மருத்துவ களஞ்சியப் பேரகராதி/P
இதில் உள்ள மின்கலம் மூலம் கம்பி தூண்டுதல் பெற்று இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்களில் நோயாளிகளின் இதயம் மீண்டும் தானாகவே தன் பணியைத் தொடங்கிவிடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரை வேலை செய்யும்.
pacehionian corpuscles : பேக்கியோனியன் மெய்மங்கள் : இத்தாலிய உடற்கூறியிலாளர் ஏபேக்கியோனியின் பெயரைப் பெற்ற சிலந்திச் சவ்வின் விரல் துருத்தங்கள்.
pachyblepharon : திண் கண்ணிமை; தடி இமை : கண்ணிமைகள் திண்மையாக இருத்தல்.
pachycephalia : திண் மண்டை; தடி மண்டை : திண்மையான மண்டையோடு.
pachycephaly : தடிமண்டை : கபால எலும்புகள் இயல்புக்கு மீறித் தடித்தநிலை.
pachyehilia : திண் உதடு; தடி உதடு : உதடுகள் திண்மையாக இருத்தல்.
pachydermato coele : தடித் தோல்பை : 1. மிகுந்து தொங்கும் தோல் மடிப்புகள், 2. பெரும் நரம்புநார்க் கட்டி.
pachydermia : திண் தோல்; தடித்தோல்; சொரணையின்மை; ஊறுணர்ச்சியின்மை : தோல் திண்மை பெற்றிருத்தல் ஊறு உணர்ச்சி இல்லாதிருத்தல்.
pachydermoperiostosis : தடித்தோல் என்பு சுற்று : இயல்புக்கு மீறித் தடித்த தோலின் இயல்பான மடிப்புகள், தலைத் தோல், முகத்தோலின் மிகுந்த சுருக்கங்கள், கை, கால் உறுப்புகளின் சேய்ம எலும்புகள் தடித்தல் மற்றும் தடித்த விரல்கள்.
pachydermy : தடித்தோல் : தைராய்டு குறைவீக்கத்தில் உள்ள புரதம் மிகுந்த மியூசின் அல்லது பிட்யூட்டரி மிகை நோயிலுள்ள நெகிழா இணைத் தின்குவிப்பால் விலங்குத்தோல் போன்ற தோலடித் தடிப்பு.
pachyleptomeningitis : தடி மூளை உரையழற்சி : மூளை மற்றும் தண்டு வடத்தின் முருட்டுச் சவ்வும் மற்றும் மென் சவ்வும் அழற்சி.
pachymeningitis : மூளைச் சவ்வழற்சி : மூளையையும், முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டு இருக்கும் உறுதியான மேல் சவ்வில் ஏற்படும் வீக்கம்.
pachyperiostitis : எறும்பு தடித்தல்; நீள் எறும்பு அழற்சித் தடிப்பு; தடி என்பு சுற்றழற்சி : நீள் எலும்புச் சுற்றுச்சவ்வழற்சியின் விளைவாக பாதிக்கப் பட்ட எலும்புகள் தடித்தல். pachyperitonitis : தடி வயிற்றுள்ளுறையழற்சி : வயிற்றுள்ளுறை அழற்சியுற்றுத் தடித்தல்.
pachysalpingoovaritis : தடி, கருப்பைக் குழல் அண்டகவழற்சி : கருப்பைக்குழல் மற்றும் அண்டகம் நாட்பட்ட அழற்சியால் தடித்தல்.
pachytene : தடிப்பட்டை : குன்றற் பிரிவின் நிலைப்படி நிலையில் அமைப்பொத்த இனக் கீற்றுகள் இணையாவது முழுமையடைந்துள்ளது. அவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து நெடுக்கில் பிளந்து, நன்கு பின்னிப் பிணைந்த நிறமியன் தொகுதியாதல்.
pachyvaginalitis : தடியுறையழற்சி : விரையுறை அழற்சியுற்றுத் தடித்தல்.
pachyvaginitis : தடியோனியழற்சி : யோனியின் நாட்பட்ட அழற்சியால் யோனிச் சுவர்கள் தடித்தல்.
pacing : இதய முடுக்கி : இயல்பான இதய இயக்க முறையை நிலைப்படுத்தப் பயன்படும் மின்துடிப்புச் சீரமைவி.
pacinian corpuscles : பசினி மெய்மங்கள் : இத்தாலிய உடற் கூறியலாளர் ஃபிலிப்போ பசினியின் பெயராலமைந்த குறிப்பாக தோலிலுள்ள பெரும் உறையமைந்த தொடு உணர்வு ஏற்பிகள்.
pack : கட்டு : 1. உடலை ஒரு போர்வை அல்லது விரிப்பில் வைத்துச் சுற்றிக்காட்டுதல். 2. ஒரு குழிவறையை பஞ்சு அல்லது மென்வலைத் துணி கொண்டு நிரப்புதல்.
package insert : மருந்து விவரத்தாள் : ஒரு அறிவுறுத்தப்பட்ட மருந்துப் பொருளுடன் தரப்படும் பொருள் பற்றிய முழு விவரங்களைத் தரும் குறிப்புத் தாள்.
packed cell volume : அடர்ந்த சிவப்பணுப் பருமானம்.
packed red cells : சிவப்பு வடிவணு : ஒருபை இரத்தத்தில் பெருமளவு நீர்ப்பகுதி நீக்கப்பட்ட சிவப்பணுக்களின் ஒரளவுத்திரள்.
pad : திண்டு : 1. ஒரு பகுதி அல்லது உறுப்பை அழுத்த அல்லது அழுத்தம் நீக்கப் பயன்படும், ஒரு மென்பொருள் திண்டு. 2. சதை போன்ற கொழுப்புதிறன்.
pad sign : திண்டமைக் குறி : பேரியம் உணவு எக்ஸ்ரே படத்தில், கணையத் தலைப்புற்றால் முன்சிறுகுடல் வளைவு திண்ட மைந்து தோன்றும் குறி.
paediatric : குழந்தை மருத்துவத் தொடர்புடைய.
paediatrician (paediatrist) : குழந்தை மருத்துவர் : குழந்தை மருத்துவ வல்லுநர் ; குழந்தைகளின் நோய்களைக் குணப் படுத்துவதில் வல்லுநர்.
paediatrics : குழந்தை மருத்துவம் : குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
paget.Schroetter syndrome : கழுத்துப் பட்டை நரம்புக் குருதியுறை நோய் : கழுத்துப்பட்டை எலும்புக்குக் கீழுள்ள நரம்பில் ஏற்படும் குருதியுறைவு (குருதிக் கட்டு) நோய் இளைஞர்களுக்கு வலிப்பின்போது ஏற்படுகிறது.
paget's disease : எலும்பு நலிவு நோய் (பேஜட் நோய்) : காரத் தன்மையுடைய ஃபாஸ்ஃபேட்டுகள் செரிமானப்பொருள் அதிகமாவதால், எலும்பு மிக விரை வாக உருவாகும். இதனால், உடல் உயரம் குறுகிவிடும். உறுப்புகள் திரிபடையும். தலை பருத்துவிடும். முள்ளெலும்பு (தண்டெலும்பு) நலிந்துவிடும். நரம்புக் கோளாறுகள் உண்டாகும். இந்நோயாளிகள் முக்கியமாக எலும்புக் கழலைக்கு ஆளாகிறார்கள். செவி நரம்பு பாதிக்கப்படுமானால் கேட்கும் ஆற்றல் குறைகிறது. 'கால்சிட் டோனின்' என்ற மருந்து இதற்குப் பயன்படுகிறது.
painful crisis : வலிமிகு சிக்கல்கள் : வெட்ட அரிவாளணுச் சோகையில் தோன்றும் தீவிர ஆபத்தான நிலைகளில் ஒன்று. அரிவாளனுக்கள் சிதைந்து, தந்துகிகளில் குருதித் தேக்கத்தால் பகுதியழிவு நேர்தல். இதனை தீவிர தசையெலும்பு வலி, வேற்றிட உறுப்பு வலி, இரத்தக்கோழை, சிறுநீரில் இரத்தம், இரத்தக் கசிவால் கரு மலம், நரம்புமண்டல நோய்க் குறிகள் தோன்றுகின்றன.
painful fat syndrome : வலிமிகு கொழுப்பு நோயியம் : (வயதுக்கு வந்த) இளம் பெண்களில், கொழுவீக்கம் காரணமாக நாட்பட்ட இருகால் வீக்கமும் தொடுவலியும்.
painful red leg syndrome : வலிமிகு செங்கால் நோயியம் : தோல் வெப்பநிலை 32 சென்டி கிரேடுக்கு மேல் போவதால் மிகுஉணர் நிலையால், ஒரிட நாளவீக்கமும், எரிப்பு உணர்வும், கை, கால் உறுப்புகளின் புறப்பரப்பு சிவத்தல் போன்றவை ஏற்படுதல்.
pain receptors : வலி உணர் அரும்புகள்.
Paget's disease of the breast : மார்பக பேஜட்நோய் : உள்ளிருக்கும் மார்பக உள்நாளப் புற்றுடன் சேர்ந்து காணப்படும், மார்புக் காம்புகளின் நீர் வடியும் கரப்பான்புண் நோய் நிலை. pain : நோவு; வேதனை; வலி : ஒரு இடத்தில் ஊசி குத்துவது போன்ற அல்லது பரவலான மிதமான மிகவும் (தொந்தரவான) துன்பம் தரும் உணர்வு.
pained : நோவளிக்கும்.
Pain reliever : வலி குறைப்பி.
paried organs : இணை உறுப்புகள் : கண்கள், சிறுநீரகங்கள், பாலினச் சுரப்பிகள் மற்றும் நுரையீரல்கள் போன்ற உடலிலுள்ள இரண்டாக உள்ள உறுப்புகள்.
palate : அண்ணம் : மேல்வாய்ப் பகுதி.
palatine : அண்ணம் சார்ந்த; அண்ண : மேல்வாய் சார்ந்த.
palatine bones : அண்ண எலும்புகள் : பல்லண்ணத்தை உருவாக்கும் இரண்டு எலும்புகள்.
palatopharyngoplasty : அண்ணம்; தொண்டை சீர் அறுவை : மிகுந்து தொங்கும் சீதச்சவ்வை மெல் அண்ணம், தொண்டையிலிருந்து நீக்கும் அறுவை மருத்துவ முறை.
palatoplasty : அண்ணச்சீர் அறுவை : அண்ண, மறு சீரமைப்பு அறுவை மருத்துவம்.
palato quardrate : மேல்தாடை.
paleocerebellum : பரிணாம முன்நிலைச் சிறுமூளை : அசை வியக்கம், சமநிலை ஆகியவற்றோடு தொடர்புடைய தண்டுவட சிறுமூளை நரம்பிழைகளைக் கொண்ட சிறுமூளை அரைக் கோளத்தின் உட்பக்கப் பகுதியும் கொண்ட சிறமூளையின் உட்பகுதி.
paleocortex : பரிணாமமுன் நிலைப் புறணி : பெருமூளைப் புறணியின் மூச்சியக்கப் புறணிப் பகுதி.
paleopathology : பழைய நோயியல் : பழங்காலத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு வரும் பிண உடல்களின் நோய் நிலைகளை ஆராய்தல்.
palfium : பால்ஃபியம் : டெக்ஸ் டிரோமோராமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
palingenesis : மரபுப் பண்புருவாக்கம் : மூதாதையர் பண்புகள் மாற்றமடையாமல் அப்படியே உருவாதல்.
palinopsia : தூண்டல் நின்ற பிறகும் தொடர்ந்திருக்கும் பார்வையுணர்வு.
pallesthesia : ஒரு எலும்புத் துருத்தத்தின்மேல், ஒரு அதிரும் ஒலிக் கவட்டை வைப்பதால் உடலின்மேல் அல்லது உடலருகில் உண்டாகும் ஒலியதிர்வுகளை உணரும் திறன்.
palliation : கடுமைத் தணிப்பு : நோயின் கடுமையை மட்டுப் படுத்துதல். palliative : நோய்த் தணிப்பு மருந்து; வலி நீக்கி; நோய்க்குறி நீக்கல் : நோயை மட்டுப்படுத்த உதவும் மருந்து. இது நோயைத் தணிக்குமேயன்றிக் குணப்படுத்தாது.
pailidotomy : மூளை இணைப்பு இழை அறுவை : மூளைத் தண்டுவடப் புறணிக்கும் தனி வரிப்பள்ளத்திற்குமிடையிலான இணைப்பு இழைகளை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல். இது பார்க்கின்சன் நோயில் நடுக்கத்தைக் குறைக்கச் செய்யப்படுகிறது.
palm : உள்ளங்கை; அங்கை : அங்கை வரை மூடும் கையுறை, அங்கை அகலம் ஏறத்தாழ 10 செ.மீ. உள்ளங்கை நீளம் ஏறத்தாழ 20 செ.மீ.
palmar : உள்ளங்கை சார்ந்த : அங்கைய உள்ளங்கையிலுள்ள.
palmate (palmated) : உள்ளங்கை வடிவான : உள்ளங்கை வடிவில் உள்ள.
palmitic acid : பால்மிட்டிக் அமிலம் : பெரும்பாலான எண் ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படும் ஒரு 16 கரிய செறிவுக் கொழுப்பமிலம்.
palpable : தொட்டுணரக்கூடிய; தொட்டறியும்; தொட்டுணர் : புலன்களால் எளிதில் உணரத்தக்க உள்ளத்தால் அறியக்கூடிய.
palpation : கைச் சோதனை; தொட்டறிதல்; தொட்டுணர்தல்; தொட்டாய்தல் : மருத்துவத்தில் கையால் தொட்டுப் பரிசோதனை செய்தல்.
palpebra : கண்ணிமை; இமைகள்.
palpebra : கண்ணிமை சார்ந்த; இமைக்கண் சவ்வு : கண்ணி மைக்குரிய.
palpitation : நெஞ்சுத் துடிப்பு; மார்புப் படபடப்பு : கடுமுழைப்பு, நோய் கவலை காரணமாக ஏற்படும் அளவுக்கு மீறிய நெஞ்சுத் துடிப்பு.
paisy : முடக்குவாதம்; வாதம் : உடல் உறுப்புகள் முழுதும் செயலற்றுப்போதல், உணர்வு கெடுதல்.
paludrine : பாலூட்ரின் : புரோகுவானில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
pamaquin : பாமாக்குவின் : முறைக்காய்ச்சல் (மலேரியா) நோய்க்கு எதிராகப் பயன் படுத்தப்படும் ஒரு செயற்கை மருந்து இது கொய்னாவுடன் அல்லது குளோக்குவினுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.
pamergan : பாமர்கள் : பெத்திடின் புரோமெத்தாசின் இரண்டும் கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர். இது மருத்துவச் சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப் படுகிறது.
panadol : பனாடோல் : பாராசிட்டாமோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
panagglutinin : அனைத்துத் திரட்டி : எல்லா மனித இரத்த வகைகளின் இரத்தச் சிவப்பணுக்களை ஒட்டித் திரளச் செய்யும் ஒட்டுத்திரள் எதிர் மியம்.
panagraphy : எக்ஸ்ரே கருவிக்குள்ளும், படகேசிட்தாடையைச் சுற்றிலும் வைத்து படமெடுத்து ஒரு தாடையில் உள்ள எல்லா பற்களையும் ஒரு படத்தில் பார்த்தல்.
panarthritis : முழு மூட்டு வாதம்; மூட்டு அழற்சி; முழு மூட்டழற்சி : ஒரு முட்டின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் ஏற்படும் வீக்கம்.
pancake omentum : அடையுரு வயிற்றுள்ளுறை : எந்த ஒரு புற்றுநோயும் பரவலாக ஊடுருவிப் பரவியதன் காரணமாக, வயிற்று உள்ளுறை மிகவும் தடித்துக் கடினமாதல்.
pancarditis : இதய அழற்சி; முழு இதய அழற்சி :' இதயத்தின் எல்லாக் கட்டமைப்புகளிலும் உண்டாகும் வீக்கம்.
Pancoast's tumour : பேன் கோஸ்ட் கட்டி : நுரையீரலின் உச்சி மடலைப் பற்றிய மூச்சுக் குழாய்ப் புற்று மேல்நோக்கி வளர்ந்து அப்பக்க மேற்கை நரம்புப் பின்னலையும் கழுத்துப் பரிவு நரம்புச் சங்கிலித் தொகுதியையும் தாக்குதல்.
pancolectomy : முழுப்பெருங்குடல் நீக்கம் : முழுப்பெருங் குடலையும் அறுவை நீக்குவதோடு, பின் சிறுகுடலில் துளையுண்டாக்கி வெளிக்கொணர்தல்.
pancreas : கணையம் : இரைப் பையின் அருகிலுள்ள, செரி
மானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால்பகுதி மண்ணிரலைத் தொட்டுக் கொண்டிருக்கும். இது சுமார் 18 செ.மீ. நீளமும், சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் என்ற இயக்கு நீரும் (ஹார்மோன்) சிறு குடலில் கொழுப்புகளையும் செரிமானப் பொருள்கள் அடங்கிய கணைய நீரும் சுரக்கின்றன.pacreatectomy : கணைய அறுவை; கணைய எடுப்பு; கணைய துணிப்பி : கணையத்தை முழுவதுமாக அல்லது அதன் ஒரு பகுதியை அறுத்து எடுத்து விடுதல்.
pancreatic : கணையம் சார்ந்த.
pancreatic digestion : கணையச் செரிமானம்.
pancreatic extract : கணையச் சாரம்.
pancreatic function test : கணைய இயக்கச் சோதனை : இதில் லாவின் குழாய்கள், இரைப்பைக்குள்ளும், முன் சிறுகுடலின் இரண்டாம் பகு திக்குள்ளும் செருகப்படுகிறது. முன் சிறுகுடலின் உயிர்ப் பொலியை பகுப்பாய்வு செய்து, கணையச் சுரப்பியின் பல்வேறு இயக்கு நீர்த் தூண்டுதல்களின் விளைவுகள் அளவிடப்படுகின்றன.
pancreatic juice : கணைய நீர்.
pancreaticoduodenostomy : கணைய முன் சிறுகுடல் துளைப்பு : கணைய நாளத்தை முன் சிறு குடலில் வேறொரு இடத்தில் ஒட்டியிணைத்தல்.
pancreatin : கணைய நீர்மம் : கணயத்திலிருந்து எடுக்கப்படும் செரிமானப் பொருள்களின் (என்சைம்) ஒரு கலவை. கணைய நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.
pancreatitis : கணைய அழற்சி : கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது.
pancreatoduoclenectomy : கணையமுன் சிறுகுடல் அறுவை நீக்கம் : கணையத்தின் தலைப் பகுதியையும் அத்துடன் அதைச் சுற்றியுள்ள முன் சிறு குடல் வளைவையும் அறுத்து நீக்குதல்.
pancreozymin : கணைய சுரப்பு ஊக்கி : முன்சிறுகுடல் சவ்வுப் படலத்தில் கரக்கும் ஒர் இயக்குநீர் (ஹார்மோன்). இது கணையச் செரிமானப்பொருள்கள், குறிப்பாக, அமிலேஸ், சுரப்பதைத் தூண்டுகிறது.
pancrex : பாங்கிரக்ஸ் : கணைய நீர்மத்தின் (பாங்கிரியாட்டின்) வணிகப் பெயர். pancuronium : தசைத் தளர்த்தி : மயக்கம் கொடுக்கும்போது துணை செய்யப் பயன்படுத்தப் படும் இயக்குதசை தளர்விக்கும் மருந்து.
pancystitis : முழுப்பையழற்சி : சிறுநீர்ப் பையின் சுவர் முழுவதையும் பாதித்துள்ள அழற்சி.
pancytopaenia : குருதி அணுக்குறை; முழு உயிரணுக்குறை : இரத்தத்தில் சிவப்பணுக்கள், துகள் வெள்ளணுக்கள், தட்டணுக்கள் குறைவாக இருக்கும் நிலை. எலும்பு மச்சையின் செயற்பாடு மட்டுப்படுத்தப் படும்போது இது உண்டாகிறது.
pandemic : பெருங்கொள்ளை நோய்; பகுதி முழுவதும் பரவு நோய்; பாரிய நோய் : ஒரு நாடு முழுவதும் அல்லது உலகம் முழுவதும் பரவும் பெருங்கொள்ளை நோய்.
Pandy's test : பேன்டியின் சோதனை : ஹங்கேரி நாட்டு மனநல மருத்துவர் கால்மேன் பேன்டியின் பெயரிடப்பட்ட இச்சோதனையில், மூளை தண்டுவட நீரிலுள்ள குளாபு லின் புரதமிருப்பதை, 7% ஃபீனால் சேர்ப்பதால் ஏற்படும் கலங்கல் நிலையால் அறிவது.
panencephalitis : முழுமூளையழற்சி : மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி.
panendoscopy : முழுப்பகுதி அக நோக்கி : உணவுக்குழல், இரைப்பை, முழு சிறுகுடல் எல்லாவற்றையும் ஒரு தடவை சோதனையின்போதே இழைக் காட்சி அகநோக்கியால் காணுதல்.
Paneth's cells : பேனெத் அணுக்கள் : ஜெர்மானிய மருத்துவர் ஜோசஃப் பேனெத்தின் பெயரைப் பெற்ற, சிறுகுடல் குழல் சுரப்பிகளின் புறத்தோலிய இழைமத்திலுள்ள இயோசின் நிறத் துணுக்குகளைக் கொண்ட பெரும் அணுக்கள்.
panhypopituitarism : முழுப் பிட்யூட்டரிக்குறை சுரப்பி : முன் பகுதிப்பிட்யூட்டரி சுரப்பின் அழிவால், எல்லா முன் பிட்யூட்டரிச் சுரப்பிகள் இல்லாமல் போவது அல்லது குறைவாக இருக்கும் ஒரு நிலை.
panhysterectomy : முழுக்கருப்பை நீக்கம் : கழுத்துப் பகுதியும் சேர்த்துக் கருப்பை முழுவதையும் அறுத்து நீக்குதல்.
panhysterosaipingectomy : முழு கருப்பை; கருப்பைக்குழல் அறுவை நீக்கம் : கருப்பை, கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பைக் குழல் அனைத்தையும் அறுத்து நீக்குதல். panic attack : திகில் தாக்கம் : தானியங்கி நரம்பியக்க விளைவுகளும் பேரச்ச உணர்வு மிகுதியோடு கவலையும் திடீரென்று விட்டுவிட்டு தீவிரமாகத் தாக்குதல்.
panniculectomy : கொழுபடல அறுவை நீக்கம் : உடல் பருமனானவர்களில் வயிற்றுக் கொழுப்பை அறுத்து எடுத்தல்.
panniculitis : கொழு படல அழற்சி : வயிற்றுமுன் சுவரின் தோலடிக் கொழுப்பழற்சி.
pannus : விழி வெண்படலச் சுருக்கம்; மரை படலம் : விழி வெண்படலம் குழாய்போல் சுருக்கமடைதல். இது பெரும்பாலும் இமைப்படல எரிச்சலுடன் தொடர்புடையது.
panography : அகல்பரப்பு படவரைவு : ஒரே படத்தில், முழு பல்தொகுதியையும் முழுமையாகக் காட்சி பெற பயன்படுத்தும் எக்ஸ்ரே படமெடுக்கும் தொழில்நுட்பம்.
panopthalmitis : விழித் திசு அழற்சி; முழுக்கண்ணழற்சி : கண் விழியின் திசுக்கள் அனைத்திலும் ஏற்படும் வீக்கம்.
panosteitis : எலும்பு வீக்கம் : எலும்பு மச்சை, எலும்புத் திசு, எலும்புகளை மூடியுள்ள சவ்வு போன்ற எலும்பின் அமைப்பான்கள் அனைத்தும் வீக்க மடைதல்.
pant : மூச்சுத் திணறல்.
pantigridle syndrome : கணுக்கால் வீக்கம் : இறுக்கமான குறுங்கால் சட்டை அணியும் பெண்கள் உட்கார்ந்தே ஒரு நாள் வேலை செய்தபிறகு, அவர்களின் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கம்.
pantothenic acid : பேண்டோத்தெனிக் அமிலம் : வைட்டமின் பி. தொகுதியின் ஒருகூறு.
PAO : உச்ச அமில உற்பத்தி.
pO2 : நுரையீரல் தமனி ஆக்சிஜன் பூரிதம் : நுரையீரல் தமனி ஆக்சிஜன் பூரிதம் மற்றும் அழுத்தம்.
papain : பேப்பெயின் : புரதங்களையும் பாலிபெட்டைடுகளையும் (அமைனோபுரதங்கள்) நீராய் பகுப்பு செய்ய கிரியா ஊக்கியாகப் பயன்படும், ஒருவகை பப்பாளியிலிருந்து கிடைக்கும் புரதப்பிளப்பு நொதி.
Papaincolaou test : பெப்பானி கோலோ சோதனை : பேப் தடவுகை கிரேக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் பெப்பானி கோலாவல் விவரிக்கப்பட்ட சோதனை கருப்பைக் கழுத்தின் செதிளணுப்புற்று மற்றும் பிறழ் வளர்ச்சியையும் கண்டு பிடிக்க, கருப்பைக் கழுத்துச் சீதத்தின் மாதிரி எடுத்து அணுச் சோதனை செய்தல். papovaviridae : பெப்போவா வைரிடா : புற்றுண்டாக்கும் ஆற்றல் அடங்கிய பெப்போவா வைரஸ்கள். பேப்பில்லோமா வைரஸ்கள், பாலியோமா வைரஸ்கள் மற்றும் சிமியன் வைரஸ் 40 (SW40) இவ்வகையில் அடங்கும்.
Pappenheimer bodies : பேப்பன் ஹீமர் மெய்மங்கள் : அமெரிக்க உயிர்வேதியியலாளர் பெயரால் அழைக்கப்படும் செவ்வணுக்களிலுள்ள சிறு இரும்புள்ள நில நிறமேற்றும் துணுக்குகள்.
paptest : புற்றநோய்ச் சோதனை : கழுத்துப் பகுதியிலுள்ள புறப் படல் உயிரணுக்களின் ஒரு திரளை எடுத்துச் சாயமேற்றி, நுண்ணோக்காடியில் பரிசோதனை செய்து, தொடக்கநிலைப் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை.
papaveretum : அபினிக் கலவை : 50% மார்ஃபின் அடங்கியுள்ள அபினி வெடியகக் கலப்புப் பொருள்களின் கலவை.
papaverine : பாபாவெரின் : அபினி வெடியகக் கலப்புப் பொருள்களில் சற்று முக்கியத்துவம் குறைந்த ஒரு பொருள்; இசிப்பு, ஈளை நோய், வெளிச் செல்குழாய்க் கோளாறுகள் ஆகியவற்றில் தளர்ச்சியூட்டும் மருந்தாகப் பயன்படுகிறது.
papila : காம்புக் குமிழ் சதைக் காம்பு; நுண்காம்பு; சிம்பு; முளை : காம்பு போன்ற நுண்ணிய முகிழ் போன்ற உறுப்பு.
papillitis : சதைக் காம்பு வீக்கம்; நுண்காம்பு அழற்சி : ஃபினாசிட் டின் என்ற மருந்தை அளவுக்கு மீறி உட்கொண்டால், சிறுநீரகத்தில் சதைக்காம்பு வீக்கம் ஏற்படலாம்.
papillary muscle : அடுக்குத் தசை : சிம்புத் தசைகள்.
papilloedema : கண் குமிழ் அழற்சி; வட்டு வீக்கம் : கண் குமிழில் ஏற்படும் இழைம அழற்சி. இது உள் மண்டையோட்டில் அழுத்தம் அதிகரித் திருப்பதைக் குறிக்கும்.
papilloma : கண்குமிழ் கட்டி; சிளைக்கும் கட்டி; நுண்காம்புக் கட்டி : சுரப்பியல்லாத கழுத்துப் புறப்படலப் பகுதியில் உண்டாகும் இலேசான கட்டி.
papillomatosis : தோல் கட்டி : தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் உக்கிரமற்ற வளர்ச்சி. இதனை லேசர்மூலம் அகற்றலாம்.
papule : கொப்புளம்; பரு : தோலில் ஏற்படும் சிறிய வட்ட வடிவப் பரு.
papulopustular : கொப்புளம் சார்ந்த; சீழ்க்கொப்புள : கொப்புளங்கள், சீழ்க்கொப்புளங்கள் சார்ந்த. paraaminobenzoic acid : பாராமினோபென்சாயிக் அமிலம் : சூரிய ஒளியிலிருந்து புறவூதாக் கதிர்களை வடிகட்டும் அமிலம். இது களிம்பு அல்லது கழுவு நீர்ம வடிவிலும் கிடைக்கிறது; இது வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
paraaminosalicylic acid (PAS) : பாராமினோசாலிசிலிக் அமிலம் : காசநோய்க்கு எதிராகப் பயன் படுத்தப்படும் மருந்து ஐசோனியாசிட் அல்லது ஸ்டிரப்டோமைசின் மருந்துடன் சேர்த்துக்கொடுக்கப்படுகிறது.
paraanaesthesia : கீழுடம்பு உணர்விழப்பு : உடம்பின் கீழ்ப்பகுதி உணர்விழப்பு.
paraaortic : பெருந்தமனி அருகிலுள்ள : இதயத்திற்கு இடது மேலறையிலிருந்து புறப்படும் பெருந்தமனி என்ற இரத்தக் குழாயின் அருகில் இருப்பது.
paraaortic body : மகாதமனிப் பக்க மெய்மம் : வயிற்றுமகா தமனிப்பக்கத்தில் அமைந்து உள்ள சிறு குரோமேட்டின் திசுத்திரள்களில் ஒன்று.
parabiosis : பர உயிர் இரட்டைகள் : 1. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இரு உயிர்கள் ஒன்றிணைதல், 2. கடத்து திறனும் கிளர்திறனும் தற்காலிகமாக தடைப்பட்டு இருத்தல்.
paracentesis : வடிதுளையிடல் : உடற்குழிவறை ஒன்றை வெளி யிலிருந்து ஒரு ஊசியால் அல்லது ஒரு துளைக்கும் கருவியால் துளைத்து உள்ளிருக்கும் நீரை, நோயறிவதற்காக அல்லது மருத்துவத்துக்காக வெளியி லெடுக்கும் முறை.
paracetamol : பாராசிட்டாமோல் : ஒரு மென்மையான நோவகற்றும் மருந்து. இது வீக்கத்தைக் குறைப்பதில்லை. முடக்கு வாதங்களுக்கு இது பயன்படாது. இதனை அதிக அளவில் உட்கொண்டால் நுரையீரலுக்குக் கடுஞ்சேதம் விளையும்.
parachute mitral valve : வான்குடையுகு ஈரிதழ் தடுக்கிதழ் (வால்வு) : ஈரிதழ் வால்வின் இரு சிற்றிதழ்களின் தசை நாரிழைகள் இடது இதயக் கீழறையின் காம்புருத்த தசைகளில் செருகியிருப்பதால் குருதியோட்டத் துக்குத் தடை ஏற்படுத்தல்.
paraclinical : மருத்துவம் சார்ந்த மருந்தியல் : நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள்.
paracodo : பாராக்கோடால் : கோடைன் கலந்த பாராசிட் டோமால் என்ற கரையக்கூடிய மாத்திரைகளின் வணிகப்பெயர்.
paradigm : கருத்துரு நிலை : கருத்துரு விளக்கக் கொள்கையை ஒத்திசையும் தரவுகள் சேர்வதால், ஒரு குறிப்பிட்ட உயிர்வேதியியல் தத்துவத்தின் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுதல்.
paradoxical sleep : கனவு உறக்கம் : உறங்கும் நேரத்தின்போது விரைவான கண்ணசைவுகள் ஏற்படும்; அப்போது கனவுகள் உண்டாகின்றன.
paraesthesia : மிகை ஊறுணர்வு : மட்டுமீறிய தொடு உணர்வு.
paraffin : நிலமெழுகு கன்மெழுகு : களிமண்ணுடன் கல்லெண் ணெயைக் கலந்து கிடைக்கும் மெழுகு. திரவ நில மெழுகு பேதி மருந்தாகப் பயன்படுகிறது. வெண்ணிறமான மென் நிலமெழுகு களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது. திண்ணிய நிலமெழுகு வாதங்களுக்குப் பூச்சி மருந்தாகப் பயன்படுகிறது. நிலமெழுகு எண்ணெய் விளக்கு எரிக்கவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது.
paraffinoma : மெழுகுருக்கட்டி : தொடர்ந்து மெழுகு படிவதால் உண்டாகும். (குருளை) திசுக் கட்டி.
paraformaldehyde : பாராஃபார் மல்டிஹைட் : இறந்தவர் உடற் குழாய்களில் இருக்கும் சிறு குழல்களில் நோய் நுண்மம் நீக்கவும், அறைகளை தொற்றுத் தடை நீக்கம் செய்யவும் பயன்படும் திடபொருள்.
paragesic : பாராஜெசிக் : நோவகற்றும் ஒரு கலவைப் பொருளின் வணிகப் பெயர். இது, வலியுண்டாக்கும் மேல் மூச்சடைப்புக்குப் பயன்படுகிறது.
paragonimiasis : பாராகோனி மஸ்மொய்ப்பு : பாராகோனிமஸ் இனம் சார்ந்த ஒட்டுண்ணிப் புழுத்தாக்கம். நுரையீரலில் வெஸ்டர்மனை தாக்கத்தால் ஏற்படும் நீர்க்கட்டிகளால் கோழையில் குருதி வெளியாவதோடு விரல் முனைகள் தடித்தல், கல்லீரலும் மூளையும் பாதிக்கப்படலாம். மருத்துவம் செய்ய பிரேசிகுவிண்டால் மருந்து தரப்படுகிறது.
paragonimus : பேராகோனிமஸ் : நுரையீரல் வாழும் ஒட்டுண்ணிக் கொக்கிப் புழுக்கள் இனத்தில் அதிகமாகக் காணப்படுவது பேராகோனிமஸ் பெஸ்டெர்மனை என்னும் இனமாகும். அவற்றின் முட்டைகள் இருமல் சளி அல்லது மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து தண்ணீரில் முட்டைப் புழுக்கள் வெளிப்பட்டு புது நீர் நத்தைகளில் நுழைகின்றன. நத்தையிலிருந்து வெளிப்படும் முட்டைப்புழு நண்டுகளில் நீர்க்கட்டி வடிவம் பெறுகின்றன. அந்த நிலையில் அவை அப்படியே அல்லது சரியாக சமைக்காமல் உண்பவர்களை புழுக்கள் மொய்க்கின்றன.
parahaemophilia : குருதி ஒழுக்கு நோய் : குருதியுரைகாரணி 2 ஹவால் பரம்பரை குருதி ஒழுக்குத்தன்மை.
parainflunenzavirus : ஊனீர் நோய்க் கிருமி : ஊனீர் நோய்க் கிருமிகளில் ஒன்று. இது மேல் மூச்சுக் கோளாறினை உண்டாக்குகிறது வைரஸ் கிருமிகளில் ஒருவகை.
parakeratosis : தோல் அசைக்கரு முன்படலப் பாவல்.
paralaia : பேச்சொலி பிறழ்வு; பிதற்றல் : ஒரு எழுத்தை வழக்கமாக மாற்றி உச்சரிக்கும் பேச்சுக் குறை.
paraldehyde : பாரால்டிஹைட் : தூக்கமுட்டும் இயல்புள்ள ஒரு திரவம். குளோரால் ஹைட்ரேட் போன்ற குணமுடையது. ஆலிவ் எண்ணெய்க் கரைசைலாக வாய்வழியாகவும் நரம்பூசி வழியாகவும் கொடுக்கப்படுகிறது. இப்போது இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளுக்கு மயக்கமூட்டப் பயன்படுகிறது.
parallergy : பர ஒவ்வாமை : ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக் கிப்பொருளால் மிகுஉணர்வுக்கு ஆட்பட்டதால், எந்த ஒரு தூண்டலாலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உடலின் ஒவ்வாமை நிலை.
paralysis : முடக்குவாதம்; பக்கவாதம்; வாதம் செயலிழப்பு : நரம்பு செயலிழப்பதன் காரணமாக உடலின் ஒரு பகுதி முழுமையாக அல்லது பகுதியாகச் செயலிழத்தல். இது உணர்வு நரம்பு சார்ந்ததாகவோ அல்லது இயக்கு நரம்பு சார்ந்ததாகவோ அல்லது இரண்டும் சார்ந்ததாகவோ இருக்கலாம்.
paralytic : வாதநோயாளி; வாத : முடக்குவாத நோய் உடையவர்; பக்கவாத நோயாளி; இயக்க ஆற்றல் இழந்தவர்.
paralyticileus : குடலியக்கக்குறை : வயிற்றறுவை, வயிற்றுள் ளுறையழற்சி பொட்டாசியக் குறைகுருதி நிலை போன்ற மின் அயனிப் பிறழ் நிலைகளில் குடலி அலைவியக்கம் குறை படும் அல்லது தடைபடும் நிலை. paramedian : மையம் சார்ந்த; மையத்தருகில் : மையப்பகுதி அருகிலுள்ள.
paramedian incision : நடுக்கோட்டுப் பக்கக்கீறல் : வயிற்று நடுக்கோட்டிலிருந்து 1-2.5 செ.மீ. தள்ளி செங்குத்தாகக்கீறி, நேர்த்தசையை வெளிப்பக்கம் தள்ளி வைத்தல்.
paramedic : துணைமருத்துவப் பணியாளர் : ஒரு விபத்திற்குப் பின் அவசர மருத்துவ கவனிப்பு அளித்து உயிர் மீட்கும் பயிற்சி பெற்ற ஆள்.
paramedical : மருத்துவஞ்சார் தொழில்; மருத்துவ உதவியாளர் : மருத்துவத் தொழிலுடன் தொடர்புடைய தொழில் முறைப் பயிற்சி, உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, மருத்துவச் சமூகத்தொண்டு ஆகியவை இவ்வகையின.
paramenstruum : மாதவிடாய்க் காலம் : மாதவிடாய் தொடங்குவதற்கு முந்திய நான்கு நாட்களும் மாதவிடாயின் முதல் நான்கு நாட்களும் மாதவிடாய் காலம் எனப்படும்.
parametrium : கருப்பை இணைப்புத்திசு; கருப்பைப் பக்கம் : கருக் பையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுக்கள்.
paramo : பாராமோல் : பாராசிட்டாமோல், டைஹைடிரோக் கோடைன் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர் இலேசான வலியைக் கட்டுப்படுத்த வாய்வழி உட்கொள்ளப்படுகிறது.
paramucin : பேராம்யூசின் : முட்டைப்பை நீர்க்கட்டியிலும் மற்ற நீர்க்கட்டிகளிலும் காணப்படும் பழச்சீனிப் புரதம். அது நீரில் கரைவதில்லை. ஆனால் டேன்னின் சேர்த்தால் அடியில் படிகிறது.
parmyxoviridae : பேராமிக்ஸோ மாநச்சுயிர்கள் : பேராமிக்ஸோமா நச்சுயிர், மார்பிலி நச்சுயிர், நியூமோ நச்சுயிர் போன்ற இனங்களை உள்ளடக்கிய ஆர்.என்.ஏ. நச்சுயிர் குடும்பம்.
paramyxovirus : பேராமிக்ஸோ நச்சுயிர் : மூச்சுப் பாதைத் தொற்றுகள், தட்டம்மை, புட்டாலம்மை ஆகிய நோய்களை உண்டாக்கும் பேராமிக்ஸோ நச்சுயிர் குடும்பத்தைச் சேர்ந்த ஓரின நச்சுயிர்.
paranasal : மூக்குக்குழி அருகில்; மூக்கருகில்; நாசிப்பக்கம்.
paraneoplastic : பரபுற்றுநிலை : ஒரு கட்டி அல்லது அதன் சேய்மப் பரவல் திரளிலிருந்து தூரத்தில் திசுக்களில் உண்டாகும் மாற்றங்கள். paranephritis : சிறுநீரகப் பக்கத் திசுவழற்சி : 1. சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள இணைத்திசு அழற்சி 2. அண்ணீரகச் சுரப்பி அழற்சி.
paramoia : திரிபுணர்வு; கருத்துத் திரிபுநோய்; துன்புறு மனநோய் : அறிவுப் பிறழ்ச்சியும், தருக்கியல் சித்தப்பிரமையும் ஏற்படும் ஒருவகை மனக்கோளாறு.
paranoid behaviour : ஐயுறவு நடத்தை : மற்றவர்கள் மீது ஐயுறவு கொள்ளும் செயல்கள்.
paranoid personality : அறிவு பிறழ் ஆன்மை : ஐயப்பாட்டு மிகுஉணர்வு அல்லது வலியத் தாக்கும் இயல்புடைய ஒருவர்.
paranoidschizophrenia : ஐயுறவு முரண் மூளை நோய் : மருட்சியும், மாயக்காட்சிகளும் அடிக்கடி ஏற்படும் ஒருவகை முரண்மூளை நோய்.
paranomia : பெயர்மறதி : பார்க்கும் பொருள்களின் சரியான பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத பேச்சு முறை கோளாறு.
paranychia : நக அழற்சி (விரல்சுற்றி) நகச்சுற்று; நகத்தடி சீழ்க்கட்டி : விரல் நகத்தைச் சுற்றி ஏற்படும் வீக்கம். இது பாக்டீரியாவினால் அல்லது பூஞ்சணத்தினால் உண்டாகிறது.
paraoesphageal : உணவுக் குழாய் அருகில் : உண்குழல் பக்கம்.
parapertusis : பரிவுக் கக்குவான் : கடுமையில்லாத கக்குவான் இருமல் நோய்.
paraphimosis : ஆண்குறிமுகை சுருக்கழுத்தம் : இறுக்கமான நுனித்தோலை பின்னிழுக்கும் போது ஆண்குறிமுகை சுருக்கழுத்தப்பட்டு வீக்கமும் வலியும் ஏற்படுகிறது.
paraphrenia : மருட்சிநோய் : முதியவர்களுக்கு உண்டாகும் ஒருவகை உளவியல் நோய். இதனால் ஒருவித மாயத்தோற்றம் (மருட்சி) பொதுவாகத் தான் விடாது உறுத்தப்படுவதாக ஒரு மருட்சி ஏற்படும்.
paraplasm : பரகணியம் : 1. பிறழ் வளர்ச்சி. 2 ஒரு உயிரணுவின் முன்கணியம் (உயிர்க்கூழ்மம்).
paraplegia : கீழ் உறுப்புப் பக்க வாதம்; உடல் கீழ்பாதிவாதம்; கீழங்க வாதம் : உடலின் கீழ்ப் பகுதி உறுப்புகளில், குறிப்பாக மலக்குடல், சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் பக்கவாத நோய்.
parapraxia : பரபிராக்சியா : பொருள்களை இடம் மாற்றி வைத்தால், சொல் பிறழ்ச்சி போன்ற பொருளுள்ள செயல்களை சரியில்லாமல் செய்தல்.
paraprotein : பரபுரதம் : இயல்பான பகுதியாயில்லாத, நோய் நிலையில் இரத்தம் அல்லது சிறுநீரில் பெருமளவில் காணப்படும் பலவகை புரதங்கள்.
paraproteinaemia : பரபுரதக் குருதிமை : குருதிச்சீர் அணு நோய்களில் இரத்தத்தில் காணப்படும் இயல்பல்லாப் புரதங்கள்.
parapsoriasis : பரசெந்தடிப்பு : அவ்வப்போது பெரிதாகும் தழும்பில் நிலைபெற்ற நாள் பட்ட கரும்புள்ளி கொப்புளமாக செதிளான செந்தடிப்பு.
parapsycholgy : புலனுணர்வியல் : புலனுணர்வு கடந்த நோக்கு. தொலைவிலுணர்தல் போன்ற உளவியல் நிகழ்வுகள் பற்றி ஆராய்தல், புற உளவியல் துறை.
paraquat : பராக்குவாட் : ஒரு வகைப் புழுக்கொல்லி மருந்து. இதனை உட்கொண்டால், கால தாமதமாக நுரையீரல் ஈரற் குலை, சிறுநீரகம் ஆகியவற்றில் நச்சுத் தன்மை உண்டாகும். இதனால் படிப்படியாக நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா) ஏற்பட்டு மரணம் விளையலாம்.
pararectal : மலக்குடல் அருகில்.
parasitaemia : குருதி ஒட்டுண்ணி; ஒண்டுண்ணியம் : குருதியில் பரவி ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல்.
parasite : ஒட்டுண்ணி : மற்றொரு தாய் உயிரியிடமிருந்து உணவை உறிஞ்சிவாழும் ஒர் ஒட்டுயிரி.
parasitic diseases : ஒட்டுண்ணி நோய்கள் : ஒட்டுண்ணி உயிரி களினால் உண்டாகும் நோய்கள்.
