விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2020-05-10
காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை நூலை எழுத்தாளர் வ. சு. செங்கல்வராயபிள்ளை எழதியுள்ளார். “காலனைக் கட்டி யடக்கிய கடோரரித்தன் கதை” என்னும் இக்கதை Lord Lytton ( லார்ட் லிட்டென்) ஆங்கிலத்தில் எழுதிய “Death and Sisyphus” (காலனும் சிசுபசும்) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. மிக்க இனிமை வாய்ந்த இக் கதையை தந்தம் தமிழுலகோர் படித்து இன்புற வேண்டும் என்னும் ஆசைமீக்கூரத் தமிழர் சுவைக்கு ஏற்ற வேறுபாடுகளைப் புகுத்தியமைத்து இந்நூல் எழுதப்பட்டது. இக் கதையை நாடக ரூபமாக அமைத்தால் பெரிதுஞ் சுவைதரும் என்பதற்கு ஐயமில்லை. இக் கதையால் அறிவின் பயன் இன்னதென்பதும், சாவு என்பது இல்லாவிட்டால் மனிதர்களின் நிலை இவ்வாறிருக்கும் என்பதும் விளங்கும். இந் நூலால், காலன் (கூற்றுவன்) வேறு, (எமன்) யம தருமாஜர் வேறு என்னும் விடயமும் அறியவரும். காலன் இயமனுடைய தூதன் என்பது, "எமனால் ஏவி விடு காலன்” எனவருந் திருப்புகழாலும் (1051) “தரும ராசற்க்காவந்த கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே” என்னுந் தேவாரத்தாலும் , “தருமனு மடங்கலும் (கூற்றம்)” என்னும் பரிபாடலானும் (3) விளக்கமுறும். லக்ஷ்மி சமேதராய் ஒருநாள் வைகுண்டத்தில் எமது நாராயணமூர்த்தி திருவோலக்கங் கொண்டெழுந்தருளியிருந்தார். அப்போது எம்பெருமான் திருச்செவியில் பூலோகத்தி னின்றும் “ஹரி கேசவா! ஹரி நாராயணா!சங்கு சக்ர கதாபாணி! புருஷோத்தமா! ஜெயதுங்க முகுந்தா! நீ காக்கைக் கடவுளன்றோ! இந்தக் கள்ளர் தலைவன் கடோர சித்தனைத் தொலைத்து எங்களைக் காத்தருள வேண்டும்” என ஒருபெரிய முறையீடு கேட்டது. இம்முறையீட்டைக் கேட்ட முராரி வாளா இருந்தனர். அங்கனம் இருக்க முடியவில்லை எங்கள் மாதா லக்ஷ்மி தேவிக்கு. “நீங்கள் ஏன் இந்த முறையீட்டைக் கேட்டும் இரக்கங் கொள்ளா திருக்கின்றீர்கள்? அன்று முதலைவா யுற்றயானை புலம்பிய போது ஒலமென்றுதவின கருணாகர மூர்த்தி யாயிற்றே நீங்கள்” என வினவினள். அதற்கு |