மலரும் உள்ளம்-1/அன்பு

பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே.

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே.

அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே.

அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/அன்பு&oldid=1724806" இலிருந்து மீள்விக்கப்பட்டது