1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
maiyal Yanaiin mumatha mairnthutha
சீவகசிந்தாமணி
தொகு1.நாமகள் இலம்பகம்-பாடல் 26-50.
தொகுஆய்பிழி
தொகு- ஆய்பிழி விருத்துவண் டயி்ற்றி யுண்டுதேன்
- வாய்பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
- தேய்பிறை யிரும்புதம் வலக்கை சேர்த்தினார்
- ஆய்செநெ லகன்றகா டரிகுற் றார்களே. (26)
வலியுடைக்
தொகு- வலியுடைக் கைகளான் மலர்ந்த தாமரை
- மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம்
- பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ
- மலைபட வரிந்துகூன் குயங்கை மாற்றினார். (27)
வாளையினினந்
தொகு- வாளையி னினந்தலை யிரிய வண்டலர்
- தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை
- கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற்
- பாளைவாய் கமுகினம் பழங்கள் சிந்துமே. (28)
சோர்புயன்
தொகு- சோர்புயன் முகிறலை விலங்கித் தூநில
- மார்புகொண் டார்ந்தது நரல வண்சுனை
- ஆர்புறு பலாப்பழ மழிந்த நீள்களம்
- போர்பினான் மலிந்துடன் பொலிந்த நீரவே. (29)
ஈடுசால்போர்
தொகு- ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால்
- மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச்
- சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள்
- கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே. (30)
சுரும்புகண்
தொகு- சுரும்புகண் ணுடைப்பவ ராலை தோறெலாம்
- விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய
- திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை
- பரந்துவிண் புகுதலிற் பருதி சேந்ததே. (31)
கிணைநிலைப்
தொகு- கிணைநிலைப் பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்படப்
- பணைநிலை யாய்செநெற் பகரும் பண்டியும்
- கணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியும்
- மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டியும் (32)
மல்லலந்
தொகு- மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியும்
- மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு
- பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும்
- ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும் (33)
கருங்கடல்
தொகு- கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும்
- நெருங்குபு முதிரையி னிறைந்த பண்டியும்
- பெருங்கலிப் பண்டிகள் பிறவுஞ் செற்றுபு
- திருந்தியெத் திசைகளுஞ் செறிந்த வென்பவே. (34)
கிளிவளர்
தொகு- கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா
- வளவயல் வைகலு மின்ன தென்பதேன்
- துளியொடு மதுத்துளி யறாத சோலைசூழ்
- ஒளியமை யிருக்கையூ ருரைக்க நின்றவே. (35)
(வேறு)
தொகுசேவலன்ன
தொகு- சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக்
- காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன
- தாவில்பொன் விளக்கமாத் தண்குயின் முழவமாத்
- தூவிமஞ்ஞை நன்மணம் புகுத்துந் தும்பிக்கொம்பரோ. (36)
கூடினார்கணம்
தொகு- கூடினார் கணம்மலர்க் குவளையங் குழியிடை
- வாடுவள்ளை மேலெலாம் வாளையேறப் பாய்வன
- பாடுசால் கயிற்றிற் பாய்ந்துபல்கல னொலிப்பப் போந்து
- தாடுகூத்தி யாடல்போன்ற நாரை காண்ப வொத்தவே. (37)
காவியன்ன
தொகு- காவியன்ன கண்ணினார் கயந்தலைக் குடைதலின்
- ஆவியன்ன பூந்துகிலணிந்த வல்குற் பல்கலை
- கோவையற் றுதிர்ந்தன கொள்ளுநீர ரின்மையின்
- வாவியாவும் பொன்னணிந்து வானம்பூத்த தொத்தவே. (38)
பாசவல்லிடிப்
தொகு- பாசவல்லிடிப் பவருலக்கை வாழைப் பல்பழம்
