலறை : நடுச்காதில் சுத்தி எலும்பும் பட்டை எலும்பும் உள்ள இடம்.
attitude : மனப்பான்மை; உள நோக்கு; நிலை : பழகிப்போன சிந்தனை முறை பழக்க நடவடிக்கை.
attraction : கவர்ச்சி; கவர்தல்; ஈர்த்தல் : இரண்டு பொருள்கள் ஒவ்வொன்றையும் ஈர்த்துக் கொள்ளுதல்.
attrition : பல்தேய்வு : பற்களைப் பயன்படுத்துவதால் பல்லின் உள்துளைப் பரப்புகள் தேய்ந்திறுகுதல்.
audiogram : கேட்புத்திறன் பதிவுக்கருவி; கேளலை வரைவி; கேட்டல் வரைபடம்; கேள்விப் பதிவு : கேள்விமானியால் பரிசோதனை செய்து கேட்புத்திறனை அளவிட்டுப் பதிவுசெய்யும் கருவி.
audiology : கேட்பியல்; கேட்டலியல் : கேட்புத்திறனை அறிவியல் முறையில் ஆராய்ந் தறிதல்.
audiometer : கேள்விமானி; கேட்புக்கருவி; கேட்பு:அளவி; கேட்டல் மானி : கேட்புத்திறனை மருத்துவ முறையில் அளவிடுவதற்கான ஒரு கருவி.
audition : கேட்டல் : செவிப் புலன்.
auditory : கேட்கும் பகுதி; கேட்டல்; கேட்பியல்சார் : செவிப்புலன் தொடர்புடைய பகுதி. கேட்புத்திறன் தொடர்பான இடம்.
atypia : இயல்பற்ற; இயல்புமீறிய; இயல்பின்றி.
atypical : இயல்பற்ற; இயல்பிலாத பொதுமாதிரியற்ற; இயல்பிலா மைக்கோபேக்டீரியம் : காசநோயை உருவாக்குகின்ற மைக்கோ பேக்டீரியம் டியூலர் குளோசிஸ் பாக்டீரியாவைப் போலன்றி வீரியம் குறைந்த பாக்டீரியா சுற்றுச்சூழல் நிரம்பியுள்ளது. நுரையீரலைத் தாக்கக் கூடியது. காசநோயைப் போல நோயைத் தரவல்லது.
Au : பொன்(தங்கம்)னைக் குறிக்கும் வேதிப்பெயர்.
audio) : ஆடியோ : 'கேளுணர்வை'ச் சார்ந்த இணைப்புச் சொல்.
audiogenic : ஒலி உண்டாக்கி : ஒலியால் உண்டாகின்ற.
audiologist : கேள் உணர்வியல் வல்லுநர்; கேள்திறன் மருத்துவர்; கேள் உணர்வியலாளர் : கேள்திறனில் பயிற்சிபெற்ற மருத்துவர் அல்லது மருத்துவ பணியாளர். .
audiometry : கேள்திறனளவி : ஒரு நபருடைய கேள்திறன் அளவை அளந்து காண்பிக்கும் கருவி. இதன் அளவு டெசிபல் அலகுகளில் இருக்கும். ஒலி அலை நீளத்திற்கும் அதைக் கேட்கும் நபரின் ஒலி கேள் உணர்வுத் திறனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை இக்கருவி அளந்து காண்பிக்கும். audiovisual : ஒலி ஒளிக் காட்சி; கேட்பொளிக் காட்சி; ஒலி ஒளி ஒருங்கு சார்ந்த :ஒலி உணர்வும் ஒளி உணர்வும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் உணர்வு.
audition : கேள்திறன்; கேட்புத் திறன்; செவித்திறன்; செவி கேட்டல் :கேட்கும் திறன் பெற்றுள்ள செவியால் கேட்பது.
