விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01
விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.
விக்கிமூலம் பெயர் சரியா
தொகுமூலம் தமிழ் சொல்லா? விக்கி மூலம் என்பதை விடப் பொருத்தமான பெயர் ஏதும் உண்டா? இருந்தால் தொடக்கத்திலேயே மாற்ற வசதியாக இருக்கும். விக்கி ஊற்று? இல்லை, விக்கி நூலகம் என்றே சொல்லி விடலாமா?--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 16:08, 10 மே 2007 (UTC)
- இங்கே கிடைப்பது மூல ஆவணங்கள்தாம். மூலம் தமிழில்லையெனின் இப்பொழுதே மாற்றுவது சரியானது. விக்கிப்பீடியா என்றிருக்க வேண்டியது விக்கிபீடியா என்றானது போன்ற விபத்துக்கள் நேரக் கூடாது. விக்கிநூலகம் என்பது பொருத்தமாகவுள்ளது. கோபி 16:36, 10 மே 2007 (UTC)
மூலம் தமிழ்ச்சொல்லாகவே இருந்தாலும் கூட நூலகம் என்ற பெயர் பொருத்தமானது. பொது மக்களுக்கு எளிதில் புரியக்கூடியது. wikisourceல் நூல்கள் தவிர ஒலி ஒளிக்கோப்புகளும் இட்டு வைக்கலாம். ஆனால், இவை இடம்பெற்றிருப்பவற்றையும் நூலகம் என்றே குறிப்பிடுவதால் wikisourceஐ விக்கி நூலகம் என்று அழைப்பது தவறாகாது. தவிர, taglineஏ கட்டற்ற நூலகம் என்றே சொல்கிறது.
விக்கிப்பீடியா என்று இப்போது கூடப் பெயர் மாற்றலாம். அதிகம் காலம் கடந்துவிடவில்லை. இனிமேல் தான் விக்கிபீடியா அதிகம் பரவலாகப் பரவ இருக்கிறது. விக்சனரியைக் கூட விக்கி அகரமுதலி என்று மாற்றலாம். சில மொழிகளில் விக்சனரி என்று சொல்லாமல் இப்படி விக்கி அகரமுதலி என்று சொல்வதைக் கண்டிருக்கிறேன்.
ஆனால் இதற்கு முன் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிசோர்ஸ் போன்றவை மொழிமாற்றப்படக்கூடாத வணிக முத்திரைப்பெயர்களா, இது குறித்து மீடியாவிக்கிக் கொள்கை ஏதும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டி இருக்கிறது.----Ravidreams 21:22, 10 மே 2007 (UTC)
- விக்கிமூலம் என்பது wikisource என்பதை அறிந்த ஒருவருக்கே எளிதில் விளங்குவதாக உள்ளது. விக்கிநூலகம் என்பது பொருத்தமானதும் எளிதில் பொருள் விளங்கக் கூடியதாகவும் உள்ளது. --கோபி 22:45, 10 மே 2007 (UTC)
- பொருள் விளங்குவது மட்டும் முக்கியம் அல்ல. சரியான பொருளும் விளங்க வேண்டும். உண்மையில் இது ஒரு முழுமையான நூலகம் என்று சொல்லமுடியாது. இங்கே கட்டற்ற மூல ஆவணங்கள் மட்டுமே இருக்கும். பொதுவாக நூலகங்களிலே இருக்கக்கூடிய பல நூல்கள் இங்கே இடம் பெறா. விக்கிநூல்களில் இடம்பெறக்கூடிய நூல்களுக்கும் கூட இங்கே இடம் இல்லை. தவிர நூலகங்களிலே இடம்பெறாத பல நூல் அல்லாத ஆவணங்களும் இங்கே இடம்பெறலாம். எனவே நூலகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்காது என்பது எனது கருத்து. Mayooranathan 18:29, 11 மே 2007 (UTC)
உண்மைதான். மேலும் பெயரைத் தொடர்ந்து கட்டற்ற நூலகம் என்றும் வருகிறது. மூலம் தமிழ்ச் சொல் என்றால் விக்கிமூலம் என்பது மிகப் பொருத்தமாயிருக்கும். --கோபி 18:54, 11 மே 2007 (UTC).
