விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3/விதிகள்

இந்திய அளவிலான இரண்டாம் விக்கிமூல மெய்ப்புப்போட்டி ஆகத்து 2021

விதிகள்

தொகு

அனைத்து மொழிகளுக்கும் பொதுவான விதிகளை இங்கு காணலாம். இந்த பொதுவான விதிகளைத் தாண்டி தமிழ் விக்கிமூலத்தில் பங்குபெறுவோர் தமிழ் விக்கிமூல மெய்ப்பு நடைமுறையையும் பின்பற்ற வேண்டும்.

  1. போட்டி நடைபெறும் காலம்: ஆகத்து 15,2021 முதல் ஆகத்து 31, 2021
  2. விக்கிமீடியா வழங்கி சேவையின் படி இந்தியத் திட்ட நேரம் (UTC+05:30) பின்பற்றப்படும்.
  3. இந்தக் காலகட்டத்திற்கு இடையிலான தொகுப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  4. கொடுக்கப்பட்ட நூல்களை மட்டுமே மெய்ப்பு பார்க்க வேண்டும்.
  5. ஒரு பக்கத்தினை மெய்ப்பு பார்ப்பதற்கு 3 மதிப்பெண்கள் சரிபார்க்க மதிப்பெண்கள் கிடையாது
  6. ஒரே பக்கத்தினை பல பயனர்கள் ஒரே சமயத்தில் மெய்ப்பு பார்ப்பதினை தவிர்க்க குறைந்தபட்சம் 20 பக்கம் இடைவெளியில் மெய்ப்பு பார்க்கலாம்.
  7. மெய்ப்பு பார்க்காமல் சேமிக்கப்படும் பக்கத்திற்கு 0 மதிப்பெண் வழங்கப்படும்.
  8. எழுத்துக்கள் இல்லா பக்கங்கள், பிரச்சினையுள்ள பக்கங்களுக்கு 0 மதிப்பெண் வழங்கப்படும்.
  9. சிக்கலான பக்கங்களாக கருதப்பட்டால்:
    1. போட்டியின் முடிவு காலம் வரையிலும் அவர் சரிசெய்யப்படாத பட்சத்தில் அதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.
    2. If the problem is solved before the end of the contest (allowing the page to be marked proofread), then the three (3) points earned will be split between contributors to the page.
  10. வார்த்தைகள் இல்லா பக்கங்களுக்கு மதிப்பெண் கிடையாது.
  11. தானியங்கி அல்லது வேறு ஏதேனும் தானியக்கத் தொக்குப்புகளுக்கு அனுமதி இல்லை. ( இது ஒரு ஏமாற்று வேலை என்பதனை தவிர, அவைகளால் சரியாக எழுத்துணரியாக்கத்தில் உள்ள பிழைகளைக் கண்டறிய இயலாது.) மேலடி, கீழடி ஆகியவற்றிற்கு தானியங்கி கணக்கின் மூலம் போட்டிக் காலத்தில் பயன்படுத்தலாம். மேலடி மற்றும் கீழடிகளில் அதற்கான வார்ப்புருவினை பயன்படுத்தவும். மேலடி சேர்த்தல், பக்க எண்கள், பொதுவான தவறுகளைச் சரி செய்தல் போன்ற செயல்களை முழுமையான அல்லது அரை தானியக்க முறையில் தானியக்க கணக்கு என்ற குறிப்பிட்ட கணக்கில் மட்டுமே செய்யப்பட வேண்டும். தானியங்கி முறையில் கொண்டு பக்க நிலை மாற்றுதல் (நிறம் மாற்றுதல்) செய்வது ஏற்றுக் கொள்ள மாட்டாது. அச்சில் உள்ள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்த வேண்டும் நவீன கால வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. நீங்கள் தவறான வார்த்தைகளுக்கு {{SIC}} பயன்படுத்தவும்.
  12. பயனர் ஒருவர் ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக விக்கிமூல சமூகத்தினால் கண்டறியப்பட்டால் அவர்களது மதிப்பெண் ரத்து செய்யப்படும்.
  13. பின்வரும் நடவடிக்கைகளில் பயனர் ஒருவர் ஈடுபட்டால் இருமுறை எச்சரிக்கை செய்யப்படுவார். மூன்று அல்லது மூன்று முறைகளுக்கு மேல் செய்தால் அவர் இந்த தொடர் தொகுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவார். இவை சில உதாரணங்கள் மட்டுமே
    • பக்கத்தினை மெய்ப்பு பார்க்காமல் மெய்ப்பு பார்க்கப்பட்டதாக செய்தல்.
    • முழுமையாக சரிபார்க்காமல் சரிபார்க்கப்பட்டது என செய்தல்.-
    • நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கத்தினை/நீங்களே சரிபார்ப்பது. ;
    • தானியங்கி பயன்படுத்துவது.
    • வெறுமன திருத்த எண்ணிக்கையினை உயர்த்துவதற்காக செயல்படுதல்.
  14. ஒரு பக்கம் சில குறைகளுடன் (எழுத்துப் பிழைகளுடன்) (மெய்ப்பு பார்க்கப்பட்டதாக சேமிக்கப்பட்டிருந்தால் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்.
    • ஒரு சில பிழைகளோடு இருக்கும் பக்கத்தினை அந்தப் பயனர் சரி செய்வார் எனும் பட்சத்தில் நடுவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடுவர்கள் தெரிவித்த 1 நாள் பிறகும் அந்தப் பயனர் அதனை சரிசெய்யவில்லை எனில் மெய்ப்பு பார்த்த பக்கத்திற்கு -3 (நெகட்டிவ் மதிப்பெண்களும்) வழங்கப்படும்.
  15. நடுவர்/ஒருங்கிணைப்பாளரின் முடிவே இறுதியானது. இதில் வாதங்களுக்கு இடமில்லை.

மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை

தொகு
மதிப்பெண் முறை
Legend செயல் புள்ளிகள் மதிப்பீடு பங்களிப்பு
  மெய்ப்பு பார்த்தல்: 3 புள்ளிகள் 0 1
  மெய்ப்பு பார்க்கப்பட்ட பக்கத்திற்கு வழங்கப்பட்ட புள்ளிகள் திரும்பப் பெறுதல் -3 புள்ளிகள் 0 -1
  சிக்கலானவை 0 புள்ளி
  உரையில்லாப் பக்கம் 0 புள்ளி
  மெய்ப்பு பார்க்கப்படாத பக்கம்

இதனையும் கவனத்தில் கொள்ளவும்

தொகு
hws வார்ப்புருகளுக்கு மாற்றாக hyphen இடும் முறை /
3நிமிடங்கள்
  • நீங்கள் புதியபயனராக இருந்தால் புதுப் பயனர் பக்கத்தினை சற்று பார்க்கவும்.
  • அதைப்போலவே, விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்ற பக்கத்தில் விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெறலாம்.
  • ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் {{nop}} பயன்படுத்தவும். அப்பொழுதுதான் ஒரு பக்கத்திலேயே முழுமை செய்ய முடியும். முழுமை பெற்ற பக்கத்திற்கு மதிப்பெண் அளிக்க முடியும். அடுத்தப் பக்கத்தை மதிப்பெண் கொடுக்க பார்க்கத் தேவையில்லை.
  • கடினமான பக்கங்களுக்கும் எளிமையான பக்கங்களுக்கும் ஒரு மதிப்பெண்களே. அதனால் எளிமையான நூல்களை போட்டிக்கு சேர்க்க முயலுங்கள். எளிமையான பக்கங்களைச் செய்ய முயலுங்கள். கடினமான பக்கங்களைச் செய்வதால் தவறான தொகுப்புகளுடன் செய்யப்படும் பக்கங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
  • ஒரு பக்கத்தின் கடைசியில் வார்த்தை வெட்டு ஏற்பட்டால் அப்பக்கதில் உள்ள வெட்டுப்பட்ட வார்த்தைக்கும் அடுத்த பக்கதின் தொடக்கத்தில் உள்ள வெட்டப்பட்ட வார்த்தைக்கும் {{hws}} {{hwe}} வார்ப்புக்களைப் பயன்படுத்த வேண்டும். அல்லது மற்றொரு முறையாக, பக்கத்தின் கடைசியில் வெட்டப்பட்ட வார்த்தையின் கடைசியில் எந்த இடைவெளியும் இல்லாமல் ஒரு - குறியீடு (சொல்லிடை இணைப்புக்குறி = hyphen) கொடுத்தால் போதுமானது. எடுத்துக்காட்டுக்கு, நாளைக்கு என்று வார்த்தை பக்கதின் கடைசியில் நாளை என்றும் அடுத்தப்பக்கதில் க்கு என்று இருந்தால் முதல் பக்கத்தில் {{hws|நாளை|நாளைக்கு}} என்றும் அடுத்தபக்கத்தின் தொடக்கத்தில் {{hwe|க்கு|நாளைக்கு}} என்று கொடுக்கலாம். அல்லது முதல் பக்கதின் கடைசியில் நாளை- என்று கொடுக்கலாம். ஆனால் நாளை - என்றோ நாளை– என்றோ கொடுத்தால் தவறான விளைவுகள் இறுதியில் தோன்றும் என்பதால், கவனமாக பங்களியுங்கள். பக்க ஒருங்கிணைவு(transclude), அதாவது வலப்பக்கம் உள்ள மின்வருடல் பக்கத்தினை நீக்கி, இடப்பக்கம் நாம் உருவாக்கிய எழுத்தாவணத்தை மட்டும் உருவாக்குதல்) செய்தால் சரியாக வார்த்தை சேராது.
  • ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் அச்சில் indent செய்து இருந்தால் மெய்ப்பு செய்யு பொழுது அதே மாதிரி indent செய்யத் தேவையில்லை. பத்தியின் தொடக்கத்தில் {{gap}} பயன்படுத்த தேவையில்லை.
  • பாடல், செய்யுள், கவிதைகளை மெய்ப்பு செய்யும் பொழுது <poem></poem> {{left margin}} {{gap}} முதலிய வார்ப்புருக்களைப் பயன்படுத்துவது சிறப்பு. : பயன்படுத்தி பாடல்களை மெய்ப்பு செய்தால், அப்படிப்பட்ட பக்கங்களை பதிவிறக்கி வோர்டு முதலிய முறையில் மாற்றும் பொழுது உரைகளில் நிறைய indent வரும். இதனால் பலருக்கு இடையூராக இருக்கலாம்.

