விஞ்ஞானத்தின் கதை
விஞ்ஞானத்தின் கதை
அ. திருமலை முத்துசுவாமி
இளம்பாரதி
சாந்தி நூலகம்
சென்னை.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
முன்னுரை
இயற்கைச் செல்வத்தின் பல கூறுகளுள் ஒன்று விஞ்ஞானம். இன்று நாம் விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். விஞ்ஞானக் கலை கி. பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் மேலை நாட்டில் வளரத் தொடங்கியது. மனிதனது முயற்சியின் பயனாகப் பல விஞ்ஞான விந்தைகளை இன்று காணுகின்றோம். இவ் வளர்ச்சியின் காரணமாய் உலக நாடுகளுள் நெருங்கிய தொடர்பும், கூட்டுறவும், ஒருமைப்பாடும் ஏற்பட்டுள்ளன. ஆனால் விஞ்ஞானத்தால் மன்பதைக்குக் கேடே விளைகின்றது என்று ஒரு சிலர் இன்று கூறி வருகின்றனர். இக்கூற்று அவ்வளவு பொருத்தமுடையதன்று. ஏனெனில் கேடும் ஆக்கமும் அக் கலையைப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தன ஆகும்.
உலகிற்குப் பல வகையிலும் ஆக்கம் தந்து, ஒருமைப் படுத்தும் விஞ்ஞானத்தின் கதையை—வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல் நமது தலையாய கடமையாகும். படித்தவர்கள் மாத்திரம் அறிந்தால் போதாது. பாமரரும் பள்ளிப் பிள்ளைகளும் அறிய வேண்டும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 'விஞ்ஞானத்தின் கதை' என்னும் இந்நூலை உருவாக்கியுள்ளோம். மேலும் இந்நூல் குழந்தை, முதியோர் இலக்கிய வரிசையில் ஒன்றாகும். எனவே சாதாரண மக்களுக்குப் புரியும் சொற்களைக் கொண்டு எளிய நடை யில் இந்நூலை எழுதி உள்ளோம். இந்நூலை அழகிய முறையில் வெளியிட்டுள்ள சாந்தி நூலகத்தார்க்கும், அணிந்துரையும் சிறப்புரையும் வழங்கியுள்ள பேராசிரியர்களுக்கும் நாங்கள் என்றும் கடப்பாடுடையோம்.
இந்நூலைத் தமிழுலகம் ஏற்றருள்வதாக.
மதுரை | அ. திருமலைமுத்துசுவாமி | ||||
1-2-60 |
FOREWORD
By
T. S. CHELVAKUMARAN
B.A.,M.B.B.S., M.S., (Michigan)
Professor of Anatomy, Madurai Medical College
The book “விஞ்ஞானத்தின் கதை” written by Sri Thirumalai Muthuswamy is very interesting and concise. In this book the author has traced the Origin of Science and its steady growth through the various periods, the research workers and their inventions in the various fields of science and the benefits derived from such inventions by us. The scientific achievements and progress made so far in agriculture, Village uplift, Housing schemes, Textiles, Public Health, Arts, Transport and Electricity are vividly portrayed in this handy book in simple language. The author has a very clear expression and good didction through out the book.
I have no hesitation to state that this small and interesting book will certainly educate the common man about the tremendous progress made in the Scientific world. I am convinced that this book will gain well deserved popularity among the common men in many parts of our state. wish the author every success and hope he will write many more books of this kind.
MADURAI. | T. S. CHELVAKUMARAN |
6-2-'60 |
சிறப்புரை
T. சக்திவேல், எம். ஏ.
அறிவியல் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.
விஞ்ஞானத்தின் சிறப்பை இந்நாளில் அறியாதவர் எவரும் இல்லையென்றே சொல்லலாம். ஆனாலும் அவர்களுக்கு விஞ்ஞானம் பிறந்து வளர்ந்த கதை ஒரு புதுமையாகத்தான் இருக்கும். இக்கதை, மிக எளிய முறையில் எல்லோருக்கும் விளங்கும்படியாக இச்சிறு நூலில் எழுதப்பட்டிருக்கிறது. பிடிவாதத்திற்காக, விஞ்ஞான வளர்ச்சி உலக அழிவிற்கு வழிகோலுவதாக இருக்கிறது என்று வாதாடுபவர்களும் உண்டு. அவ்வகைப்பட்டோருக்கு இச்சிறு நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் உண்மைகள் சரியான பதிலாகும். மனிதன் தோன்றியதிலிருந்தே விஞ்ஞானத்தின் உதவியை நாடியிருக்கிறான் என்ற உண்மையும், விஞ்ஞான முன்னேற்றம் இல்லாவிடில் உலகம் இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது என்ற உண்மையும், பலவகை எடுத்துக்காட்டுகள் மூலமாக இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கும், விஞ்ஞானக் கல்வியில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும் என நம்புகிறேன்.
மதுரை | T.சக்திவேல் |
2-2-'60 |
1 | விஞ்ஞானம் என்றால் என்ன ? | |
2 | சிந்தனையாளர் சிலர் | 6 |
3 | வேளாண்மை | 15 |
4 | முதல் கிராமம் | 26 |
5 | வீடு | 32 |
6 | மானங்காத்த மனிதன் | 33 |
7 | நோயற்ற வாழ்வு | 48 |
8 | கலை | 52 |
9 | பயணம் | 60 |
10 | மின்சாரம் | 69 |