மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/6. ஆண்டவன் கட்டளை

6. ஆண்டவன் கட்டளை

பெருமானார் அவர்கள் ஹல்ரத் ஹலிமா அவர்களிடம் வளர்ந்து வரும்பொழுது வயது, மூன்று.

ஒருநாள், அன்னை ஹலிமாவின் மக்களைக் காணாமையால், பெருமானார் அவர்கள், "அருமை அன்னையே என் சகோதர்களைக் காணவில்லையே, அவர்கள் எங்கே!" என்று கேட்டார்கள்.

"மகனே! அவர்கள் பகல் நேரங்களில் ஆடுகளை ஓட்டிக்கொண்டுபோய் மேய்த்து, இரவில் வீடு திரும்புவார்கள்" என்று கூறினார் ஹலிமா.

“தாயே! அந்த வேலையைச் செய்வதற்கு எனக்குத் தகுதி இல்லையா?” எனக் கேட்டார்கள் பெருமானார்.

மறுநாள் முதல், பெருமானாரும் மற்ற பிள்ளைகளோடு ஆடு மேய்த்து வந்தார்கள்.

ஹல்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் நபிமார்கள் ஆடு மேய்த்து வந்திருக்கின்றனர்.

முன்னர் தோன்றியிருந்த நபிமார்களிடம் உள்ள இந்த அம்சம் பெருமானார் அவர்களிடமும் அமையப்பெறவேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை போலும்!