விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி

பயிற்சிப்பட்டறையில் திவ்யா
பயிற்சிப்பட்டறையில் மாணவர்கள்

இடம்: ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை.

நாள்: 24 பெப்ரவரி 2020

நேரம்: 10 மணி முதல் 4 மணி வரை.

பயிற்சிப் பட்டறை குறிப்புகள்: https://etherpad.wikimedia.org/p/taws-ssss-2020

பயிற்சிப் பெற்றவர்கள்: கல்லூரியில் படிக்கும் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்.

பயிற்றுநர்கள் : திவ்யா மற்றும் Balajijagadesh

தொடர்பு மற்றும் ஏற்பாடு: tshrinivasan

பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட காட்சிப்படங்களின் தொகுப்பு : விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை-திவ்யா

pdf கோப்பு வடிவத்தில்

பின்னூட்ட விவரம்: இங்கு காணலாம்

சென்னை, தி. நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் 24 பெப்ரவரி 2020 அன்று ஒரு நாள் தமிழ் விக்கிமூலம் பயிற்சி பட்டறை நடந்தது. பயிற்சியில் சுமார் 70 மாணவர்களும் 5 பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை கணியம் அறக்கட்டளை சார்பில் shrinivasan ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

பயிற்சிக்கு முன்பே மாணவர்களை விக்கியில் பயனர் கணக்கு இல்லாதவர்களை பயனர் கணக்கு தொடங்கக் கூறப்பட்டது. விக்கிமூல உதவிக் காணொளிகளையும் பார்த்து வருமாறு அறிவுறுத்தப்பட்டது.

பயிற்சி நாள் அன்று மாணவர் அனைவரும் கணினி அறைக்கு வந்து கணினியில் புகுபதிகை செய்து அமர்ந்திருந்தனர். திவ்யா அவர்கள் விக்கிமூலத்தைப் பற்றி ஓர் அறிமுக உரையை ஆற்றினார். பின்னர், 11.30 மணி அளவில் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு நூலை தேர்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் அனைவரும் ஒவ்வொரு பக்கமாக மெய்ப்பு செய்யத் தொடங்கினர். அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட பல சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களை பாலாஜி மற்றும் திவ்யா ஒவ்வொருவரிடமும் சென்று கூறி தெளிவு செய்தனர்.

நிகழ்வு மதியம் 1.10 மணி வரை நடந்தது. பின்னர் உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மதியம் 1.45க்கு மெய்ப்பு பார்த்தல் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நடைப்பெற்றது.

மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பல விதமான சந்தேகங்களை கேட்டு மெய்ப்பு செய்து வந்தனர். பின்னர் நிகழ்ச்சி முடியும் முன் அவர்களிடம் இருந்து பின்னூட்டம் பெறப்பட்டது.

புள்ளிவிவரங்கள்

தொகு

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் பக்க பெயர்வெளியில் செய்த தொகுப்புகளின் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு.

விவரம் எண்ணிக்கை
புகுபதிகை செய்யா தொகுப்புகள் (அ) 36
புகுபதிகை செய்த தொகுப்புகள் (ஆ) 696
பயிற்சிப் பட்டறையில் மொத்த தொகுப்புகள் (அ+ஆ) 732
பதிகை செய்து தொகுத்த மொத்த பயனர்கள் 56
மொத்தம் தொகுக்கப்பட்ட தனித்த பக்கங்கள் 423


புள்ளிவிவரத்தின் ஆதாரத் தரவுகளை இங்கு காணலாம்.

இதைத் தவிற சிலர் பயனர் பேச்சு பக்கங்களில் தொகுப்பு செய்தனர்.

படிப்பினைகள்

தொகு
  • ஒரே நேரத்தில் பல பயனர்கள் ஒரு இணைய நெறிமுறை விலாசத்திலிருந்து கணக்கு தொடங்க முடியாததால் முன்னமே கணக்கு தொடங்கச் சொன்னது வசதியாகவும் இடையூறுகள் இல்லாமல் இருந்தது. ஏனெனில் பயிற்றுநர்கள் இருவரிடமும் கணக்கு தொடங்கு அணுக்கம் இல்லை.
  • பலரும் உதவிக்காணொளிகளைப் பார்த்து பயிற்சிக்கு வந்ததால் அறிமுகம் கொஞ்சம் சுலபமாக இருந்தது.
  • பல புத்தகங்கள் பிரித்து கொடுத்ததால் தொகுப்பு முரண்கள் மிகவும் குறைக்கப்பட்டது. அப்பொழுதும் மிகச் சில பேர் ஒரே பக்கத்தை தொகுத்ததால் குழப்பம் அடைந்தனர்.
  • மெய்ப்பு செய்ய பக்க பெயர்வெளியில் விக்கிமூலப்பக்கத்தைத் திறந்த பொழுது கூகுள் குரோம் உலவி சில பக்கங்களை தானாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
  • பலருக்கு கணினியில் தமிழில் தட்டச்சுச் செய்ய வராதலால் அவர்களுக்கு விக்கியில் எழுத்துப்பெயர்ப்பு உள்ளீடு அமைவு எப்படி இயக்குவது என்று சொல்லிக்கொடுத்து அந்த தட்டச்சுக்காக உதவிப் பக்கமும் திறந்துத் தரப்பட்டது. அதனால் பலருக்கு தமிழில் தட்டச்சு செய்வது எளிதாக இருந்தது.
  • பயிற்சி கொஞ்சம் இறுக்கமாக இருந்ததாகச் சிலர் எண்ணினர். ஆனால் மாணவர்கள் குறைந்த நேரத்தில் பயனுள்ளதாக மெய்ப்பு பணிப் பற்றிய ஓரளவு தெளிவினை அடையவேண்டும் என்ற நோக்கத்திலேயே பயிற்சியை நகைச்சுவை கலந்த உரையாடலாக அமைக்கவில்லை.
  • கல்லூரி நிர்வாகம் முதலில் தெரிவித்த எண்ணிக்கையைவிட அதிகமான பேர் பயிற்சியில் கலந்துகொண்டதால் (75+ நபர்கள்) பயனர்களின் சந்தேகங்களைத் தீர்க்க கொஞ்சம் நேரம் ஆனது.
  • எல்லோரிடமும் வீட்டில் கணினி/மடிக்கணினி இல்லாததால் திறன் கைப்பேசியில் தொகுப்பது எப்படி என்று அறிமுகம் செய்ய திட்டமிட்டோம். ஆனால் நேரமின்மையால் அதைச் செய்ய முடியவில்லை.

படங்கள்

தொகு

பின்னூட்டம்

தொகு