மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/ஒட்டுவோன் ஒட்ட வண்டி ஒடும்!
அழகிய சக்கரங்கள். உருண்டு திரண்ட அச்சு. வளைவில்லாத வண்டி. இளம் எருதுகள் பூட்டப் பட்டுள்ளன. வண்டியை இழுத்துச் செல்லத் துடித்துக் கொண்டிருக்கின்றன. வண்டி யோட்டி இல்லையே. வண்டியின் கதி? பள்ளத்தில் விழுந்து விடுமே. எல்லாம் நொறுங்கி விடுமே. ஆகா, அதோ வண்டிக்காரன் வந்துவிட்டான் தூள் துள்ளிக் குதித்து வண்டியில் ஏறுகிறான். வண்டி பறக்கப் பாய்ந்து ஓடுகிறது. அனால் இப்போது கவலை இல்லை.
உலகம் பெரிய வண்டி. அதனை ஒட்ட நல்ல வண்டிக்காரன் வேண்டும். அவன்தான் அரசன்-தலைவன். தலைவன் இல்லாவிடில் நாடு அழிவை நோக்கிச் செல்லும்.