மருத்துவ களஞ்சியப் பேரகராதி/O
நோயாளி உணர்ச்சி சாராமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில்.
objective lens : காண் வில்லை.
obligate : உயிர் வாழ்திறன் மாற்றிலா : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை களில் மட்டுமே உயிர் வாழ்வதற்கான திறம்பாடு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணைப்பு ஒட்டுண்ணி, ஒர் ஒட்டுண்ணியாக அல்லாமல் வேறுவிதமாக உயிர் வாழ முடியாது.
obligatory : கடப்பாடு.
obliquity : சரிவு.
oblique : உள்-புறத்தசைகள் : புறத்தேயும், உள்ளேயும் உள்ள கோணல்-சாய்வு வடிவத்தசைகள்.
OBS : கரிம மூளை நோய்.
obscenity : அருவருப்பு; ஆபாசம்.
obscession : மன அலைக்கழிப்பு : ஒருவர் மறக்க நினைத்தாலும் மனதில் நிறைந்து இடையறாது அலைக்கழிக்கும் எண்ணம், தூண்டல் அல்லது உருக்காட்சி.
observations : கூர்நோக்கு : அறிவியல் தகவல்களின் பெருந் தொகுதியின் முக்கியக் கட்டமைப்பு அலகுகள்.
obcessional neurosis : அலைக்கழிப்பு மூளைக்கோளாறு; விரும்பா உளவியக்கம்; பித்து நரம்பியம் : நோயாளியிடம் அவர் விரும்பாமலே வேண்டா நினைவுகள் தோன்றி அவரை அலைக்கழித்தல். இந்நினைவுகளை அகற்ற அவர் விரும்பினாலும், அவரது விருப்பத்திற்கு எதிராக இந்த எண்ணங்கள் இடைவிடாமல் தோன்றி அவருக்கு மனவேதனை உண்டாக்கும். ஒருவர் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்பது இவ்வகையைச் சேர்ந்த இன்னொரு கோளாறு. அடிக்கடிக் கையைக் கழுவுவதும், கதவுப்பிடியை எப்போதும் பிடித்துக் கொண் டிருப்பதும் இவ்வகையைச் சேர்ந்தவை. குற்றவுணர்வு இதற்குப் பெரும்பாலும் காரணம். சேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் அரசனைக் கொன்ற கணவனுக்கு உடந்தையாக இருந்த மாக்பெத் சீமாட்டி தன் கையில் இரத்தக் கறை படிந்திருப்பதாக எண்ணி அடிக்கடிக் கைகழுவும் மன நோய்க்கு ஆளாவதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
obsessive-compulsive : அலைக்கழிவு வல்லந்தம் : மன உளைச் சளிலிருந்து விடுபடுவதற்காக அடிக்கடியும், சடங்கு முறையிலும் சில செயல்களை ஒருவர் செய்யத் தூண்டுகிற இடை விடாத எண்ணங்கள் இருக்கும் கோளாறு. இது சில முச்சுழற்சி மனச்சோர்வு அகற்றும் மருந்து களால் குணமடைகிறது.
obsession : வெறியுணர்வு : தருக்க முறையான முயற்சிகள் மூலம் நனவு நிலையிலிருந்து அடியோடு நீக்க முடியாதிருக்கிற தடுக்கமுடியாத எண்ணத்துடன் அல்லது உணர்வுடன் கூடிய மனநிலை.
obstertrician : தாய்மை மருத்துவர்; மகப்பேறு மருத்துவர்; பேற்றியல் வல்லுநர் : மகப்பேற்று மருத்துவ வல்லுநர்.
obstetrics : தாய்மை மருத்துவம்; பேற்று மருத்துவம் : மகப்பேறு தொடர்பான மருத்தவ இயல்.
obstructed labour : தடைபடும் மகப்பேற்று வலி : இயல்பான முறையில் மகப்பேறு நடைபெற இயலாதிருக்கிற ஒருநிலை.
obstructed hernia : தடைபட்ட குடலிறக்கம் : இரத்தவோட்டம் தடைபடாமல் குடல் தடைகளை உண்டாக்கும் மேலும் குறுக்க முடியாத குடலிறக்கம்.
obstruction : அடைப்பு; தடை.
obstruction, intestinal : குடல் அடைப்பு.
obstruction, pyloric : வாயில் அடைப்பு.
obturator : எலும்புப் புழையடைப்பு; அடைப்புத் தட்டு; மூடி : ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல்.
occipital : பின் மண்டை எலும்பு சார்ந்த பின்உச்சிய : தலையோட் டின் பின்புறமுள்ள எலும்பு. இதிலுள்ள பெரிய துவாரத்தின் வழியாக முதுகந்தண்டு செல்கிறது.
occipitalis : பிடரிப்பின்தசை : பிடரித் தசையின் பின்பகுதி.
occipitalization : பிடரி எலும்பு இணைப்பாக்கம் : கழுத்தெலும் புக்கும் பிடரிக்கும் இடையிலுள்ள எலும்புக் கூட்டிணைப்பு.
occipitobregmatic : பிடரி எலும்பு சார்ந்த : பிடரிக்கும் முன் தலைக்கும் இடையிலுள்ள எலும்பு சார்ந்த.
occipitocervical : பிடரி கழுத்து சார்ந்த : பிடரி மற்றும் கழுத்து தொடர்புடைய.
occipitofrontal : பிடரி முகம் சார்ந்த : பிடரியும், முகமும் தொடர்புடைய.
occipitofrontalis : பிடரிப்புடைப்பு : மண்டையோட்டின் உச்சியை மூடியிருக்கும் மெல்லிய அகலமான தசைகளின் இணையில் ஒன்று. இதில் தசைப்பட்டையினால் இறைக்கப்பட்ட ஒரு பிடரிப்புடைப்பை அடங்கியுள்ளது.
occipitomental : பிடரி-முகவாய்க்கட்டை சார்ந்த : பிடரியும், முகவாய்க் கட்டையும் சார்ந்த. occipitoparietal : பிடரி-உச்சி சார்ந்த : பிடரி மற்றும் மண்டையுச்சி எலும்புகள் அல்லது மூளையின் தொங்குதசை தொடர்புடைய.
occiptotemporal : பிடரி பொட்டெலும்பு சார்ந்த : பிடரி மற்றும் பொட்டெலும்புகள் தொடர்புடைய.
occiptothalamic : பிடரி பொட்டெடெலும்பு; மூளை நரம்பு சார்ந்த : பிடரிப் பொட்டெலும்பு, மூளை நரம்பு தொடர்புடைய.
occiput : பின்தலை; பிடரி : மண்டையின் பின்பகுதி.
occlusal : திறப்புவாயில் அடைப்பு சார்ந்த : மேற்பற்களுக்கும் கீழ்த் தாடைக்குடைமிடையிலுள்ள பிணைப்பு போன்று ஒரு திறப்பு வாயின் அடைப்பு தொடர்பான.
occlusion : உள்துளை நிரப்பு; குழல் அடைப்பு; மூடல்; மூடுகை : நாளங்களின் அல்லது இரத்த நாளங்களின் உள்துளையை அடைத்தல். பல் மருத்துவத்தில் கடைவாய்ப்பற்களின் புழையை அடைத்தல்.
occlusion, coronary : இதயத் தமனி அடைப்பு.
occult : மறை.
occupation : செய் தொழில்.
occupation, diseases : தொழிலிய நோய்.
occupancy : நோயாளர்-படுக்கை விகிதம் : மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைக்கும் தினமும் சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான சராசரி விகிதம்.
occupational therapy : (தொழில் முறை) பணிவரி மருத்துவம்; தொழிலிய நோய் : அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உச்ச அளவு செயல்திறனையும், சுதந்திரத்தையும் எட்டும் வகையில், குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் உடலியல் மற்றும் உடலியல் சிகிச்சையளித்தல்.
ochrometer : தந்துகிக் குருதி அழுத்தமானி : தந்துகி இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.
ochronosis : புரத வளர்சிதை மாற்றக் கோளாறு : உடலில் உள் ளார்ந்துள்ள புரத வளர் சிதை மாற்றக்கோளாறு. இது அல்காப்டோன் சிறுநீர்ப் பொருள்கள் படிந்த, உடல் திசுக்களின் அடுக்குப்படிவு உண்டாக்குகிறது. ஒருபடித்தான அமிலம் இருத்தல் காரணமாக கண்காதுகளில் வெண்மை நிறம் உண்டாதல், மூட்டு வீக்கம், சிறுநீர் கரு நிறமாதல் உண்டாகிறது. Ochsner clasping test : ஆஷ்னர் பிடிப்புச் சோதனை : கைகள் பற்றிப் பிடிக்கும்போது ஆள் காட்டி விரல் நீட்சியடையாமல், சுட்டுநிலையிலேயே இருத்தல். இது நரம்பு முடக்கு வாதத்தால் ஏற்படுகிறது. அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஆல்பர்ட் ஆஷ்னர் இதனை விவரித்துக் கூறினார்.
Octapressin : ஆக்டாபிரசின் : பிரிலோக்கெய்ன், ஃபெலிப்பிரசின் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.
Octipara : எட்டுக் கருக்குழந்தைப் பெண் : உயிர்வாழக்கூடிய எட்டுக் குழந்தைகளைக் கருவில் கொண்டிருக்கும் ஒரு பெண்.
octopamine : ஆக்டோபாமின் : போலிப்பரிவு அமின்; இது ஒரு பொய்யான நரம்பு ஊடு கடத்தி.
octreotide : ஆக்டிரியோட்டைடு : அமினோப்புரத இயக்குநீரை ஒத்த ஒரு செயற்கைப் பொருள் இது வளர்ச்சி இயக்குநீருடன் மிகுந்த ஒப்புமையுடையது. இது அகற்சி நோயுடைய நோயாளிகளிடம் குருதிவடிநீர் வளர்ச்சி இயக்குநீரைக் குறைத்து, நோய் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கிறது.
ocular : கண்ணுக்குரிய; விழியின்; கண் சார்ந்த : பார்வை சார்ந்த.
oculentum : கண் களிம்பு; அஞ்சனம்; கண் மை : கண்ணோய்க்குப் பயன்படும் களிம்பு மருந்து. கருவியில் பொருத்தப்படும் விழிக்கண்ணாடிச் சில்லு.
ocularist : செயற்கை விழியாக்குநர்.
oculist : கண் மருத்துவர் : கண் மருத்துவ வல்லுநர்.
oculocardiac reflex : இதயத் துடிப்பு முரண்பாடு : கண்ணில் அல்லது கண் அருகில் எழுகிற பலவகைத் தூண்டல்கள். இதனால், இதயத் துடிப்பு வீதத்தில் அல்லது ஒத்திசைவில் முரண்பாடுகள் உண்டாகின்றன.
oculocephalic reflex : கண்-தலை நோய் அனிச்சைச் செயல் : மூளைத்தண்டின் ஒருங்கிணைப்பைத் தீர்மானிக்கிற ஒரு சோதனை நோயாளியின் தலை திடீரென ஒருபக்கம் அசைந்து, பின்னர் மறுபக்கம் அசையும் போது கண்கள் பொதுவாகத் தலை அசைவுக்குக் காலந்தாழ்ந்து அசையும். கண்கள் மெல்ல மெல்ல நடுமையநிலைக்கு வரும். மூளைத்தண்டின் எதிர்ப்புறத்தில் நைவுப்புண் ஏற்படும்போது கண்கள் நடுமையத்துக்குத் திரும்பாமல் கண் பார்வை இழப்பு உண்டாகிறது.
oculogyration : கண்விழி நிலைப்பாடு : கண்விழி அதன் முன்பின் அச்சினைச் சுற்றி வடிவில் சுற்றி, கண்கள் மேலும், பக்கவாட்டிலும் நிலைப்பாடு கொள்ளுதல்.
oculomotor : கண்ணியக்க நரம்பு; கண்ணியக்க : மூன்றாவது மண்டை யோட்டு நரம்பு. இது கண்களை அசைத்து, மேல் இமையை அளிக்கிறது.
oculonasal : கண்மூக்கு சார்ந்த.
