1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100

சீவகசிந்தாமணிக் காப்பியம் தொகு

1. நாமகள் இலம்பகம் தொகு

நாட்டுவளம்


(வயிரவரை) தொகு

வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும் வயிரம் வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிரமணித் தாழ்க்கதவு வாயின்முக மாகவயிரம் மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக
வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடிக் கூந்தல்வயிரம் மணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்
வயிரக்கிடங் காடைமதிற் கன்னியது கவினே.வயிரம் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவின் ஏ. (76 )

(செம்பொன்) தொகு

செம்பொன்மழை போன்றடிதொ றாயிரங்கள் சிந்திப் செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப்
பைம்பொன்விளை தீவினிதி தடிந்துபலர்க் கார்த்தி பைம் பொன் விளை தீவின் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
யம்பொனிலத் தேகுகுடி யகநகர மதுதா அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்
னும்பருல கொப்பததன் றன்மைசிறி துரைப்பாம் உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் ( 77)

(வேறு)

(துப்புறழ்) தொகு

துப்புறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத்தூதி துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்
னொப்பவொன் றாதி யாக வாயிரத் தோரெட் டீறாச் ஒப்ப ஒன்று ஆதியாக ஆயிரத்து எட்டு ஈறாச்
செப்பித்தஞ் செம்பொ னல்கு னலம்வரை வின்றி விற்கு செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவு இன்றி விற்கும்
முப்பமை காமத் துப்பி னவரிட முரைத்து மன்றே. உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே. (78 )

(குங்கும) தொகு

குங்கும மெழுகிச் சார்வுந் திண்ணையுங் குயிற்றி யுள்ளாற் குங்குமம் மெழுகிச் சார்வும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
றங்குமென் சாந்தத் தோடு தாமமுந் தாழ நாற்றி தங்கு மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
யெங்குநற் சுவர்க டோறு நாடக மெழுதி யேற்பப் எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்
பொங்குமென் மலர்பெய் சேக்கை பொலிந்துவிண் புகற்சி யுண்டேபொங்கும் மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே (79 )

தூசுசூழ் தொகு

தூசுசூழ் பரவை யல்குல் சுமக்கலா தென்ன வீழ்த்த தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசுசூழ் கோவை முத்தங் கதிர்முலை திமிர்ந்த சாந்தம் காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாசநற் பொடிகண் மாலை வண்டுண வீழ்ந்த முற்ற வாசம் நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
மாசைப்பட் டரசு வைக வருங்கடி கமழு மன்றே ஆசைப் பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே (80 )

(அஞ்சிலம்) தொகு

அஞ்சிலம் பொலியோ டல்குற் கலையொலி யணிந்த முன்கைப் அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன் கைப்
பஞ்சிமெல் விரலிற் பாணி பண்ணொலி பவழச் செவ்வா பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ் வாய்
யஞ்சிநேர்ந் துயிர்க்குந் தேன்சோர் குழலொலி முழவி னோசை அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சோர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சலி லோசை தம்மாற் றுறக்கமு நிகர்க்க லாதே துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே ( 81)

(தேனுலா) தொகு

தேனுலா மதுச்செய் கோதை தேம்புகை கமழ வூட்ட தேன் உலா மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வானுலாஞ் சுடர்கண் மூடி மாநக ரிரவு செய்யப் வான் உலாம் சுடர்கள் மூடி மா நகர் இரவு செய்யப்
பானிலாச் சொரிந்து நல்லா ரணிகலம் பகலைச் செய்ய பால் நிலாச் சொரிந்து நல்லார் அணி கலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேலுல கனைய தொன்றேவேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே ( 82)

இட்டநூல் தொகு

இட்டநூல் வழாமை யோடி யோசனை யெல்லை நீண்டு இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கண் மலிந்த சும்மைப் மட்டு வார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்
பட்டமும் பசும்பொற் பூணும் பரந்தொளி நிழற்றுந் தீந்தே பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
னட்டுந்தா ரணிந்த மார்ப ராவணங் கிளக்க லுற்றேன் அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் கிளக்கல் உற்றேன் (83 )

(மணிபுனை) தொகு

மணிபுனை செம்பொற் கொட்டை வம்பணி முத்த மாலைக் மணி புனை செம்பொன் கொட்டை வம்பு அணி முத்தம் மாலைக்
கணிபுனை பவழத் திண்காழ் கம்பலக் கிடுகி னூன்றி கணி புனை பவழம் திண் காழ் கம்பலம் கிடுகின் ஊன்றி
யணிநில மெழுகிச் சாந்தி னகிற்புகைத் தம்பொற் போதிற் அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
றிணிநில மணிந்து தேங்கொ ளையவி சிதறி னாரே.திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே. ( 84)

.

