மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/19. பஞ்சத்தின் கொடுமையை அகற்றுதல்
தங்களுடைய குடும்ப காரியங்களோடு பெருமானார் அவர்கள், தேசத்தின் பொதுக் காரியங்களிலும் சிறப்பாக கவனம் செலுத்தி வரலானார்கள்.
அக்காலத்தில் அரேபியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களும் பிராணிகளும் உயிர் இழந்தனர்.
பெருமானாரின் இயல்பான கருணை உள்ளத்தாலும், தயாள குணத்தாலும், பஞ்ச காலத்தில், ஏழைகளை மிகுந்த பரிவோடு ஆதரித்து வந்தார்கள்.
பெருமானார் அவர்களின் விருப்பப்படி செய்து கொள்வதற்காக கதீஜாப் பிராட்டியார் அளித்திருந்த செல்வம் அனைத்தையும், பஞ்ச நிவாரணத்திலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் பயன்படுத்தினார்கள்.
அதனால், பஞ்சத்தின் கொடுமையிலிருந்து மக்கள் மீண்டார்கள்.