Auerbachs : ஆயர்பேக் நரம்புப் பின்னல் : மத்திய உணவுக் குழலிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் உணவுப் பாதைத் தசையில் காணப்படும் தானியங்கி நரம்புப் பின்னல். இந்த நரம்புப் பின்னல்தான் குடல் தசை அலைவுகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவுகிறது. ஜெர்மன் நாட்டைச் சார்ந்த உடலியலாளர் லியோபோல்டு அயர்பேக் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.
augmentation : ஆக்மென்டின் : அமாக்சிசிலின், கிளாவுலானிக் அமிலம் கலந்த மருந்து.
augmentation therapy : வளர்சிகிச்சை : ஆல்பா ஆன்டிடிரிப்சின் குறைபாடு உடைய நோயாளிகளுக்கு புரோட்டி யேஸ் எதிர்பொருளின் செயல் ஆக்கத்தை மேம்படுத்துவதற்காக 'புரோலேசின்' மருந்தைச் செலுத்துதல்.
aura : முன்னுணர்வு; சூசனை; முன்னம் : காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
aural : காதுசார்ந்த; செவி.
aureomycin : ஆர்யோமைசின் : நச்சுக் காய்ச்சல் முதலிய நோய் களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
auric : தங்கம் சார்ந்த; பொன்னைச் சார்ந்த : தங்கம் அடங்கிய வேதியியல் பொருள்.
auricle : 1. காதுமடல் : புறக்காதின் ம ட ல் , 2. இதய மேலறை : இதயத்தின் .மேல் அறைகள் இரண்டினுள் ஒன்று.
auricular : காதுத் துடிப்பு : காதுத்துளையில் ஏற்படும் அதிர்வு.
auricularis : காதைச் சார்ந்த; செவியைச் சேர்ந்த; காதுமடலைச் சார்ந்த :
auriculotermporal syndrome : காதுப் பொட்டெலும்பு நோயியம் : காதுப்பொட்டெலும்பு நரம்புக் கோளாறால் உண்டாகின்ற நோய் வகை. சாப்பிடும்போது வியர்த்தலும் உடல் சிவத்தலும் ஏற்படும். auriculoventricular : இதய மேலறை-கீழறை சார்ந்த.
aurilave : காது கழுவு கருவி : காதுகளைக் கழுவிச் சுத்தப் படுத்துவதற்குப் பயன்படும் கருவி.
auris : காது: செவி : கேட்கும் திறனுள்ள உறுப்பு. இது மூன்று பகுதிகளை உடையது. வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என அவை அழைக்கப்படுகின்றன. வெளிச்செவியில் காது மடலும் செவித்துளையும் அடங்கும். நடுச்செவியில் மூன்று எலும்புகள் அடுத்தடுத்துள்ளன. நடுச்செவிக்கும் வெளிச்செவிக்கும் நடுவில் 'செவிப்பறை' எனும் சவ்வு உள்ளது. உட்செவியில் நத்தை எலும்பு, அரைவட்டக் குழல்கள், செவிநரம்பு உள்ளன.
auriscope : காது சோதனைக் கருவி; செவிகாட்டி : காதுகளைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் உருப்பெருக்கிக் காட்டும் சாதனமும், ஒளியூட்டும் சாதனமும் இணைந்திருக்கும்.
aurothioglucose : ஆரோதியா குளுக்கோஸ் : பொன்னால் தயாரிக்கப்பட்ட மருந்து.
aurothiomalate : ஆரோதியா மாலேட் : கடுமையான வாத மூட்டு வலியைக் குணப்படுத்து வதற்கு ஊசி மூலம் செலுத்தப்படும் பொன் கலவை மருந்து. இந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு சிறு நீரில் புரதம் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.
ausculation : அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்; கேட்புணர்வு; ஒலியுணர்வு : நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம்.
Australia antigen : கல்லீரல் அழற்சிக் காப்புமூலம் : கல்லீரல் அழற்சி மருத்துவத்திற்கான ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள். பல நாடுகளில் 'ந' நோய்க் கிருமி குருதியில் காணப்படுகிறது. இந்த நோய்க் கிருமி யுடைய இரத்தத்தை மற்றவர்களுக்குச் செலுத்தினால் அவர்களுக்கு கல்லீரல் அழற்சி உண்டாகும். எனவே, இந்த வகை குருதியைச் செலுத்து வதைத் தவிர்க்க வேண்டும்.