parasitic foetus : ஒட்டுயிர் முதிர்கரு : இரட்டைக் குழந்தை முதிர் கருக்களில் ஒன்றில் இதயம் உருவாகாமல் இயல்பான இரட்டைகளில் ஒன்றின் இரத்த சுழற்சியைக் கொண்டு உயிர் தரித்திருப்பது.
parasiticide : ஒட்டுயிர்க்கொல்லி; ஒட்டுண்ணிக் கொல்லி; ஒட்டுமுறி : ஒட்டுண்ணி உயிர்களைக் கொல்லும் மருந்து.
parasuicide : போலித் தற்கொலை : தற்கொலை செய்து கொள்ளப் போதுவதுபோல் போலியாக நடித்தல், மன நோயாளிகளாக இல்லாத ஆனால் மன உளைச்சலுக்கு ஆட்பட்ட இளைஞர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
parasitism : ஒட்டுயிர் தாக்கம் : 1. ஒரு ஒட்டுயிர் மொய்ப்பு. 2. ஒம்பும் உயிரிடமிருந்து ஒட்டு உயிர் பலன் பெற்று இரு உயிர்களும் ஒன்றாக வாழும் உறவு நிலை.
paraspadias : ஆண்குறிப் பக்கத் துளையமைவு : சிறுநீர்த் தாரை ஆண் குறித்தண்டின் ஒரு பக்கப் பகுதியில் திறக்கும் பிறவிக் கோளாறு.
parasympathetic nervous system : இணைப் பரிவு நரம்பு மண்டலம் : மைய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்த மண்டையோடு மற்றும் இடுப்புக் குழி இணை எலும்பு சார்ந்த நரம்புகள் சிலவற்றிலிருந்து வரும் தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி.
parasympatholytic : துணைப்பரிவு நரம்புச் சமன மருந்து : துணைப்பரிவு நரம்பு மண்டலத் தூண்டுதலை சமனப்படுத்தும் மருந்து.
parasynapsis : பக்க இணைப்பு : குன்றல் பிரிவின்போது இன நிறக் கீற்றுகள் பக்கம் பக்கமாக ஒன்றிணைதல்.
parasystole : பர(பக்கச்) சுருக்கம் : வழக்கமான முறையான இதயத் துடிப்புக்குக் காரணமான இதயப் பகுதியைத் தவிர்த்த துணையதிக தூண்டல் மூலம்.
parathion : பாராத்தியான் : ஒரு கரிமப் பாஸ்ஃபேட் வேளாண் மையில் ஒரு பூச்சிகொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. கோலினெஸ் டிராசுக்கு எதிராகத் தீவிரமாகச் செயற்படக் கூடியது. இதனாலேயே மனி தருக்குக்கேடு விளைவிக்கக் கூடியது.
parathormone : பாராத்தோர்மோன் : துணைக்கேடயச் சுரப்பியில் சுரக்கும் ஓர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது, இரத்தத்தில் கால்சியத்தின் அளவைச் சமனப்படுத்துகிறது.
parathyroid : பேராதைராய்டு : 1. தைராய்டு சுரப்பிக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 2. தைராயிடு சுரப்பிப் பொருளுக்குள் பொதிந்துள்ள அல்லது அதன் கீழ் ஒரம் அல்லது பின் பகுதியில் அமைந்துள்ள நான்கு சிறு நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்று. கால்சியம், ஃபாஸ்பரஸ் வளர்சிதையத்தை ஒழுங்குபடுத்தும் பேராதைராயிடு இயக்குநீரை, அவை சுரக்கின்றன.
parathyroid glands : துணைக் கேடயச் சுரப்பிகள்; இணைத் தைராய்டுச் சுரப்பிகள் : கேடயச் சுரப்பியின் பின்புறப்பரப்பில் உள்ள நான்கு சிறிய நாள மில்லாச் சுரப்பிகள். இது, பாராத்தோர்மோன் என்னும் இயக்குநீரைச் (ஹார்மோன்) சுரக்கிறது.
parathyroidectomy : துணைக் கேடயச் சுரப்பி அறுவை : துணைக்கேடயச் சுரப்பிகளில் ஒன்றை அல்லது அதற்கு மேற் பட்டவற்றை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.
parathyrotropic : பராதைராயிடு நூண்ம : பராதைராய்டு சுரப்பியைத் தூண்டும் (இயக்குநீர்).
paratope : பரபகுதி : எதிர் ஊக்கியோடு ஒட்டிக்கொள்ளும் எதிர்ப்பொருள் பகுதி.
paratracheal : மூச்சுக்குழாய் அருகில் : குரல்வளை அருகில்.
paratuberculosis : பரடியூபர் குளோசிஸ் : மைகோ பேக்டீரியம் டியூபர்குலோசிஸ் கிருமியால் அல்லாது உண்டாகும் டியூபர்குலோசிஸ் போன்ற நோய்.
paratyphoid : பரடைஃபாயிடு : சால்மொனெல்லா பாராடைஃபை 'ஏ' மற்றும் 'பி' கிருமிகளால் உண்டாகும் டைபாயிடு நோயின் மிதமான வகை.
paratyphoid fever : இளைக் குடற்காய்ச்சல் : குடற்காய்ச்சல் (டைஃபாய்டு) போன்ற ஒரு காய்ச்சல் நோய். இது குடற்காய்ச்சலைவிடக் கடுமை குறைந்தது; இதன் கால நீட்சியும் குறைவு. ஒரு வகை "சால்மோனெல்லா" என்ற நோய்க் கிருமியினால் உண்டாகிறது.
paraurethral : சிறுநீர்ப்புறவழி அருகில் : மூத்திர ஒழுக்குக் குழாய் அருகில்.
paravaccinia : பேராவாக்சினியா நோய் : பசுக்களின் பால் மடியை பாதிக்கும் பேராவாக்சினியா வைரஸ் நோய்.
paravaginitis : யோனிப்பக்கத்திசு அழற்சி : யோனியின் பக்கங் களிலுள்ள திசுக்களின் அழற்சி.
paravaginal : யோனிக்குழய் அருகில்; அல்குல் அருகில் : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயின் அருகில்.
paravertebral : தண்டுவடம் அருகில்; முள்ளெலும்புக்கருகில் : முதுகந்தண்டின் அருகில்.
paragoric (paragoric elixir) : சூட ஆபினித் தைலம் : சூடன், சோம்பு, சாம்பிராணி மணங்கள் ஊட்டபட்டு அபினி கரைந்த சாராயத்தினலான நோவகற்றும் மருந்து. பழைய காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.
pareira : சிறுநீர் வேர் மருந்து : சிறு நீர்க்கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டு வேர்ச்சரக்கு மருந்து.
parenchyma : சோற்றுத்திசு : சுரப்பிக் கருப்பொருள், ஒர் உறுப்பின் கருப்பொருள் அணுக்கள். parenteral : வழியாயல்லாத : செரிப்புமண்டல வழியாயல்லாமல் வேறு வழியில் உடலுக்குள், மருந்துகள், ஊட்டப் பொருட்கள் அல்லது மற்ற பொருட்களை செலுத்துவது.
parenteral fluid therapy : சிரைவழித் திரவ மருத்துவம்; ஊசி மூலம் மருந்தேற்றல் : இரைப்பை குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும்போது, நெஞ்சுப் பைக்குள் குருதி கொண்டு செல்லும் குழாயாகிய சிரையின் வழியாக ஊட்டச் சத்தினைச் செலுத்தும் முறை. இதில், நோய் நுண்மம் நீக்கிய ஒரு கரைசல் இறக்கும் குழாயினை ஒரு பெரிய மையச் சிரையில் உள்ள செருகி சொட்டுச் சொட்டாகச் சத்துப்பொருள் உட் செலுத்தப் படுகிறது. வினாடிக்கு எத்தனை சொட்டு செல்கிறது என்பதை ஒர் இறைப்பான் கட்டுப்படுத்துகிறது.
paresis : அரைகுறை முடக்கு வாதம்; தசைவாதம்; ஊனவாதம்; இயக்கக் குறைவு : தசை இயக்கத்தை மட்டும் தடைசெய்து, உணர்ச்சியைத் தடைசெய்யாத பக்கவாதம்.
paresthesia : பரௌணர்வு நிலை : தோலில் கூரிய கூச்ச உணர்வு. ஊசியால் குத்துவது போன்ற உணர்வு.
parietal : உச்சி மண்டை எலும்பு : மண்டையோட்டின் உச்சிப்பக் கங்களுக்குரிய இணை எலும்புகளுள் ஒன்று.
parietal bone : மண்டையுச்சிப் பக்க எலும்பு : மண்டையோட்டின் பக்கங்களுக்குரிய இணை எலும்புகள்.
parietofrontal : மண்டையோட்டின் உச்சிப்பக்க : முன் தலை நெற்றி எலும்புகள், மூளை மடிப்புகள், பிளவுகள் தொடர்பான.
Parinaud's syndrome : பரிநாடு நோயியம் : ஃபிரெஞ்சு கண் மருத்துவர் ஹெச்பரினாடு பெயரால்மமைந்த நடுமூளை நோய் நிலையால், விரும்பிய படி பார்வையிலேயோ அல்லது கீழோ திருப்பமுடியாத நிலை.
parite : பரிட்டே : தமனி நார் இறுக்கத்தில் தமனிக்குள்ள கொழுநார்ப்படிவு.
parity : பேற்றுமை : ஒரு பெண் பெற்றுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவளது தகுநிலை.
parkinsonism : பார்க்கின்சன் நோய் அசையா நடுக்கம் : உரு மாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண்டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள் நடுக்கம், விரல்கள் உருள்வது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும் போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு ஏற்படுகிறது. காயம், நரம்பு நலிவு, நச்சுப் பொருள் தாக்கம் போன்றவற்றினாலும் இது உண்டாகலாம். மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படுவதால் விளையும் நோய்.
Parkinson's disease : பார்க்கின்சன் நோய் : மெதுவாகப் பரவும் சிறு நடுக்கம், தசை பலவீனம் மற்றும் விரைப்பு நிலை விநோதமான நடை ஆகிய அறிகுறிகள் காட்டும் நாட்பட்ட நரம்புநோய். பிரிட்டிஷ் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.
parnate : பார்னாட் : டிரானில் சைப்ரோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
paromomycin : பேரமோமைசின் : அமீபியாசிஸ் நோய் மருத்துவத் துக்குக் கொடுக்கப்படும் அமீனோ கிளைக்கோசைடு வகை சேர்ந்த நோயுயிர் எதிர்ப்பிகள்.
parotid : காதுமுன்புறச் சுரப்பி.
paromychial : நகச்சுற்றி; நகத்தடி; சீழ்க்கட்டி : நகப்படுகை சார்ந்த அல்லது நக ஒரத் திசுக்களின் அழற்சி சார்ந்த.
partial mastectomy : பகுதி மார்பக அறுவை நீக்கம் : மார்பகப் புற்று நோய்க்காக, தோல், சுற்றியுள்ள திசுக்களின் ஒரு பகுதி, அடியிலுள்ள தசை களுடன் சேர்த்து மார்பகத்தை அறுத்து நீக்குதல்.
partial seizure : பகுதி நோய்ப் பிடிப்பு : மூளையின் ஒரிட இயல்பு மாறிய மின் வெளிப்பாட்டால், உடம்பின் அல்லது மனவியக்கப் பகுதி பாதிப்பு.
particle : துகள் : ஒரு பொருளின் மிகச் சிறிய பகுதி அல்லது துண்டு.
parotid : காதுமுன்புறச் சுரப்பி.
parotidectomy : காதருகுச் சுரப்பி அறுவை : காதருகுச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.
parosmia : நுகர்வுப் பிறழ்ச்சி; வேற்று முகர்வு; திரிபு நுகர்வு : முறை திறம்பிய நுகர்வு (மண) உணர்வு. பெரும்பாலும மயங்கச் செய்யும் தன்மையுடையது. parotid gland : காதருகுச் சுரப்பி; எச்சில் சுரப்ப;, கன்னச் சுரப்பி :
காதின் இரு புறங்களிலும் காதுக்கு முன் புறத்தில் கீழே அமைந்துள்ள எச்சில் சுரப்பி.
parotitis : பொன்னுக்கு வீங்கி; புட்டாளம்மை : காதருகுச் சுரப்பியில் அல்லது எச்சில் சுரப்பியில் ஏற்படும் அழற்சி.
paroven : பாரோவென் : டிராக் செருட்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
paroxysm : வலிப்பு; இசிப்பு : திடீரென ஏற்படும் தற்காலிக வலிப்பு.
parot's nodes : நெற்றிப்புடைப்பு : பிறவிக் கிரந்தி நோயின்போது நெற்றி எலும்புகளில் ஏற்படும் கரணைகள் (புடைப்புகள்).
parstelin : பார்ஸ்டெலின் : டிரானில்சைப்ரோமின், டிரைஃ புளுவோப்பாராசின் இரண்டும் கலந்த கலவையின் வணிகப் பெயர்.
parthenogenesis : கன்னியினப்பெருக்கம் : பாலினக் கூட்டு இல்லாமல் நடைபெறும் இனப் பெருக்கம்.
partial pressure : ஓரளவு அழுத்தம் : வாயுக்களின் ஒரு கலவையில் செறிவுக்கு வீத அளவில் கொடுக்கப்படும் அழுத்தம், பகுதி அழுத்தம்.
parturient : மகப்பேறு சார்ந்த பேற்று : பிள்ளைப்பேறு சார்ந்த கருவுயிர்ப்பு சார்ந்த.
parturiometer : கருப்பைச் சுருக்கமானி : குழந்தை பிறப்பின் போது கருப்பைச் சுருக்கங்களின் வேகத்தை அளவிட உதவும் கருவி.
parturition : மகப்பேறு; பேறு; பிறப்பு : பிள்ளைப்பேறு குழந்தைப்பேறு.
parullis : பருலிஸ் : பல் ஈறில் எலும்புச் சுற்றுள் சீழ்க்கட்டி.
parvicellular : பர்விசெல்லூலர் : சிறுஅளவு உயிரணுக்களாலான அல்லது தொடர்பான. parvoviridae : பார்வோ நச்சுயிர் : நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும்.
parvovirus : பார்வோ நச்சுயிர் : மனிதர்களிலும் விலங்குகளிலும் நோயுண்டாக்கும் தன்மை கொண்ட அடினோ நச்சுயிருடன் தொடர்புடைய அது மாதிரியான நச்சுயிர்களின் இனம். தொற்று செம்படை, சிவப்பணு உருவாக்கக்குறை சோகை, முதிர்கரு நீர்வீக்கம் மற்றும் முதிர்கரு மரணம் ஆகியவற்றை உண்டாக்குகிறது.
pascal : பாஸ்கல் (அளவு) : ஃபிரெஞ்சு அறிவியலாளர் பிலெய்ஸ் பாஸ்கலின் பெயரிலுள்ள ஒரு ஸ்குயர் மீட்டரில் ஏற்படும் அழுத்தத்தை நியூட்டன்களில் சொல்லும் அளவு.
passive exercise : உடற்பயிற்சி மருத்துவம் : தசைவலியை திரும்பப் பெற உடற்பயிற்சி மருத்துவம். உடலின் பிறதசைகளைக் கொண்டு அல்லது ஒரு கருவி அல்லது மருத்துவரால் அல்லது உதவியாளரால் செய்யப் படுவது.
passive movement : தானியக்க இயக்கம் தன்வினைச் செயல் : (நம் காலை பிறர் நகர்த்துவது போன்று).
passive smoking : பிறர்புகை பிடித்தல் : பிறர் புகைக்கும் சிகரெட் அல்லது பிடியிலிருந்து வெளிப்படும் புகையை உள்ளிழுத்தல். அது மூச்சுப் பாதை கோளாறுகள், புற்று நோய் உட்பட உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கிறது.
pasteurella : பாஸ்ச்சுரெல்லா நச்சுயிர் : பாஸ்ச்சுரெல்லாசியே குடும்பத்தைச் சேர்ந்த கிராம் சாயம் ஏற்காத நோய்க்கிருமியினம் ஃபிரெஞ்சு வேதியியலார் மற்றும் நுண்ணுயிரியாளரான லூயி பாஸ்டியர் பெயரால் அழைக்கப்படும் பாஸ்ச்சுரெல் லாமல்டோசிடா இதிலடங்கும்.
pasteurism : ஊசி மருந்து மருத்துவம் : அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவதன் மூலம் நீர் வெறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் அல்லது குணப் படுத்தும் முறை.
pasteurellosis : பாஸ்ச்சுரெல்லா தொற்று : பாஸ்ச்களுல்லா இனத்தைச் சேர்ந்த கிருமிகளால் தொற்று.
pasteurization : வெப்பத்தூய்மை; காய்ச்சித் தூய்மையாக்கல் : திரவப் பொருட்களை குறிப்பாகப் பால் போன்றவற்றைக் சூடாக்குவதன் மூலம் அதில் உள்ள கிருமிகளைக் கொன்று தூய்மை செய்தல்.
past pointing : குறிதாண்டித் தவறல் : சிறுமூளை நோய் நிலைகளில் தூரத்தைக் கணிப்பதில் தவறுவதால் இலக்கைத் தவறவிடல்.
patau's syndrome : பட்டாவு (நோயியம்) நோய்த்தொகுதி : பிளவுதடு, பிளவண்ணம் விரல் மிகுதி, சிறுதலை, பிறவி இதய நோய் ஆகியவற்றை உண்டாக்கும் டிரைசோமி 13 எனும் மரபணுக்கோளாறு.
patella : கால்மூட்டெலும்பு; சில்லெலும்பு; சில்லு; முழங்காற்சில் : முழந்தாள் முட்டுச் சில்லு, இது முக்கோணவடிவ எலும்பினாலானது.
patellar : கால்மூட்டுச் சில்லுக் குரிய.
paternity testing : தந்தைமைச் சோதனை : ஒரு குறிப்பிட்டமனிதர், ஒரு குறிப்பிட்ட குழந்தையின் தந்தையா அல்லவா எனக் கண்டறிய டி.என்.ஏ. வரை உருப்பதிவைப் பயன்படுத்தல்.
patches : திட்டுகள்.
patch test : திட்டு சோதனை; பசைப் பட்டைச் சோதனை : தோளில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம்.
patella : கால் மூட்டெலும்பு : முழந்தாள் மூட்டுச்சில்லு.
patellectomy : மூட்டுச்சில்லு அறுவை; சில்லெடுப்பு : மூட்டுச் சில்லை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.
patent : திறந்த : வெளிப்படையான, மேலீடாகத் தெரிகிற.
patent ductus arteriosus : திறந்த இதயத் துளை : குழந்தை பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறைகளுக்கும், வலது அறை களுக்குமிடையிலான தொடர்பு வழி முடிக்கொள்ளத் தவறுவதால் இதயத்துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்தமும் ஒன்றாகக் கலந்து பல நோய்கள் உண்டாகின்றன. இதயத்தினுள் ஒர் இறங்கு குழாயைச் செலுத்தி, அதன் வழியே ஒர் இரட்டைக் குடை சவ்விசைச் செருகி இத்துளையை அடைக்கலாம்.
paternal causes : தந்தைவழிக் காரணங்கள் : கருச்சிதைவுக்கான தந்தைவழிக் காரணங்கள்.
pathfinder : வழிகாண் கருவி : ஒரு குறுகிய சுருக்குப் புழை வழியாக உள் செலுத்தப்படும் ஒரு இழையுரு விரிப்பான். ஒரு பெரிய நுண்குழல் அல்லது உலோக விரிப்பானை செலுத்துவதற்கு அது வழிகாட்டியாய் உதவுகிறது.
pathobiology : நோய்க்குறி உயிரியல் : உயிரியல் செய்திகளை முன்னிலைப்படுத்தும் நோய்க் குறியியல்.
pathogen : பிணி யூக்கி; நோயுண்டாக்கும் நுண்ணுயிர்; நோயணு : நோய் தோற்றுவிக்கிற ஒரு பொருள். பொதுவாக, இது உயிருள்ள ஓர் உயிரியைக் குறிக்கும்.
pathogenesis (pathogeny) : நோய்த் தோற்ற முறை : நோய் தோன்றி, வளரும் முறை.
pathogenetic : நோயுண்டாக்கும்; நோய் உருவாக்கும்.
pathgenicity : நோயுண்டாக்கும் திறன் : நோயைத் தோற்றுவிக்கும் திறம்பாடு.
pathognomonic : நோய்ப்பண்பு; நோய் அறிவுறுத்து : நோய் இன்னதென்று காட்டுகின்ற தனிப்பண்பு.
pathognomy : உணர்ச்சி ஆய்வியல்.
pathologist : நோய்க்குறி ஆய்வாளர்; நோயறி வல்லுநர்; நோய்க் குறியியல் வல்லுநர்.
pathology : நோய்க் குறியியல்; நோயியல்; நோய்க்கூறு இயல் : நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல்.
pathological fracture : நோய்வடைந்த எலும்பு முறிவு.
pathophobia : நோயச்சம்; நோய் மருட்சி : நோய் பற்றி அச்சங் கொள்ளும் ஒரு மன நோய்.
pathopsychology : மனநோய் குணஇயல் : மனநோயின் மனவியல்.
pathophysiology : இயல்பிலா உடலியல் : மனிதரின் இயல்பு மீறிய செயல்முறைகள் குறித்து ஆராயும் அறிவியல். pathway : பாதைவழி : 1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்கும் வேதியியல் மறுவினைகளின் வரிசை முறை.
patient : நோயாளர்; நோயர் : ஒருநோய் அல்லது பாதிப்பால் துன்பப்பட்டு, மருத்துவம் மேற்கொள்ளும் ஒருவர்.
patient compliance : நோயாளி இணக்கம் : ஒரு நோயாளி மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க, குறிப்பிட்ட மருந்தை குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்டவழியே உடலுக்குள் செலுத்துதல்.
patrilineal : தந்தை வழி : தந்தை வழியாக வந்த.
patulous : திறந்த; விரிந்த.
Paul-Bunnell test : பால் புன்னல் சோதனை : அமெரிக்க மருத்து வர்களான ஜான்பால்வ மற்றும் வால்ஸ் புன்னல் பெயரால மைந்த சோதனை. சுரப்பித் தொற்றுக் காய்ச்சலில் குருதி நீரிலுள்ள வேற்றுவினை எதிர்மியத்தைக் கண்டுபிடிக்கும் சோதனை.
Paul Mikulicz operation : பெருங்குடல் அறுவை : பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டியெடுக்கும் முறை நோயுற்ற குடற்பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடவின் இருவளைவுகளையும் பொருத்தி வயிற்றுச் சுற்றுச் சுவரை அதற்குமேல் அதைச் சுற்றிதைத்து, ஒரு கால இடை வெளிக்குப் பிறகு நோயுற்ற பகுதியை மட்டும் வெட்டி அகற்றி விடுதல்.
pavulon : பாவுலோன் : பான் குரோனியம் புரோமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.
PCM : புரதக்குறைபாடு : புரதக் கலோரி ஊட்டச் சத்துக் குறைபாடு.
peak expiratory flow rate : சுவாசக் காற்று வீதம் : ஒரு வினாடி நேரத்தில் உட்சுவாசிக்கப்படும் காற்றின் அளவை அளவிடுதல்.
pearl : பியர்ல் : 1. ஆவியாகும் அமைல் நைட்ரைட் கொண்ட ஒரு சிறு மெல்லிய கேப்சூல். அதை ஒரு கைக்குட்டையில் நசுக்கி உள்ளிழுக்க வேண்டும். 2. முச்சுக்குழாய் ஆஸ்துமா நோயில் உண்டாகும் உருண்டு தடித்த சளித்திரள். peaud's orange : மார்பகத் தோல்; மார்பகத் தோல் புற்று : கடுமையான வீக்கம் அல்லது கடும் பிளவை ஏற்படும்போது மார்பகத்தின் மீது தோல் தோன்றுதல், நிணநீர் இழைம அழற்சியினால் முடியின் புழை வாய்கள் குழிகளாகத்தோன்றும்.
pecten : சீப்புரு : சீப்புப் போன்ற துருத்தங்களை அல்லது முனை களைக்கொண்ட ஒரு அமைப்பு.
pectin : பெக்டின் : ஆப்பிள் பழச்சதை அல்லத எலுமிச்சம் பழங்களின் தோலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பழச் சர்க்கரை அமிலங்களின் பல்சேர்மம்.
pectoral : மார்பகம் சார்ந்த; மார்புடைய; நெஞ்சுசார் : நெஞ்சுக்குரிய, மார்பக நோய்க்குக் குணம் அளிக்கிற.
pectorilequy : மார்புக்குரலொலி : குரல் எதிரொலி மிகுந்து மார்பு அமைப்புகளின் வழியாகச் சென்று குரலொலியாகக் கேட்கப்படுதல்.
pectus : மார்பறை : மார்பக முன்சுவர்.
pedal : பாதம் சார்ந்த; காலடி : காலடி உறுப்பு சார்ந்த.
pederasty : பையன்பால் வேட்கை : சிறு பையன்களில் மலப்புழை வழியாக உடலுறவு கொள்ளுதல்.
pedice : காம்புச் சிறுகிளை : 1. காலடிமுனை, காலடித் தட்டு துணைமை. 2. காலணுவின் (ஆள்நிற்கும்மேடை) துருத்தம்.
pedicellation : காம்புருவாக்கம் : சிறுகாம்பு அல்லது காம்பு உருவாக்கம்.
pedicle : சிறுகாம்பு மயிர்க்கால்; வேருரு : சுற்றுப்புறக் கட்ட மைவுகளுடன் ஒரு கட்டியை இணைக்கும் குறுகிய உறுப்பு.
pedicular : பேன் சார்ந்த : 1. காம்பு சார்ந்த, 2. பேன் சார்ந்த.
pediculation : பேன் தொற்று : 1. காம்பு உருவாகும் வழிமுறை. 2. பேன்தாக்கம்.
pediculicide : பேன் கொல்லி : 1. பேன் ஒழித்தல். 2. பேன் கொல்லும் பொருள்.
pediculosis : பேன் நோய் : பேன்கள் மலிந்து உண்டாகும் நோய்.
pediculus : ஒட்டுண்ணிப் பேன்; சீலைப்பேன் : நோய்களைப் பரப்பும் முக்கியமான ஒட்டுண்ணிப் பேன் இனம்.
peeling : தோலுரிதல்.
pelizaeus Merzbacher disease : மரபு நலிவு நோய் : உளவியல் கோளாறுடன் தொடர்புடைய ஒரு மரபு வழி நலிவு நோய். pellagra : தோல் வெடிப்பு நோய்; தோல் வரட்சி; வரட்டுத்தோல் : வைட்டமின்-பி தொகுதி, புரதம் போன்ற ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகி, இறுதியில் மூளைக்கோளாறில் கொண்டு விடக்கூடும் தோல் வெடிப்பு நோய்,
pellet : குளிகை; வில்லை; கவளம்; நீர்வில்லை : சிறிய மாத்திரை.
pellicle : தோல்சவ்வு; மென்தோல் படலம் : 1. தோலின் ஒருமென் தண்டு. 2. நீர்மங்களின் பரப்பி லுள்ள மென்படலம்.
pelvicalyceal : வட்டில்புல்லிசார் : சிறு நீரக வட்டில்கள், புல்லிகள் சார்ந்த.
pelvic cavity : இடுப்புக்குழி.
pelvicephalometry : இடுப்புக் கூடு தலையளவு : தாயின் இடுப்புக் கூட்டுக்கும் முதிர் கருத்தலைக்கும் உள்ள பொருத்த அளவு.
pelvic deformity : இடுப்புக்குழி குறைவு.
pelvic diaphra : இடுப்புக்குழி விதானம்.
pelvic fascia : இடுப்புக்குழி மென்படலம்.
pelvic fin : இடுப்பெலும்பு.
pelvic floor : இடுப்புக்குழித்தளம் : மேலேயுள்ள இடுப்புக் குழிக்கும், கீழேயுள்ள பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதிக்கு மிடையிலான ஒரு தசைப் பிரிவினை. இந்தத் தசை நலிவடையுமானால் சிறுநீர் அடக்க முடி யாமை, கருப்பை நெகிழ்வு உண்டாகும் இழுப்பறை ஆதாரத்தசை.
pelvic girdle : இடுப்புக்குழி வளையம்; இடுப்பு வளையம்; இடுப்புக் கூட்டு வளையம் : இடுப்புக்குழி இணைப்பெலும்பு (புனிதஎலும்பு), வால்பக்க முதுகெலும்பு என்ற இரு இடுப்பெலும்புகள் அடங்கிய இடுப் புக்குழி எலும்புக்கூடு.
pelvic infection : கருப்பைத்தொற்று.
pelvic pain syndrome (PPS) : இடுப்புக்குழி நோவு : பெண்களின் இடுப்புக் குழியில் ஏற்படும் வலி. இதற்கான நோயியல் காரணம் தெரியவில்லை. அதனால் இதைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை இல்லை நோயின் தீவிரத்தைத் தணிக்க வலி நிவாரண மருந்துண்டு.
pelvic peritonitis : இடுப்புக்குழி அழற்சி : இடுப்புக்குழி வயிற்றுறை அழற்சி.
pelvic peritoneum : இடுப்புக்குழியுறை. pelvifixation : இடுப்புறுப்பு நிலைப்படுத்தல் : மிதக்கும் இடுப்பு உறுப்பு ஒன்றை ஒரிடத்தில் நிலைத்துப் பொருத்தும் அறுவை.
pelvimeter : இடுப்புக்குழி மானி; இடுப்புக்குழி அளவி; இடுப்புக் கூட்டுமானி : மகப்பேறு மருத்துவ நோக்கங்களுக்காக, இடுப்புக் குழியின் விட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.
pelvimetry : இடுப்புக்குழி அளவீடு; இடுப்புக்குழி அளவை : இடுப்புக்குழியின் பரிமாணங்களை அளவிடுதல்.
pelviotomy : இடுப்புக்கூட்டு அறுவை : 1. பூப்புப்பிணைப்பில் கீறி, இடுப்பு வெளி வழியை பெரிதாக்குதல். 2. சிறுநீரக வட்டிலைக் கீறுதல்.
pelvis : இடை; இடுப்புக்குழி; இடுப்பு வளையம்; இடுப்புக்கூடு; இடுப்பெலும்பு : கிண்ண வடிவிலான இடுப்பெலும்புக்குழிவு; இடுப்புக்கூடு, இடுப்புவளையம்.
pelvispondylitis : முதுகெலும்பின் இடுப்புப் பகுதியழற்சி : முது கெலும்பின் இடுப்புப் பகுதியை பாதிக்கும் கீல்வாதம் போன்ற முதுகெலும்பழற்சி.
pemphigoid : நீர்க்கொப்புளத் தோல் நோய் : நீரழுத்த பெரும் நீர்க்கொப்புளங்களோடு கூடிய தோலின் செந்தடிப்பு நிற மாற்றம் தோன்றுதல்.
pemphigus : நீர்க்கொப்புளம்; தோல் கொப்புளம் : தோலில் ஏற்படும் நீர்க்கொப்புளநோய்.
penbritin : பென்பிரிட்டின் : ஆம்பிசிலின் என்ற மருந்து.
pendelluft : பெண்டெல்ல்ஃப்ட் : மூக்கு, வாய், தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழாய்கள், மூச்சுநுண்குழல்கள் உள்ளிட்ட மூச்சுப்பாதையில் கண நேர காற்று இயக்கம், வாயுப் பரிமாற்றத்தில் பங்கேற்பில்லை.
Pendred's syndrome : பென்ட்ரெட் நோயியம் : தைராய்டு இயக்குநீர் உருவாவதில் ஏற்படும் தடை காரணமாக தைராயிடு குறைக்கழலையை உண்டாக்கும் பிறவிக்கோளாறு. இத்துடன் காது கேளாமை அல்லது செவிட்டு ஊமையும் இருக்கலாம்.
pendulous : தொங்கலான; ஊசலான : தொங்கி ஊசலாடுகிற.
pendulous abdomen : தொங்கல் வயிறு : அடிவயிறு முன்பக்கம் தொங்கலாக இருத்தல்.
Penectomy : பெனக்டமி : ஆண்குறித்தண்டு அறுத்து நீக்குதல்.
penem : பெனெம் : நோய் நுண்ணுயிரணுச் சுவரை பாதித்து செயலற்ற நிலையிலிருக்கும் நோய் நுண்ணுயிரை அளிக்கும் பீட்டாலேக்டம் குழுவைச் சேர்ந்த நோயுயிர் எதிர் மருந்து.
penetrance : ஊடுருவு நிலை : ஒரு பொருள் அல்லது பகுதிக்குள் ஏதோ ஒரு பொருள் உள்நுழையும் அளவு. 1. மாற்ற மடைந்த மரபணு அதனை உள்ளடக்கியவற்றுக்குள் குறிப்பிடத்தக்க விளைவினை, ஏற்படுத்தும் அளவு வீதம்.
penetrating ulcer : ஊடுருவு சீழ்ப்புண்; துளைக்கும் சீழ்ப்புண் : உறுப்பெல்லைக்குள் பரவி இரத்த நாளத்தை அரித்திடும் சீழ்ப்புண். இதனால், குருதி வாந்தி அல்லது கருங்கட்டி உண்டாகும்.
penetrating wound : ஊடுருவு காயம்; துளைக்கும் புண் : தோலுக்குள் ஊடுருவி திசுக்களைக் காயப்படுத்தும் கூர்மையான ஆயுதத்தினால் உண் டாகும் ஆழமான காயம்.
penetrometer : ஊடுருவல்மானி : எக்ஸ் கதிர்களின் ஊடுருவும் திறனை அளக்கும் கருவி.
peniicillamine : பெனிசிலாமின் : கன உலோக நச்சூட்டலைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் ஒருவகைப் பெனிசிலின் பொருள். வில்சன் நோய், ஈய நச்சு ஆகியவற்றை இது குணப்படுத்துகிறது.
penicillic acid : பெளிசில்லிக் அமிலம் : பெனிசில்லியம் மற்றும் ஆஸ்பெர்ஜில்லஜ் ஆகியவற்றின் பல்வேறு இனங்களின் வளர்மங்களிலிருந்து பெறப்படும் நோயுயிர் எதிர்ப்பொருள்.
penicillin : பென்சிலின் : போஞ்சக்காளானில் முதலில் கண்டுபிடிக் கப்பட்டுச் சில நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. கிராம் சாயம் எடுக்கும் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பல் வேறு நோய்களைக் குணப்படுத்த ஊசி மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது. நோயின் கடுமையைப் பொறுத்துப் பல்வேறு அளவுகளில் இது பயன் படுத்தப்படுகிறது. பாக்டீரியாவினால் ஏற்படும் குலையணைச் சவ்வு வீக்கத்திற்கு மிக அதிக அளவு (20,00,000 அலகுகள்) கொடுக்கப்படுகிறது.
penicillinase : பெனிசிலானேஸ் : பெனிசிலினை அழித்திடும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).
penicillin sensitive test : பெனிசிலின் ஒவ்வாமைச் சோதனை : பெனிசிலின் மருந்தினால் ஒவ்வாமை உணர்வு ஏற்படுகிறதா என்று கண்டறிவதற்கான சோதனை.
penicillium : பெனிசிலியம் : தூரிகைபோல் அமைந்த ஒரு வகைப் பூஞ்சக் காளான். இது உணவுப் பொருள்களில் நஞ்சூட்டக்கூடியது.
penicillus : பெனிசில்லஸ் : தூரியின் மயிரிழைகள் போன்று மண்ணீரலில் அமைந்துள்ள தமனி நுண்கிளைகளின் தொகுதி.
penidural : பெனிடுரால் : பென்சாத்தின் பெனிசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
penis : ஆண்குறி; மானி : ஆண்களின் கலவி உறுப்பு.
penotrane : பெனோட்ரான் : ஹைட்ராகாஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
pentaeythritoi tetranitrate : பென்டாஎரித்திரிட்டோல் டெட்ராநைட்ரேட் : நெஞ்சுப்பைக் குருதி நாள விரிவகற்சி மருந்து. இது மைக்கார்டால் என்ற மாத்திரைகளாகக் கிடைக்கிறது.
pentadactyl : ஐவிரல்காரர் : கை கால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்கள் மட்டுமே உள்ளவர்.
pentagastrin : பென்டாகாஸ்டிரின் : ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார்மோன்). இது நெஞ்சுப்பைச் செயற்பாட்டுச் சோதனையில் உச்ச அளவு அமிலம் சுரப்பதை ஊக்குவிக்கப் பயன்படுத்தப் படுகிறது. இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.
pentamidine : பென்டாமிடின் : செவிப்பறை அழற்சி, "காலா அசார்" என்ற கறுப்புக் காய்ச்சல் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைக்கூட்டுப் பொருள்.
pentazocine : பென்டாசோசின் : மிதமான வலியை நீக்கப் பயன்படும் மருந்து, மட்டுமீறிய இரத்த அழுத்தத்தில் அல்லது தளர் நெஞ்சுத் துடிப்பில் இது ஊசி வழியாகவும், நரம்பு வழியாகவும், வாய் வழியாகவும் கொடுக்கப்படுகிறது. இது மார்ஃபினை விடச் சிறந்தது.
penthrane : பெந்த்ரான் : மெத்தாக்சிஃபுளுரான்.
pentobarbitone : பென்டாபார் பிட்டோன் : குறுகிய காலம் செயற்படக்கூடிய பார்பிட்ரேட்டுகளில் ஒன்று. குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு கொடுக்கப்படுகிறது.
pentose : பென்டோஸ் : தன் மூலக் கூறுகளில் ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்டுள்ள ஒற்றைச் சர்க்கரைச் சேர்மங்களில் ஒன்று.
pentosuria : சிறுநீர்ச் சர்க்கரை : சிறுநீரில் பென்டோஸ் (சர்க்கரை) இருத்தல். இது வளர்சிதை மாற்றக் கோளாறினால் உண்டாகலாம்.
pentothai : பென்டோத்தால் : தையோபென்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
peotillomania : ஆண்குறி இழு மனப் பிறழ்ச்சி : ஆண் குறியை எப்போதும் இழுத்துப் பார்க்கும் நரம்பு மனப்பழக்கம்.
peplos : பெப்லோஸ் : நச்சுயிர் பகுதிகளைச் சூழ்ந்துள்ள கொழு புரத உறை.
peppermint : தைலமணவில்லை : சிறந்த தைலமண மூட்டப்பட்ட இனிப்புத் திண்பண்டவில்லை.
pepsin : இரைப்பை என்சைம் : இரைப்பையில் சுரக்கும் சாற்றில் கலந்துள்ள புரதத்தைச் செறிக்கும் ஆற்றலுடைய நொதி.
pepsinogen : பெப்சினோஜன் : இரைப்பைச் சவ்வுப் படலத்தின் உயிரணுக்களால் சுரக்கப்படும் ஒரு சைமோஜன். இது, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் (இரைப்பை அமிலம்) அல்லது பெப்சினுடன் கலந்து இரைப்பை நொதியாக (பெப்சின்) மாறுகிறது.
peptic : சீரணப் பாதைப் புண்; குடற்புண்; இரைப்பைப் புண் : இரைப்பை நொதியுடன் (பெப்சின்) அல்லது சீரணத்துடன் தொடர்புடையது. பொதுவாக, இது சீரணப்பாதைப் புண்ணைக் குறிக்கிறது. இது பொதுவாக இரைப்பையில் அல்லது முன்சிறு குடலில் ஏற்படுகிறது. சில சமயம், கீழ் உணவுக் குழாயிலும் உண்டாகும்.
peptic ulcer : முன்சிறுகுடல்புண்.
peptidergic : பெப்டிட்ர்ஜிக் : சிறு பெப்டைடு மூலக்கூறுகளை நரம்புக் கடத்திகளாகப் பயன்படுத்தும் இழைகளின் நரம்பணுக்களைக் குறிக்கிறது.
peptides : பெப்டைடுகள் : குறைந்த மூலக்கூற்று எடையுள்ள கூட்டுப் பொருள்கள் இவை நீரால் பகுத்தலின்போது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களை கொடுக்கின்றன. இவை டைபெப்டைடுகள், டிரைபெப்டைடுகள், பாலிபெப்டைடுகள் ஆகும். peptidoglycan : பெப்டிடோக்ஸிகன் : பெரும்பாலான நோய் நுண்ணுயிர்களின் அணுச்சுவரின் முக்கியமான பகுதிக் கூறாக சர்க்கரை (சத்துக்களுடன்) இணைந்த பெப்டைடுகள் அல்லது அமைனோ அமிலங்கள் அடங்கு கூட்டுப்பொருள்.
peptococcus : பெப்டோகாக்கஸ் : மற்ற நோயுயிர்களுடன் இணைந்து செயல்பட்டு தொற்றுகள் உண்டாக்கும் கிராம் சாயமேற்கும் அவ்வளி கோளக்கிருமி.
peptogenic : பெப்டோஜெனிக் : 1. பெப்டோன்ஸ் தயாரிக்கும். 2. சீரணத்துக்கு துணை செய்யும்.
peptones : பெப்டோன்கள் : கரி நீரகைகளின் புத்துருவாக்கச் செரிமான நீரிலுள்ள எளிதில் கரையும் உறையாப் பொருள்கள். புரதச் சீரணத்தின் முதல் கட்டத்தில் ஒர் உள் புரதத்தின் மீது செயற்படும் இரைப்பை நொதி (பெப்சின்) அல்லது நொதி உண்டாக்கும் பொருள்.
peptonuria : பெப்டோன் சிறுநீர் : பெப்டோன் கலந்துள்ள சிறுநீர்.
perception : புலனுணர்வுப் பொருள்; உளவழி அறிதல் : புலனியல் காட்சிப் பொருள்.
peptostreptococcus : பெப்டோஸ்ட்ரெப்டோகாக்கஸ் : சந்தர்ப்பவாத தொற்றுண்டாக்கும் நச்சுயிர்களாக செயல்படும், கிராம் சாயமேற்கும் அல்வளி கோள நச்சுயிரினம்.
percept : புலனுணர்வுப் பொருள்; உணவழி அறிதல் : புலனியல் காட்சிப் பொருள்.
perception : பொறிக்காட்சி; புலனுணர்வு; கண்ணோட்டம்; உணர்ந் தறிதல் : புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு.
perceptivity : உணர்வேற்புமை : உணர்வு பதிப்புகளை ஏற்கும் திறமை.
percolate : ஊடுருவி : 1. தூளான பொருள் ஊடாக நீர்மம் ஒன்றை கசிய அனுமதித்தல், 2. வடிகட்டிய அல்லது ஊடுருவிய நீர்மம்.
percolation : ஊடு பரவுதல்; ஊடுருவித்தல்; பொசிதல்; கசிதல் : நீர்மங்கள் வடிகட்டுவதைக் கடந்து கசிந்து ஊடு பரவுதல்.
per contiguum : பக்கத் தொடல் : தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல். per continuum : தொடர்ச்சியாக : ஒரு தொற்று அல்லது புற்று நிலை, ஒரு பகுதியிலிருந்து அடுத்துள்ள பக்கத்துக்கு பரவுவது போல்.
percorten : பெர்க்கார்ட்டென் : டியாக்கிகார்ட்டோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.
percuss : தட்டியறிதல்.
percussion : தட்டுச்சோதனை; தட்டியுணர்தல்; தட்டல்; தட்டாய்தல்; தட்டுகை : நோய்த்தன்மையை பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலதுகையின் நடுவிரலால் இடது கைவிரல்மீது தட்டப்படுகிறது. அப்போது எழும் ஒசையின் தன்மையை ஊன்றிக்கேட்டல்.
percussor : ஊடுதட்டி தட்டுகருவி : தட்டிப் பார்த்து நோயறிவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ரப்பர் தலையுடைய சுத்தியைக் கொண்ட அமைப்பு.
percutaneous : தோலினூடே; தோல் வழி : தோலின் ஊடாகச் செயலாற்றுகிற.
perforation : துளையிடுதல்; துளைவிடல்; துளைத்தல்; துளை : இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம்.
perforating ulcer : துளைப்புண்.
perfusion : நீர்மம் ஊடுசெல்தல் : 1. ஒரு உறுப்பு அல்லது திசுவின் நாளப்படுகை ஊடாக குருதி அல்லது வேறு நீர்மம் செல்லுதல் 2 ஒரு நீர்மத்தைக் கொட்டல் 3. ஒரு தமனிக்குள் ஊசி மூலம் ஊட்டப் பொருட் களை ஒரு உறுப்புக்குள் செலுத்துதல்.
perhexilline : பெர்ஹெக்சிலின் : நெஞ்சுவலியைத் தணிக்கும் மருந்து, நெஞ்சுப்பைக் குருதி நாள விரிவகற்சி மருந்து.
periadenitis : சுரப்பித் திசு அழற்சி : சுரப்பிகளைச் சுற்றியுள்ள மென் திசுக்களில் ஏற்படும் வீக்கம். இது கழுத்துத் தடிப்பினை உண்டாக்குகிறது.
