வணக்கம்

உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். (tha.uzhavan ->gmail->com)

|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|

கவிதை படைப்புகள் விக்கிமூலம் - விக்கித்தரவு சொற்பொருளன்

தொகு

நீங்கள் பல ஆண்டுகளாக விக்கிமூலத்தில் பங்களித்து வருகிறீர்கள், ஆதலால் உங்களுக்கு விக்கிமூலத்தில் உள்ள நூல்களைப் பற்றி நன்றாக தெரியும் என்று எண்ணுகிறேன்! நீங்கள் சிறந்தது என்று கருதும் 3 அல்லது மேல் கவிதை படைப்புகள் விக்கிமூலத்தில் உரை வடிவத்தில் உள்ளதா? அவற்றினை எல்லாம் எனக்கு தெரிவியுங்கள் அதை நாம் பயன்பாட்டு எடுத்துக்காட்டாக விக்கித்தரவு சொற்பொருளனில் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். விக்கித்தரவு சொற்பொருளன் திட்ட மேம்பாட்டிற்கு உதவும். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 11:00, 9 சனவரி 2024 (UTC)Reply

விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் என்பதில் பனுவல்(text)களைக் காணலாம். சிறந்தவற்றில் நான் திருக்குறளைத்தான் சொல்வேன். ஆத்திச்சூடி எளிமையாக இருக்கும். கூகுள் விரிதாள் ஒன்றில் சொற்களை இட்டால், சிறந்தவற்றைப் பிறரிடம் இருந்து பெறலாம். அடித்தளமிடுவதற்கு மிக்க நன்றி. சிறந்தவற்றைத் தேட எனக்கு நேரம் ஆகும். எனவேதான் பிறரை அணுக முன்மொழிந்தேன். வினவியமைக்கு நன்றி. பழமொழிகளைத் தேர்ந்தெடுக்க விருப்பம்.தகவலுழவன் (பேச்சு). 11:07, 9 சனவரி 2024 (UTC)Reply

மிஸஸ். இராதா

தொகு

வணக்கம். அட்டவணை:மிஸஸ். இராதா.pdf இதில் படிமங்கள் உள்ள பக்கங்கள் தவிர ஏனைய பக்கங்கள் மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்டன.--Booradleyp1 (பேச்சு) 13:52, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி. அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டினை இவ்வாரத்தில் முடிக்கிறேன். --தகவலுழவன் (பேச்சு). 15:09, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

அட்டவணையின் நிலை

தொகு

அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf -இதன் அனைத்துப் பக்கங்களும் சரிபார்க்கப்பட்டுவிட்டன. ஆனால் அதன் நிலை "மெய்ப்புப்பணி முடிவடையவில்லை" என்று மாறாமல் உள்ளது. என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள விழைகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 20 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வணக்கம்.
அருளரசன் மாற்றி உள்ளார். எப்படி என்றால், அட்டவணையைத் திறந்து அதில் உள்ள மெய்ப்பு நிலை என்ற கட்டத்தில் உள்ள தெரிவு முறைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Info-farmer (பேச்சு) 03:55, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply
நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:31, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வார்ப்புரு பயன்பாடு

தொகு
  • {{hwe|----|----}}
  • {{hws|---|----}}

முன்பக்க முடிவிலும் அடுத்தபக்கத் துவக்கத்திலும் உடைபட்ட வார்த்தைகளுக்கு இவ்விரு வார்ப்புகளின் பயன்பாடு அத்தியாவசியமா இல்லை பயன்படுத்தாமலும் விட்டுவிடலாமா?.--Booradleyp1 (பேச்சு) 14:01, 22 ஏப்பிரல் 2024 (UTC)Reply