Oddi's sphincter : ஆடித்தசைச் சுருக்கம் : பொதுவான பித்தக் குழாய், கணையக்குழாய் இரண்டின் திறப்பு வாய்தகை முன் சிறுகுடலினுள் சுருங்கியிருத்தல். இத்தாலிய மருத்துவ அறிஞர் ரக்கரோஆடி என்பார் இதனை விவரித்துக் கூறினார்.
odds ratio : அபாய விகிதம் : அபாயக் காரணிக்கும் வெளிப் பாட்டுக்குமிடையிலான தொடர்பின் வலிமையை அளவிடுதல். இது தொடர்புறு அபாயத்துடன் நெருங்கிய தொடர்புடைய.
odontalgia : பல்வலி; பல் உளைச்சல்.
odontexesis : பல் மெருகேற்றும் : பல்காரையை அகற்றி பல்லுக்கு மெருகேற்றுதல்.
odontitis : பலழற்சி : பல் எகிறில் ஏற்படும் வீக்கம். இதனால், பல் அளவுக்கு மீறி விரிவடைதல்.
odontoblast : பல்லடிக்கூழ் உயிரணு : பல்லில் டென்டின் படிவதும், பல்மேற்பரப்பில் கூழ்ப்பொருள் உருவாவதும் தொடர்புடைய உயிரணு.
odontoclast : பல்வேர் உயிரணு : விழுகின்ற பல்லின் வேர்களை ஈர்த்துக் கொள்வதற்குக் காரணமான உயிரணு.
odontodysplasia : அதீத பல் வளர்ச்சி :' பல் வளர்ச்சியில் ஏற்படும் மட்டுமீறிய நிலைமை. இது இனாமல், டென்டின் உருவாக்கத்தில் குறைபாட்டைக் காட்டுகிறது.
odontogen : ஆட்டோன்டோஜன் : பல் டென்டின் உருவாக்கத்துடன் தொடர்புடைய பொருள்.
odontic : பல் சார்ந்த.
odontoid : பல் போன்ற; பல்லுரு; பல்லணைய.
odontology : பல் மருத்துவயியல்; பல்லியல்.
odontoma : பல்கட்டி; பல்புத்து : பற்களின் கட்டமைவுகளில் உண்டாகும் கட்டி.
odontotherapy : பல்நோய் மருத்துவம்; பல் மருத்துவம்.
odour : நெடி; வாடை; மணம்.
odourless : நெடியிலா.
odynophagia : உணவுக் குழாய் வலி : உணவை விழுங்கும்போது ஏற்படும் வலி. உணவுக்குழாய் அழற்சி, வாய் அழற்சி போன்ற நிலைமைகளில் இது ஏற்படுகிறது.
oedema : இழைம அழற்சி; நீர்க் கோவை; வீக்கம் : இழைமங்களில் உண்டாகும் நீர்க்கோவை. இது பல காரணங்களால் உண்டாகும். இது இரத்தத்தில் ஏற்படலாம். இதய நுரையீரல் மண்டலங்ளிலும் சிறுநீரக மண்டலத்திலும் ஈரலிலும் உண்டாகலாம்.
oedema, cardiac: இதய வீக்கம்.
oedema, nutritional : ஊட்டக் குறை வீக்கம்.
oedema, renoi : நீரகநலி வீக்கம்.
oedema, pulmonary : நுரையீரல் வீக்கம்.
оedipus complex : ஈடிப்பஸ் உணர்வு; தந்தையை வெறுத்த தாய்ப்பாச மிகைப்பு : உளவியலின்படி எதிர்பாலராகிய பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்து இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய உள்ளுணர்ச்சி. தாயிடம் மகனுக்குள்ள இந்த உட்செறிவான பற்கள்.
oesophageal : உணவுக் குழாய் சார்ந்த; இரைக் குழல் சார்ந்த : உள்ளுணர்வு, தந்தைமீது அவனுக்குப் பொறாமையைத் தோற்று விக்கிறது. இதனால் அவன் உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளாகிறான். இதனைத் தனது குழந்தைப் பருவப் பாலுணர்வு என்ற கோட்பாட்டில் உளவியலறிஞர் ஃபிராய்டு விளக்கி உள்ளார். ஆண் குழந்தைகளிடம் இந்த உணர்வு இருப்பது இயல்பு என்று அவர் கூறியுள்ளார்.
oesophageal Artesia : உணவுக் குழாய் வளர்ச்சி.
oesophagectasis : உணவுக் குழாய் அழற்சி : உண்குழல் ஊதல்.
oesophagectomy : உணவுக் குழாய் அறுவை மருத்துவம்; உண்குழல் எடுப்பு : உணவுக் குழாயின் ஒரு பகுதியை அல்லது அதனையும் முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல்.
oesophagitis : இரைக்குழல் அழற்சி; உணவுக் குழாய் அழற்சி : உணவுக் குழாய் வீக்கம்.
oesophagus : உணவுக் குழாய்; உண் குழல் : தொண்டையை கடந்து இரைப்பைக்குள்
செல்லும் குழாய் இது 23செமீ நீளம் உடையது.oesophagos copy : உணவுக் குழாய் கருவி; உணவுக் குழாய் நோக்கி; உண்குழல் காட்டி : உணவுக் குழாயினுள் செலுத்தி உள்ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி.
oesophagotomy : உணவுக் குழாய் அறுவை; உண்குழல் அறுவைத் திறப்பு.
oesophagus : உணவுக்குழாய் : தொண்டையைக் கடந்து இறைப் பைக்குச் செல்லும் உணவுக் குழாய்.
oestrodia : கருஅண்ட சுரப்புநீர் : கருஅண்ட நுண்ணுறை உயிரணுக் களில் சுரக்கும் நீர். இது நுரை யீரலினால் ஊஸ்டிரோனாகவும், ஊஸ்டிரியோலாகவும் மாற்றப் படுகிறது.
oestrogen : கருப்பை இயக்குநீர் : கரு அண்டத்தில் சுரக்கும் இயக்குநீர்கள் பேற்றுமைக் காலம் முழுவதிலும் இவை சிறுநீரிலும் வெளியேறும்.
Ogden plate : ஆக்டென் தகடு : வடுப்பள்ளங்கள் உடைய நீண்ட உலோகத்தகடு. இது நீண்ட எலும்பு முறிவுகளை இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Ogilvie's syndrome : ஆக்ளிவி நோய் : குடல் விரிவாக்கத்தினால் உண்டாகும் கடுமையான போலி குடல்தடை பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் வில்லியம் ஆக்ளிவி பெயரால் அழைக்கப் படுகிறது.
Ogston's line : ஆக்ஸ்டான் வரி. தொடையெலும்பின் புடைப்புக்கும் எலும்புமுனை முடிச்சு வரையுள்ள ஒரு வரி. ஸ்காட்டிஷ் அறுவை மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஆக்ஸ்டான பெயரால் அழைக்கப்படுகிறது.
Ohis bed : ஒகிலோ படுக்கை : தீவிர மருத்துவப் பிரிவிலுள்ள குழந்தைகளுக்கான திறந்த பக்கமுடைய படுக்கை. குழந்தையின் உல்வெப்ப நிலையைப் பேணுவதற்கான சாதனங்களையும் வசதிகளையும் குழந்தை யைச் சுற்றி வைப்பதற்கு இதில் போதிய இடவசதி அமைந்திருக்கும்.
oid-oid disease : ஆய்ட்-ஆய்ட் நோய் : கசிவுத்தோல் அழற்சியும், படை நோய் இரண்டும் இணைந்த நோய்.
ointment : களிம்பு : மருந்து நெய்.
old tuberculin : பழைய காச நோய்க் கிருமி (OT) : இயல்பு நீக்கிய ஒரு கலவைப் பொருள். துண்காச நோய்க் கிருமியிலிருந்து உண்டாகும் பெரும் எண்ணிக்கையிலான நுண்ணுயிரி காப்பு மூலங்கள். இது காச நோய்க் கிருமிச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது. oleander : அலரி : கார்டியாக் கிளைக்கோசைடு கொண்டுள்ள ஒரு நச்சுப் புதர்ச்செடி.
olecranon : முழங்கை முனை; முன்கை எலும்பு பிதுக்கம் : முழங் கைப்பகுதியிலுள்ள முன்கை அடியெலும்பு, உடலின் மையத்தை நோக்கித் துருத்திக் கொண்டிருத்தல், முன்கை நீண்டிருக்கும் போது புயஎலும்பின் பள்ளத்தினுள் பொருந்தி இருத்தல்.
olestra : ஒலெஸ்டிரா : 'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்கொள்ளப்பட்டு, அதனால், மொத்தக் கலோரிகளின் அளவு குறைகிறது.
oleo-vitamin : ஓலியே-வைட்டமின் : மீன் ஈரல் எண்ணெய் அல்லது உண்ணத்தக்க தாவர எண்ணெய். இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
oleum ricini : விளக்கெண்ணெய் : ஆமணக்கு விதையிலிருந்து எடுத்த எண்ணெய்.
olfaction : நுகர்வுணர்வு / மோப்பம் / மணம் உணர்தல் : வாசனை அறியும் உணர்வு.
olfactories : நுகர்; நுகர்வுறுப்புகள் : முகர்வுணர்வுக்குரிய உறுப்புகள்.
olfactory : நுகர்வுணர்வு சார்ந்த; நுகர்ச்சி; மோப்ப; நாசி சார்ந்த.
oligaemia : குருதிக் குறைபாடு; குறை குருதி : இரத்தத்தின் மொத்த அளவு குறைவாக இருத்தல்.
oligodendrogiia : நரம்புசாரா உயிரணுக்கள் : புறத்தோலில் உண்டாகும் நரம்புசாராத உயிரணுக்கள். இவை மைய நரம்பு மண்டலத்தின் மூளை ஆதாரத் திசுவின் ஒரு பகுதியாகிறது.
oligohydramnios : கருந்திரவக் குறைபாடு; குறைநீர்ப் பனிக்குடம்.
oligomenorrhoea : சீரற்ற மாதவிடாய்; மாதவிடாய் குறை ஒழுக்கு : மாதவிடாய் உரிய காலத்தில் நிகழாதிருத்தல், மாதவிடாய் இயல்பான காலச்சுழற்சிக்கு மேற்பட்டு 35 நாட்களுக்கு மேலும் நீடித்தல்.
oligophrenia : மன வளர்ச்சிக் குறைபாடு; உள வளர்ச்சிக் குறை : மன வளர்ச்சி இயல்புக்குக் குறைவாக இருத்தல்.
oligosaccharide : ஓலியோ சாக்கரைடு : ஒற்றை சாக்கரைடு அலகு களில் சில எண்ணிக்கையிலான ஒரு கூட்டுப்பொருள்.
oligospermia : விந்தணுக் குறைபாடு; விந்தணுக் குறை; விந்துக் குறைவு : ஆணின் விந்தில் விந்த ணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல்.
oliguria : சிறுநீர்ச் சுரப்புக் குறைவு; குறைச் சிறுநீர்; நீர்ச் சுண்டி; நீர்க் குறை.
olophonia : பேச்சுக் குறைபாடு : குரல் நூண்கள் திரிபடைந் திருப்பதால் ஏற்படும் பேச்சுக் குறைபாடு.
Omegasign : ஒமேகா குறியீடு : முகம் சுளிக்கும்போது புருவத்தைச் சுருக்கும் தசை நிலையாகச் சுருங்குவதால் உண்டாகும். சுரிப்புப் புருவத்துடன் கூடிய முகபாவம். இது, மனச் சோர்வுடைய நோயாளிகளிடம் காணப்படும்.
omentectomy : வபை மடிப்பு அறுவை மருத்துவம் : வபை மடிப்பு முழுவதையும் அல்லது அதன் பகுதியை வெட்டி எடுத்தல்.
omentopexy : வபை-திசு இணைப்பு : வபை மடிப்பினை திசு எதனுட னும் பொருத்துதல் பக்கக் குருதியோட்டத்தை ஏற்படுத்த இது செய்யப்படுகிறது.
omentum : வபை மடிப்பு : குடல் போன்ற மற்ற வயிற்று உறுப்பு களுடன் இரைப்பையை இணைக்கும் வபை மடிபபு.
omnifocal : இருநோக்குக் கண்னோடி : கிட்டப் பார்வை தூரப்பார்வை இரண்டுக்கும் பயன்படக்கூடிய ஒரு முக்குக் கண்ணாடி. இதிலுள்ள படிக்கும் பகுதி மாறுபடும் வளைவாக இருக்கும்.
omnipotence : பேராற்றல் : எல்லாம் வல்ல தன்மை வாய்ந்த, மிக உயர்வாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படும் தலைசிறந்த பொருள். அகப்புற மூல இயல்பின் பிற அம்சங்களை மறுத்தல். இது ஒரு பித்தனின் தற்காப்பு போன்றது.
Omnopon : ஓம்னோப்போன் : பாப்பாவெரேட்டம் என்ற மருந்தின் வணிகப் பெயர். இதில் 50% மார்ஃபின் அடங்கி உளளது.
omoplate : தோள் பட்டை எலும்பு.
omphalitis : தொப்புள் அழற்சி; உந்தி அழற்சி : தொப்புளில் ஏற்படும் வீக்கம்.
omphalocoele : குடல் துருத்தம் : உந்திக்குழியின் அடிவயிற்றுச் சுவரிலுள்ள ஒரு குறைபாட்டின் வழியாக பிறவியிலேயே குடலின் ஒரு பகுதிதுருத்திக் கொண்டிருத்தல்.
omphaloma : உந்திக் குழிக் கட்டி : உந்திக் குழியில் ஏற்படும் கட்டி.
omphalotomy : கொப்பூழ்க் கொடியைப் பிரித்தல்.
