3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75
ஆசிரியர்: திருத்தக்க தேவர்
தொகு
மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 51-75
தொகு
- முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப || முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப
- வதிர்குரன் முரச நாண வமிர்துபெய் மாரி யேய்ப்பக் || அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப
- கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதல் || கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல்
- மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். (51) || மதுரம் மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான். (543)
- இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறும் || இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும்
- நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா || நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
- லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே || அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே
- யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். (52) || என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான். (544)
- மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற || மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற
- சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி || சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
- யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப || எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
- முந்தைத்தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். (53) || முந்தைத் தான் கேட்டவாறே முழுதெடுத்து இயம்புகின்றான். (545)
- வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் || வெள்ளி வேதண்டத்து அங்கண் வீவில் தென் சேடி பாலில்
- கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் || கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தாரம் நாட்டு
- புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா || புள் அணி கிடங்கின் விச்சாலோக மா நகரில் போகா
- வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். (54) || வெள்ளி வேல் கலுழவேகன் வேதண்டம் வேந்தர் வேந்தன். (546)
- சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும் || சங்கு உடைந்து அனைய வெள் தாமரை மலர் தடங்கள் போலும்
- நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் || நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்ன
- கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப || கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப
- விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். (55) || இங்கு அடிபிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான். (547)
- பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை || பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடக முன் கை
- திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் உரிமை காட்டப் || திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட
- பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற || பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற
- கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். (56) || கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்றுகின்றான். (548)
- எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி || எரி மணி பளிங்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி
- யருமணிக் கொடிகொல் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த || அரு மணி கொடிகொல் மின்கொல் அமரர்கோன் எழுதி வைத்த
- வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் || ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன்
- திருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். (57) || திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான். (549)
- தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் || தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செவ்வாய்
- வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி || வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி
- யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் || ஊசல் பாய்ந்து ஆடி காதின் குண்டலம் இலங்க நின்றாள்
- காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். (58) || காசு இல் யாழ் கணம் கொள் தெய்வம் காந்தர்வதத்தை என்பாள். (550)
- விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே || விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே
- யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ || அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முளைத்தவே போல்
- லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் || இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னில்
- றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. (59) || துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே. (551)
- நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி || நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி
- யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக || இன் இசை பொருது வெல்வான் யாவனேயானும் ஆக
- வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் || அன்னவற்கு உரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான்
- றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். (60) || தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள். (552)
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- ||
- ||
- ||
- () || ()
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல்
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-375
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 376-400
- சீவகசிந்தாமணி
- [[சீவகசிந்தாமணி- பதிகம்]