நடுவர்களுக்கான வழிமுறைகள்

தொகு
  • நிர்வாகிகள் / நடுவர்கள் முடிந்தவரை சரிபார்த்த/மெய்ப்பு பார்த்த பக்கங்களை சரிபார்க்க வேண்டும். அவர்கள் விக்கி- நெறிகளுடன் நடந்து கொள்ள வேண்டும், மேலும் புதிய விக்கிமூலப் பயனர்களுக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
  • எந்தவொரு பயனரும் அந்தந்த சமூகத்தின் சரிபார்ப்பு தரத்துடன் எந்தப் பக்கத்தையும் சரிபார்த்தல் செய்யவில்லை என்றால், நிர்வாகி / நடுவர் அவர்களது தவறுகளைப் பற்றி பயனருக்கு அறிவிக்க வேண்டும். பயனர் தனது தவறுகளை சரிசெய்ய 24 மணிநேரம் கொடுக்க வேண்டும்.
  • 24 மணி நேரத்திற்குப் பிறகும் பயனர் தங்களது தவறுகளைச் சரிசெய்யவில்லை என்றால், நிர்வாகி / நடுவர் அந்தப் பக்கத்திற்கு வழங்கிய மதிப்பெண்ணை திரும்பப் பெறலாம்.
  • பக்கங்களை மாற்றியமைக்க வேண்டுமா அல்லது பக்கங்களை சரிபார்க்க வேண்டுமா என்பது நிர்வாகி / நடுவரின் முடிவு இறுதியானது. பயனரின் சிறிய தவறுகளை புறக்கணிக்க முயற்சிக்கவும், பயனரின் பேச்சு பக்கத்தில் அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும். பயனர் வேண்டுமென்றே அதே சிறிய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தால், மேலே உள்ள விதிகளின்படி நீங்கள் மதிப்பெண்களை திரும்ப்ப பெறலாம்.
  • மேற்கூறியவாறு மதிப்பெண்களை திரும்பப் பெற நடுவர்களுக்கு உரிமை உண்டு. எந்தவொரு பயனரும் அதே தவறுகளை மீண்டும் செய்தால், பயனர் இந்த மெய்ப்புபார்க்கும் தொடர் தொகுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
  • தேவை ஏற்படின் , ஏதேனும் ஒரு பயனர் மோசடி செய்ததாகவோ அல்லது ஏமாற்றுவதாகவோ விக்கிமூல சமூகத்தினால் கண்டறியப்பட்டால் அவர்களது மதிப்பெண் ரத்து செய்யப்படலாம்.
  • மேலே உள்ள 'விதிகள்' பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி விதிகளைப் பின்பற்றவும்.
  • நிர்வாகிகள் / விமர்சகர்கள் புத்தகங்களின் பதிப்புரிமை நிலையை சரிபார்க்க வேண்டும்.