australian lift : ஆஸ்திரேலியத் தூக்கும் முறை : கனமான நோயாளிகளைத் துக்குவதற்கான ஆஸ்திரேலிய முறை, இதனை 'தோள் துக்கும் முறை' என்றும் கூறுவர். நோயாளிகளின் எடை முழுவதையும் தூக்குபவர்கள் தங்கள் தோளில் தாங்கிக் கொள்ளும் வகையில் துக்குதல்.
autt(o) : 'தன்' இணைப்புச்சொல்.
autism : தற்சிந்தனை நோய்; தன்மயம்; தான்தோன்றி; தற்போக்கு : தன் மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தற்புனைவு உலகில் ஆழ்ந்திருக்கும் ஒரு நோய் நிலை. இது ஒரு தீவிரமான மதிமயக்கநிலை.
autistic person : தன்நினைவு நோயாளி; தன்மைய; தற்போக்கான : மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் முழுவதுமாகத் தனிமையில் ஒதுங்கித் தற்புனைவுக் கற்பனைகளில் மூழ்கியிருக்கும் நோயாளி.
autistic thinking : தற்புகழ்ச்சி எண்ணம்; தற்சிந்தனை; தன் நினைவு.
autoagglutination : குருதியணு தன்னொட்டுத்திரள்; தன் திரட்சி : தன்னியக்க நோய் எதிர்ப்பு பொருள்களினால் உண்டாகும் இரத்தச் சிவப்பணுக்கள் தானாக ஒன்றுசேர்ந்து கொள்ளுதல். குருதிச்சோகை நோயின்போது இவ்வாறு நேரிடுகிறது.
autoagglutinin : தன் திரட்சிக் கூறு : உடலிலுள்ள தன்னொட்டுப் பொருளுடன் ஒன்று சேரும் அணுக்கூறு.
autoamputation : தன்னுறுப்பு நீக்கம் : உடலில் உள்ள உறுப்பு அல்லது உறுப்பின் ஒரு பகுதி தானாகவே நீங்கிக் கொள்ளுதல்.
autoantibody : தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்; தன் எதிர்ப்பொருள் : உடலிலுள்ள டி.என்.ஏ, மிருதுவான தசை, மண்டையோட்டு உயிரணுக்கள் போன்ற இயல்பான அமைப்பான்களுடன் இணைந்து கொள்ளும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள்.
autoantigen : தன்னொட்டு காப்பு மூலம் : தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்களுடன் இணைந்து கொள்ளும் காப்பு மூலம்.
autociasis : தன்னழிவு : தடுப்பாற்றல் வினையினால் உடலின் உள்ளுறுப்பு அழிதல். உடல் தானாகவே நடுப்பகுதியை கழித்துக் கொள்ளும் தன்மை.
autoclave : தானியங்கிக் கொப்பரை; அதியழுத்தக் கொதிகலன்; அழுத்தக் கொப்பரை; வெப்பழுத்தக்கலன் : கடும் வெப்பமும், உயர் அழுத்த நிலையும் ஏற்கும் வலிமையும் வாய்ந்த பெருங்கொப்பரை. இது நுண்மம் அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
antodigestion : தற்செரிமானம்; தன் சீரணம் : உயிருள்ள உடலில் புறப்பொருள் உதவியின்றி அகப்பொருளுதவி கொண்டே நிறைவு தரும் செரிமானம்.
autoeczematization : சுய தோலழற்சிப் பரவல் : தோலழற்சி நோயின் துவக்கநிலைச் சிதைவுகள் உடல் முழுமையும் பரவுதல்.
autoeroticism : செயற்ககை தற்புணர்ச்சி : செயற்கைத் தற்புணர்ச்சிக் கையாடல் பழக்கம் தன்விழைச்சுத் திணவு.
autograft : தற்திசு மாற்றம்; தன் ஒட்டு : உடலில் ஒரு பகுதியி லிருந்து இன்னொரு பகுதிக்குத் திசுக்களை மாற்றிப் பொருத்துதல்.
autohaemolysin : சுய இரத்தச் சிதைவுப் புரதம் : இரத்தச் சிவப் பணுக்களைச் சிதைக்கின்ற எதிர் ஆக்கல் புரதம்.