periarterial : தமனி சூழ்ந்த; தமனிச்சுற்று : இதயத்திலிருந்து குருதிகொண்டு செல்லும் நாளமாகிய ஒரு தமனியைச் சுற்றியுள்ள.
periarteritis : தமனிச் சுற்றுத்திசுவழற்சி : ஒரு தமனியின் வெளி யுறையின் அழற்சி. periarthritis : தமனிப்புறத் திசு அழற்சி; தோள் இறுக்கம்; மூட்டுச் சுற்றழற்சி; தமனிச் சுற்றழற்சி : ஒரு தமனியைச் சூழ்ந்துள்ள திசு ஆகியவற்றின் புற உறையில் ஏற்படும் வீக்கம்.
periarticular : மூட்டுச் சூழ்வ்த; மூட்டுச் சுற்று : ஒரு மூட்டினைச் சுற்றியுள்ள.
peribronchiolitis : மூச்சு நுண்குழல் சுற்றுத்திசுவழற்சி : மூச்சு நுண்குழலைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
peribronchitis : மூச்சுக்குழல் சுற்று அழற்சி : மூச்சுக்குழலைச் சுற்றியுள்ள திசு அழற்சி.
pericardiectomy : குலையுறை அறுவை; இதயச் சுற்றெடுப்பு : நெஞ்சுப்பையை மூடிக்கொண்டு இருக்கும் குலையுறை என்னும் சவ்வாகிய இதய வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். கடுமையான குலையுறை வீக்கத்தின்போது இவ்வாறு செய்யப்படுகிறது.
pericardiolysis : இதயச்சுற்று திசுப்பிரிப்பு : இதயச் சுற்றுறையின் சுவர்ப்படலத்துக்கும் உள்ளுறுப்புப் படலத்துக்கும் இடையுள்ள ஒட்டுத் திசுக்களை நீக்குதல்.
pericardiocentesis : குலையுறை நீர்வடிப்பு : குலையுறை ஊனீர்ப்பை சுரப்பு நீரை உறிஞ்சு குழாய் மூலம் வெளிப்படுத்தல்.
pericarditis : குலையுறை அழற்சி; இதய வெளியுறை அழற்சி; இதயச் சுற்றுப்பை அழற்சி; இதய உறை அழற்சி : நெஞ்சுப்பையை முடிக் கொண்டு இருக்கும் சவ்வின் வீக்கம்.
pericardium : இதய வெளியுறை; இதயச் சுற்று; இதய உறை : நெஞ்சுப்பையை முடியிருக்கும் இரட்டைச் சவ்வுப்பை குலையுறை இதயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் படலம் உட்கிடப்புறுப்புப் படலம் எனப்படும்.
pericardiophrenic : இதயச்சுற்றுறை இடைத்திரை சார்ந்த : இடைத்திரை மற்றும் இதயச் சுற்றுரை சார்ந்த.
pericardiostomy : இதயச் சுற்றுறைத் துளையிடல் : இதயச் சுற்றுறையில் துளை ஒன்று உருவாக்குதல்.
perichołangitis : பித்தநாள சுற்றுத் திசுவழற்சி : பித்தநாளங்களைச் சுற்றியுள்ள திசுக்கள் அழற்சி.
pericholecystitis : பித்தப்பை சுற்றத் திசுவழற்சி : பித்தப்பையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி. perichondrium : குருத்தெலும்புச் சவ்வு; குருத்தெலும்பு சுற்றுச் சவ்வு : கணு நீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதையும் மூடிக்கொள்ளும் சவ்வு.
pericoric : பெருங்குடல் சூழ்ந்த : பெருங்குடலைச் சுற்றியுள்ள.
pericranium : மண்டையோட்டுச் சவ்வு; மண்டையோட்டுறை : மண்டையோட்டைமூடிக்கொண்டு இருக்கும் சவ்வு, மண்டையோட்டுப் புறச்சவ்வு.
pericyazine : பெரிக்சையசின் : ஃபெனோத்தையாசின் வழிப் பொருள்; இது குளோர்.புரோ மாசைனைவிட வலுவானது.
pericyte : சிறு தமனிசூழ் மின்திசு : தந்துகிச்சுவரின் வெளிப்பக்கத் துக்கு மிக அருகிலமைந்துள்ள ஒருநீளச் சுருங்கணு.
perisderm : மேந்தோலணுப் படலம் : முதிர்கரு மேந்தோலை முடியுள்ள, ஒரு மெல்லிய தட்டை அனுப்படலம், குழந்தை பிறப்பதற்கு முன்பே மறைந்து விடுகிறது.
peridesmium : பெரிடெஸ்மியம் : ஒரு பிணையத்தை மூடியுள்ள இணைப்புத் திசுப்படலம்.
peridiverticulits : புறப்பைச் சுற்றழற்சி : குடல்புறப்பையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perienteritis : குடல் சுற்றழற்சி : குடலை மூடியுள்ள வயிற்றுள் ளுறையழற்சி.
perifollicular : மயிர் மூட்டுப்பை சூழ்ந்த : ஒரு மயிர்க்கால் நுண் சுரப்பியைச் சுற்றியுள்ள.
perifolliculitis : நுண்சுரப்புச் சுற்றழற்சி : மயிர் நுண்சுரப்பிகளைச் சுற்றுத் திசுவழற்சி.
perigastritis : இரைப்பை சுற்றழற்சி : இரைப்பை சுற்றியுள்ள வயிற்றுள்ளுறையழற்சி.
perihepatitis : கல்லீரல் சுற்றழற்சி : கல்லீரலைச் சுற்றியுள்ள வயிற் றுள்ளுறையழற்சி.
perikaryon : பெரிகரியோன் : 1. உயிர்க்கருவைச் சூழ்ந்துள்ள அணுக்(கூழ்மம்) கணியம். 2. அச்சிழை மற்றும் இழைமப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நரம்பணுவின் அணு மெய்மம், 3. பல்லுரு இழை தவிர்த்த, (வேர்க்) காழ்க் கருக்கள்.
perikymata : பெரிக்கைமாட்டா : புதிதாக முளைத்த பற்களின் சிப்பியின் மேல் காணப்படும் கணக்கற்ற குறுக்குக்கோட்டுக் குழிவுகள்.
perilabyrinthitis : பெரிலாபிரிந்திட்டீஸ் : உட்செவிவளைகுழல மைப்பைச் சூழ்ந்துள்ள திசு வழற்சி. perilaryngitis : குரல்வளை சுற்றழற்சி : குரல்வளையைச் சூழ்ந்து உள்ள திசுக்களின் அழற்சி.
perilymph : உட்செவிப் புறநநிணநீர்; சுற்று வடிநீர் : உட்செவியில் எலும்புத் துளைக்கும் சவ்வுத் துளைக்கும் இடையிலுள்ள நீர்மம்.
perilymphangitis : நிணநாளச் சுற்றழற்சி : ஒரு நிணநாளத்தைச் சூழ்ந்துள்ள திசுக்களின் அழற்சி.
perimetrium : கருப்பை மெல்லுறை; கருப்பை சீதப்படலுறை; கருப்பை புறச் சவ்வு : கருப்பையை மூடியுள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை.
perimyelitis : மச்சைச் சுற்றழற்சி : 1. தண்டுவடத்தின் சிலந்தியுரு உரை மற்றும் உள்ளுறையழற்சி. 2. எலும்பின் மச்சைக் குழி வறையைச் சுற்றியுள்ள படல அழற்சி.
perimyositis : தசைச்சுற்றழற்சி : ஒரு தசையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுவழற்சி.
perimysitis : தசையிழைநாருறையழற்சி : இயக்கு தசையிழைக் கட்டுகள் ஒவ்வொன்றையும் சுற்றியுள்ள நாருறை அழற்சி.
perimysium : நீளத்தசை சூழ்இணைப்புத் திசுப்படலம் : இயக்கு தசையிழைகளின் முதன்மைக் கட்டுகள் ஒவ்வொன் றைச் சூழ்ந்துள்ள நாருறை.
perinatal : பேறுகாலம்; நான்கு வாரக்கரு : குழந்தை பிறப்பதற்கு முந்திய சில வாரங்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு சில வாரங்களுக்குமிடைப்பட்ட கால அளவு.
perinatology : குழந்தையியல் : முதிர்கரு மற்றும் புத்திளம் குழந்தையின் பிறப்புப்பின் கால கவனிப்புப் பற்றிய குழந்தை மருத்துவத்தின் சிறப்புப் பகுதி.
perineocoele : யோனிக்குழாய்ப் பிதுக்கம் : நேர்குடலுக்கும் சிறு நீர்ப்பைக்கும் அல்லது நேர்க் குடலுக்கும் யோனித்துளைக்கும் இடையே உள்ள (தொடையிடைப்) மறைவிடப் பகுதியில் தோன்றும் பிதுக்கம்.
perineometer : யோனிக்குழாய் அழுத்தமானி : இடுப்புக் குழித்தளத் தசைகள் சுருங்கும் வலிமையைப் பதிவு செய்வதற்காகப் பெண்ணின் கருப்பை வாய்க் குழாயினுள் (யோனிக் குழாய்) செருகப்படும் ஒர் அழுத்தமானி.
perineorrhaphy : விடப இணைப்பு அறுவை; மூலாதாரத் தைப்பு : கிழிந்த விடபத்தை (ஆசனம்) சீர்படுத்துவதற்கான அறுவை மருத்துவம். perineotomy : பிறப்புப் பாதை அறுவை; மூலாதார வெட்டு : பிறப்புப் பாதையில் அறுவை மருத்துவம் செய்தல்; மேல் வெட்டு அறுவை.
perinephric : சிறுநீரகம் சூழ்ந்த; சிறுநீரகப் புறம் : சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள.
perinephrium : சிறுநீரகச்சுற்றழற்சி : சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு, இணைப்புத் திசுக்களின் அழற்சி.
perineurium : நரம்புச் சுற்றழற்சி : ஒரு மையவிலகிய நரம்பின் தனித்தனி இழைக்கட்டுகளின் நாருறை.
perineum : விடபம்; கருவாய்ச் சூழல்; மூலத்தானம்; மூலாதாரம்; ஆசனம் : பெண்ணின் இடுப்புக் குழியின் வெளிவாய், பெண்புறவுறுப்பு உள்ளிட்ட உடற்பகுதி இடுப்பெலும்பு முன்பாலப் பகுதிக்குக் கீழே தொடையின் இடைப்பகுதி.
period : 1. வழக்கமாக நடை பெறும் நிகழ்வுகள் அல்லது இயற்காட்சிகளுக்கிடையேயுள்ள நேரம், 2. பெண்களின் மாதப் போக்கு 3. ஒரு நோய் அல்லது நோய் நிலை பாதிக்கும் நேரம்.
periodic breathing : இடைவெளி மூச்சோட்டம் : பிறந்த குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருதல், மீண்டும் மூச்சு வரும் போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சுவிடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். மொத்தத்தில் நிமிடத்திற்கு 30-40 தடவை மூச்சோட்டம் நடைபெறும் விட்டுவிட்டு மூச்சு.
periodicity : பருவ நிகழ்வு : வழக்கமாக குறிப்பிட்ட இடை வேளைகளில் திரும்ப வரும் தன்மை.
periodontal : பற்புறம் சார்ந்த : பல்லைச்சுற்றி, பற்காழ் பற்றிய.
periodontics : பற்புறத்திசுவியல் : பற்களைச் சுற்றிலும் அமைந்து உள்ள திசுக்களைப் பற்றிய, பல் மருத்துவப் பிரிவுகளின் ஒரு பாடம்.
periodontitis : பற்புறத்திசுவழற்சி : ஈறுகளின் அழற்சி, பல் எலும்புச் சுற்றும் பற்குழி எலும்பும் காரையும் தேய்ந்தழிதல் போன்றவை நிகழும் பல்லைச் சுற்றிலுமிருந்து தாங்கும் திசுக்களின் நோய். இதனால், ஈறுகள் தேய்ந்து பற்கள் பிடிப்பிழந்து ஆடுதல்.
periodontal disease : பற்குழி நோய் : பற்குழித் திசுக்களில் ஏற்படும் வீக்கம். பல்லின் வேரைச் சுற்றியுள்ள சவ்வும், எலும்பும் படிப்படியாக நலி வுறுவதால் இது உண்டாகிறது. periodontium : பற் புறத்திசுக்கள் : பற்களைச் சுற்றிலுமிருந்து தாங்கும் திசுக்கள். அவையாவன, ஈறுகள், பற்காரை, பற்சுற்றுப் படலம் மற்றும் பல்குழி எலும்பு.
periodontosis : பற்புறத்திசுத் தேய்வு : பற்புறத்திசுக்கள் தேய்ந் தழிவதால் பற்கள் ஆடுவதும் இடம்பெயர்வதும் நிகழ்தல்.
perionychia : நகமடிப்பு; வீக்கம்; நகத்தடிச் சீழ்க்கட்டி : நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப் பூஞ்சணக் கிருமி இதற்குக் காரணம். முன்பு இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தி வந்த உயிரிகளை ஒடுக்கிவிடும் உயிர் எதிர்ப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இப்போது உண்டாகிறது.
perioophoritis : (முட்டைப்) சூற்பைச் சுற்றழற்சி : முட்டைப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி.
perioperative : அறுவை மருத்துவக் காலம் : அறுவை மருத்துவம் நடைபெறுங்காலத்தையும், அறுவை மருத்துவத்துக்கு முந்திய பிந்தியகாலங்களையும் உள்ளடக்கிய கால அளவு.
peripheral nervous system : புற நரம்பு மண்டலம்.
perioptometry : பார்வைப் பரப்புமானி : காட்சிப் பரப்பின் எல்லைகளை அளத்தல்.
perioral : வாய்த் தோல் அழற்சி; வாயைச் சுற்றி : வாயைச் சுற்றி உள்ள தோலில் ஏற்படும் செந்நிறச் சிதளுடன்கூடிய அழற்சி. வயதுவந்த இளம் பெண்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.
periorbita : பற்குழிச்சுற்றுப்பகுதி : பற்குழி எலும்புகளின் என்புச்சுற் றுப்படலம் பற்குழிப்படலம்.
periosteomyelitis : எலும்பு மச்சைச் சுற்றழற்சி : எலும்புடன் என்பு சுற்றுப் படலம் மற்றும் எலும்பு மச்சையின் அழற்சி.
periosteum : எலும்புச் சவ்வு; எலும்புறை; எலும்புப் புறம் : எலும்புகளை மூடியுள்ள சவ்வு. எலும்புகள் புதிதாக வளர்வதற்கு இந்தப் பாதுகாப்பு இன்றியமையாததாகும்.
periostitis : எலும்புச் சவ்வழற்சி; எலும்புறை அழற்சி : எலும்பு களை முடியுள்ள சவ்வில் ஏற்படும் வீக்கம்.
periostosis : எலும்பழற்சி : எலும்பு சுற்றுப்படலத்தில் இயல்பல்லாத எலும்புப்படிவு. periotic : செவிச்சுற்று : 1. செவியை, முக்கியமாக உட்செவியைச் சுற்றியமைந்துள்ள, 2. பொட்டெலும்பின் முகையுருப் பகுதி மற்றும் பொறைப் பகுதிகள்.
peripartum : பிறப்புக் காலம் : குழந்தை பிறக்கும் நேரம். இதனைப் 'பேறுகாலம்' என்பர். periphacitis : விழிவில்லைழியுறையழற்சி : கண்ஒளிவில்லை மூடி யுள்ள உறையின் அழற்சி.
peripheral : புற உறுப்புகள்; புற; புறத்திய; வெளிப்புற : ஒர் உறுப்பின் அல்லது உடலின் புற உறுப்புகள் சார்ந்த.
peripheral nervous system : வெளிநரம்பு மண்டலம்; புற நரம்பு மண்டலம்.
peripheral polyneuritis : புற நரம்பு சுழற்சி.
peripheral tissue : புறத்திசு.
periphery : புறப் பரப்பு, புற எல்லை : 1. ஒரு உடற்பரப்பின் வெளிப்பகுதி. 2 மையப்பகுதியிலிருந்து செல்லும் வழிப்பாதை.
periphlebitis : சிரைச்சுற்றழற்சி : ஒரு சிரையைச் சுற்றியுள்ள திசுக்கள் அல்லது சிரையின் வெளியுறையழற்சி.
periportal : கல்லீரல் சூழ்ந்த : கல்லீரல் சிரையைச் சுற்றியுள்ள.
periproctitis : குதவாய் அழற்சி; மலக்குடல் வாய் அழற்சி; குதச் சுற்றழற்சி : மலக்குடலையும், குதவாயையும் சுற்றி ஏற்படும் வீக்கம்.
perirenai : சிறுநீரகம் சூழ்ந்த; சிறுநீரகத்தைச் சுற்றி; சிறுநீரகப் புறம் : சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள.
perisalpingitis : கருப்பைக் குழற்சுற்றழற்சி : ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perisigmoiditis : வளைகுடலுறை அழற்சி : பெருங்குடலின் வளைவு மடக்கத்தைச் சுற்றியுள்ள, வயிற்றுக் குழியுறை அழற்சி.
perisinusitis : சிரைப்பை திசு அழற்சி : ஒரு பைக்குழி குறிப்பாக மூட்டு உறையின் சிரைப்பையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perispermatitis : விந்துவடச் சுற்றழற்சி : விந்துவடத்தைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perisplanchnitis : உள்ளுறுப்புச் சுற்றழற்சி : உள்ளுறுப்புக்களைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perisplenitis : மண்ணீரல் உறையழற்சி; மண்ணீரல் சுற்றழற்சி : மண்ணிரலிலும் அதையடுத்து கட்டமைவுகளிலும் உள்ள உறைகளில் ஏற்படும் வீக்கம். peristalsis : வயிற்றுச் தசை இயக்கம்; குடல் அலைவு; குடல் தசை அலைவு; அலைவியக்கம் : குடலிலுள்ள பொருள்கள் வயிறு நெடுகிலும் நகர்ந்து செல்லும் வகையில் குடலில் ஏற்படும் அசைவியக்கம் ஒரு தசைத் தளர்வு அலையைத் தொடர்ந்து இந்த அசைவு அலைவு தோன்றும். உணவுச் சாரம் எளிதில் செல்வதற்கு இசைவாக உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச் சுருக்க அலைகள் உண்டாகும்.
peritectomy : மரைபடல நீக்கம் : மரைபடலத்தை சரிசெய்வதற்காக, பளிங்குப்படலத்தைச் சுற்றியுள்ள விழிவெண்(யிணைப்) படலம் பகுதியை அறுத்து நீக்குதல்.
peritendineum : தசைநாண் உறை : தசைநாண் இழைகளுக்கிடையே நீளும், தசை நாண்களை சூழ்ந்துள்ள நாணிழை உறைகளில் ஒன்று.
perithyroiditis : தைராயிடு சுற்றழச்சி : தைராயிடு சுரப்பியைச் சூழ்ந்துள்ள உறை அல்லது திசுக்களின் அழற்சி.
peritomy : இமையிணைப் படல அறுவை; சுற்று வெட்டு : கண்ணின் கருவிழிப் படலம் சுருங்கிவிடாமல் தடுக்க கருவிழிப் படலத்தின் விளிம்பிலுள்ள இமையிணைப் படலத்தின் ஒரு பகுதியை வெட்டியெடுத்தல்.
peritoneum : வயிற்று உறுப்பு உறை (வபை); உதர உறை; வயிற்றுள்ளுறை : அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச்சவ்வுப்பை.
peritoneoscope : வயிற்றுக்குழிவறை நோக்கி : ஒரு முனையில் ஒளியையும் மறுமுனையில் பார்வை வில்லையையும் கொண்ட ஒரு மெல்லிய நீளமான அக நோக்கி, வயிற்றுச் சுவரில் ஒரு சிறுகீறல் செய்வதன் மூலம் வயிற்றுக் குழிவறையைப் பார்வையிட உதவி செய்கிறது.
peritoneoscopy : வயிற்றுக்குழிவறை நோக்கல் : வயிற்றுச் சுவர் ஊடாக ஒரு வயிற்றுக் குழிவறை நோக்கிக் கொண்டு வயிற்று உள்ளுறைக் குழிவறைக்குள் அடங்கிய உறுப்புகளைப் பரிசோதித்தல்.
peritoneotomy : வயிற்றுள்ளுறை வெட்டு : வயிற்று உள்ளுறையை அறுத்தல்.
peritoneovenous : வயிற்றுள்ளுறைச் சிரைய : வயிற்றுள்ளுறைக் குழிவரைக்கும் சிரை மண்டலத்துக்குமுள்ள இணைத்தொடர்பு.
peritonitis : வபை அழற்சி; வயிற்றறை உறை அழற்சி; உதரப் பையுறை அழற்சி : வயிற்று உறுப்பு உறையில் (வபை) ஏற்படும் வீக்கம். peritonsiilar abscess (quinsy) : தொண்டைச் சதை அழற்சி; தொண்டைச் சதை சுற்றுச் சீழ்க்கட்டி; தொண்டை வீக்கம்; உள்நாக்குப் பழுப்பு : தொண்டைச் சதையிலும், அதைச் சுற்றியுள்ள நெகிழ்வான திசுக்களிலும் ஏற்படும் கடும் அழற்சி.
peritrichous : பெரிட்ரிகோஸ் : சுற்றிழை கொண்ட தனது வெளிப் பரப்பு முழுவதிலும் இழைகளை அல்லது கசையிழைகளைக் கொண்ட நுண் உயிர்.
perityphlitis : குடல்வால் அழற்சி.
periumbilical : தொப்புள் சூழ்ந்த; உந்திச்சுற்று : தொப்புளைச் கற்றியுள்ள.
periurethral : சிறுநீர் வழி உறை சார்ந்த : சிறுநீர் வழி உறையைச் சுற்றியுள்ள.
periurethrałabscess : சிறுநீர் வழி உறை புறச் சீழ்க்கட்டி.
periurethritis : சிறுநீர்த்தாரைச் சுற்றழற்சி : சிறுநீர்த்தாரையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perivaginitis: யோனிச்சுற்றழற்சி : யோனியைச் சுற்றியுள்ள பகுதி களின் அழற்சி.
perivascular : குருதி நாளம் சூழ்ந்த; குருதிக் குழாய்க்ச் சூழல் : ஒரு குருதிநாளத்தைச் சுற்றி உள்ள.
perleche : உதடு நக்குதல்; கோட்டு வாய்ப்புண் : உதடு சிதை வுறுதல், உதட்டில் பொருக்குப் படர்தல் காரணமாக உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டிருத்தல். இது தெற்றுப் பல், பாக்டீரியா நோய், வைட்ட மின் பற்றாக்குறை, கை சூப்புதல் காரணமாக ஏற்படலாம்.
perivasculitis : நாளச்சுற்றழற்சி : ஒரு குருதி நாளத்தை சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.
perivesicle : பைச்சுற்று : பையை குறிப்பாக சிறுநீர்ப்பையைச் சுற்றிலும்.
perivesiculitis : சவ்வுப்பைச் சுற்றழற்சி : விந்துப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி.
perixenitis : வெளிப்பொருள் சுற்றழற்சி : ஒரு திசு அல்லது உறுப்புக்குள் உள்ள வெளிப்பொருளைச் சுற்றிலுமுள்ள அழற்சி.
perlingual : நாவழி : நாக்கு வழியாக மருந்தைச் செலுத்துதல்.
permeable : ஊடுருவ இடம் தரும் : கரைசலிலுள்ள பொருள் அல்லது நீர்மங்கள் ஊடுசெல்ல அனுமதிக்கும்.
permeability : ஊடுருவும் தன்மை; ஊடுருவு திறன்; ஊடியல்பு : உடல் திரவங்களில் கரைந்து உள்ள பொருள்கள் உயிரணுக்களின் இழைமங்களின் அல்லது உயிரணுப் படலங்களின் வழியே எந்த அளவுக்கு ஊடுருவிச் செல்லக்கூடியவை என்ற திறன்.
permeation : ஊடுருவல் : ஒரு உறுப்பு, திசு அல்லது வெளி ஊடுருவிப் பரவுதல்.
pernio : பெர்னியோ : குளிரால் தோலில் குருதிக்கட்டி வீங்குதல்.
pernicious anaemia : க்டுங் குருதிச் சோகை; உயிர் போக்கும் குருதிச்சோகை; கொடுஞ்சோகை : மரணம் விளைவிக்கக்கூடிய கடுமையான குருதிச் சோகை நோய்.
perniosis : குளிர்ப்பரு : கடுங்குளிர் காரணமாக உண்டாகும் தோல் பாதிப்பு. குளிர்படும் போது தசைச் சுரிப்பு ஏற்பட்டு இது உண்டாகும்.
perobrachius : கைஊனம் : பிறவியிலிருந்தே முன்கைகள் ஊனமுற்ற ஒருவர்.
perochirus : விரற்குறை : பிறவியிலிருந்தே கை விரல்கள் அல்லது கால் விரல்கள் ஊனமுற்ற ஒருவர்.
perocormus : உடற்குறை : பிறவியிலிருந்தே உடற்பகுதி ஊனமுற்ற ஒருவர்.
perodactylus : பிரற்குறை : பிறவியிலிருந்தே கை விரல்கள் அல்லது கால்விரல்கள் ஊனமுற்ற ஒருவர்.
peroidin : பெராய்டின் : பொட்டாசியம் பெர்க்குளோரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
peromelia : உறுப்புத் திரிபு; பிறவி உறுப்புக் குறை; முடப் பிறவி : ஒர் உறுப்பு கோரமாகத் திரிபடைந்திருத்தல்.
perora : வாய்வழியே : சிறு குடல் உயிர்ப்பொருள் ஆய்வு போன்று வாய்வழி ஆய்வு.
peroxidase : பெராக்ஸிடேஸ் : பெராக்ஸைடிலுள்ள ஆக்ஸிஜனை, ஆக்ஸிஜன் தேவைப்படும் திசுவுக்கு மாற்றித் தர உதவும் இரும்பு பார்ஃபைரின் நொதி.
peroxide : பெராக்சைடு : ஹைட்ரஜன் பெராச்சைடு.
peroxisome : பெராக்ஸிசோம் : கல்லீரல் மற்றும் சிறுநீரக அணுக்களில் செறிந்துள்ள, பெராக்ஸிடேஸ், கேட்டலேஸ் மற்றும் டிஅமைனோ ஆக்ஸிடேஸ் கொண்ட படலம் சூழ்ந்த சவ்வுப்பைகள்.
Perphenazine : பெர்ஃபினாசின் : உறக்கமூட்டுதல், நோவகற்றும் மருந்து.
perprimam intentionem : முதல் நிலையிலே காயம் ஆறுதல். persantin : பெர்சான்டின் : டைப்பிரிடாமோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
perseveration : தொடர்தூண்டல் : ஒரு மூளை நோயின் காரணமாக ஒரு புதுத்தூண்டல் வந்த பிறகும், முன் தூண்டலுக்கு விளைவுகள் தொடருதல்.
persistent vegetative state : தொடர்ந்து மரம் போலிருநிலை : நோயாளி படுத்தபடுக்கையாயிருந்து எந்த உணர்வும் வெளிப்பாடும் இல்லாமல் உணவு தருவதை உண்டு மூச்சும், இதயமும் மட்டும் இயல்பாய் இயங்க மூளையின் உணர்வியக்கம் தொடர்ந்து இல்லாமல் இருப்பது. உயிரிருந்தும் இல்லாதது போன்ற நிலை.
persona : (பிறர்) ஆவனம் : ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு வெளிப்படும் ஆளுமை.
personality : ஆளுமை; தன்மை; பண்பியல் தொகுப்பு : ஒரு மனிதரை வேறுபடுத்திக்காட்டும் அவரது பல்வேறு மனப்போக்குகள் மற்றும் குண இயல்புகள். தனிமனிதப் பண்புகளின் மொத்தத் தொகுதி.
perspiration : வியர்த்தல்; வியர்வை : இயல்பான வியர்வை, வியர்வைச் சுரப்பிகளிலிருந்து தோல் துளைகளின் வழியாக வியர்வை வெளியேறுதல்.
perthes' disease : தொடை நாளச் சிதைவு : தொடை சார்ந்த நோயில் குழாய் நாளச் சிதைவு ஏற்படுதல். தொடை முனையில் திரிபு ஏற்பட்டு மூட்டிணைப்பு மாறுதல்கள் ஏற்படலாம்.
persuation : அறிவுறுத்தி இணங்க வைத்தல் : அறிவுறுத்தி, அல்லது விவாதித்து, நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தல்.
perturbation : அமைதியின்மை : அமைதிக்குலைதல் அல்லது உணர்ச்சிக் கிளர்ச்சி.
pertussis : கக்குவான்; கக்கு இருமல்; கக்குவாான் நுண்ணுயிர் : குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவகை இருமல் நோய். இது ஒரு தொற்று நோய். கடுமையாக உள் மூச்சு வாங்கி ஈளை இருமல் ஒலி உண்டாகும்.
pertussoid : கக்குவான் இருமல் : 1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல்.
per vias naturrales : இயல்பான வழிகளின் வழியாக.
pes : பாதம் போன்ற; அங்கால்; பாதம் : பாதம் போன்ற கட்டமைவு.
passary : அல்குல் வாயில் செருகும் சாதனம்; செருகு மருந்துக் குச்சி; புழை வில்லை : கருப்பையை நிலை பிறழாமல் தாங்குவதற்காக அல்குல் வாயிலில் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருவை நிலைப்படுத்தும் குறிவாயினுள் கரையும் மருந்து. அல்குல் வாய்ப்புழை வழி மருந்து ஏற்ற பயன்படும் வில்லை.
pessimism : சோர்வு மனப்பான்மை; தோல்வி மனப்பான்மை; துன்பவுணர்வு : எதிலும் தீமையையே காணும் மனப்போக்கு உலகில் அனைத்துமே தீயவை என்று கருதும் மனப்பான்மை.
pest : தொற்றுநோய்.
pest-house : தொற்று நோய் மருத்துவமனை.
pesticides : பூச்சிக்கொல்லி : பூச்சிகளைக் கொல்லும் மருந்துகள்.
pestilence : மாமாரி : மரணத்தை ஏற்படுத்துகிற ஒருவகை கொள்ளை நோய்.
PET : பெட் : போசிட்ரான் எமிஷன்டோமோகிராஃபியின் தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். உயிருள்ள திசுக்களின் குறிப்பாக பெருமூளைப் புறனியில் ஏற்படும் உயிர் வேதியியல் மற்றும் நோய் நிலை இயல்பு மாற்றங்களைக் கண்டு பிடிக்க,ரேடியோ நியூக்லைடுகளைப் பயன்படுத்தும், உள்நுழையா படமெடுக்கும் செயல்முறை.
patechia : குருதி சொட்டுக் கசிவு; சிறு குருதி ஒழுக்கு; நுண்கசிவு : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும்.
Peter's anomaly : பிட்டர் குரைபாடு : ஜெர்மன் மருத்துவர் ஆல்ப்ரெட்பிட்டர் பெயரால் அழைக்கப்படும் நோய்த் தொகுப்பு. கருவில் வளரும் கண்ணில் டெஸ்சிமெட் படலத்தில் இடைவெளி ஏற்படுவதால் பளிங்குப் படல நடுவில் குறையும் மற்ற கோளாறுகளும். இது முன்னறை நோயியம் எனவும் அழைக்கப்படுகிறது.
pethidine : பெத்திடின் : மூளையில் உணர்வின்மை உண்டாக்கி நோவகற்றும் ஒரு செயற்கை மருந்து. இது அறுவை மருத்துவத்துக்கு முன்பும் பின்பும் மார்ஃபினுக்குப் பதிலாகக் கொடுக்கப்படுகிறது. இதனை வாய்வழியாகவும் நரம்பு ஊசி மூலமும் செலுத்தலாம். இது இரத்தழுத்தத்தைக் குறைக்கு மாகையால், இதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
pethilorian : பெத்திலோர்ஃபான் : பெத்திடினும், லெவல்லோர்ஃ பான் டார்ட்டிரேட்டும் கலந்த ஒரு தயாரிப்பின் வணிகப் பெயர். இது மயக்கத்தை எதிர்க்கக் கூடியது. இது உணர்ச்சியின்மையைப் பாதிக்காமல் மூச்சோட்டத் தாழ்வினைக் குறைக்கிறது.
Petit's triangle : பெட்டிட் முக்கோணம் : ஃபிரெஞ்சு அறுவை மருத்துவர் பெயரால் அழைக்கப்படும் முக்கோணப் பரப்பில் எல்லைகளாக புடை முகடும், முதுகுப்பரப்புத் தசையும் வெளிக்கோணத் தசையும் உள்ளன. இவ்விடைவெளி வழியாக முதுகுத்தண்டின் சீழ்க் கட்டி தோலுக்குள் துருத்தி நிற்கும்.
petroleum jelly : பெட்ரோலியம் : களிம்புகளில் பயன்படுத்துவதற்கான பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் ஹைட்ரோகார் பன்களின் கூட்டு கொண்ட கூழ்மப்பொருள்.
petromastoid : பொறைமுகையுரு : பொட்டெலும்பின் முகை யுருத்துருத்தம் மற்றும் பொறைப் பகுதி சார்ந்த.
petrooccipital : பொறைப்பிடரி சால் : பொட்டெலும்பின் பொறைப் பகுதி மற்றும் பிடரி எலும்புடன் தொடர்புடைய.
petrosal : பொறைப்பகுதி : பொட்டெலும்பின் பொறைப் பகுதியுடன் தொடர்புடைய.
petrositis : பொறையழற்சி : பொட்டெலும்பின் பொறைப் பகுதியழற்சி.
petrosphenoid : பொறை சூப்பு : ஆப்பெலும்புக்கும் பொட்டெலும்பின் பொறைப் பகுதிக்கும் தொடர்புடைய.
petrosquamous : பொறைச் செதிளுரு : பொட்டெலும்பின் செதிள்பகுதி மற்றும் பொறைப் பகுதியுடன் தொடர்புடைய.
petrous : பாறை போன்ற; பொட்டெலும்பு சார்ந்த : கல்போல் மிகவும் கடினமான பொட்டெலும்புப் பகுதி சார்ந்த.
Peutz-Jeghers syndrome : பியுட்ஸ்-ஜெகெர் நோயியம் : டச்சு மருத்துவர் ஜோஹேன்னெஸ் பியுட்ஸ் மற்றும் அமெரிக்க மருத்துவர் ஹெ ரோல்டுஜெகர்ஸ் இருவர் பெயரால் அழைக்கப்படும் நோய். இதில் வாயைச் சுற்றிலும் நிறப்புள்ளிகளும், பிறகு இடைச்சிறு குடல் சவ்வுக் கட்டிகளும் உள்ளன.
peyer's patches : திரள் நிணநீர்க் குருணைகள்; பேயர் திட்டு : சிறுகுடலில் நிணநீர்த் திசுக்களின் தட்டையான பட்டைகள். இது முக்கியமாக பின் சிறுகுடலில் காணப்படும். இது, குடற் காய்ச்சல் (டைஃபாய்டு) நோய் தோன்றுமிடம். இவற்றைத் திரன் நிணநீர்க்கரணைகள் என்றும் கூறுவர்.
peyronie's disease : பெய்ரோனி நோய் : பிரெஞ்சு அறுவை மருத்துவர் ஃப்ரேன் காய்ஸ் பெயர் கொண்ட நோயில் ஆண் குறியின் பிழம்பு இறுகியிருப்பதால் ஆண்குறி நார்கட்டி சுருங்குதல்.
phacoanaphylaxis : விழிவில்லை ஒவ்வாமை : விழிவில்லைப் புரதம் வில்லை யுறையை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் மிகை உணர்வு.
phacocystectomy : விழிவில்லையுறை நீக்கம் : கண்புரை நோய்க்காக வில்லையுறையின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.
phacocystitis : விழிவில்லையுறையழற்சி : விழிவில்லையுறையின் அழற்சி.
phacoemulsification : விழிவில்லை கூழாக்கி நீக்கல் : குறையெண் கேளா ஒலி அதிர்வுகளைக் கொண்டு புரைநோய் வில்லையை சிறுதுண்டுகளாக்கி கூழாக்கி உறிஞ்சி வெளியேற்றும் முறை.
phacolysis : விழிவில்லையை அறுவை மருத்துவம் மூலம் உடைத்து நீக்குதல்.
phacometachoresis : விழிவில்லையை இடமகற்றல்.
phacomatosis : புறத்தோற்கட்டி : புறத்தோலிலிருந்து உருவாகும் திசுக்களில் குறைகட்டிகள் தோன்றும் பிறவி நோய்களின் தொகுதி.
phacosclerosis : விழிவில்லை இறுக்கம்; கடினப்புரை : விழி வில்லை இறுகுதல்.
phacoscope : விழிவில்லை நோக்கி : பார்வைத்தகவமைவின் போது விழிவில்லையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் கருவி.
phagocytin : விழுங்கணுப் பொருள் : பல்லுரு அணுக்கரு வெள்ளணுக்கணுக்களிலிருந்து பெறப்படும் கிருமியழிப்புப் பொருள்.
phagocyte : துகள் சூழ் உயிரணு; விழுங்கணு; நோய் தடுக்கும் நின நீரணு : பாக்டீரியாக்களையும், மற்ற துகள் பொருள்களையும் சூழ்ந்து கொள்ளும் நிணநீர் உயிரணு; நோயனுக்களை ஈர்த்துக் கொண்டு உடலை நோய்களிலிருந்து காக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணு.
phagocytosis : துகள் சூழ் உயிரணு சூழ்தல் : பாக்டீரியாவை அல்லது பிற துகள் பொருள்களைத் துகள் சூழ் உயிரணுக்கள் சூழ்ந்து அணுக்குள் ஈர்த்து உட்கொள்ளல்.
phagosome : துகள்படல சவ்வுப்பை : விழுங்கணுவுள்ளிருக்கும் துகள் ஒன்றைச் சுற்றியுள்ள குடி படலம் குழ் சவ்வுப்பை, பகுப்புநொதியும் நுண்குமிழியும் ஒட்டியிணைவதால் அது செரிக்கப்படும்போது அது ஃபேகோலை சோசோம் எனப்படும்.
phakoemulsification : பசைக்குழம்பாக்கம் : முதிர்ச்சியடைந்த கண்படிக ஆடி இழைகளைத் திரவமாக்குவதற்குப் புறஒலி அதிர்வு பயன்படுத்தப்படுகிறது. திரவமான ஆடிப் பொருள் பிறகு வெற்றிடத் துப்புரவுக் கருவி செய்வதுபோல் வெளியே உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
phalanges : விரல் எலும்புகள் : கை விரல்களின் அல்லது கால் விரல்களின் தனித்தனி எலும்புகள்.
phalanx : விரல் எலும்பு; விரலென்பு : 1. கை விரல் அல்லது கால் விரல்களுக்கான எலும்புகளில் ஒன்று. பெருவிரல் அல்லது கால்கட்டை விரலுக்கு இரண்டு. மற்ற விரல்களுக்கு இரண்டு எலும்புகள் உள்ளது. உள்ளங்கைக்கு அருகிலுள்ள அண்மைய, அடுத்து நடு, அடுத்து சேய்மைய என மேலிருந்து கீழாக பெயர் பெறுகின்றன. 2. உட்செவியிலுள்ள (கார்ட்டி) உறும்பின் வலைச் (சுருஸ்) சவ்வின், உள்வெளி விரலனுக்களாலான தட்டுத் தொகுதிகளில் ஒன்று.
phallus : ஆண்குறி.
phantasm : எழுப்பா மனக்காட்சி : உண்மைத் தூண்டல்களால் எழுப்பப்படாத மனக்காட்சி.
phantom limb : மருள்தோற்றவுறுப்பு : உடலிலுள்ள ஒர் உறுப்பு வெட்டியெடுக்கப் பட்ட பின்னரும் அந்த உறுப்பு உடலில் இணைந் திருப்பதாகத் தோன்றும் உணர்வு, வெட்டியெடுக்கப்பட்ட உறுப்பிலிருந்து வலி உண்டாவதாகவும் தோன்றும்.
phantom pregnancy : போலிக் கர்ப்பம்; போலிக் கருத்தோற்றம் : குழந்தையில்லாத ஒரு பெண்ணிடம் குழந்தை பெறவேண்டும் என்ற தீராத வேட்கையினால், கருவுறுதலின் தொடக்க நிலை அறிகுறிகள் தோன்றுதல்.
phantosmia : பொய்நுகர்வுணர்வு : எந்த வெளித்தூண்டல்களும் இல்லாத நிலையில் உணரப்படும் நுகர்வுணர்வு.
pharm : மருந்து : மருந்தாகக் கலை, மருந்துக்கடை, மருந்தாக்கத் தொழிலுக்குரிய, மருந்துப்பொருள் அடைவு நூல்.
pharmaceutical : மருந்தாக்கவியல்; மருந்தாக்கம் சார்ந்த; மருந்தாக்கிய : மருந்தாக்கம், மருந்து விற்பனைத் தொழில் தொடர்பான.
pharmaceutics : மருந்தாக்கவியல்; மருந்தாக்கியல்.
pharmacist : மருந்தாக்குனர்; மருந்து கலப்போர் : மருந்துக் கடைக்காரர், மருந்தாளுனர்.
pharmacogenetics : மருந்து விளைவு : மருந்துகளினால் உண்டாகும் பக்க விளைவுகள்.
pharmacoangiography : மருந்து செலுத்தி நாளவரைவு : நாள விரிப்பு அல்லது நாளச் சுருக்கப்பொருள்களை உட்செலுத்துவதன் மூலம் ஒரு நாளப் படத்தை நன்கு தெளிவாகப் பார்க்க முடியாது.
pharmacodynamics : மருந்தியக்கம் : ஒரு மருந்துப்பொருளின் ஒரு குறிப்பிட்ட செறிவளவு, அது செயல்படும் இடத்தில் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிதல்.
pharmacognosy : மருந்து மூல இயல் : இயற்கையில் கிடைக்கும் மருந்துகள், அவற்றின் குண இயல்புகள், அதன் மூலம் போன்றவற்றை விளக்கும் மருந்தியலின் பிரிவு.
pharmacokinetics : மருந்தடையும் மாற்றம்; மருந்து ஈர்ப்பியல் : உடலில் மருந்துகள் எவ்வாறு ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. எவ்வாறு பகிர்ந்தளிக்கப் படுகின்றன, எவ்வாறு வெளியேற்றப் படுகின்றன என்பதை ஆராய்தல்.
pharmacologist : மருந்தியல் வல்லுநர் : மருந்தியலில் படிப்புத்தகுதி பெற்ற ஒருவர், மருந்துகள் மற்றும் சிகிச்சைப் பொருள்களை மதிப்பிடவும், ஆராய்ச்சியும் மேற்கொள்பவர்.
pharmacology : மருந்தியல்; மருந்துப் பொருளியல் : மருந்துப் பொருள்கள் பற்றி ஆராயும் அறிவியல்.
pharacopia : வாகட நூல்; மருந்தியல் முறை நூல் : மருந்துப் பொருள்களின் விவர நூல் தொகுதி.
pharmacopys chosis : மருந்து வழி மனநோய் : ஒரு மருந்து, ஆல்கஹால் அல்லது ஒரு நச்சுப்பொருளால் ஏற்படும் மனநிலைக் கோளாறு.
pharmacotherapy : மருந்து மருத்துவம் : நோய்களுக்கு மருந்துகளைக் கொண்டு மருத்துவமளித்தல்.
pharmacy : மருந்தகம்; மருந்தாக்க நிலையம் : மருந்துக் கடை, மருந்தாக்கக் கலை.
pharyngeal pouch : தொண்டைப்பை; தொண்டைக்குழி; தொண் டைசார் : தொண்டையின் கீழ்ப்பகுதியை நோய்க் குறியியல் முறையில் விரிவாக்குதல்.
pharyngectomy : தொண்டை அறுவை : தொண்டையின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.
pharyngismus : தொண்டை இசிப்பு ; தொண்டை தசையிசிப்பு.
pharyngitis : தொண்டை அழற்சி.
pharyngocele : அடித்தொண்டையில் (பை போன்ற) புழை.
pharyngoconjunctival fever : தொண்டை விழிவெண்படலக் காய்ச்சல் : குழந்தைகளில் அடினோவைரஸ், சில சமயம் காக்ஸேகிவைரஸால் ஏற்படும் தொற்றால் காய்ச்சல், தொண்டையழற்சி, விழி வெண்படல அழற்சி.
pharyngolaryngeal : தொண்டை குரல் வளை : தொண்டை மற்றும் குரல்வளை சார்ந்த.
pharyngomycosis : தொண்டைப் பூஞ்சைத் தொற்று : தொண்டையில் பூஞ்சைக் காளானால் தொற்று.
pharyngooesophageal : தொண்டை; உணவுக்குழல்சார் : தொண்டை மற்றும் உணவுக் குழலுக்குத் தொடர்புடைய.
pharyngoplasty : தொண்டை ஒட்டு அறுவை : தொண்டையில் செய்யப்படும் இணைப்பு அறுவை மருத்துவம்.
pharyngotomy : தொண்டையழற்சி அறுவை; தொண்டைத் திறப்பு : தொண்டையில் உண்டாகும் அழற்சியைக் குணப்படுத்த சீழ்வடிக்கச் செய்யப் படும் மருத்துவம்.
pharynx : தொண்டை : உள் தொண்டை வாயின் பின்பகுதியிலுள்ள குழிவு. இது கூப்பு வடிவில் இருக்கும். இதன் நீளம் சராசரி 75 செ.மீ. இதன்
கீழ்ப்பகுதியில் சளிச்சவ்வுப் படலப் பூச்சு இருக்கும். மேற்பகுதி உணவுக் குழாய்ப் பக்கமாகத் திறந்திருக்கும்.phasal : ஃபாசல் : லிதியம் கார்போனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
phase : படிநிலை : 1. வளர்ச்சி அல்லது மாற்றம் ஏற்படும் போதுள்ள படிநிலைகளில் ஒன்று. 2. பல படித்தான தொகுதிகளிலிருந்து பிரிக்கப் படக்கூடிய ஒரு படித்தான பொருள். 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக் கிடையேயுள்ள கால நேரத் தொடர்பு.
phase contrast microscope : நுண்ணோக்கி மாறு பாட்டுப் படிநிலை : ஒளிவிலகல் அளவுகளிலுள்ள வேறுபாடுகளை ஒளித்திறன் வேறுபாடுகளாக மாற்றுவதன் மூலம் கட்டமைப்பு விவரங்களை நன்கு பார்க்க உதவும் நுண்ணோக்கி (உருப்பெருக்கி).
