2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84

சீவக சிந்தாமணி

தொகு

2. கோவிந்தையார் இலம்பகம்

தொகு

(கோட்டிளங்)

தொகு
கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான்
சூட்டொடு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். (76) | ( )

(தேன்சொரி)

தொகு
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர்
கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு
மான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்
கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான். (77) | ( )

(கனிவளர்)

தொகு
கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன்
குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்
றினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்து
பனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். (78) | ( )

(நாழியுளிழுது)

தொகு
நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழிந்த புற்றோய்த்
தூழிதொ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்று
தாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே. (79) | ( )

(நெய்விலைப்)

தொகு
நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவி
மைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறுபுன் கோலந் தொறுத்தியர் திகைத்து நின்றார். (80) | ( )

(ஏறங்கோண்)

தொகு
ஏறங்கோண் முழங்க வாய ரெடுத்துக்கொன் டேகி மூதூர்ச்
சாறங்கு மயரப் புக்கு நந்தகோன் றன்கை யேந்தி
வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்
பாறுகொள் பருதி வைவேற் பதுமுக குமரற் கென்றே. (81) | ( )

(நலத்தகை)

தொகு
நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொன்
னிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பா
லலைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்க
முலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே. (82) |
(வேறு )

(கள்வாய்)

தொகு
கள்வாய் விரிந்த கழுநீர்ப்பிணைந் தன்ன வாகி
வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண் விரைநாறு கோதை
முள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்
கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதை வேலான். (83) ( )

(தீம்பாற்)

தொகு
தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்
தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ
ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய
வோம்பா வொழுக்கத் துணர்வொன் றிலனாயி னானே (84) |


(இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று )

தொகு
கோவிந்தையார்இலம்பகம் பாடல் மொத்தம் 84.
தொடர்வது 3. காந்தருவதத்தையார் இலம்பகம்
( )
( )
( )
( )
( )
( )


பார்க்க

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
2. கோவிந்தையார் இலம்பகம் பாடல் 01-25
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100