விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 4

அத்தியாயம் 4.

இந்தியாவில் காங்கிரசின் சக்தி வளர்ந்து வந்தது. சுதந்திர ஆர்வம் நாடு முழுவதும் தலை தூக்கலாயிற்று. மகாத்மா காந்தியின் பெயர் மந்திரம் போல் எங்கும் ஒலிக்க தொடங்கியது.

முதலாவது உலக மகாயுத்தம் ஒரு சில முதலாளிகளைப் பெரும் பணக்காரர்களாக மாற்றிவிட்டது; தொழில் துறையில் அபிவிருத்தி ஏற்படுத்தியிருத்தது.ஆயினும் பெரும்பான்மை மக்கள் மிகுந்த தொல்லைகளை அனுபவித்து, விடுதலை கிட்டதா என்று ஏங்கிக் கிடந்தவர்.

நாட்டினரை அடக்கி ஒடுக்குவதற்காக் கடுமையான அடக்குமுறைப் பாணங்களையும் புதிய புதிய சட்டங்களையும் ஏவிக்கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசாங்கம், ஆளவந்தவர்களின் அட்டூழியங்க்ள் எல்லோர் உள்ளத்திலும் வெருப்பையே விதைத்து வளர்த்தன.

இந்தியா பூராவும் கிளர்ச்சிகளும், சாத்வீகப் போராட்டங்களும் ஏற்ப்பட்டன. சில இடங்களில் பலாத்காரச் செயல்களும் வெடித்தன. காந்திஜீ சத்தியாக்கிரக சபை ஒன்று தொடங்கிப் போராட்டம் நடத்தி வந்தார்.

 ஜவஹர்லால் நேரு காந்தி வழியால் வசீகரிக்கப் பட்டார். மறியலில் கலந்து சிறை செல்லவேண்டும் என்று துடித்தார் அவர்.

அவருடைய போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. மோதிலால் நேருவுக்கு புதிய வழிகள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. எந்தப் பிரச்னையையும் தீர யோசித்து, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு உறுதியான முடிவுக்கு வருவதே அவருடைய சுபாவம். இதனால் தந்தைக்கும் மகனுக்குமிடையே பலத்த அபிப்பிராய பேதமும் வாக்குவாதமும் உண்டாயின. இந்நிலைமை வீட்டில் உள்ளவர்களின் ஆனந்தத்தையும் கெடுத்துவிட்டது ஜவஹரின் தாயும் சகோதரிகளும் மிக்க மனவருத்தம் அனுபவித்தனர்.

இது சம்பந்தமாகப் பேசி ஆலோசனை புரிய காந்திஜீயை மோதிலால் 'ஆனந்த பவன'த்துக்கு அழைத்திருந்தார். அலகாபாத்துக்கு விஜயம் செய்தார் மகாத்மா. நேரு மாளிகையில் தங்கியிருந்து, மோதிலாலுடன் பேசி விவாதித்தார். முடிவில் தந்தைக்கு மன வேதனை அளிக்கக்கூடிய காரியம் எதுவும் செய்யவேண்டாம். அவசரப்பட்டுச் செயல் புரியக் கூடாது' என்று ஜவாஹருக்குப் போதித்தார் காந்திஜீ.

மகாத்மா நேரு குடும்பத்தின் அதிதியாக வந்திருந்த போது, அவருடைய காரியதரிசி மகாதேவ தேசாயும் உடன் இருந்தார். ஒரு நாள் அவர் விஜயலக்ஷ்மியைத் தனிமையில் கண்டு, 'மாடர்ன் ரிவ்யூ' எனும் பத்திரிகையின் இதழ் ஒன்றைக் காட்டி, 'இதோ இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தாயா?’ என்று விசாரித்தார்.  'இல்லையே!' எனச் சொன்னாள் சொரூபா. 'அவசியம் படித்துப் பார். அருமையான கட்டுரை' என்று சிபாரிசு செய்தார் தேசாய்.

ரஞ்சித் பண்டிட் என்பவர் எழுதியிருந்த கட்டுரை அது. ஆழ்ந்த கருத்தும், அறிவொளியும், சிந்தனைப் பொலிவும் நிறைந்த கட்டுரை அது. அதைப் படித்து வியந்தாள் சொரூபா.

