மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/மலை போன்ற மனம்
“வாரும் புலவரே உட்காரும்” என்றாள் அவ்வை.
“ஏதேனும் செய்தி உண்டா?” என்றார் புலவர்.
“நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்”
“பலா மரங்கள் நிறைய நிற்குமே. பலாப் பழங்கள் கிடைத்திருக்கும்”
“நாஞ்சில் ഖள்ளுவனைப் பார்த்தோம்”
“நல்லவன்”
“நல்லவனா? முழு மடையன்”
“என்ன?”
“கேளும் ஐயா கேளும், கீரைக்கறிக்கு மேலே துவக் கொஞ்சம் அரிசி கேட்டோம்”
“கொடுக்காமலா போனான்”
“மலை போன்ற யானையைக் கொடுத்தான். பிடி அரிசி கேட்டவர்க்கு பெரிய யானை அறியாமையல்லவா இது”
“மலை போன்ற மனம் உடையவன் என்பதைக் காட்டுகிறது”