விக்கிமூலம்:ஆலமரத்தடி-தொழினுட்பம்

  தொழினுட்பம் 
ஆலமரத்தடியின் தொழினுட்பப் பிரிவுக்கு வருக! வருக! என வரவேற்கிறோம்.

இங்கு விக்கிமூல தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள், அவ்வப்போது இங்கிருந்து நகர்த்தப்பட்டு, இதன் காப்பகத்தில், என்றும் காணும்படி சேமிக்கப்படுகிறது. விக்கி(மீடியாவிக்கி) மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரையும், இங்கு தேவைப்படும் மேலதிக தொழினுட்பங்களையும், மாற்றங்களையும் குறிப்பிடுக. வாருங்கள்! நம் மொழி தழைக்க, கூட்டாகச் செயற்படுவோம்..

  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
2018 - 2019 - 2020


« பழைய உரையாடல்கள்


பைத்தான் நிரலாக்கமொழி வழியே எழுத்துணரியாக்கப் பத்திகளை சீராக்குதல்

தொகு

கூகுள் எழுத்துணரியாக்க விளைவுகள், அச்சு வடிவத்தை ஒத்த பத்தி சீராக்கத்தை உடையன. ஆனால், விக்கிவடிவம் அத்தகையது அல்ல. இங்கு இருவரி இடைவெளி விட்டால் தான், நாம் காணும் போது, ஒரு வரி இடைவெளி தெரியும். இதனை புரிந்து கொண்ட பாலாசியும், நானும் பத்தி சீராக்கத்தினை, பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் என்ற பகுப்பில் உள்ள நூலகளுக்கு மட்டும் செய்து வருகிறோம். இத்தேவையைப் பயன்படுத்தி, அது பல விதிகளைக் கையாண்டு அனைத்து இலக்கையும் தானியக்கமாக செய்ய முயன்று வருகிறேன். பேச்சுப்பக்க குறிப்புகளின் படி அது இயங்கினாலும், அதில் சில வழுக்கள் இன்னும் களையப்படாமல் இருக்கிறது. அவற்றை சீனி, அசுவின் போன்ற திறன் மிகு பைத்தான் நிரலளர்கள் மேம்படுத்துவர் என்றே எண்ணுகிறேன். இந்நோக்கம் முடிந்த பிறகு, அதனை பிற இலக்குகளுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். விரைவில் அதற்குரிய ஆவணங்களை இங்கு முன்வைக்கிறேன். வணக்கம்.-- உழவன் (உரை) 10:07, 22 பெப்ரவரி 2018 (UTC)