Ompholith : உந்திக் குழிக்கல் : முடி, அழுக்கு, செதிலுறவு ஆகியவை மயிர்ப்பை சுரப்பு நீருடன் கலந்து திரண்டிருக்கும் ஒரு கலவை. இது உந்திக் குழியில், பழுப்புநிற அல்லது கருப்பு நிறக் கல்லாக இருக்கலாம்.
onchocerca : யானைக்கால் நோய்ப் புழு : யானைக்கால் நோய் உண்டாக்கும் புழுக்களில் ஒருவகை.
onchocerciasis : யானைக்கால் புழுபீடிப்பு : யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல். தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்களில் இதன் முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும். கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையு மானால் ஆற்றுக் குருடு நோய் உண்டாகும்.
onchogenic : கட்டி உண்டாக்கும் கிருமி : உயிரணுக்கள் உக்கிரமான உருமாற்றத்தை உண்டாக்கும் திறனுடைய கட்டி ஏற்படுத்தும் நோய்க்கிருமி, அல்லது டி.என்.ஏ. கிருமி அல்லது ஆர்.என்.ஏ. கிருமி.
oncogene : ஆன்கோஜென் : புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள். இவை ஆன்கோஜெனிக் ஆர்.என்.ஏ. கிருமிகளிலிருந்தும், இயல்பான மரபணுக்களிலிருந்தும் உருவிக் கப்படுகின்றன.
oncogenes : புற்று மரபணுக்கள் : கட்டுப்படுத்த முடியாத புற்று நோய் வளர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒரு உந்து பொருளினால் துண்டப்படுவதாகக் கருதப்படும் மரபணுக்கள்.
oncogenic : கழலை உண்டாக்குகிற.
oncology : உயிர்ப் பொருளியல்; புத்தாக்கவியல் : உயிர்ப் பொரு ளினை அறிவியல் மருத்துவ முறையில் ஆராய்தல்.
oncolysis : உயிர்ப்பொருள் அழிவு; புத்தாக்கமுறிவு : உயிர்ப் பொருள்களை அழித்தல்; சில சமயம் கட்டியின் வடிவளவைக் குறைக்கப் பயன்படுகிறது.
oneosphere : திசுக்கட்டிப்புழு : முதுகெலும்புப் பிராணிகள் மற்றும் முதுகெலும்பில்லாய் பிராணிகளின் திசுக்களில் உள்ள நாடாப் புழுவின் கூட்டுப்புழு நிலை.
Oncovin : ஆன்கோவின் : வின்கிரிஸ்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
one eyed : ஒற்றைக் கண்.
one-eyed vertebra : ஒற்றைக் கண் முள்ளெலும்பு : இடுப்பு நரம்பு முள்ளெலும்புக் காம்பு ஒரு பக்கமாக அழிந்துபோதல். இதனை முதுகெலும்பு உடலின் உறுப்பிடை மாற்றத் தசைப் புற்றின் வரைபடத்தில் காணலாம். onion bulbs : வெங்காயக் குமிழ்கள் : கருமையான நரம்பிழை உறையழிவில் புறநரம்புகளில் காணப்படும் பகுதிவாரி நரம்பிழை உறையழிவு. இதில் 'ஷபான்' உயிரணுக்கள் வெங்காயத் தோல் போன்று செதிளடுக்காக அமைந்திருக்கும்.
onlay : ஒட்டிணைப்பு : ஒர் உறுப்பின் அல்லது கட்டமைப்பின் மீது பொருத்தப்படும் ஒட்டிணைப்பு. உள்துளை பரப்பு முழுவதையும் மூடும் வகையில் நீட்டிக்கப்படும் அகற்றுப்படத் தக்க பகுதி செயற்கைப் பல் தொகுதி.
onset : தொடக்கம்.
onychia (whitlow) : நகச்சுற்று; நக அகற்சி; நகப்படுவன் : நகத்தைச் சுற்றி ஏற்படும் கடுமையான வீக்கம் சில சமயம் இந்த வீக்கம் நகத்திற்கு அடியிலும் பரவி, சீழ் வைத்து நகம் விழுந்து விடும்படி செய்யும்.
onychodystrophy : நக உருத் திரிவு : விரல் நகங்களின் அல்லது கால் நகங்களின் உருத்திரிபு அல்லது நிறமாற்றம்.
onychocryposis : உள்நக வளர்ச்சி; திருகு நகம்; மறை நகர் : நகம் தசைக்குள் உள்நோக்கி வளருதல்.
onycholysis : நகத் தளர்ச்சி; நக நெகிழ்ச்சி : கால் நகம் அல்லது விரல், நகம், நகப்படுகையில் இருந்து நீக்கிவிடுதல்.
onychomycosis : பூசனநகச் சுற்று; நகப்பூசணம் : நகங்களில் ஏற்படும் பூஞ்சண நோய்.
onyongnyong fever : மூட்டு வலிக் காய்ச்சல் : கிழக்கு ஆஃப் ரிக்காவில் கொசுவால் பரவும் ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒருவகைக் காய்ச்சல், இது முதன் முதலில் 1959இல் வடமேற்கு உகாண்டாவில் கண்டறியப்பட்டது.
oocyte : முதிராச்சினை : முதிராத சூல் முட்டை.
oogamous : கரு உயிர்ச் சேர்க்கை தோற்றம் : ஆண்-பெண் கரு உயிர்மச்சேர்க்கையின் விளைவாக இனப்பெருக்கம் ஏற்படுத்துகிற.
oogamy : பாலின இனப்பெருக்கம் : ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டாதல்.
oogenesis : கருவுயிர்த் தோற் றம்; கரு அணு தோற்ற வளர்ச்சி : பெண் அண்டத்தில் பெண்கரு உயிரணுக்கள் தோன்றி உருவாதல்.
ookinete : மலேரிய ஒட்டுண்ணிக் கரு : கொசுவின் உடலில் உள்ள மலேரிய ஒட்டுண்ணியின் கருவுற்ற வடிவம்.
oophorectomy : பெண் அண்டச் சுரப்பி (ovary) அறுவை; அகற்றல்; அண்டைப்பை வெட்டு : பெண் அண்டச்சுரப்பி அகற்றல்.
oophoritis : அண்டப்பை அழற்சி : பெண் அண்டச் சுரப்பியில் எற்படும் வீக்கம்.
oophoron : கருமுட்டைப் பை.
oophorosalpingectomy : கருப்பை குழாய்; கருவண்ட அறுவை; கருப்பைக் குழல் எடுப்பு : கருவண்டப் பையையும் அதனுடன் இணைந்த கரு வெளியேறும் குழாயையும் வெட்டியெடுத்தல்.
oophorosalpingitis : கரு அண்டம்-கருக்குழாய் வீக்கம் : கரு அண்டம், கருவெளியேறும் குழாய் இரண்டிலும் ஏற்படும் வீக்கம்.
oosperm : முதிர்வுச் சினை : முதிர்வுற்ற சூல் முட்டை.
ooze : ஒழுகு கசிவு.
opacity : மழுங்கல்; ஒளி புகாமை; ஒளி புகாத்தன்மை : ஒளி ஊடுரு விச் செல்லவிடாத தன்மை.
open amputation : திறந்தருவை உறுப்பு நீக்கம் : தோல் மூடி இல்லாமலே நேரடியாக உறுப்பைத் தறித்தெடுக்கும் உறுப்பு நீக்க முறை.
open bite : திறந்த நிலைக் கடித்தல் : முன்பக்கப் பற்கள், தாடை யின் இரு பகுதிகளில் எதனுடனும் பொருந்தி அமைந்த இயல்பு திரிந்த பல் அமைப்பு.
open heart surgery : திறந்த நிலை இதய அறுவை மருத்துவம் : இதயம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு அதன் செயல்முறையை ஒர் எந்திர இறைப்பான் மூலம் எடுத்துக்கொண்டு இதயத்தில் அறுவை மருத்துவம் செய்யும் ஓர் நடைமுறை.
open pneumothorax : திறந்த நிலை நுரையீரல் உறை காற்று நோய் : மார்புச் சுவரில் ஒரு திறந்த நிலைக் காயம் காரணமாக நுரையீரல் உட்குழிவில் காற்றழுத்தம் ஏற்படுதல்.
operable : அறுவை மருத்துவம் உகந்த நிலை : குணப்படுத்துவதற்கு அல்லது நிவாரணமளிப்பதற்கு அறுவை மருத்துவம் அளிப்பதற்கு உகந்ததாக உள்ள நிலை.
operant : துலங்கல் வீதம் : குறிப்பிட்ட புறத்தூண்டல் எதுவு மில்லாமல் ஒரு குறிப்பிட்ட வீதத்தில் நிகழ்கிற துலங்கல் எதுவும்.
operating microscope : அறுவை நுண்ணோக்காடி : நுண்ணிய திசுக்களிலும் குருதி நாளங்களிலும் அறுவை மருத்துவம் செய்யும் போது அவற்றை உருப்பெருக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி.
operation : அறுவை மருத்துவம்; அறுவை : உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை.
operating room : அறுவை மருத்துவ அறை.
operating table : அறுவை மருத்துவ மேசை.
operating theatre : அறுவை மருத்துவ பேரவை.
operation, caesarean : சீசரிய அறுவை.
operation, sterilisation : கருத் தடை அறுவை.
operidine : ஆப்பெரிடின் : ஃபெனோப்பெரிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
operon : பொதுத் தொடர்பு மரபணு : பாக்டீரியாவிலுள்ள, ஒரு பொதுவான ஒர் இயக்க மரபணுவையும், தொடர்புடைய செயல் முறையைக் கொண்ட கட்டமைப்பு மரபணுவுடன் நெருங்கிய தொடர்புடைய இனக்கீற்றின் ஒரு கூறு.
opthalmia (ophalmitis) : கண் நோய்; கண்ணழற்சி : கண்ணில் ஏற்படும் வீக்கம். கண்ணுளைச்சல்.
opthalmia, moonatorum : சிசு கண்ணழற்சி.
opthalmiatrics : கண் நோய் மருத்துவவியல்.
ophiasis : வழுக்கைப் பரவுதல் : மயிரிழப்புப் பட்டைகள்,உள்ள படியான முடி எல்லைக் கோட்டினுள் முக்கியமாகப் பொட்டெலும்பு மற்றும் பின் உச்சி மண்டலத்துக்குள் நீண்டிருத்தல்.
ophthalmencephalon : பார்வை மண்டலம் : விழித்திரை, பார்வை நரம்பு, மூளையின் பார்வைச் சாதனம் ஆகியவை அடங்கிய தொகுதி.
opthalmic : கண்ணோய் மருந்து; கண் சார்ந்த : கண்ணோய் போக்கக் கூடிய மருந்து, கண்ணழற்சி கண்டுள்ள கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ள.
opthalmitis : கண்ணழற்சி.
opthalmodynamometry : விழித்திரை அழுத்த அளவீடு : விழித் திரைத் தமனி அழுத்தத்தை அளவிடுதல்.
opthalmologist : கண் மருத்துவர்; கண் இயல் வல்லுநர் : கண் ணோய் மருத்துவ வல்லுநர்.
opthalmology : கண் மருத்துவம் : கண்ணோய்களைக் கண்டறிதல், அவற்றைக் குணப்படுத்துதல் பற்றிய ஆய்வியல். கண் நோயியல்.
opthalmoplegia : கண்தசை வாதம் : கண்ணை இயக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் ஏற்படும் வாத நோய். ophthalmoscope : கண் உள் விழி உள்நோக்கி; கண்சோதனைக் கருவி; விழி உள்நோக்கி; கண்ணுள் காணல் : கண்ணின் உட்புறத்தைப் பரிசோதிப்பதற்காக ஒர் ஆடியும், ஒளிவிளக்கும் அமைந்துள்ள ஒரு கருவி.
ohpthalmotonometer : கருவிழி அழுத்தமானி; கண்ணழுத்த அளவைமானி : கருவிழிக்குள் நீரழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.
opiate : அபின் தூக்க மருந்து : அபின் போன்ற தூக்க மருந்து, அபின் கலந்த நோவகற்றும் மருந்து அபின் கலந்து மயக்கமூட்டும் மருந்து.
opioid peptides : அபினி பெப்டைடுகள் : உள்முக மயக்கமூட்டும் அபின் கலந்த மயக்மூட்டும் மருந்துகள். இவை இயற்கையான பன்முகப் பெப்டைடு நரம்பு கடத்திகள். இவை வலியை உணர்தல், அழுத்த விசைத் துலங்கல், பசியை முறைப்படுத்துதல், உறக்கம், நினைவாற்றல், கல்வி கற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
opisthotonos : உடல் நீட்சி : நரம்பிசிவு நோயாளிகளுக்கு உடல் அளவுக்கு மீறி நீட்சி, விரைத்தல். அப்போது அவரது பாதங்களும், தரையும் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.
opisthotonus : உள்வளைந்த முதுகு.
