மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/கிளிக்கூட்டமும் தினைக்கதிரும்
பாணன் வழிநடக்கிறான் முல்லைக்காடு ஆநிரைகள் மேய்கின்றன. அம்மா என்று கத்துகின்றன. வழி தொலையவில்லை. மலை வந்து விட்டது. எங்கும் மான் கூட்டம். அவை ஆளைக்கண்டாலே அஞ்சியோடும். பாணனைக்கண்டு பயந்து ஓடின. பெரிய ஆற்றைக் கடக்கவேண்டுமே பாவம். பாணன் என்ன செய்வான். படகோட்டி கடத்தி விட்டான். நடந்து நடந்து கால்கள் ஒய்ந்து விட்டன. வழிப் போக்கன் ஒருவன் வருகிறான்.
“ஐயா ஆய்வேள் எங்கே இருக்கிறார்?” பாணனே! ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறாய் போலும். சீக்கிரம் நடந்துபோ, ஆய்வேளைப் பார். அவன் கிளிக்கூட்டத்து இடையே உள்ள தினைக்கதிர் போல் தோன்றுவான். குழ்ந்திருந்து கதிரைக் கொத்தும் கிளிகள் போல் பரிசிலர் அவனைச் சூழ்ந்திருப்பர்.