- ஆசினி வருக்கை மாதடிந்து தேங்கனியுதிர்த்
- தூசலாடு பைங்கமுகு தெங்கினொண் பழம்பரீஇ
- வாசத்தாழை சண்பகத்தின் வான்மலர் கணக்குமே. (39)
மன்றனாறி
தொகு- மன்றனாறிலஞ்சி மேய்ந்துமா முலைசுரந்தபால்
- நின்றதாரையா னிலநனைப்ப வேகி நீண்மனைக்
- கன்றருத்தி மங்கையர் கலந்நிறை பொழிதர
- நின்ற மேதியாற் பொலிந்த நீரமாட மாலையே. (40)
வெள்ளிப்போழ்
தொகு- வெள்ளிப்போழ் விலங்கவைத் தனையவாய் மணித்தலைக்
- கொள்பவளங் கோத்தனைய காலகுன்றிச் செங்கண
- ஒள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறாக்
- கிள்ளையொடு பாலுணுங் கேடில்பூவை பாடவே. (41)
காடியுண்ட
தொகு- காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை
- மாடமாலை மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற்
- கோடுயர்ந்த குன்றின்மேற் குழீஇய மஞ்ஞைதஞ்சிற
- காடுமஞ்சினுள் விரித்திருந்த வண்ண மன்னரே. (42)
கண்ணுளார்
தொகு- கண்ணுளார் நுங்காதல ரொழிககாம மீங்கென
- உண்ணிலாய வேட்கையா லூடினாரை யாடவர்
- வண்ண மேகலைகளைப் பற்றவற் றுதிர்ந்தன
- எண்ணில் பொன்சுடு நெருப்புக்க முற்றமொத்தவே. (43)
கோட்டினத்தகர்
தொகு- கோட்டினத் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற்
- சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா
- வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக்
- காட்டியார்க்குங் கௌவையுங்கடியுங் கௌவைகௌவையே. (44)
இறுநுசுப்பினந்
தொகு- இறுநுசுப்பி னந்நலா ரேந்துவள்ளத் தேந்திய
- நறவங் கொப்புளித்தலி னாகுபுன்னை பூத்தன
- சிறகர்வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலாம்
- இறைகொள் வானின்மீனென வரம்பைமுலை யினிருந்தவே. (45)
விலக்கில்சாலை
தொகு- விலக்கில் சாலையாவர்க் கும்வெப்பின் முப்பழச்சுனைத்
- தலைத்தணீர் மலரணிந்து சந்தனஞ் செய்பந்தரும்
- கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி யைம்பொறி
- நிலத்தலைய துப்பெலா நிறைதுளும்பு மூர்களே. (46)
அடிசில்வைகலா
தொகு- அடிசில்வைக லாயிர மறப்புறமு மாயிரம்
- கொடியனார் செய்கோலமும் வைகறோறு மாயிரம்
- மடிவில்கம் மியர்களோடு மங்கலமு மாயிரம்
- ஒடிவிலை வெறாயிர மோம்புவாரி னோம்பவே. (47)
நற்றவஞ்செய்
தொகு- நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க் குமஃதிடம்
- நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள்செய்வார்க் குமஃதிடம்
- வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென
- மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ. (48)
நகர் வளம்
தொகு(வேறு)
தொகுகண்வலைக்
தொகு- கண்வலைக் காமுக ரென்னு மாபடுத்
- தொண்ணிதித் தசைதழீஇ யுடலம் விட்டிடும்
- பெண்வலைப் படாதவர் பீடி னோங்கிய
- அண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம். (49)
விண்புகு
தொகு- விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன
- சண்பகத் தணிமலர் குடைந்து தாதுக
- வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க்
- கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. (50)
பார்க்க
தொகு- 1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
- 2. கோவிந்தையார் இலம்பகம்
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்
- 4. குணமாலையார் இலம்பகம்
- 5. பதுமையார் இலம்பகம்
- 6. கேமசரியார் இலம்பகம்
- 7. கனகமாலையார் இலம்பகம்
- 8. விமலையார் இலம்பகம்
- 9. சுரமஞ்சரியார் இலம்பகம்
- 10. மண்மகள் இலம்பகம்
- 11. பூமகள் இலம்பகம்
- 12. இலக்கணையார் இலம்பகம்
- 13. முத்தியிலம்பகம்.