ஆம். 2016-18 ஆம் ஆண்டு காலத்தில் இருந்தது. இப்பொழுது முன்பக்க முடிவுச் சொல்லின் இறுதி எழுத்தினை ஒட்டினாற் போல், '-'(hyphen) குறியை இட்டாலே போதும். அப்பதிவினை நீக்க வேண்டும். நினைவு படுத்தியமைக்கு நன்றி. Info-farmer (பேச்சு) 17:52, 22 ஏப்பிரல் 2024 (UTC)Reply
நன்றி. இதேபோல பக்க இறுதியில் அப்பத்தி முடிவடைந்தால்
{{nop}}
இடவேண்டுமா?--Booradleyp1 (பேச்சு) 03:15, 23 ஏப்பிரல் 2024 (UTC)Reply
உங்கள் வினாவுக்கு நன்றி. தேவையில்லை. அதற்கு பதிலாக, ஒருபக்கத்தின் தொடக்கம் அதே பக்கத்தில் இருந்தால், மேலே இரண்டு வெற்று வரிகளை இட வேண்டும். nop வார்ப்புரு அந்த வேலையையே செய்கிறது. ஒரு பக்கமானது, சென்ற பக்கத்தின் தொடர்ச்சி எனில், எந்த வெற்று வரிகளையும் இடத் தேவையில்லை. இம்முறை எதற்கு என்றால், எடுத்துக்காட்டாக, கையடக்க நூலின் பக்கமொன்றில் 4 பத்திகள் இருப்பதாகக் கொள்வோம், இரண்டு கையடக்க நூலின் பக்கங்களை ஒரு A4 தாள் போன்ற பெரிய காகிதத்தில் அச்சிடும் போது, பத்திகள் தனித்தனியாகத் தோன்றும். இரண்டு வெற்றுவரிகள் இடாவிட்டால், பத்திகள் இடையே தோன்றும் இடைவெளி இருக்காது. இரண்டும் ஒன்றாகி, ஒரு பெரிய பத்தித் தோன்றிவிடும். நேரம் இருக்கும் போது ஒரு திரைப்பதிவு செய்து இடுகிறேன். Info-farmer (பேச்சு) 04:15, 23 ஏப்பிரல் 2024 (UTC)Reply
மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:18, 23 ஏப்பிரல் 2024 (UTC)Reply

பொருளடக்கம்

தொகு

வணக்கம். அட்டவணை:மறைமலையம் 1.pdf இதிலுள்ள பொருளுடக்கப் பக்கத்தின் தொகுப்புப் பக்கத்தில்

\\ DJVU page link|15|33
DJVU page link|39|33 \\

வார்ப்புருவின் இறுதியில் நான் தடித்த வடிவில் குறித்துள்ள '33' என்ற எண் எதனைக் குறிக்கிறது? எவ்வாறு பெறப்பட்டது? அதனைக் காண்பது எவ்வாறு என்று எனக்குக் கூறமுடியுமா? தெளிவு படுத்துனீர்கள் என்றால் காளமேகப்புலவர் தனிப்பாடல்கள் அட்டவணையின் பொருளடக்கப் பக்கத்தை நான் மேம்படுத்தக் கற்றுக்கொள்வேன். எனது அடுத்துவரும் நூல்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 13:15, 25 சூன் 2024 (UTC)Reply

