மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/4. கல்வி பயிலாமல் அறிவுக்கூர்மை
இளமையிலே அறிவுக்கூர்மையும், சிறந்த ஆராய்ச்சியும் மிளிர்வதற்கான அறிகுறிகள் பெருமானார் அவர்களிடம் நிரம்பக் காணப்பட்டன. எந்தக் கல்விக்கூடத்திலோ அல்லது எந்தத் தனி ஆசிரியரிடத்திலோ பெருமானார் கல்வி பயின்றதில்லை.
இதனாலேயே பெருமானார் அவர்களுக்குக் கல்வி கற்காதவர்' (உம்மி) என்ற பெயர் உண்டாயிற்று.