வைணவமும் தமிழும்/வைணவ திவ்யதேசங்கள்
வைணவ திவ்வியதேசங்கள் என்பன திருமால் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்கள். இவை யாவும் பருப்பொருள் நிலையில் வைணவத்துவத்தை விளக்கிக்கொண்டிருப்பன போல காட்சியளிக்கின்றன. வைணவ தத்துவம் சித்து, அசித்து, ஈசுவரன் என்பதை நாம் அறிவோம். ஒரு திவ்விய தேசத்தில் வாழும் மக்கள் யாவரும் 'சித்து’ என்ற தத்துவத்தைக் குறிக்கின்றனர். 'அசித்து' என்பது திருக்கோயில் இருப்பிடம் அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையாக தோட்டம், தோப்பு முதலியவைகளைக் குறிப்பிடுவதாக கொள்ளலாம். ஈசுவரன் என்பது அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானைக் குறிக்கின்றது.இதனால் திருத்தலப்பயனம் செய்வோர் ஒருவித பக்தி நிலையை அநுபவிப்பதோடு வைணவ தத்துவத்திலும் ஆழங்கால்படுவது என்ற ஐதிகமாகவும் அமைகின்றது.
கடலலைகள் தோற்கும் கடும்பிறவி வெள்ளத்
துடல்நரகத் துள்நின் றுழலா-தடைநெஞ்சே!
ஆழ்வார்கள் பாட்டால் அலங்கரித்த லால்பதிகள்
மூவாறு முப்பத்து முன்று.
அறனளிக்கும் ஆன்ற பொருளளிக்கும் வீட்டின்
திறனளிக்கும் வேறென்ன செய்ய? - பிற உரைக்கு
நூலா யிரம்கற்பின் நோக்குங்கால் யாதுபயன்
நாலாயிரத்தின் நலம்.
என்ற வெண்பாக்கள் திருத்தலங்களையும் அவற்றிற்குப் பயணம் செய்வோர் அடையும் பலனையும் தெரிவிக்கின்றன.
வைணவ திவ்விய தேசங்கள் 108. இவை யாவும் ஆழ்வார் பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்றவை. சைவர்கள் ஒரு பதிகம் முழுவதும் ஒரு திருத்தலத்தைப்பற்றி இருந்தால்தான் அதனைப் பாடல் பெற்ற தலம் எனக்குறிப்பிடுவர். ஏதாவது ஒரு பாடலில் தலங்களில் பெயர்கள் அமைந்தால் அவற்றை 'வைப்புத் தலங்கள்' என்று தனியாகப் பிரித்துக் காட்டுவர். ஆனால் வைணவர்கள் பாசுரங்களில் திருத்தலங்களின் பெயர்கள் அமைந்த நிலையிலேயே அவற்றை மங்களாசாசனம் பெற்ற தலங்களாகக் கொள்வர். .
திருப்பதிகளின் வகை : இதனைத் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்,
ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர்பதின்மூன்றாம் மலை நாடு ஒரிரண்டாம்- சீர்நடுநாடு
ஆறோடு எட்டுத்தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு
கூறுதிரு நாடொன்றாக் கொள்.
என்று வகைப்படுத்திக் காட்டுவர்.
சோணாட்டுத் திருப்பதிகள்-40
கடல் கிழக்குத் தெற்குக் கரையொரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பெண்ணை இருபத்து நான்காம்
சோணாட்டுக்கு எல்லை எனச் செப்பு.[1]
1. திருவரங்கம்
2. திருஉறையூர்
3. திருத்தஞ்சை
4. திருஅன்பில்
5. திருக்கரம்பனூர்
6. திருவெள்ளறை
7. திருப்புள்ளம் பூதங்குடி.
8. திருப்பேர்நகர்.
9. திரு ஆதனூர்
10. திருவழுந்தூர் 11. திருச்சிறுபுலியூர்
12. திருச்சேறை.
13. திருத் தலைச்சங்க நாண் மதியம்
14. திருக்குடந்தை
15. திருக்கண்டியூர்
16. திருவிண்ணகர்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி
19. திருநாகை
20. திருநறையூர்
21. திருநந்திபுர விண்ணகரம்
22. திருவிந்தளூர்
23. திருச்சித்ரகூடம்
24. திருக்காழிச்சீராம விண்ணகரம்
25. திருக்கூடலுர்
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. திருக்கவித்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. திருமணிமாடக்கோயில்
31. திருவைகுந்த விண்ணகரம்
32. திருஅரிமேய விண்ணகரம்
33. திருத்தேவனார்தொகை
34. திருவண்புருடோத்தமம்
35. திருச்செம்பொன்செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
குறிப்பு:30-40 (11 திருப்பதிகள்) "திருநாங்கூர்த் திருப்பதிகள்” என வழங்கப்பெறும்.
பாண்டிநாட்டுத் திருப்பதிகள்–18
வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காடும்-உள்ளாரா
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.[2]
என்பது பாண்டி நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் பாடல்,
1. திருமாலிருஞ்சோலைமலை | 10.திருத்தொலைவில்லி மங்கலம் |
2. திருக்கோட்டியூர் | 11. சிரீவரமங்கை |
3. திருமெய்யம் | 12.திருப்புளிங்குடி |
4. திருப்புல்லாணி | 13.தென்திருப்பேரை |
5. திருத்தண்கால் | 14.ஸ்ரீவைகுண்டம் |
6. திருமோகூர் | 15.திருவரகுணமங்கை |
7. திருக்கூடல் | 16.திருக்குளந்தை |
8. ஸ்ரீவில்லிபுத்தூர் | 17.திருக்குறுங்குடி |
9. திருக்குருகூர் | 18.திருக்கோளுர் |
மலை நாட்டுத் திருப்பதிகள்-13
வடக்குத் திருப்பழநி வான்கீழ் தென்காசி
குடக்குத் திசைகோழிக் கூடாம்-கடற்கரையின்
ஒரமோ தெற்காடும் உள்ளெண் பதிகாதம்
சேரநாட்டிற்கு எல்லையெனச் செப்பு[3]
1. திருவநந்தபுரம்
7.திருநாவாய்
2.திருவண்பரிசாரம்
3.திருவல்லவாழ்
3.திருக்காட்கரை
9.திருவண்வண்டூர்
4.திருமூழிக்களம்
10.திருவாட்டாறு
5.திருப்புலியூர்குட்டநாடு
11.திருவித்துவக் கோடு
6.திருச்செங்குன்றுார்
12.திருக்கடித்தானம்
13.திருவாறன்விளை
நடுநாட்டுத் திருப்பதிகள்-2
1. திருவயிந்திரபுரம்
2. திருக்கோவலூர்
தொண்டை நாட்டுத் திருப்பதிகள்-22
மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம்
ஆர்க்கும் உவரி அணிகிழக்குப் பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிரு பதின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு[4]
1. திருக்கச்சி- அத்திகிரி |
12. திருக்கள்வனூர் |
|
வடநாட்டுத் திருப்பதிகள்-12
1.திருவேங்கடம் |
7.திருக்கண்டங்கடிநகர் |
|
திருநாட்டுத்திருப்பதி-1
1. திருநாடு வைகுந்தம்-பரமபதம்)