Optiz-Frias syndrome : ஓபிட்ஸ்-பிரியாஸ் நோய் : சிறுநீர்க்குழாய் உருத்திரிபு, தொண்டைக் குழி அடைப்பு போன்ற நோய்கள். இவை மிக அரிதாக ஏற்படும் மரபுவழி நோய்.
opium : அபினி; கஞ்சா; கம்புகம் : கஞ்சாச்செடி விதையிலிருந்து எடுக்கப்படும் உலர்ந்த சாறு. இதில் மார்ஃபின், கோடைன் வெடியக் கலப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன. நோவகற்றும் மருந்தாகப் பயன்படுகிறது. மார்பினைவிட இது அதிக மலச்சிக்கலை உண்டாக்கும். அபினிச் சாரமாகவும் பயன் படுகிறது.
opoidine : ஒப்பாய்டின் : பாப்பா வெர்ட்டம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Oppenheim's reflex : ஒப்பன்ஹைம் இயக்கம் : பாதம் சிறிதளவு பின்புறம் வளைந்து, பெரும்பாலும் நீண்டிருத்தல். பெர்லின் நரம்பியலறிஞர் ஹெர்மன் ஒப்பன்ஹைம் பெயரால் அழைக் கப்படுகிறது.
opponens : எதிர்ப்புத்தசை : கட்டை விரலின் தசை எதிர்ப் புறமாகத் திரும்பியிருத்தல். கட்டுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடுவதன் மூலம் இது சோதித்தறியப் படுகிறது.
opportunists : சந்தர்ப்பவாதி : பழுதுபட்ட தாய் உயிர்த் தற்காப்புச் செயல்முறைகளின் வாய்ப்பு வழிகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்.
opportunistic infections : சந்தர்ப்பவாதத் தொற்று நோய்கள் : ஆரோக்கியமான ஒருவரிடம் அரிதாகநோய் உண்டாக்குகிற. ஆனால், நோய்த் தடைக் காப்பு முறை பலவீனமாக உள்ளவர்களிடம் அடிக்கடி நோய் உண்டாக்குகிற உயிரிகளினால் ஏற்படும் நோய்கள். ஏமக்காப்பு நோய் (எயிட்ஸ்) போன்ற நோய்கள் இதற்குச் சான்று.
opsin : ஊடு சவ்வுப் புரதம் : விழித்திரை நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளின் ஊடு சவ்வுப் புரதம்.
opsoclonus : கண் சுரிப் பிழுப்பு : கண்களின் கலந்திணைந்த, ஒழுங் கற்ற, ஒரு சீராக இல்லாத, சுரிப் பிழுப்பு உடைய அசைவுகள்.
opsomania : தனி உணவு மோகம் : சில சிறப்பான உணவுக்கான மோகம்.
opsonic : நிணநீர்த்திறள் : நோய் நுண்மங்களை நிணநீர் அணுக்கள் எளிதில் ஈர்த்துக்கொள்ளும் செயலைச் செய்யும்.
opsonin , நோய் நுண்ம எதிர்ப்பு விளை பொருள் : நோயாளியின் உடம்பினுள் அழிந்த நோய்க் கிருமிகளைச் செலுத்துவதால் உண்டாகும் பொருள்.
opsonic index : நிணநீர்திறன் குறியீட்டெண் : நோயனுக்களை ஈர்த்துக் கொண்டு உடலை நோய்களிலிருந்து தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணுக்கள். பாக்டீரியா போன்ற அயற்பொருள்களை உள்ளே கொண்டு செல்வதற்க எவ்வளவு திறன் வாய்ந்தனவாக இருக்கின்றன என்பதைக் குறித்துக் காட்டும் பரிசோதனை மூலம் கிடைக்கும் குறியீட்டெண்.
opsonization : துகள் உயிரணு சூழ்தல் : துகள் சூழ் உயிரணு சூழ்தலுக்கு பாக்டீரியாவும் பிற உயிரணுக்களும் உட்படுமாறு செய்தல்.
optic : கண்சார்ந்த; பார்வை சார்ந்த : கண்பார்வைக்குரிய.
opticatrophy : பார்வை நரம்பு சூம்புதல்.
optic chiasma : பார்வைச் சந்தி : பார்வைச் சிலுவை.
optic disc : பார்வை வட்டு.
optic nerve : பார்வை நரம்பு.
optic neuritis : பார்வை நரம்பு அழற்சி.
optical : கண்ணுக்குரிய/பார்வைக் குரிய : கண் பார்வைக்கும் ஒளிக் கும் இடையிலான தொடர்பு சார்ந்த; ஒளியியல் சார்ந்த பார்வைக்கு உதவி புரியும் வகையில் அமைந்த.
optical aberration : ஒளிக்கோட்டம்; பார்வைத் திரிபு : ஒர் ஆடி யிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தவறாகக் குவிதல்.
optical illusion : விழிக்காட்சி மயக்கம் : பொய்த்தோற்றம்.
optician : மூக்குக்கண்ணாடி வல்லுநர்; பார்வை வல்லுநர் : பார்வை ஒளிக்கோட்டத் தவறுகளைச் சரிசெய்யும் மூக்குக் கண்ணாடிகளை பரிந்துரைக்கும் வல்லுநர். மூக்குக்கண்ணாடி செய்பவரையும், மூக்குக்கண்ணாடி விற்பவரையும் இது குறிக்கும்.
opticokinetic : கண்ணசைவு சார்ந்த : கண்ணின் அசைவு தொடர்புடைய.
optics : ஒளியியல்; கண்ணொளி யியல் : ஒளிக்கதிர்கள் பற்றியும் கண்பார்வையுடன் அவற்றின் தொடர்பு குறித்தும் ஆராயும் அறிவியல்.
optimax : ஆப்டிமாக்ஸ் : அமினோ அமிலமும், டிரிப்டோ ஃபான் பிரிடாக்சின் அஸ்கார்பிக் அமிலம் அடங்கிய வைட்டமினும் கலந்த ஒரு கலவை மருந்தின் வணிகப்பெயர்.
optimism : எழுச்சி மனப்பான்மை : இனிமை நம்பிக்கை; ஓங்கு நம்பிக்கை எதிலும் நன்மையே எதிர்பார்க்கும் மனப்போக்கு.
optimum : உகந்த சூழல்; சரியான : உயிர் வாழ்வதற்கு பெரிதும் சாதகமான சூழ்நிலை.
optometer : விழிக்காட்சித் திறன் மானி : விழிக்காட்சித் திறன் எல் லையளவை அளவிடும் கருவி.
optometrist : பார்வை அளவீட்டாளர் : விழிக்காட்சித்திறன் எல்லையை அளவிடுவதில் பயிற்சி பெற்றவர்; மூக்குக் கண்ணாடி, பிற பார்வைச் சாதனங்களை அளவிட்டுக் குறித்துக் கொடுப்பவர்.
optometry : விழிக்காட்சித் திறன் அளவீடு; பார்வை அளவையியல் : விழிக்காட்சித் திறனை அளவிடுதல்.
orabase : ஒராபேஸ் : சிலேட்டுமப் படலத்திலுள்ள நைவுகளைப் பாதுகாக்கும் கூழ் பொருளின் வணிகப்பெயர்.
Oradexon : ஒராடெக்சோன் : டெக்சாமெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
oral : வாய் சார்ந்த; வாய் வழி : வாய் வழியான.
orange peel skin appearance : ஆரஞ்சுத் தோல் தோற்றம் : மார்பகப் புற்றை மேல் மூடியுள்ள தோலில் உள்ளது போன்ற ஆரஞ்சுப் பழத்தோல் தோற்றம். orange person syndrome : ஆரஞ்சுத்தோல் நோய் : தோலுக்கு நிறமூட்டும் ரிஃபாபிசின் மிகைப்படுவதால் உண்டாகும் அரிதாக பக்கவிளைவு. அடர் ஆரஞ்சு நிற உடல் திரள்கள் இதில் ஈரல் செயல் முறைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும்.
Orap : ஒராப் : பிமோசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
oraserrate : கண்வாயில் ரம்ப விளிம்பு; வாள் முள் வாயில்.
Oratrol : ஒராட்ரோல் : டைகலோர் ஃபினாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
orbenin : ஆர்பெனின் : குளோக்சாசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
orbicular : கோள வடிவுடைய; வளைய : உருண்டையான அல்லது வட்ட வடிவுடைய.
orbicularis : திறப்பு சூழ்தசை : ஒரு திறப்பினைச் சுற்றியுள்ள தசை. கண்ணை இருக்கமாக மூடுவதற்கு உதவுகிற கண் சார்ந்த தசை உதடுகளைக் குவிப்பதற்கு உதவும் தசை.
orbicular muscle : துளை சுருக்ககும் தசை.
orbit : கண்குழி : கண்விழியையும் அதன் இணைப்புகளையும் உள்ளடக்கிய எலும்புக் குழி.
orbitale : கண் குழியின் தாழ் நிலைப் புள்ளி : கண்குழியின் கீழ் விளிம்பு நெடுகிலுமுள்ள மிகத் தாழ்நிலைப் புள்ளி.
orbital cellulitis : கண்குழி திசு அழற்சி.
orchidectomy : விரை அறுவை; விரை நீக்கம்; விரை எடுப்பு; விரை யகற்றல் : விரையினை வெட்டி எடுத்தல்.
orchiopexy : அண்ட விரை அறுவை மருத்துவம் : இறங்க முடியாத விரையை அண்ட கோசத்தினுள் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.
orchioschirrhus : அண்ட விரைக் கெட்டியாதல் : கட்டி உண்டாவதால் அண்ட விரை கடினமாதல்.
orchis : விரை : ஆணின் விரைக் கொட்டை.
orchitis : விரையழற்சி : விரைக் கொட்டை வீக்கம்.
order : வரிசை முறை : நிகழ்வுகள், விதிகள், ஒழுங்கு முறை விதிகள், நடைமுறைகள் ஆகியவற்றின் ஒழுங்கு அல்லது வரிசை முறை.
organ : உறுப்பு : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிற உடலின் உறுப்பு எதுவும், உறப்பு மாற்றத்துக்கான சில திசுக்களை நீண்ட காலத்துக்குச் சேமித்துவைக்கும் ஒரு சேமக் கலம். rganelle : தனியுறுப்பு : உயிரணுவில் இழைமத்துடன் இணைக் கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பு.
organic : உறுப்பு சார்ந்த; உறுப்பியல் : உடல் உறுப்புக்குரிய உயிர்ப்பொருள் சார்ந்த கரிமப் பொருள்களாலான.
organism : உயிரி; உயிரணுத் தொகுதி; உயிரினம்; உயிர்ப் பொருள்; உயிர் கரு; உறுப்பி : ஒரு வாழும் உயிரணு அல்லது உயிணுக்களின் தொகுதி. ஒருயிர் போல் இயங்கும் உறுப்பமைதியுடைய உயிர்.
organ of Corti : கோர்ட்டி உறுப்பு : கேட்பதற்குரிய உண்மையான உறுப்பு. இது இத்தாலிய உடல் கூறியலறிஞர் ஆர்ஃபான்சி கோர்ட்டி பெயரால் அழைக் கப்படுகிறது. இது செவியின் சுருள் வளையினுள் உள்ள ஒரு திருகு சுருள் கட்டமைப்பு. இதில் ஒலி அதிர்வுகளால் தூண்டப்படும் முடி உயிரணுக்கள் அடங்கியிருக்கும். இவை, நரம்புத் துண்டுதல்களாக மாற்றப்பட்டு கேட்பு நரம்பின் சுருள்வளைப் பகுதி மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகின்றன.
organogenosis : கருப்பை உறப்புருவாக்கம் : கரு உருவாக்க வளர்ச்சியின்போது உறுப்புகளும் உறுப்பு மண்டலங்களும் உருவாகி வெவ்வேறு வடிவங்களைப் பெறுதல்.
organoid : செயற்கை உறுப்பு : ஒர் உறுப்பின் இரத்த நாள மற்றும் சுரப்புத் திறம்பாடுகளைக் காட்டும் செயற்கை உறுப்பு.
organopexy : உறுப்புப் பொத்துதல் : ஒர் உறுப்பு அதற்குரிய இடத்திலிருந்து பிரிந்துவரும் போது, அதனை அந்த இடத்தில் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.
organotherapy : சுரப்பிப் பொருள் நோய் மருத்துவம் : விலங்குகளின் அகச் சுரப்பிகளின் தயாரிப்புப் பொருள்கள் அல்லது அவற்றின் எடு பொருள்கள் மூலம் நோயைக் குணப்படுத்துதல்.
orgasm : புணர்ச்சி பரவசநிலை; பாலுணர்வுப் பொங்கல் : புணர்ச்சி யின் உச்சக்கட்ட உணர்ச்சிப் பரவச நிலை உணர்ச்சித் துடிதுடிப்பு புணர்ச்சியிடைத் துடிப்பு நிலை.
oriental sore : கீழ்த் திசஒப் புண்; வெப்பக் கொப்புளம் : வெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளிலும் தோலில் உண்டாகும் வெம்புண்.
orientation : சூழ்நிலை அறிவு; இட-திசையுணர்வு : மனக் கோளாறின்போது நோயாளி தான் இருக்கும் இடத்தையும், காலத்தையும் தெளிவாக அறியுந்திறனுடனிருத்தல். எடுத்துக்காட்டாக, அவர் சரியான தேதியைக் கூறுவார். orifice : துளை; ஒட்டை; நுழை வழி; திறப்பு : புழைவாய்; துவாரம், வாயில் திறப்புவழி.
orificeanal : மலவாய்.
origin : தோற்றுவாய்; தொடக்கம்; எடுப்பு : ஒன்றன் பிறப்பிடம்; தொடக்கம், மூலாதாரம்.
