மூலிகை அகராதி/2
ஆ
ஆ | | ஆச்சா |
ஆகம் | | சுரை |
ஆகரி | | திப்பிலி |
ஆகாசக் கருடன் | | கொல்லன்–கோவை–சீந்தில்–பேயத்தி |
ஆகாசத் தாமரை | | கொட்டைப்பாசி |
ஆகாடம் | | வென்னாயுருவி |
ஆகாயமஞ்சி | | சிறுசடமாஞ்சி |
ஆகாயவல்லி | | சீந்தில் |
ஆகிரந்தம் | | புன்கு |
ஆகிருநந்தனம் | | புன்கு |
ஆகேறு | | கொன்றை |
ஆக்கொத்துகம் | | கொன்றை |
ஆக்கொல்லி | | தில்லைமரம் |
ஆகாசி | | சீந்தில் |
ஆகியபத்திரம் | | தாமரை |
ஆசபத்திரு | | பனை |
ஆசியம் | | கருஞ்சீரகம் |
ஆசினி | | ஈரப்பலா |
ஆசுணம் | | அசோகு–அரசு |
ஆசுரம் | | இஞ்சி |
ஆசுரம் | | வெள் வெங்காயம் |
ஆச்சமரம் | | மூகைப்புல் |
ஆச்சா | | ஆச்சாமரம் |
ஆச்சுவரி | | அரசு |
ஆஞ்சி | | ஏலம் |
ஆஞ்சில் | | இசங்கு |
ஆடகம் | | துவரை |
ஆடகி | | துவரை |
ஆடம் | | ஆமணக்கு |
ஆடலை | | பூவிளா –பூவில்லாமரம் |
ஆட்டாங்கள்ளி | | திருகுகள்ளி |
ஆட்டாங்கோரை | | கோரைப்புல் |
ஆட்டுக்கால் | | அடம்பு |
ஆட்டுசம் | | ஆடாதொடை |
ஆணகம் | | சுரை |
ஆணாப் பிறந்தோன் | | கழுக்காணி–ஆவாரை |
ஆண்டு மஞ்சான் | | குங்கிலியம் |
ஆண்டலை | | பூவில்லாமரம் |
ஆண்டை | | தேட் கொடுக்கி |
ஆண்மரம் | | அழிஞ்சில் |
ஆதம் | | கூந்தற்பனை |
ஆதம் பேதி | | செப்பு–நெருஞ்சில் |
ஆதளை | | காட்டாமணக்கு |
ஆதளை | | மாதளை |
ஆதிகம் | | சிறுகுறிஞ்சா |
ஆதிபரம் | | சாதிக்காய் |
ஆதியாமம் | | முகைப்புல் |
ஆதொண்டை | | காத்தோட்டி |
ஆத்தா | | அணி–நுணா |
ஆத்திக்கனி | | வெருகு |
ஆத்திரதம் | | இஞ்சி |
ஆத்திஷ்டி | | நீர்முள்ளி |
ஆத்துமபுத்தர் | | பூனைக்காலி |
ஆத்துமம் | | அரத்தை |
ஆநகம் | | தேவதாரம் |
ஆந்தை | | புறாமுட்டி–பேராமுட்டி |
ஆபனம் | | மிளகு |
ஆப்பு | | எட்டி |
ஆப்புளண்டம் | | கையாந்தகரை |
ஆமடி | | காஞ்சிரம் |
ஆமண்டம் | | ஆமணக்கு |
ஆமம் | | கடலை–துவரை |
ஆமரம் | | எட்டி |
ஆமலகமலம் | | கொட்டைப்பாசி |
ஆமரிகம் | | நெல்லி |
ஆமலகம் | | நெல்லி |
ஆமம் | | விஷமூங்கில்–மூங்கில் |
ஆமிரம் | | மா |
ஆமிலம் | | புளி |
ஆம்பலா | | புளியாரை |
ஆம்பல் | | ஆம்பல்–நெல்லி–மூங்கில்–அல்லி–புளியாரை |
ஆம்பி | | காளான் |
ஆம்பிரம் | | மா–புளிமா |
ஆம்பிலம் | | புளி–சூரை |
ஆம்பு | | காஞ்சொறி |
ஆம்புவம் | | சூரை |
ஆம்பூறு | | சூரை |
ஆய்சூரி | | கடுகு |
ஆய்மலர் | | தாமரை |
ஆரகோரம் | | கொன்றை |
ஆரக்கம் | | சந்தனம் |
ஆரக்குவதம் | | கொன்றை |
ஆரசகம் | | அகில் |
ஆரந்திரகம் | | இஞ்சி |
ஆரத்திராசாகம் | | இஞ்சி |
ஆரம் | | அத்தி–கடம்பு–கோடகசாலை–சந்தனம் |
ஆராகரியம் | | அரசு |
ஆரியகம் | | சுறுகுறிஞ்சா |
ஆரியவாசியம் | | ஓமம் |
ஆரியன் | | அதிவிடையம் |
ஆருகதம் | | நாவல் |
ஆரே | | ஆத்தி |
ஆரை | | ஆரை–நீருளாரை–அத்திரமம் |
ஆரைக்காலி | | தழைக்கோரை |
ஆர் | | ஆத்தி–கொன்றை |
ஆர் | | கதி–திப்பிலி |
ஆர்கோதம் | | கொன்றை |
ஆர்க்கம் | | கோடன்–கொல்லன்–கோவை |
ஆர்துபம் | | அரத்தை |
ஆலகம் | | நெல்லி |
ஆலகாலம் | | நிலவாகை |
ஆலகிரீடை | | அலரி |
ஆலம் | | ஆல்–புன்கு–மாவிலங்கு |
ஆல விருட்சம் | | ஆதொண்டை |
ஆலியகம் | | சிறுகுறிஞ்சா |
ஆலூகம் | | வில்வம் |
ஆலை | | கரும்பு |
ஆவம் | | குங்குமமரம் |
ஆவல்லி | | சீந்தில் |
ஆவரை | | நிலவாகை |
ஆவாகை | | நிலவாகை |
ஆவாரை | | ஆவிரை |
ஆவிபதம் | | பேராமுட்டி |
ஆவிரை | | ஆவரை |
ஆவின் | | புல்லுருவி |
ஆவு | | குன்றி |
ஆவேகி | | ஆடுதின்னாப்பாளை |
ஆளகம் | | சுரை |
ஆள்வணங்கி | | அரசு-தொட்டால்வாடி |
ஆள்வல்லி | | மலைச்சக்கரவள்ளி |
ஆற்கோரம் | | கொன்றை |
ஆற்றலரி | | சுடலைப்பூச்செடி-செங்கொட்டை |
ஆற்றுத்தும்மட்டி | | பேய்க்கொம்மட்டி |
ஆற்றுநெட்டி | | நீர்ச்சுண்டி |
ஆற்றுப்பூத்தான் | | பூனைக்காலி |
ஆற்றுமரி | | நீருமரி |
ஆற்றுமுள்ளி | | கண்டங்கத்திரி |
ஆனகம் | | கரை |
ஆனத்தேர் | | விடத்தேர் |
ஆனந்தம் | | அரத்தை |
ஆனை | | ஆத்தி |
ஆனைக்கன்று | | அத்தி |
ஆனைத்தடிச்சல் | | புளிநறனை-புளியரணை |
ஆனைத்தும்பை | | பெருந்தும்பை |
ஆனைநெருஞ்சில் | | பெருநெருஞ்சில்-புளியரணை |
ஆனைவணங்கி | | தேள் கொடுக்கி |