c:Category:Rapid Fund SAARC 2024 Tamil Wikisource tutorials என்ற பகுப்பில், ஒரு தொடர் திரைநிகழ் பதிவு செய்யத் தொடங்கியுள்ளேன். இரண்டு முடித்துள்ளேன். மீதமுள்ள பதிவுகளையும் இன்னும் ஒரு வாரத்தில் முடிப்பேன். கண்டு வினா எழுப்பவும். பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21 என்பதில் நீங்கள் செய்துள்ள மாற்றங்களை கண்டு மகிழ்ந்தேன். அப்பக்கத்திலுள்ள {.{DJVU page link|1|21}}}} என்பதில் 1என்பதை அழுத்தினால், அது //கடவுள் வணக்கம்// என்ற தலைப்புள்ள பக்கத்தினைக் காட்டும். அதற்கு அடுத்துள்ள //{.{Dtpl|dotline=...|2.| திருமலைராயன் பட்டினத்தே கூறிய செய்யுட்கள்|2}}// என்பதில் தலைப்பு இருமுறை வர வேண்டியது இல்லை. ஒரு சொல் கொண்டு, //{.{Dtpl|dotline=...|2.| திருமலைராயன் பட்டினத்தே கூறிய செய்யுட்கள்|2}}// இப்படி அமைக்கலாம். அதாவது pipe line அடுத்து, தலைப்பின் முதல் வந்தால் போதும். சில நேரங்களில் முழுதலைப்பு கொடுத்தால் இடர் வரும். எனவே தான் //../திருமலைராயன்|// என அமைத்துள்ளேன். எனவே நீங்களும் பின்பற்றினால் நல்லது.
அடுத்து DJVU page link எண்கள் குறித்து..
//திருமலைராயன்... // என்ற தலைப்பு பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/23 என்ற பக்கத்தில் தொடங்குகிறது. 23 என்பதில் அதற்குரிய அச்சுப்பக்க எண் 2 என உள்ளது. எனவே, 23 - 2 = 21 என புரிந்து கொள்ளுங்கள். அதாவது, கூட்டுத் தொகை 23 வர வேண்டும். இந்த எண்களைக் கொண்டு, 2வது தலைப்புக்கும் DJVU page link அமைத்துள்ளேன்.
தீர்வு: //2}}// என்பதில் முதலில் வருவது அச்சுத்தாளில் வரும் எண். இங்கு 2 வது தலைப்புக்கு 2 என அச்சிடப்பட்டுள்ளது. 21 என்பது முன்பு கூறியது போல கழித்து வரும் எண். எனவே, அதனை இரண்டாவது எழுதி உள்ளேன். பெரும்பாலும் பிற உட்பிரிவுகளுக்கும் இதே போல அமையுங்கள். அப்பொழுதே இறுதியாக ஒட்டுமொத்தமாக, பிழைத்திருத்தம் செய்த தரவுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.
திரைநிகழ் பதிவாக செய்ய உள்ளேன். அப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
மேலும் இது குறித்து வினாக்கள் இருப்பின் கேட்கவும். விளக்கம் தருவேன். Info-farmer (பேச்சு) 14:46, 25 சூன் 2024 (UTC)Reply
உங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி தகவலுழவன். நீங்கள் கூறியபடியே பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21 இல் திருத்தங்கள் செய்திருக்கிறேன். சரியாகவுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள். மேற்கொண்டு ஏதேனும் அங்கு திருத்தம் தேவைப்பட்டாலும் செய்துவிடுங்கள். நான் பக்க வரலாற்றைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:16, 26 சூன் 2024 (UTC)Reply

வணக்கம். பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/11 - இந்தப் பொருளடக்கப் பக்கத்தின் முதல் இரு வரிகளுக்குள்ள எண்கள் ரோமன் எண்ணுருக்களில் உள்ளன. மேலும் pdf/11-க்கு முன்னதாக அப்பக்கங்கள் அமைகின்றன. DJVU page link-வார்ப்புரு மூலம் அப்பக்க எண்களை என்னால் நீல இணைப்பாக மாற்ற இயலவில்லை. மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்வரும் நூல்களில் நான் செய்வதற்கு வழிகாட்டுதலாய் உதவும். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:05, 3 சூலை 2024 (UTC)Reply

எனக்கும் அந்த வார்ப்புருவில் இணைப்பு கொடுப்பது எப்படி என்று தெரியவில்லை? நான் கற்ற பிறகு தெரிவிக்கிறேன். இருப்பினும், [.[பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/5|iii]] இப்படி கொடுத்துக் கொள்ளலாமென்று எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 04:47, 3 சூலை 2024 (UTC)Reply
நன்றி தகவலுழவன். இப்போதைக்கு நீங்கள் கூறியவாறு உள்ளிணைப்புக் கொடுத்து பக்கத்தை நீல நிலைக்கு மாற்றியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:14, 3 சூலை 2024 (UTC)Reply
@Booradleyp1 & @Info-farmer
page link 2 பயன்படுத்தி, நீங்கள் கேட்ட முறையில் செய்யலாம். பெரும்பாணாற்றுப்படை பக்கம் 11ஐ நான் மாற்றி அமைத்திருப்பதை அவதானிக்கவும்.இதில் முதல் எண் PDF பக்க எண்ணாகவும், இரண்டாவது எண் அச்சு எண்ணாகவும் [அந்த எண் எந்த லிபியில் இருந்தாலும் சரியே…] உள்ளன.
Page Link 2 உபயோகித்தே, முழு அட்டவணையையும் வடிவமைக்கலாம். நாம் எதையும் கணக்கிடத் தேவையில்லை. அவ்வாறு Page Link 2 உபயோகித்து அமைத்த அட்டவணையை ஈச்சம்பாயில் காணலாம்.