ornithinaemia type I : இனக்கீற்று நலிவு வகை I: தன் இனக்கீற்று நலிவு நிலை. இது "HHH' நோயுடன் சேர்ந்து காணப்படும்.
ornithinaemia type II : தன் இனக்கீற்று நலிவு வகை II : கண்விழி படலம் மற்றும் விழித்திரை ஆகியவற்றின் சுழல் உடல் நலிவு (ஹோகா நோய்) நோயுடன் இணைந்து காணப்படும் நிலை. இதனால் மெல்ல மெல்லப் பார்வை இழப்பும், கிட்டப்பார்வையும், மாலைக் குருடும் உண்டாகும்.
ornithine : ஆர்னித்தின் : அமினோ அமிலங்களில் ஒன்று. யூரியா வைப் பகுத்துக் கிடைக்கும் ஆர்ஜினினிலிருந்து பெறப்படுகிறது.
ornithosis : பறவை நோய் : இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமைசின் மூலம் குணப்படுத்தலாம்.
orofacial : வாய்-முகம் சார்ந்த : வாய், முகம் தொடர்புடைய.
orogenital : வாய்; பிறப்புறுப்பு சார்ந்த : வாய், பிறப்புறுப்புப் பகுதி தொடர்பான.
orolingual : வாய் நாக்கு சார்ந்த : வாய், நாக்கு தொடர்புடைய.
oromandibular-dystonia : வாய்-நாக்கு அனிச்ச இயக்கம் : வாயும் நாக்கும் தானாக இயங்குதல்.
oronasal : வாய்-மூக்கு சார்ந்த : வாய், மூக்கு தொடர்புடைய.
oropharynx : அண்ணத் தொண்டைப் பகுதி : மென் அண்ணத்துக்கும் குரல்வளை மூடிக்கு மிடையிலுள்ள தொண்டைப்பகுதி.
orphenadrine : ஆர்ஃபென்னாட்ரின் : பார்க்கின்சன் நோயில் பயன்படுத்தப்படும் பித்த நீருக்கு எதிரான மருந்து, தூக்க மருந்துகளினால் ஏற்படும் பார்க்கினான் நோயை இது குறைக்கிறது.
orrhodiagnosis : குருதி வடிநீர் நோய் நாடல் : குருதி வடிநீர் மூலம் நோயைக் கண்டறிதல்.
ORs : வாய்வழி நீர்மக் கரைசல் : வாய்வழி கொடுக்கப்படும் நீர் கலந்த கரைசல்.
ORT : வாய்வழி நீர்ம மருத்துவம்.
othochromatic : இயல்பு நிறம் : இயல்பான நிறம் கொண்டிருத்தல் அல்லது இயல்பாகக் கறை படிதல்.
orthodeoxia : தமனி ஆக்சிஜன் குறைபாடு : நிமிர்ந்த நிலையில் இருக்கும்போது தமனி ஆக்சிஜன் செறிவு குறைதல்.
orthodiagrphy : இதயநிழல் படியெடுப்பு : இதயத்தின் நிழலை துல்லியமாகப் படியெடுத்தல்.
orthodontics (orthodontia) : பல் சீரமைப்பியல் : பற்கள் தாறுமாறாக அமைவதைத் தடுத்துச் சீர்படுத்தும் பல் மருத்துவத்தின் ஒரு பிரிவு.
orthodontist : பல்சீரமைப்பு வல்லுநர் : பல் சீரமைப்பில் துறை போகிய ஒரு பல் மருத்துவ அறிஞர்.
orthodox sleep : எற்புடை உறக்கம் : ஒவ்வொரு உறக்கச் சுழற்சி யின்போதும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடிக்கும் தூக்கம். இதில் வளர்சிதை மாற்ற வீதமும், அதனால் ஆக்சிஜன் நுகர்வளவும் குறைவாக இருக்கும்.
orthokinetic : உணர்வு நரம்பு தூண்டல் : தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றின் உணர்வு நரம்பு முனைகளைத் தூண்டி விடுவதற்காகப் பயன்படுத்தப் படும் தூண்டுதல் உத்திகள்.
orthomyxoviruses : கோளக் கிருமிக் குடும்பம் : இன்ஃபுளுயென்சா நோய்க்கிருமிகள் உள்ளடங்கலாகப் பெரிய, கோள வடிவ நோய்க்கிருமி களின் ஒரு குடும்பம்.
orthopaedics : முட நீக்கியல்; எலும்பியல் : உடல் இயக்கத்தைப் பாதிக்கும் அனைத்து நிலைகளையும் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவப் பிரிவு.
orthopaedic traction : முடநீக்க இழுவை : ஒரு நோயாளியை எடைக் கற்களுடன் கட்டிய கயிறுகள் கப்பிகளுடன் இணைத்துப் பராமரிக்கும் ஒரு நடைமுறை. இதில் ஒர் உறுப்பின் அல்லது உடற் பகுதியின் மீது இழு விசையைச் செலுத்தி எதிர் இழுவிசைப் பேணப்படுகிறது.
orthopaedy : அங்கக்கோணல் அறுவை மருத்துவம் : உடல் உறப்புக் கோணல்களைச் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவம்.
orthopaedist : முடநீக்கியல் வல்லுநர்.
orthopercussion : எலும்பு மூலந்தட்டுதல் : தட்டுக்கொட்டுமானி விரலின் முனையைத் தனி எலும்பில் மூலந்தட்டுதல். இதில் மார்புச் சுவருக்குச் செங்குத்தாக விரலை வைத்துத் தட்டப்படுகிறது.
orthopnoea : கிடக்கை மூச்சுத் திணறல்; குந்து மூச்சு : நிமிர்ந்து உட்கார்ந்தால் குணமாகக்கூடிய மூச்சுத் திணறல் நிலை படுத்தால் மிகைப்படும் மூச்சுத்திணறல்.
orthopnoeic position : எளிய சுவாச நிலைப்பாங்கு : சுவாசத்தை எளிமையாக்கும் உடல் நிலைப்பாங்கு. இதில், நோயாளி, உட்கார்ந்து கொண்டு, கைகளை மேசை மீது ஊன்றி முன்புறமாக வளைகிறார்.
orthopsia : அந்திப் பார்வைத்திறன் : அந்தி நேரத்தில் பொருள்களைப் பார்ப்பதற்கான திறன்.
orthoptic : கண்நோயியல் சார்ந்த.
orthoptics : கண்நோயியல்; மாறுகண்; வாணக்கண் மருத்துவம் : மாறுகண் நோயில் தசை சமநிலையின்மையை ஆராய்ந்து குணப்படுத்தும் ஆய்வியல்.
orthoreovirus : குடல் சுவாசக் கோளாறு : மிக அரிதாக ஏற்படும் குடல் அழற்சி மற்றும் மேல் சுவாசக் கோளாறு.
orthosis : உடல் ஊன நீக்கி : உடலில் ஊனமாகவுள்ள பகுதியில் பொருத்தப்படும் ஒரு சாதனம் ஊனத்தை நேர் செய்தல்.
orthostatic : நிமிர் விறைப்பு : நிமிர்ந்து நிற்பதால் உண்டாகும் உடல் விறைப்பு நிலை.
orthotics : முடநீக்கக் கருவியியல் : உடலில் ஊனமாகவுள்ள பகுதியில் பொருத்தப்படும் சாதனங்கள் பற்றி ஆராய்ந்து, அவற்றைத் தயாரிப்பது பற்றிய அறிவியல் ஆய்வு.
orthotist : முடநீக்கக் கருவியல் வல்லுநர்.
orthotolidine test : குளோரின் அளவீட்டுச் சோதனை : நீரில் தனியாகவும், இணைந்தும் இருக்கும் குளோரின் அளவை அளவிடும் சோதனை.
orthotonus : விறைப்பு நோய் : நரம்பிசிவு விறைப்பினால் உடலில் ஏற்படும் வளையாத விறைப்பான நிலை. இது நரப்பிசிவு நோய், ஸ்டிரிக்னைன் நஞ்சு ஆகியவற்றில் காணப்படும்.
Orthoxine : ஆர்த்தோக்சின் : மெத்தோக்சைஃபெனிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
orthropsia : அந்திசந்தி தெளிவுப் பார்வை : பிரகாசமான சூரிய ஒளியைவிட விடியலில் அல்லது அந்தியில் பார்வை அதிகத் தெளிவாகத் தெரிதல்.
Ortner's syndrome : ஆர்ட்னர் நோய் : ஈரிதழ்த் தடுப்புக் கறக்கத்தில் எதிர்த்திசை திரும்பும் குரல்வளை நரம்பில் முடக்குவாதம் ஏற்படுவதால் உண் டாகும் குரல் கம்மல். விரிவாக்கமடைந்த இடது இதய வாயில் மூலம் நரம்பு அழுத்தப்படலாம்.
Ortolani click : ஆர்ட்டோலானிகிளிக் : பந்துக் கிண்ணக் குழிவுக்குள் திரும்புகிற தொடை யெலும்பின் தலைப்பகுதி உண்டாக்கும் ஒலி மரபுவழி இடுப்புப் பிறழ்வுக்குச் சான்றாகத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சோதனை. இத்தாலிய எலும்பு அறுவை மருத்துவ வல்லுநர் மாரியஸ் ஆர்ட்டோலானி பெயரால் அழைக்கப்டுகிறது.
Ortolani's sign : இடுப்பு இடப்பெயர்வுச் சோதனை : மகப்பேற் றுக்குப் பிறகு, இடுப்பு இடம் பெயர்ந்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை.
Orudis : அரூடிஸ் : கெட்டோப்ரோஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
os : கருப்பை வாய்; துளை : குழிவான பை போன்ற ஒரு உறுப்பு புழை போன்ற மற்றொரு உறுப்புகள் நுழைவாயில் வாய், திறவு பாதை, பெண்ணின் கருப்பை வாய்க்குழாய்.
os, external : புறத்துளை.
os, internal : உட்துளை.
oscillation : ஊசலாட்டம் அலைவு; சீரசைவு : இருமுனைகளுக்கு மிடையே இங்குமங்கும் அசைதல் அல்லது ஊசலாடுதல்.
oscillograph : மின் ஊசலாட்டப் பதிவு கருவி : மின் ஊசலாட் டங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சாதனம்.
oscillometry : ஊசல் அளவை : ஒரு தனிவகை ஊசல்மானியைப் பயன்படுத்தி ஊசலாட்டத்தை அளவிடுதல்.
os calcis : குதிகால் எலும்பு.
osgood-Schlatter's disease : ஆஸ்குட்-விலேட்டர் நோய் : முன்கால் எலும்புப் புடைப்பில் ஏற்படும் வீக்கம். இதில் முழங்காலுக்குச் சிறிது கீழேயுள்ள எலும்பு மேட்டில் மென்மையான, அதைப்பான வீக்கம் காணப்படும். அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ராபர்ட் ஆஸ்குட், ஜூரிக் அறுவை மருத்துவ அறிஞர் கார்ல் விலேட்டர் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.
Osler's nodes : ஆஸ்லர் கரணைகள்; ஆஸ்லர் கணுக்கள் : விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் களினால் ஏற்படும் கரணைகள்.
Osler-Weber-Rendu syndrome : ஆஸ்லர்-வெபர்-ரெண்டு நோய்: குருதிப்போக்குத் தந்துகி விரிவாக்க நோய், லண்டன் மருத்துவ வல்லுநர் ஆஸ்லர் ஃபிரடரிக் வெபர், ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ஹென்றி ரெண்டு ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நோய் மரபு வழி வரக்கூடியது. இதனால், தோலிலும், சளிச்சவ்வு இழைமத்தில் சிவப்பு முதல் செங்கரு நீலம் வரையிலான நிறமுடைய நைவுப் புண்கள் எற்படும். விரிவாக்கமடைந்த மெல்லிய நாளங்களிலிருந்து இரத்தப் போக்கு உண்டாகும்.
osmolar : ஊடுபரவல் சார்ந்த : ஒரு கரைசலின் ஊடுபரவல் செறிவு தொடர்புடைய.
osmolar gap : ஊடுபரவல் திறன் வேறுபாடு : அளவிடப்பட்ட ஊடுபரவல் திறனுக்கும், கணக்கிடப்பட்ட ஊடுபரவல் திறனுக் குமிடையிலான வேறுபாடு.
osmolality : ஊடுகலப்புத் திறன் : ஒரு கிலோகிராம் கரைசலில் உள்ள ஊடு கலப்புப் பொருள்களின் (அஸ்மால்) எண்ணிக்கை.
osmole : ஊடு கலப்பு அலகு : சவ்வூடு (ஊடுகலப்பு) அழுத்தத்தின் திட்ட அளவு அலகு. இது ஒரு கரைவத்தின் கிராம் மூலக்கூற்று எடையை அது கரைசலில் சிதைவுறுகிற துகள்களின் அல்லது அயனிகளின் எண் ஈவுக்குச் சமம்.
osmology : ஊடு கலப்பியல் : முகர்வு உணர்வு பற்றிய அறிவியல்.
osmometer : ஊடு கலப்பு அளவுமானி : ஊடுகலப்பு விசையை அளவிடுவதற்கு அல்லது முகர்வுத்திறனின் கூர்மையை அளவிடுவதற்குப் பயன்படும் சாதனம்.
osmophilic : ஊடு கலப்பு இணைவுத் திறன் : மிக அதிகமான ஊடு கலப்பு அழுத்தத்தையுடைய கரைசல்களின் இணைவுத்திறன்.
osmoreceptor : ஊடு கலப்பு ஏற்பான் : ஊடுகலப்பு அழுத்தத்தில் அல்லது நறுமண உணர்வில் எற்படும் மாறுதல்கள் காரணமாகத் தூண்டப்படும் உணர்வு ஏற்பார்.
osmotherapy : ஊடுகலப்பு மருத்துவம் : ஊடுகலப்புச் சரிவு வாட்டம் மூலமாக மூளையிலிருந்து நீரை உறிஞ்சி, மூளை நீர்க்கோவையைக் குறைப்பதற்கு அளவுக்கு மீறிய ஊடு கலப்பு அழுத்தமுடைய கரைசல்களை உட்செலுத்துதல்.
osmosis : ஊடுகலப்பு; சவ்வூடு பரவல்; ஊடு கசிவு; ஊடுபரவல் : துளைகள் உள்ள இடைத் தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை.