எனினும், எல்லா நூலகத்திலும் எல்லா நூல்களும் இருக்கும் என்று சொல்ல இயலாதே? கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட நூல்களின் நூலகம் என்னும் போது தெளிவாக எவை எவை விட்டுப் போக வாய்ப்பிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாமே?--ரவி 08:32, 12 மே 2007 (UTC)
- நூலகம் என்பது அவ்வளவாகப் பொருந்தாது. மூலம் அல்லது ஊற்று என்பதுதான் சரி. source என்பதற்கு மூலம்,, மூல முதல், தொடக்கம், ஊற்று, ஆதாரம், என்று பொருள்கள் அகரமுதலியில் கிடைக்கின்றன. மூலம் என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே பொருத்தமான சொல் என்றே படுகின்றது.
- அத்தோடு, ஒவ்வொரு மூல ஆக்கத்துடனும் ஆக்கியவர், காலம், சூழமைவு, பதிப்பாளர் போன்ற பிற விடயங்களையும் தெளிவாக ஒரு தரப்படுத்தப்பட்ட முறையில் தருதல் விரும்பத்தக்கது. மற்ற மூலக் காப்பகங்கள் போல் அன்றி வடிவமைப்பிலும் கவனம் செலுத்துதல் விரும்பத்தக்கது.
ஊற்று என்பது source என்ற அர்த்தம் தரும் என்பது எனக்குப் புதிது. மூலம் என்பது தூயதமிழ்ச் சொல்லெனின் அதனைப் பயன்படுத்தலாம் எனக் கருதுகிறேன். விக்கிமூலம் - கட்டற்ற நூலகம் என்பது பொருத்தம்தானே? --கோபி 16:36, 12 மே 2007 (UTC)
விக்கி நூலகம் என்பது நல்ல பெயராகத் தெரிகின்றது. இது நூல்கள், ஆக்கங்களின் தொகுப்பு ஆகையால் விக்கி நூலகம் என்பது பொருத்தமாக இருக்கும்.--செல்வா 22:50, 14 மே 2007 (UTC)
- பார்க்க name & slogan. Wikisourc - The Free Library என்பது முழுமையாக மொழிபெயர்க்கப்படல் வேண்டும். ஆதலாற்றான் விக்கிமூலம் - கட்டற்ற நூலகம் என்பது பொருத்தமாக உள்ளது. விக்கிநூலகம் - கட்டற்ற நூலகம் என்பதில் இருமுறை நூலகம் வருவது அழகாக இல்லை. மூலம் என்பது source என்பதற்கான தமிழ்ச் சொல் எனின் விக்கிமூலம் - கட்டற்ற நூலகம் என்றே பயன்படுத்தலாமே! கோபி 13:23, 18 மே 2007 (UTC)
சமகாலத்திய எழுத்தாளர்களின் படைப்புக்கள்
தொகுசமகாலத்திய எழுத்தாளர்களான ஜெயமோகன், கந்தர்வன், எஸ்.ராமகிருஸ்ணன் சிறுகதைகளை பதியலாம் என நினைத்துள்ளேன். இதற்கு அந்தந்த எழுத்தாளர்களின் அனுமதி பெற வேண்டும் என ஏதாவது செயல்முறை அவசியமா? ?--பயனர்:சிவமணியன் 16:08, 11 நவம்பர் 2010 (UTC)
பதிப்புரிமை தொடர்பாக
தொகுவிக்கிமீடியா நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செயற்படுவதால் ஐக்கிய அமெரிக்கப் பதிப்புரிமை விதிகளின்படிதான் நூல்களின் பதிப்புரிமை காலாவதியாகும் காலம் கணிக்கப்படல் வேண்டுமெனத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் 1937 ஆம் ஆண்டின் முன்னர் இறந்த சகல படைப்பாளிகளினதும் ஆக்கங்களை நாம் இங்குச் சேர்க்கலாம். மேலும் தமிழக அரசு நாட்டுடமையாக்கம் செய்த படைப்பாளிகளின் படைப்புக்களையும் சேர்த்துக் கொள்ளலாம். --கோபி 13:04, 11 மே 2007 (UTC)
தமிழக அரசு நாட்டுடைமையாக்கிய படைப்பாளிகளின் பட்டியல்
தொகுபாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, தேவநேயப்பாவாணர், திரு.வி.க., கல்கி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மறைமலை அடிகள், வி.சுவாமிநாத சர்மா, மயிலை சீனி.வேங்கடசுவாமி, சாமி சிதம்பரனார், கவிஞர் முடியரசன், கே.அப்பாதுரை, கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை, பி.ஜீவானந்தம், வ.உ.சிதம்பரனார், யோகி சுத்தானந்த பாரதியார், எ.எஸ்.கே ஐயங்கார், வா.