autohaemolysis : தன் குருதி அழிவு; சுய ரத்தமழிவு : நோயாளியின் இரத்தத்தில் உள்ள ஊநீர் காரணமாக இரத்த அணுக்கள் அழியும் நிலை.
autohaemotherapy : சுய ரத்தமேற்றல் : நோயாளியின் சொந்த இரத்தத்தையே சுத்திகரித்து மீண்டும் செலுத்துவது.
autoimmune diseas : நோய்த் தடைக்காப்பு குறி நோய்; தன் தடுப்பாற்று நோய் : தன்னில் உருவாகித் தன் திசுவையே தாக்கும் ஊக்கிகளால் வரும் நோய்.
autoimmunity : தன் தடுப்பாற்றல்.
autoinoculation : தன்னுடல் ஏற்றம்; தன்திசு; ஏற்றம் : தன்னுடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது செலுத்திக் கொள்ளுதல்.
autointoxication : தன்னஞ்சூட்டல் : உடலில் உற்பத்தியாகும் பொருள்களினாலேயே உடலில் ஏற்படும் நச்சுத் தன்மை.
autoimmunization : நோய்த் தடைக் காப்பு ஊக்குமுறை; தன் தடுப்பாற்றுவித்தல் : நோய்த் தடைக்காப்பு நோய் உண்டாக வழிவகுக்கும் ஒரு செயல் முறை.
autoinfection : தன் நோய் தொற்று; தன் தொற்று : தன் செய்கை மூலமாக நோய் தொற்றுதல்.
autointoxication : திசு நச்சூட்டம்; தன்போதை; தன்னஞ்சூட்டல் : உடலில் உண்டாகும் வளர்சிதை மாற்றப் பொருள்கள் அளவுக்கு மிகுதியாக அல்லது குறைபாடுகளுடன் உண்டாவதால் ஏற்படும் நச்சூட்டம். இந்தப் பொருள்கள் நோயுற்ற அல்லது மாண்டுபோன திசுக்களிலிருந்து தோன்றக் கூடும்.
autolesion : தன் சிதைவுப் புண்; தன் நைவுப்புண் : தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது.
autolets : பீற்று மருந்தூசி : இன்சுலின் போன்ற மருந்துகளை நோயாளிகள் தாங்களாகவே ஊசி மூலம் செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பீற்று மருந்துசி (சிரிஞ்சு).
autologous : சுயப்பண்பு; சுயமாக; தனக்குத்தானே.
autologous blood transfusion : சுய இரத்ததானம்; சுய இரத்த மேற்றல் :ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று மீண்டும் அவருக்கே அந்த இரத்தத்தை ஏற்றுதல். சில அறுவைச்சிகிச்சைகளின்போது நோயாளிக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அறுவை சிகிச்சைக்கு 3 வாரங்களுக்கு முன்பே, அந்த நோயாளியின் இரத்தத்தைத் தானமாகப்பெற்று, இரத்த வங்கியில் சேமித்துக் கொண்டு, பின்பு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும் பொழுது அந்த இரத்தத்தை மீண்டும் அவருக்கே செலுத்தும் முறை. இதனால் இரத்தம் மூலம் பரவுகின்ற எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பில்லை.
autologous bone marrow transfusion : சுய எலும்பு மஜ்ஜை ஏற்றல் அல்லது தருதல் : இரத்தப் புற்று நோய்க்குத் தரப்படும் நடுவகை சிகிச்சை முறை. நோயாளி நலமாக உள்ளபோது அவருடைய எலும்பு மஜ்ஜையைப் பெற்று, பதப்படுத்திக் கொண்டு மீண்டும் அவருக்கு இரத்தப் புற்று நோய் தாக்கும்போது, இந்த எலும்பு மஜ்ஜையை அவருக்கே செலுத்துவார்கள். இதனால் இரத்தப் புற்றுநோய் கட்டுப்படும்.
autolysin : தன்னழிப்பான் automaticity: தான் உருவான உடலின் அணுக்களையும் திசுக்களையும் அழிக்கின்ற உடற்காப்பு மூலம்.
autolysis : உயிரணு அழிவு; தன்னழிவு; தன்முறிவு : உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலிருந்து வடியும் ஊன் நீரால் அழிதல்.