அவளிடம் கட்டுரையாளரைப் பற்றி விவரித்தார் தேசாய். நல்ல அறிவாளி : மகாமேதை; கல்வியில் தேர்ந்தவர்; ஆராய்ச்சியில் தீரர் என்று புகழ்ந்தார்.தனது நண்பன் என்றும், தன்னோடு சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தார். காவியங்களை ரசித்து மகிழும் பண்பு உடையவர்; பாரிஸ்டர் என சொன்னார் தேசாய்.

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. ரஞ்சித் பண்டிதரை சொரூபாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் நட்பு உண்டாயிற்று; அன்பு வளர்ந்தது; இனிய காதலாக மலர்ந்தது.

இதில் ஒரு விசேஷம் உண்டு. அழகி விஜயலக்ஷ்மிக்கும் அறிஞர் ரஞ்சித் பண்டிட்டுக்கும் இவ்வித உறவு ஏற்பட வேண்டும் என விரும்பியவர் காந்திஜீதான். கன்னியின் கருத்துக்கு ஏற்ற காதலனைக் கணவனாக்கி, அவள் வாழ்வை மாண்புடையதாக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாக அவர் உள்ளத்தில் இருந்தது. சொரூபாவுக்கும் ரஞ்சிதருக்கும் நல்ல பொருத்தம் என்று கணித்துவிட்டார் அவர். அதனாலேயே தக்க  முறையில் தகுந்த சந்தர்ப்பத்தில் அறிமுகம் செய்து வைக்கும்படி மகாதேவ தேசாயை அவர் ஏவினர்.

இப்படிப் பிறந்த அறிமுகம் அவர்கள் விரும்பிய படி கலியாணத்திற்கு வகை செய்தது.

இடைக்காலத்திலே அரசாங்கம் இந்தியாவில் தலை காட்டியுள்ள சுதந்திர ஆர்வத்தைத் தீர்த்துக் கட்டுவதற்காகத் தானறிந்த 'அதிர்ச்சி வைத்திய'ங்களைக் கையாண்டு வந்தது. அவற்றின் சிகரமாக அமைந்திருந்தது, 1919-ம் வருஷம் அமிருதசரஸ் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த பேயாட்டம், 'பஞ்சாப் படுகொலை' என்று பெயர்பெற்ற அந்த வெறிக்கூத்து விளைவித்த உயிர்ச்சேதம் மிகவும் பயங்கரமானது. 'சுட்டேன். சுட்டேன்...துப்பாக்கியில் தோட்டா தீரும் வரையில் சுட்டேன். இன்னும் தோட்டாக்கள் இருந்திருப்பின் மேலும் அதிகமாகக் கொன்று குவித்திருப்பேன்’ என்று வெள்ளையன் டயரை வெறியோடு கொக்கரிக்கத் தூண்டிய அதே சம்பவம், அதுவரையில் அரசியலில் தீவிரமாகப் பங்கு பற்றாத பலரையும் உலுக்கிக் களத்திலே குதிக்கத் தூண்டியது.

அவ்விதம் போராட முன்வந்தவர்களில் முக்கியமானவர் மோதிலால் நேரு, அந்நிய ஆட்சிக்குச் சீட்டுக் கொடுத்து, அடிமைப் பிழைப்புக்குச் சவக்குழி தோண்டியே ஆகவேண்டும் என்றும் உறுதிபூண்டு தேசப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அவர். அந்த ஆண்டு இறுதியில் அமிருதசரஸில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்கு அவரே தலைவரானார்.  1920-ம் வருஷம் அரசியல் போராட்டங்களும் கிலாபத் கிளர்ச்சியும் வலுப்பெற்று வளர்ந்தன. இந்திய மக்களின் உரிமை உணர்ச்சியும், தீவிரச் செயல்களும் வெள்ளையர் உள்ளத்தில் பீதியை நிறைத்தன.

ஜவஹர்லால் நேரு இந்திய அரசியல் வானத்தில் முளைத்த புதிய தாரகையென ஒளியுடன் திகழ்ந்தார். அவரது ஆர்வமும் திறமையும் சேவையும் எங்கும் பிரகாசித்தன.

நேரு குடும்பத்தின் கெளரவம் உயர்ந்தது. மோதிலால் நேருவின் தியாகமும் வீரமும் நாட்டு மக்களின் இதயத்திலே அவருக்குத் தனியானதொரு இடத்தைத் தேடிக் கொடுத்தன.

