வருங்கால மானிட சமுதாயம்/எதிர்காலம் எத்தகையதாக இருக்கும்

வருங்கால மானிட சமுதாயம்


எதிர்காலம் எத்தகையதாக இருக்கும்?


நிகழ்காலமும் எதிர்காலமும்


மாந்தர்கள் சிந்திக்கப் பிறந்தவர்கள்; அவர்களால் சிந்திக்காமல் இருக்க முடியாது. அவர்கள் எப்போதும் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றனர். சிலர் எதிர்காலம் நிகழ்காலத்தைக் காட்டிலும் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர் வேறு சிலரோ நிகழ்காலத்தை மட்டுமே விரும்புகின்றனர். ஏனேனில் அவர்களுக்கு எதிர்காலத்தில் எந்த நன்மையும் இருக்கப் போவதில்லை. மக்கள் எதிர்காலத்தைக் கூர்ந்து நோக்குகின்றனர். சிலர் நம்பிக்கையோடும் சிலர் நிராசையோடும் நோக்குகின்றனர். இருப்பினும் எதிர்காலத்தை எவரும் புறக்கணித்து விட முடியாது. எனெனில் எதிர்காலம் என்பது நாளை நிலவ இருக்கும் நிகழ் காலத்தின், இன்றைய நிகழ்காலத்தின் இடத்தில் இடம் பெறப்போகும் காலத்தின் பகுதியாகும்.

எதிர்காலம் ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்தமாகவும் தொடர்பு கொண்டதாகும் எதிர்காலம் என்று பார்க்கும்போது எல்லாமே ஒரே மாதிரியான அக்கறையைத் தோற்றுவிப்பதில்லை என்பது உண்மை. கலைகள்.

மின்விசைத் தொழில்துறை ஆகியவற்றின் எதிர்காலம் மாந்த குலத்துக்கு இன்றியமையாது என்பதில் ஐயமில்லை; எனினும் இது எல்லா மக்களையும் சஞ்சலத்துக்கு உள்ளாக்கக் கூடிய ஒன்றறை. ஆனால் உலகப் போர் வந்து விடுமோ என்ற சிக்கல் மாந்த குலத்தின் உயிர் வாழ்க்கையையே அச்சுறுத்தும் பெரும்பாடாகும். இது இன்று வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் சிக்கலாகும் - வாழ்வா, வீழ்வா என சிக்கலாகும். இதே போல், கோடானுகோடி மக்களின் வருங்காலமும் வண்ண இன குடியேற்ற ஆதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் விளைவைப் பொறுத்ததாகும். உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை நீடித்திருப்பதோ, பலருக்குத் தமது வேலைகளை இழக்கச் செய்யும் எங்கும் பரந்த இடர்பாடாய் பசிக்கும் வறுமைக்கும் பலியாக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.

மாந்தகுலத்தின் வருங்காலம் பற்றி வண்ணிக்கும் போது, பல சிந்தனையாளாளர்கள் செழித்தோங்கும் அறிவியல், தொழில் நுட்பம். நிலத்திற்பாற்பட்ட நாகரிகங்களோடும் தாராளமான தொடர்புகள் முதலிய சித்திரங்களைத் தீட்டிக் கற்பனையை உலுக்கி விடுகின்றனர்.

ஆனால் வேறுவிதமான வருங்காலத் குறிகாரர்களும் பலர் உள்ளனர். அவர்களது கற்பனையிலே அறிவியலின் பெருவளர்ச்சி கரிந்து சாம்பலான உலகையும், காட்டாண்டித்தனமான மாந்தத் தன்மையற்ற மக்களையும், அழிந்து பட்ட நாகரிகத்தையும்தான்் தோற்றுவிக்கிறது.

மாந்த குலததின் வருங்கால சமுதாயத்தின் மீது தான், சமுதாய வாழ்க்கை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள முறையின் மீதுதான் இன்றைய அறிவியல், தொழில் நுட்பப் புரட்சியின் திசை வழியும் விளைவும் சார்ந்திருக்கின்றன. இது மாந்த குலத்தின் மலர்ச்சிக்கு வழிவகுக்குமா அல்லது அதன் வீழ்ச்சிக்கு வழி கோலுமா?

மாந்த குலத்தின் சமுதாய எதிர்காலப் பிரச்சினைகள்

ஒவ்வொருவரின் வாழ்விலும் - அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் - எதிர்கால சிக்கல்கள் புகுந்து விடுகின்றன.

எதிர்காலம் எத்தகையாக இருக்கும்?