பக்க ஒருங்கிணைவு படப்பதிவுகள்

தொகு
c:Category:Rapid Fund SAARC 2024 Tamil Wikisource tutorials என்பதில் பக்க ஒருங்கிணைவு (transclution) குறித்த அறிமுகங்களை திரைநிகழ்ப்படங்களாக பதிவிட்டுள்ளேன். இது குறித்த வினாக்கள் இருப்பின் தெரிவிக்கவும். அவசரமில்லை ஆனால் உங்கள் பின்னூட்டத்தைத் தாருங்கள். Info-farmer (பேச்சு) 04:10, 28 சூன் 2024 (UTC)Reply

முதல் காணொலி பார்த்தேன். தெளிவாக உள்ளது; புரிகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிடிஎஃப் அரேஞ்மென்ட் கருவி லினக்சில் மட்டும்தான் உள்ளது என்ரு சொல்லியிருக்கிறீர்கள். விண்டோசில் செய்வதற்கான கருவி உள்ளதா?--Booradleyp1 (பேச்சு) 13:35, 28 சூன் 2024 (UTC)Reply

நான் 2011 முதல், முதல் இந்திய விக்கிமாநாட்டிற்குப் பிறகு, வின்டோசு பயன்படுத்துவதில்லை. வின்டோசு பயன்படுத்தும் நண்பர்களும் எனக்குக் குறைவு. எனினும் முயற்சிக்கிறேன். அதற்கும் பக்க ஒருங்கிணைவு செய்வதற்கும் தொடர்பு இல்லை. அக்கருவி மின்னூல்களைப் பதிவேற்றும் நண்பர்களுக்கான நல்ல கருவி. Info-farmer (பேச்சு) 15:26, 28 சூன் 2024 (UTC)Reply
தகவலுக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:39, 28 சூன் 2024 (UTC)Reply

நற்றிணை

தொகு

அட்டவணை:நற்றிணை-2.pdf இதன் நிலை "Defective source file" என்றுள்ளது; பேச்சுப்பக்கத்தில் \\நூலின் பக்கங்கள் மாறி உள்ளன. நூலினை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்\\ என்ற பதிவும் காணப்படுகிறது. இதனை சரி செய்துதர இயலுமா, அடுத்ததாக புலியூர்க் கேசிகனின் நற்றிணை1, 2 தொகுதிகளை மெய்ப்புப் பார்க்கலாம் என நினைத்திருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 14:01, 4 சூலை 2024 (UTC)Reply

முதலில் தற்போதுள்ள நூலினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு அனைத்துப் பக்கங்களையும் வரிசையாக அமைக்க வேண்டும். பிறகே அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும்? ஏதேனும் பக்கம் விடுபட்டு இருந்தால், அவ்விடத்தில் வெற்றுப்பக்கம் இணைக்க வேண்டும். அதற்கு முன், விடுபட்ட பக்கம் நூலகத்தில் இருந்தால் தேடி இணைத்துத் தர முயல்கிறேன். கிடைக்கவில்லை என்றால், வெற்றுப் பக்கம் இணைப்பேன். அப்பக்கம் கிடைக்கும் போது, வெற்றுப் பக்கத்தினை மாற்றி விடலாம். நீங்கள் மெய்ப்பு கண்டால் கூட, இம்முன்னேற்பாடு உதவும். ஒரு வாரம் கழித்து என்ன நிலை என்று கூறுகிறேன். தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு மிகவும் அகமகிழ்கிறேன். Info-farmer (பேச்சு) 15:37, 4 சூலை 2024 (UTC)Reply
மிக்க நன்றி. நீங்கள் செம்மைப்படுத்திய பின் அதன் மெய்ப்புப் பணியைத் தொடங்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:25, 5 சூலை 2024 (UTC)Reply
அட்டவணை பேச்சு:நற்றிணை-2.pdf என்பதில் நான் எடுத்து முயற்சிகளைத் தெரிவித்துள்ளேன். Info-farmer (பேச்சு) 01:43, 6 சூலை 2024 (UTC)Reply
உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:46, 6 சூலை 2024 (UTC)Reply