PHC : தொடக்கச் சுகாதாரக் கவனிப்பு.
phenacetin : காய்ச்சல் தடுப்பு மருந்து; ஃபெனாசெட்டின் : முன்பு நோவகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து. இதனை நீண்டகாலம் பயன் படுத்தினால் சிறுநீரகங்கள் சேதமடைவதால், இப்போது இதற்குப் பதிலாக பாராசிட்டாமோல் என்ற மருந்து பயன் படுத்தப்படுகிறது; காய்ச்சல் தடுக்கும் மருந்து.
phenazone : ஃபெனாசோன் : பெனாசெட்டின் போன்ற மென்மையான நோவகற்றும் மருந்து. இதன் நச்சு விளைவுகள் காரணமாக இது அரி தாகவே பயன்படுத்தப்படுகிறது.
phemazocine : ஃபெனாசோசின் : கடுமையான வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வீரியம் மிகுந்த நோவகற்றும் மருந்து,
phenazopyridine hydrochłoride : ஃபெனாசோப்பைரிடீன் ஹைட்ரோகுளோரைடு : சிறுநீர்க் குழாயில் ஏற்படும் நோவை அகற்றும் மருந்து. சிறுநீர்ப்பை அழற்சிக்குப் பயன்படுகிறது.
phenergan : `ஃபெனர்கான் : புரோமித்தாசின் ஹைட்ரோ குளோரைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
phenethicillin : ஃபெனத்திசிலின் : ஒர் மருந்து, பென்சிலினுக்குப் பதிலாக வாய்வழி கொடுக்கப் படுகிறது.
phenindione : ஃபெனிண்டியோன் : இரத்த உறைவுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து குருதியுறைவுக்கோளாறு. களில் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது.
phenobarbitone : ஃபெனாபார் பிட்டோன் : காக்காய் வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் பார்பிட்டுரேட்டு என்ற மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது.
phenocopy : ஃபெனோகாப்பி : ஒரு குறிப்பிட்ட மரபணுவின் காரணமான குணத்தை மிகவும் ஒத்துள்ள ஒரு தனிப்பண்பு தோன்றுதல். ஆனால் உண்மையில் அது சூழல் அல்லது பிற காரண விளைவுகளின் காரணமாக தோன்றுவதாகும்.
phenol : ஃபீனால்; ஃபீனைல் ஆல்கஹால் : தொற்று நீக்கியாகவும் கிருமி நீக்கியாகவும் பயன்படும் ஃபெனிக் அல்லது கார்பாலிக் அமிலம். அதன் 3-4 விழுக்காடு கரைசலை உட்கொண்டால் நரம்புகளை பாதிக்கும்.
phenolic disinfectants : ஃபெனால் தொற்று நீக்கிகள் : தொற்று நீக்கி மருந்தாகப் பயன்படும். ஃபெனால் வழிப் பொருள்கள் இதனைத் தோலும், நுரையீரல்களும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் மஞ்சட் காமாலை உணடாகலாம.
phenology : உயிரி ஆய்வியல்.
phenolphthalein : ஃபெனால்ஃப்தலின் : மலமிளக்கி மருந்து.
phenothiazines : ஃபெனாத்தையாசின் : வீரியம் வாய்ந்த துயிலுரட்டும் மருந்துகள். குளோர்புரோமாசின் இந்த வகையைச் சேர்ந்தது. மன அதிர்ச்சியைக் குறைக்கும்.
phenotype : ஃபெனோ வகை : பரம்பரை மற்றும் சூழல் காரணிகளால் தீர்மானிக்கப் படும் ஒரு உயிரில் காணப்படக் கூடிய எல்லா குண நலன்களும்.
phenoxybenzamine : ஃபீனாக்ஸிபென்ஜாமின் : இரத்தக்கொதிப்பை சிகிச்சை செய்ய தரப்படும் ஆல்ஃபா ஆட்ரீனெர்ஜிக் ஏற்புத் தடைப் பொருள்.
phenoxymethylpenicillin : ஃபெனாக்சிமெத்தில் பெனிசிலின் : வாய்வழி உட்கொள்ளப்படும் பெனிசிலின் மருந்து.
Phensuximide : ஃபென்சக்ஸிமைடு : (பெடிட்மால்) சிறு வலிப்பில் பயன்படுத்தப்படும் வலிப்பெதிர்ப்பு மருந்து.
phentermine : ஃபென்டெர்மின் : பசியைக் குறைக்கும் மருந்து.
phentolamine : ஃபென்டோலாமைன் : குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள். இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. அரிதாக வாய் வழியாகவும் கொடுக்கப்படுகிறது.
phenylacetic acid : ஃபீனைல் அசெட்டிக் அமிலம் : ஃபீனைல் அலனின் சிதை மாற்றப் பொருள். இது சிறுநீரில் தோன்றுவது ஃபீனைல் கீட்டோனூரியா எனப்படும்.
phenylalanine : ஃபெனிலாலானைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.
phenylbutazone : ஃபெனில்புட்டாசோன் : வீரியத்துடன் ஒரு நேரம் செயற்படக்கூடிய ஒரு அழற்சியகற்றும் மருந்து. இதனால் நச்சு விளைவுகள் அடிக்கடி ஏற்படும். இது இப்போது முதுகெலும்புக் கண்ணி அழற்சிக்கு மருத்துவ மனையில் மட்டுமே பயன்படுத் தப்படுகிறது.
phenylephrine : ஃபெனிலெஃபிரின் : குருதிநாள இறுக்க மருந்து அட்ரீனலின் போன்றது. ஆனால் அதைவிட உறுதியானது. இதனை தசை வழியாக ஊசி மூலம் செலுத்தலாம். இது பொதுவாகக் கண்சொட்டு மருந்தாகவும் (0.5-10%) முக்குத் தெளிப்பு மருந்தாகவும் (0.25%) பயன்படுத்தப்படுகிறது.
phenylketonuria (PUK) : ஃபெனில்கெட்டோனுரியா : ஃபெனி லாலானைனின் வளர்சிதை மாற்ற எச்சப் பொருள்கள். இது சிறுநீரில் ஃபெனில் செட்டோன்களாக உள்ளது. உணவில் உள்ள ஃபெனிலாலானை னினை டைரோசினாக மாற்றுகிற நுரையீரலிலுள்ள ஃபெனிலாலானைன் ஹைட்ராக்கிலேஸ் என்ற செரிமானப்பொருள் (என்சைம்) செயலிழப்பதன் காரணமாக இது உண்டாகிறது. இதனைப் பிறவியிலேயே கண்டுபிடித்து உரிய உணவு முறையைக் கொண்டாலன்றி, இதனால் மனக்கோளாறு ஏற்படும்.
phenytoin : ஃபெனிட்டாயின் : கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்குப் பயன்படுத்தப்படும் வலிப்பு நீக்க மருந்து, சில சமயம், ஃபெனோபார்பிட்டோனும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.
pheochromoblast : பழுப்பு மஞ்சள் கருவணு : இது வளர்ச்சியடைந்து பழுப்பும் மஞ்சளணுவாகிது.
pheochromocytoma : ஃபியோகுரோமோசைட்டோமா : அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள் சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வையும், வேகத்துடிப்புமான முக்குறிகளும் இரத்தக்கொதிப்பு நோயாளியிடம் உண்டாகிறது.
pheromone : இன ஈர்ப்புச் சுரப்பு : ஒரு உயிர் வெளிப்படுத்தும், தன் இனத்தைச் சார்ந்த ஒரு உயிரினத்தில் ஒரு விளைவை உண்டாக்கும் திறன்படைத்த இயக்குநீர்.
Philadelphia chromosome : ஃபிலடெல்ஃபியா இனக்கீற்று : நாட்பட்ட மச்சை வெள்ளணுப் புற்று நோயாளிகளில் காணப்படும் குறையுள்ள இனக்கீற்று. இனக்கீற்று 22இன் சேய்மநீள் இழை, இனக்கீற்றின் நீள் இழைக்கு மாற்றப்பட்டிருப்பது.
philtrum : ஃபில்ட்ரம் : உதட்டின் வெளிப்பரப்பில் நடுக்கோட்டுக் குழிவு.
phimosis : மானி நுதி இறுக்கம்; உறை நீங்கா ஆண்குறி; முன் தோல் குறுக்கம்; நுனித்தோல் இறுக்கம் : மானி துதி (லிங்கக் கவசம்) இறுக்கமடைதல். இதனால் அது சுருங்கி ஆண்குறியை மூடிக்கொள்ள இய லாது போகிறது.
pHisoHex : ஃபைசோஹெக்ஸ் : நோய் நுண்மத்தடை மருந்தாகவும், பாக்டீரியாவுக்கு எதிராகத் தோலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படும் மருந்து. என்ட்சூஃபோன் என்ற சலவைப்பொருள் 3% ஹெக்சாகு ளோரோஃபேன், லானோலின், கொலஸ்டெரோல்ஸ், பெட்ரோலாட்டம் ஆகியவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
phlebectomy : சிரை அறுவை; சிரை நீக்கம் : இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம்.
phlebitis : சிரை அழற்சி : இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறத்தோலில் ஏற்படும் வீக்கம்.
phleboclysis : சிரை கழுவல் : குளுக்கோஸ், சலைன் போன்ற நீர்மங்கள் சிரை வழியாக ஊசி மூலம் செலுத்துதல்.
phlebography : சிரைவரைவு : 1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல்.
phlebolith : சிரைக்கட்டி; சிரைக் கடினமடைதல்; சிரைக்கல் : இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயில் ஏற்படும் கட்டி. phiebolithiasis : சிரைக்கல் : சிரைச் சுவரில் கால்சியத் துகள் பதிந்து வளருதல்.
phlebomanometer : சிரைமானி : சிரை இரத்த அழுத்தத்தை அளக்கும் அழுத்தமானி.
phlebosclerosis : சிரையிறுக்கம் : சிரைச்சுவர்களின் நாரிழை இறுக்கம்.
phlebostasis : சிரைத்தேக்கம் : 1. சிரைகளில் இரத்தம் மிகவும் மெதுவாகப் பாய்தல், 2. கால், கையுறுப்புகளின் சிரைகளை ஒரு அழுத்தப்பட்டை கொண்டு அழுத்துவதன் மூலம் சிரைவழி இரத்தம் இதயத்துக்குத் திரும்புவதை தற்காலிகமாகத் தடை செய்தல்.
phlebotomy : குருதி வடிப்பு; சிரைத் திறப்பு : மருத்துவ முறையில் குருதியை வடித்தல்.
phlebothrombosis : சிரைக் குருதிக்கட்டு; சிரைப்படிம உறைவு; உட்சிறைக் குருதி; உறை படிமம் : இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதி நாளத்தில் ஏற்படும் இரத்த கட்டு, சிரை யில் மெதுவாக குருதி பாய்வதால் இது உண்டாகிறது. பெரும்பாலும் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிக்கு இது உண்டாகிறது.
phlebotomist : குருதி வடிப்பு வல்லுநர் : குருதியை வடிக்கும் மருத்துவத்தில் வல்லுநர்.
phlebotomus : குருதியுறிஞ்சி : குருதியுறிஞ்சு பூச்சிரைக் குருதி வடிகாய்ச்சல், தோலில் லீஷ் மேனியாசிஸ் மற்றும் கருங்காய்ச்சல் போன்ற வியாதிகளை உண்டுபண்ணும் குருதியுறிஞ்சிக் குடிக்கும் பூச்சி வகைகளில் ஒரு இனம்.
phlegm : சளி; கோழை; கபம் : மூச்சுக் குழாயிலிருந்து வெளி யேற்றப்படும் கபம், சளி கோழை.
phlegmagogue : சளி மருந்து : கபத்தை வெளிப்படுத்தும் மருந்து.
phlegmatic : மடிமை மனிதன் : எளிதில் செயற்படாத அல்லது எளிதில் உணர்ச்சிவயப்படாத மனிதன்.
phlegmon : அழற்சிக் கட்டி; பரு.
phlogistic : அழற்சியுடைய.
phlyctena : தீக்கொப்புளம் : முதல்நிலை தீப்புண்களில் ஏற்படும் ஒரு சிறுநீர்க் கொப்புளம்.
phlyctenule : இமை கொப்புளம்; நுண்குமிழ் : இமையிணைப் படலத்தில் அல்லது விழிவெண் படலத்தில் ஏற்படும் நுண்ணிய கொப்புளம். phobia : காரணமில்லா அச்சவுணர்வு; அச்ச நோய் மருட்சி; மருளியம் : நோய்த் தன்மையுடைய அச்சக்கோளாறு வெறுப்புக் கோளாறு. எடுத்துக்காட்டு : இதயநோய் பற்றிய அச்சம்; புற்றுநோய் குறித்த அச்சம்.
phocomelia : கோர உறுப்புத் திரிபு; கை கால் வளர்ச்சியின்மை; கை-கால் உருப்பெறாமை : கைகளும், கால்களும் திரிபடைந்து கடல் நாய் (சீல்) போன்று தோற்றமளித்தல். 1960-களில், கருவுற்ற பெண்கள் தாலிடோமைடு என்ற மருந்துச் சந்தைக்குப் புதிதாக வந்த துயிலுாட்டும் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் இத்தகை உறுப்புத் திரிபுடன் பிறந்தன.
phocodine : ஃபோக்கோடின் : இருமல் உண்டாகும் மையத்தைச் சமனப்படுத்தும் மருந்து. கோடைன் போன்ற குணமுடையது. சளியில்லாத வறட்டு இருமலுக்குக் கொடுக்கப்படுகிறது.
phonation : ஒலி செய்தல்; சொல்லொலி : குரல்வளை நாளங்களின் அதிர்வினால் உண்டாகும் ஒலி.
phonendoscope : உள்ளொலி பெருக்கி : கேட்பொலிகளை பெருக்கிக் காட்டும் ஒரு இதயத் துடிப்புமானி.
phoniatrics : ஒலியவியல் : பேச்சு மற்றும் பேச்சுப் பழக்கங்களைப் பற்றிக் கூறும் அறிவியல்.
phonocardiography : இதய ஒலி வரைவியல் : இதயத்தின் ஒலி களையும், முணுமுணுப்புகளையும் மின்னியல் பதிவுமூலம் வரைபடமாகப் பதிவு செய்தல். இதன்மூலம், கருவிலுள்ள குழந்தையின் இதயத்துடிப்பு வீதம், கருப்பைச் சுருக்கத்துடன் அதன் தொடர்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அளவிடலாம்.
phonomyoclonus : தசைதுடிப்பொலி : கேட்பொலிக்கருவி மூலம் கேட்கமுடியக்கூடிய தசையிழைத் துடிப்புகள்.
phonomyography : தசையொலிப்பதிவு : தசை கருங்கும் போது ஏற்படும் ஒலிகளைப் பதிவு செய்தல்.
phonostethograph : கேட்பொலிப்பதிவு கருவி : மூச்சியக்க ஒலிகளைப் பெருக்கிக் காட்டும் கருவி.
phonosurgery : ஒலிசீர் அறுவை : குரலின் தரம், தொனி, வளம் ஆகியவற்றை அதிகப்படுத்துவதற்காக குரல்நாண்கள் அவற்றை அடுத்துள்ள திசுக்களில் செலுத்தப்படும் அறுவை மருத்துவ முறை. Phoparan disease : ஃபோப்பரான் வியாதி : இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இதயக் கீழறைப் பெருக்கம் மற்றும் சிறுநீரில் பெருமளவு புரதம் ஆகியவை காணப்படுகின்றன. இவ்வியாதி இமய மலையில் குடியேறியவர்களில் அந்த உயர்மட்ட தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப உடல் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாததால் ஏற்படுகிறது.
phosphataemia : ஃபாஸ்ஃபேட் மிகைக் குருதி : குருதியில் கரியமில ஃபாஸ்ஃபேட்டுகள் அதிக அளவிலிருத்தல்.
phosphaturia : சிறுநீரில் ஃபாஸ்ஃபேட்; ஃபாஸ்பேட் நீரிழிவு : சிறு நீரில் அளவுக்குமீறிப் ஃபாஸ்ஃபேட்டுகள் இருத்தல்.
phosphene : விழித்திரை ஒளிவளையம் : கண்விழித் திரையில் எரிச்சல் ஏற்படுவதனால் கண்விழி அழுத்தப்படுவதன் காரணமாக ஏற்படும் ஒளி வளையங்கள்.
phosphodiesterase : ஃபாஸ்ஃபோடயெஸ்டெரேஸ் : சைக்ளிக் அடினோசின் மோனோஃபாஸ் பேட்டை சிதைய வினையூக்கியாக செயல்படும் நொதி.
phospholine iodide : ஃபாஸ்ஃபோலின் அயோடைடு : கோலி னெஸ்டிராசுக்கு எதிரான ஒரு மருந்து.
phospholipid : ஃபாஸ்ஃபோலைப்பிடு : ஃபாஸ்ஃபரஸ் கொண்ட கொழுப்பி, அவை லெசித்தினும், ஸ்ஃபிங்கோ மையலினும் ஆகும். உயிரணுப் படலத்தின் கொழுப்புப் பகுதி பெரும்பாலும் ஃபாஸ்ஃபோ லைப்பிடுகள் ஆகும்.
phosphonecrosis : குழித்தாடை : தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் குழிவுத்தாடை ஃபாஸ்ஃபரஸ் காரணமாக பற்கள் இற்றுப் போய் இந்தத் தாடையெலும்புச் சீரழிவு ஏற்படுகிறது.
phosphoric acid : ஃபாஸ்ஃபோரிக் அமிலம் : இது ஒரு கரைப்பான் ஆகும். அழிந்த திசு எச்சங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்த்த கரைசல் ஆகும்.
phosphorus : ஃபாஸ்ஃபரஸ் (எரியம்) : எலும்பு, நரம்புத் திசுக்களின் முக்கிய அமைப்பானாக அமைந்துள்ள ஓர் அலோகத் தனிமம். phosphorylase : ஃபாஸ்ஃபோரிலேஸ் : 1. ஒரு கரியமற்ற ஃபாஸ் ஃபேட் தொகுதியை வேறொரு கரிய ஏற்பிக்கு மாற்றுவதில் ஈடுபடும் நொதியாகும். இந்த டிரேன்ஸ்ஃபெரேஸ், 2. ஃபாஸ்ஃபரை சிதைக்கும் வினையூக்கியாக செயல்படும் நொதிகளில் ஒரு தொகுதி.
phosphorylation : ஃபாஸ்பேட் இணையாக்கம் : 1. ஒரு கரிய கூட்டும் பொருளுடன் ஃபாஸ்பேட்டை இணைத்தல், 2 ஏடி பியை ஏ(ட்)டி(ப்)பியாக ஃபாஸ்ஃபேட்டை இணைத்து மிகு திறன் ஃபாஸ்ஃபேட்பிணைப்புகளை உருவாக்குதல்.
photalgia : ஒளி நோவு; ஒளிவழிக் கண் வலி; ஒளிவலி : அதிக ஒளிபட்டால் கண்களில் உண்டாகும் வலி.
photoactivators : ஒளிச் செயலூக்கிகள் : வாய்வழி உட்கொள்ளும் பொருட்களால் ஒளியின் அழிப்பாற்றல் அதிகரித்தல்.
photoactive : ஒளிச் செயலூக்கும் : அல்ட்ராவயலெட் கதிர்வீச்சு அல்லது சூரிய ஒளிக்கு வேதி வினைப்பாடு.
photoallergen : ஒளி ஒவ்வாமை ஊக்கி : ஒளிக்கு ஒரு ஒவ்வாமை விளைவை ஏற்படுத்தும் ஒரு இடைப்பொருள்.
photoallergy : ஒளி ஒவ்வாமை : ஒளி மற்றும் சிலவேதிப் பொருள்களுக்கு முன்பே கூருணர்வுக்கு ஆட்பட்ட நிலையில் அவற்றிற்கிடையே ஏற்படும் இடைவினையால் தாமதமாக ஏற்படும் தடுப்பாற்றல் வகைப்பட்ட ஒளி (ஒவ்வாமை)க் கூருணர்வு.
photochemical : ஒளி வேதியியல் பொருள் : ஒளிபட்டு வேதியியல் வினைபுரியக்கூடிய வேதியியல் பொருள்.
photochemotherapy : ஒளி வேதியியல் மருத்துவம் : நோயாளியைப் புறவூதா ஒளிக்கு உட் படுத்தி மருந்தின் விளைவினை அதிகரித்தல்.
photochromogen : ஒளிநிறச்சன்னி : மைக்கோ பேக்டீரியம் கான்சாசியை போன்ற நுண்ணுயிர் ஒன்று வெளிச்சமிருக் குமிடத்தில் வளரும்போது உருவாகும் நிறமி.
photocoagulation : ஒளித்திரட்சி : மிகுதியாக குவிக்கப்படும் ஒளியின் வெப்பவிளைவால் திசு அழிதல்.
photocoagulation : ஒளிவழி உறைதல் : ஆற்றல் வாய்ந்த ஒளியை ஒருமுகமாகப் பாய்ச்சித் திசுக்களை எரித்தல். photodynamic therapy : ஒளி இயக்க மருத்துவம் : பொருத்தமான ஒரு அலைவரிசையிலுள்ள ஒளிபடும்போது, ஒரு ஒளிக்கூருணர்விப்பான் செறிந்த புற்றணுக்கள் அழிக்கப்படும் மருத்துவ முறை.
photoendoscope : ஒளி உள்நோக்குக் கருவி : ஒர் ஒளிப்பதிவுக் கருவியில், உள்ளுறுப்பு நோக்குக் கருவியை இணைத்து, உள்ளுறுப்புகளைப் பார்த்து ஆராய்தல்.
photogenic : ஒளியுருவாக்கம் : 1. ஒளியை உண்டாக்கும். 2 ஒளி யால் உண்டாகும்.
photolysis : ஒளிச்சிதைவு : ஒளியின் இயக்கத்தால் ஒரு வேதியக் கூட்டுப் பொருள் சிதைவுறுதல்.
photometry : ஒளி(மானி) அளவி : ஒளியின் ஆற்றலளவை அளத்தல்.
photomicrograph : ஒளிநுண்வரைபடம் : ஒரு நுண்ணோக்கியின் மூலம் ஒரு பொருளைப் பார்த்து எடுக்கப்படும் பெரிதாக்கப்பட்ட ஒளிப்படம்.
photophobia : ஒளியச்சம்; கண் கூச்சம்; ஒளி மருளியம் : கண்ணில் ஒளிபட்டால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை.
photoperiod : ஒளிக்கால (அளவு) : ஒவ்வொரு நாளும் ஒரு உயிரி வெளிச்சத்துக்கு ஆட்படும் கால அளவு.
photopheresis: ஒளி மருத்துவம் : தோல் நிணப்புற்றுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறையில் ஒரு ஒளி இயக்க வேதிப் பொருள் உடலுக்குள் செலுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தை வெளியிலெடுத்து, ஒரு அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சு மூலத்தின் வழி சுழன்ற பிறகு நோயாளிக்கு திரும்பச் செலுத்தப்படுதல்.
photophthalmia : ஒளிவழியழற்சி : பனிப் பார்வையிழப்பில் போல் கூர்மையான ஒளிபடுவதால் கண்ணில் ஏற்படும் அழல்வினை.
photopigment : ஒளி நிறமி : ஒளி முன்னிலையில் நிலைகுலையும் நிறமி.
photoprotection : ஒளிகாப்பு : மீ(ப்புற) ஊதாக்கதிரொளியால் ஏற்படும் சேதத்திலிருந்து உயிரணுக்களைக் காப்பாற்றுதல்.
photopsia : ஒளியுணர்வு : விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு.
photopsin : ஒளிப்புரதம் : விழித்திரைக் கூம்புகளில் உள்ள (அயோடாப்சின்) நிறமியின் புரதப் பகுதி.
photoptometer : ஒளிக்காட்சி மானி : ஒரு பொருளைக் காண்பதற்குத் தேவையான மிகக் குறைந்த வெளிச்ச அளவைக் கண்டறியும் கருவி. photoreactivation : ஒளி மீள் செயலாக்கம் : முன்பு செயலிழந்த ஒரு செய்முறையை ஒளியின் மூலம் மீண்டும் செயல்படுத்தல்.
photoreceptor : ஒளியேற்பி : விழித்திரைத்தண்டுகளும் கூம்புகளும் போன்ற ஒளியால் கூருணர்வு பெறும் ஏற்பி.
photoretinitis : ஒளிவிழித்திரையழற்சி : சூரிய ஒளி அல்லது வேறு கூரொளிக்கு மிகுதியும் ஆட்படுவதால் ஏற்படும் விழியை எரிபுண்ணால் பார்வைக் கூர்மை குறைதல்.
photoscan : ஒளித்தேடுபடம் : (சின்ட்டிஸ்கேன்) உடலிலுள்ள ஒரு உறுப்பை ரேடியோ ஐசோடோப் கொண்டு உருப்படுத்தலின் பிரதிபிம்பம்.
photosensitive : ஒளியுணர்வு; ஒளிக்கூச்சம் : ஒளிபட்டதும் தூண்டுதல் பெறும் இயல்பு; கண்ணிலுள்ள நிறமிகள் இத் தன்மையுடையவை.
photosensitivity : ஒளிக்கூரு உணர்வு : சூரிய ஒளிபடுதலால் ஏற்படும் ஒரு தோல் தடிப்பு போன்ற இயல்பற்ற விளைவு.
photosynthesis : ஒளீணைப்பாக்கம் : தாவரங்களும் சில நுண்ணுயிர்களும், சூரிய ஒளியிலிருந்து குளோரோஃபில் நிறமி பெற்ற ஆற்றலைக்கொண்டு, கரியமிலவாயுவையும் நீரையும் இணைத்து கார்போ ஹைட்ரேட்டை உருவாக்கும் செய்முறை.
phototherapy : ஒளி மருத்துவம் : செயற்கையான ஊதா ஒளி. பாய்ச்சி நோய் மருத்துவம் செய்தல், பிறந்த குழந்தைகளுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் ஏற்படும் மஞ்சட் காமாலை நோயைக் குணப் படுத்த இந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது.
phototoxic : ஒளிநச்சு : ஒளிபடுவதால் ஏற்படும் தீங்கு தரும் விளைவு உண்டாக்குவது பற்றியது.
phototropism : ஒளியசைவு : ஒரு உயிரி, ஒளியை நோக்கி அல்லது ஒளியிலிருந்து விலகிச் செல்லும் அசைவு.
phren : உதரவிதானம் : வயிற்றின் உந்து தசை.
phreniclasia : உதரவிதான தசை செயலிழப்பு : இடைத்திரை நரம்பு ஒரு பற்றுக் கருவி கொண்டு நசுக்குவதால், இடைத்திரைத் தசை செய லிழத்தல்.
phrenicotomy : உதரவிதானப் பிளப்பு : உதரவிதானத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் உதரவிதான நரம்புப் பிளவு. phrenology : தலை அமைப்பியல்; கபாலவியல் : மண்டையோட்டின் வெளியமைப்பு மூலம் பல்வேறு உறுப்புகளின் வளர்ச்சியை ஆராயும் அறிவியல்.
phrenoplegia : உதரவிதான வாதம் : உதரவிதானம் செயலிழந்து போதல்.
phrenotropic : மருந்து உளவியல் விளைவு : சிலவகை மருந்துகள் மனத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்.
phrogen : காய்ச்சல் பொருள்.
phrogenic : காய்ச்சல் உண்டாக்கக்கூடிய.
phrynoderma : உலர்தோல்நோய் : வைட்டமின் ஏ அல்லது (தவளைச் சொறி) அவசிய கொழுப்பமிலங்களின் குறையால் தோலில் மயிர் வேர் காழ்ப்பொருள் மிகைப்பு.
phthalylsulphathiazole : தாலைல் சல்ஃபாதையாசோல் : உணவுக் குழலினால் குறைந்த அளவே ஈர்த்துக் கொள்ளப்படும் ஒரு சல்ஃபோனமைடு மருந்து முன்புகுடல்நோய்களின்போது, அடிவயிற்று அறுவை மருத்துவம் மூலம் பயன்படுத்தப்பட்டது.
phthirus : ஃப்தைரஸ் : பூச்சி மயிர்கள், கண்புருவங்கள், கண் ணிைமை மயிர்களைத்தொற்றும், ஃப்தைரஸ் ப்யூபிஸ் உள்ளடங்கிய பேன் இனம்.
phthisis : ஈளை நோய்; காச நோய்; நுரையீரல் காசநோய் : நுரையீரல் காசநோயைக் குறிக்கும் ஒரு பழைய சொல்.
physiognomy : முக அமைப்பியல் : 1. முக அமைதி 2. முகபாவரும் தோற்றமும்.
physeptone : ஃபிசெப்டோன் : மெத்தாடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
physic : மருத்துவத் தொழில் : நோய் தீர்க்கும் கலை, மருத்துவம்; பண்டுவம்; மருந்து.
physician : மருத்துவர் : மருத்துவத்தில் தகுதி பெற்றவர்.
physioky : மருந்து போன்ற : மருந்தை நினைவூட்டுகிற.
physicochemical : இயற்பியல்-வேதியியல் சார்ந்த : இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான.
physiology : உடலியல்; உடலியங்கியல்; உடலியக்கவியல் : உடலின் இயல்பான இயக்கம் பற்றி ஆராயும் அறிவியல், உடலின் இயற்கையான கட்டமைப்பு, அவற்றின் வழக்கமான செயல்முறை பற்றி ஆராய்தல்.
physiopathologic : இயல்நோய்க் குறியியல் : 1. உடலியங்கியல் மற்றும் நோய்க்குறியியல் பற்றியது. 2. ஒரு இயல்பான இயக்கத்தில் நோயால் மற்றும் ஏற்படுவது பற்றியது.
physiotherapy : இயல் மருத்துவம்; உடற்பயிற்சி மருத்துவம் : உடலைப் பிடித்து விடுதல், தூயகாற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் மருத்துவம் செய்யும் முறை.
physiotherapist : இயல் மருத்துவர்; மின் மருத்துவர் : பிடித்து விடுதல் போன்ற இயற்கை முறைகளால் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்.
physique : உடரற்கட்டு; உடலமைவு : உடலமைப்பு உடலின் கட்டுக் கோப்பு.
physohaematometra : வளியக்குருதிக் கருப்பை : கர்ப்பப்பைக் குழிவறை வாயு மற்றும் குருதி வாய் நிறைந்துள்ள நிலை.
physophydrometra : வாயு நீர்ப்பை : கர்ப்பப்பைக் குழிவறை, வாயு மற்றும் சீர் நீர்மத்தால் விரிதல்.
physostigmine : ஃபைசோஸ்டிக்மைன் : கண்விழி விறைப்பு நோயில் சொட்டு மருந்தாகப் (0.5%-1%) பயன்படுத்தப்படும் மருந்து. சில சமயம் வாதநோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன் படுகிறது.
physohorax : சுவாசப்பை உறைச்சீழ் நோய் : சுவாசப்பை உறையில் உண்டாகும் சீழ்நோய்.
phytobezoar : காய்கனியிழைப்பந்து : பழத்தோல், விதைகள் காய்கனியிழைகள் ஒன்றிணைந்து ஒரு பந்து போல் இரைப்பையில் உருவாதல்.
phytohaemagglutinin : தாவர குருதித் திரள்புரதம் : தாவரங்களி லிருந்து பெறும் ஒரு ஃபைட் டோமைட்டோஜென், சிவப்பணுக்களை ஒட்டித்திரள வைக்கிறது.
phytol : ஃபைட்டால் : குளோரோஃபில்லில் இருந்து பெறப்படும் நிறை செறிவூட்டப் பெறாத அவிஃபேட்டிக் ஆல்கஹால் வைட்டமின்-ஈ மற்றும் கேயை இணைப்புருவாக்கப் பயன்படுகிறது.
phytomenadione : ஃபைட்டோமினாடியோன் : வைட்டமின் 'கே' என்னும் ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைக்கு இரத்தக் கசிவு ஏற்படும் போதும் வைட்டமின்-'கே' பற்றாக்குறையின்போதும் கொடுக்கப்றபடுகிறது.
pia, pia mater : மூளை நாளப்படலம்; மூளை உள்ளுறை; மென்னுறை : மூளை வெளியுறைகளில் மிகவும் உள்ளார்ந்திருக்கிற செல்குழாய் நாளப்படலம். இது மூளையிலும், முதுகந்தண்டிலும் அடங்கியுள்ள பொருளுடன் நெருங்கிய தொடர்புடையது.
pica : மசக்கை; இயல்பிலா உணவு வேட்கை; கண்டது உண்ணல் : கருவுற்றிருக்கும்போது சாம்பல் போன்ற அசாதாரணப் பொருள்களை உண்ண வேண்டுமென உண்டாகும் வேட்கை.
Pick's disease : பிக் வியாதி : நெற்றி மடலையும் பொட்டு மடலையும் பாதிக்கும், முன் முதுமை மனக்குழப்பம். செக் கோஸ்லோவேக்கிய மருத்துவர் அர்னால்டுபிக் பெயரைப் பெற்ற இந்நோயில் ஆளுமை மாற்றம் காணப்படுகிறது.
picolax : பிக்கோலாக்ஸ் : சோடியம் பிக்கோசல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
picornovirus : பிக்கார்னோருச்சுயிர் : மிகவும் சிறிய உறையிடம் கொண்ட நச்சுயிர்.
picric acid : பிக்ரிக் அமிலம் : தீப்புண், கரப்பான், அரிப்புப் புண்களுக்கு தடவப் பயன்படும் ட்ரைநைட்ரோஃபீனால்.
picrotoxin : பிக்ரோ நச்சு : பாப்பிட்யுரேட் நஞ்சு நிலையில் மைய நரம்பு மற்றும் மூச்சியக்கத் தூண்டியாக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கசப்புப் பொருள், அனாமிர்ட்டா காக்குலஸின் விதையிலிருந்து பெறப்பட்டது.
piedra : மயிர்பூஞ்சன நோய் : தாடி, மீசையின் பூஞ்சக் காளான் நோயில் பூஞ்சை உறை போன்ற சிறு கழலைத் திரள்களை உருவாக்குகிறது.
piesthesia : அழுத்துணர்வு : அழுத்தத் தூண்டல்களை அறிந்து கொள்ளும் உணர்வு.
piesimeter : அழுத்தமானி : அழுத்தத்தை தோலுணரும் கூருணர்வை அளக்கும் கருவி.
piezoelectric crystals : அழுத்த மின்படிகங்கள் : படிகங்கள் உருவிழக்கும்போது விளைவிக்கும் மின்னேற்றப் பகுதிப் பிரிப்பு.
pigeon chest (pigeon-breast) : குறுகல் மார்பு; கூட்டு மார்பு; புறா மார்பு : உருவத்திரிபாகக் குறுகலாக அமைந்த மார்பு, இதில் மார்பக எலும்புப் பகுதி முன்புறம் துருத்திக்கொண்டிருக்கும்.
pigeon fancier's lung : புறா நேசிகளின் நுரையீரல் : புறாவைச் சீரப்புரதங் மனிதர்களில் புறாக் கழிவுகளின் ஏற்படும் கூருணர்வால் விளையும் ஒவ்வாமைக் காற்று நுண்ணுறை அழற்சி.
pigment : நிறமி; தோல் நிறமி; வண்ணம் : உடலின் இயற்கை வண்ணப் பொருள், சாயப் பொருள்.
pigmentary epithelium : நிறமி அடர் புறப்படலம்.
pigmentary layer : நிறமி அடுக்கு.
pigmentation : நிறமி அடுக்குப் படிவு; கரைப் படிப்பு : நிறமி அளவுக்குமீறி அடுக்கடுக்காகப் படிதல்.
pigments bile : பித்தநீர் நிறமிகள்.
pill : மாத்திரை; குளிகை : விழுங்கக்கூடிய வகையில் அமைந்த திடமருந்து மாத்திரை.
piler : மூலநோய்.
pil-roiling : விரலுருட்டல் : பார்க்கின்சன் நோயில் பெருவிரல் மற்றும் கட்டுவிரல் நுனியும் சேர்ந்து உருளும் அசைவு.
pillule : சிறுகுளிகை : சிறிய மாத்திரை.
pillocarpine : பைலோகார்ப்பைன் : கண்நீர் அழுத்த நோயில் கண் மணிச் சுருக்க மருந்தாகப் பயன்படும் கோலினெர்ஜிக் ஆல்கலாயிடு (காரகம்) பைலோகார்ப்பஸ் இலையிலிருந்து பெறப்படுகிறது.
pilomotor nerves : சிலிர்ப்பு நரம்புகள் : மயிர் மூட்டுப்பையுடன் இணைந்த நுண்ணிய நரம்புகள், இவை மயிரை விறைப்பாக நிற்கச் செய்து தோல் சிலிர்ப்புத் தோற்றத்தை உண்டாக்குகிறது.
pimafucin : பிமாஃபூசின் : நாட்டாமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
pilonidal : முளையில் முடி : புறத்தோல் நீர்க்கட்டியில் அல்லது ஒரு தோலின் ஆழ அடுக்கில் மயிர் வளர்வதைக் குறிப்பது.
pilosebaceous : மயிர்ச்சீபு : சீபச்சுரப்பிகள் மற்றும் மயிர் வேர்க்கால்கள் பற்றியது.
pilus : பைலஸ் : 1. ஒரு மயிர். 2. சில நுண்ணுயிர்களில் நுண்னிய இழை போன்ற துணையுறுப்புகளில் ஒன்று.
pimelitis : முகவழற்சி : 1. கொழுப் புத்திசுவழற்சி. 2. விழிவெண் படலத்திசுவழற்சி.
pimple : முகப்பரு; குரு; பரு : முகத்தில் உண்டாகும் பரு.
pin and plate : ஊசியும் தட்டும் : தொடையெலும்புக் கழுத்து முறிவை சரிசெய்ய, கழுத்தில் ஊசியையும், தண்டில் தட்டுப் பகுதியையும் திருகிக்பொருத்தும் உள்நிலைப்படுத்தும் கருவி.
pincer nail : குறட்டு நகம் : நகப்படுகை குறுக்கு வளைவு அதிகமானதால், மிகுந்த வலியோடு, விரல்நுனி மென்திக இழப்பும் நேர்கிறது.
pinch : நெரிப்பு : 1. பெருவிரல், சுட்டு விரல்களுக்கிடையே, பற்கள் மற்றும் கருவியின் அலகுகள் இவற்றிடையே பொருள்களைப் பற்றும் முறை. 2. அழுத்துதல், கருக்குதல் அல்லது கசக்குதல். pineal : நடுமுளை : 1. ஊசியிலைக் கூம்பு போன்ற வடிவ முடைய. 2. பைனியல் சுரப்பி தொடர்பான 3 ஆளானவர்களில் மண்டை எக்ஸ்ரே படத்தில் கால்சியமாதல் குறிப்பால் காட்டும் மூளை இட விலகல்கள்.
pineal body (pineal gland) : நடுமூளைச்சுரப்பி : மூளையின் நடுவில் மூன்றாவது குழிவின் பின் கூம்பு வடிவான சிறிய செம்பழுப்பு நிறச் சுரப்பி. இதன் செயல் என்ன என்பது இன்னும் அறியப்படவில்லை.
pinealoblastoma : பைனியலோ பிளாஸ்டோமா : பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் நபர்களில் உண்டாகும் பைனியல் சுரப்பிக் கொடும்புற்று.
pinealocyte : பைனியலணு : ஒரு வெளுப்பு நிற அணுக்கூழ்மம் கொண்ட இயக்குநீர்களை உருவாக்கும் பைனியல் சுரப்பியின் முக்கிய உயிரணு.
pinealoma : பைனியல்கட்டி : ஒரு உறையிடப் பெற்ற பைனியல் சுரப்பிக் கட்டியால் வயதுக்கு வருமுன் பருவமடைதல்.
ping-ponging : பின்ங்-பாங் பந்து : இரண்டு நபர்களுக்குள் குறிப்பாக பாலுறவால் பரவும் டிரைக்கோமோனாஸ் வெஜைனாலிஸ் தொற்றுநோய் பரவுதல். முதல் நபர் குணடைந்தாலும் இரண்டாவது நபர் மூலம் மீள் தொற்றுப் பெறுவது பிங்பாங் பந்துடன் ஒப்பிடப்படுகிறது.
pinguicula : பின்கிக்குலா : விழி வெண்படலத்துக்கடியில் கருவிழி ஒரத்துக்கருகே, கொல்லாஜன் அழிவால் ஏற்படும் மஞ்சள் நிறத்தடித்த பரப்பு.
pink-eye : செங்கண் நோய் : மிக விரைவாகப் பரவும் செந்நிறக் கண் கோளாறு. குழந்தை நெருங்கிப் பழகும் உணவு வசதிகளுடைய பள்ளிகள், நீண்ட காலம் தங்கி மருத்துவம் பெறும் மருத்துவமனைகளில் முகத்துணிகளைப் புழங்குவதால் இது உண்டாகிறது.
pinna : காதுமடல்; வெளிக்காது; செவிமடல் : புறச் செவியின் அகன்ற மேற்பகுதி.
pinocytosis : பினோசைட்டோசிஸ் : உயிரணுக்கள் நீர்மத்தை உள்ளெடுத்து சிறுநீர்க் கொப்புளங்களை உருவாக்கும் முறை.
pinpoint : ஊசிமுனை : 1. ஒரு ஊசியின் முனை. 2. அந்த அளவுக்கு கண்ணின் பாவை மிகவும் சுருங்குதல்.
pinta : பின்ட்டா : டிரெப்பொனிமா கெரட்டியம் எனும் சுருள் உயிரியால் உண்டாகும் பால்வினையாலல்லாத நோய். நேரடி சீதச் சவ்வுத் தோலுக்குள் புகுவதால் பரவுகிறது.
pioepithelium : கொழுப்புறத் தோலியம் : கொழுப்புக் குறு கோளங்கள் கொண்ட புறத் தோலியம்.
pipe : குழல் : தண்ணிர், வாயு அல்லது ஆவியை கொண்டு செல்லப் பயன்படும் உலோகம், மரம் அல்லது பிற பொருளாலான ஒரு வெற்று உள்ளிட உருளை.
piperacillin sodium : பிப்பராசிலின் சோடியம் : பல்வேறு வகையில் செயற்படக்கூடிய ஒர் உயிர் எதிர்ப்பொருள். நச்சுத் தன்மை குறைந்தது. பாக்டீரியா இதனை எதிர்ப்பது குறைவு.
piperazine citrate : பிப்பராசின் சைட்ரேட் : குழந்தைகளின் மலக் குடலில் உள்ள நூலிழை போன்ற கீரைக்பூச்சி என்ற புழு, உருண்டைப்புழு ஆகிய வற்றுக்கு எதிராகக் கொடுக்கப்படும் வீரியம் மிக்க குடற்புழு அகற்றும் மருந்து.
pipette : நீர்ம அளவுக்கருவி : ஒரு கலத்திலிருந்தும் மற்றொரு கலத்திற்கு, நீர்மங்களை அளந்து மாற்றியூற்றப் பயன்படும் இரு புறமும் திறந்த ஒரு ஒடுக்கமான அளவிடப்பட்ட கண்ணாடிக்குழாய்.
pipri : பிப்ரில் : பிப்பராசிலின் சோடியம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
pirenzepine : பைரன்செப்பின் : வயிற்றில் சீழ்ப்புண்ணைக் (அல்சர்) குணப்படுத்தும் உயிரணுக்களை உற்பத்தி செய்து அமில உற்பத்தியைக் குறைக்கக்கூடிய ஒரு மருந்து.
piriton : பிரிட்டோன் : குளோர் ஃபெனிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
piroxicam : பைரோக்சிக்காம் : வீக்கத்தைத் தணிக்கக்கூடிய ஒரு மருந்து.