automatic : தானே இயங்குகிற; தானியங்கும் : தன்விருப்பமில் லாமல் பழக்கத்தினால் தானே இயங்குதல்.
automaticity : தன்னியக்கம்; தானியங்கி : தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன்.
automatism : தன்னியக்கம்; தானியக்கம் : தன்னறிவின்றிப் பழக் கத்தினால் தானே இயங்கும் நடத்தை முறை.
automation : உணர்ச்சி விழிப்பற்ற நிலையில், தசை நரம்புகள் தானாகவே இயங்குதல்.
autonomic : தன்னியக்கமுடைமை; தன்னியக்க உறுப்புகள் : தானே இயங்கும் தன்மை, தானியக்க நரம்பு மண்டலம், பரிவு நரம்புகளினா லானது. இது நரம்பு உயிரணுக்கள், இழைமங்கள் ஆகியவற்றினாலானவை. இவற்றை தன் விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாது. இவை உடலின் அனிச்சைச் செயல்கள் தொடர்பானவை.
autonomous : தன்னியக்க.
autophagosome : உள்திசுப் பாய்ம வெற்றிடம் : ஒர் அணுவில் உள்ள திசு உள்பாய்மத்தில் காணப்படும் சிறு வெற்றிடம். திசு உள்பாய்மப் பொருள்களையே இதுவும் கொண்டிருக்கும். இது திசுவுள் செரிமான அமைப்புடன் இணைந்துவிடும் தன்மையுடையது.
autophagous : தன்னூண் சார்ந்த : தன் தசையைத் தானே தின்று செமிக்கிற.
autophagy : தன்னூண் உடைமை : உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத்தாமே உறிஞ்சிக் கொண்டு உயிர் வாழ்தல்.
autophony : தன் குரலுணர்வு : தன் குரலின் எதிரொலியைத் தானே கேட்டல்.
autoplasty : உயிர்க் கூறொட்டு முறை; தன்னமைப்பு : நலம் குன்றிய பகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்களை வைத்துக் குணப்படுத்தும் முறை.
autopsy : பிணப்பரிசோதனை; பிணி கூற்றாய்வு; சடல ஆய்வு : நோய்க் காரணங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்தல்.
autoregulation : தன்னியக்கச் சீரமைப்பு : 1. தன்னை அழிக்க வரும் பொருளை தானே அழித்து தன்னுடைய இயக்கம் சீராக இருப்பதைக் கண் காணித்துக் கொள்ளும் உயிரியியல் பண்பு. 2. தமனி நாளத்தில் இரத்த அழுத்த மாறுபாடு இருந்தாலும் ஒர் உறுப்போ, திசுவோ தனக்குத் தேவையான இரத்தத்தை நிலையாகப் பெற்றுக் கொள்ளும் அக நிலைப் பண்பு. autosome : தன் இனக்கீற்று; தன் மெய்யம் : பாலினக்கீற்று அல்லாத வேறொரு இனக் கீற்று.
autosplenectomy : மண்ணீரல் தன்னிழப்பு : கடுமையான நார்ப் பெருக்கத்தாலும் திசுச் சுருக்கத்தாலும் மண்ணிரல் தானாகவே அழியும் நிலை.
'auto suggestion : உள்தூண்டுதல்; தற்றூண்டுகை : ஒருவருடைய மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தற்றுண்டுதல். இசிப்பு நோய்க் கோளாறின்போது இந்நிலை உண்டாகக் கூடும்.
autotoxin : தன்நச்சு : உயிரியினுள் விளையும் மாறுதலால் ஏற்படும் நச்சுச் சத்து.
autotransfusion : இரத்த இழப்பீடு : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதால் உள்ளபடிக்கு ஏற்பட்ட இரத்த இழப்பீட்டை, அதே அளவு இரத்தத்தை உட்செலுத்தி ஈடு செய்தல்.
autotroph : தன்னுணவாக்குயிர் : நேரே இயற்பொருளிலிருந்து உணவு ஆக்கவல்ல உயிர்.
autotrophic : தன்னுணவாக்குகிற; தன்வளர்வு : இயற் பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல.