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்

தொகு

பக்கம்:இவ்வுலகைத்_திரும்பிப்பாரேன்.pdf/2
@Info-farmer
நூலின் தலைப்பு உள்ள பக்கத்தில், பொதுக் கள விவரம் காணப்படுகிறது.தயை கூர்ந்து சரி செய்து தரவும். — TI Buhari (பேச்சு) 7:45, 21 சூலை 2024 (UTC)

  •  Y 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அப்பொழுது அறியாமையில் இருந்தேன். இப்பொழுது பலரின் உதவியால், இந்த உரிம மாற்றத்தினை ஏற்படுத்த முடிந்தது. எனவே முன்பு இருந்த வார்ப்புருவை பொதுவகத்திலும், இங்கும் இடத்தேவையில்லை. பொதுவகத்தில் சட்ட மேலாண்மை செய்வோர் தெளிவாக உணர்ந்து நமக்கு பன்னாட்டு சட்டப் பாதுகாப்பினை இந்த உரிமவார்ப்புருவினை உருவாக்கித் தந்து ஏற்படுத்தியுள்ளனர். முன்பு 2000 நூல்களுக்கும் மேலாக இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் சரிபாக்கத் தூண்டியமைக்கு மிக்கநன்றி. பொதுவகத்திலேயே வார்ப்புரு இணைக்கப்பட்டு பதிவேற்றுவதால், இப்பொழுது ஏற்றும் நூல்களில் இந்த இரண்டாம் பக்கம் இருக்காது.
  • நீங்கள் சுட்டியிருந்த பக்கத்தில் இருந்த உரிம வார்ப்புருவை நீக்கியுள்ளேன். அச்சுப்பக்கத்தில் இருப்பது போல மாற்றங்களை ஏற்படுத்தி வழமை போல மேம்படுத்துங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.Info-farmer (பேச்சு) 15:55, 5 செப்டெம்பர் 2024 (UTC)Reply

எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்

தொகு

ஐயா

நம் Tamil wiki source நூல் தொகுப்பில் அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf என்ற நூல் முதல் சில பக்கங்கள் இல்லாமல் [விடுபட்டுத்] துவங்குகிறது. இதே நூல் முத்துப் பாடல்கள் என்ற தலைப்பில் அனைத்துப் பக்கங்களுடனும் tamil digital library என்ற தளத்தில் முழுமையாகக் காணப் படுகிறது.

இல்லாத பக்கங்களையும் எடுத்து, சேர்த்தால், நம் தளத்தில் நூல் முழுமை அடையும். நூலின் தலைப்பையும் சீர் செய்யக் கோருகிறேன் — TI Buhari (பேச்சு) 1:30, 22 சூலை 2024 (UTC)

நன்றி ஐயா. நீங்கள் கூறிய இணைப்பின் வழியே சென்று அந்நூலினைப் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அந்நூலின் பதிப்புரை தெளிவாக இல்லை. அதனையும் நூலகத்தில் சரியாக எடுத்து இணைத்தவுடன் நீங்கள் கூறியவாறு மேம்படுத்துகிறேன். ஏற்கனவே பங்களித்துள்ளவர்களின் வரலாற்றுப் பதிவுகளையும் நான் கணக்கில் கொண்டு இந்நூலினை மேம்படுத்துவேன். இப்பணி முடிந்தவுடன் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். Info-farmer (பேச்சு) 03:05, 22 சூலை 2024 (UTC)Reply

உதவி

தொகு

"CSS image crop" இந்த வார்ப்புரு பயன்பாடு குறித்த காணொலி ஏதாவது உள்ளதா?. இருந்தால் இங்கு பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னால் அந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும் முறையை முழுவதுமாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 04:04, 23 சூலை 2024 (UTC)Reply

எத்தனை நூல்கள் இங்கு உள்ளன?

தொகு

எத்தனை நூல்கள் இங்கு உள்ளன? Info-farmer (பேச்சு) 07:08, 26 சூலை 2024 (UTC)Reply

ஆங்கில Boxல் உள்ள பல வசதிகள் தமிழிலும் கிடைக்க உதவுங்கள்

தொகு

ஐயா, வணக்கம்.