இத்தகைய சூழ்நிலையில் தான் விஜயலஷ்மியின் திருமணம் நிகழ்வதற்கு ஏற்பாடாயிற்று.

'ஆனந்த பவன'த்துக்கு வந்து போய்க்கொண்டிருந்த விருந்தாளிகளுக்கு ஒன்றும் குறைவு கிடையாது. ஆனால், மோதிலால் நேரு பிரபல வக்கீலாக வாழ்ந்த போது வந்த அதிதிகளின் தன்மை ஒரு ரகம். அவர் காங்கிரசில் சேர்ந்து நாட்டுப் பணிபுரியத் தொடங்கிய பிறகு வந்து சென்றவர்கள் வேறு ரகத்தினர்.

1921-ம் வருஷத்தில் ஒரு நாள். நேருவின் காரில் வந்து இறங்கிய அதிதி ஒருவர், தோட்டத்தில் நின்ற கிருஷ்ணாவின் கவனத்தைக் கவர்ந்தார். அழகும் உயரமும் பெற்ற இளைஞர் அவர், எல்லோரையும் போல அவரும் யாரோ ஒரு விருந்தாளி என்று தான் கிருஷ்ணா  எண்ணினாள். அதனல் அவரைப் பற்றி விசாரித்து அறிய அவள் ஆர்வம் கொள்ளவில்லை. மாளிகைக்கு வந்து போகும் அதிதிகளைப் பற்றி அவள் என்றுமே அக்கறை கொண்டதில்லை.

அன்று மாலையில் கிருஷ்ணா அதிதி அறையின் பக்கமாக நடந்த போது, யாரோ பாடிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு அது பேராச்சரியமாகவும் புதுமையாகவும் பட்டது. அந்த வீட்டில் யாரும் வாய் விட்டுப் பாடத் துணிந்தது கிடையாது. பாட்டின் ஒலி கேட்டாலே மோதிலாலுக்குக் கோபம் பொங்கிப் பாய்ந்து விடும். இந்திய சங்கீதம், மேல் நாட்டு சங்கீதம்-எந்தச் சங்கீதமும் அவருக்குப் பிடிக்காது.

கிருஷ்ணாவுக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற துடிப்பு இருந்தது. இன்னிசைக் கருவி எதிலாவது நல்ல பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும் உள்ளத் துடிப்பைச் செயல்படுத்தும் துணிவு அவளுக்கு இருந்ததில்லை, தந்தையிடம் அவள் கொண்டிருந்த அச்சம் தான் காரணம்.

ஆகவே, அந்த வீட்டில் தந்தைக்குக்கூட பயப்படாமல் யார் துணிகரமாகவும் அருமையாகவும் பாடுகிறார்களோ என்ற எண்ணம் அவளை அசையாப் பதுமை போல் நிற்க வைத்தது. அறையினுள்ளிருந்து வந்த கானம் அவள் உள்ளத்தைத் தொட்டது. அந்த வழியாக வந்த வேலைக்காரன் ஒருவனிடம், பாடுவது யார் என்று விசாரித்தாள் கிருஷ்ணா. அன்று காலையில் வந்த விருந்தாளி தான் அற்புதமாகப் பாடுகிறார் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.  வாலிப அதிதியின் பாடலைக் கேட்டுப் பரவசமுற்று அங்கேயே நின்றாள் அவள். பாட்டு முடிந்த பிறகு கூட அவளால் நகர இயலவில்லை. அதனால், அறைக் கதவு திறக்கப்பட்டதை அவள் உணரவே இல்லை.

'ஹல்லோ! நீ தான் குட்டி தங்கச்சி என்று நினைக்கிறேன்' என்ற குரல் அவளை உலுக்கியது.

கிருஷ்ணா திரும்பிப் பார்த்தாள்.சிரிப்பு மிதக்கும் ஒளிக்கண்களை கண்டாள். சட்டென நாணம் அவளைக் கவ்விக் கொண்டது. இருப்பினும் சமாளித்துக் கொண்டாள். 'ஆமாம். நான் தான் சின்னவள். நீங்கள் யார்?' என்று கேட்டாள் கிருஷ்ணா

'நான் தான் ரஞ்சித். நாம் இரண்டு பேரும் நண்பர்கள். சரிதானே?'என்று அன்பாகப் பேசி, கிருஷ்ணாவின் கையைப் பற்றிக் கொண்டு, அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் அவர்.

"நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?" என்று கிருஷ்ணா வினவினாள்.

"உன் அக்காளைச் சந்திப்பதற்காகத் தான். வேறு எதற்காக?" என்றார் ரஞ்சித்.

'ஏன் சந்திக்க வேண்டும்?' என்றாள் தங்கச்சி.

'ஏனம்மா, உன் அக்காளை மற்றவர்கள். சந்தித்துப் பேசுவது உனக்குப் பிடிக்காதோ?' என்று கேள்வி கேட்டார் அவர்.  கிருஷ்ணா அலட்சியமாகச் சொன்னாள்; 'எல்லாம் எனக்கு ஒண்ணேதான்! ஆனால் அவளைச் சந்திக்க நீங்கள் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வருவானேன் என்பது தான் என் கேள்வி'.

ரஞ்சித் சிரித்தார். 'சின்னப் பெண்ணே! உன்னிடம் ஒரு சங்கதி சொல்வேன். அதை ரகசியமாக வைத்துக்கொள்ள உன்னால் முடியுமோ?' என்றார்.

'ஓ! எனக்குப் பதிமூன்றுவயசு ஆகிவிட்டது தெரியுமா? நான் பெரியவளாக்கும்!' என்றாள் தங்கச்சி.

அடேயப்பா. ரொம்ப ஜாஸ்தியான வயசுதான் அது. .நீ பெரியவள் தான். அது சரி. விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். அதை உன்னோடு ரகசியமாக வைத்துக் கொள்ள வேணும். நான் வந்து சொரூபாவை கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்க அப்பா அதற்குச் சம்மதிப்பாரா?

அவர் அவ்விதம் சொன்னதும் கிருஷ்ணாவின் உள்ளம் துள்ளிக் குதித்தது, 'ஆகா! அக்காளை மணந்து கொள்ளவா? எவ்வளவு அற்புதம்! எவ்வளவு மனோகரமாக இருக்கிறது. இந்த விஷயம்! நீங்கள் அவளை எப்ப சந்தித்தீர்கள்? எங்கே கண்டீர்கள்? எப்போது இந்த முடிவுக்கு வந்தீர்கள்? எனக்கு எவ்வளவு பரவசம் ஏற்படுகிறது, தெரியுமா? நீங்கள் அத்தானாக வருவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்று 'பொரிந்து கொட்டினாள்' விஜயலஷ்மியின் தங்கை.

'வந்தனம். இளைய ராணி அங்கீகரித்த பிறகு எனக்குக் கவலையே கிடையாது. மற்றுமுள்ள அனைவரும் தாராளமாக ஆமோதித்து we என்று வேடிக்கையாகப் பேசிஞர் ரஞ்சித்.

இவ்வித இனிய சுபாவம் பெற்ற ரஞ்சித் விஜய லஜ்மியின் உள்ளம் கவர்ந்த நாதனாக வாய்த்ததில் அதியம் இல்லைதான்.

ரஞ்சித்கல்கத்தாவில் பாரிஸ்டராகச் செயலாற்றிவந்தார்.சமஸ்கிருத மொழியில் தேர்ந்த ஞானம் பெற்ற அவர் இசை வல்லுநர்.நற்பண்புகளின் உருவம்.

அவருக்கும் விஜயலக்ஷ்மிக்கும் 1931 மே பத்தாம் நாள் திருமணம் நடைபெற்றது.அலகாபாத்தில் ஆனந்த பவனத்தில் தான் கலியாண விழா.

மணவிழாவுக்கு காந்திஜி அலி சகோதரர்கள் முத வியவர்கள் விஜயம் செய்வதாகத் தெரிந்ததும், உள்ளூர்காங்கிரஸ்வாதிகள் சக்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளத் துணிந்தனர். பெரிய பெரிய தலைவர்கள் கலந்து கொள்ளும் விதத்தில் சிறந்த முறையில் ஜில்லா காங்கிரஸ் மாநாட்டை அலகாபாத் தில் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள்.இந்த விளம்பரத்தினால் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கில் வந்துகுழுமுவது சாத்தியமாயிற்று.

