ரோஜா இதழ்கள்/ஆசிரியர் குறிப்பு

ஆசிரியை திருமதி ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.

1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது ‘பெண்குரல்’ நாவல்.

1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது.

1979-ம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதை ‘வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக இவர் பெற்றார்.

1975-ல் சோவியத்லாந்து நேரு பரிசை கோவா விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இவரது 'வளைக்கரம்' நாவல் பெற்றது.

1980-ல் இலக்கியச் சிந்தனையின் பரிசை இவரது 'கரிப்புமணிகள்' நாவல் பெற்றது.

1982-ல் இலக்கியச் சிந்தனைப் பரிசையும் பாரதீய பாஷா பரிஷத் பரிசையும் பெற்றது இவரது 'சேற்றில் மனிதர்கள்' நாவல்.

1987-க்கான தமிழக அரசின் பரிசை தமது 'சுழலில் மிதக்கும் தீபங்கள்' நாவலுக்காகப் பெற்றார்.

-1991-ல் தமிழக அரசின் திரு.வி.க. விருதைப் பெற்றார் இவர்.

1994-ல் சாஸ்வதி பரிசை இவரது 'அவள்' சிறுகதைத் தொகுப்பு பெற்றது.

1995-ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க விருதைப் பெற்றார்.

1996-க்கான ‘அக்னி'யின் அட்ஷர விருதைப் பெற்றார்.

திருச்சி மாவட்டத்தில் 5.11.1925-ல் பிறந்த இவர், ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுகிறார் இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.
ராஜம் கிருஷ்ணனின்
நாவல்கள்
அமுதமாகி வருக ஓசைகள் அடங்கிய பிறகு
வளைக்கரம் முள்ளும் மலர்ந்தது
தங்க முள் அன்னையர் பூமி
மாணிக்க கங்கை பாரத குமாரிகள்
நிழற்கோலம் இடிபாடுகள்
அலைவாய்க் கரையில் தோட்டக்காரி
சோலைக் கிளி ஆண்களோடு பெண்களும்
மானுடத்தின் மகரந்தங்கள் சேற்றில் மனிதர்கள்
மலை அருவி கரிப்பு மணிகள்
அழுக்கு கோபுர பொம்மைகள்
பாதையில் பதிந்த அடிகள் மாறி மாறி பின்னும்
விடியும் முன் கூட்டுக் குஞ்சுகள்
குறிஞ்சித் தேன் வேருக்கு நீர்
மாயச் சூழல் புயலின் மையம்
புதிய சிறகுகள் சுழலில் மிதக்கும் தீபங்கள்
பானுவின் காதலன் மண்ணகத்துப் பூந்துளிகள்
வீடு கோடுகளும் கோலங்களும்
பெண்குரல் சத்திய வேள்வி
ரோஜா இதழ்கள் வனதேவியின் மைந்தர்கள்