வருங்கால மானிட சமுதாயம்/பொதுவுடைமையும் மக்கள் பூரிப்பும்

பொதுவுடைமையும் மக்களின் பூரிப்பும்


மாந்த மதிப்பார்ந்த மேன்மைக்கான முன் தேவை என்ன? மாந்தனுக்கு மகிழ்வின்பத்தைக் கொண்டு வருவது எது?

எந்த ஒருவரும் தனது படைப்பாற்றல் திறமைகளை பெருக்கம் செய்வதினின்றும் தடுக்கப் பட்டிருப்பாரேயாயின், அந்த ஆளால் பூரிப்பாக இருக்க முடியாது. ஒருவரது அகப்பண்பை பெருக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு சமுதாய அமைப்பின் தன்மையையே சார்ந்திருக்கிறது. இந்த சிக்கல் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரையும் பொறுத்த சிக்கலாயின், பின்னர் மாந்த வளர்ச்சி சிக்கலானது, மாந்தனின் மதிப்பாண்மையையும் மகிழ்ச்சியையும் பற்றிய சிக்கலானது, மாந்த அகப் பண்புக்கொரு முட்டுக்கட்டையாக இருக்கும் சமுதாயக் காரணங்களை ஒழித்துக் கட்டும் சிக்கலாகி விடுகிறது.

முதலாளிய வகுப்பு அனைவருக்கும் உரிமையும், சமன்மையும், மகிழ்ச்சியும் வழங்குவதாக முழக்கமிட்டுக் கொண்டுதான்் அதிகாரத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த வாக்குறுதிகளால் பயன் பெற்றவர்களோ வெகு சிலர்தாம் இன்றோ அகப்பண்பை அழித்தொழிப்பதைப்பற்றி முதன் முதல் வாயைத் திறப்பவர்கள் முதலாளியக் கோட்பாட்டாளர்கள்தான்.

முதலாளியத்தின் வளர்ச்சிதான்் அகப் பண்பை அடக்கி ஒடுக்கும் அதன் ஈவிரக்கமற்ற அடக்கு முறையைக் கொண்டு வந்த தெனினும், அவர்கள் இந்த நிகழ்ச்சிப் போக்கை முதலாளியத்தின் இயல்போடு பிணைப்பதில்லை. மேற்கு செருமனி சமூகவியல் அறிஞரான பிரீட்மனின் கருத்துப்படி, மாந்தன் பால்லோவின் ஆய்வுகளில் இடம் பெற்ற நாய்க்கு இணையானவன் - அதாவது அந்த நாய் உமிழ் நீரை வெளிக் கொணரவும், உணர்ச்சி மிகுதி அல்லது அமைதி கொண்ட நிலையை எய்தவும் வேண்டுமெனில் அது ஒர் அழற்சிப் பொருளால் துண்டிவிடப் பட்டது இத்தாலியத் தத்துவ வாளர் சக்கா முதலாளிய விடுதலைக்கும் பிராமித்தியூசைப் பிணைத்திருந்த விலங்குகளும் ஒர் ஒப்புவமை காண்கிறார்.

பொருள்கள் மாந்தனை வயப்படுத்தியுள்ளன. ஒரு வண்டியோட்டி "திசை திருப்பும் சகடத்தின் செய"லாகவும் வான்கோழியைத் தின்னும் மாந்தன்"வான் கோழியின் செய"லாகவும் மாறி விடுவதாக மேற்கு செருமன் சமூகவியல் அறிஞர் பிரேயர் கூறுகிறார். உண்மையில் ஒளிவு மறைவற்ற வாய்மொழி, இது! இதனைச் சமுதாய வளர்ச்சிபற்றிய அறிவியல்க் கொள்கை வெகு காலத்துக்கு முன்பே நிறுவிக் காட்டி விட்டது என்பதுதான்் இதிலுள்ள ஒரே செய்தி, அகப்பண்பை அடிமைப் படுத்தியதான்து சமுதாய உறவுகளால் ஏற்பட்டதன்று, மாறாக முதலாளிய சமுதாய உறவுகளின் தவிர்க்கொணாத விளைவாகத்தான்் நேர்ந்தது என்பதைப் பொருள் முதல் வாத வரலாற்று விளக்கம் விளக்கியுள்ளது. என்பதுதான்் இதில் உள்ள ஒரே வேறுபாடு.