Ospolot : ஆஸ்போலாட் : சல்தியாம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
osmotic agent : ஊடு கலப்பு ஊக்கி : ஒர் உயிரணுச் சவ்விலிருந்து இன்னொரு சவ்வுக்கு திரவம் பாய்வதைத் தூண்டு வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.
osmotic diuresis : ஊடுகலப்பு மிகைச் சிறுநீர்ப்போக்கு : சிறுநீரக நுண்குழல்களிலுள்ள, உறிஞ்சத்தக்கதாக இல்லாத பொருள்கள் இருப்பதால் ஏற்படும் மிகைச் சிறுநீர்ப் போக்கு.
osmotic ragility : ஊடுகலப்பு நலிவு : 0,45%, 0.3% வலிமையுள்ள உப்புநீரிலுள்ள இயல்பான சிவப்புக் குருதியணுச் சிதைவு, பரம்பரைக் கோணச் சிவப்பணு அழிவில் இது அதிகரிக்கிறது. தாலசேமியா, மஞ்சள் காமாலை, அரிவாள் உயிரணுச் சோகை, இரும்பு மருத்துவம் ஆகியவற்றில் இது குறைகிறது.
osmotic pressure : ஊடுகலப்பு அழுத்தம் : கரைப்பான் ஒரு தனி யறைக்குள் இடம் பெயர்வதைத் தடுப்பதற்கான அழுத்தம். இதில், கரைப்பானுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடிய சவ்வின் மீதான கரை பொருளின் செறிவு அதிகமாக இருக்கும். ஆனால் கரைபொருள் மீது இராது. இது ஊடுகலப்புத் திறனாக அளவிடப்படுகிறது.
osseous : எலும்பான; எலும்புப் பண்பு; எலும்பு சார் : எலும்பினா லான எலும்பு போன்ற எலும்பு உட்கொண்ட, எலும்பாகிவிட்ட எலும்புக்கூடுள்ள.
ossicles : சிறு எலும்பு; சிற்றெலும்பு; நுண் எலும்பு : உடம்பிலுள்ள சிறு எலும்பு குறிப்பாக நடுக்காதில் உள்ள சிற்றெலும்புகள்.
ossicles, ear : காது நுண் எலும்பு.
ossification : எலும்பாக்குதல்; எலும்பு இணைப்பு; எலும்பாக்கம் : குருத்தெலும்பு முதலிய சிறிய எலும்புகளை கடினமான எலும்புகளாக மாற்றுதல்; எலும்புகளைக் கெட்டிப்படுத்துதல்.
ossification center : எலும்பு மையம்.
osteitis : எலும்பழற்சி: எலும்பு வீக்கம்.
osteoarthritis : எலும்பு மூட்டு வீக்கம்; கீல்வாதம் : உயவு நீர்ம முள்ள மூட்டுகளின் மேற்பரப்புகளில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம்.
osteoarthropathy : மூட்டு-எலும்பு நோய் : மூட்டுகளிலும் எலும்புகளிலும் ஏற்படும் ஒரு நோய்.
osteoarthrosis : மூட்டுத்திருகு சுருள் : வீக்கம் ஏற்படாமல் மூட்டு திருகிக் கொள்ளுதல்.
osteoblast : எலும்பு உயிரணு எலும்பாக்கத் திசு : எலும்பை உருவாக்கும் உயிரணு.
osteoblastic tumours : கேடய இலக்கு நீர்க்கட்டிகள் : துணைக் கேடய இயக்கு நீர் போன்ற செயலுடன் கூடிய பொருள்களினால் உண்டாகும் கட்டிகள். osteoblastoma : நாளக்கட்டி : எலும்பில் ஏற்படும் ஒரு சிறிய உக்கிரமற்ற நாளக்கட்டி.
osteochondritis : எலும்பு அழற்சி; மெல்லெலும்பு அழற்சி; குருத்தெலும்பழற்சி : குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏற்படும் வீக்கம். பொதுவாக நச்சுத் தன்மையில்லா நிலைமையைக் குறிக்கும்.
osteochondroma : எலும்புக்கட்டி; குருத்தெலும்பு மிகைக்கட்டி : எலும்பு போன்ற உக்கிரமல்லாத கட்டி.
osteochondromatosis : மூட்டுச் சவ்வுப்படல நோய் : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் அரிதாக ஏற்படும் நோய். இந்தப் படலத்தின் மேல் மடிப்புகள் ஊசலாட்டமடைந்து குருத்தெலும்பில் மாற்றம் உண்டாகிறது. இவை சுதந்திரமாக அசையும் உறுப்புகள் போல் தனிமைப் பட்டுவிடுகின்றன.
osteochondropathy : குருத்தெலும்பு நோய் : எலும்பையும் குருத்தெலும்பையும் பாதிக்கும் நோய்.
osteochondrosis : எலும்ப இணைப்பு மைய நோய் : குழந்தைகளின் எலும்பு இணைப்பு மையத்தில் உண்டாகும் ஒரு நோய். இதில் திசு அழிவைத் தொடர்ந்து புத்துயிர்ப்பு ஏற்படும்.
osteoclasia : எலும்புத் திசு அழிவு : எலும்புத் திசுக்கள் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு அழிக்கப்படுதல்.
osteoclasis : எலும்பை முறித்தல்; எலும்புத் திசுச் சிதைவு : நீண்ட எலும்புகளின் உருத்திரிபுகளை சீர் செய்வதற்காக ஒரு எலும்பை வலுக்கட்டாயமாக வளைத்தல் அல்லது அரைகுறையாக முறித்தல். குணப்படுத்தக் கூடிய எலும்பு முறிவு.
osteoclast : எலும்பு அழிப்பு உயிரணு : தேவையில்லாத எலும்பைக் கரைத்து விடுகிற அல்லது அகற்றி விடுகிற எலும்பு உயிரணு.
osteoclast-like giant cell : அரக்க உயிரணு : எலும்புத்திசு போன்ற அரக்க உயிரணு. இதில் ஏராளமான சிவப்பூதாச் சாயக் குருணை அல்லது ஒரு சீர்மையான திசுப்பாய்மம் அடங்கியிருக்கும். இதில் ஏறத்தாழ நூறு ஒரு சீர்மையான முட்டை வடிவ உட்கருக்கள் இருக்கும்.
osteoclastoma : எலும்பு அழிப்பு உயிரணுக்கட்டி; எலும்பழிப் புற்று : எலும்பு அழிப்பு உயிரணுக்களில் ஏற்படும் கட்டி இது பெரும்பாலான ஒரு நீண்ட எலும்பின் முனையில் உண்டாகும். இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம்.
osteocranium : முதிர் கருக் கபாலம் : எலும்பாக்கத்தின் பல் வேறு நிலைகளில் காணப்படும் முதிர்கருக் கபாலம்.
osteocyte : எலும்பு உயிரணு; எலும்புத் திசுவணு.
osteodystrophy : எலும்பு பிறழ் வளர்ச்சி : எலும்பு இயல்பு திரிந்து வளர்தல்.
osteoenсhondroma : எலும்புக் கட்டி : ஒரு எலும்பினுள் உள்ள ஒரு உக்கிரமல்லாத எலும்பு மற்றும் குருத்தெலும்புக் கட்டி.
osteofibrochondrosarcoma : எலும்பு-திசுக்கட்டி : எலும்பு, குருத்தெலும்பு, இழைமத் திசுக்கள் ஆகியவற்றாலான ஒரு உக்கிரமான கட்டி.
osteofibroma : எலும்பு-திசு வீக்கம் : எலும்பிலும் இழைம திசுவிலும் ஏற்படும் ஒரு கட்டி.
osteoflurosis : எலும்பு கடினமாதல் : எலும்பில் ஏற்படும் மாறுதல்கள். இதில் நீண்ட காலம் ஃபுளோரைடுகளை உட்கொள்வதன் காரணமாக எலும்புக் கடினமாதல் ஏற்படும்.
osteogenesis : எலும்பு உருவாதல்; எலும்பாக்கம்; எலும்பு வளர்ச்சி.
osteography : எலும்பு வரைவு நூல்; எலும்பு விளக்கம் : எலும்பு களைப் பற்றி விளக்கம் வரைவுகள்.
osteology : எலும்பியல் : எலும்புகளைப் பற்றி ஆராயும் இயல்.
osteolysis : எலும்பு கரைதல் : நோய், தொற்றுநோய், குருதிக் குறைபாடு காரணமாக எலும்பு சிதைவுற்று கரைந்து போதல்.
osteolytic : அழிவுறுத்தும் எலும்பு; எலும்பு நசிவு : எலும்புகளில் படியும் அழிவுறுத்தும் படிவுப் பொருள்.
osteoma : எலும்புத் திசத் திரள் கட்டி; எலும்புக் கட்டி : நெருக்கமான திசுக்களில் உண்டாகும் உக்கிரமல்லாத கட்டி.
osteomalacia : எலும்பு நலிவு நோய்; எலும்பு மென்மை நோய் : வயதுவந்தவர்களுக்கு தாவர உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையடைதல், பொதுவாக வைட்டமின்-D பற்றாக்குறை, போதிய அளவு சூரிய ஒளி படாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது.
osteomyelitis : நினைவெலும்பு வீக்கம்; எலும்பு மச்சை அழற்சி : எலும்பு மச்சையில் ஏற்படும் வீக்கம்.
osteon : எலும்பு அலகு : நெருக்கமாக இணைந்த எலும்புக் கட்டமைப்பின் ஓர் அடிப்படை அலகு.
osteopaenia : எலும்பு திரட்சி நலிவு : எலும்புப் பொருள் இணைப்பு வீதம் குறைவதால் எலும்புத் திரட்சியில் ஏற்படும் நலிவு. osteopath : வர்ம மருத்துவர்; எலும்பு நோயியலார் : தசை மற்றும் முட்டுகளைப் பிடித்து விடுவதால் நோய் நீக்கும் வர்மப் பிடி மருத்துவர்.
osteopathy : எலும்பு நோயியல்; வர்ம மருத்துவம்; எலும்பு மருத்துவம் : தசையைப் பிடித்துவிட்டு நோயைக் குணப்படுத்தும் வர்மப்பிடி மருத்துவ முறை.
osteoperiostitis : எலும்பு சவ்வு வீக்கம் : ஒர் எலும்பிலும் அதன் எலும்புச் சவ்விலும் ஏற்படும் அழற்சி.
osteopetrosis : எலும்பு முறிவு நோய்; தடியெலும்பு மெலிவு நோய் : இதனை ஆல்பெர்ஸ் ஷோன்பெர்க் நோய் என்றும் கூறுவர். எலும்பு பதங்கெடும் நோய். இதனால் எலும்பு மிகவும் அடர்த்தியாகி, எளிதில் முறிந்துவிடும். இது ஒரு பிறவி நோய்.
osteophone : எலும்புவழி ஒலி பரவல்; எலும்பு வழி; ஒலி கடத்தல் : காது எலும்பின் வழியாக உட்காதினுள் ஒலி அலைகள் செலுத்துதல்.
osteophyte : மூட்டுக் குதிமுள் : மூட்டு மேற்பரப்புகளின் விளிம்பு களில், எடுத்துக்காட்டாக எலும்பு மூட்டு வீக்கத்தின் போது ஏற்படும் குதிமுள் அல்லது புறவளர்ச்சி.
osteoplasty : எலும்பு மறு உருவாக்க அறுவை : எலும்பை மறு உருவாக்கம் செய்வதற்கான அறுவை மருத்துவம்.
