மலரும் உள்ளம்-1/மிட்டாய்
மிட்டாய் வாங்கிடுவாய்—தம்பி
மிட்டாய் வாங்கிடுவாய்.
வட்ட வடிவ மான மிட்டாய்;
வளைந்த நிலாப் போன்ற மிட்டாய்;
முட்டை வடிவ மான மிட்டாய்;
முழுக்க முழுக்கு இனிக்கும் மிட்டாய்.
(மிட்)
எண்ண எண்ண இனிக்கும் மிட்டாய்;
எச்சில் ஊறச் செய்யும் மிட்டாய்;
அண்ணன், தம்பி, தங்கை யோடு
அப்பா கூடத் தின்னும் மிட்டாய்.
(மிட்)
பல்லும், நாக்கும் வர்ணம் தீட்டிப்
பலவி தத்தில் காட்டும் மிட்டாய்;
பல்லில் லாத பாட்டி கூடப்
பையப் பையச் சப்பும் மிட்டாய்.
(மிட்)
குழந்தை யெல்லாம் வாங்கும் மிட்டாய்;
கூடித் கூடித் தின்னும் மிட்டாய்;
அழுத பிள்ளை வர்யை மூட
அம்மா வுக்கு உதவும் மிட்டாய்!
(மிட்)