Pirquet's test : பிர்குவெட் சோதனை : ஆஸ்திரிய குழந்தை மருத்துவர் செமென்ஸ் பிர்குவெட் பெயராலமைந்த, ஒரு ட்யூபெர்குலின் தோல் சோதனை.
pitch : தார்; கருவண்டல் : 1. ஒரு அணிவகுப்பில் வைத்தல் அல்லது நிலைநிறுத்தல், 2. அலைகள் உண்டாக்கும் அதிர்வுகளின் அலைவெண் பொறுத்து அமையும் ஒலியின்தரம், 3. நிலக்கரி வடித் திறக்கிய பின் உள்ள எச்சம்.
pitressin : பிட்ரெசின் : வாசோப் பிரெசின் என்ற அமினோபுரத மருந்து.
pit : அம்மைத்தழும்பு : அம்மை நோயினால் உடலில் உண்டாகும் தழும்புக்குழி, உடம்பின் உட்பொள்ளல். குழித்தழும்பு.
pitting : குழியமைத்தல் : 1. தழும்பு காரணமாக வழக்க மாக உண்டாகும் ஒரு சிறுபள்ளம் 2 சிடைரின் துகள்கள் அல்லது ஹோவெல்-ஜாலி மெய்மங்கள் போன்ற அணுக்கூழ்ம் உள் சேர்க்கைகளை வெளியேற்றும் மண்ணிரலின் செயல். 3. நீர் வீக்கத்தின் மேல் விரலை பலமாக அழுத்தியெடுத்தபின் சிறிது நேரம் தொடர்ந்து பள்ளமாயிருத்தல்.
pituitary gland (pituitary body) : கபச்சுரப்பி; குருக்கழலை; அடி மூளைச் சுரப்பி : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தும்பற்ற முளையடிச் சுரப்பி.
pityriasis : கரணைப் பொக்குளம்; தோல் கொப்புளம்; பொடுகு உதிர்வு : தோலில் ஏற்படும் கரணைச் சொறிப் பொக்குளம், சிதல் சிதலாக உரியும் தோல் நோய்.
pityrosporum : பிட்டிரோஸ்போரம் : நொதியின் (ஈஸ்ட்) ஓர் இனம்.
placenta : நச்சுக்கொடி; கருக்கொடி; பனிக்குடம் : கருவுற்ற மூன்று மாதங்களில் கருப்பையின் உட்சுவருடன் இணைந்தவாறு ஒரு செல்குழாய் போன்ற கட்டமைப்பு உருவாகிறது. இதன் வழியாகக் கருப்பைக் குழந்தைக்கு ஊட்டச்சத்தும், ஆக்சிஜனும் செல்கிறது. இதன் வழியாகவே கருக்குழந்தை கழிவுப் பொருள்களை வெளி
யேற்றுகிறது. இயல்பான மகப்பேற்றின்போது குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் இது வெளியேறிவிடும். அவ்வாறு வெளியேறாத நச்சுக்கொடி,'ஒட்டு நச்சுக்கொடி' எனப்படும். இது பொதுவாக, கருப்பையின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டு இருக்கும். இதனால் நச்சுக்கொடி முறிவு (அற்று விழுதல்) ஏற்படும்.
placentation : நச்சுக்கொடியமைவு; நச்சுக் கொடியிடல் : நச்சுக்கொடி உருவாகி இணைத்துக்கொள்ளும் நிகழ்முறை.
placebo : மருந்துப் போலி : 1. நோயாளியை திருப்திப் படுத்துவதற்காக எந்த மருந்து விளைவுமில்லாத, ஆனால் நோயாளி மருந்தென நம்பும் பொருளைக் கொடுத்தல். 2. உயிர்களில் செயல் விளை விக்கும் பொருளொன்றின் மருத்துவத்திறனறிய சோதனை செய்வதற்காக, எந்த மருந்து விளைவுமில்லாத பொருள் ஒன்றைப் பரிசோதனைக் கட்டுப்பாடாகக் கொடுத்தல்.
placental abruption : நச்சுக்கொடி முறிவு : மகப்பேற்று வலி எடுப்பதற்கு முன்பும், 28 வாரங்களுக்குப் பின்பும் யோனிக்குழாயில் இரத்தக்கசிவு ஏற்படுதல்.
placenta acreta : வேரூன்றிய நஞ்சு : ஒட்டி இறுகிய நஞ்சு.
placentapreavia : முன்னிருக்கும் நஞ்சு; நச்சுக்கொடி முந்துநிலை.
placental insufficiency : நச்சுக்கொடிக் குறைபாடு; நஞ்சு திறக்குறை : நச்சுக்காடி போதிய அளவில் இல்லாதிருத்தல். இது தாய்க்குள்ள நோய் அல்லது மாதங்கடந்து கருமுதிர்வடைதல் காரணமாக உண்டாகலாம். இதனால்,குழந்தை குறை மாதத்தில் பிறக்கக்கூடும்.
placentog raphy : நச்சுக்கொடி ஊடுகதிர்ச் சோதனை : ஒளி ஊடுருவாத பொருளை ஊசி மூலம் செலுத்தி நச்சுக்கொடியை ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம் பரிசோதனை செய்தல்.
plagiocephaly : பிளேஜியோ கெஃபாலி; கோணமண்டை : ஒரு பக்கம் முன்பக்கப்புடைப்பும் மறுபக்கம் பின்புடைப்பும் கொண்ட கோணல் மண்டை
plague : கொள்ளை நோய்; பிளேகு : நோயுற்ற எலிகள் மூலம் விரைவாகப் பரவும் மிகக் கொடிய கொள்ளை நோய். எலிகளிடமிருந்து தெள்ளுப் பூச்சி (உண்ணிகள்) மூலம். இது மனிதனுக்குப் பரவுகிறது.
plague-spot : பிளேகு மையம் : பிளேகு என்னும் கொள்ளை நோயினால் வீக்கம் உண்டாகும் இடம். planchet : பிளான்ச்செட் : கதிரியக்கப் பொருளைவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறு தட்டைக் கொள்கலம்.
planimeter : தளஅளவி : ஒரு தள உருவப்பரப்பை அளக்க அதனைச் சுற்றிலும் ஒரு டிரேசரை செலுத்தும் பொறியமைப்பு (தடங்காண்பி).
planing : தளமமைப்பு : 1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை.
planned parenthood : திட்டமிட்ட குழந்தைப்பேறு : தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையையும் குழந்தைப் பேற்றிடை வெளியையும் ஒழுங்குபடுத்த பெற்றோர் கைக்கொள்ளும் முறைகள்.
planoconcave : தளக்குழிய : ஒரு பக்கம் மட்டத்தளமாகவும் மறுபக்கம் குழிவாயுமுள்ள ஒரு ஒளிவில்லை பற்றியது.
planoconvex : தளக்குவிவு : ஒரு பக்கம் தட்டையாகவும் ஒரு புறம் மேற்குவிவும் ஆன கண்ணாடிவில்லை பற்றியது.
planorbis : சிலவகை இரத்த ஒட்டுண்ணிப்புழு இனங்களுக்குகிடை ஒம்புநர்களாகச் செயல்படும் புதுநீர் நத்தைகளில் ஒருவகை.
plant : தாவரம் : கார்பன்டை ஆக்ஸைடும் தண்ணிரும் சேரும் போது கார்போஹைட்ரேட் களையும் ஆக்ஸிஜனையும் உருவாக்கும் குளோரோஃபில் கொண்ட ஒரு உயிர்ப்பொருள்.
plantar : உள்ளங்கால் சார்ந்த; அங்கால்; பாத : உள்ளங்காலுக் குரிய.
plantation : இடத்தில் பொருத்தல் : எலும்பு(ப்பற்) குழிக்குள் ஒரு பல்லைச் செருகுதல் அல்லது பொருத்துதல்.
plantigrade : தாள்; காலடி.
plaquenil : பிளாகுவினில் : ஹைட்ராக்சிகுளோரோக்குவின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
plasmodia : ஒட்டுயிர் நுண்மம் : மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்.
plasm : உயிரியற் பொருள் : உயிர்மத்தின் ஊன்மம்.
plasma : குருதிநீர் ஊனீர் நிணநீர் : குருதி, குருதிநீர் ஆகியவற்றின் திரவப்பகுதி. கருமையான தீப்புண்களில் நோயாளிக்குக் குருதிச் செறிவு ஏற்படும்போது இரத்தம் செலுத்தப் பயன் படுத்தப்படுகிறது. உலர்ந்த குருதிநீர் மஞ்சள் நிறத்தூளாக இருக்கும். இதனைத் திரவமாக்கி உட்செலுத்தலாம். டெக்ஸ்டிரான் பிளாஸ்மோவின் போன்ற பல்வேறு குருதிநீர் மாற்றுகள் உள்ளன.
plasmablast : ஒருவகை பிரியாத உயிரணு முதிர்ச்சியடைந்து குருதி நீரணுவாக மாறுதல்.
plasmacyte : ஊநீரணு (குருதி) நீரணு : எலும்பு மச்சையிலும் இணைப்புத்திசுவிலும் காணப்படும் எதிர்மியங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்த குருதி நீரணு.
plasmacytoma : ஊநீரணுப்புற்று : குருதி நீரணுக்களாலான ஒரு புற்றுக்கட்டி.
plasmacytosis : குருதிநீரணுப் பெருக்கம் : குருதியில் குருதி நீரணுக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருத்தல்.
plasmagel : கனிய இழுமம் : ஒரு அமீபாவிலுள்ள கூழ்மம் போன்ற உட்பொருளுடைய அகக்குழ்மத்தின் வெளிப்புறப் பகுதி.
plasmapheresis : குருதிநீர்ச்சீர்மம் (பிளாஸ்மானயனம்) : இரத்தம் உடலிலிருந்து எடுக்கப்பட்டு அதன் பகுதி பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு நச்சுப் பொருட்கள் வளர்சிதையப் பொருட்களும் எதிர்மியங்களும் நீக்கப்பட்ட பிறகு மீதம் உள்ள பகுதி உடலுக்குள் திரும்பச் செலுத்தப்படும் செய்முறை.
plasma proteins : குருதிநீர்ப் புரதங்கள்.
plasmatherapy : குருதிநீர் மருத்துவம் : குருதியிழப்பால் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் குருதி ஊநீர் பயன்படுத்தி மருத்துவம் அளித்தல்.
plasmatogamy : கணிகக் கலப்பு : உட்கருக்கள் இணையாமல் இரண்டு அல்லது மூன்று உயிரணுக்களின் அணுக்கூழ்மங்கள் ஒன்றியிணைதல்.
plasma volume extender : குருதிநீர் பெருக்க நீர்மங்கள் : உடல் நலத்தாக்கத்துக்கான ஊசியின் மூலம் செலுத்தப்படும் டெக்ஸ்ட்ரான் போன்ற மூலக்கூறெடை மிகு கரைசல்கள்.
plasmic (plasmatic) : ஊனீர் சார்ந்த : ஊன்மம் சார்ந்த.
plasmid : பிளாஸ்மிடு : தாளாத இரட்டிக்கும் அணுக்கூழ்மத்திலுள்ள பண்புக்கீற்றில்லாத வட்ட டி.என்.ஏ. மூலக்கூறு. குளோனிங்கில் நுண்ணுயிர் ஏந்திகளாக அது பயன்படுத்தப்படுகிறது. நோயுயிரெதிர்ப் பொருள் எதிர்ப்புக் காரணிகளின் குறியீடாக நுண்ணுயிர்களில் அவை காணப்படுகின்றன. plasmin : பிளாஸ்மின் : ஒரு ஃபைப்ரினோலிசின்.
plasminogen : பிளாஸ்மினோஜன் : பிளாஸ்மினின் முன்னோடி, சேதமடைந்த திசுவிலிருந்து வினையூக்கிகள் வெளிப்பட்டு, பிளாஸ்மினோ ஜனைப் பிளாஸ்மினாக மாற்ற ஊக்குவிக்கிறது.
plasmocyte : பிளாஸ்மோசைட் : எலும்புமச்சை, இணைப்புத்திசு மற்றும் சில சமயம் குருதி நீரில் காணப்படும் இயல்பு மாறிய வெள்ளணு ஊநீரணு மச்சைப் புற்றில் பெருமளவில் காணப்படுவதாகும்.
plasmodium: ஒட்டுயிர் நுண்மம் : வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்திலுள்ள ஓரணு உயிர் ஒட்டுண்ணிகளில் ஒருவகை. இவை ஒட்டுத்தோடுடைய இணைப்புடலிகளின் இரத்தத்தை உறிஞ்சி தங்கள் பாலினச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன. இவற்றின் நான்கு இனங்கள் மனிதரிடம் முறைக் காய்ச்சல் (மலேரியா) நோயை உண்டாக்குகின்றன.
plasmolysis : ஊன்ம உலர்வு; ஊன்ம நசிவு; அழிவு : நீரிழப்பால் உண்டாகும் ஊன்மச் சுருக்கம்.
plasmoptysis : ஊன்மப்பிதுக்கம் : உயிரணுவுக்குள் மிகுந்த ஊடு பரவழுத்தம் காரணமாக உயிரணுச் சுவர்கிழிந்து, ஊன்மம் வெடித்து வெளிவருதல்.
plastein : பிளாஸ்டைன் : தொடர்ந்து புரதங்களின் செரிப்பைப் புரதமழி நொதிகள் உண்டாக்கும் பாலிபெப்டைடுகள்.
plaster : சாந்துப்பொருள் : 1. சூடுபடுத்த்ப்படும்போது தடவப் பயன்படுத்தும் திடப்பொருள், உடல் வெப்பத்தில் ஒட்டிக்கொள்ளக் கூடியதாகிறது. 2. உடலில் விளைவுகளை ஏற்படுத்துவதற்காக உடல்பரப்பில் மருந்துகளை தடவுவதற்காக பயன்படுத்தப்படும் தடவு பொருள்.
plastering : மருத்தவக்கட்டிடுதல் : மருத்துவக்கட்டுக் கட்டி மருத் துவம் செய்தல்.
plaster of paris : களிக்கல் தூள் : வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள்.
plastic : பிளாஸ்டிக் (வார்ப்பியம்; குழைமம் : 1. நெகிழ்வுடைய, வார்க்கப்படும் சக்திபடைத்த 2. ஒரு குழிவறை அல்லது வார்ப்பு உருவமைக்க உதவும் ஒரு செயற்கை சேர்மப்பொருள்.
plastic surgery : ஒட்டுறுப்பு அறுவை; ஒட்டறுவை மருத்துவம் : உடலில் சேதமடைந்த பகுதியைச் சீர்படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம்.
platelets : தகட்டணுக்கள்; குருதிவட்டுகள்; தட்டயம்கள்.
plastid : பிளாஸ்டைடு : தாவர அணுக்களில் காணப்படும் உயிரணுக்கூழ்ம உறுப்பகங்கள்.
plate : தட்டு : 1. ஒரு எலும்பின் மெல்லிய தட்டையான பகுதி. 2. நுண்ணுயிர்களின் வளர்மத்திற்குப் பயன்படும் ஒரு ஆழமற்ற மூடிகொண்ட தட்டு. 3. ஒருவளர்மத் தட்டில் நுண்ணுயிர்களை ஊசி மூலம் செலுத்துதல்.
plateletpheresis : தட்டணுச்சீர்மம் : ஒரு கொடையாளரின் குருதியில் இருந்து தட்டணுக்களை வெளியெடுத்துவிட்டு மீதமுள்ள இரத்தத்தை உடலுக்குள் திரும்பச் செலுத்தும் செய்முறை.
plating : வளர்சுளம் : ஒரு வளர்ம ஊடகத்துக்குள், நுண்ணுயிர் களை ஊசிமூலம் செலுத்துதல்.
platinic : பிளாட்டினிக் : நான்கு இணைதிறன் கொண்ட பிளாட்டினத்தை உள்ளடக்கிய கூட்டுப்பொருள்.
platinosis : பிளாட்டினோசிஸ் : பிளாட்டின உப்புக்களின் தொடர் பால் தோலிலும் மூச்சுப்பாதையிலும் ஏற்படும் ஒவ்வாமை மறிவினை.
platinous : பிாாட்டினஸ் : இரண்டு இணைதிறன் கொண்ட பிளாட் டினம் உள்ள ஒரு கூட்டுப்பொருள்.
platinum : பிளாட்டினம் : எளிதில் அரிக்கப்பட முடியாத ஒருகன மான வெள்ளி போன்ற வெண் உலோகம். அதன் குறியீடு Pt எனப்படும்.
platonic : ஆன்ம ஈர்ப்புடைய : பாலுறவுத் தொடர்பு இல்லாத இருவருக்குள் உள்ள நெருக்கமான தொடர்பு.
platybasia : தட்டைத்தளம் : மண்டையோட்டின் அடிப்பக்கம், கழுத்து முள்ளெலும்பின் மேல் அழுந்திப் பொருந்தியிருக்கும் உடற்கூடு.
platycoelous : தட்டைக்கோயலோஸ் : முதுகெலும்புடைய விலங்கினங்களில் போன்று வயிற்றுப்புறம் குழிந்தும், முதுகுப்புறம் குவிந்துமிருத்தல்.
platycephalous : தட்டைக்கபால் : 70-க்கும் குறைவான, செங்குத்துக் குறியீடு கொண்டு அகல மண்டையோடு.
platyhelminth : குடற்புழு : குடலிலுள்ள தட்டையான புழு.
platyhelminthes : தட்டைக்குடற் புழுக்கள் : ஒட்டுண்ணிப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் உள்ளிட்ட தட்டைப் புழுக்களினம். play therapist : விளையாட்டு மருத்துவ வல்லுநர் : குழந்தை களுக்கு விளையாட்டு மூலம் நோய் மருத்துவம் செய்யும் வல்லுநர்.
pledget : மருந்துப்பட்டைத்துணி : 1. நீரை உறிஞ்சிக் காப்பாற்ற பயன்படுத்தப்படும் உறிஞ்சு பருத்தி அல்லது வலைத்துணியான ஒரு சிறு அழுத்திக்கட்டு துணி, 2. மருந்துப் பொருட்களை தோலில் ஒரு பற்றுக் குறடால் பிடிக்கும் ஒரு சிறு பஞ்சுருண்டை.
plegophonia : பிளிகோபோனியா : குரல்வளை தட்டிப்பார்க்கும் போது கேட்கும் ஒரு கேட்பொலி.
pleiotropy : பிளியோட்ராஃபி : உறுப்புத் தொகுதிகள் அல்லது இயக்கங்கள் அல்லது மரபு முத்திரை போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போன்ற இயல்பு நிலைகளில் ஒரு மரபணுவால் ஏற்படும் வெவ்வேறு விளைவுகள்.
pleochroic : பிளியோகிரோய்க் : பல்வேறு கோணங்களில் பார்க்கும்போது பல்வேறு நிறங்களைக் காண்பிக்கும் படிகங்களின் தன்மையைக் குறிக்கும்.
pleomorphism : பல்வேறு வடிவ நிலை : 1. ஒரு வாழ்வுச்சுழற்சியில், ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் தோன்றுதல். 2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்கள் உருவாகும் தன்மை.
pleoptics : பிலியோப்டிக்ஸ் : மங்கு பார்வையுள்ள கண்ணுக்குப் பயிற்சி கொடுத்து தூண்டும், கண் பயிற்சிகள்.
plerocercoid : பிலிரோசெர்காய்டு : மீனில் காணப்படும் டைஃபில்லோ போத்ரியம் லேட்டம் எனப்படும் நாடாப் புழுவின் முட்டடைப் புழு நிலை, மனிதர்களால் உண்ணப்படும் முழுவளர்ச்சியடைந்த புழுவாகிறது.
plessesthesia : பிலிஸ்செஸ்தீசியா : உடல்பரப்பின்மேல் இடதுகை நடுவிரலை வைத்து வலதுகை நடுவிரலை வைத்து அழுத்தித் தட்டுதல்.
plethora : குருதிமிகை; நிரம்பு நிலை : குருதி மிகையாக இருத்தல்; மிகு நிறைவு செவ்வணு மிகை.
plethysmograph : குருதி அளவைக்கருவி; குருதிப் பாய்ச்சல் பரும வரைவி; வளி அழுத்த மானி : ஒர் உறுப்பில் பாயும் குருதியைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு கருவி.
pleura : மார்புவரி; நுரையீரல் உறை; ஈரல்உறை : உள்ளுறுப்பு களைக் கவிந்து போர்த்திய பால் குடி உயிர்களின் உள்வரிச் சவ்வுகள் இரண்டில் ஒன்று.
pleural effusion : நுரையீரல் உறை; நீர்க் கோப்பு.
pieural tumour : நுரையீரலுரைக்கட்டி.
pleurisy pleuritis : நுரையீரல் சவ்வழற்சி : மார்பு உள்வரிச்சவ்வில் ஏற்படும் வீக்கம். நுரையீரல் உறை சீழ் நோயுடன் இது தொடர்புடையது.
pleurocoele : நுரையீரலுரை வீக்கம் : 1. நுரையீரல் மற்றும் நுரையீரலுறைப் பிதுக்கம். 2. நுரையீரலுறைக் குழிவறைக்குள் சீர நீர்கோர்த்தல்.
pleurodesis : உள்ளுறுப்புப் பிணைப்பு : மண்டைப் பக்க எலும்பு உள்வரிச் சவ்வுடன் உட்கிடப்புறுப்புகள் ஒட்டிக் கொண்டிருத்தல் அயோடினாக்கிய வெளிமக்கன்மகியைப் பயன்படுத்தி இவ்வாறு ஒட்டிக் கொண்டு இருக்குமாறு செய்யலாம்.
pleurodynia : தசைவாத வீக்கம்; விலா எலும்பு வலி : கீல்வாதம் தொடர்பான தசைநாரின் வீக்கம்; மார்புத் தசை வாதத்தால் ஏற்படும் வலி நோய்.
pleurophepatitis : நுரையீரலுரை கல்லீரலழற்சி : நுரையீரலுறையும் கல்லீரலும் அழற்சியுறுதல்.
pleurolysis : நுரையீரல் சுவர்ப் படலப் பிரிப்பு : மார்புக்கூட்டு உள்படலத்திலிருந்து நுரையீரலுறையின் கவர்ப்படலத்தைப் பிரித்தெடுத்தல்.
pleuroparietopexy : நுரையீரல் சுவர்ப்படல ஒட்டு : துரையீரலு றையின் உள்ளுறுப்புப் படலத்தையும் சுவர்ப்படலத்தையும் ஒட்டுவதின் மூலம், நுரையீரலை மார்புக் கூட்டுச் சுவருடன் நிலைநிறுத்துதல்.
pleuropericardial : நுரையீரலுறை சார்ந்த : நுரையீரலுறை மற்றும் இதயச் சுற்றுரை பற்றியது.
pleuropneumolysis : நுரையீரல் சுருங்கல் : ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது அதிக விலா எலும்புகளை வெட்டியெடுப்பதன் மூலம் நுரையீரல் சுருங்குதல்.
pleuropneumonia : குலைக் காய்ச்சல் : மார்பு உள்வரிச் சவ் வழற்சியுடன் கூடிய குலைக் காய்ச்சல் நோய்.
pleuropulmonary : மார்பு வரி நுரையீரல் சார்ந்த : மார்பு உள்வரிச் சவ்வு, நுரையீரல் இரண்டையும சார்ந்த.
pleuroscopy : நுரையீரல் உறையறை நோக்கியல் : நுரையீரலுறை நோக்கி ஒரு நுரையீரலுறை நோக்கி கொண்டு அல்லது ஒரு வளையக்கூடிய இழை ஒளி மூச்சுப் பிரிகுழல்நோக்கி கொண்டு துரையீரலுறைப் பரப்பைப் பார்த்தறிதல். pleurothotonus : பக்கவளைப்பு : உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு.
pleximeter : தட்டுக்கொட்டுமானி : ஒருஊடுதட்டுதலில் தட்டு சுத்தி அல்லது விரலால் தட்டுவதை உணர்வதற்காக உடற்பரப்பின் மேல்வைக்கப்படும் விரல் அல்லது கருவி.
plexopathy : பின்னல் கோளாறு : கைகளுக்கான அல்லது புடைத் திரிக நரம்புப் பின்னலை காயம் அல்லது கதிரியக்க மருத்துவம் அல்லது கொடும்புற்றுத்தாக்கத்தால் பாதிக்கப்படும் கோளாறு.
plexor : தட்டுக் கொட்டல் : நோயறிதலில் தட்டியறியும் போது தட்டுக்கொட்டு மானியாகப் பயன்படுத்தப்படும் விரல் அல்லது சுத்தி.
plexus : பின்னலமைவு; பின்னல் வலை : நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு.
plica : தோல் மடிப்பு: மடிப்பு :' சவ்வின் மடிப்பு.
plica polonica : தலைமுடிச்சடைப் பிடிப்பு : நோய் காரணமாக ஏற் படும் தலை மயிரின் சடைப்பிடிப்பு.
plicotomy : மடிப்பறுவை : செவிப்பறையின்பின் மடிப்பை பிளந்து அறுவை மருத்துவம் செய்தல்.
plinth : பீடம் : உடற்பயிற்சி செய்யும் பொழுது நோயாளி உட்கார அல்லது படுக்கப் பயன்படுத்தும் மேசை அல்லது இருக்கை அல்லது சாதனம்.
ploidy : மடியமுடைமை : ஒரு உயிரணுவிலுள்ள (இலங்கைத்) தொகுதிகளின் இனக்கீற்று எண்ணிக்கை ஒரு மடியம், இரு மடியம், மும்மடியம் என ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று இனக்கீற்று இணைகள் அழைக்கப்படுகின்றன.
plombage : ப்ளாம்பேஜ் : ஒரு நோயுற்ற துரையீரலை சுருங்கச் செய்வதற்காக மார்புக் கூட்டுச் சுவரிலிருந்து நுரையீரலுறையின் சுவர்ப்படலத்தை உரித்தெடுத்து அந்த இடத்தை சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளைக்கொண்டு நிரப்பும் முறை.
plugger : அடைப்பான் : பற்குழிக்குள் ஒரு தங்கத்தகட்டிழை அல்லது ரசக்கலவையை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் கருவி.
plumbism :ஈய நச்சூட்டு; ஈய நச்சேற்றம்.
plumbage : மெழுகு வைப்பு.
plumbum : காரீயம்; ஈயம் : உலோக ஈயத்தின் லத்தீன் பெயர். pluriceptor : பல்குழு ஏற்பி : காப்புப் புரதத்தோடு ஒன்றியிணையும் இரண்டு தொகுதிகளுக்கு மேல் கொண்ட ஒரு ஏற்பி.
pluriparity : பலகர்ப்பம் : விளைவைப்பற்றியில்லாமல் உயிர்ப்பு நிலையை அடைந்துள்ள மூன்று அல்லது மேற்பட்ட கர்ப்பங்கள்.
pluripotent : பல் திறன் : 1. பல்வேறு வகை உயிரணுக்களாக மாறிவளரும் தன்மை கொண்ட ஒரு கருவணு. 2. பல்வேறு செயல்களைச் செய்யும் திறமை உள்ள.
pluriresistant : பல எதிர்நிலை : பல்வேறு பொருள்கள், குறிப்பாக நோயுயிர் (கிருமி) எதிர்ப்பு மருந்துகளின் வினை எதிர்நிலை.
PMS : மாதவிடாய் முந்து நோய்.
pneumarthrogram : மூட்டுவளிய வரைபடம் : ஒரு உயவு மூட்டுக்குள் காற்றை ஊசிமூலம் செலுத்தி எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம்.
pneumarthrography : மூட்டுக்காற்றுப் படவரைவு : உயவு மூட்டுக்குள் காற்றை ஊசி மூலம் செலுத்திய பிறகு எக்ஸ்ரே படமெடுத்தல்.
pneumatisation : காற்றூட்டம் : பொட்டெலும்பின் முகையுருத் துருத்தம் மற்றும் முக்குப் பக்கக் காற்றறைகள் போன்ற எலும்பில், வளிநிறை குழிவறைகள் அல்லது உயிரணுக்களை உண்டாக்குவது.
pneumotocoele : நுரையீரல் வீக்கம் : 1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் .
pneumatodyspnoеa : நுரையீரல் மூச்சுத்திணறல் : மூச்சுப்பாதைக் கோளாறால் ஏற்படும் மூச்சுத் திணறல்.
pneumatology : வளியவியல் : காற்று மற்ற வாயுப் பொருள்களைப் பற்றி படித்தறியும் அறிவியல்.
pneumatograph : நுரையீரல் பட வரைவி : மூச்சியக்கத்தால் மார்புச் சுவர் அசைவுகளைப்பதிவு செய்யும் கருவி.
pneumatometer : மூச்சுமானி.
pneumatotherapy : நுரையீரல் வளிய மருத்துவம் : 1. நுரையீரல் நோய்களுக்கு மருத்துவம், 2. இறுக்கப்பட்ட செறிவிழந்த வாயுக்களால் உண்டாகும் நோய்களுக்கான மருத்துவம்.
pneumaturia : சிறுநீர்வாயு; சிறுநீர் வளிமம்; வளி நீரிழிவு : சிறுநீருடன் குடல் வாய்வு பிரிதல். இது சவ்வுப்பைப்புரை காரணமாக ஏற்படுகிறது.
pneumatype : வளிப்பதிவு : வாய்மூடிய நிலையில் மூக்கின் வழியாக மூச்சு வளிவரும்போது ஒரு கண்ணாடியில் படும் ஈரப் பதிவு.
pneumoangiography : வளிநாள வரைபதிவு : ஒருநிறப்பொருள் ஊடகம் கொண்டு நுரையீரலின் நாளங்களை எக்ஸ்ரே படம்பிடித்துப் பார்த்தல்.
pneumobulbar : நுரையீரல் குமிழ் : முகுளத்திலுள்ள நுரையீரல் மற்றும் மூச்சியக்கமையம் பற்றிய.
pneumococcus : சீதசன்னிக் கிருமிகள் : இணை இணையாக அமைந்துள்ள புள்ளிக் கிருமிகள். இவை சீதசன்னியை உண்டு பண்ணுகின்றன.
pneumoconiosis : தூசு அழற்சி; தூசு வளி நோய் : தொழில் துறைப் பணிகளில் தொடர்ந்து தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் அழற்சி சில சமயம் காசநோயும் உண்டாகும்.
pneumocystis (carinii) : சீதசன்னி நுண்ணுயிரி : சீதசன்னி எனப்படும் சளிக் காய்ச்சலை உண்டாக்கும் ஒரு நுண்ணுயிர். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது. இதனால் உண்டாகும் வீதம் அதிகம்.
pneumocystography : நீர்ப்பை வளிய வரைவு : சிறுநீர்ப் பைக்குள் காற்றைச் செலுத்திய பிறகு செய்யப்படும் பைப்பட சோதனை.
pneumocyte : வளியணு : காற்றுநுண்ணுறைச் சுவரணு, வகை 1 : மென்சவ்வு சுவரணு, வகை 2 : சர்ஃபக்டன்ட்சுரக்கும் குருணையணு, வகை 3 . அரிதான, கூம்பு வடிவ.
pneumodynamics : மூச்சு இயக்கவியல் : மூச்சியக்கத்தில் பயன்படும் ஆற்றல் பற்றிய படிக்கும் அறிவியல் பிரிவு.
pneumoencephalogram : வளிய மூளை வரைபடம் : வளிய மூளை வரைபதிவின்போது, மூளையின் நீரறைகள் மற்றும் சிலந்தியுரு உறையடி வெளியின் எடுக்கப்படும் எக்ஸ்ரே படம்.
pneumoencephalography : வளிய மூளை வரை பதிவு : மூளை தண்டுவட நீரை வெளியில் எடுத்துவிட்டு, முதுகில் ஊசி போட்டுகாற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி நீரனைகளையும், சிலந்தியுரு உறையடி வெளியையும் எக்ஸ்ரே படம் எடுத்தல்.
pneumoganeric : நுரையீரல் இரைப்பை சார்ந்த : நுரையீரல், இரைப்பை ஆகியவை தொடர்புடைய.
pneumogastric nerves : நுரையீரல்-இரைப்பை நரம்புகள் : மூளை நரம்புகளில் பத்தாவது இணை.
pneumogastrography : வளிய இரைப்பை வரைபதிவு : இரைப்பைக்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படமெடுத்தல்.
pneumogram : வளிய வரை படம் : 1.மூச்சியக்க அசைவுகளின் வரைபடப் பதிவு. 2. காற்று அல்லது வாயுவைச் செலுத்திய பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம்.
pneumography : வளிய, வரைபதிவு : 1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல்.
pneumohaemothorax : வளிய குருதிமார்பு : நுரையீரலுறைக் குழிவறையில் வாயு அல்லது காற்றும் குருதியும் இருத்தல்.
pneumohydrothorax : வளிய நீரமார்பு : மார்பு நீர வளிய வீக்கம். நுரையீரலுறைக் குழுவறையில் காற்று அல்லது வாயுவும் குருதியும் தேங்கியிருத்தல்
pneumomassage : வளியத்தேய்ப்புத் தடவுகை : உட்செவியின் சிற்றெலும்புகளின் இயக்கத்திற்கு உதவும் செவிப் பறையை காற்றுத் தடவல்.
pneumomycosis : நுரையீரல் பூஞ்சன நோய் : நுரையீரலைப் பீடிக்கும் பூஞ்சன நோய்.
pneumomyelography : வளிய மச்சை வரைபதிவு : முதுகில் ஊசிபோட்டு தண்டுவடக்கால் வாய்க்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படப் பதிவு.
pneumonectomy : நுரையீரல் அறுவை; நுரையீரல் நீக்கம்; நுரையீரல் வெட்டு; திறப்பு : துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.
pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கிய நிலை. இந்நோய் இரண்டு நுரையீரல்களையும் பாதித்தால் அது 'இரட்டை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும். ஒரு நுரையீரலைப் பாதித்தால் அது 'ஒற்றை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும்.
pneumonitis : நுரையீரல் திசு அழற்சி; மூச்சுப்பையழற்சி : நுரையீரல் திசுக்களில் ஏற்படும் வீக்கம்.
pneumonolysis : நுரையீரல் பிரிப்பு : மார்புக் குழிவறைச் சுவர்களுடன் நுரையீரலை இணைத்திருக்கும் திசுக்களை வெட்டிவிடுதல்.
pneumonoperitonitis : வளிய வயிற்றுள்ளுறையழற்சி : வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் வாயுவுடன் வயிற்றுள்ளுறையழற்சி.
pneumoperitoneography : வளியவயிற்றுள்ளுறை வரை பதிவு : வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்றைச் செலுத்தி பின் வயிற்று உறுப்புக்களையும் வயிற்றுள்ளுறையையும் எக்ஸ்ரே படமெடுத்து பரிசோதனை.
pneumoperitoneum : வளிய வயிற்றுள்ளுறை : அகநோக்கிப் பரிசோதனையின்போது, வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்று அல்லது வாயு இருத்தல்.
pneumoperitonitis : வளிய வயிற்றுள்ளுறையழற்சி : வயிற் றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்று அல்லது வாயு தேங்கிய வயிற்றுள்ளுறையழற்சி.
pneumopleuroparietopexy : நுரையீரலும் உறையும் சுவர்நிலை நிறுத்தம் : நுரையீரலையும் அதன் உறையையும் மார்புக் காயத்தின் ஒரத்தில் அறுவை மூலம் ஒட்டி வைத்தல்.
pneumopyelography : வளிய நீரகவட்டில் வரை பதிவு : சிறுநீரக வட்டிலுக்குள் காற்று அல்லது ஆக்சிஜன் செலுத்தி சிறுநீரக வட்டிலையும் சிறு நீர்க்குழலையும் கொண்ட எக்ஸ்ரே படம்.
pneumopyoperitoneum : சீழ் வளிய வயிற்றுள்ளுறை : வயிற் றுள்ளுறைக் குழியறைக்குள் வாயு அல்லது காற்றுடன் சீழ் தேங்குதல்.
pneumoradiography : வளிய எக்ஸ்ரே படப்பதிவு : காற்று அல்லது ஆக்சிஜனை செலுத்திய பிறகு ஒரு பகுதி எக்ஸ்ரே படப்பதிவு.
pneumotherapy : நுரையீரல் மருத்துவம் : 1. நுரையீரல் நோய்களுக்கு மருத்துவம். 2. அடர்த்தி குறைந்த உறைவித்த வாயுக்களால் உண்டாகும் நோய்களுக்கான மருத்துவம்.
pneumothorax : நுரையீரல் உறைகாற்று நோய்; உறைவளி நோய் : நுரையீரல் திசுக்களை அழுத்தும் வகையில் நுரையீரல் உறையில் காற்று அல்லது வாயு நிறைதல். இது ஈளை நோயினால் (ஆஸ்துமா) உண்டாகலாம்.
pneumoventriculography : வளியமூளை நீரறைவரைபதிவு : மூளை நீரறைகளுக்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படப் பதிவு.
PNI : உளவியல் நரம்பு நோய்த் தடுப்பியல்.
pock : பெரியம்மைக் கொப்புளம்.
pock monk : அம்மைத்தழும்பு.
pox : அம்மை; பெரியம்மை.
Poculum Diogenes : குழிய உள்ளங்கை : கைத்தசைகள் சுருங்குவதால் உள்ளங்கை கோப்பை போல குழிவு உண்டாதல், கிரேக்க தத்துவஞானி டயோஜீன்ஸ் பெயரைப் பெற்றுள்ளது.
podalic : காலடி : 1. காலடி தொடர்பான 2 குழந்தை பிறப்பின் போது காலடியை பயன்படுத்துவது, குறிப்பாக காலடித் திசை திருப்பல்.
podencephalus : மூளை கருக்குழந்தை : துருத்திய மூளையின் பெரும்பகுதி மண்டையோட்டுக்கு வெளியிலிருக்கும் உருக்குறையுடைய முதிர்கரு.
podiatrist : காலடி மருத்துவர் : காலடிகளின் நோய்களுக்கு மருத்துவம் செய்வதில் சிறப்புத் தகுதி பெற்ற மருத்துவர்.
podocyte : அடித்தட்டணு :சிறு நீரகத் திரணையின் பெளமன் உறையின் உள்வரியாயமைந்து உள்ள பல அடித்தகடுகளைக் கொண்ட மேற்றொலி அணுத் திரணை வடிப்பு வெளியேற இவ்வடுக்கில் இடைவெளிகள் உள்ளன.
pododynamometer : கால் தசை திறனளவி : கால் மற்றும் காலடித் தசைகளின் வலுவை சோதிக்கும் கருவி.
podophyllum : போடோஃபில்லம் : சில காம்புப் புற்றுகளின் மேல் தடவி மருத்துவம் செய்ய உதவும் மஞ்சள் குங்கிலியத்தின் உலர்ந்த வேர்களும் வேர்த் தண்டுகளும்.
poikiloderma : மிகைநிறத்தோல் : மெலிந்து நிறமி மிகுந்து பல வண்ணப் புள்ளிகளுடன் தோற்றமளிக்கும் தோல்.
poikilotherm : சூழல் வெப்ப பிராணி : சூழல் வெப்பத்திற்கேற்ப உடல் வெப்ப நிலை மாறும் குளிர் இரத்தப் பிராணி.
point : புள்ளி : 1. ஒரிடம் அல்லது சிற்றிடம். 2. ஒரு பொருளின் கூர்முனை 3 உடையப்போகும் சீழ்க்கட்டியின் மேல்முனை. 4. இட, நேர அளவின் நிலை. poise : சமநிலை : 1. ஒரு நீர்மத்தின் பாகுநிலை (குழைம நிலை)யளவு. ஒரு விநாடிக்கு ஒரு சென்டிமீட்டருக்கு எத்தனை கிராம்கள் எனுமளவு. பிரெஞ்சு உடலியக்கவியாளர் ஜீன்பாய்சியுஸ் பெயராலமைந்தது.2 நிதானமான கருத்து அல்லது நடத்தையை கடைப்பிடித்தல்.
Poiseuille's law : பாய்சியுல்லின் விதி : ஃபிரெஞ்சு உடலியக்க வியலாளர் ஜீன்பாய்சியுல் வகுத்த விதி. சிறு குழல்களின் வழியே நீர்மங்கள் பாயும் வேகம், குழல்களின் அழுத்தம் மற்றும் ஆர அளவுக்கேற்ப மாறும். ஆனால் குழலின் நீளம், நீர்மத்தின் குழைமத்தின் அளவுக்கு நேர்எதிர் அளவில் மாறும்.