autovaccine : தந்தடுப்பூசி : நோயாளியின் திசுக்களிலிருந்து அல்லது சுரப்பு நீர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நுண்ணுயிரிகளைக் கிருமி வளர்ப்பு முறையில் வளர்த்துத் தடுப்பூசி தயாரித்தல், நோயாளியிடமிருந்தே தயாரிக்கப்படும் தடுப்பூசி.
avirulent : வீரியமற்ற.
auxocyte : வளர்சினை : முதிராச்சினை, ஒரு விந்தணு ஆரம்ப கால வளர்ச்சியில் இருத்தல், விந்தணு துவக்கநிலை.
avascular : குருதிநாளமின்மை; குருதிக்குழலற்ற; குழலின்மை : குருதி கொண்டு செல்வதற்கான குருதி நாளங்கள் இல்லாமையால் குருதி வழங்கீடு இல்லாதிருத்தல். குருதி வழங்குதல் இல்லாமையால், உறுப்பு நசித்துப் போதல்.
Avelis : அவெல்லிஸ்நோயியம் : மனித மூளையில் 'நியூக்ளியஸ் அம்பிகஸ்' மற்றும் மூளைத் தண்டுவட நரம்புப் பாதையில் சிதைவு ஏற்படும்பொழுது உண்டாகின்ற ஒரு நோய்த் தொகுப்பு இது. ஜெர்மன் குரல் வளை நோய் வல்லுநர் அவெல்ஸ் என்பவர் கண்டுபிடித்த நோயியம். இந்த நோயாளிக்கு குரல்வளை, மெல்லண்ணம் ஆகியவற்றில் வாதம் ஏற்படுவதால் பேசமுடியாது. வலியுணர்வையும், வெப்ப உணர்வையும் உணர இயலாது. மூளையின் இடது பக்கத்தில் சிதைவு ஏற்பட்டிருந்தால் வலது பக்க உடலில் வலியையும், வெப்பத்தையும் உணர முடியாது. மூளையில் வலதுபக்கத்தில் பாதிப்பு இருந்தால் உடலில் இடதுபக்கத்தில் வலி தெரியாது, வெப்ப உணர்வு இருக்காது.
aventyl : அவென்ட்டில் : 'நார்ட் ரிப்டிலின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
aversion therapy : வெறுப்பூட்டு மருத்துவ முறை : போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற சில கெட்ட பழக்கங்களிலிருந்து மீட்பதற்காக, அடிமை கொண்ட பொருளின் மீது வெறுப்பு உண்டாகுமாறு செய்து சிகிச்சை செய்யும் முறை.
avian : பறவை சார்ந்த : பறவை இனத்தைச் சார்ந்த.
avidin : அவிடின் : மிக அதிக மூலக்சுற்று எடை கொண்ட புரதம். வைட்டமின் B-2 கலவை அடங்கியுள்ள 'எச்' (H) ஊட்டக்கூற்றில் இது அதிகம் உள்ளது. முட்டையின் வெண்கருவில் இது மிகுதியாக இருக்கிறது.
avidity : பேரார்வம்; மிகுந்த ஆவல்; பிணைப்புத் திறன் : பற் றாசையுடன் பிறருடன் பிணைத்தல், உடற்காப்பு ஊக்கியுடன் உடற்காப்பு மூலம் பொருந்தும் செயல். நோய் எதிர்ப்பு சக்தி, நோய் ஆதரவு சக்கி இவற்றின் வினைத் திறனை மதிப்பிடுதல்.
avitaminosis : வைட்டமின் பற்றாக்குறை நோய்; உயிர்ச் சத்தின்மை; உயிர்ச்சத்துக்குறை : வைட்டமின்கள் பற்றாக்குறை யினால் உண்டாகும் ஒரு நோய்.
avoidance : தவிர்ப்பு; தவிர்க்கும் தன்மை; தட்டிக் கழிப்பு; ஒழிவிடம் : சுய நினைவுடனோ, சுய நினைவில்லாமலோ பயம், பதற்றம், ஆபத்து, வலி, சண்டை போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு வினை.
avomin : அவோமின் : 'பிராமித் தேசின் தியோக்ளேட்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.
avulsion : பிய்த்து அகற்றல்; பிய்த்தல் : உறுப்பு நரம்பு திடீரென வெட்டியிழுத்தல்.
