மலரும் உள்ளம்-1/சேவலே, எழுந்திரு

கொண்டைச் சேவல், கொண்டைச் சேவல்,
எழுந்திருப்பாயே.
கொக்க ரக்கோ!’ என்று நீயும்
கூவிடுவாயே!

உறங்கு கின்ற சேவ லேநீ
எழுந்திருப்பாயே.
உதித்து விட்டான், சூரியனும்.
கூவிடுவாயே!