ஆனால் முதலாளியத்தின் கீழ் "பொருள்கள் மனிதனை ஆள்கின்றன" என்ற உண்மை முதன்மையன்று. முதன்மையானது என்னவெனில் முதலாளியம் உழைப்பையும் திறமையையும் அழகையும் அங்காடிச்சரக்காக மாற்றுகிறது, மனிதனையே மதிப்புள்ள அல்லது மதிப்பற்ற பொருளாகவும் மாற்றி விடுகிறது என்பதுதான்.

முதலாளிய சமுதாயம் கோடான கோடி மக்களின் அதாவது உலக மக்கள் தொகையிற் பெரும் பான்மையோரின் மகிழ்ச்சிக்கான நிலைமைகளை வழங்கவில்லை. எனவே தனி ஒருவர். பொதுவாகச் சமுதாயம் முழுவதற்கும் பகைவனானவன் என்று அடித்துக் கூறுவதைத் தவிர முதலாளிய கோட்பாட்டாளர்களுக்கு வேறு வழியில்லை. மாந்த மதிப்பாண்மையும் மகிழ்ச்சியும் மாந்தனின் சமுதாய நடவடிக்கைகளோடு, எந்தச் தொடர்பு அற்ற தன்மானத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததாகக் கூறப்பட்டது. எனவே மாந்தன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமெனில் அவன் சமுதாயத்தில்தான் ஓர் உறுப்பினன் என்பதை மறந்துவிட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மாந்தன் தன்னைத் தானே சமுதாயத்திலிருந்து பிரித்துக் கொள்ள முடியாத கார்ணத்தால் அவனது மதிப்பாண்மை, உரிமை, மகிழ்ச்சி ஆகியவெல்லாம். வெறுங் கற்பனையைத் தவிர வேறாக இல்லை.

மாந்தன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டு மெனில் அவன் தனது திறமைகளை பெருக்கம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்பது உண்மை. எனினும் நடைமுறை வாழ்வில் மாந்தனது திறமைகள் அவனது நடவடிக்கைகளின் வளர்ச்சிப் போக்கில் மட்டுமே பெருக்கமடைகின்றன; அந்த நட்வடிக்கைகளும் திட்டவட்டமான சமுதாய விளைவுகளைக் கொண்டவையேயாகும். மாந்தனது அகப் பண்பின் வளமும் மகிழ்ச்சியும் அவனது சமுதாய நடவடிக்கையோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. தனது நடவடிக்கைகள் மக்களுக்கு தேவையாக இருக்கும் பொழுதே, சமுதாயத்துக்குத் தேவைப்படும் பொழுதே, மாந்தன் மகிழ்ச்சி பெறுகிறான்.

முழுநிறை மகிழ்ச்சி என்பது குடும்பத்தையும் நல்ல வாழ்க்கை நிலைமைகளையும் பெற்று, நட்புறவில் மகிழ்ந்து வாழ்வதுதான் என்பது உறுதி. தனக்குரிய நல்வாழ்வைப் பற்றிய அக்கறை முற்றிலும் இயல்பானதே, அதனைப் புறக்கணித்து விடக்கூடாது என்று உரோமய்ன் ரோலந்த் கூறியுள்ளார். ஆனால் ஒருவர் இதில் மட்டுமே முழு மனத்தையும் செலுத்தி, சமுதாய நல்வாழ்வையும் மாந்த சமுதாயம் முழுவதையும் பாதுகாப்பதை புறக்கணிப்பாரானால் அவரது வாழ்க்கை மானக்கேடாகவும் வெறுமையாகவும் பயனற்றதாகவும் போய்விடுகிறது.

சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரின் படைப்பாற்றல்களின் வளர்ச்சியின்றேல், உயிர்மச் செல்வம், தூய நல்லொழுக்கம், முழுமையான உடல் நலம் ஆகியவற்றின் இசைவான வாழ்க்கையின்றேல், பொதுவுடைமையை எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. பொதுவுடைமை அவரவர் திறமைக்கேற்ப உழைக்க வேண்டும் எனக் கூறுகிறது. மறு புறத்தில் உழைக்கும் உரிமையை உறுதி செய்வது, வறுமையைப் பொக்குவது, போர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது, அனைத்து மக்களுக்கும் சமன்மையை, (சமமான சொத்துரிமைகளை அதனை அடுத்து ஒவ்வொருவர் தேவைகளையும் முழுமையாய் நிறைவு செய்வதற்கான சம வாய்ப்புகளை) உறுதி செய்வது ஆகியவற்றின் மூலம், மனிதனின் அகப்பண்பின் வளர்ச்சிக்கும் சகல மக்களின் முழுநிறைவான மகிழ்ச்சிக்கும் தேவையான அனைத்து நிலைமைகளையும் பொதுவுடைமை உருவாக்குகின்றது. (பல்வேறு மக்களிடம் பல்வேறு வகையாய்த் தென்படும்) ஒவ்வொரு மனிதரது திறமைகளை வளர்ப்பதும் பொதுவுடைமைக்குத் தேவைப்படுவதால் அது இந்தத் திறமைகள் அனைத்தின் அனைத்துநிலை வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்குகின்ற காரணத்தால், பொதுவுடைமை அகப் பண்பை ஒரே மட்டமாக ஆக்குவதையும் விலக்கிவிடுகிறது. கம்யூனிசம் மனிதனை மாந்தப் பண்புறச் செய்கிறது.

இவை அனைத்தும் தாமாவே வந்துவிடாது என்பது உண்மை. ஆனால், பொதுவுடைமையின் தொடங்கக் கட்டத்திலும் கூட, சமன்மை ஊழியத்திலும் கூட, அதாவது உழைப்பனது உயிர் வாழ்க்கைக்கான கருவியாகவே இன்னும் இருந்து வருகின்ற பொழுதே, பயனிட்டுத் துறையில் இன்னும் சமத்துவத்தைப் முழு நிறைவாகக் கொண்டு வர இயலாதிருக்கும் பொழுதே, நகர்ப் புறத்துக்கம் சிற்றுார்ப்புறத்துக்கும் உள்ள முதன்மை வேற்றுமைகளும், உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் உள்ள சிறப்பு வேற்றுமைகளும் இன்னும் இருந்து வரும் கால கட்டத்திலேயே, பொதுவுடைமைகளும் அனைத்து மக்களுக்கும் மகிழ்வின்ப வாழ்வுக்கான முதல் அடிப்படையை வழங்குகின்றது. ஆதாவது தமது உழைப்பும் வாழ்க்கையும் சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றன என்பதை ஒருவர் உணர்ந்து மகிழும் பூரிப்பை வழங்குகின்றது. தாம் ஒரு தேவையான நபர் என்று ஒருவர் உணர்வதே அவருக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும் முழு நிறைபேரின்பத்தையும் அளிக்கிறது.

யார்? எவர்? என்றும் கையேடுகள் பல முதலாளிய நாடுகளில் புகழ்பெற்றவை. அவை தன்னல முதலாளிகள், பாங்கி டைரக்டர்கள், ராஜ தந்திரிகள், செல்வக் குடும்பத்தில் பிறந்த பெருமான்கள் ஆகியோருக்கு நல்ல விளம்பரமாகும்.

சமன்மை நாடுகளில் ஒருவரின் சமூக நிலைப்பாடு அவரது செல்வத்தையோ, மரபையோ, தொழிலையோ, கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. அவர் ஒரு தொழிலாளியாயினும், உழவராயினும், மருத்துவராயினும்,எழுத்தாளராயினும், விண்வெளி வீரராயினும், அறிவியலாளராயினும், வேளாண் அறிவியலாளராயினும், கலைஞராயினும் அல்லது அரசியல் அறிஞராயினும் அவரது நடவடிக்கைகளின் சமுதாய விளைவுகளைக் கொண்டே அவர் மதிக்கப்படுகிறார்.

பொதுவுடைமை ஒவ்வொரு மாந்தனையும், மானிடன் என்ற சொல்லுக்கே முற்றிலும் தகுதியாக்குகின்றது.