மலரும் உள்ளம்-1/பல்

நல்ல பண்டம் தின்னவே
நமக்கு மிக்க உதவிடும்
பல்லைப் பற்றி இன்றுநான்
பாட்டுக் கட்டப் போகிறேன்.

பாப்பா வாக இருக்கையில்
பல்லே இல்லை, அப்புறம்
கேட்பாய், அதுவும், அரிசிபோல்
கிளம்ப லாச்சு, முதலிலே.

வளர்ந்து, வளர்ந்து வரிசையாய்
வாயை நிரப்ப லாயின
தளர்ந்து போன கிழவரைத்
தனியே விட்டுப் பிரிந்தன.

முறுக்கு, சீடை யாவையும்
நொறுக்கி உள்ளே தள்ளிடும்.
சிரிக்கும் போது அழகுக்கே
சிறப்பு மெத்தக் கொடுத்திடும்.

முத்துப் பற்கள் போய்விடின்
முகத்தின் அழகும் போகுமே.
நித்தம் நித்தம் பற்களைச்
சுத்தம் செய்து காப்போமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/பல்&oldid=1724622" இலிருந்து மீள்விக்கப்பட்டது