ஆங்கிலத்தில் Box Templateல் உள்ள பல வசதிகள் தமிழ் Templateல் காணப்படவில்லை. அவற்றையும் அமைத்துத் தந்தால் உபயோகமாக இருக்கும்.

காண்க: Template:Box - Wikipedia

முக்கியமாக அதில் எடுத்துக்காட்டாக கொடுத்துள்ள

{{box|background=yellow|align=center|border size=10px|radius=20px|text align=center|The quick brown fox jumps over the lazy dog}}

என்ற வாக்கியம் ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழில் வருவதில்லை.

TI Buhari (பேச்சு) 17:45, 23 ஆகத்து 2024 (UTC)Reply

பின்வரும் வார்ப்புருகளைத் தமிழிலும் அமைத்திடத் தங்கள் உதவியைக் கோருகிறேன்;
|{{hin|}}
|காண்க : The Bohemian Review
|-
|{{0|0}}
|கண்ட இடம் : Royal Society
|-
|{{0|00}}96.||Miles
|கண்ட இடம் : Transactions of the Asiatic Society of Japan
|-
|{{familytree/start}}
|கண்ட இடம் : Family Tree
|}
TI Buhari (பேச்சு) 09:09, 29 ஆகத்து 2024 (UTC)Reply

நூலின் தலைப்பைச் சரி செய்தல்

தொகு

திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய வகுப்புரிமைப்_போரட்டம் என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் போராட்டம் எனவும்,

திரு. செ. இராசு அவர்கள் எழுதிய ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,

திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய ஊர்மண் என்ற நூலின் தலைப்பை ஊர் மண் [space betwern ஊர் & மண்] எனவும்,

திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய என் வாழ்க்கைப்போர் என்ற நூலின் தலைப்பை வாழ்க்கைப் போர் [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,

திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய என் ஏர்பிடித்தவர் ஏற்றம் என்ற நூலின் தலைப்பை ஏர் பிடித்தவர் [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,

திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு என்ற நூலின் தலைப்பை மபொசி எனவும்,

திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு என்ற நூலின் தலைப்பை மபொசி எனவும்,

திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி என்ற நூலின் தலைப்பை மபொசி எனவும்,

திரு. செ. இராசு அவர்கள் எழுதிய செம்பூத்தகுல_வரலாறு என்ற நூலின் தலைப்பை செம்பூத்த குல [space betwern செம்பூத்த & குல] எனவும்,


சரி செய்யவும்.

TI Buhari (பேச்சு) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)Reply

மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். பெயரிடல் மரபு என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். Info-farmer (பேச்சு) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)Reply

உதவிகள்

தொகு

அன்பின் உழவன்,

பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).

1. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.

2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின் தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.

நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். Sodabottle (பேச்சு) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)Reply

  • அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--Info-farmer (பேச்சு) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)Reply
நன்றி லோகு --Sodabottle (பேச்சு) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)Reply


அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --Sodabottle (பேச்சு) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)Reply

  • பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --Info-farmer (பேச்சு) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)Reply
நன்றி லொகு.--Sodabottle (பேச்சு) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)Reply

தமிழ் மேற்கோள் குறியிடல்

தொகு

பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.

அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.

{{rule}} வார்ப்புருவில் சிக்கல்

தொகு

@@Info-farmer:
{{rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க மலரும் உள்ளம்
TI Buhari (பேச்சு) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)Reply

“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.
TI Buhari (பேச்சு) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)Reply

Anchor வார்ப்புரு பயன்பாடு

தொகு

@Info-farmer:
மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2 கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு திரு. பாலாஜி அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:
Anchor பயன்படுத்திய பக்கம் : குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107
TI Buhari (பேச்சு) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)Reply

  • சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை, இங்கும் பயன்படுத்துவேன்.
  • 2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
    • சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
--Info-farmer (பேச்சு) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)Reply
@Info-farmer:
ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?
TI Buhari (பேச்சு) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)Reply
  • @Info-farmer, TI Buhari: ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--Info-farmer (பேச்சு) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)Reply

படிம சுழற்சி

தொகு

வணக்கம். பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132 இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=1760684" இலிருந்து மீள்விக்கப்பட்டது