மலரும் உள்ளம்-1/பூனையார்

பூனையாரே, பூனையாரே,
போவ தெங்கே சொல்லுவீர்?

கோலிக் குண்டுக் கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக் கால்க ளாலேநீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப் போகிறீர்
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங் கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா,
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும், ஐயையோ,
ஜாஸ்தி யாய்க் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்.
தூர ஓடிப் போய்விடும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/பூனையார்&oldid=1724528" இலிருந்து மீள்விக்கப்பட்டது