Poiseuille's space : வேகவெளி : தந்துகிச் சுவருக்கு அருகிலுள்ள வெள்ளணுக்கள் மெதுவாக நகருவதும், நடுவிலுள்ள சிவப்பணுக்கள் மிக வேகமாக நகரும் நிலை.
poison : நஞ்சு : ஒரு உயிரியை வழக்கமாக பாதிக்கும், காயப் படுத்தும் அல்லது கொல்லும் வேதிப்பொருள்.
poisoning : நஞ்சூட்டல் : நஞ்சால் விளையும் உடல் அறிகுறிகள். நஞ்சிருப்பதை அறியாததாலோ, விரும்பிச் செய்யாமலோ அல்லது விபத்தின் காரணமாக இருக்கலாம்.
poisonous : நச்சுத்தன்மைய : நஞ்சின் முதன்மைகளைக் கொண்ட.
polarimeter : ஒளிமுனைப்பாக்க மானி : ஒளி முனைப்படுதள சுழற்சி அல்லது முனைப்படும் ஒளியின் அளவை அளக்கும் கருவி.
polariscope : ஒளிமுனைநோக்கி : முனைப்பட்ட ஒளி அளக்கப் பயன்படும் கருவி.
polarity : முனை நிலை : 1. (poor கள் கொண்ட நிலை, 2. இரு துருவங்களின் நேரெதில் விளைவுகள் தென்படுதல் 3, உயிரணு உட்பொருட்கள் தொடர்புநிலை.
polarisation : முனைப்பாக்கம் : 1. முனைநிலை இருத்தல். 2. அதிர்வுகள் ஒரு தளத்தில் மட்டும் தோன்றும் ஒளிநிலை. 3. உடலில் நேர்மின் நிலையும் எதிர்மின் நிலையும் பிரிக்கப்படும் முறை. 4. தூண்டப்படக் கூடிய அணு ஒய்வு நிலையில் அனுப்படலத்தில் உள்ள மின் நிலை.
polarised : முனைப்படுத்தப்பட்ட : ஒரே நேரத்தில் நேர்மின், நிலை எதிர்மின் நிலை போன்ற ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள் அல்லது விளைவுகள் இருக்கும் நிலை. poldine methylsulphate : போல்டின் மெத்தில்சல்ஃபேட் : உணவு உண்டவுடன் இரைப்பையில் அமிலம் சுரப்பதைக் கட்டுப் படுத்தும் மருந்து.
polio : இளம்பிள்ளை வாதம் : குழந்தைகளின் முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படு கின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு புகுகின்றன என்பது தெரியவில்லை. இந்நோய் பெரியவர்களையும் பாதிக்கிறது.
polioencephalitis : மூளைவாத அழற்சி : பெரு மூளையில் ஏற்படும் வாத வீக்கம்.
potiomyelitis : இளம்பிள்ளை வாதம் : முதுகந்தண்டின் சாம்பல் நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி மூளைத் தண்டிலும், முதுகுந்தண்டிலும் உள்ள முன் பக்கக் கொம்புகளின் இயக்க நரம்பணுக்களை ஒரு கொள்ளை நோய்க் கிருமி தாக்குவதால் இது உண்டாகிறது. இளம் பிள்ளைக்கு ஐந்து வயதிற்குள் உரியவாறு சொட்டு மருந்து கொடுத்தால் இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்.
polio viruses : இளம்பிள்ளை வாதக் கிருமி : இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் நோய்க்கிருமிகள், வைரஸ் நுண்ணுயிரி.
politzer's bag : போலிட்சர் பை : முன் தொண்டையிலிருந்து நடுக் காதுக் குழிவரையில் செல்லும் குழாயை உப்பச் செய்வதற்கான ஒரு ரப்பர் பை.
polen : மகரந்தத்தூள் : பூச்சிகள் அல்லது காற்றால் பரவும் விதை செடிகளின் நுண் துகள்கள் காற்றில் பரவும் பல பூந்தாதுக்கள் ஒவ்வாமைக் காரணிகளாக செயல்படுகின்றன.
pollicization : சுட்டு விரல் குறுக்க அறுவை; கட்டை விரல் மாற்றம் : சுட்டு விரலைச் சுழற்றி, பெரு விரலின் நிலைக்குக் கொண்டு வருவதற்காகச் குறுக்குவதற்குச் செய்யப்படும் ஒருவகை அறுவை மருத்துவம்.
polution : மாசுபடுத்தல் : அழுக்கான அல்லது நச்சுப் பொருட்கள் கொண்டு, அசுத்தமாக்கும் அல்லது தூய்மைகெடும் நிலை.
polya operation : இரைப்பை அறுவை : இரைப்பையின் ஒரு பகுதியில் செய்யப்படும் அறுவை மருத்துவம் போல்யா விளக்கியது.
polyadenitis : பல சுரப்பழற்சி : பல நிணக்கணுக்கள், குறிப்பாக கழுத்து நிணக்கணுக்களின் அழற்சி.
polyadenomatosis : பல சுரப்புக் கட்டி : பல சுரப்பு குறிப்பாக நாளமில்லா சுரப்புக் கட்டிகள். polyalgesia : பலவிடவலி : ஒரு பகுதியின் ஒரு தூண்டுதல், பல பகுதிகளில் உணர்வுண்டாக்கல்.
polyandry : பலகணவருடைமை : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட கணவர்களை வைத்துக் கொள்ளும் பழக்கம்.
polyarteritis : பல தமனி அழற்சி; தமனிகள் அழற்சி : பல தமனி களில் ஏற்படும் வீக்கம் இதனால் பாதிக்கப்பட்ட நாளங் களில் வீக்கமும் குருதியுறைவும் ஏற்படுகிறது. மேற்கொண்டு சேதம் உண்டாகுமானால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது.
polyarthralgia : பலமூட்டு வலி : பல்வேறு மூட்டுகளிலும் உண் டாகும் நோவு.
polyarthritis : பலமூட்டு அழற்சி; மூட்டுகள் அழற்சி; பன்மூட்டழற்சி : பலமூட்டுகளில் ஒரே சமயத்தில் உண்டாகும் வீக்கம்.
polybactrin : பாலிபாக்ட்ரின் : நியோமைசின் சல்ஃபேட் பாலிமிக்சின்-பி, பாசிட்ராசின் ஆகியவை கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர். இது ஒர் உயிர்ப் பொருள் எதிர்ப்புத் தெளிப்பு மருந்து, காயங்கள், அறுவை மருத்துவக் காயங்களைக் குணப்படுத்தப் பயன் படுத்தப்படுகிறது.
poly basic : பல்கார : ஒரு காரத்துடன் சேரும் இரண்டு அல்லது மேற்பட்ட ஹைட்ரஜன் அயனிகளைக் கொண்ட அமிலம்.
polyblast : பல்கருவணு : அழற்சி வெளிப்பாடுகளில் காணப்படும் ஒரு உட்கரு கொண்ட விழுக்கணு.
polycarbophii : பல்கார்போஃபில் : பருப்பொருள் கொண்ட மல மிளக்கியை தயாரிக்கப் பயன்படும் நீரேற்கும் பொருள்.
polychemotherapy : பல்வேதியல் மருத்துவம் : மருத்துவத்தில் ஒரே நேரத்தில் பல வேதியல் பொருள்களைப் பயன்படுத்தல்.
polychromatic : பல்நிற : ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் நிறமேற்றும் பல நிற திசுவியல் சாயங்கள்.
polychromatophi : பல்நிறமேற்பணு : பல சாயங்களால் நிறம்பெறும் ஒரு அணு குறிப்பாக குருதிச் சிவப்பணு.
polychromatophilia : பல்நிறமேற்கும் நிலை : அமில, கார சாயப் பொருள்களில் நிறம் பெறும் அணுக்களின் தன்மை. 2. அமில, கார, நடுநிலை சாயங்களை ஏற்கும் தன்மையை வெளிப்படுத்தும் சிவப்பணு. polycrotism : பல் சிறு துடிப்பு : ஒவ்வொரு நாடிப் பதிவின் இறங்கு கோட்டில் பல இரண்டாம் நிலை அலைகள் காணப்படும் வாய்ப்பு நிலை போக்கி.
polycystic : பல நீர்க்கட்டி : பல நீர்க்கட்டிகளையுடைய, சிறு நீரக நோய். இது பெரும்பாலும் நுரையீரல் கட்டிகளுடன் தொடர்புடையது.
polycythaemia : சிவப்பணு பெருக்கம்; சிவப்பணு மிகைப்பு; சிவப்பணு மிகை நோய் : இரத்தத்தில் கற்றோட்டமாகச் செல்லும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகுதல். இது நீர்ம இழப்பு காரணமாக ஏற்படலாம். ஒரு பிறவி இதய நோயில் ஏற்படுவது போன்று, ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் திறனை அதிகரிப்பதற்காகவும் உண்டாகலாம்.
polydactyly : மிகைவிரல்; விரல் மிகைப்பு : கை-கால்களில் இயல்பான எண்ணிக்கைக்குக் கூடுதலாக விரல்கள் இருத்தல்.
poly dipsia : பெருந்தாகம்; நீர் வேட்கை; வெகு தாகம் : அளவுக்குமீறித் தாகம் எடுத்தல்.
polydystrophy : பல் இணைப்புத் திசுக்குறை : இணைப்புத் திசுவில் பல்வேறு பிறவிக் கோளாறுகள் காணப்படும் நிலை.
polyene : பாலியீன் : ஆம்ஃபோ டெரிசின்பி மற்றும் நிஸ்டேட்டின் போன்ற பூஞ்சைக் காளான் எதிர்ப்பு மருந்துகள் போன்ற பல இரட்டைப் பட்டைகளைக் கொண்ட ஒரு வேதிப்பொருள்.
polyesthesia : பல் முனை உணர்வு : ஒரு முனைத்தூண்டல், பல முனைகளில் தொடுவது போன்ற உணர்வை ஏற் படுத்தும்படியான உணர்வுக் கோளாறு.
polygene : பல்மரபணு : ஒரு குணப்பாங்கில் பல மாறுதல்களை உண்டாக்க, ஒன்றாகச் செயல்படும் மரபணுத் தொகுதிகளில் ஒன்று.
polygenic : பல்மரபணுசார் : பலமுனைகளில் பல மரபணுக்களின் இடையீட்டுச் செயல்களால் விளையும் ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் மரபணுக்களின் இடையீடுகளால், ஒரு குணநிலை கட்டுப்படுத்தப்படுதல்.
polyglandular : பல்சுரப்புசார் : பல சுரப்பிகளை பாதிக்கும் அல்லது தொடர்புடைய.
polyglycolic acid : பாலிகிளைக்காலிக் அமிலம் : அறுவை மருத்துவத்தில் பயன்படும் பொருளைத் தயாரிக்கப் பயன்படும் கிளைகோலிக் அமில அன்ஹைட்ரைடின்மீச்சேர்மம். polygnathus : இணைத்தாடை : இரட்டையர் அளவு வேறுபட்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளில் சிறியது, பெரிய குழந்தையின் தாடையில் ஒட்டிப் பிணைந்திருத்தல்.
polygraph : பல்வரைவு : 1. ஒரே நேரத்தில், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சியக்கத்தை பதிந்து காட்டும் கருவி. 2. பொய் கண்டுபிடிப்புக் கருவி, உணர்வு வெளிப்பாடுகளின் குறியிடுகளான உடலியக்க மாற்றங்களைப் பதிவு செய்யும் கருவி.
polyhydramnios : மிகைக் கருச்சவ்வு நீர்மம்; வெகு நீர்ப்பனிக் குடம் : கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வில் சுரக்கும் நீர்மம் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.
polykarysome : பல் உட்கருவணு : ஹெர்பிஸ்சிம்ப்ளெக்ஸ் தொற் றால் தூண்டப்பட்ட செல்களின் ஒட்டிணைப்பால் உருவாகும் பல உட்கரு கொண்ட உயிரணு.
polylysine : பாலிலைசின் : ஒரு பெப்டை இணைந்த இரு லைசின் மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு பாலிபெப்டைடு.
polymerase : பாலிமெரேஸ் : மீச்சேர்ம இணைவுக்கு உதவும் நொதி (நியூக்ளியோடைடுகளை இணைத்து பல் நியூக்ளியோ டைடுகளை உருவாக்குதல்) உதாரணம் ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ் நொதி-ஹெச்.ஐ. வைரஸில் உள்ளது.
polymerisation : மீச்சேர்ம இணைப்பாக்கம் : பல எளிய கூட்டுப் பொருள்கள் ஒன்றிணைந்து அதிக மூலக்கூறெடை கொண்ட ஒரு பொருளை உருவாக்கல்.
polymicrobial : பல்நுண்ணுயிர்சார் : பல இன நுண்ணுயிரிகளில் காணப்படும் நிலை.
polymorphic : பல் உருக்கொண்ட : 1. பல வடிவங்களில் தோன்றும். 2. வளர்ச்சியின் வெவ்வேறு படி நிலைகளில் பல வடிவங்களில் காட்சி தரும்.
polymorphism : பல் உரரு நிலை : 1. இரண்டு வடிவங்களில் தோன் றும் டிஎன்ஏ வரிசை நிலையில் ஒரு பகுதி. 2 ஒன்றுக்கு மேற்பட்ட வடிவில் தோன்றுதல்.
polymyalgia rheumatics : தசைக்கீல் வாதம் : முதியவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய். இதனால், தோள் பட்டைகளிலும் இடுப்புக்குழித் தசைகளிலும், முது கந்தண்டிலும் கடும் வலி தோன்றும். காலை நேரத்தில் தசைப்பிடிப்பும் உண்டாகும். இது கன்னப்பொட்டெலும்பு நாடி அழற்சியுடன் தொடர்புடையது. இது கீல் வாயு மூட்டு வீக்கத்திலிருந்து வேறுபட்டது.
polymyoclonus : பல் தசை துடிப்பு : பல தசைகளும் ஒரே நேரத்தில் அல்லது வேகமாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக துடிக்கும் தசைச் சுருக்கத் துடிப்பு.
polymyositis : தசை நலிவு : பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது.
polymyxin B : பாலிமைச்சின்-பி : கிராம்சாயம் எடுக்காத நோய் களுக்குப் பயன்படுத்தப்படும் ஒர் உயிர் எதிர்ப்பொருள். இதனைத் தசை வழி ஊசி மூலம் செலுத்தினால் வலியுண்டாகும் என்பதால், நரம்புவழி, மெல்லமெல்லக் கொடுக்கப்படுகிறது. காது, கண் நோய்களுக்கும் இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
polyneural : பல்நரம்பிய : பல நரம்புகளுடன் தொடர்புடைய, பல நரம்புகளால் வழங்கப்படும் அல்லது பல நரம்பு பாதிப்பு.
polyneuritis : பன்முக நரம்பபழற்சி; பல நரம்பழற்சி.
polyneuromyositis : பல்நரம்புத் தசையழற்சி : பல் நரம்பழற்சியும் பல்தசையழற்சியும் ஒன்றாக சேர்ந்து பாதித்த நிலை.
polyneuropathy : பல் நரம்புக் கோளாறு : ஒரே நேரத்தில் பல வெளிப்புற நரம்புகளை பாதிக்கும் நரம்புக் கோளாறு.
polyneuroradiculitis : பல்நரம்பு வேரழற்சி : நரம்பு வேர்கள், வெளிப்புற நரம்புகள், தண்டு வட நரம்பு முடிச்சுகளின் அழற்சி.
polyoma : கட்டிக்கிருமி : கட்டி உண்டாக்கும் கிருமிகளில் ஒன்று.
polyomavirus : பாலியோமா வைரஸ் : பாலியோமா வைரஸ் துணைக் ககுடும்பத்தில் ஒரு உறுப்பு.
polyopia : நல்வடிவக்காட்சி பல் உரு பார்வை : ஒரே பொருளின் பல்வேறு உருக்காட்சிகள் தோன்றும் பார்வைக்கோளாறு.
polyotia : பல்காது : தலையின் ஒன்று அல்லது இரண்டு பக்கமும் மிகையான காது உள்ள ஒருவர்.
polyploidy : பன்மடியம் : சரியான எண்ணிக்கையிலான நிறக்கோல் (இனக்கீற்று) போல் பலமடங்குகொண்ட உயிரணுக்கரு.
polyp; polyous : சவ்வுக் கழலை; விழுது; சவ்வுக்கட்டி : கருப்பை, மூக்கு போன்ற சளிச்சவ்வுப் பரப்புகளில் உண்டாகும் கழலைக்கட்டி.
polypectomy : தொங்கு தசை அறுவை; விழுது நீக்கம்; விழுது எடுப்பு : தொங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்; விழுதுத் தடை நீக்கம்.
polypeptides : அமினோ புரதங்கள் : நீரால் பகுக்கும்போது இரண்டுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களைக் கொடுக்கும் புரதங்கள்.
polypharmacy : பன்முக மருந்து; பல மருந்து; மருத்துவம் : ஒரே நோயாளிக்கு வாய்வழி உட் கொள்ளப்படும் பல மருந்துகளை எழுதிக்கொடுத்தல். இது நோயாளி மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றாமல் போவதற்கு வழிவகுக்கும்.
polypoid : தொங்கு தசை போன்ற; விழுதுரு; விழுதனைய : தொங்கு தசையை ஒத்திருக்கின்ற.
polyposis : பெருங்குடல் தொங்கு தசை; விழுதியம் : பெருங் குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மரபாக ஏற்படுகிறது. இது பொதுவாகப் பெருங்குடல் புற்றுக்கு வழி வகுக்கிறது. தொங்கு தசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற்குரியவழி.
polypectum : மலக்குடல் தொங்கு தசை.
polypous : காம்புக்கட்டி : ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய.
polypropylene : பாலிபுரோபிலின் : சவ்வு ஆக்சிஜனுட்டுக் கருவி மற்றும் அறுவை மருத்துவ வார்ப்புகளிலும் பயன்படுத் தப்படும் வெப்பத்திலுருகும் செய்பொருளான பாலிமெர்.
polyribosome : பாலிபோசம் : பெப்டைடு உருவாக்கத்தில் பங்குபெறும் செய்தியேந்தி ஆர்.ஏ.வால் இணைக்கப்படும் இரண்டு அல்லது மேலதிகரை போசம்கள்.
polysaccharide : சர்க்கரைச் சேர்மங்கள் (C6.H10 .C5.) : பல்வேறு ஒற்றைச் சர்க்கரைச் சேர்மங்களைக் கொண்டுள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் மாச்சத்து, இன்சூலின், கிளைக்கோஜன், டெக்ஸ்டிரின், செல்லுலோஸ் ஆகியவை இவ்வகையின.
polyserositis : பன்முக நிண நீர்ச்சவ்வழற்சி : பல்வேறு குருதி நிணநீர்ச்சவ்வுகளில் உண்டாகும் வீக்கம் மரபணு முறையில் உண்டாகும் இவ்வகை அழற்சியை 'மத்திய தரைக் கடல் காய்ச்சல்' என்பர்.
polysomnography : பல் தூக்க வரைபதிவு : பல்வேறு படி நிலைகளில் தூக்கம் வருநிலை, தூக்கப்பிரி நிலையளவு மூச்சு நிறுத்தல் ஆகியவை தொடர்ந்து ஈ.சி.ஜி. ஈ.ஈ.ஜி, ஈ.ஓ.ஜி, (மின் கண்வரை பதிவு) ஈ.எம்.ஜி., (மின்தசை வரைபதிவு) ஆகியவைகளைக் கண்காணிக்கப் படும் சோதனை முறை.
polysomy : பலநிறக்கோலிமை : இயல்பான ஒன்றிணையில் மேற்பட்ட எண்ணிக்கையில் நிறக்கோல்கள் இருத்தல்.
polyspermia : விந்துப்பெருக்கம் : இயல்புக்கு மீறி மிக அதிக அளவு விந்து நீர் கரத்தல்.
polystyrene : பாலிஸ்டிரீன் : பல்(மருத்துவத்தில்) தளம் உருவாக்கப் பயன்படும் ஒரு ஸ்டிரீனை மீச்சேர்வ இணைவின் மூலம் தயாரிக்கப்படும் ஒரு கூட்டினைப் பொருளான (ரெசின்) பிசின் வகை.
polythiazide : பாலித்தயாசிடு : சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கும் மருந்து.
polyuria : மிகைச் சிறுநீர்ப்போக்கு; சிறுநீர் மிகைப்பு; சிறுநீர்ப் பெருக்கு : சிறுநீர் அளவுக்கு அதிகமாகக் கழிதல்.
Pomeroy sterilisation : போமராய் கருத்தடை : வயிற்றைத்திறந்து கருப்பைக் குழல்களின் நடுப்பகுதியைக் கட்டிவெட்டும் முறைக்கு அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் ஆர்.போமராயின் பெயர்.
Pompe's disease : போம்பே வியாதி : 1. கிளைக்கோஜன் சேர்ப்பு வியாதியின் இரண்டாம் வகை, 2. தசை வீக்கமும், மனக்கோளாறும் முக்கிய அறிகுறிகளாக இனம் குழந்தைகளில் விரைவில் மரணமடையச் செய்யும் நோய்.
pompholyx : தோல் கொப்புளம்; தோல் குமிழ்வு : தோலில் உண்டாகும் குமிழான கொப்புளம். இதனால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும்.
POMR : சிக்கல் சார்ந்த மருத்துவ வரலாறு.
Ponderax : பாண்டெராக்ஸ் : ஃபென்ஃபுளூராமின் ஹைட்ரோ குளோரைடு என்ற மருந்தின் வணிகப்பெயர்.
pons : திசுப்பாலம்; முகுளம்; மூளைப்பாலம் : மூளையின் இரு பாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை.
ponstan : பான்ஸ்டான் : மெஃபினாமிக் அமிலத்தின் வணிகப் பெயர். pons varoli : மூளை இணைப்பு; நரம்புப் பாலம் : மூளையின் இரு பாதிகளையும் இணைத்து மூளையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கின்ற நரம்பிழைத் தொகுதி.
pontiac fever : பாண்டியாக் காய்ச்சல் : சளிக்காய்ச்சல் (இன்ஃபுளுயென்சா) போன்ற ஒருவகைக் காய்ச்சல். இது நுரையீரல் தொடர்பானது அன்று.
popliteal : முழங்கால் பின்பகுதி சார்ந்த : முழங்காலின் பின் னாலுள்ள குழிவுக்குரிய.
popliteus : பின்கால் தசை; தசை; முழங்காலின் : துடையின் பிற் பகுதி சார்ந்த இடத்திலுள்ள ஒரு தசை. இது காலை மடக்கவும் சுழற்றுவதற்கும் உதவுகிறது.
poradenitis : பின் சிறுகுடல் அழற்சி : பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது.
porcelain doll face : போர்செலெய்ன் பொம்மை முகம் : தைராயிடு குறை சுரப்பில் கிளைக்கோ அமைனோகிளைக் கான்கள் சேர்ந்துவிடுவதால், பெரியவர்களில் முகம் வீங்கி வெளுத்து மிக்ஸெடீமா எனும் அடிச்சவ்வு வீக்க நிலை.
pore : நுண்துளை / மயிர்க்கண்; சிறுதோல் ஓட்டை; புரை : வியர் வைச் சுரப்பிகளுக்குச் செல்லும் நாளங்களின் ஒரு வாய். தோல் மேற்பரப்பில் இவற்றை நுண்ணிய அடுக்குத் தசைகள் கட்டுப்படுத்து கின்றன. குளிரில் இது சுருங்கி அடைபட்டும் வெப்பத்தில் விரிவடைந்தும் இது நடைபெறுகிறது.
porencephalitis : குழிய மூளை அழற்சி : மூளைத் திசுவில் குழி வறைகள் உண்டாகும் மூளையழற்சி.
porin : போரின் : கசிவுப் பாதையாகச் செயல்படும் கிராம் சாய மேற்காத கிருமிச் சுவர்களின் வெளிச்சவ்விலுள்ள வோல்ட்டேஜ் வாயிலமை சவ்வுச் செல்வழி. poroma : போரோமா : 1. தோல் காய்ப்பு (தடிப்பு). 2. எலும்பு | வெளி வளர்ச்சி, 3. வியர்வைச் சுரப்பிகளின் வாயில் தோலணுக் கட்டி.
porosis : போரோசிஸ் : 1. எலும்பு முறிவு சீர் வளரும் போது உண்டாகும் காய்ப்புக் கட்டி 2. குழிவறையமைப்பு.
porphin : பார்ஃபின் : ஃபைரின்களின் அடிப்படையாக உள்ள டெட்ராபைரோல் உயிர்க்கரு.
porphobilinogen : பார்ஃபோபிலினோஜன் : ஹீம் இணைப்பாக்கத்தில் இடையில் உருவாகும் பொருள். தீவிர பார்ஃபைரின் சிறுநீரிய நிலையில் மிகுந்த அளவில் சிறுநீரில் காணப்படுகிறது.
porphyria : போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை : போர்ப் பைரின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள உள்ளார்ந்த பிழை. இது பொதுவாக மரபுவழி உண்டாகும். இது நரம்பு மற்றும் தசைச்திசுக்களில் நோய்க்குறி மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சில நோய்களில், மலம் அல்லது சிறுநீர் அல்லது இரண்டடிலும் போர்ப்பைரின் இருக்கும்.
porphyrins : போர்ப்பைரின் : குருதிவண்ணப் பொருள் போன்ற மூச்சுக்குழாய் நிறமிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள ஒளியுணர்வுக் கரிமக் கூட்டுப் பொருள். யூரோபோர்ப்பைரின், காப்ரோ போர்ப்பைரின் ஆகியவை இயற்கையாகக் கிடைக்கும் போர்ப்பைரின்கள்.
porphyrinuria : சிறுநீர் போர்ப்பைரின் : சிறுநீரில் அளவுக்கு அதிகமாக போர்ப்பைரின் இருத்தல். இது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் உள்ளார்ந்த பிழையினால் உண்டாகிறது.
Porro's operation : போர்ரோ அறுவை : சிசேரியன் அறுவைக் குப்பின், கருப்பை, கருப்பைக் குழல்கள் மற்றும் முட்டைப் பைகளை நீக்கும் அறுவை மருத்துவத்துக்கு இத்தாலிய மகப்பேறு மருத்துவர் எடு வார்டோ போர்ரோவின் பெயரிடப்பட்டுள்ளது.
porta : கல்லீரல் பிளவு : கல்லீர்லின் குறுக்கேயுள்ள பிளவு.
portal (vein) : கல்லீரல் சிரை : கல்லீரலுக்குக் குருதி கொண்டு செல்லும் குருதி நாளம்.
portahepatitis : கல்லீரல் சிரையழற்சி; ஈரல் வாயில் அழற்சி : கல்லீரல் சிரையில் ஏற்படும் வீக்கம்.
portal hypertension : கல்லீரல் சிரை மிகை யழுத்தம் : ஈரல் அழுத்த மிகைப்பு : கல்லீரல் சிரையில் அழுத்தம் அதிகரித்தல் இது பொதுவாக ஈரலரிப்பு காரணமாக உண்டாகிறது.
portal circulation : கல்லீரல் சிரை; இரத்தவோட்டம்; சுற்றோட்டம் : குடல், கணையம், மண்ணிரல், இரைப்பை ஆகியவற்றின் இரத்தம் இதயத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஈரலில் சிரையினால் சேகரிக்கப்படுதல்.
portal vein : கல்லீரல் சிரை; வாயில் சிரை : கல்லீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிரை. இது 75 மி.மீ. நீளமுடையது. இது குடற்குழாய்ச் சவ்வுச் சிரைகள் ஆகியவை இணைந்து அமைந்தது.
portocaval : வாயில் பெருஞ்சிரைய : வாயில் சிரையையும் கீழ்ப் பெருஞ்சிரையையும் இணைக்கும் அறுவை மருத்துவத்தில் வாயில் சிரை மண்டலத்திலிருந்து இரத்தம் கீழ்ப் பெருஞ்சிரைக்கு திருப்பப்படுவதால் வாயிற்சிரை மிகையழுத்தம் குறைகிறது.
portoenterostomy : வாயிற்சிரை குடல் திறப்பு : பித்த நாளமின்மை கொண்ட ஒரு இளங்குழந்தையின் பித்தநீர் செல்ல வழியுண்டாக்கும் அறுவை முறை. இதில் நடுச்சிறு குடல், கல்லீரல் வாயிலுறுப்புகளுடன் அறுத்திணைக்கப்படுகிறது.
portography : வாயில் வரைபதிவு : மண்ணிரல் அல்லது வாயில் சிரைக்குள் ஒரு எக்ஸ்ரேயில் காணக்கூடிய நிற ஊடகப் பொருளை ஊசி வழியாக செலுத்தி வாயில் இரத்த சுழற்சியை எக்ஸ்ரே படப்பதிவு செய்தல்.
portosystemic : வாயில் மண்டல : வாயில் மண்டல மற்றும் உடற்சிரை மண்டலங்களுக்கிடையேயான இணைப்புகள் பற்றியது.
port-wine naevus : போர்ட் ஒயின் நிறமறு : பிறவி நரம்பு நாளக்கோளாறு, தோலில் கரும்சிவப்பு-ஊதா மறுக்களாகத் தோன்றுதல்.
position : இருப்பு நிலை; இருக்கை; இருப்பிடம்.
positive pressure ventilation : ஆக்கமுறை அழுத்தக் காற்றூட்டம்; நேரழுத்த மூச்சோட்டம் : மூச்சு உள்வாங்குவதற்காக நுரையீரல்களில் ஆக்கமுறையில் காற்றழுத்தம் ஏற்படுதல். நுரையீரல் சுருங்குவதன் மூலம் மூச்சு வெளியேறுகிறது இயக்கழுத்தக் காற்றேற்றம்.
positron : போசிட்ரான்; நேர்மின்னேற்றி : மின்னணுவின் அதுபோன்ற எதிர்த் துகள். ஆனால் நேர்மின்னேற்றங் கொண்டது. posseting : பத்தியப் பாலூட்டல் : குழந்தைகளுக்குக் கட்டிப் பாலைச் சிறிது சிறிதாகக் கொடுத்தல்.
postcardiotomy : இதய வைக்குப்பின் : இதயத்திறப்பறுவைக்குப் பிந்திய காலம் பற்றியது.
postcaval : பெருஞ்சிரைப்பின் : கீழ்ப்பெருஞ்சிரைக்குப்பின்னுள்ளது பற்றியது.
postcentral : மையப்பின் : 1. மையத்துக்குப் பின்னால், 2. ரோலன்டோ பிளவுக்குப் பின்னால்.
Postericoid web : கிரைக்காய்டுப் பின்வலை : இரும்புக் குறை சோகையில், உணவுக்குழல் சீதச்சவ்வின் மடிப்பு ஒன்று விழுங்கும்போது கஷ்டமாக உள்ளது.
posterior : பின் : 1. புறம் அல்லது முதுகுநோக்கி, 2. பின் அமைந் துள்ள 3. வால் நுனிப் பக்கம்.
posterior urethral valve : சிறுநீர்ப்புறவழிப் பின்புறத் தடுக்கிதழ் : பின்புறச் சிறுநீர்க்குழல் தடுக்கிதழ்கள்.
posteroanterior : பின்முன் : பின்னாலிருந்து முன்னாக அசைவு அல்லது பாய்தல் பற்றியது.
postanaesthetic : மயக்க மருந்தூட்டியபின் உணர்வகற்றுப் பின்.
postanal : மலவாய்ப் பின்புறம்.
postcoital : புணர்ச்சிக்குப் பின் : கருத்தடை உறையைப் பயன்படுத்திப் பாலுறவு கொண்டதன்பின்.
postconcussional syndrome : தலைமோதல் நோய்; தலைக் காயத்தின்பின் மயக்கம் : தலைக் காயம் ஏற்பட்டபின் ஏற்படும் தலைவலி, மயக்கம், மயக்கவுணர்வு போன்ற நோய்க் குறிகள்.
postdiptheritic : தொண்டையடைப்பான் பின்னோய் : தொண்டை யடைப்பான் நோய்த்தாக்குதலுக்குப் பிறகு உண்டாகும் உறுப்பு வாதம். மேல்வாய் உணர்வின்மை போன்ற நோய்க்குறிகள்.
posteruption : முளைத்துப்பின் : பல் முளைப்பதில் ஒரு படி நிலை. இதில் பல் அடைப்புத் தளத்தை அடைந்துள்ளது.
posthepatic : நுரைஈரல் பின்புறம், ஈரலின் பின்னால்.
postherpetic : அரையாப்புப் பின்புறம்.
posthitis : மானி நுனிவீக்கம்; மானி முனை அழற்சி.
posthumous : மரணத்தின் பின்; இறப்புக்குப்பின் : 1. தந்தை இறந்தபின் குழந்தை பிறத்தல். 2. தாய் இறந்தபின், தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை அறுவை மருத்துவம் முலம் வெளியில் எடுத்தல்.
posticta : வலிப்புப்பின் : ஒரு வலிப்பு அல்லது மூளைத் தாக்கத்தைத் தொடர்ந்து.
postload : பணிச்சுமைப்பின் : இதய வெளிப்பாடு மாற்றத்தினால் இதயத்துக்கு வேலை அதிகரித்தல்.
postmature : முதிர்ச்சிப்பின் : 42 வார கருவளர்ச்சிக்குப்பின் பிறந்த இளம் குழந்தையைக் குறிக்கும். 2. கணக்கிடப் பட்ட நாளுக்குப் பின் பிறந்த குழந்தை.
postmature baby : மாதங்கடந்த குழந்தை : எதிர்பார்த்த தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தை. 40 வாரங்களுக்கு அப்பாலும் வயிற்றிலிருந்து தாமதமாகப் பிறக்கும் குழந்தை.
postmenopausal : மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின்.
postmortem : சடலப் பரிசோதனை; பிண ஆய்வு; பிணக் கூற்றாய்வு; மரணப் பின் ஆய்வு : இறப்புக்குப் பின் சடலத்தை அறுத்துப் பரிசோதனை செய்தல்.
postmyocardial infarction syndrome : மாரடைப்புப்பின் நோயியம் : தொடர்ந்து காய்ச்சல், இதய உறையழற்சி, துரையீரலுறை நோய் ஆகியவை ஒரு மாரடைப்பு (இதயத் தசையழிவு)க்குப் பின் சில வாரங்கள் அல்லது மாதங்களில் தோன்றுதல், தற்காப்புத்தடுப்பாற்றல் காரணமாக இருக்கலாம்.
postnasal : மூக்குப் பின்புறம்; மூக்கின் பின்னால் : மூக்கிற்குப் பின்புறம் மூக்குத்தொண்டையில் அமைந்துள்ள.
postnatal : பேறுகாலத்திற்குப் பின்; பிறந்தவுடன்; பிறந்த பின் : குழந்தை பிறந்தபின் நிகழ்கிற.
postpallium : பேல்லியப்பின் : ரோலன்டோ பிளவுக்குப் பின்னுள்ள மூளைப் புறணியைக் குறிக்கும்.
postpartum haemorrhage : பேறு காலத்திற்குப்பின் இரத்த இழப்பு : பேற்றுக்குப்பின் ஒழுக்கு.
postoperative : அறுவை மருத்துவத்திற்குப்பின்; அறுவைக்குப் பிற்பாடு.
postpartum : பேறுகாலத்திற்குப் பின்; பேற்றுக்குப் பின்னர்.
postprandial : உணவுக்குப் பின்னர்.
postprimary tuberculosis : முதல்நிலைப்பின் டியூபர்குலோசிஸ் : முதல்நிலைத் தொற்றுக்குப்பின், மைக்கோபேக்டீரியம் கிருமிக்கு எதிரான தடுப்பாற்றல் உருவான சில வாரங்களில் தோன்றும் டிபெர்குலோசிஸ்.
poststenotic : குறுக்கப்பின் : குறிப்பாக ஒரு தமனியில் குறுக் கப்பகுதி அல்லது சுருங்கிய பகுதிக் குதூரமாக.
postural : தோற்றம் சார்ந்த.
posture : தோற்ற நிலை; உடல் இருக்கை நிலை; தோரணை; இருப்பு நிலை : முழு உடலின் தோற்ற அமைப்பு அல்லது தோற்றத்தின் ஒரு பகுதி.
post urethral instislation : புறச்சிறுநீர் குழலைத் தாண்டி ஒழுக்குதல்.
postvaccinal : அம்மை குத்தியபின்.
potabla-6 : பொட்டாசிப்லா-6 : பொட்டாசியம் பாராமினோ பென்சினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
potassium chlorate : பொட்டாசியம் குளோரேட் : இலேசான நோய் நுண்மத்தடை வாய்கழுவு மருந்துகளிலும், தொண்டைகழுவு நீர்மங்களிலும் பயன் படுகிறது. பொட்டாசியம் குளோரைடிலிருந்து வேறுபட்டது.
potassium chloride : பொட்டாசியம் குளோரைடு : பொட்டயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் கரைசல், தையாசைடு சிறுநீர்க் கழிவு மருத்து வத்தியிலும் பயன்படுத்தப் படுகிறது.
potassium citrate : பொட்டாசியம் சைட்ரேட் சிறுநீரைக் காரத் தன்மையடையச் செய்கிறது. இன்னும் சிறுநீர்க்கட்டி முதலியவற்றில் பயன்படுகிறது. சல்ஃபோனாமைடு மருத்துவத்தின் போது சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கப் பயன்படுகிறது.
potential : ஆற்றல் : 1. செய்யும்திறன் படைத்த உள்ளே மறைந்திருக்கும், இயலக்கூடிய, 2. ஒரு மின் ஆதாரத்திலுள்ள செயல்படும் திறனுள்ள, மின் அழுத்த நிலை.
potentiation : ஆற்றலூட்டம் : கூட்டிப் பார்ப்பதைவிட பெரிய அளவுடைய, ஒத்திசைவாற்றல்.
pottassium cyanide : பொட்டாசியம் சையனைடு : மிகக் கொடிய நஞ்சு வகை.
potassium deficiency : பொட்டாசியம் பற்றாக்குறை; பொட்டாசியம் குறைபாடு : மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது. சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்டாகலாம். குமட்டல், தசை நலிவு இதன் அறிகுறிகள். இடையிடையே மாரடைப்பும் ஏற்படக்கூடும்.
potassium iodide : பொட்டாசியம் அயோடைடு : மூச்சுக் கிளைக்குழல் அழற்சியின் போது சளியகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குரல் வளைச் சுரப்பி வீக்கத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
potassium paraamino benzoate : பொட்டாசியம் பாராமினோ ப்ென்சோயேட் : புறத்தோல் கழலைக்குப் பயன்படும் மருந்து, 3 கிராம் மாத்திரைகளை நாள் தோறும் நான்கு வேளை உணவுடன் வாய்வழியாகப் பல மாதங்கள் உட்கொள்ள வேண்டும்.
potassium perchlorate : பொட்டாசியம் பெர்க்குளோரேட் : கேடயச் சுரப்பியில் அயோடின் திரட்சியைக் கட்டுப்படுத்தும் மருந்து.
potassium permanganate : பொட்டாசியம் பெர்மாங்கனேட் : ஆற்றல்மிக்க தொற்றுத்தடை மருந்து கருஞ்சிவப்பு நிறமுடையது. மணம் அகற்றும் இயல்புடையது. காயங்களைக் கழுவும் கரைசலாகப் பயன்படுகிறது.
potency : வீரியம் : ஆற்றல்; சக்தி; வலிமை.
pott's disease : முதுகெலும்பு அழற்சி : முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது.
pott's fracture : கணுக்கால் மூட்டுப்பெயர்வு : கணுக்கால் மூட்டு முறிந்து இடம் பெயர்தல். கணுக்கால் மூட்டுக்கு 75 மி.மீ. மேலேயுள்ள முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப்புறத்தில்உள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்கால் எலும்பின் இடைச்சுத்தி எலும்பில் ஏற்படும் முறிவு.
potter's rot (potter's asthma; potter's bronchitis) : குயவர் நோய் : மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மண் தூசியினால் உண்டாகும் கொடிய மார்ச்சளி நோய்.
poudrage : பொடிபூசுதல்; பொடி தூவுதல் : ஒரு நஞ்சல்லா உறுத்தும் துளை, நுரையீரலுறையிடை வெளிக்குள் தூவி, நுரையீரலுறை ஒட்டவைத்தல்.
poultice : பத்துப் போடுதல் : ஒரு மெதுவான, ஈரமான, சூடான, கடுகு, ஆளிவிதை, சோப்பும் எண்ணையும் கலந்த கலவை மாவை வினல் அல்லது வலைத் துணியடுக்குகளுக்குள் வைத்து தோலின்மேல் பத்துப்போடுவதன் மூலம் அந்த இடத்தில் ஈரச் சூட்டு அல்லது உறுத்தலெதிர் நிலையை உண்டாக்குவது.
povidone iodine : போவைடோன் அயோடின் : அயோடினை விடுவிக்கும் ஒரு திரவம். இது, தோலிலும் சிலேட்டுமப் படலத்திலும் படும்போது அயோடின் மெல்ல மெல்ல விடுவிக்கப் படுகிறது. இதனால் இது அறுவை மருத்துவத்துக்கு முந்திய தோல் மருந்தாகவும், அலசிக் கழுவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
powder : தூள் : 1. நுண்ணிய தனித்தனி துகள்களின் திரட்சி 2. ஒரளவு உலர்ந்த, நுண்ணியதான பருப்பொருள். 3. அப்படிப்பட்ட தூளின் ஒரு அளவு.
power : திறன் : 1. ஆற்றல்; 2. செயல் செய்யும் இயல் திறம். 3. வேலை நடக்கும் அளவு. 4. ஒரு ஒளிவில்லையின் பெரிதாக்கிக் காட்டும் அளவு. 5. நுண்ணோக்கி, ஒரு பொருளின் விட்ட அளவை பெருக்கிக் காட்டும் மடங்கு.
poxvirus : அம்மை நச்சுயிர் : பெரியம்மை, மாட்டம்மை, பால் பரு போன்றவற்றை உண்டாக்கும் ஈரிழை டி.என்.ஏ. கொண்ட பெரிய செங்கல் வடிவ நச்சுயிர்கள். PPS : இடுப்புக்குழி வலி நோய்.
PR : மலக்குடல் வழி : மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி.
practise (medical) : மருத்துவத் தொழில் : ஒருங்கிணைந்த நலவாழ்வுக்கான கவனிப்பை வழங்கும் மருத்துவத் தொழில் செய்தல்.
practitioner (medical) : மருத்துவத் தொழில் செய்பவர் : மருத்துவம் அல்லது அது சார்ந்த நலப்பணித் தொழில் செய்பவர்.
practolol : புரேக்டோலால் : இதயக்கீழறைத் துடிப்புக் கோளாறுகளின் மருத்துவத்துக்கு தரப்படும் மருந்து.
pragmatism : பயனீட்டுவாதம் : நடைமுறைக்கேற்பச் செயல்படு வதை வலியுறுத்தும் அணுகுமுறை.
pralidoxime : பிராலிடாக்ஸிம் : பூச்சிக்கொல்லி மருந்து நச்சூட் டலுக்கு சிகிச்சை தரப் பயன்படும் மருந்து. கோலினெஸ்டரேசை மீள் செயலூக்குவது.
prazosin : பிராசோசின் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும் மருந்து. இது நேரடியான குருதிநாள விரிவகற்சி மூலமாக வெளி நரம்புகளில் வினைபுரிகிறது.
precancerous : புற்றுநோய்க்கு முந்தி; புற்றுமுன் : புற்றுநோய்க்கு முன்பு உக்கிரமில்லாமல் ஏற்படும் நோய்க் குறியியல் மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புற்று நோய் உண்டாகும் என்பர்.
precapillary : தந்துகிமுன்நிலை : ஒரு சிறு தமனி அல்லது சிறு சிரையின் கிளைகள் (தந்துகிகளாகப் பிரிவதற்கு முந்திய நிலை).
precipitate : மண்டிப்படிவு : 1. ஒரு கரைசலிலுள்ள பொருள், திடப்பொருளாக அடியில் படியச் செய்தல். 2. படிவுப் பொருள். 3. மிக வேகமான நிகழ்வு, திடீர் மகப்பேறு போல.
precipitated labour : திடீர்ப் பேறுகாலம் : அவசரப் பேறு காலம்.
preciptin : பிரசிப்டின் : ஒரு காப்பு மூலத்துடன் சேர்ந்து ஒரு நோய்த் தடைக்காப்புத் தொகுதியை உண்டாக்கக்கூடிய ஒரு நோய் எதிர்ப்பொருள். இது பல நோய்களைக் கண்டறிய அடிப்படையாக அமைகிறது.
precipitinogen : பிரசிப்பிட்டினோஜென் : ஒரு பிராணியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் 3 குறிப்பிட்ட பிரெசிடின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விளைவியம். precipitum : மண்டல் : ஒரு பிரெசிபிடின் செயலால் உண்டாகும் ஒரு படிவு.
'preclinical : மருத்துவ முன் நிலை; நோய் தோன்று முன்நிலை : 1. நோய் தோன்றுதவற்கு முன் னால், 2. உடல் கூறு இயல் உடலியக்கவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் மருத்துவக் கல்வியின் முதல்நிலை.
precoecious : வயது மீறிய வளர்ச்சி.
preconscious : உணர்வு நிலைக்கு முற்பட்ட : முன் பட்டறிவுகளையும், நினைவுப் பதிவுகளையும் உணர்ந்து நினைவுக்குக் கொண்டு வரும் மனநிலை.
precordia : முன்மார்பு : கீழ் மார்புக்கூட்டின் முன் பரப்பும் மேல் வயிற்றுப் பகுதியும்.
precordial : இதயத்திற்கு முன்புள்ள : நெஞ்சுப் பைக்கு அடுத்து முன்புள்ள.
precomu : முன்கொம்பு : மூளையின் பக்க நீரறையின் முன்நீட்டம்.
precostal : விலாவெலும்புக்கு முன்புள்ள : விலாவெலும்புகளுக்கு முன்புள்ள.
precuneus : ஆப்புமுன் : மூளை அரைக் கோளத்தின் உள்பரப்பில் ஒரு பிரிவு. இது பக்க நடு நுண்மடலுக்கும் ஆப்பு நுண் மடலுக்கும் நடுவில் உள்ளது.
precursor : முன்னோடி; முன் பொருள் முன்னோடி; முன் நிலை : 1 மற்றொன்றுக்கு முன்வரும் ஒரு பொருள். 2 மற்றொன்றிலிருந்து செய்யப்படும் ஒரு பொருள்.
predigestion : முற்செரிமானம் : உணவை உண்பதற்கு முன்னர் செயற்கையாக எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
predisposition : இயற்சார்வு நிலை : இயற்கையாகவே சில நோய்கள் பிடிப்பதற்கான அல்லது ஏற்படுவதற்கான நிலை.
prednisolone : பிரட்னிசோலோன் : இணைப்புத் திக நோய்கள், நோய்த் தடைக் காப்புக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார்மோன்).
prednisone : பிரட்னிசோன் : நுரையீரலில் பிரட்னிசோலோனாக மாறும் மருந்து. இது பிரட்னிசோலோன் கொடுக்கப்படும் நோய்களுக்கே கொடுக்கப்படுகிறது.
preductal coarctation : முன் நாளச் சுருக்கம் : தமனி நாளத்துக்கு முந்திய பெருந்தமனிச் சுருக்கம். இதனால் உடலின் கீழ்பகுதி நீலம் பாரித்தல்.
preeclampsia : கர்ப்பகால வலிப்பு நோய் : பேற்றுக்கு முன் மருட்சி; இளம் பேற்றுச் சன்னி : பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தின் பிற்பகுதியில் சிறு நீர்ப் புரத நோய், மிகை இரத்த அழுத்தம், இழைம அழற்சி போன்றவை தோன்றும் நிலை. உடல் வீக்கம், சிறுநீரில் புரதம், இரத்தக் கொதிப்பு ஆகிய மூன்று நோய் நிலைகளின் கூட்டு நிலை. தொடர்ந்து அதிகரித்து கருவுக்கும் தாய்க்கும் ஆபத்து உண்டாக்குதல்.
preeruption : முளைமுன்நிலை : 1. பல்முளைக்கு முன்னால் 2. பல் முனை எலும்புக்குள்ளிருக்கும், பல் முளைப்பதற்கு முந்திய நிலை.
preexcitation : முன்இளர்நிலை : மேலதிக வழிப்பாதையின் வழி யில் பரவும் தூண்டல்களால் இதயக்கீழறையின் ஒரு பகுதி முன்கூட்ட செயலூட்டப்படும் நிலை.
pregnancy : கர்ப்பம்; சூல்; கருவுற்ற நிலை; சினை படல் : கருப்பையில் குழந்தை கருவுயிர்த்திருக்கும் காலம். இது பெரும்பாலும் 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் ஆகும்.
pregnandiol : பிரக்னேன்டியால் : பிராஜஸ்டிரோனிலிருந்து எடுக்கப் படும் சிறுநீரைச் சுரக்கும் பொருள்.
pregnanetriol : பிரெக்னேன்ட்ரியால் : உயிரியல் முறையில் செய லற்ற சிறுநீரில் வெளிப்படும் வளர்சிதை மாற்றப் பொருளான 17 ஹைட்ராக்ஸி புரோகெஸ் டிரான் (கருவளர்ப்பி).
pregnant : கருவுற்ற; சூல் கொண்ட.
pregnyl : பிரக்னில் : கருப்பைக்கு வெளியில் விதைப்பை இறங்குங் காலம் க்கும்போதுபயன்படுத்தப் படும் மருந்தின் வணிகப் பெயர்.
