மழலை அமுதம்/கணபதி தோத்திரம்

கணபதி தோத்திரம்


l.  குள்ளக் குள்ளனை
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
விநாயகனைத் தொழு.
2.  குள்ளக் குள்ளக் கணபதியாம்
குண்டு வயிற்றுக் கணபதியாம்
வெள்ளிக் கொம்புக் கணபதியாம்
விநாயகர் பாதம் போற்றிடுவோம்.
3.  குள்ளக் குள்ளனை
குண்டு வயிறனை
அஞ்சு கரத்தனை
ஆனை முகத்தனை
நெஞ்சில் நினைக்க
நலமுண்டாகுமே.