மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பஞ்சாங்கம் எதற்கு!
“வள்ளி, நான் மன்னனைப் பார்க்கப் போகிறேன்’ “கொஞ்சம் பொறுங்கள் அத்தான். இதோ வந்து விட்டேன்.”
புலவரின் மனைவி கையில் பஞ்சாங்கத்துடன் வந்தாள். “பஞ்சாங்கம் எதற்கு?”
“நல்லநாளா என்று பாருங்கள் அத்தான்”
“ஏன் வள்ளி”
“எமகண்டம் இராகுகாலம் இல்லாமல் பார்த்துப் போங்கள்.”
“சூலை பார்க்கவும் சொல்வாயோ?”
சூலைக்கு எதிரே போகக் கூடாது என்பார்கள் “மறக்கமாமல் சூலை பார்த்துச் செல்லுங்கள்.
“அட பயித்தியக்காரி, நான் காரியைப் பார்க்கப் போகிறேன். காரியைப் பார்க்க பஞ்சாங்கம் எதற்கு?
நாளும் நல்ல நாள். நிமித்தமும் நல்லதே. வார சூலையும் நமக்கு ஆதரவே.