(பொன்சொரி) தொகு

பொன்சொரி கதவு தாளிற் றிறந்துபொன் யவனப் பேழை பொன் சொரி கதவு தாளில் திறந்து பொன் யவனப் பேழை
மின்சொரி மணியு முத்தும் வயிரமுங் குவித்துப் பின்னும் மின்சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்
மன்பெரும் பவழக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை மன் பெரும் பவழக் குப்பை வால் அணி கலம் செய் குப்பை
நன்பக லிரவு செய்யு நன்கலங் கூப்பி னாரே. (85) நன் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே. ( )

(விழுக்கலஞ்) தொகு

விழுக்கலஞ் சொரியச் சிந்தி வீழ்ந்தவை யெடுத்துக் கொள்ளா விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா
வொழுக்கி னரவர்கள் செல்வ முரைப்பரி தொழிக வேண்டா ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்ப அரிது ஒழிக வேண்டா
பழுக்குலைக் கமுகுந் தெங்கும் வாழையும் பசும்பொன் னாலு பழுக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்
மெழிற்பொலி மணியி னாலுங் கடைதொறு மியற்றி னாரே. (86) எழில் பொலி மணியினாலும் கடைதொறும் இயற்றினாரே (86) ( )

(மூசுதே) தொகு

மூசுதே னிறாலின் மூச மொய்திரை யியம்பி யாங்கு மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
மோசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகாப் ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்தல் ஆகாப்
பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மாசன மிடம்பெறாது வண்கடை மலிந்த தன்றே. (87) மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே (87) ( )

மெய்யணி தொகு

மெய்யணி பசும்பொற் சுண்ண மேதகு நான நீரி மெய் அணி பசும் பொன் சுண்ணம் மேதகு நானம் நீரின்
னைதுபட் டொழுகி யானை யழிமதங் கலந்து சேறாய்ச் ஐது பட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய்ச்
செய்யணி கலன்கள் சிந்தி மாலையு மதுவு மல்கி செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்தடி யிடுதற் காகா வீதிகள் விளம்ப லுற்றேன். (88) வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன் (88) (88 )

(வேறு)

முழவணி தொகு

முழவணி முதுநகர் முரசொடு வளைவிம முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவணி மகளிர்தம் விரைகம ழிளமுலை விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
யிழையணி யொளியிள வெயில்செய விடுபுகை இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழையென மறையின பொலிவின தொருபால். (89) மழை என மறையின பொலிவினது ஒரு பால் (89) ( )

குடையொடு தொகு

குடையொடு குடைபல களிறொடு நெரிதர குடையொடு குடை பல களிறொடு நெரி தர
வுடைகட லொலியினொ டுறுவரர் பலிசெல உடை கடல் ஒலியினொடு உறுவரர் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர்முடியொடு முடி உற மிடைதலின் விடு சுடர்
கொடியுடை மழைமினிற் குலவிய தொருபால். (90) கொடி உடை மழை மினின் குலவியது ஒரு பால் (90) ( )

பூத்தலை தொகு

பூத்தலை வாரணப் போர்த்தொழி லிளையவர்
நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிறரக்
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்
பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால். (91) ( )

மைந்தரொ தொகு

மைந்தரொ டூடிய மகளிரை யிளையவ
ரந்துகிற் பற்றலிற் காசரிந் தணிகிளர்
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின்னணிந்
திந்திர திருவிலி னெழிலின தொருபால். (92) ( )

வளையறுத் தொகு

வளையறுத் தனையன வாலரி யமைபத
மளவறு நறுநெயொ டடுகறி யமைதுவை
விளைவமை தயிரொடு மிசைகுவிர் விரையுமின்
னுளவணி கலமெனு முரையின தொருபால். (93) ( )

வரைநிரை தொகு

வரைநிரை யருவியின் மதமிசை சொரிவன
புரைநிரை களிறொடு புனைமணி யியறேர்
விரைவிரை யிவுளியொ டிளையவர் விரவுபு
குரைநிரை குளிர்புனல் யாற்றின தொருபால். (94) ( )

வரிவளை தொகு

வரிவளை யரவமு மணிமுழ வரவமு
மரிவளர் கண்ணிய ரணிகல வரவமும்
புரிவளர் குழலொடு பொலிமலி கவினிய
திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம். (95) ( )

(வேறு)

பாவை தொகு

பாவை யன்னவர் பந்து புடைத்தலிற்
றூவி யன்னம் வெரீஇத்துணை யென்றுபோய்க்
கோவை நித்தில மாடக் குழாமிசை
மேவி வெண்மதி தன்னொ டிருக்குமே. (96) ( )

திருவ தொகு

திருவ நீணகர்ச் செம்பொனி னீடிய
வுருவ வொண்கொடி யூழி னுடங்குவ
பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப்
புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே. (97) ( )

(இழைகொள்) தொகு

இழைகொள் வெம்முலை யீர முலர்த்துவார்
விழைய வூட்டிய மேதகு தீம்புகை
குழைகொள் வாண்முகஞ் சூழ்குளி ரங்கதிர்
மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே. (98) ( )

(செம்பொற்) தொகு

செம்பொற் கண்ணி சிறார்களைந் திட்டவு
மம்பொன் மாலை யவிழ்ந்துடன் வீழ்ந்தவும்
தம்பொன் மேனி திமிர்ந்ததண் சாந்தமும்
வம்புண் கோதையர் மாற்று மயலரோ. (99) ( )

(வேரியின்) தொகு

வேரி யின்மெழுக் கார்ந்தமென் பூநிலத்
தாரி யாகவுஞ் சாந்தந் தளித்தபின்
வாரி நித்திலம் வைப்பபொற் பூவொடு
சேரி தோறிது செல்வத் தியற்கையே. (100) ( )




பார்க்க தொகு

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.