ரா, நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.மூ. செரீஃப், பரலி சு. நெல்லையப்பர், வா.வே.சு. ஐயர், காரைக்குடி சா. கணேசன், எஸ்.டி.எஸ். யோகி, புதுமைப்பித்தன், கு.ப.சேது அம்மாள், ந.மு.வேங்கடசாமி நாட்டார், க.ந.சுப்ரமணியம், நா.பிச்சமூர்த்தி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சக்தி வை.கோவிந்தன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், த.நா.குமாரசாமி, கா.சு.பிள்ளை, புலவர் குலாம் காதிறு நாவலர், தி. வை. சதாசிவப் பண்டாரத்தார், டாக்டர் சி.இலக்குவனார், மகாவித்வான் தண்டபாணி தேசிகர், தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.), நாரண துரைக்கண்ணன், டாக்டர் மா.ராசமாணிக்கனார், டாக்டர் வ.சுப.மாணிக்கம், புலவர் கா.கோவிந்தன்.
- குறிப்பு: இது முழுமையானதல்ல
--கோபி 13:04, 11 மே 2007 (UTC)
- http://www.thehindu.com/2006/12/03/stories/2006120306210400.htm
- http://www.hindu.com/2007/04/09/stories/2007040914660600.htm
26.05.2007
தொகுமேலும் 19 எழுத்தாளர்களின் படைப்புக்கள் இன்று நாட்டுடைமையாக்கப்பட்டன. M Singaravelar, K V Jagannathan, A S Gnanasambandam, தீபம் ந. பார்த்தசாரதி, குன்றக்குடி அடிகளார், K A P Viswanatham, V Munuswami, சுரதா, சாவி, S S Thennarasu, V K Shanmugam, Vanidasan, Karunanandan, T K Seenuvasan, C P Chitrarasu, A V P Asaithampi, R Arangannal, Marudhakasi, Jalakandapuram P. Kannan
அமைப்பு
தொகுபெரிய நூல்களை விக்கி மூலத்தில் இணைக்கும்போது எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் இணைக்காமல் அத்தியாயங்கள் அதிகாரங்கள் என்றவாறு பிரித்து இடுவது நன்றாக இருக்கும். பக்கங்கள் நீளமாக இருப்பது வேகம் குறைவான இணைய இணைப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு நேரத்தை வீணடிப்பதாக இருக்கும்.--Trengarasu 14:45, 5 ஜூன் 2007 (UTC)
- அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு வடிவமும், வேக இணைப்பு உள்ளவர்களுக்காக ஒரு பக்கமும், பதிவிறக்கிப் பயன்படுத்தத் தக்கதாய் pdf கோப்பும் என்று மூன்று வடிவங்களில் ஒரு நூலைத் தருவது பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன். --ரவி 03:29, 6 ஜூன் 2007 (UTC)
- ரவியின் யோசனை நன்றாகவே உள்ளது.--Sivakumar 16:59, 6 ஜூன் 2007 (UTC)
நிர்வாக வசதி
தொகு- Natkeeran ஆகிய நான் இங்கு பிறரிடம் இருந்து ஆக்கங்களை சேர்க்க இருப்பதால், நிர்வாக வசதி இருந்தால் நன்றாக இருக்கும். --Tamil writers works 13:31, 2 ஏப்ரில் 2008 (UTC)
நன்றி நவில்
தொகுஅனைத்து தமிழார்வலர்களுக்கும் ச.உதயனாகிய யான் நன்றி நவில்கிறேன். செல்வா ஐயாவோடு முகநூலில் அறிமுகமானேன் அவரே இப்பணியைச் செய்யத் தூண்டினார். என்னிடம் தேவநேயப் பாவாணர் நூல்கள் உள்ளன. தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவை அவற்றை இடுகை இடலாமென்றே என்ணுகிறேன். யான் நூல்களைப் பதித்தால். அதற்கான பின்விளைவுகளுக்கு அனைவருமே பொறுப்பு. பாவாணர் நூல்களை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். அதனால் பதிக்கத் துடிக்கிறேன். பழம் பாடல் செய்யுள்கள் பல பிழையாக பதிக்கப் பட்டுள்ளன எ+கா புறநானூறு. மூலத்தை இடுவதனால் மூலப் பாடலை பிரித்தல் ஆகாது. அவற்றையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறேன். கூற்றில் பிழையிருப்பின் கூறி விடுக.
