மலரும் உள்ளம்-1/கப்பல்

கப்பல் நல்ல கப்பலாம்.
கடலில் செல்லும் கப்பலாம்.

அக்க ரைக்குச் செல்லவே
ஆட்கள் ஏறும் கப்பலாம்.

சாமான் ஏற்றும் கப்பலாம்.
சண்டை செய்யும் கப்பலாம்.

கப்பல் தன்னில் பலவிதம்
கடலின் மீது திரியுமாம்.

தூர தேசம் செல்லுமாம்.
துறை முகத்தில் தங்குமாம்.

கலங் கரை விளக்கினால்
கரையைக் கண்டு சேருமாம்.

கப்பல் ஏறி உலகெலாம்
காண வேண்டி ஆசையோ?

செல்வ தற்கே அனுமதிச்
சீட்டு எங்கே? காட்டிடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/கப்பல்&oldid=1724532" இலிருந்து மீள்விக்கப்பட்டது