Preiser's disease : பிரெய்செர் வியாதி : முதுகுப்பட்டை எலும்பின் தொற்றிலா திசுவழிவு, ஜெர்மன் கதிர்ப்படவியலார், ஜார்ஜ் பிரெய்சரின் பெயரால் அழைக்கப் படுகிறது.
preleukaemia : வெள்ளணுப் புற்றுமுன்நிலை : குருதியில் அல்லது எலும்புச்சையிலுன்ன முதிர்ச்சியடையா அணுக்கள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படுதல்.
preload : பளு முன் : சுருங்குவதற்கு முன் இதயத் தசையின் நீட்சியளவு.
prelymphoma : முன்நிணப்புற்று : நிணவனுக்கள் திரண்டு நிணப் புற்றாக மாறக்கூடிய சூழ்நிலை.
premarin : பிரிமாரின் : மாதவிடாய் நிறுத்தக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தின் வணிகப் பெயர். இது வாய்வழி கொடுக்கப்படுகிறது.
premature : பருவமடையா; முதிர்வுறா : பருவ நிலை பெறா. premature baby : குறைமாதக் குழந்தை; முற்றாக் குழந்தை : உரிய காலத்திற்குமுன் பிறக்கும் குழந்தை, குறைமாதக் குழந்தையின் எடை 2.5 கிராமுக்குக் குறைவாக இருந்தால் அதற்குத் தனி மருத்துவமளிக்க வேண்டும்.
prematurity : முதிராநிலை : 37 வார கருவுற்ற காலத்துக்கு முன்பாகவே பிறந்த குழந்தை முழு வளர்ச்சியடையாமலுள்ள நிலை.
premedication : மருந்துக்கு முன் மருந்து; முன்னோடி மருந்து; முன் மருந்து : ஒரு மருந்தைக் கொடுப்பதற்கு முன் கொடுக்க வேண்டிய மருந்து. எடுத்துக்காட்டாக, மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய மருந்து. இவை உறக்க மூட்டும் மருந்துகள், எச்சில் சுரப்புத் தடுப்பு மருந்துகள் எனப் பல வகைப்படும்.
premelanosome : முன்மெலனோசம் : அடர்ந்த குருளை போன்ற உள்ளிட்டையும் கரிய அணுக்களின் குறுக்குக்கோடுகளையும் கொண்ட ஒரு நீள்வட்ட அமைப்பு.
premenarche : பூப்படையாமுன்.
premenstrual : முந்திய மாத விடாய்; மாத விலக்குக்கு முன்.
premolar : முன் கடைவாய்.
premolar tooth : முன் கடைவாய்பல்; முன் கடைப்பல் : கடைவாய்ப் பல்லுக்கு முன்னுள்ள பல், கதுப்புப்பல்.
prenatal : பேறுகால முன்; பேற்றுக்கு முன்; பிறப்புக்கு முன் : பேறுகாலத்திற்கு முந்திய கடைசி மாதவிடாய்க்கும் குழந்தை பிறப்பதற்கும் இடைப்பட்ட காலம் இது பொதுவாக 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் ஆகும்.
prenatal syphilis : பிறவிக் கிரந்தி.
prenylamine : பிரனிலாமைன் : குருதி நாள விரிவகற்சி மருந்துகளில் ஒன்று. இடது மார்பு வேதனைதரும் இதய நோயின் போது கொடுக்கப்படுகிறது.
preoperative : அறுவைக்கு முன்பு; அறுவை முன் : அறுவை மருத்துவத்துக்கு முன்பு.
preparalytic : வாதத்திற்கு முன்பு; வாத முன்னோடி : வாதநோய் எற்படுவதற்கு முன்பு பொதுவாக இளம்பிள்ளை வாதத்தின் தொடக்க நிலையைக் குறிக்கும்.
preparation : முன்னேற்பாடு; தயாராதல் : நோயளியை அறுவை மருத்துவத்துக்கு தயார் செய்தல், விளக்குவதற்கான மாதிரிப் பொருளை அமைத்தல் பயன் படுத்துவதற்காக மருந்தை தயார் செய்தல் போன்ற முன்னேற்பாடு. prepatellar : மூட்டுச் சில்லுக்கு முன் : கால்மூட்டுச் சில்லுக்கு (முட்டுச்சிப்பி) முன்பு, இது மசகு நீர்ச்சுரப்பியைக் குறிக்கும்.
preperception : முன்உணர்நிலை: புலன்களைக் கொண்டு உணர்வதற்கு முந்தைய நிலை.
prepotent : மிகுதிறன் : பெற்றோர் இருவரில் ஒருவருக்கு பரம்பரைப் பண்புகளை குழந்தைக்கு வழங்கும் சக்தி அதிகமாக இருத்தல்.
prepubertal : பூப்புக்கு முன்; பருவமடையும் முன் : பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்பு.
prepuce : மானி நுதி; முன்தோல்; ஆண்குறி நுனியுறை : ஆண்குறி நுனிக் கவசம்.
presbiopia : வெள்ளெழுத்து; கிட்டப் பார்வைக் குறைவு; முதுமை பார்வைக் குறை; வெள்ளெழுத்து; சாளே சுரம்; முதுமங்கல் : கிட்டப் பார்வைக் குறை பெரும்பாலும் 45 வயதுக்கு மேல் ஏற்படுகிறது.
prescribe : மருந்துக்குறிப்பு : ஒரு மருந்துப் பொருளை, தயாரிப் பதற்கும் உட்கொள்வதற்குமான அறிவுரைகள் கொடுப்பது.
prescription : மருந்துச்சீட்டு; மருத்துவ மருந்துக் குறிப்பு; மருந்து வரைவு; மருந்தெழுத்து : தேவையான மருந்துகள் கொடுப்பதற்கு மருந்துக் கடைக்காரருக்கு அறிவுறுத்தி மருத்துவர் எழுதக் கொடுக்கும் மருந்துப் பட்டியல்.
presenility : முதுமைக்கு முன்; மூப்புக்கு முன் : முதுமை முன்னால் முதுமைக்கு முன்பு ஏற்படும் நிலை.
present : தோன்றல்; இருத்தல்; பார்வைக்கு வரல் : தோன்றுதல், முன்னிலையில் அறிமுகம் செய்தல், பரிசோதனைக்காகப் படுத்திருத்தல்
presentation : பிறப்புத் தோற்றம்; கருக்குழந்தைப் பகுதி; பிறக்கும் போது தோற்றம் : இடுப்பெலும்பு விளிம்புக்குள் முதலில் நுழையும் கருப்பைக் குழந்தையின் பகுதி. இதனை வயிற்று வலியின்போது பரிசோதிக்கும் மருத்துவர் விரலால் தொட்டுப் பார்க்கலாம். இது உச்சந்தலையாக, முகமாக, கண்ணிமையாக, தோளாக அல்லது பிட்டமாக இருக்கலாம்.
preservative : பதனப்பொருள் : கெட்டுப்போகாமலிருப்பதற்காக உணவுப் பொருள்கள் அல்லது மருந்துகளுடன் சேர்க்கப்படும் ஒரு பொருள்.
pressor : அழுத்தி; குருதி அழுத்த மிகுபொருள்; அழுத்த ஊக்கி : இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.
pressoreceptor : அழுத்தம் ஏற்பி : பெருந்தமனி மற்றும் கழுத்துப் புழையில் காணப்படும் இரத்த அழுத்த மாற்றங்களைக் காட்டும் அழுத்த ஏற்பி.
pressure : அழுத்தம்; அழுத்தப் பகுதி; அழுந்திடங்கள் : உடலில் எலும்புகள் முனைப்பாகத் தெரியும் பகுதி படுக்கையில் அல்லது நாற்காலியில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தப் பகுதிக்கு இரத்தம் செல்வது புற அழுத்தம் காரணமாகக் குறைந்துவிடும்.
pressure point : அழுத்தப்புள்ளி; அழுந்திடம் : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய ஒரு தமனி, ஒரு எலும்பின் மேலாகச் செல்லும் ஒர் இடம். இந்த இடத்தில் அழுத்தி, குருதிப் போக்கை நிறுத்தலாம்.
pressure sore : அழுத்தப்புண்; அழுந்து புண் : அழுத்தம் காரணமாக உண்டாகும் சீழ்ப்புண்.
presuppurative : சீழ்முன்நிலை : சீழ் உண்டாவதற்கு முன்னால் அழற்சிப் படிநிலைகளில் ஆரம்பநிலை.
presymptomatic : முன்அறிகுறி : ஒரு வியாதி வெளிப்படையாகத் தெரிவதற்கு முந்திய உடல்நிலை.
presynaptic : முன்சந்திப்பு : நரம்பிழைகளின் சந்திப்புக்கு முன் அமைந்துள்ள பகுதி சந்திப்புப்பிளவுடன் தொடர்புடைய நரம்பு வேரிழை வீக்க முடிச்சு.
presystole : இதயச் சுருக்கத்திற்கு முன் : குருதிநாளச் சுருங்கியக்கத் திற்கு அல்லது இதயத் தசைச்சுருங்கியக்கத்திற்கு முந்திய காலம்.
preurethritis : தாரையழற்சி முன்நிலை : தாரைத்துளையைச் கற்றியுள்ள யோனிப் பகுதி அழற்சி.
prevalence : நோய்ப் பகுதி; நோய்பரவுநிலை : ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு பகுதி மக்கட் தொகுதியில் நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் அளவெண். இதை அறிய நோயாளிகளின் எண்ணிக்கையை, மக்கள் தொகையின் எண்ணிக்கையால் வகுத்தல்,
preventive : தடுப்பு நிலை : 1. முள் காப்பு. 2. ஒரு நோய் உண்டாகும் அபாய நிலையில் தடுக்கக்கூடிய ஒன்று.
preventive paediatrics : குழவி நோய்த்தடுப்பு மருத்துவம்.
prezonular : வெளிமுன் : கண் பின்னறையில் விழிக் கரும்படலத் துக்கும் தொங்கு பிணையத்துக்கும் இடையிலுள்ள இடம் தொடர்பான.
priapism : ஆண்குறி விறைப்பு; குறிவிறைப்பியம் : பாலுணர்வுத் தூண்டுதல் இன்றியே ஆண்குறி நீண்ட நேரம் விறைப்பாகி இருத்தல். நோயால் ஏற்படும் விறைப்பு.
prickly heat: வேர்க்குரு : வியர்வை நாள அடைப்பினால் தோலில் தோன்றும் அரிப்புடன் கூடிய நுண் பருக்கள்.
prick test : குத்து சோதனை : நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை.
prilocaine : பிரிலோக்கெய்ன் : ஒர் உணர்வு நீக்கிச் செயற்கை மருந்து, கோக்கைனைவிட நச்சுத்தன்மை குறைந்தது. இதன் சில தயாரிப்பு களில் செல் குழாய் இறுக்கும் பொருள்கள் அடங்கியுள்ளன.
primaquine : பிரைமாக்குவின் : முறைக்காய்ச்சல் (மலேரியா) எதிர்ப்பு மருந்து முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர்க் கிருமியை நுரையீரலில் இருந்து நீக்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது.
primary amputation : முதல்நிலை உறுப்புத் துண்டிப்பு : அழற்சி அல்லது வீக்கம் இடையூறாக நிகழ்வதற்கு முன்னர் செய்யப்படும் முதற்படியான உறுப்புத் துண்டிப்பு.
primary complex : முதல்நிலைக் காசநோய்; காசநோய் தொற்று நிலை : ஒருவருக்கு முதற்படியாகக் காசநோய் ஏற்படுதல், பொதுவாக இது சுவாசப்பையில் (நுரையீரல்) உண்டாகும். இந்த நிலையில் இந்நோயை பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம்.
primary health care : தொடக்க சுகாதாரக் கவனிப்பு; முதற்படி நல்வாழ்வு பராமரிப்பு : முதல் நிலைச் சுகாதாரக் கவனிப்பு முறை. எல்லோருக்கும் இன்றியமையாத சுகாதார வசதிகள் கிடைக்கும்படி செய்வதற்காக உலகச் சுகாதார அமைவனம் வகுத்த திட்டத்தின்படி செயற்படும் மருத்துவக் கவனிப்பு முறை.
primary immunisation : முதல்முறை நோய்த்தடுப்பு.
primary sore : முதற்புண்.
primary syphilis : முதல்நிலை கிரந்தி.
primate : முதல்நிலை உயிரிகள் : மனிதன், வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், குரங்கினப் பாலுண்ணிகள் போன்றவற்றில் ஒன்று.
prime : முதல்நிலை : 1. கால வரிசையில் முதலாவது, முக்கியத்துவ வரிசையில் முதலாவது, 2. முழு நலம் மற்றும் பலம். 3. ஒரு மருந்தை அல்லது வேறொரு மருந்தைப் பெரிய அளவில் கொடுப்பதற்கு முன் செய்யப்படும் ஆரம்ப சோதனை. primer : பிரைமெர் : நிரப்பு ஒரிமை டிஎன்ஏ வரிசையோடு இணையான சிறு குறை நியூக்கி யோடைடுப் பகுதி.
primidone : பிரைமிடோன் : வலிப்புக்கு எதிராகக் கொடுக்கப்படும் மருந்து பொதுவாகக் கடுங் காக்காய் வலிப்புக்குக் கொடுக்கப்படுகிறது. எனினும் சிலசமயம் இலோசன காக்காய் வலிப்புக்கும் பயன்படுத்தப் படுகிறது.
primigravida : தலைச்சூலி; தலைக் கர்ப்பிணி; தலைப் பிள்ளைத் தாய்மை; தலைச்சான் கருவுற்ற தாய் : முதன்முதலாகக் கருவுற்றிருக்கும் பெண்மணி.
primipara : தலைக் கர்ப்பிணி; தலைப் பிள்ளைத்தாய்ச்சி; தலைச்சான் தாய்; முதற் பேற்றி : முதன் முதல் குழந்தை பெற்ற பெண்மணி.
prio : பிரையோன் : டிஎன்ஏ அல்லது ஆர்.என்.ஏ துணையின்றி இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலுள்ள நியூக்ளிக் அமிலம் அல்லாத புரதம் மெது நச்சுயிர்களின் தொற்றுண்டாக்கும் பொருள்.
prism : பட்டகை : பக்கங்கள் இணைவகங்களாகவும் முனைகள் ஒத்தவையாக, சமமாக இணைத் தளங்களாகவும் உள்ள ஒளி ஊடுருவும் திடப்பொருள்.
privacy : தனிமை; அந்தரங்கத் தன்மை : 1 ரகசியம், 2. மருத்துவர் நோயாளி உறவில் அந்தரங்க நிலையை மதித்தல்.
private practice : தனியாக தொழில் செய்தல் : மாநில உரிம (லைசன்ஸ்) விதிமுறைகளின்படி, மருத்துவர் அல்லது பல் மருத்துவர் தனியாகத் தொழில் செய்தல்.
privileged sites : சிறப்பிடங்கள் : குருத்தெலும்பு, பளிங்குப் படலம் போன்ற திசு ஒட்டுமிடத்தில் காப்பு விளைவு நடைபெறா இடங்கள்.
proaccelerin : புரோ ஆக்சிலெரின் : குருதி உறை காரணி 5 செயலூட்டம் பெறும்போது அது புரோதிராம்பினை திராம்பினாக மாற்றுவதை விரைவு படுத்துகிறது.
probability : நிகழக்கூடியதன்மை : சோதனையை எத்தனை முறை திரும்பிச் செய்தாலும் ஒரே மாதிரியான நேர்நிலை முடிவுகள் வருகின்ற வாய்ப்பு நிலை.
probenecid : புரோபினெசிடு : பெனிசிலின், பாரா அமினோ சாலிசிலிக் அமிலம் போன்ற சில கூட்டுப் பொருள்களைச் சிறு நீரகம் சுரப்பைத் தடுக்கும் ஒரு மருந்து. கீல் வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. proband : முன்மாதிரி : பாதிக்கப் பட்ட ஒருவரிடம் துவங்கி ஒரு பரம்பரையை ஆய்வு செய்வது வரைபடம் உருவாக்குவது.
probang : நோயறிகம்பி : முனையில் ஒரு பஞ்சுப் பொருள் இணைக் கப்பட்ட ஒரு மெல்லியவளை கம்பியை பயன்படுத்தி குரல் வளையில் குறுக்கம் இருக்குமிடத்தை கண்டறிதல் மருந்து தடவவும் பயன்படும்.
probe : துழாவு கருவி : 1. குமிழ் முளைகொண்ட ஒரு மெல்லிய கம்பி, திறப்பு கொண்ட உடல் பகுதியில் துழாவிப்பார்க்கப் பயன்படுத்துவது. 2. டிஎன்ஏ ஆய்வுக்குப் பயன்படும் முக்கிய கருவி.
problem-based learning (PBL) : சிக்கல் அடிப்படையான படிப்பு : ஒரு சிக்கலுக்கு தீர்வு காண்பதன் மூலம் அல்லது புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முறைகளின் விளைவாக கற்றறிதல்.
problem-based medical curriculum : நோய் நிலை அடிப்படையான மருத்துவக் கல்வி : அடிப்படை மருத்துவ அறிவியலையும் நோயாளியைப் பரிசோதிப்பதையும் ஒருங்கிணைத்த கல்விமுறை.
problem-oriented medical record : பிரச்சினை அடிப்படையிலான மருத்துவப் பதிவேடு : நோயாளியின் நிலையை அவர் உணர்ந்த வகையிலும் பரிசோதனையில் தெரிந்த வகையிலும் ஒழுங்கு செய்து, முறையாக பதியப்பட்ட மருத்துவப் பதிவேடு.
procainamide : புரோக்கைனாமைடு : புரோக்கைன் வழிப் பொருள்களில் ஒன்று தானியங்குத் தசைகளைத் தளர்ச்சியடையச் செய்வதற்குப் பயன் படுகிறது. இதனை வாய்வழியாகவோ, சிறிது சிறிதாக நரம்பு ஊசி மூலமாகவோ கொடுக்கலாம்.
procaine : புரோக்கெய்ன் : ஒரு சமயம் மிகப் பெருமளவில் உறுப்பெல்லை உணர்ச்சி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து நச்சுத்தன்மை குறைந்தது; மிகுந்த வீரியமுடையது. இப்போது இதற்குப் பதிலாக லிக்னோகைன் பயன்படுத்தப்படுகிறது.
procarbazine : புரோக்கார்பாசின் : நைட்ரஜன் மருந்துகளின் ஒன்று. கடுகுக் குழுமத்தைச் சேர்ந்தது. ஹாட்கின் நோய்க்குப் பயன் படுத்தப்படுகிறது.
procercoid : நாடாப்புழுவின் கூட்டுப்புழு : நாடாப் புழுவின் நீர் வாழ்க்கையில் முதல் கூட்டுப் புழுநிலை. கூட்டுப்புழு பொரித்தவுடன் ஒரு நீர்ப்பூச்சியால் உண்ணப்படுவதால் ஏற்படும் நிலை. procerus muscle : புரோசிரஸ் தசை : மூக்குத் தோலிலிருந்து புறப்பட்டு, நெற்றியில் இணைந்து உள்ள தசை, இது கண்புருவத்தை கீழே இழுக்கிறது.
process : முற்புடைப்பு; துருத்த வளர்வு : ஒர் உறுப்பின் புற வளர்ச்சி அல்லது புடைப்பு.
processor : உருக்காட்டு பொறி : மறைந்துள்ள உருவத்தை காணத் தகும். உருவமாக மாற்ற உதவும் தானியங்கிப் பொறி. இது கதிர்ப் படவியலில் பயன்படுகிறது.
prochlorperazine : புரோக் குளோர்ப்பெராசின் : ஃபெனாத்தியாசின் மருந்துகளில் ஒன்று. உறக்க முட்டக்கூடியது வாந்தியைத் தடுக்கவல்லது கடுமையான குமட்டலையும், வாந்தியையும் தடுக்கப் பயன்படுகிறது.
procidentia : கருப்பை நழுவல்; கருப்பைத் தொங்கல் : கருப்பை முற்றிலுமாக நழுவி, யோனிக் குழாய் உட்பையினுள், ஆனால் உடல் மட்டத்திற்கு வெளியே அமைந்திருத்தல் கருப்பை இறக்கம்.
proctalgia : மலக்குடல் வலி : மலக்குடல் பகுதியில் உண்டாகும் வலி.
procttis : மலக்குடல் அழற்சி : மலக்குடலில் ஏற்படும் வீக்கம். துகள் சவ்வுப் படலம் வீங்குவதால் இது உண்டாகிறது.
proctocolectomy : குடல் அறுவை : மலக்குடலையும் பெருங்குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டி யெடுத்தல்.
proctocolitis : மலக்குடல்-பெருங்குடல் அழற்சி : மலக்குடலிலும் பெருங்குடலிலும் ஏற்படும் வீக்கம். பொதுவாக சீழ்ப்புண் உண்டாகும் வகை.
proctodeum : குதக்குழி : வளர் கருவின் பின்குடலின் இறுதிப் பகுதியில் புறத்தொலி வரியமைந்த பள்ளம். இதிலிருந்து குதத்துளையும் சிறுநீரிய செனிப்பி வெளித்துளையும் உருவாகின்றன.
proctologist : மலக்குடல் மருத்துவர் : பெருங்குடல், நேர் குடல் மற்றும் குதநோய்கள் மருத்துவத்தில் சிறப்புத் தகுதி பெற்றவர்.
proctology : மலக்குடலியல் : பெருங்குடல், நேர்குடல் மற்றும் குதநோய்கள் தொடர்பான சிறப்பு அறுவையியல்.
proctoparalysis : குதசெயலிழப்பு : குதச் சுருக்கு தசையின் செயல் இழப்பால், மலம் ஒழுகுதல்.
proctoscope : மலக் குடல் ஆய்வுக் கருவி; மலக்குடல் நோக்கி; மலக்குடல் காட்டி : மலக்குடலைப் பரிசோதனை செய்வதற்கான ஒரு கருவி. proctosigmoiditis : மலக்குடல் வளைப்பெருங்குடல் அழற்சி; மலக்குடல் நெறியழற்சி : மலக்குடலிலும் வளைவுப் பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம்.
proctostomy : குதத்துளை அறுவை : நேர்குடலில் செயற்கையாக ஒரு திறப்பை அறுவை மூலம் உண்டாக்கல்.
procyclidine : புரோசைக்ளின்டின் : தசைச் சுரிப்பு நோய்த் தடுப்பு மருந்துகளில் ஒன்று. பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இது தசை விறைப்பைக் குறைக்கும். ஆனால் நடுக்கத்தைக் குறைப்பதில்லை.
prodexin : புரோடெக்சின் : வயிற்றுப் புளிப்பு அகற்றும் மாத்திரை மருந்தின் வணிகப் பெயர். இதில் அலுமினியம் கிளைசினேட் மக்னீசியம் கார்பொனேட் அடங்கியிருக்கிறது.
prodromal : நோய் முன்குரறி : நோய்க்கு முந்திய அடையாளங்கள்.
proencephalus : மூளைத்துருத்தம் : நெற்றிப் பகுதியில் ஒரு பிளவின் வழியே மூளைத் துருத்தும் முதிர்கருவின் உருவக்குறை.
proenzyme : நொதிமுன்நிலை : 1. ஒரு நொதியின் செயலற்ற முன் நிலைப் பொருள். அதை செயல்பட செய்ய சில மாற்றம் தேவை. 2. சைமோஜென்.
proerythroblast : முதிரா செவ்வணு முன்நிலை : சிவப்பணு வளர்ச்சியில் முதலில் அறியப்படும் உயிரணு நிலை.
proerythrocyte : முதிரா சிவப்பணு : ஒரு உட்கருவைக் கொண்ட முதிரா சிவப்பணு சிவப்பணுவுக்கு முந்திய வளர்ச்சி நிலை.
proestrus : பூப்புமுன்நிலை : பூப்படைவதற்கு முன், கர்ப்பப்பையின் உள்வரியும், (கருப்) சினைப்பையின் சுரப்புச் சிறு பைகளும் வளர்தல்.
professional : தொழிலாளுநர் : 1. செய்தொழில் சார்ந்த 2 ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து செயல்படும் ஒருவர்.
profile : உருப்படிவம் : 1. நோயறி சோதனைகளின் தொகுதி ஒன்றுகொண்டு அடிநிலையை நிலைநாட்டி, பெருமளவு நோயறி செய்திகளை அறிதல். 2. எந்தவொரு பகுதிக்கும் பயன்படும். நலவாழ்வு கவனிப்பு பற்றிய தரவுகளின் குறுக்கு வெட்டுத் திரட்சி.
profilin : புரோஃபைலின் : தட்டணுக்களிலும் நிறமேற்கா வெள்ளணுக்களிலும் உள்ள ஒரு புரதம் புற்றுத் தோன்றுவதிலும், குருதி உறைகட்டி தோன்றுவதிலும் அணுத்தோற்ற மாறுதல்களை உண்டாக்க ஈடுபடும் ஆக்டின் இழைகளின் நீளத்தை ஒழுங்குபடுத்துகிறது. proflavine : புரோஃபிளேவின் : ஒரு நோய் நுண்மத்தடை மருந்து அக்ரிஃபினேவின் என்ற மருந்தினைப் பெரிதும் ஒத்தது.
progeria : முதிராமுதுமை : குழந்தைப் பருவத்திலேயே, முன்கூட்டியே முதுமை மாற்றங்கள், வயதானவர்களில் காணப்படுவது போன்று பூப்புப் பருவத்திலேயே தோன்றி, 20 வயதிலேயே முதுமையால் மரணமடைதல்.
progestational : கர்ப்பத்திற்குச் சாதகமான : கருவுறுதலுக்குச் சாதகமான.
progesterone : புரோஜெஸ்டிரோன் : கருப்பைக் குருதிப் போக்கினைக் குணப்படுத்தப் பயன்படுத்தும் இயக்குநீர் (ஹார்மோன்). கருச்சிதைவினைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. தசைவழி ஊசிவழி செலுத்தப் படுகிறது.
progestin : புரோஜெஸ்டின் : புரோஜெஸ்டீரான் போன்று செயல்படக்கூடிய ஒரு இயல்பான அல்லது செய்முறை கூட்டுப் பொருள்.
progestogen : புரோஜெஸ்டோஜென் : புரோஜெஸ்டிரான் போன்று அதே மாதிரி விளைவுகளை உண்டாக்கும் ஒரு இயக்குநீர்ப் பொருள்.
proglottis : நாடாப் புழு : பாலுறவில் முதிர்ச்சியடைந்த நாடாப் புழுவின் பகுதி.
prognathic : தாடைத்துருத்தம் : 1. துருத்திக் கொண்டிருக்கும் தாடையைப் பெற்றிருப்பது. 2. ஒன்று அல்லது இரண்டு தாடைகளும் முன் துருத்தியிருத்தல்.
prognosis : முன்கணிப்பு; முன்னறிதல்; வருநிலை அறிதல் : ஒரு நோய் எப்போது குணமாகும் என்பது பற்றிய முன் கணிப்பு.
prognostic : முன்கணிப்பு : ஒரு நிலை எப்படி முடியும் என்று முன்கூட்டியே கணிக்க முயலும் ஒரு பகுத்தாய்வு முறை.
programmed killing : திட்டமிட்ட அழிப்பு : மூளையின் ஆரம்ப வளர்ச்சி நிலையில், மிகுதியாக உருவான நரம்பணுக்களை தேர்ந்தெடுத்து அழித்தல்.
proguanil : புரோகுவானில் : முறைக் காய்ச்சலுக்கு எதிரான ஒரு செயற்கை மருந்து.
proinsulin : இன்சுலின் முன்நிலை : 'ஏ' மற்றும் 'சி' சங்கிலிகள் சி-பெப்டைடுடன் இணைந்து உள்ள, இன்சுலின் உருவாவதற்கு முந்திய பொருள்.
projectile vomiting : குமட்டல் வாந்தி : கபாலத்துள் அழுத்தம் அதிகரிப்பதால், குமட்டல் வராமலே, உண்டாகும் வேகமான வாந்தி.
projection : பிறழ்ச்சி அறிவு முன் வீச்சு : இயல்பான மக்களிடம் அவர்கள் அறியாமலேயே அமையும் ஒருவகை உளவியல் நேர்வு. இது மனநோய் அறிகுறி, முக்கியமாக அறிவுப் பிறழ்ச்சி. இந் நோய் கண்டவர்கள் தனது உணர்வுகளுக்கு மற்றவர்கள் காரணம் என்று குற்றஞ்சாட்டுவார்கள்.
prokaryon : புரோகேரியான் : உயிரணுவின் உட்கூழ் முழுவதும் இரைந்துள்ள உட்கருப்பொருள், அதைச் சுற்றி அணுப்படலமில்லை.
prolapse : உறுப்புப் பிறழ்ச்சி; கருப்பை நெகிழ்ச்சி; வெளித் தள்ளல்; பிதுக்கம்; சரிவு : உடலுறுப்புகள் இடம் பெயர்தல், கருப்பை நெகிழ்ச்சி அல்லது மலக்குடல் இடம்பெயர்வு.
prolapse uterus : கருப்பை நெகிழ்ச்சி; கருப்பைப் பிதுக்கம்.
prolapsus : உறுப்புப் பெயர்ச்சி : கருப்பை அல்லது மலக்குடல் இடம் பெயர்தல்.
proliferate : உயிரணுப் பெருக்கம் : உயிரணு பகுபட்டு எண்ணிக்கை பெருகுதல்.
proliferative phase : பெருகிப் பல்கும் நிலை : மாதப்போக்கு சுழற்சியில் முட்டை வெளிவருதற்கு முந்தியநிலை முட்டையை உள்ளேற்க கருப்பை உள்வரி நன்று தடித்து தயாராதல்.
proliferous : பெருக்கநிலை : இனப்பெருக்க ஒரே மாதிரியான திசுவணுக்கள் எண்ணிக்க அதிகரித்தல்.
promazine : புரோமாசைன் : துயிலூட்டும் மருந்துகளில் ஒன்று. மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பதைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
prometaphase : நடுநிலைமுன் : உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல்.
promethazine : புரோமித்தாசின் : பயண நோய்க்குப் பயன்படும் மருந்து. பயணத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு இதை அருந்தலாம். இது 6-12 மணி நேரம் வேலை செய்யும்.
promonocyte : ஒற்றையணு முன்நிலை : முதிரா ஒற்றையணு மற்றும் ஒற்றையணுவுக்கும் இடைநிலை உயிரணு.
promontory : புடைப்பு : 1. நடுச்செவியின் நீள்வட்ட சன்னலுள்ள மேலுள்ள புடைப்பு, நத்தை உருவின் அடித்திருப்பத்தைக் குறிக்கிறது. 2. முதல் திரிக எலும்பின் முன் மேல் விளிம்பு.
promoter : செயலூக்கி : 1. டிஎன்ஏ ஈரிழைத் தளத்தில் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ்கள் கட்டுச் செய்து, மரபணுப் படியெடுத்தலைத் தூண்டுதல், 2. ஒரு செயலூக்கியை செயல்படுத்தும் பொருள்.
pronasion : மூக்கடிப்புள்ளி : நாசித்தடுப்புக்கோணம் மற்றும் மேலுதட்டுப் பரப்புக்கும் இடையிலுள்ள புள்ளியிடம்.
pronation : புறம்திருப்புதல் : குப்புற நிலையில் வைத்தல் அல்லது அந்த நிலைக்கு திரும்புதல்.
pronator : கைகவிழ்த் தசை; உட்புரட்டி; புறனுருட்டி : கையைக் கவிழ்த்து வைப்பதற்கு உதவும் தசை.
prone : முன்கவிந்த; புரளல்; குப்புற : முகங்கவிந்து படுத்திருத்தல், நெடுஞ்சாண் கிடையாகக் குப்புறப்படுத்திருத்தல்.
pronephros : சிறுநீரக மூலம் : ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம்.
prong : கவர்முள் : 1. ஒரு கவைக்கோல் அல்லது அது போன்ற கருவியின் கூர்முனை. 2. ஒரு பல்லின் வேர் போன்ற கூம்பு போன்ற பொருள்.
pronometer : திருப்பல்மானி : முன்கையின் முன் திருப்பல் மற்றும் பின் திருப்பல் அளவைக் கண்டறியும் கருவி.
pronormoblast : இயல்பரும்பணு மூலம் : இயல்பு அரும்பணு வளர்ச்சியில் ஆரம்பநிலை. சிவப்பணு மூல வளர்நிலை.
pronucleus : உட்கருமூலம் : விந்தணு அல்லது கருவணுவில் கருவுறுத்தலின் பின் உள்ள உட்கருப்பொருள். ஒவ்வொன்றும் ஒரு தொகுதி (ஒற்றைப்படை) நிறக்கீற்றுகளைக் கொண்டது.
propantheline : புரோப்பந்தெலின் : இரைப்பை வாயில்நோய், உணவுப்பாதைப் (சீரணப்பாதை) புண் முதலிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைக் கூட்டுப்பொருள். இது சில நோயாளிகளுக்கு வாய் உலர்வை உண்டாக்கும்.
propeptone : பெப்டோன் முன்நிலை : புரதம் சீரணிக்கப்படுவதில் பெப்டோனாக மாறும் போது இடைநிலைப் பொருள்.
properdin : பெர்டின்முன்நிலை : இறுதிநிலை பகுதிப் பொருள்களின் நிரப்புப் பொருளை செயல்படுத்தும் மாற்று வழியில் கலந்துகொள்ளும் ஊநீரின் குளோபுளின் பகுதி.
prophase : முன்படிநிலை : இழையுருப் பிரிவு அல்லது ஒடுக்க பிரிவின் முதல்படி நிலை. இதில் நிறக்கீற்றுகள் தடிமன் அதிகரித்து மையப்புரிபிளந்து செல்லின் ஒருமுனை நோக்கி இரு கிளை மையப்புரிகள் நகர்கின்றன. prophylactic : நோய்த் தடுப்பு மருந்து; முற்காப்பு; தடுப்பு முறை : நோய்த் தடுப்பு முறை நோயைத் தடுக்கிற.
prophylaxis : முற்காப்பு; நோய்த்தடுப்பு; மருத்துவம்; நோய்த் தடுப்பு; தடைமுறை : நோய்த் தடுப்பு மருத்துவம்; நோய்த்தடுப்பு முயற்சி.
propionibacterium : முன் அணுத்துகள் : பால் பொருட்களில் காணப்படும் அழுகல் வளர், கிராம் சாயமேற்கும் நுண்ணுயிரிகள் இவை தோலிலும் குடல் பாதையிலும் உள்ளவை நோயுண்டாக்கக்கூடும்.
propranolol : பிரோப்ரேனலால் : நெஞ்சுவலி, இதயத் துடிப்பு லயக் கோளாறுகள் மற்றும் இரத்தக்கொதிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பீட்டா அண்ணிரேற்பித்தடை மருந்து.
proprietary name : வணிகப் பெயர் : மருந்தாக்க நிறுவனம் தான் தயாரிக்கும் மருந்துக்குக் கொடுக்கும் பெயர்.
proprioception : ஊடுணர்வு :உடலுக்குள்ளிருந்து எழும் உணர்வுத்துண்டல்கள் கொண்டு சமநிலை மாற்றங்களையும் இருக்கை நிலை மற்றும் இயக்கங்களை அறிந்துணர்தல்.
proptosis : விழித்துருத்தம்; விழிப்பிதுக்கம் : விழி முன்புறமாகப் பிதுங்கி இருத்தல்.
propulsion : முன்விழுதல் : பார்கின்சன் வியாதியில் காணப்படும் நடக்கும்போது முன் பக்கம் விழுந்துவிடுவது போன்ற நிலை.
propylthiouracil : ஃபுரோஃபில் தையோராசில் : கேடயச் சுரப்பி இயக்கத்தை மட்டுப்படுத்துகிறது. சில சமயம் கேடய நச்சுச் சுரப்பி நோய்க்குப் பயன் படுத்தப்படுகிறது. அதி தீவிர கேடயச் சுரப்பு இயக்க நச்சுத் தன்மையைக் கட்டுப்படுத்தும்.
prosection : உள்ளுறுப்புக் கூறாய்வு : ஒரு பிணத்தை அல்லது ஒரு உடல் பகுதியை உடற்கூற்றுக் காட்சி விளக்கத்திற்காக பகுத்தாய்தல்.
prosodemic : ஆட்பரவல் : நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் நோயைக் குறிக்கிறது.
prosopopagus : முகமொட்டிய இரட்டையர் : சமமற்ற இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மற்றொன்றின் முகத்தின் மேல் பகுதியில் ஒட்டியிணைந்துள்ளது.
prospective study : வருவதையறிய சோதனை : ஒரு ஆய்வின் ஆரம்பம் முதல், சோதனை முடியும்வரை, நோயாளிகளில் அல்லது நலமுள்ளவர்கள் சந்திக்கும் மருத்துவ, சமுக, சூழல்காரணிகளால் ஏற்படும் பாதிப்பை சோதித்து அல்லது பரவு நோயியல் முறையில் சோதனை முறை. 2. ஒரு நபர்களுக்கு நோய் நிலை பாதிப்பை அறிய விரும்பி சோதனையை துவக்கி நடத்தி முடித்தல்.
prostacyclin : புரோஸ்டாசைக்ளின் : குருதிநாளச் சுவர்களின் அக அடர்ப்படலத்தின் உயிரணுக்களினால் அமைந்த, இயற்கையாக உண்டாகும் ஒரு இயக்கப் பொருள். இது தகட்டணுக்கள் திரள்வதைத் தடுக்கிறது.
prostaglandins : புரோஸ்டாகிளாண்டின்ஸ் : முதலில் பிராஸ்டேட் சுரப்பியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இயக்குநீர்கள், வைட்டமின்கள், செரிமானப்பொருள் வினையூக்கிகள் ஆகியவற்றின் சில இயல்புகளைக் கொண்ட பொருள். உடல் திசுக்கள் அனைத்தும் ஏதேனும் புரோஸ்டா கிளாண்டினைக் கொண்டிருக்கிறது. தொடக்க நிலையில் கருச்சிதைவு செய் வதற்கும், ஈளை நோய்க்கும், இரைப்பை மிகை அமிலத் தன்மைக்கும் பயன்ப டுத்தப்படுகிறது.
prostanoid : புராஸ்னாய்டு : புராஸ்டா கிளான்டின்கள், புராஸ்ட்னாயிக் அமிலம் மற்றும் திராம்பாக் ஸேன்கள் உள்ளிட்ட, அரக்கி னாய்டிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பல்திறக்கூட்டு கொழுப்பு அமிலங்களின் தொகுதியிலொன்று.
prostate (gland) : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பி : ஆண்பால் உறுப்புக்கு உடன் இணைவாக உள்ள சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பு.
prostatectomy : சிறுநீர்ப்பை வாயில் சுரப்பி அறுவை : சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.prostatic acid phosphatase : புரோஸ்டாட்டிக் அமில ஃபாஸ்ஃபாட்டேஸ் : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியினால் சுரக்கப்படும் விந்து நீர்மத்திலுள்ள ஒரு செரிமானப் பொருள்.
prostatic massage : முன்வாயில் சுரமபபி அமுக்கம் : சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியை அமுக்கி விடுதல் அழுத்தித் தடவுதல்.
prostatism : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பி நோய் : சிறு நீர்ப்பை முன்வாயில் சுரப்பியில் ஏற்படும் நோய். சிறுநீர் அடைப்பு, சிறுநீர்க் கசிவு போன்றவை இதன் அறிகுறிகள்.
prostatitis : முன்வாயில் சுரப்பி அழற்சி : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியில் ஏற்படும் வீக்கம்.
prostatocystitis : சிறுநீர்ப்பை அழற்சி : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியிலும், ஆண்களின் சிறுநீர்ப்பையிலும் ஏற்படும் வீக்கம்.
prostheon : முன்முனை : மேல் தாடையின் பற்குழிவளைவின் கீழ்முனையின் நடுப்புள்ளி.
prosthesis : சீரமைவு அறுவை முறை; செயற்கை உறுப்புப் பொருத்தல்; கட்டுறுப்பு : ஊனங்களைச் செயற்கையாகச் சீரமைப்பதற்கான அறுவை முறை, உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைத்தல்.
prosthetics : செயற்கை உறுப்பு செய்தல்; செயற்கை உறுப்பு அமைத்தலியல் : உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைக்கும் அறுவை மருத்துவப் பிரிவு.
prostheitc group : ஒட்டும் தொகுதி.
prosthetier : செயற்கைப் பல்லியல்.
prosthetist : செயற்கை உறுப்பு வல்லுநர் : ஒரு முட நீக்கியல் அறுவை மருத்துவரின் அறிவுரைப்படி, செயற்கை உறுப்புகளையும் போன்ற மற்ற கருவிகளையும் வடிவமைத்து செய்து பொருத்துபவர்.
prosthokeratoplasty : கருவிழி இணைப்பு முறை : மனித அல்லது விலங்குத் திசுவாக இல்லாத ஒரு பொருளைக் கருவிழிப் படத்தில் பொருத்தும் அறுவை மருத்துவ முறை.
prostin : புரோஸ்டின் : மகப்றுே இடுப்பு வலியைத் தூண்டு வதற்குகாகக் கொடுக்கப்படுப் புரோஸ்டா கிளாண்டில்-E2 அடங்கிய கரு நிலைப்படுத்தும் குறிவாயுள் கரையும் மருந்துகளின் வணிகப் பெயர்.
protamine sulphate : புரோட்டாமின் சல்ஃபேட் : எளிய கட்ட மைப்புடைய ஒரு புரதம். ஹெப்பாரின் என்ற கல்லீரல் சுரப்பு நீருக்கு மாற்று மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் 1% கரைசலின் 1 மி.லி. அளவு 1000 அலகு ஹெப்பாரினின் விளைவுகளைச் செயலிழக்கச் செய்கிறது.
protamine zinc insulin : புரோட்டாமின் துத்தநாக இன்சுலின் : இன்சுலினின் கரையாத ஒரு வடிவம. புரோட்டாமின்(எளிய புரதம்), சிறிதளவு துத்த நாகம் ஆகியவை இணைத்து இது அமைகிறது. இது 24 மணி நேரம் வரை வேலை செய்யும்.
protease : புரத நொதிப்பு; புரோட்டீஸ் : புரதத்தைச் சீரணிக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இது புரதத்தைச் சிதைக்கும் செரிமானப் பொருள்.
protective : பாதுகாக்கும் : ஒரு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி, ஆபத்து அல்லது காயத்திலிருந்து காப்பாற்றும்.
protective isolation : பாதுகாப்புத் தனிமையாக்கம் : தொற்று நோய்கள் எளிதில் பிடிக்கும் வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் நோயாளி களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் புறத்தொடர்பில்லாமல் தனியாக ஒதுக்கி வைத்தல்.
protein calorie malnutrition (PCM) : புரதக் கலோரி ஊட்டக் குறைவு; புரத ஆற்றலூட்டக் கேடு : போதிய சீருணவு இல்லாமையால் உடலில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் குறைந்து ஏற்படும் ஊட்டச் சத்துக் குறைபாடு.
protein : புரதம் : நைட்ரஜனும் பிற இன்றியமையாத உயிர்ச் சத்துகளும் அடங்கிய ஊட்டச்சத்துப் பொருள். இவை விலங்கு மற்றும் தாவரத் திசுக்களில் உள்ளன. இவை அமினோ அமிலங்களினாலானவை. உடலின் வளர்ச்சிக்கும் பழுதடைந்த உறுப்புகளைச் சீர்படுத்துவதற்கும் இவை இன்றியமையாதவை. விலங்குப் புரதங்கள் மிகுந்த உயிரியல் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் இன்றியமையாத அமினோ அமிலங்கள் அடங்கி உள்ளன. தாவரப் புரதங்களில் சில அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன. புரதங்கள் உடலில் நீரால் பகுக்கப்பட்டு அமினோ அமிலங்கள் உருவாகின்றன. இந்த அமினோ அமிலங்கள் புதிதாக உடல் புரதங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
proteinase : புரோட்டீனேஸ் : உள்ளிருக்கும் புரதங்கள் அல்லது பல்பெப்டைடுகளை, நீராற்பகுப்படைய செயலூக்கம் தரும், ஒரு புரதச் சிதைப்பு நொதி.