Wikimania Scholarships
தொகுThe call for applications for Wikimania Scholarships to attend Wikimania 2010 in Gdansk, Poland (July 9-11) is now open. The Wikimedia Foundation offers Scholarships to pay for selected individuals' round trip travel, accommodations, and registration at the conference. To apply, visit the Wikimania 2010 scholarships information page, click the secure link available there, and fill out the form to apply. For additional information, please visit the Scholarships information and FAQ pages:
Yours very truly,
Cary Bass
Volunteer Coordinator
Wikimedia Foundation
தமிழ் விக்கி மூலத்தின் அடுத்த கட்டம்
தொகுதற்போது பலரும் தமிழ் விக்கி மூலம் திட்டத்தில் ஈடுபாடு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2011 ஆம் ஆண்டில் தமிழ் விக்கியர்கள் இத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது பொருத்தமாக இருக்கும். தமிழ் விக்கி மூலத்தில் எப்படி மேம்படுத்தலாம், சீராக்க வேண்டிய படிகள் என்னென்ன என்று அனைவரின் கருத்தையும் அறிந்து கொள்கிறேன்.
- முதற்பக்க மறுவடிவமைப்பு
- ஏற்கனவே இணையத்தில் இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைத் தக்க ஆதாரச் சுட்டுடன் இங்கு படியெடுத்து இடுவது
ஆகிய இரு பணிகளைச் செய்ய விரும்புகிறேன். நன்றி--ரவி 08:04, 11 நவம்பர் 2010 (UTC)
சென்னை விக்கிமீடியர் சந்திப்பு
தொகுhttp://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Chennai/Chennai2
விக்கி மாரத்தான்
தொகுநவம்பர் 14, 2010 அன்று முதல் விக்கி மாரத்தான் நடை பெற இருக்கிறது. இதில் அனைத்து விக்கிமீடியரும் ஒன்று கூடி பல்வேறு திட்டங்களில் தொடர்ச்சியாக பங்களிக்க உள்ளனர். தமிழ் விக்கி மூலத்திலும் இதனைச் செயற்படுத்தலாம். விவரங்களுக்கு, விக்கி மாரத்தான் திட்டப் பக்கத்தைக் காண்க--ரவி 08:04, 11 நவம்பர் 2010 (UTC)
பெரியாரின் குடியரசு நூல்கள்
தொகுபெரியார் திராவிட கழகம் தந்தை பெரியார் நடத்திய குடியரசு நாளிதளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதை எல்லாரும் பயன்படுத்தும் வண்ணம் மின்நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அது pdf ஆக உள்ளது. அதன் இணைப்பு http://ooyaathaalaigal.wordpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/. இதை எவ்வாறு விக்கி மூலத்தில் சேர்க்கலாம்.:வின்சு 06:18, 29 மார்ச் 2011 (UTC)
- குடியரசு இதழ் தொகுப்பு என்ற பெயரில் ஒரு முகப்பு பக்கத்தை உருவாக்குங்கள். பின் ஒவ்வொரு இதழுக்குகும் குடியரசு இதழ் தொகுப்பு/1925 என்பது போல உள்பக்கங்களை உருவாக்குங்கள். முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு உள்பக்கத்துக்கு இணைப்பு கொடுத்து பட்டியலை உருவாக்கி விடுங்கள்.
