மெய்யறம் (1917)/சிறப்புப் பாயிரம்
சிறப்புப் பாயிரம்
மெய்யற மியற்றினோன் வையமோர் சிதம்பரம்.
௧
வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல்லையாம்.
௨
மடியருங் கேட்கவோ ரடியால் யாத்தனன்.
௩
நுதலிய தறவழி முதனிலை யடைதல்.
௪
அறம்பொரு ளின்பம்வீ டடைதல் பயனே.
௫
விரோதி கிருதுவில் விளம்பப் பெற்றது.
௬
கண்ணனூ ரரண்மனை யெண்ணியாத் திடுகளம்.
௭
ஆன்றமா தேவ னகமரங் கேற்றிடம்.
௮
ஏழையுங் கற்குமா றியற்றப் பட்டது.
௯
மெய்யற மென்றும் வையகத் துலாவுக.
௧0