19-ம் நூற்றாண்டில் சூல்ஸ் வெர்னி எண்ணிறந்த அறிவியல், தொழில் நுட்பக்கருத்துகளை வெளியிட்டார்: அவை வெற்றி பெறப் போவதையும் கூட முன்னோட்டமாகத் தெரிவித்தார். இந்தக் கருத்துகள் நடைமுறை பட்டறிவாகி வருதை நமது 20-ம் நூற்றாண்டு கண்டு வருகிறது.

சூல்ஸ் வெர்னியால் தமது காலத்துக்கு ஐம்பதாண்டுகட்கும் அப்பால் முன்னோக்கிக் காண முடிந்தது; ஏனெனில் அவர் தமது வருங்காலப் பலன்களை அக்காலத்தில் புதியனவாக விருந்த அறிவியல் தொழில்நுட்பப் போக்குகளின் அடிப்படையில் வகுத்துக் கூறினார். இன்றைய சாத்தியப் பாடுகளின் மூலம் நடைமுறை இயல்பை உருவாக்குவதிலேயே எதிர் காலம் எப்போதும் அடங்கியுள்ளது.

எனவே இன்று எராளமான மக்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கும் மாந்த குலத்தின் வருங்காலச் சமுதாயம் தொடர்புடைய சிக்கல்களுக்குரிய அறிவியல் முறையான சான்று நிறைந்த விடையைக் கண்டறிவதும் ஆகுவதே யாகும். இதற்கு மனித குல வரலாற்றைக் கற்க வேண்டும்; சிறைவாழ்வும்; தூக்குத் தண்டனை, வறட்சி, போர் முதலிய கொடுமைகளாலும் கூடத் தடுத்து நிறுத்த முடியாது போன அதன் வெற்றியை, கடந்த 110 ஆண்டுக்காலச் சமுதாய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை ஆராய வேண்டும்; உண்மை நோக்கில் எடை போட வேண்டும்.

நமது காலம் சிக்கலும் முரண்பாடுகளும் மிக்க நிகழ்ச்சிப் போக்குகளின் காலமாகும்.

கொந்தளித்துப் பொங்கும் ஒர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி உருவாகி வருகிறது; அணு ஆற்றல் நிலையங்கள், முற்றிலும் தானியங்கியான ஆலைகள் தொழிற்சாலைகள், வேதியல் சேர்க்கைப் பொருள்கள், வண்ணத் தொலைக்காட்சி, மிகு விரைவு கொண்ட வானூர்திகள், மிகவும் பெரும்சிக்கலான கணிதப் புதிர்களைக் கூட வினாடியில் தீர்த்து விடை பகரக் கூடிய கணினி எந்திரங்கள் - ஆகிய இவையெல்லாம் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டன; இதனால் தொழில்நுட்ப அருஞ்செயல்களைக் கண்டு இப்போது மக்கள் வியப்பதே இல்லை. இன்றே இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒரு காணி நிலத்தில் எவ்வளவு விளைச்சல் கண்டதோ அதைக் - காட்டிலும் பத்து மடங்கு அதிகமான விளைச்சலை அதே நிலம் காண்கிறது. இக் காலத்துத் தானியங்கி எந்திரங்கள் நூற்றுக்கு மேற்பட்ட பேர்களின் வேலையைச் செய்ய முடியும்; அதன் மூலம் அவை உழைப்பைச் எளிதாக்கவும், அதனை மகிழ்ச்சியளிப்பதாக்கவும் முடியும் நிலவினை ஏற்கெனவே எட்டிப் பிடித்து விட்ட படவி வெளிச் செலவுகள் புதிய உலகங்களையும் அவற்றின் புதிர்களையும் கண்டறிவதில் மாந்தனுக்குள்ள திறமையைக் குறித்த ஐயப்பாடுகளை யெல்லாம் தூளாக்குகின்றன.

இத்தகைய முன்னேற்றம் இருக்கும்போதே உலகில் வறுமை நிலவுகிறது; நடைப்பிணங்களாக அந்தோ குழந்தைகளும் உள்ளனர்; மக்கள் தமது அன்றாட உணவைப் பெற முதுகொடியப் பாடுபடுகின்றனர்; இத்தகையோர் கோடிக் கணக்கில் பல்வேறு நாடுகளில் உள்ளனர். இன்றும்கூட மரக் கலப்பபையும் மண்வெட்டியுமே உழுபவனின் முதல் கருவிகளாக இருந்துவரும் இடங்களும் உலகில் உள்ளன. இதற்கிடையில் சில மேலை நாடுகளில் தானியங்கி எந்திரங்கள் மக்களின் வேலைகளை அடக்கடி தட்டிப் பறிக்கின்றன; வேலையற்றோரின் படையில் சேரும் வற்புறுத்தலுக்கு அவர்களை ஆளாக்குகின்றன. இளைஞர்களோ தமது படிப்பை முடித்ததும் உழைப்பின் இன்பதுன்பங்களை உணர்ந்து பார்க்கும் வாய்ப்பின்றியே அந்தப் "படை"யில் சேர்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, பசியும் வறுமையும அற்ற ஒரு காலம் வரும் என்று கனவு காணத்தான் முடிகிறது.