Call for image filter referendum
தொகுThe Wikimedia Foundation, at the direction of the Board of Trustees, will be holding a vote to determine whether members of the community support the creation and usage of an opt-in personal image filter, which would allow readers to voluntarily screen particular types of images strictly for their own account.
Further details and educational materials will be available shortly. The referendum is scheduled for 12-27 August, 2011, and will be conducted on servers hosted by a neutral third party. Referendum details, officials, voting requirements, and supporting materials will be posted at Meta:Image filter referendum shortly.
Sorry for delivering you a message in English. Please help translate the pages on the referendum on Meta and join the translators mailing list.
For the coordinating committee,
Philippe (WMF)
Cbrown1023
Risker
Mardetanha
PeterSymonds
Robert Harris
மேற்கோள்
தொகுகட்டுரைகளைப் பதியும்போது (விக்கிமூலத்தில்) அக்கட்டுரையில் மேற்கோள் வந்தால் அதனை எவ்வாறு பதிவது? தெளிவான விளக்கம் தேவை.--Meykandan 12:51, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
தட்டச்சுக் கருவி
தொகுபுதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 18:59, 12 செப்டெம்பர் 2011 (UTC)
த*உழவன்
தொகுசோ.பா!
நான் இங்கு பயன்படுத்தி பார்த்தேன். எனது அனுபவங்கள் வருமாறு;-
- தமிழ்99ஐ தேர்தெடுக்கும் போது, நான் தெரிவு செய்த தட்டச்சு முறை கண்ணுக்குப் புலப்பட்டால் நன்றாக இருக்கும். தட்டச்சு செய்தே, விசைப்பலகையினை அறிய முடிகிறது.
- ctrl + m பயன்படுத்தும் போது, உடனே ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறுவதில்லை.
- தட்டச்சு குறிப்பு தெரியும் இடத்தில், சிகப்பான பெருக்கல் குறியிருந்தும், தமிழ்99 தட்டச்சு வேலைசெய்கிறது.
- ஒரே ஒரு விசையை அழுத்துவதன் மூலம், தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறினால் நன்றாக இருக்கும்.
- hotcat இங்கு இல்லாததால் பயன்படுத்திப் பார்க்கவில்லை.
- அனைத்து இடங்களிலும் எந்த முறிவும் இல்லாமல் வேலை செய்கிறது. தற்போதைய வசதியை விட இது மிகவும் பலன் அளிக்கவல்லது.தங்களது ஈடுபாட்டிற்கு மிக்க நன்றி கூற கடமைப்படுகிறேன். வணக்கம்.--த*உழவன் 19:53, 22 செப்டெம்பர் 2011 (UTC)
விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டல்
தொகுவிக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டலில் பங்கேற்க வேண்டுகிறேன்--Sodabottle 18:28, 29 செப்டெம்பர் 2011 (UTC)
பாமினி விசைப்பலகை உதவி
தொகுநமது தட்டச்சுக் கருவியில் பாமினி விசைப்பலகை முறையினை சேர்க்க பாமினி தட்டச்சு முறை அறிந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது - காண்க - விக்கிப்பீடியா ஆலமரத்தடி--Sodabottle 13:35, 14 அக்டோபர் 2011 (UTC)
Terms of Use update
தொகுI apologize that you are receiving this message in English. Please help translate it.
Hello,
The Wikimedia Foundation is discussing changes to its Terms of Use. The discussion can be found at Talk:Terms of use. Everyone is invited to join in. Because the new version of Terms of use is not in final form, we are not able to present official translations of it. Volunteers are welcome to translate it, as German volunteers have done at m:Terms of use/de, but we ask that you note at the top that the translation is unofficial and may become outdated as the English version is changed. The translation request can be found at m:Translation requests/WMF/Terms of Use 2 -- Maggie Dennis, Community Liaison 01:19, 27 அக்டோபர் 2011 (UTC)