protein C : 'சி' புரதம் : குருதியுறை காரணிகள் 5 மற்றும் 8 ஆகியவற்றை செயலிழக்கச் செய்யும், திறன் வாய்ந்த உறை வெதிர்ப்பி.
proteinosis : புரதமிகை : திசுக்களில் அளவுக்கதிக புரதம் குவிந்திருத்தல்.
proteinuria : சிறுநீர்ப்புரதம்; புரத நீரிழிவு : சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
proteolysin : புரதச் சிதைவு; புரதப் பிளவு : புரதத்தின் செரிமானப் பிணைப்புகள் நீரால் பகுத்தல் மூலம் சிதைந்து பல சிறிய பிணைப்புகளாக உருவாதல்.
proteolyte : புரதச் சிதைவுப்பொருள் : புரதத்தைச் சிதைக்கும் பொருள்.
proteolytic enzymes : புரதச் சிதைவுச் செரிமானப் பொருள்கள் : புரதச்சிதைவை ஊக்குவிக்கும் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்).
proteose : பிளவுக்கலவை : புரதங்களைப் பிளவுபடுத்தும் பொருள்களின் ஒரு கலவை. இது புரதத்திற்கும் பெப்டோனுக்கும் இடைப்பட்ட பொருள்களைப் புரதத்தைப் பிளவுபடுத்துகிறது.
proteus : அணூவுடலி : ஒழுகு உடல் உடைய அணு உயிரினம்; அடிக்கடி மாறும் இயல்புள்ள வயிற்றுடலி. இது உடலில், குடல் குழாயில் உடலுண்ணிகளாக வாழ்கின்றது. காயங்கள், சிறுநீர்க்குழாய் நோய்கள் போன்றவற்றில் நோய்க்குக் காரணமாக அமைகின்றன.
proto : முதல் : 1. முதல்நிலை குறிக்கும் இணைவார்த்தை 2. அதே தனிமங்கள் கொண்ட கூட்டுப் பொருள்களின் வரிசையில் கடைசியிலுள்ள ஒன்றைக் குறிக்கும் முன்னொட்டுச் சொல்.
protobiology : நுண்ணுயிரியல் : நுண்ணுயிர் வகைகளைப் பற்றிய படிப்பு சார்ந்த அறிவியல் பிரிவு.
protocol : ஆய்வின் படிநிலைக் குறிப்பு : ஒரு விசாரணைக்குப் பயன்படும் முறைகளின் விரிவான விளக்கம்.
proton : முன்னணு : எல்லா அணுக்களின் உட்கருவில் காணப்படும் நேர்மின்னேற்றத்துகள். ஒரு தனிமத்தின் அணு வெண்ணுக்கு ஈடான ஒரு அணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்களின் (முன்னணுக்களின்) எண்ணிக்கை. protopathic : உணர்வுக் குறைவு : ஊறுணுர்ச்சி குறைவாக இருக் கக்கடத்தும் உணர்வு நரம்புகளைக் குறிக்கும்.
protoplasm : ஊன்மம் (மும்கனியம்) : நீர், தாதுப்பொருள், கரிய கூட்டுப் பொருள்கள் அடங்கிய ஒரு உயிரணுவின் உயிர்ச்சத்துப் பொருள்.
protoplast : மூலமுதல் : 1. உள்ளடங்கிய படலமில்லாத உயிரணுவின் ஊன்மம் 2 மூலம்.
protospasm : முதல் சுரிப்பு : 1 : ஒரு பகுதியில் துவங்கி மற்ற பகுதி களுக்குப் பரவும் கரிப்பு (இசிவு).
prototype : மூலமுன் மாதிரி : ஆதி காலவகை ஒரு முல மாதிரியிலிருந்து பின்வரும் பிரதிகள் உருவாதல்.
protozoa : ஓரணுவுயிர்; ஒற்றையணு உயிரி : நுண்ணிய ஒரணு உயிர்ப் பிரிவைச் சேர்ந்த உயிர்கள்; நோய்களை உண்டாக்கும் ஓரணு உயிர் நுண்மங்கள்.
protraction : முன்நீட்டல் துருத்தல் : பற்கள் அல்லது தாடையமைப்புகள் இயல்பான நிலைக்கு முன் பக்கமாக, துருத்திக் கொண்டிருத்தல்.
protractor : நீட்டிப்பான் : 1. பின்னிழுக்கும். தசைக்கு மாறாக ஒரு பகுதியை முன்னிழுக்கும் தசை 2 காயங்களிலிருந்து வேற்றுப்பொருள்களை வெளியிலெடுக்கும் கருவி.
protriptyline : புரோட்ரிப்டிலின் : சோர்வகற்றும் மருந்துகளில் ஒன்று விரைவாக வேலை செய்யக் கூடியது. இது உறக்க முட்டு வதில்லை.
proud flesh : தழும்பு : ஆறிவரும் புண்ணைச் சுற்றி வளரும் தசை.
protrusion : முன்துருத்தல் : 1. முன்னால் நீட்டியுள்ள அல்லது துருத்தியுள்ள நிலை. 2. கீழ்த்தாடை முன் துருத்திய நிலை.
provirus : வைரஸ்முன்நிலை : ஒரு ஏற்பு செல்லின் மரபணுத் தொகுதிக்குள் இணைந்துள்ள வைரஸ் செல்பிளவின் போது ஏற்பு செல்லின் வழித் தோன்றல்களுக்கு நேரடியாக ஏந்திச் செல்லப்படுகிறது.
provisional : தற்பொழுதைக்கான : 1. தற்காலிக, 2. கிடைத்துள்ள உடல்நிலையடிப்படையில் முடிவு. 3. சோதனையான.
provitamin : வைட்டமின் முன் பொருள்; முன்னுயிர்ச் சத்து: முன்வைட்டமின் : வைட்டமினுக்கு முன்னோடியான ஒரு பொருள். கரோட்டின், வைட்டமின்-ஏ ஊட்டச் சத்தாக மாற்றப்படுகிறது. provocative tests : தூண்டும் சோதனைகள் : நோயின் அறி குறிகளையும் உணர்குறிகளையும் தற்காலிகமாக அதிகரிக்க வைத்து நோயை உறுதியாக அறிய வடிவமைக்கப்பட்ட சோதனை.
proximal : அணுக்க நோக்கு; மையம் நோக்கிய; நெருங்கிய; அண்மைய : உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள.
proximity of blood : அணிமை உறவு : மிக நெருங்கிய உறவு முறை.
proximoataxia : மேற்பகுதி ஒத்திசையாமை : உறுப்புகளின் மேற்பகுதித் தசைகளின் ஒத் திசையாமை.
prozone : புரோசோன் : விளைவிய அல்லது எதிர்மிய அளவுக்கதிக நிலையால் குறிப்பாக ஒரு பிரெசிபிட்டின் மறுவினைகளில் உள்ள எதிர்மிய மிகையால், ஏமக்காப்பு மறுவினையின் செயலிழப்பு.
prune belly : வற்றிய வயிறு : வயிற்றுச் சுவர்த் தசைகள் இல்லாமையால், வற்றிய தோற்றம் கொண்ட ஒட்டிய வயிற்றுச் சுவர்.
prune belly syndrome : வயிற்று நலிவு நோய் : ஆண் குழந்தைகளின் அடிவயிற்றுத் தசை மண்டல் மெலிவடைந்து வயிறு வற்றிக் காணப்படும் நோய்.
pruned tree appearance : காய்ந்த மரத்தோற்றம் : மைய நுரையீரல் குருதி உறை கட்டியடைப்பில் நுரையீரல் தமனி வரைவுப்படத் தோற்றம்.
prurigo (pruritus) : அரிப்பு கொப்புளம்; தோல் அரிப்பு நோய் சொறி : குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தோல் அரிப்பு நோய்.
pruritus : தோல் அரிப்பு; அரிப்பு; நமைச்சல்.
Prussian blue : பிரஷ்ஷியன் நீலம் : ஜெர்மனியிலுள்ள பிரஷ் வியாவின் பெயரைக் கொண்டு ஒரு அடர் நீல நிறம் தோன்றுவதன் மூலம் தாமிரமிருப்பதைக் காட்டப் பயன்படும் ஒரு வேதியசாயப் பொருள்.
pseudoangina : போலி இதய வலி; இடது மார்பு பொய் வலி : இடது மார்பில் ஏற்படும் போலியான வேதனை. இதில் உண்மையில் இதய வலி ஏற்படுவதில்லை. கவலை கொண்டவர்கள் தங்களுக்கு இத்தகைய வலி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.
psudoarthrosis : போலி மூட்டு : ஒன்றிணையாக எலும்பு முறிவின் காரணமாக உண்டாகும் போலிமூட்டு, முன்கால் எலும்பில் பிறவியில் ஏற்படுவதுண்டு.
pseudo bulbar paralysis : போலி நாக்கு வாதம்; போலி முகுள வாதம் : நாக்கின் ஒரு புறத்தைச் செயலிழக்கச் செய்யும் வாத நோய். அடுத்தடுத்து ஏற்படும் தாக்குதல்களினால் மூளைக் கோளாறு ஏற்படக்கூடும்.
pseudo cholinesterase : போலி கோலினெஸ்டிராஸ் : குருதி நீரில் உள்ள நரம்புத் திசு அல்லாத மற்ற திசுக்களிலும் காணப்படும் ஒரு செரிமானப் பொருள்கள் (என்சைம்). இது நுரையீரலில் சேர்த்து இணைக்கப்படுகிறது.
pseudocrisis : போலி நெருக்கடி : உடலில் வெப்பம் விரைவாகக் குறைந்து ஒரு நெருக்கடிபோல் தோன்றுதல். இதனைத் தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கும்.
pseudo cyesi : போலிக் கர்ப்பம்; கருவுற்ற பொய்யுணர்வு; போலிச் சூல்.
pseudodiabetes : போலி பொய் நீரிழிவு : நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பில் போன்று குளுக்கோஸ் ஏற்புக்குறை காட்டும், கார்போஹைட்ரேட் மாற்றக் குறை.
pseudodiphtheria : டிப்தீரியா போலி : தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) போன்ற ஒரு நோய்.
pseudoglobusins : போலி உருளைப் புரதங்கள்.
pseudo hermaphrodite : போலி இருபால் இனப்பெருக்கச் சுரப்பி; போலி இருபாலி : ஒருவரிடம் ஒரு பாலினத்தின் இனப்பெருக்கச் கரப்பிகள் இருந்து, புற இனப்பெருக்க உறுப்புகள் எதிர்ப் பாலினத்தினுடையதாக இருத்தல்.
pseudojaundice : பொய்காமாலை : இரத்தத்தில் கெரோட்டின் மிகையால், காமாலை போன்று தோன்றும் தோல் நிறமேற்றநிலை.
pseudologia fantastica : கற்பனை நோய் : நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும்.
pseudolymphoma : நிணப்புற்றுப்போலி : நினவணுக்களின் எண்ணிக்கை மிகுதியாக அமைந்த நிணமிகை வளர்ச்சி.
pseudomembrane : பொய்ப் படலம் : தொண்டைமன வாய்ப்பகுதியில், ஒரு மெல்லிய ஒட்டிய சாம்பல் வெள்ளைக் கசிவை அகற்றினால் இரத்த ஒழுக்கு நிகழும். நிறமேற் காவனுக்களையும் திசு வழிவு எச்சங்களும் அக்கசிவிலுள்ளன.
pseudomeningitis : மூளையுறையழற்சிப் போலி : மூளையுறை அழற்சியில்லாமல் முளையுறையழல் போல் தோன்றும் நிலை.
pseudomenstruation : போலி மாதப்போக்கு : கர்ப்பப்பையின் உள்வரியின் வழக்கமான மாற்றங்கள் இல்லாமல் வெளியாகும் கர்ப்பப்பை இரத்தப் போக்கு.
pseudomonas : போலி பாக்டீரியா : ஒரு பாக்டீரியா இனம். இது கிராம்சாயம் எடுக்காத சாயத் தாவரப் பொருள்.
pseudomucin : போலிப்பிசின் : சில சூல் சுரப்பி நீர்க் கட்டிகளில் காணப்படும் பிசின் அல்லாத ஊன் பசைப் பொருள்.
pseudoparalysis : போலி வாத நோய் : நரம்பு மண்டல நைவு காரணமாக ஏற்படாத ஒரு வகைத் தசை ஆற்றல் குறைபாடு.
pseudoplegia : போலி நரம்பு வாதம் : உடல் நரம்புக் கோளாறு போன்று தோற்றமளிக்கும் வாத நோய், ஆனால் இது இசிவு நோயினால் உண்டாவதாகும்.
pseudopolyposis : போலிப் பெருங்குடல் தொங்கு தசை : விரிவாகப் பரவியுள்ள மலக் குடல் வீக்கத்தினால் இது பெரும்பாலும் உண்டாகிறது.
pseudopuberty : பொய்பூப்பு : லெய்டிக் செல்கட்டியால் ஆண் குழந்தைகளில், ஆணுறுப்பு பெரிதாக வளர்ந்து, பூப்புமயிர் வளர்ந்த நிலை.
psittacosis : பறவை நோய்; கிளி நோய்; கிளிப்பிணி : கிளிகள், புறாக்கள் போன்ற பறவைகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் சீதசன்னி (சளிக் காய்ச்சல்) என்னும் நிமோனியா நோய்.
psoas : இடுப்புத் தசை.
psora : சிரங்கு.
psoralen : சோரலென் : இயற்கையாகக் கிடைக்கும் ஒர் ஒளி உணர்வுக் கூட்டுப் பொருள் இது புறவூதாக் கதிர்வீச்சுக்கு உட்படும்போது தோலில் கருநிறமிகளை அதிகரிக்கிறது. வெள்ளைத் தோல் நோய்க்குப் பயன்படுத்தப்படுகிறது.
psoriasis : சாம்பல்படை; நமட்டுச் சொறி; யானைச் சொறி; தடிப்புத் தோலழற்சி : மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில், குறிப்பாக முழங்கால் மூட்டு, முழங்கைப் பகுதிகளில் ஏற்படும். இஃது மன அழுத்த உளைச்சலினால் மிகைப்படக்கூடும். psoriatic arthritis : சாம்பல் படை மூட்டு வீக்கம் : சாம்பல் படை நோயாளிகளுக்கு ஏற்படும் வாத மூட்டு வீக்கம். சாம்பல் படை நோயாளிகளில் 35% பேருக்கு இது உண்டாகிறது.
psoriderm : சோரிடெர்ம் : சாம்பல் படை நோய்க்குப் பயன் படக் கூடிய, லெத்திசினும், கரி எண்ணெயும் (கீல்) கலந்த நிறமற்ற பொருள்.
psychie : உளம்; மனம்; உயிர்; ஆன்மா.
psychiatrist : மனநோய் மருத்துவர்; உள நோய் மருத்துவர் : உளவியல் நோய் மருத்துவர்.
psychiatry : மனநோய் மருத்துவம்; உள நோயியல் : உளவியல் நோய்களைக் கண்டுபிடித்துக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
psychic : உள்ளம் சார்ந்த; உள்ளத்தின் : உடலியல்பு கடந்து உள்ளம் சார்ந்த.
psychics : உள ஆய்வியல்.
psychoactive : மனநிலை பாதிக்கும் (மருந்து) : மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது.
psychoanalysis : உளவியல் கழுப்பாய்வு; உளப் பகுப்பியல்; உள ஆய்வு : உளநிலை, உணர்வு ஆகியவற்றை ஆய்வு செய்து நோய்களைக் குணப் படுத்தும் உளவியல் மருத்தவமுறை.
psycho-analyst : உளவியல் மருத்துவ அறிஞர்; உளப் பகுப் பாய்வாளர் : உள ஆய்வாளர்.
psychochemotherapy : உளவியல் வேதி மருத்துவம்; வேதி உள மருத்துவம் : உணர்வு நிலையில் நோய்க் குறியியல் மாறுதல்களை மேம்படுத்துவதற்கு அல்லது குணப்டுத்துவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துதல்.
psychodyama : உளவியல் நாடக மருத்துவம்; உள நாடகம் : நோயாளிகள் தங்கள் சொந்தச் சிக்கல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவாதங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்து, அவர்களை உட்கிடக்கையை வெளிப்படுத்துமாறு செய்யலாம்.
psychodinamics : உள ஆற்றல் ஆய்வியல்; உள இயக்கவியல் : உளவியல் செய்முறைகள், குறிப்பாக உளவியல் நடவடிக்கையில் காரணகாரிய அம்சங்கள் பற்றி ஆராயும் அறிவியல். psychogalva nometer : மன மின்னோட்டமானி : உணர்ச்சித் தூண்டல்களின் விளைவாக தோலில் தோன்றும் மின் தடை மாற்றங்களைக் கண்டறியும் ஒரு கருவி.
psychogenesis (psychogony) : மனத் தோற்ற வளர்ச்சி : மனத்தின் தோற்ற வளர்ச்சி; மனதில் கருத்து உருத்தோற்றம்.
psychogenic : உளவியல் குறிகள் : உடம்பில் அல்லாமல் உள்ளத்தில் தோன்றும் உளவியல் குறிகள்.
psychological diseases : உளவியல் நோய்கள் : மனம் விளைவிக்கும் உடல் நோய்கள்.
psychological moment : உற்ற வேளை : மனத்தைத் திறம்படக் கவர்ந்து ஆட்படுத்துவதற்குரிய துல்லியமான காலக்கூறு.
psychogeriatric : மூப்பு உளவியல் சார்ந்த; முதியோர் உள மருத்துவம் : மூப்பியல் மருத்துவம் தொடர்பான உளவியல் சார்ந்த.
psychologist : உளவியலறிஞர் : மன இயல்புகளையும் இயக்கங் களையும், விளைவுகளையும் ஆராயும் அறிஞர்.
psychology : உளவியல் : உள இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறிவியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை.
psychometry : உற்றறி பண்பாற்றல் : தொடுவதன் மூலம் பொருள்களின் அல்லது ஆட்களின் உள்ளியல்புகளை அறியும் ஆற்றல்.
psychomotor : உளவியல் தசை இயக்கம்; உளவியக்க : உள ஆற்றல் மூலம் தசைப் பகுதியை இயங்கும்படி செய்தல்.
psychoneurosis : தொடக்கச் சித்தப் பிரமை; உள நரம்பியம் : சித்தப் பிரமையின் தொடக்க நிலை.
psychopath : மனநோயாளி; உளப்பிறழ்வு; உளக்குழப்பம் : மனநிலை திரிந்தவர் உளநோயாளி.
psychopathic personality : உளநோய் ஆளுமை : இடையறாத மனக்கோளாறு அல்லது உள்ள ஊமை. இந்த நோயாளிகள், முரட்டுத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் நடந்து கொள்கிறார்கள். இதற்கு மருத்துவச் சிகிச்சை தேவை.
psychopathist : உளநோய் மருத்துவம்.
psychopathology : உளநோய் ஆய்வியல்; உள நோயியல் : இயல்பு மீறிய உளவியல் நோய்கள் பற்றிய ஆய்வியல். psychophysical : மனம் உடல்சார் : உடல் தூண்டல் மற்றும் உணர்வு விளைவுக்கிடையே உள்ள உறவுநிலைகள் பற்றியது.
psychopathy : உளவியல் நோய்; உளப்பிணி; உளவியல் மருத்துவம் : மனத்தைப் பிடித்திருக்கும் ஒரு நோய். இந்நோயாளிகளுக்கு மனமுதிர்ச்சியும், உணர்வு வளர்ச்சியும் குன்றியிருக்கும்.
psychopharmacology : மனக் கோளாறு மருந்து மருத்துவம்; உள மருந்தியல் : மனக்கோளாறுகளுக்கு மருந்துகளைப் பயன் படுத்துதல்.
psychophysics : உடலுளத் தொடர்பியல்; உள இயற்பியல் : உடல் உணர்வுகளுக்கும் தூண்டுதல்களுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் உளவியலின் ஒரு பிரிவு.
psychoprophylactic : உளநோய் தடுப்பு; உள முற்காப்பு : உள நோய்களைத் தடுப்பதற்கான மருத்துவ முறை.
psychosis : பைத்தியம்; கோட்டி; கிறுக்கு; உளப்பிணி; உளவியம் : உணர்வுகளுக்கு எதிர்ச்செயல் புரிதல், நினைவுகர்தல், செய்தித் தொடர்பு கொள்ளுதல், பொருள் கொள்ளுதல், முறையாக நடந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கான திறமை குறைவாகவுள்ள ஆள்.
psychosomatic diseases : உளவியல் வழி நோய்கள்; உள வழி உடல் நோய்; உள உடலிய நோய்கள் : உளவியல் கோளாறு காரணமாக உண்டாகும் உடல் நோய்கள் மனக்கவலைகளினால் ஏற்படும் உடல் நோய்கள். தானியங்கும் நரம்பு மண்டலம் அளவுக்குமீறி இயங்குவதால் இது உண்டாகிறது. எடுத்துக் காட்டாக, குற்ற உணர்வு காரணமாக முகம் சிவக்கிறது.
psychosom imetics : மருட்சி மருந்துகள்; உளநோய் வினை : பைத்தியம் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் எல்எஸ்டி போன்ற மருட்சியூட்டும் போதை மருந்துகள்.
psychosurgery : மனநோய்க்கான அறுவை : மனநல வியாதிகளை சரிசெய்யய வடிவமைத்து நடத்தப்படும் அறுவை மருத்துவம்.
psychptherapeutics : வசிய மருத்துவம் : வசியத்துயில் போன்ற வழிகளினால் மனநோய்க்கு மருத்துவம் செய்தல்.
psychotherapy : அரிதுயில் மருத்துவம்; உளவழி மருத்துவம் : வசியத்தின் மூலம் உறக்கமுட்டி நோய்களுக்கு மருத்துவமளித்தல்.
psychotic : மனநிலை பாதிப்பு : 1. மனநலக் குறைவால் பாதிக்கப் பட்ட அல்லது தொடர்புடைய, 2. மனநலக்குறைவுக்கான குண நிலைகளை வெளிப்படுத்தும் ஒருவர்.
psychotropic : மூளையணு விளைவு; மனநிலை மாற்றி : மூளை அணுக்களின் மீது குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிற பொருள்.
pterygium : இமை முனை திசு வளர்ச்சி; தசைப் படர்த்தி; விழிப் படலம் : விழி வெண்படலத்தை மூடிக்கொள்ளும் வகையில் இமையிணைப் படலத்தில் ஏற்படும் சிறகு போன்ற தசைப்படலம்.
pterygoid : தாடை முளை எலும்பு : வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல்தாடையிலுள்ள இரட்டை முளை எலும்புகளில் ஒன்று.
pterygoid process : வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல் தாடையிலுள்ள இரட்டை முளை எலும்புகளின் அமைப்பு.
ptosis : இமை தொய்வு; இமை வாதம்; இமை இறக்கம்; இமை இயங்காமை; இமைத் தொங்கல் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல்.
ptyalin : உமிழ்நொதி; உமிழ்நீர் : எச்சில் மாச்சத்து இலேசான அமிலத் தன்மையுடையது. இது மாச்சத்தை டெக்ஸ்டிரினாகவும், மால்ட்டோசாகவும் மாற்றுகிறது.
ptyalism : மிகை எச்சில்; எச்சில் பெருக்கு : எச்சில் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.
ptyalolith : எச்சில் அடைப்பு; எச்சிற்கல் : எச்சில் கரப்பி நாளத்தில் உண்டாகும் கல்லடைப்பு.
pubertas praecox : முதிரா பாலியல் வளர்ச்சி; முன் அலர் பூப்பு : பருவம் வரும் முன்பு ஏற்படும் பாலியல் வளர்ச்சி.
puberty : பூப்புப் பருவம்; பெண்மையடைதல்; பூப்பு நிலை : இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சியடையத் தொடங்கும் வயது.
pubes : பூப்பு மயிர்ப்பகுதி; அல்சூல் : பூப்பு எலும்பை மூடியிருக்கும் மயிருள்ள பகுதி.
pubiotomy : இடுப்பெலும்பு முறிவு : உயிருள்ள குழந்தையை வெளிக் கொணர்வதற்காக இடுப்பு முன் எலும்பை முறித்தல்.
pubis : இடுப்பு முன் எலும்பு; அல்குல் எலும்பு : இடுப்புக்குழி எலும்பும் கூட்டின் முன்புள்ள மைய எலும்பாக அமைந்து உள்ள முன் எலும்பு.
public health : பொதுசுகாதாரம் : சமுதாய முயற்சிகளை செயல் படுத்துவதன் மூலம், நோய் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, நலவாழ்வுக்கு வழிவகுக்கும் கலை மற்றும் அறிவியல். pudendal block : மறையுருப்பு உணர்ச்சி நீக்கம் : பாலினப் புற உறுப்பு போன்ற மறையுறுப்பினை உறுப்பெல்லை உணர்ச்சியகற்றும் மருந்து கொடுத்து உணர்விழக்கச் செய்தல் ஆயுதத்தால் குழந்தையை எடுக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது.
pudendum : புற உறுப்பு; பெண்பால் வெளியுறுப்பு : இனப் பெருக்கத்திற்கான பாலினப் புற உறுப்பு முக்கியமாகப் பெண்களுடையது.
pudenz-Hayer valve : கபால தடுக்கிதழ் : நீர் கொண்ட கபாலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்படும் ஒரு வழித் தடுக்கிதழ்.
puerile breathing : முணுமுணுச் சுவாசம் : முணுமுணு என்ற ஒலியுடன் குழந்தைபோல சுவாசிக்கும் கோளாறு.
puerperal : மகப்பேறு சார்ந்த : பிள்ளைப்பேறு சார்ந்த.
puerperal fever : பேறுகாலக் காய்ச்சல்.
puerperal insanity : பேறுகாலகப் பைத்தியம் : மகப்பேறு கால (பிரசவம்) பைத்தியம்.
puerperat sepsis : மகப்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் : மகப்பேற்றுக்குப் பின் உண்டாகும் சீழ்க்காய்ச்சல்.
puerperium : மகப்பேற்றுப் பின் காலம்; மகப்பேற்றுக் களைப்புக் காலம் : மகப்பேற்றுக்குப் பின்பு வயிறு உட்சுருள்தல் முடிவடைகிற 6-8 வார காலம்.
puff : திடீர் வேக மூச்சு (உள்ளிழுத்தல்) : உலர்பொடி உள்ளிழுப்பான்கள், அளவிட்டு உள்ளிழுப்பான்களை செயல் படுத்தி, திடீரென்று வேகமாக முச்சிழுத்து மருந்தேற்றல்.
puffy tumour : மெத்தென்றகட்டி : எலும்புமச்சை அழற்சியால் பாதிக்கப்பட்ட நெற்றியெலும்பின் மேலுள்ள ஒரு அமுங்கக்கூடிய வீக்கம்.
pulmoaortic : நுரையீரல் பெருந்தமனிசார் : 1. நுரையீரல்கள், பெருந்தமனி சார்ந்த. 2 நுரையீரல் தமனி பெருந்தமனி சார்ந்த.
pulmoflator : நுரையீரல் விரிவாக்கி : நுரையீரலை உப்பச் செய்யும் கருவி.
pulmonary : நுரையீரல் சார்ந்த; நுரையீரல் வழி : நுரையீரல்கள் தொடர்பான நுரையீரல்களில் உள்ள நுரையீரல்களை உடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட நுரையீரல்களில் வலிமை இழந்த.
pulmonary artery : நுரையீரல் தமனி : இதயத்திலிருந்து நுரை யீரல்களுக்குக் குருதி கொண்டு செல்கிற முதன்மைக் குருதிநாளம். pulmonary infection : நுரையீரல் நலிவு.
pulmonary oedema : நுரையீரல் நீர்க்கோவை; நுரையீரல் வீக்கம் : நுரையீரலில் உண்டாகும் நீர்த் தேக்கம்.
pulmonary sac : நுரையீரல்பை.
pulmonary tuberculosis : நுரையீரல் கபம்.
pulmonary vein : நுரையீரல் சிரை.
pulmonic : ஈளை மருந்து : நுரையீரல் நோய்க்குரிய மருந்து.
pulmotor : மூச்சூட்டக் கருவி : காற்று அல்லது ஆக்சிஜனை நுரையீரல்களுக்குள் செலுத்தி செயற்கை மூச்சூட்டத்தை தூண்டும் கருவி.
pulp : தசைக்கூழ்; பற்கூழ்; கூழ்; பசை : பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள்.
pulsatile : துடிப்பு சார்ந்த; துடிக்கும் : நாடித் துடிப்பு இயல்பு வாய்ந்த.
pulsation : நாடித்துடிப்பு; துடிப்பு உள்ள : ஒழுங்காக இயங்கும் இதயத் துடிப்பு.
pulse : நாடி/நாடித் துடிப்பு; துடித்தல் : இதயத்தின் இடது கீழறை சுருங்குவதால் தமனிகளுக்குக் கடத்தப்படும் துடிப்பு: குருதிக் குழாய். அதிர்வு, மணிக் கட்டில் கை வைத்து இந்தத் துடிப்பை அறியலாம்.
pulseless disease : நாடியின்மை நோய் : கழுத்திலும், புயங்களிலும் நாடித் துடிப்பு இல்லாமலிருந்து தமனிகள் படிப்படியாக நலிவடையும் நோய்.
pulsimeter : நாடிமானி : நாடி ஆற்றலை அல்லது நாடித் துடிப்பு வீதத்தை அளவிட்டுக் காட்டும் கருவி.
pulsus alternans : ஏற்ற இறக்க நாடித் துடிப்பு : நாடித் துடிப்புகள் வலுவின்றியும், வலுவாகவும் மாறிமாறி ஏற்படுதல். இது இதயத்தின் இடது மேலறை நோயினால் உண்டாகிறது.
pulsus bigeminus : இரட்டை நாடித் துடிப்பு : சில நோய் நிலைகளில் உண்டாகும் இரட்டை நாடித் துடிப்பு அலகு. இது அளவுக்கு அதிகமாக மருந்து கொடுப்பதாலும் உண்டாகிறது.
pultaceous : கூழ் மருந்து : வீக்கத்திற்கான களி போன்ற மருந்து.
pulvis : தூள்; பொடி; சூரணம் மருந்துப்பொடி.
puke : வாந்தி.
puker : வாந்தி மருந்து. pump : எக்கி : 1. அழுத்தம் அல்லது உறிஞ்சல் மூலம் வளியங்கள் அல்லது நீரங்களை கட(செலு)த்தும் கருவி. 2 இதயம், இரத்தத்தை இரத்தக் குழாய்களுக்குள் செலுத்துவது போல, காற்று அல்லது நீரத்தை ஒரு பாதை வழியாக அழுத்தத்துடன் செலுத்தல்.
punch : துளைப்பி : ஒரு பொருள் அல்லது திசுவில் ஒரு சிறு வட்டத்துளை போட உதவும் கருவி.
punch-drunk : குத்துமயக்கம் : குத்துச்சண்டை வீரர்கள் போல, தலையில் ஏற்படும் பல் வேறு காயங்களால் ஏற்படும் நினைவிழப்பு நோய்க்குறித் தொகுதி.
punched out : துளையிட்ட : பல்மச்சைப் புற்றில் கதிர்ப் படத்தில், எலும்புகளில் துளையிடப்பட்டது போன்ற தோற்றம்.
puncture : துளை; கீறல்; கிழிசல்; துளையிடல் : கூர்மையான கருவியினால் ஏற்படுத்தப்பட்ட குத்துக்காயம். ஒரு திரவத்தை உட்செலுத்துவதற்காக உடலில் துளையிடுதல்.
PUO : காய்ச்சல் : காரணம் தெரியாத காய்ச்சல்.
pupil : கண்ணின் மணி / பாப்பா / பாவை : ஒளி புகுவதற்காக கண்ணின் விழித்திரைப் படலத்தின் மையத்திலுள்ள பாவை.
pupillary : கண்மணி சார்ந்த; பாவை சார்ந்த : கண்ணின் மணி தொடர்பான.
purgation : மிகு மல நீக்கம்; பேதி : மலக்கழிவு குடல் துப்புரவாக்குதல்.
purgative : பேதி மருந்து; பேதி ஊக்கி; மலமிளக்கி : குடல் இளக்க மருந்து மலத்தை வெளியேற்றிக் குடலைத் தூய்மைப்படுத்துகிற மருந்து.
purge : பேதி மருந்து; வயிற்றுப் போக்கு உண்டாக்கி : 1. பேதி மருந்து கொண்டு குடல் கழுவல் 2. குடல் கழுவப் பயன்படுத்தப்படும் (பேதி) மருந்து.
purine : பியூரின் : நைட்ரஜன் கொண்ட கூட்டுப் பொருள்களின் பெரும் தொகுதியில் ஒன்று. உணவிலுள்ள சில புரதங்கள் செரிக்கப்படும்போது இறுதியிலுள்ள பொருள்களாகும்; சிலவற்றை உடலே கூட்டியிணைத்து உண்டாக்குகிறது.
purity : தூய்மை : உடல் துப்புரவு.
Purkinje cell : பர்கிஞ்சி அணு : போலந்து நாட்டு, உடல் இயங் கியலாளர், ஜோகன்ஸ் பர்கிஞ்சியின் பெயரால் அழைக்கப்படும் சிறுமூளைப் புறணியிலுள்ள பெரும் நரம்பணு.
Purkinje fibres : பர்கிஞ்சி இழைகள் : கட்டுக் கிளைகளின் தொடர்புள்ள இதயத்தசை நார்கள், இதயக் கீழறை சுவர்களுக்குள் நீள்கின்றன.
purpura : ஊதாப்புள்ளி நோய்; இரத்தக் கசிவு : தோலின் மேல் கருஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் கொண்ட நோய். தந்துகிச் சுவர்களின் இணைப்பு பழுதடைவதால் அல்லது இரத்தத் தகட்டணுக்களின் தரம் அல்லது அளவு குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.
purpuric acid : பர்ப்யூரிக் அமிலம் : ஊதாநிற உப்புகள் கொண்ட அமிலம்.
purulence (purulency) : சீழ்க்கட்டு : சீழ்கட்டிய நிலை.
purulent : சீழ்க்கட்டிய; சீழ்நிலை : சீழ்க்கண்ட சீழ் வடிகிற.
pus : சீழ் : சிலவகைக் கட்டிகளில் உண்டாகும் திரவம். இது பொதுவாக மஞ்சள் நிறமாக இருக்கும். இதில் திகத்திரவமும், பாக்டீரியாவும், இரத்த வெள்ளணுக்களும் அடங்கியிருக்கும்.
pus cells : சீழ் அணுக்கள்.
pustule : சீழ்க்கொப்புளம் : சீழ் கொண்ட மறுப்போன்ற தசை வீக்கம்.
putrefaction : அழுகல் / பதனழுவு; நொதித்தல் : உடல் உறுப்புகள் பாக்டீரியாவினால் சீழ்பிடித்து அழுகிப் போதல்.
putrescible : அழுகக்கூடிய : சீழ் பிடித்து அழுகுந் தன்மையுடைய.
putrid : அழுகிய பதனழிந்த.
purtid fever : குடற்காய்ச்சல்.
putrid sore throat : நச்சுத் தொண்டைக்கட்டு.
putridity : அழுகல்.
PVD : வெளிச்செல் குழாய் நோய்.
pyaemia : சீழ் நச்சுக் குருதி : மூளை, சிறுநீரகம், நுரையீரல்கள், இதயம் போன்ற உறுப்புகளில் இரத்தப் பாக்டீரியாக்கள் தோன்றிப் பெருகி வளரும் ஒரு கடுமையான குருதி நச்சூட்டு நோய்.
pyarthrosis : மூட்டுக்குழிச் சீழ்; மூட்டுச் சீழ்.
pyelitis : சிறுநீரகக்குழி அழற்சி; சிறு நீரக நுண்குழல் நோய் : கர்ப்ப காலத்தில் சிறுநீரகக் குழியில் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தினாலும் வரும்.
pyeloilithotomy : சிறுநீரக கல் அறுவை : சிறுநீரக குழிக் கூட்டில் ஏற்படும் கல்லை அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
pyelonepthritis : சிறுநீரக சீழ் அழற்சி; சிறுநீரகம்-குழி அழற்சி : சிறுநீரகக் குழியிலிருந்து சிறுநீரகத்தின் மேலுறைவரைப் பரவும் ஒருவகைச் சிறுநீரக நோய்.
pyelopiasty : சிறுநீரக குழி ஒட்டுறுப்பு அறுவை : சிறுநீரகக் குழியில் செய்யப்படும் ஒட்டு உறுப்பு அறுவை.
pyelostomy : சிறுநீரக குழித் திறப்பு : சிறுநீரகக் குழிக்குள் திறப்பு ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
Pygnalionism : பிக்மேலியானியம் : கிரேக்கச் சிற்பி பிக்மேலியான், தான் வடித்த சிலை உருவையே காதலித்தது போன்று, தான் உருவாக்கிய ஒன்றின் மேலேயே காதல் கொள்ளும் கோளாறு நிலை.
Pyknic : தடித்த உடல் : சிறிய உருண்ட உறுப்புகள், முழுமுகம், குட்டைக் கழுத்து, தடித்து குண்டு உடல்போல் உள்ள உடலமைப்பு.
pyknolepsy : குழந்தைக் காக்காய் வலிப்பு : குழந்தைகளிடம் அடிக்கடி ஏற்படும் இலேசான வகைக் காக்காய் வலிப்பு. இது ஒரு நாளில் நூறு முறைக்கு மேலும் உண்டாகும். பெரும் இசிவின்மை.
pylephlebitis : கல்லீரல் சிரை அழற்சி : கல்லீரல் மண்டலச் சிரைகளில் ஏற்படும் வீக்கம்.
pylethrombosis : கல்லீரல் சிரைக் குருதிக்கட்டு : கல்லீரல் மண்டலச் சிரைகளில் அல்லது அதன் கிளைகளில் ஏற்படும் உள்தசைக் குருதிக்கட்டு.
pyloric stenosis : இரைப்பைக் காப்பு வாயில் சுருக்கம்.
pyloroduodenol : இரைப்பைச் சிறுகுடல் சார்ந்த : இரைப்பைக் காப்பு வாயில் சுருங்கு தசை மற்றும் முன் சிறுகுடல் தொடர்பான.
pyloromyotomy : இரைப்பைக் காப்புத் தசை அறுவை : இரைப்பைக் காப்பு வாயில் சுருங்கு தசையை வெட்டியெடுத்தல்.
pyloroplasty : இரைப்பு வாயில் காப்புத் தசை அறுவை : இரைப்பை வாயில் காப்புத் தசையில் செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம். வழியை அகலப் படுத்துவதற்காக இது செய்யப் படுகிறது.
pylorospasm : இரைப்பைக் காப்பு வாயில் இசிவு : இரைப்பைக் காப்பு வாயிலில் ஏற்படும் இசிப்பு. இது பெரும்பாலும் முன் சிறுகுடல் சீழ்ப்புண் காரணமாக உண்டாகிறது.
pylorus : இரைப்பைக் காப்பு வாயில்; சிறுகுடல் வாய் : இரைப்பையிலிருந்து முன் சிறு குடலுக்குச் செல்லும் இடை வழிவாய்.
pyocolpos : யோனிக்குழாய்ச் சீழ்.
pyoderma : தோல்சீழ்நோய்.
pyrodermia, pyoderma : தோல் இழைம அழற்சி : புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தில் ஏற்படும் கடுமையான அழற்சி நோய்.
pyogenesis : சீழ்க்கட்டுதல் : சீழ் உருவாதல்.
pyogenic : சீழ் சார்ந்த : சீழ்க் கட்டுதல் தொடர்பான.
pyolabyrinthitis : சீழ்ச் செவிவினை : செவிவளை அழற்சியில் சீழ் வைத்த நிலை.
pyometra : கருப்பைச் சீழ் : கருப்பையில் தங்கியிருக்கும் சீழ் இது நோய் காரணமாகக் கருப்பைக் கழுத்து வழியாக வெளியேற முடியாமல் தேங்கி இருக்கும்.
pyonephritis : சிறுநீரக சீழ்அழற்சி.
pyonephrosis : சிறுநீரகக் குழிச் சீழ் விரிவு : சிறுநீரகக் குழிச் சீழ் நிறைந்து விரிவடைதல்.
pyorrhoea : சீழ்ப் பல்நோய்; பல் வேர் சீழ் ஒழுக்கு; சீழ்வாய் : பல் நோய் காரணமாகப் பல்லிருந்து சீழ் வடிதல்.
pyosalpinx : கருக்குழாய்ச் சீழ்; சீழ் அண்டக் குழல் : அண்டத்தி லிருந்து கருப்பைக்கு வரும் குழாயில் சீழ் கட்டியிருத்தல்.
pyothorax : மார்பு வரிக்குழிச் சீழ்; சீழ் மார்பகம் : மார்பு வரிக் குழியில் சீழ்க்கட்டியிருத்தல், நெஞ்சச் சீழ்.
pyrazinamide : பைராசினாமைடு : காசநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் விலையுயர்ந்த மருந்து இது வாய்வழி கொடுக்கப் படுகிறது. இது கல்லீரலில் நச்சுத்தன்மை உண்டாக்கக் கூடியது. எனவே கவனமாக பரிசோதனைக்குப் பிறகே இது கொடுக்கப்படுகிறது. pyretic : காய்ச்சல் சார்ந்த : காய்ச்சலைத் தூண்டுகிற.
pyrexia : காய்ச்சல்.
pyridine : பைரிடின் : திசு நெய்வடிம மூலப்பொருள் வேதியியல் சோதனைக்கூடத்தில் பயன்படுத்தப்படும்.
pyridoxine : பைரிடாக்சின் : வைட்டமின்-பி என்ற உயிர்ச்சத்துப் பொருள். இது பூரிதமாகாத கொழுப்பு அமிலங்களுடன் அல்லது புரதங்களிலிருந்து பெறப்படும் செயற்கைக் கொழுப்புடன் சேர்த்துப் பயன் படுத்தப்படுகிறது. மசக்கையின் போது இது கொடுக்கப்படுகிறது.
pyriform : ஈட்டி உரு.
pyrimethamine : பைரிமெத்தமின் : முறைக் காய்ச்சல் (மலேரியா) நோய்க்கு எதிராகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்து குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
pyrogen : காய்ச்சல் விளைவிக்கும் பொருள்; காய்ச்சலுக்கி : காய்ச்சல் உண்டாக்கக்கூடிய பொருள்.
pyrogenetic : காய்ச்சல் விளைவிக்கிற : காய்ச்சலுக்குரிய, காய்ச்சல் உண்டாக்குகிற உடல் வெப்பத்தை அதிகரிக்கிற.
pyrogenic : காய்ச்சல் சார்ந்த : காய்ச்சல் தொடர்பான.
pyrogenic contamination : காய்ச்சல் பொருளால் தூய்மைக்கேடு : காய்ச்சல் உண்டாக்கும் பொருளால் ஏற்படும் தூய்மைக் கேடு. சிரை வழி ஏற்றப்படும் திரவ மருந்துகளில் கலந்தால் காய்ச்சல் வரும்.
pyrogentest : காய்ச்சல் பொருள் சோதனை.
pyrolysis : வெப்பச் சிதைவு : (உடல்)வெப்ப நிலை அதிகரிக்கும் போது உயிர்ப்பொருட்கூறு அழுகல்.
pyromania : தீயிடுவெறி : தீவைக்க விரும்பும் கட்டுப்படுத்த முடியாத மனத்தூண்டல் கோளாறு.
pyrometer : வெப்பமானி : வெப்பத்தை அளக்கும் கருவி.
pyrrole : பிர்ரோல் : ஹீம் மற்றும் பார்ஃபைரின் ஆகியவற்றை கட்டும் பொருள்களை அளிக்கிற உடலில் காணப்படும் பல்அணு வளையப் பொருள்.
pyropericardium : இதய உறை சீழ்.
pyrascupe : காய்ச்சல் அளவி : சூடு செய்யப்பட்ட ஒரு பொருளின் வெப்பத்தை அதன் ஒளியைச் சூடாக்கப்படாத இயற்கைப் பொருளின் ஒளியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளவிடும் கருவி.
pyruvic acid : பைருவிக் அமிலம் : குளுக்கோசின் காற்றிலா வளர் சிதை மாற்றத்தில் கிளைக்கோஜன் சிதைவின் இறுதி நிலைப் பொருள்.
pythogenesis : அழுகலில் தோன்றுவது அழுகும் பொருளிலிருந்து உண்டாவது.
pytotherapy : செயற்கைக் காய்ச்சல் : செயற்கை முறையில் காய்ச்சல் உண்டு பண்ணுதல்.
pyrotoxin : காய்ச்சல் நச்சு.
pyroxicam : பைரோக்சிக்கம் : வீக்கத்தைப் போக்கி நோவகற்றும் மருந்து.
pyuria : சிறுநீர்ச் சீழ்; சீழ் நீரிழிவு : சிறுநீரில் சீழ் போதல்.
ΡΖΙ : பீ.இசட்.ஐ : புரோட்டமின் சிஜின்க் இன்சுலின்.