நிலப்பரப்பிலிருந்து நாடுகளை முற்றிலும் துர்த்துத் துடைத்துவிடக் கூடிய போர்க் கருவிகள் மலிந்ததோர் காலத்தில் மாந்த குலம் வாழ்ந்து வருகிறது. எந்தக் கணத்திலும் குண்டுகளை எறிவதற்கும் ஏவுகணைகளை விடுப்பதற்கும் அணித்தாகவுள்ள குண்டு வீச்சு வானூர்திகளும் நீர்முழ்கிக் கப்பல்களும் உலகில் உள்ளன; இவற்றின் அஞ்சிடத்தக்க உள்ளாற்றல்களில் கடுகளவுதான் 1945ஆம் ஆண்டில் இரோசிமாவிலும் நாகசாகியிலும் புலப்படுத்தப்பட்டது.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் இரத்த ஆறுகள் ஒடுகின்றன. செனிவா ஒப்பந்தங்களை மிதித்துத் தள்ளிவிட்டு, தன்னிச்சை அரசுகளுக்கிடையே நிலவும் உறவுகளுக்கான அடிப்படை முறைகளையும் புறக்கணித்துவிட்டு, தென்கிழக்காசியாவில் போர் அறிக்கை செய்யாத கொடிய போரினை அமெரிக்கா நடத்தி வருகிறது. தென் வியத்நாமில் அது நஞ்சினைப் பயன்படுத்தும் அளவுக்குச் செல்கிறது; வட வியத்நாமிலோ அமைதியான நகரங்களையும் சிற்றுார்களையும் விலங்காண்டித் தனமாகக் குண்டு வீசி அழிக்கிறது கோடானு கோடி மக்கள் நட்பமைதி என்றால் என்ன என்பதையே மறந்து போயிருக்கின்றனர்.

போர்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும், ஏனைய மக்களின் உள்நாட்டு நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், வல்லாதிக்கவாதிகள் வரலாற்றின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முனைகின்றனர். ஆனால் முன்னேற்றமோ பின்வாங்க முடியாதது. உலகில் அரும்பெரும் சமுதாய மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. வல்லாதிக்க, குடியேற்ற அமைப்பு தனது இறுதி நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா முதலிய கண்டங்களின் நானில் வரை படத்தைப் பார்த்தால்,இப்போது பிரிட்டன், இசுபெயின், போர்த்துகல் முதலியவற்றின் மரபு வழியான வண்ணங்கள் சிறு சிறு திட்டுகளாகத்தான் தென்படுகின்றன. 1919இல் குடியேற்ற அரைக்குடியேற்ற நாடுகள் நிலப்பரப்பில் முக்கால் பகுதியில் இருந்தன; இப்போதோ அவை பதினோறில் ஒரு பங்குக்கு மேல் இல்லை.

உலகின் அரசியல் வரை படத்தில் மேன்மேலும் புதிய வண்ணங்கள் - உரிமை வண்ணங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.

எனினும் அடிமைத்தனம் இல்லாததோர் உலகை எட்டிப்பிடிக்க இன்னும் நெடுந்தூரம் சென்றாக வேண்டும். இன்றும்கூட, குடியேற்ற நாடுகளிலுள்ள சுமார் 5 கோடி மக்களுக்கு அடிப்படைவாழ்வுரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. தன்னாட்டு மக்கட் தொகையினரான ஆப்பிரிக்கர்களின் விடயத்தில் தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள் இன்னும் தமது நிறவெறிக் கொள்கையைத்தான் தொடர்ந்து கடைப் பிடிக்கின்றனர்; அதனைத் தீவிரப்படுத்தவும் செய்கின்றனர். தென் ரொடீசியாவில் சிறுபன்மையோரான வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்காக நிறவெறியர்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், கலகத்தை மிகவும் எளிதாக அடக்கியிருக்கக்கூடிய பிரிட்டனோ, ஆப்பிரிக்க மக்களின் விருப்பத்தைப் புறக்கணிக்கிறது; தகுந்த நடவடிக்கைகளை எடுக்கமறுக்கிறது. இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளிலோ அடிமை வணிகம் கூட முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அமெரிக்காவிலோ சுமார் 2 கோடி முன்னாள் அடிமைகள் வெள்ளையர்களோடு சமன்மையும் உண்மையான கட்டற்ற விடுதலை பெறுவதற்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வல்லாதிக்கம்பின்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான இடங்களிலோ, அது பற்பல வகையான புதிய குடியேற்ற ஆதிக்க வடிவங்களைப் பயன் படுத்திப் பொருளாதார மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றது.