osteoporosis : எலும்பு நோய், எலும்பு மெலிவுறல், எலும்புப் புரை : கால்சியம் படிவுகளை ஏற்றுக்கொள்ளும் எலும்புப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பிலிருந்து கால்சியமும், பாஸ்பரமும் அளவுக்கு மீறி ஈர்த்துக் கொள்ளப்படுவதன் காரணமாக எலும்பு அடர்த்தி குறைதல். இதனால் முதுகு வளையும்; எலும்பு நலியும்; சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படும். இது, பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடனேயும், 75 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ஏற்படும். கால்சியம், வைட்டமின்-D குறைபாடு காரணமாக இது உண்டாகிறது.
osteosarcoma : எலும்பு தசைக்கட்டி : எலும்பிலிருந்து வளரும் ஒரு தசைக்கட்டி.
osteosclerosis : எலும்பு அடர்த்தி; எலும்பு கடினமாதல் : எலும்பின் அடர்த்தி அல்லது கெட்டித் தன்மை அதிகமாதல்.
osteosynovitis : மூட்டு உறை அழற்சி : மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல். osteotabes : எலும்பு மச்சை உயிரணு அழிவு : குழந்தைகளின் எலும்பு மச்சையிலுள்ள உயிரணுக்கள் அழிந்து போதல்'
osteotome : எலும்பு உளி; எலும்பு வெட்டி : எலும்பினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. இது உளி போன்றது ஆனால் இதன் இரு வெட்டு முனைகளும் சாய்வாக இருக்கும்.
osteotomy : எலும்பு வெட்டு; எலும்புப் பகுப்பு : எலும்பினைப் பகுத்து, இருமுனைகளும் பொருந்துமாறு மறுபடியும் இணைத்தல்.
ostomy : திறப்பு வாயில் : 'புதிய திறப்பு வாயில்' என்பதைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல். சிறு நீர்ப்பையிலிருந்த சிறுநீர் கழிவதற்கு அல்லது இரைப்பையிலிருந்த குடல் வழியே மலங்கழிவதற்கு வசதியாக அறுவை மருத்துவம் மூலம் ஒரு திறப்புவாயில் எற்படுத்தும் நடைமுறை.
ostium : குழாய் வாயில்; குழல் ஒட்டை; துளை; துவாரம் : குழாய் வழியின் திறப்பு வாயில்.
Ostwald coefficient : ஆஸ்ட்வால்ட் குணகம் : ஒரு கரைப்பானின் ஒர் அலகு கனஅளவில் கரைகிற வாயுவின் அளவு. கரைசல் உண்டாகிற வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் இது அளவிடப்படுகிறது. இந்த முறையை ரஷிய-ஜெர்மன் இயற்பியல் வேதியியல் அறிஞர் வில்ஹெல்ம் ஆஹ்ட்வால்ட் கண்டுபிடித்தார்.
otalgia : காதுவலி, காது எலும்பு வலி; செவிக்குத்து.
otitis : செவி அழற்சி : காதில் ஏற்படும் வீக்கம். வெளிச்செவிக் குழாயின் தோலில் உண்டாகும் வீக்கம்.
Othello syndrome : ஒத்தெல்லோ நோய் : உண்மைக்கு மாறாக தன் மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக மனதில் ஏற்படும் ஐயத்தினால் உண்டாகும் ஒரு மருட்சி நோய். இது பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. பொதுவாக இதற்கு முந்திய உளவியல் நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை.
otic : செவிசார்.'
otitis, external : புறச் செவியழற்சி.
otitis, internal : அகச் செவியழற்சி.
otitis, media : நடுச்செவியழற்சி.
otoencephalitis : மூளை அழற்சி : மூளையில் ஏற்படும் வீக்கம், வீக்கமடைந்த நடுக்காதிலிருந்து ஒரு நீட்சிபோல் இது ஏற்படும்.
otolaryngology : காது;மூக்கு; தொண்டை நோயியல்; செவி மிடற்றியல் : காது தொண்டை அமைப்பு, செயற்பணி நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் காது. தொண்டை தனித்தனி இயல்களாகவும் உள்ளன.
otoliths : காதுச் சுண்ணகப் படிவு; செவிக்கல் : உள்காதின் திருக்கு மறுக்கான துளைச் சவ்வில் நுண்ணிய சுண்ணக நீற்றுப் பொருள் படிதல்.
otologist : காது மருத்துவர்; செவியியலார் : காது மருத்துவ இயல் வல்லுநர்.
otology : செவிநோயியல்; செவியியல் : காதின் அமைப்பு; அதன் பணிகள், அதில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.
otomycosis : புறச்செவி பூஞ்சண நோய்; செவிப்பூசண நோய் : புறச்செவி இடுக்கில் உண்டாகும் பூஞ்சன நோய்.
otopalato digital syndrome : காது-அண்ணம்-விரல் நோய் : மண்டையோடு-முகத்திரிபு, உடல் குறுக்கம், குட்டை உருவம் ஆகிய ஏற்படும் x-தொடர் புடைய கோளாறு.
otorhinolaryngology : காது-மூக்கு-தொண்டையியல்; செவி நாசி மிடற்றியல் : காது, மூக்கு தொண்டை ஆகியவற்றின் அமைப்பு, அவற்றின் பணிகள் அவற்றில் உண்டாகும் நோய் பற்றி ஆராயும் அறிவியல் இவை ஒவ்வொன்றும் தனித்தனி இயலாகவும் இயங்குகிறது.
otorrhoea : காதுச்சீழ்; செவி ஒழுக்கு : புறச்செவி இடுக்கிலிருந்து வெளியாகும் சீழ்.
otosclerosis : காது எலும்பு திண்மை; செவிக் கடினம் : காது எலும்பு திடமாதல்; புது எலும்பு உருவாகி படிப்படியாகச் செவிட்டுத்தன்மை உண் டாதல்.
otoscope : செவி ஆய்வுக் கருவி; செவி காட்டி : உள் காதினைப் பரிசோதனை செய்வதற்குரிய சாதனம், செவிப்புலன் வாயிலாக உடல் பரிசோதனை செய்வதற்கான கருவி; நாடியறி கருவி.
otoscopy : உட்செவி ஆய்வு : புறக்கேட்புக் குழாய், செவிப்பறைச் சவ்வு ஆகியவற்றிலுள்ள ஆழமான பகுதியை, தலைக்கண்ணாடி, காது உட் குழிகாட்டு கருவி மூலமாக நன்கு ஒளிபாய்ச்சி ஆராய்தல்.
ototoxic : காதுக்கு நச்சு; செவிக்கு நச்சு : காதில் நச்சுவினை நிகழ்தல்.
ouabaine : உவாபின் : நெஞ்சுப்பை கிளைக்கோசைட், டி ஜாக் கினைப்போல், இதயத்தை உறுதிப்படுத்தும் விளைவுடையது.
Ouch-Ouch disease : ஊச்-ஊச் நோய் : சிறுநீரக எலும்புப் பிறழ்வு வளர்ச்சியின் ஒரு வடிவம். இதில் எலும்பில் வலி உண்டாகும். தொழிற்சாலை மாசுப் பொருள்களினால் கெட்டுப் போன மீனை உட்கொள்வதால் காட்மியம் அதிகமாகத் திரள்வதன் காரணமாக ஜப்பானியப் பெண்களிடம் இந்நோய் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Ouchterlony double diffusion : ஊச்டெர்லோனி இரட்டைப் பரவல் : காப்பு மூலமும், தற்காப்பு மூலமும் ஒன்றையொன்றை நோக்கிப் பரவுவதற்கு அனுமதிக்கிற திண்மக்கரைசல் பரவல், சுவீடன் பாக்டீரியாவியலறிஞர் ஆர்ஜான் ஊச்டெர்லோனி பெயரால் அழைக்கப்படுகிறது.
outbreak : நோய் திடீர் பரவல் : ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோயின் அல்லது நோய் நிலையின் நிகழ்வுகள் திடீரென அதிகரித்தல்.
out-patient : புறநோயாளி : மருத்துவமனைக்கு வந்து சென்று மருத்துவம் பெறும் நோயாளி.
outcome : விளைபயன் : ஒரு வினையாற்றலினால் விளையும் பயன். ஒரு நோய்ச் சிகிச்சையின் முடிவில் அல்லது ஒரு நோய் செயல்முறையின் இறுதியில் ஏற்படும் நிலை.
outer : வெளிப்பக்க; புற.
outfit : கலத் தொகுதி.
outflow : வெளிப்பாய்வு : ஒரு தூண்டல் வெளிப்புறமாகப் பாய்தல்.
outlet : வடிகால் : ஒரு பொருள் வெளிச் செல்லக்கூடிய ஒரு திறப்பு வழி.
out-patient : வெளி நோயாளி.
output : விளைவளவு : செய்பொருள் ஆக்க அளவு உடலிலிருந்து இழக்கப்படும் அளவிடத்தக்க திரவங்களின் அளவு.
ova: சூல் முட்டைகள்; கரு உயிரணுக்கள்; சினை முட்டை : புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்கள்.
oval : முட்டை வடிவ.
ovalocytes : முட்டை வடிவ குருதியணு : சிவப்புக் குருதியணுக்களில் காணப்படும் முட்டை வடிவ உயிரணுக்கள். இது குருதிச்சோகை, தாசேமியா, பரம்பரை முட்டை வடிவ சிவப்பணுக்கள் கொண்ட நோயாளி யிடம் பழுப்பு மையங்களில் மிக அரிதாகக் காணப்படும்.
oval window : முட்டை வடிவ சன்னல் : உள்காதுக்குச் செல்லும் நடுக்காதின் சுவரில் ஏற்படும் முட்டை வடிவத்துளை.
overbite : மேற்கவிந்த பல் : கீழ் வரிசைப்பற்கள் மேல்வரிசைப் பற்கள் செங்குத்தாகப் படிந்திருத்தல்.
overdenture : பல் நீக்கம் : பல் தொகுதியை முழுவதுமாக அல்லது பகுதியாக அகற்றுதல். மேம்பட்ட ஆதரவும் உறுதிப்பாடு அளிப்பதற்காக எஞ்சியுள்ள வேர்கள் பல் தொகுதியைத் தாங்கி நிற்கும்.
overdose : மிகை மருந்தளவு : ஒரு மருந்தினை அல்லது நோவ கற்றும் மருந்தினைப் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மிக அதிகமாக உட்கொள்ளுதல்.
overhang : தொங்குபொருள் : பல்லை நிரப்பும் பொருளின் மிகையான அளவு. இது இணைவுடைய பல் குழிவு விளிம்புக்கு அப்பால் நீட்டிக் கொண்டிருக்கும்.
ovarious: முட்டையுள்ள.
ovariotomy : கருவக அறுவை : பெண் கருப்பையை அகற்று வதற்கான அறுவை மருத்துவம்.
ovaritis : அண்டகோச அழற்சி.
overjet : பல் துருத்தம் : மேற் பற்கள், கீழ் பற்களுக்கு அப்பால் கிடைமட்டத்தில் துருத்திக் கொண்டிருத்தல்.
ovary : கரு அண்டம்; சூல்; சுரப்பி; முட்டைப் பை : கருப்பையின் பிற்பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய முட்டை வடிவச் சுரப்பிகள்.
overlap syndrome : மேற் கவிதல் நோய் : நோய்கள் ஒருங் கிணைந்திருத்தல். இணைவுத் திசு நோய்கள், குரோன் நோய், நைவுப் புண், பெருங்குடல் அழற்சி, பார்க்கின்சன் நோய் தசையழுகல், குருதி நாள அழற்சி, பல தமனி அழற்சி, சர்க்-ஸ்டிராஸ் நோய் ஆகியவை இணைந்திருத்தல்.
overcompensation : முரட்டு நடத்தை : ஒருவர் தன்னிடமுள்ள குறைபாட்டினை மூடி மறைப்பதற்காகக் கையாளும் ஒருவகை நடத்தை முறை. எடுத்துக்காட்டாக, அச்சம் அடைந்த ஒருவன், திமிராக அல்லது தற்புகழ்ச்சியுடன் அல்லது சண்டைக்கு வருவது போன்ற முரட்டுத்தனமாக நடந்துகொள்வான்.
ovulation : சூல் முட்டை வெளியேற்றம்; சினை முட்டை விடுப்பு; சூல் வெளிப்பாடு : கரு அண்டத்தில் கருச்சத்து முதிர்ச்சியடைந்து வெடித்து சூல் முட்டையாக வெளி வருதல்.
overlearning : மிகைக்கற்றல் : முற்றிலுமாகத் துறை போவதற்குத் தேவைப்படும் அளவை விட அதிகமாகத் திரும்பத் திரும்பக் கற்றல்.
overload : மிகைப் பளு : அசைவதற்கு அல்லது செய்முறைப் படுத்துவதற்கு ஒரு மண்டலத்தின் திறனுக்கு அதிகமான பளு.
overshoot alkalosis : மிகைக்கார நோய் : பைகார்பனேட்டை குளிகையாக விரைவாக உட்செலுத்துதல் காரணமாக, லாக்டிக் அமிலமும், கெட்டோ அமிலமும் பைக்கார்பனேட்டா ஆக்சிகரமாகும் போது லாக்டிக் அசிடோசிசிலும், கெட்டோசிடோசிசிலும் இது காணப்படும்.
