வைணவமும் தமிழும்/பக்திப் படையல்

ஆன்ற தமிழ் மறைகள்

ஆயிரத்தையும் வளர்த்த

இதத்தாய்

இராமாநுசரின் பொன்னடிகட்கு

பக்திப் படையல்

கொற்றமார் ஐந்து கோலினை ஒற்றைக்

கோலினை செங்கரத் தேந்தும்

வெற்றிகொள் மூன்று கோலினால் வென்று

வீறுசால் தென்னரங் கேசன்

பெற்றிகொள் செங்கோல் தன்னிலே மாறன்

பெருந்தமிழ் வளர்த்திடப் புரிந்த

நற்றவன் எங்கள் சீர்எதி ராசன்

நற்புகழ்க் குரியதிந் நூலே.