வல்லாதிக்கத்தின் இடங்கள் இன்னும் வலுவாகவே உள்ளன. எனினும் வல்லாதிக்கத்துக்கு அருகிலேயே ஒரு புதிய உலகம், சமன்மை உலகம் உதயமாகியுள்ளது: இன்றைய வளர்ச்சியில் அவ்வுலகம் ஒரு தீர்மான ஆற்றலாக மாறியுள்ளது.

மனிதகுலத்தின் சுமார் மூன்றிலொரு பகுதியினரைக் கொண்ட பதினான்கு நாடுகள் சமன்மையைக் கட்டியமைத்துவிட்டன; அல்லது கட்டியமைத்து வருகின்றன. பெரும்பாலான சமன்மை நாடுகள் பொருளியல்த் துறையில் வளர்ச்சி குன்றிய நாடுகளாக முன்னாளில் இருந்தவையாயினும் அவற்றின் இன்றைய விரைவான முன்னேற்றமானது, ஆக்கத்தின் அறிவிலும் சரி, வாழ்க்கை நிலையிலும் சரி, மிகவும் முன்னேற்றம் எய்திய முதலாளித்துவ நாடுகளையும் கூட அவை விஞ்சி மிஞ்சி முன்னேறி விடக் கூடிய காலம் தூரத்தில் இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் விளங்குகின்றது.

பொருளியல் வளர்ச்சியில் உயர்ந்த விரைவு முக்காட்டை நிலைநாட்டுவதன் மூலமும், தேய வருமானத்தை மக்களுக்காகப் பயன்படுத்துவதன் மூலமும்,வாழ்க்கை நிலையில் படிப்படியான உயர்வு ஏற்படுவதையும் சலக உழைக்கும் மக்களின் பொருளாயத ஆன்மீகத் தேவைகளைப் முழுமையாக நிறைவு செய்வதையும் சமன்மையம் உறுதி செய்கிறது.

நிலையான முதலாளியம் பற்றிய தனியரசாட்சிக் கட்டுக்கதை காலத்தின், கண்கண்ட நடைமுறையின் ஆய்வில் நிலைத்திருக்க முடியாது. சமன்மை உலகம் தோன்றி வலிமை பெற்ற பிறகும், வல்லாதிக்க நாடுகள் முற்றுகை, தலையீடு, போர்கள் என்ற முட்டுக் கட்டைகள் மூலம் காட்டிய பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும், சமன்மை உலகம் வெற்றியுடன் வளர்ந்து வருகின்ற பிறகும் கூட நிலையான முதலாளியம் பற்றி எப்படிப் பேச முடியும்?

பல இளம் தேசிய அரசுகள் முதலாளிய வளர்ச்சிப் பாதையைக் கைவிட்டு வருவதும், அவற்றில் சில (கூட்டரபுக் குடியரசு, மாலி, பர்மா மற்றும் பிற நாடுகள்) சமன்மைப் பாதையை உணர்வுடன் தேர்ந்தெடுத்திருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

முதலாளிய நாடுகளிலும் கூட, வலிமை வாய்ந்த கம்யூனிச இயக்கம் நாளுக்குநாள் வலுப் பெற்று வருகிறது. இன்று உலகில் 89 பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளன; அவற்றில் சுமார் 5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