a wave : 'a' அலை : குரல் வளைச் சிரை நாடித்துடிப்பில் தெரிகின்ற ஓர் அலை. இதயத்தின் வலது மேலறை சுருங்குவதால் இது உண்டாகின்றது. கழுத்துச் சிரைக்கு இந்த அலைக் கடத்தப்படுகிறது. மூவிதழ்த் தடுக்கிதழ்க் குறுக்கம், நுரையீரல் தமனித் தடுக்கிதழ்க் குறுக்கம், நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம் ஆகிய நோய் நிலைகளில் இந்த அலை பெரிதாகத் தெரியும்.
axenic : நோய் நுண்மமின்மை; சுகாதாரமான நோயற்ற : கிருமி வளர்ப்புச் சோதனையில் கிருமி இனப்பெருக்கமில்லா நிலைமை.
axerophthol : ஆக்செராஃப்தால் : வைட்டமின் A ஊட்டச் சத்து.
axialis : அச்சு போன்ற; அச்சமைப்பு : உடலின் நடுவில் அமைந்துள்ள, உடலுறுப்பின் நடுவில் அமைந்தள்ள.
axiation : அச்சு வளர்ச்சி; முளை வளர்ச்சி : அணுக்களின் அச்சுப் பகுதி வளர்ச்சியடைதல் கருவணு மற்றும் கருவில் முனைப் பகுதி வளர்ச்சி அடைதல்.
axilla : அக்குள்; கக்கம்; கமுக் கூடு:
axilary : அக்குளுக்குரிய : அக்குளின் நரம்புகள், இரத்தம், ஊனிர் நாளங்கள் ஆகியவை தொடர்புடைய.
axipetal : அச்சுநோக்கி; மையம் நோக்கி : அச்சுப்பகுதி அல்லது மையப்பகுதியை நோக்கி இருத்தல்,பகுதி.
axis : நடுஊடுவரை (நடுக்கோடு); அச்சு : விழிநோக்கின் மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடு வரை (நடுக்கோடு).
axo-axonic : இடைநரம்பு வேரிழை : இரண்டு நரம்பு வேர் இழை களுக்கு இடைப்பட்ட இடத்தில் காணப்படும் தொடர்பு.
axodendritic : நரம்பு வேரிழை உணர்விழை : நரம்பு வேர் இழைக்கும் நரம்பு உணர்விழைக்கும் இடையில் உள்ள தொடர்பு நிலை.
axolemma : நரம்பிழை மேலுறை : நரம்பு வேரிழையை முடியுள்ள மேலுறை.
axolysis : நரம்பு வேரிழைச் சிதைவு; நரம்பு வேரிழைக் கழிவு : நரம்பணுவில் உள்ள நரம்பு வேரிழையானது சிதைந்து அழிந்து போகும் நிலைமை.
axon : நரம்பணுவால்; நரம்பு வேர் இழை; நீள்நரம்பு : நரம்பணுவின் வால் பகுதி. ஓர் உறுப்பில் நரம்பு
axonopathy : நரம்பு வேரிழை நோய் : நரம்பு வேரிழையைப் பாதிக்கின்ற ஒரு வகை நரம்பு நோய்.
axonotmesis : நரம்பணுவால் சிதைவு : ஒரு நரம்பணுவின் வாலில் ஏற்பட்ட சேதம் காரணமாகப் புறப்பகுதி நலிந்து சிதைவுறுதல். மருத்துவச் சிகிச்சையினால் இந்த நரம்பணு வால்களுக்குப் புத்துயிருட்டலாம். இவை புத்துயிர் பெறுவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம். ஒரு மாதத்தில் 25.4 மி.மீ வளர்ந்தால் அது சாதாரண வளர்ச்சி வேகம்.
axotomy : நரம்பு வேரிழை நீக்கல்; நரம்பு வேரிழை வெட்டல்; நரம்பு வேரிழை அகற்றல் : அறுவை மருத்துவம் மூலம் நரம்பு வேரிழையை நீள ஆழ வெட்டுதல்.
