மலரும் உள்ளம்-1/டமாரம்

டம்டம் டம்டம் டமாரமாம்.
டமாரப் பெருமை அபாரமாம்.
‘டம்டம்’ எனது குரலாகும்.
‘டமாரம்’ எனது பெயராகும். (டம்டம்)

ஜால வித்தை செய்யும்இடம்,
சர்க்கஸ் ஆட்டம் ஆடும்இடம்.
ஏலம் கூறி விற்கும்இடம்
எல்லா இடமும் நான்இருப்பேன். (டம்டம்)

அரசர் அடையும் வெற்றிகளை
அனைவரும் அறியச் செய்கின்ற
முரசோ எனது அண்ணாச்சி.
மிருதங் கம்என் தங்கச்சி. (டம்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/டமாரம்&oldid=1724544" இலிருந்து மீள்விக்கப்பட்டது