ஸ்பெயின் போர்த்துகல், கிரீஸ், செருமன் தொகுதி, வெனிசூலா, பெரு, தென் ஆப்பிரிக்கக் குடியரசு, மற்றும் சில நாடுகளில் பொதுவுடைமைக் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. பொதுவுடைமைகள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்; சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்; சித்திரவதைக்கும் இறப்பு தண்டனைக்கும் இரையாக்கப் படுகின்றனர். இந்தோனேசியாவில் பொதுவுடைமை எதிர்ப்பு வெறியாட்டம் தாண்டவமாடியுள்ளது. அங்கு பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது; பிற்போக்காளர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுவுடைமையாளர்களை ஆய்வு இன்றியே மார்கவேட்டையாடி விலங்காண்டித்தனமாகக் கொன்று தள்ளியுள்ளனர். சரி. அதனால் என்ன? சார் ஆட்சி உருசியாவிலும் கூடத்தான் பொதுவுடைமைகளுக்கெதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது. அவர்களும் சிறையில் தள்ளப்பட்டனர், நாடு கடத்தப்பட்னர், கொடுமைப்படுத்தப்பட்டனர். 1917-ஆம் ஆண்டு வரையிலும் தீவிரக் கட்சி தலை மறைவாகத்தான் பணியாற்றியது. எனினும் இந்த அடக்கு முறைகளெல்லாம் அக்டோபர் சமன்மைப் புரட்சியை முன்னின்று நடத்தி, நாட்டின் ஆளும் கட்சியாகக் பொதுவுடைமைக் கட்சி வந்ததைத் தடுத்து நிறுத்தவில்லை. இன்றோ உலகப் பொதுமை இயக்கம் மேன்மேலும் மெல்லமெல்ல வலுப்பெற்று வளர்கிறது. சென்ற 50 ஆண்டுகளில் 38 புதிய பொதுவுடைமைக் கட்சிகள் தோன்றியுள்ளன. 1960ஆம் ஆண்டுக்குப் பின் உலகிலுள்ள பொதுவுடைமைகளின் தொகை 1.4 கோடிவரை அதிகரித்துள்ளது. பல பொதுவுடைமைக் கட்சிகள் தத்தம் நாடுகளில் தலையாய அரசியல் ஆற்றலாக வளர்ந்துள்ளன.

இன்று பொதுவுடைமை இயக்கத்தை எவரும் புறக்கணிக்க முடியாது; அது மிகப்பெரும் அரசியல் செல்வாக்குள்ள ஆற்றலாக மாறியுள்ளது.

சமன்மையத்தின் வலிமையும் செல்வாக்கும் நாம் வாழ்ந்து வரும் காலத்தின் மிகவும் அரும்பெரும் கூறாகும்.

எதிர்காலம் நமக்கு என்ன வழங்க இருக்கின்றது? அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்து துன்ப துயரங்களையும் போக்கப் போகின்றதா? அல்லது மாபெரும் அழிவுக்குரிய ஆற்றல் உலகின் அனைத்து உயிர் வாழ்க்கையையும் தூர்த்துத் துடைக்கப் போகின்றனவா? தேயங்கள் தமது உரிமையைப் பெற்று அவற்றைப் பாதுகாத்து வரமுடியுமா? அல்லது சமன்மை இன்மையும் ஒடுக்கு முறையும்தாம் அவற்றை எதிர் நோக்கி நிற்கின்றனவா? எதிர்காலம் யாருக்கு உரிமை? பொதுவுடைமைக்கா, இல்லை முதலாளியத்துக்கா?

எது புதியதோ, எது முன்னேற்றத்தைத் தன்னுட் கொண்டுள்ளதோ, அதற்குத்தான் எதிர்காலம் எப்போதும் உரியதாகும் என்றே வரலாறு காட்டுகின்றது. எனினும் பழமை முரட்டுத்தனமாக எதிர்ப்புக் காட்டுகின்றது. அது புதுமையைப் புண்படுத்த முடியும்; அதன் முன்னேற்றப் பாதையில் முட்டுக் கட்டைகள் போட முடியும். எனினும் இந்தப் புண்களெல்லாம் ஆறிவிடும்; முட்டுக் கட்டைகள் தகர்ந்து பொடியாகும்; ஏனெனில் புதுமையின் வெற்றி தவிர்க்க முடியாதது.

உரிமையும் பொதுவுடைமையும்தான் இன்று உலகில் புதுமையும் முற்போக்கானதும் ஆகும். உலகில் பல மக்கள் பொதுவுடைமை இயற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்; வெற்றிகளும் பெற்று வருகின்றனர். 1966 மார்ச்சு இறுதியிலும் ஏப்ரல் தொடக்கத்திலும் நடந்த சோவியத்து பொதுவுடைமைக் கட்சியின் 23-வது பேராயம் பொதுவுடைமை இயற்றுகையில் முதல் பயன்களைத் தொகுத்துக் கூறியது; பொதுவுடைமையை நோக்கி மேலும் முன்னேறுவதற்கான திட்டத்தையும் வகுத்துக் கூறியது. சமன்மை நாடுகளின் மக்களும் தமது வளர்ச்சியின் குறிக்கோள் பொதுவுடைமை என்று உறுதிவெளிப் படுத்தியுள்ளனர்.