Ayerza's : அயெர்சா நோய் : அர்ஜென்டைனா உடலியலாளர் அபெல் அயெர்சா என்பவர் கண்டுபிடித்த நோய் இது. இந்த நோயுள்ள ஒருவருக்கு நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம், நுரையீரல் தமனித்தடிப்பு, நெடுங்காலமாகக் காணப்படும் நீலம் பாவித்தல், சிவப்பணு மிகைப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
Ayurveda : இந்திய மருத்துவம்; ஆயுர்வேதம் : இந்தியாவின் மிகப்பழைமையான மருத்துவ முறை. இன்றைக்கும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் படும் மருத்துவ முறை. பித்தம், வாயு, கபம் எனும் மூன்று உடலுயிர்க் கூறுகளின் ஒழுங்கு நிலை மாற்றத்தால் தான் உடலில் நோய்கள் வருகின்றன என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நோய்களைத் தீர்ப்பதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களும், ஆரோக்கியமான உணவு, தியானம், உடற்பயிற்சி, நடத்தைப் பண்பு மாற்றங்கள் ஆகியவை உதவும் என்ற கோட்பாடு உள்ளது. தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை மருந்துகளால் (மூலிகை) நோயைக் குணப்படுத்த முடியும் என்பதை நடைமுறைப்படுத்துவது.
azapropazon : கீல்வாதமருந்து (ஆஸ்புரோப்பசோன்) : வீக்கத்தைக் குறைக்கக்கூடிய நோவகற்றும் மருந்து. கீல்வாதங்களைக் குணப்படுத்த இது பயன்படுகிறது.
azathioprine : அஜாதயப்ரின் : இரத்தப் புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் மருந்து. இது அணுக்கொல்லியாகவும், தடுப்பாற்றல் குறைப்பியாகவும் செயல்படும் தன்மையுடையது.
azidothymidine : அசிடோத்தைமைடின் : 'எயிட்ஸ்' நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கக் கூடிய ஒரு பரிசோதனை முறை மருந்து.
aziocilin : அசியோசில்லின் : ஒரு வகை பென்சிலின். நோய்க் கிருமி எதிர்ப்பு மருந்து.
azoospermia : ஆண் மலடு; விந்தணுவின்மை; விந்தின்மை : விந்தணு உற்பத்தியாகாததால் ஆண்களிடம் ஏற்படும் மலட்டுத் தன்மை.
'azoturia : மிகுயூரியா சுரப்பு நோய்; நைட்ரச நீரிழிவு : நோய் காரணமாக சிறுநீரில் 'மூத்திரை' என்ற யூரியாப் பொருள் சுரத்தல்.
aztreonam : அஜிட்ரியோநாம் : சீடோமோனஸ் ஆரிஜீனோஸா மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃபுளுயென்சா நுண்ணுயிரிகளைக் கொல்லும் திறனுள்ள ஒருவகை நுண்ணுயிர்க் கொல்லி மருந்து.
azure : அஜீர்சாயம் : இரத்த அணுக்களையும் அவற்றின் உட்கருக் களையும் நிறமேற்றம் செய்யப் பயன்படும் மீத்தியோனின் அல்லது பினோதயசின் சாயம்.
azurophil : அஜீரோ அணு : இரத்தச் சிவப்பணுக்களில் ஒரு வகை. அஜீர்சாயத்தோடு ஒட்டக் கூடிய இயல்பு கொண்டது.
azurophilia : அஜீர் அணு மிகைப்பு : இரத்தத்தில் அஜீர் அணுக்களின் எண்ணிக்கை மிகுதியாக இருத்தல்.
azygography : ஒற்றைச் சிரை வரைபடம்; ஒற்றைச் சிரை ஊடுகதிரி வரைபடம் : உடலில் ஜோடியற்று, ஒற்றைச் சிரைகளாக உள்ள சிரை மண்டலத்தை, சாயப்பொருள் செலுத்தி, ஊடு கதிர்ப் படம் எடுத்தல்.
azygos : ஒற்றை உறுப்பு; தனித்த : உடன் இணையில்லாத ஒற்றை உறுப்பு அடிவயிற்றிலும், மார்புக் கூட்டிலும் இணையில்லா மூன்று நரம்புகள் உள்ளன.