நேரு வீட்டுக் கவியான ஆர்ப்பாட்டமும் காங்கி ரஸ் மகாகாட்டின் ஆரவாரமும் சேர்ந்து அலகாபாத் நகரமே அமர்க்களப்பட்டது. இவற்றால் அங்கு வாழ்ந்த ஆங்கிலேயர் கதிகலங்கிப் போனர்கள். திடீரென்று ஒரு 
வாழ்க்கை வரலாறு

35


புரட்சி வெடித்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். தங்கள் வீடுகளில் வேலை பார்த்து வந்த இந்தியர் மீது கூடச் சந்தேகம் கொண்டு பீதியுடன் பொழுது போக்கி ணார்கள். தங்களது கோட்டுப் பைகளில் ரிவால்வரைப் பதுக்கி வைத்து அலைந்தார்கள். திடீரென்று பயங்கர நிகழ்ச்சி ஏதாவது வெடிக்குமானல், வெள்ளையர்கள் பம்மிப் பதுங்குவதற்கு வசதியாக அலகாபாத் கோட்டை தக்க பாதுகாப்புகளுடன் தயார் படுத்தப் பெற்றிருந்தது.

வெள்ளையரின் உள்ளக் கலக்கம் அர்த்தமற்றது காரணமற்றதுதான். அவ்வளவு தூரம் - மருண்டு போயிருந்தார்கள் அவர்கள். அவர்களுடைய தொடை நடுக்கத்துக்கு முக்கியமான அடிப்படை விஜயலக்ஷ்மி யின் கலியாணத்துக்காகக் குறிக்கப்பட்டிருந்த நல்ல நாள் தான். -

பஞ்சாங்கத்தைப் பார்த்துப் பெரியோர் நிச்சயித்த புண்ணிய நாள் அது. ஆனல் வெள்ளையரின் எண்ணத் திலே 1857-ம் ஆண்டு மே மாதத்தின் பத்தாம் நாள் தான் நினைவுக் கனலாகச் சுட்டது! அத் தினம் தான் மீரத்தில் முதல் இந்தியப் புரட்சி நடைபெற்றது.

அந் நினைவு நாளைக் கொண்டாடும் முறையிலே மற்றுமோர் புரட்சிக்குத் தயாராகிறார்கள் காங்கிரஸ் காரர்கள் என்று வெள்ளையர் கருதினர். நேரு மகளுக்குக் கலியாணம் என்பது ஆங்கிலேயர் கண்ணிலே மண்ணைத் தூவுவதற்காக என்று நினைத்து விட்டார்கள் அவர் கள், அந்தோ பரிதாபம் !

 கலியானம் நிகழ்ந்த கொஞ்ச காலத்திற்குள்ளாக, ரஞ்சித் பண்டிட் பாரிஸ்டர் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அரசியலில் தீவிரமாகக் கலந்து விட்டார். கல்கத்தா நகரை விடுத்து, அலகாபாத் ஆனந்த பவனத்தில்வாசிக்கவந்து சேர்ந்தார்.

அவர்கிருஷ்ணுவுக்குத் தோழனாகவும், சகோதரன் போலவும் ஆசிரியனாகவும், விளங்கினர். கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் ஜவஹர் அதிசயித்து போற்றுவதற்குரிய அண்ணாகத்தான் இருந்தார் ரஞ்சித் பண்டிட் தான் அவர் மனதிற்கு பிடித்த நல்ல சகோதரன்.அந்த லட்சிய சகோதரன் தான் கிருஷ்ணாவுக்கு டென்னிஸ் நீச்சல் நடனம் போன்றவைகளை கற்றுக் கொடுத்தார்.

ரஞ்சித் அரசியல் உலகத்தில் சிக்கிக்கொண்டது சரியல்லஎன்பதேஎன்அபிப்பிராயம்.அரசியல்வாதிகளுக்கு தேவையான தகுதிகளும் திறமைகளும் அவரிடம் கிடையாது.அவர் மிகவும் பிரபலமான வக்கிலாக முன்னுக்கு வந்திருக்க முடியும்.அதற்கு வேண்டிய கூரிய அறிவும் நுணுகி ஆராயும் உள்ளமும் அவரிடம் இருந்தது.அவர் சிறந்த கலைஞராகவோ தேர்ந்த விளையாட்டு நிபுணராகவோ வளர்ந்திருக்க முடியும்.ஆனால் அரசியலுக்காக அவர் அனைத்தையும் துறந்து விட்டார்.என்று கிருஷ்ணா எழுதி இருக்கிறாள்.