மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/முறையாகத் திறை கொள்க!
காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்!
நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து மிதிப்பது அதிகமாகவும் இருக்கும்.
ஆகையால் அரசனும் முறையறிந்து திறை கொண்டால் நாடு நிறைவு கொண்டு வாழும் இன்றேல் குறைவு கொண்டு விழும்!