overtone : மிகைத்தொனி : ஒரு கம்பி, ஒரு சரம், ஒரு வாய்க் கட்டை அல்லது மரச் சலாகையின் பாதிப் பகுதிகளின் அதிர்வினால் உண்டாகும் தொனி.
overuse syndrome : மிகைப் பயன்பாட்டு நோய் : தசைநாண் ம்ண்டலம், குருத்தெலும்பு எலும்புசார்ந்த திசுக்கள் மீது திரும்பத் திரும்ப விசைத் தாக்கம் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான அதிர்ச்சி. இத னால் பாதிக்கப்பட்ட மூட்டு, எலும்புகள், இணைப்பிழைகள் ஆகியவற்றில் வீக்கம், வலி அல்லது செயலின்மை ஏற்படும்.
overweight : மிகை எடை : வயது, உயரம், உடல்வாகு ஆகியவற் றுக்குப் போதிய கழிவு செய்யப்பட்டபின்பு, உடல் எடை இயல்புக்கு அதிகமான அளவில் இருத்தல். உகந்த எடைக்கு 20% அதிகமாக இருந்தால் அது மிகை எடையாகும்.
ovum : சினை முட்டை; அண்டம்.
owl eye appearance : ஆந்தைக் கண் தோற்றம் : சுரப்பிக் காய்ச்சல் போன்ற நோயை உண்டாக்குகிற தேமல் கிருமிக் குடும்பத்தைச் சேர்ந்த டி.என்.ஏ உடைய நோய்க்கிருமிகளினால் உண்டாகும் நோயில் காணப்படும் உள்துகள். இந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட தோலிழைம உயிரணுக்கள் எடுப்பாக விரிவடைந்தும், குருதிச் செவ்வணுக்களில் அளவுக்கு மீறி உள் துகள்கள் மருந்தும், ஒரு எடுப்பான முழுத்தாழெலும்பினால் சூழப்பட்டும் காணப்படும்.
oxacillin : ஆக்சாசிலின் : பென்சிலினேஸ் எதிர்ப்புச் சக்தியுடைய ஒரு பென்சிலின் நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது வட்ட பாக்டீரியாக்களை உண்டாக்கும் பென்சிலினேஸ் மூலம் ஏற்படும் கடுமையான தொற்று நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
oxalate : ஆக்சாலேட் : ஆக்சாலிக் அமிலத்தின் ஒர் உப்பு. பசளைக்கீரை, 'ருபார்ப்' என்ற செடி, தேயிலை போன்ற உணவாக உட்கொள்ளத்தக்க உணவுப் பொருள்களில் ஆக்சாலேட் உப்பு மிகுதியாக உள்ளது.
oxalic acid : ஆக்சாலிக் அமிலம் (வெல்லக்காடி) : நச்கத்தன்மை வாய்ந்த புளிங்காடி (அமில) வகை.
oxaluri : வெல்லப் படிகச் சிறுநீர் : கால்சியம் ஆக்சாலேட் என்ற வெல்லப் படிகங்கள் அடங்கிய சிறுநீர் வெளியேறுதல். இது வயிற்று மந்தத்துடன் (உணவு செரியாமை) தொடர்புடையது.
oxazepam : ஆக்சாஸ்பாம் : பென்சோடியாஸ்பாம் என்ற மென்மையான உறக்க மருந்து.
oxethazaine : ஆக்சித்தாசைன் : வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தில் அடங்கியுள்ள உறுப்பெல்லை உணர்வு நீக்கி, உணவுக் குழாய் அழற்சி; நெஞ்செரிச்சல், பிளவுக் குடலிறக்கம் ஆகியவற்றின் மருத்துவத்தில் பயன்படுகிறது.
ox-eye : பெருங்கண்; அகல் விழி : கண்விழி விறைப்பு நோய்.
Oxford tube : ஆக்போர்ட் குழாய் : தலை கீழான ட-வடிவான குரல் வளை திறந்துள்ள ஒரு துளை. வாயிலிருந்து மூச்சுக் குழாய் வரையிலும் செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. தலை முழுவதுமாக வளைந் திருந்த போதிலும், இது கோட்ட முறுவதைத் தடுக்கிறது.
oxidant : ஆக்சிகரணப் பொருள் : ஒர் ஆக்சிகரணைப் பொருள். இது ஆக்சிஜனைக் கொண்டிருக்கும். அந்த ஆக்சிஜனை மிக எளிதாக வழங்கும்.
oxidase : ஆக்சிடேஸ் : ஆக்சிஜன் (உயிர்வாயு) உற்பத்தியை அதிகமாக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) ஆக்சிஜன் ஏற்றும் நொதி.
oxidation : ஆக்சிகரணம்/உயிரக இணைவு; உயிர் வளியேற்றம்; உயிரியமாக்கல் : ஆக்சிஜனோடு இணையும் அல்லது ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நிலை, ஒர் அணுவில் நேர்மின்னேற்றங்கள் அதிகரிப்பதை அல்லது இரு ஹைட்ரஜன் அணுக்கள் குறைவதை அல்லது ஆக்சிஜன் இணைவதை இது குறிக்கும். ஆக்சிகரணம் ஏற்படும்போது, ஒர் ஏற்பு மூலக்கூறு குறையும். இது வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதி. இதனால் எரியாற்றலில் வெளிப்படுகிறது.
oximeter : ஆக்சிஜன்மானி : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் ஆக்சிஜன் பூரிதமடைந்திருக்கிறதா என்பதை, அறிய காதுடன் இணைக்கப்படும் ஒரு கருவி.
oxprenoloi hydrochloride : ஆக்ஸ்பிரனோலால் ஹைடிரோ குளோரைடு : மட்டுமீறிய இரத்தக் கொதிப்பின்போது (மிகை இரத்த அழுத்தம்) பயன்படுத் தப்படும் மருந்து.
oxtriphyline : மூச்சுக் குழல் விரிவாக்க மருந்து : மூச்சுக் குழாய் விரிவாக்க மருந்தாகப் பயன்படும் ஒரு பொக்குள வழிப் பொருள்.
oxycel : ஆக்சிசெல் : ஆக்சிஜனேற்றிய உயிரணுப் பொருளின் வணிகப்பெயர். குருதியணுப் பற்றாக்குறையின்போது பயன் படுத்தப்படுகிறது. இதனைத் திசுக்கள் ஈர்த்துக் கொள்கின்றன.
oxycephaly : கூம்பு மண்டை : திரிபான வடிவத்தில் உள்ள மண்டையோடு. இது உச்சி மற்றும் வகிட்டு இணைவுகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே மூடிக் கொள்வதால் உண்டாகிறது. இதனால், தலை விரைவாக மேல்நோக்கி வளர்ந்து, அதற்கு நீண்ட, குறுகிய, கூம்பு வடிவத்தைக் கொடுக்கிறது.
oxygen : உயிரியம்; ஆக்சிஜன்; உயிரகம்; பிராணவாயு; உயிர்வளி : நிறமற்ற மணமற்ற வாயுத் தனிமம். உயிர்களுக்கு இன்றியமையாத சுவாச வாயு. இது வாயு மண்டலத்தில் 20% உள்ளது. மருத்துவத்தில் நீள்கொள் உருளைகளில் மிகுந்த அழுத்தத்துடன் வாயுவாகப் பயன்படுத் தப்படுகிறது.
oxygen, cylinder : உயிர் வளி உருளை.
oxygenation : ஆக்சிஜனேற்றுதல்; உயிரக மூட்டுதல்; பிராண வாயு ஊட்டுதல்; உயிர்வளியேற்றுதல் : உயிர்ப்பு மூலம் இரத்தம் முதலியவற்றுக்கு ஆக்சிஜன் செறிவூட்டுதல்.
oxygenetor : செயற்கை நுரையீரல் : இதய அறுவை மருத்துவத்தின் போது பயன்படும் செயற்கை ஆக்சிஜனுட்டக் கருவி.
oxyhaemoglobin : ஆக்சிஜனேற்றிய குருதிப் புரதம் : ஆக்சிஜனேற்றிய குருதி உருண்டைப் புரதம் (ஹேமோகுளோபின்).
oxyhood : ஆக்சிஜன் முகடு : குழந்தையின் தலையில் பொருந் தக்கூடிய ஒரு பிளாஸ்டிக் முகடு. இது புறத் தூண்டுதல் இல்லாமல் குழந்தை சுவாசிப்பதற்கு மாறாத செறிவுடைய ஆக்சிஜனை வழங்குகிறது.
oxymel : தேம்புளிக்காடி : புளிக் காடியுடன் தேன் கலந்த பானம்.
oxymetazoline : ஆக்சிமெட்டாசோலின் : மூக்குக் குருதி நாள சுறுக்க மருந்து. முக்கடைப்பின் போது இதனால் உடனடியாகக் குணம் தெரியும் ஆனால், இந்தக் குணம் குறுகியகாலமே நீடிக்கும். இதனை அடிக்கடிப் பயன்படுத்தினால் எதிர்க் குருதித் திரட்சி ஏற்படும் அபாயம் உண்டு.
oxymetholone : உயிர்ப் பொருள் ஊக்கி : உயிர்ப் பொருளாக்கு தற்குரிய ஒரு கூட்டுப்பொருள்.
oxymetry : ஆக்சிஜன் அளவீடு : குருதியிலுள்ள ஆக்சிஜன் அளவை, குருதியின் மாதிரியை எடுத்து, காதுக் குழாயுடன் அல்லது விரல் நுனியுடன் இணைந்துள்ள ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி அளவிடுதல்.
oximeter : ஆக்சிஜன் மானி : குருதியிலுள்ள ஆக்சிஜன் செறிவளவை அளவிடவதற்குப் பயன்படும் ஒர் ஒளி-மின்னியல் சாதனம். இதில் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்களில் குருதி மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. பிரதிபலிக்கப்படும் அல்லது கடத்தப்படும் ஒளியின் அளவு அளவிடப்படுகிறது.
oxymon-2000 : நாடி அளவு கருவி : உடலின் நாடித் துடிப்பையும் ஆக்சிஜன் பற்றியும் அறிய உதவும் கருவி. அறுவை மருத்துவம் மூலம், அவசர மருத்துவப் பிரிவிலும் இது பயன்படுகிறது. மின் தடை ஏற்பட்டாலும் 2 மணி நேரம் வரை இதிலுள்ள மின்கலம் இயங்கும் நேரம், நாடித்துடிப்பு விகிதம் ஆகியவை அச்சாகி வெளிவரும். இதில் ஆட்காட்டி விரலை நுழைத்ததுமே அவரது நாடித்துடிப்பு அளவு படத்தில் தெரிந்துவிடும்.
oxypertine : ஆக்சிபெர்ட்டைன் : நரம்புக்கோளாறு, முரண் மூளை நோய் ஆகியவற்றில் பயன்படும் உறக்க மருந்து.
oxyphenbutazone : ஆக்சிஃபென்புட்டாசோன் : வீக்கத்தைத் தணித்து நோவகற்றக்கூடிய அல்லது மூட்டு வீக்கத்தைப் போக்கக் கூடிய ஒரு மருந்து. இது நச்சத் தன்மை யுடையதாகையால், ஒரு களிம்பாகப் பயன்படுத்தப்படுவது நீங்கலாக வேறெதற்கும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.
oxyspec : ஆக்சிஜன் குழாய்ச் சாதனம் : ஒர் ஆக்சிஜன் சாதனம். இதில் ஆக்சிஜன் குழாய், மூக்குக் கண்ணாடியின் ஒரு கனமான விளிம்புடைய சட்டகத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்.
oxytetracycline : ஆக்சிடெட்ரா சைக்ளின் : வாய்வழிக் கொடுக் கப்படும் ஓர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தப் படுகிறது. இதை நீண்டகாலம் பயன்படுத்தினால் பல பின் விளைவுகள் உண்டாகக்கூடும்.
oxytocic : துரித மகப்பேற்று மருந்து; பேறு விரைவு மருந்து; கருப்பை ஊக்கி : கருப்பையைச் சுருங்கச் செய்து பிள்ளைப் பேற்றை விரைவுப் படுத்தக் கூடிய மருந்து.
oxytocin : ஆக்சிட்டோசின் : பின்புறக் கபச்சுரப்பு இயக்கு நீர்களில் (ஹார்மோன்) ஒன்று. பால் சுரப்பு நாளங்களில் தசையைச் சுருங்கச் செய்து, பால் சுரக்கும்படி செய்கிறது. சிண்டோசினான் என்ற கபச் சுரப்பு நீர்த்தயாரிப்பு, கருப்பையைச் சுருங்கச் செய்கிறது. எனவே, இது மகப்பேற்றுக்கப் பின்னர் ஏற்படும் குருதிக்கசிவை நிறத்தப் பயன்படுகிறது.
oxyuris : நூல்பூச்சி; நூல் புழு; கீரிப் பூச்சி : நீளுருளைப் புழு வகையில் ஒன்று. இது பொதுவாக நூல் புழு எனப்படும்.
ozone : ஓசோன்; கமழி; செறி உயிரக ஒதை '(o3)' : ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது நுரையீரல் மண்டலத்தில் எரிச்சலையும், நச்சுத்தன்மையையும் உண்டாக்கக்கூடியது.